பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 24, 2011

கடவுளுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த்தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் - பண்ருட்டி ராமச்சந்திரன். தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டணிக்கு பத்திரிக்கையாளர் சோ தான் எல்லா வேலைகளும் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

பிகு: படத்தில் அடிவாங்குபவர் சித்தரிக்கப்பட்டவர். உண்மையான படம் மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் :-)

இந்த செய்தி சன் டிவி, கேப்டன் டிவி இரண்டிலும் வந்தது. கலைஞர் டிவி, ஜெயா டிவியில் வரவில்லை.

21 Comments:

Anonymous said...

'சியர்ஸ்...'!!

விஜய்காந்த் குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியதும், ஆமாம்.. ஜெயலலிதா தான் ஊத்திக் கொடுத்தார் என்று விஜய்காந்த் பதில் தந்ததும் நினைவுகூறத்தக்கது.

கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது தேமுதிக. தொடங்கியது முதல் தனித்தே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை கூட கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்று வசனம் பேசி வந்தார் விஜய்காந்த்.

இப்போது அதிமுகவுடன் கூட்டணிக்கு வந்துவிட்டார். இதன்மூலம் முதல் முறையாக தேமுதிக கூட்டணி அரசியலில் குதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை கூட்டணி அமைக்க வைக்க ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தான் திரைமறைவு வேலைகளை செய்து வந்தார். அந்த முயற்சி இப்போது பலித்துவிட்டது.

jaisankar jaganathan said...

//தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற//

தே.மு.தி.க. வின் மச்சான் ஆட்சியை எப்படி அகற்றுவது

Anonymous said...

ஜெயலலிதா ஆண்டிப்பட்டியை தவிர்ப்பது ஏன்?

டான்சி தீர்ப்புக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் சுமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வென்றார். ஆனால், 2006ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வென்றபோது வாக்கு வித்தியாசம் 25,000 ஆகக் குறைந்தது. பாதி ஓட்டு எங்க போச்சு என அதிமுக அதிர்ச்சியானது. இந் நிலையில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியை அடக்கிய தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் தங்கதமிழ்ச்செல்வன் படுதோல்வி அடைந்தார்.

அதற்கு முக்கிய காரணம், ஆண்டிப்பட்டியிலும் அதிமுகவுக்குக் கிடைத்த மொத்த லீடிங் ஓட்டே 5,700 தான். இதனால் இம்முறை ஆண்டிப்பட்டியே வேண்டாம் சாமி என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டார் என்கிறார்கள். மேலும் மத்திய அமைச்சர் அழகிரியின் தேர்தல் வேலைகளும் சேர்ந்துவிட்டால் கோவிந்தா தான் என்பதால் மதுரைக்கு அந்தப் பக்கமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

அதே நேரத்தில் வட மாவட்டங்களிலும் பாமக இல்லாமல் நிற்பது பர்கூர் ரிசல்ட் மாதிரி ஆகிவிடும் என்பதால் அதையும் தவிர்த்து விட்டு தனது பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள ஸ்ரீரங்கமே தனக்கு சரி வரும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

ஜெயலலிதாவுக்காக ஸ்ரீரங்கத்திலிருந்து அதிக விண்ணப்பங்களை போட வைத்ததே ஜெயலலிதா தான் என்று சொல்கிறார்கள். அதற்குக் காரணமும் இருக்கிறது.

R. Jagannathan said...

அடி வாங்குபவர் நம்மைப் போல் ஒரு பாவப்பட்ட தமிழர் தான்! விஜய்காந்த்தை (நம்மையும் தான்) கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! ஜெயலலிதா காலில் அவர் விழும் போட்டோவை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். ஏன் கூட்டணி அமையும் வரை பொது இடத்தில் பார்த்துக் கொள்ளக் கூடாது? அடுத்த மீட்டிங் தே மு தி க அலுவலகத்தில் இருந்தால் விஜய்காந்துக்கு கொஞ்ஜம் மதிப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் அவரும் ஒரு கார்த்திக் தான்! - ஜெ.

Anonymous said...

//இவர்களை கூட்டணி அமைக்க வைக்க ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தான் திரைமறைவு வேலைகளை செய்து வந்தார்.//

இதற்கெல்லாம் சமூகத்தை இழுப்பதின் மூலம் ”நரி”களின் தந்திரம் புரிகிறது. முன்பு தி.மு.க., த.மா.கா கூட்டணிக்கு இதே பத்திரிக்கையாளர் பிள்ளையார் சுழி போட்டபோது இனித்ததோ? மூடர்கள்.

Anonymous said...

மயிலைப்பார்த்து தோகை விரித்த வான் கோழி...!
தலைவராகும் தகுதி விஜய்காந்துக்கு கிடையவே கிடையாது. தனக்கென ஒரு தனி பாணி இல்லாதவன் தலைவனாகியும் பயனில்லை. பண்ணுருட்டியாரின் அரசியல் விருந்திலிருந்து விழும் எச்சில் இலை சிந்தனை தான் விஜய்காந்துக்கு. சுய சிந்தனை கிடையாது. டீக்கடைகளில் பேசப்படும் நடுத்தர வர்க்கத்தினரின் அரசியல் பேச்சே, விஜய்காந்தின் அரசியல் ஞானம். அவர் கருணா வுக்கு எடுத்த பாராட்டு விழாவில், "தமிழ்" என்று உச்சரிக்கத்தெரியாமல் தமில் என்று உச்சரிக்க, கருணா வால் " முதலில் தமிழ் என்று உச்சரிக்கக்கற்று கொள் விஜய் " என்று நகையாடப்பட்டதே விஜய் தி மு க -வில் இணையாததற்கு முதல் காரணம். பல ஆண்டுகளுக்குப்பின், தன் மண்டபம் இடிக்கப்பட்டவுடன் தி மு க எதிர்ப்புக்கொள்கை பலமானது. மக்கள் தொண்டிற்காக அல்ல. எத்தனையோ ஏக்கர் நிலங்களை தன் ஊரில் அரசு பள்ளி அமையத்தியாகம் செய்த புண்ணியவாண்கள் பலர் இன்றும் உண்டு , எங்கள் கிராமங்களில். விஜயகாந்தின் சுய நலம்தான் தே மு தி க. கட்சி பிறக்க காரணம்.மக்கள் தொண்டு என்பது வெறும் வெளி வேஷம் தான். கட்சிப்பெயர் கூட "திராவிட " என்ற சொல் இல்லாமல்,அமைக்க முடியாது.வெங்கடேஷ்வரா போளி ஸ்டால் மாதிரி, பெயர்க்குழப்பம் செய்து குளம்பிய நீரில் மீன் பிடிக்கவே விஜய்காந்துக்கு பிடிக்கும்.

கருப்பு எம் ஜி ஆர் என்பது கேட்கவே சகிக்கவில்லை. மக்கள் திலகத்தின் அரசியல் அறிவு எங்கே..! அரை வேக்காட்டு விஜய்காந்த் எங்கே ?

போதாக்குறைக்கு புரட்சிக்கலைஞர் பட்டம் வேறு.அதிலும் ஒரிஜினாலிடி கிடையாது. எம் ஜி ஆரிடமிருந்து புரட்சி(த்தலைவர்) கருணா விடமிருந்து கலைஞர் .

சமீப காலங்களாக பண்ணுருட்டியார் பாணியில் விஜய்காந்தும் முழுக்கை வெள்ளைச்சட்டை அணிந்து வந்தாலும் அவர் பண்ணுருட்டி ராமச்சந்திரன் ஆக முடியாது.

மனைவி, மச்சான் என குடும்ப அரசியல் செய்யும் விஜய்காந்துக்கு தி மு க வை விமர்சிக்கத்தகுதி இல்லை.ஊழல் பெருச்சாளி ஜெயலலிதாவை விமர்சிக்க தைரியம அற்ற விஜய்காந்த் -ம் ஒரு குட்டையில் ஊறிய மட்டை தான்.

கொள்கைத்தங்கம் என்றால் அது வை கோ தான். வை கோ , தி மு க -வில் இருந்த காலங்களில் நாயுடு சங்க கூட்டத்திற்கு அழைத்தாலும் போக மாட்டார். அவ்வளவு கொள்கைப்பிடிப்பு.

பாவம் காலம் வெல்லவில்லை.

Anonymous said...

கடவுள் நம்பிக்கை, ஜோதிடம் மீது அதீத நம்பிக்கையை வைத்திருக்கும் விஜயகாந்த், தற்போது நடந்து வரும் தேய்பிறையில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டார் .

இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் தனது கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தே.மு.தி.க., விதிப்பதால் தான் கூட்டணி இறுதி வடிவம் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.

தேய்பிறை முடிந்ததும், கூட்டணிக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளின் எண்ணிக்கையை நியாயமாக ஒதுக்கீடு செய்வதற்கு அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

Durairaj Sukumar said...

ஊத்தி கொடுத்தவளும் வாங்கி குடித்தவனும் சேர்ந்துட்டாங்க ! இனி டாஸ்மாக் வியாபாரம் அமோஹம் தான்.
இப்போ spect'ரம்' இனிமேல் அவாளுக்கு XXX ரம் தானோ ..

Durairaj Sukumar said...

தே மு தி க வுக்கு இது வரை கிடைத்த வோட்டு இரு கழகங்கள் (கழுதைகள் }எதிர்ப்பு வோட்டு தான்
விஜயகாந்துக்கு விருப்ப வோட்டு அல்ல .அதனால் மக்கள் இனிமே அவருக்கு வைக்க போவது 'வேட்டு'

karuthu said...

J:ஊத்தட்டும்மா...ஊத்தட்டும்மா....
V:ஊத்த ஊத்த தீராதம்மா...

Anonymous said...

ஐயையோ! எஸ்.வி.சேகர் மோசம் போய்விட்டாரே! காங்கிரஸில் சேர்ந்து அட்ரஸ் இல்லாமல் போனதுக்கு, விஜய்காந்த் கட்சியில் சேர்ந்திருந்தால் வேஷ்டியாவது கிழியாமல் இருக்கும். இரண்டு பேருக்கும் பொதுவானது காஞ்சி பெரியவா பக்தி. ஆனால் அப்போது இரண்டு பேருமே உதவிக்கு வர்வில்லை

Anonymous said...

//இவர்களை கூட்டணி அமைக்க வைக்க ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தான் திரைமறைவு வேலைகளை செய்து வந்தார்.//

இதற்கெல்லாம் சமூகத்தை இழுப்பதின் மூலம் ”நரி”களின் தந்திரம் புரிகிறது. முன்பு தி.மு.க., த.மா.கா கூட்டணிக்கு இதே பத்திரிக்கையாளர் பிள்ளையார் சுழி போட்டபோது இனித்ததோ? மூடர்கள்.

Anonymous said...

அண்ணே, இப்பக் கூட கடவுளோடதான் கூட்டணி வைக்கப்போகிறார். ஊரெல்லாம் பேனரில ‘தெய்வமே’ என்று தானே அம்மா படத்துக்குக் கீழே எழுதியிருக்காங்க.-- கபாலி

பூ said...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

Roaming Raman said...

// கலைஞர் டிவி, ஜெயா டிவியில் வரவில்லை. //
தவறு... ஜெயா நியூசில் (இரவு 10 .45 ) க்கு வந்தது. மேலும்,
// விஜய்காந்த்தை (நம்மையும் தான்) கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!//
தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் ..

சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தாக வேண்டும் என்றால், ஒன்று ஆபத்து இல்லாத இடம் வேண்டும்.. குறைந்த பட்சம் .. minimum ஆபத்து கூட பரவாயில்லை என்று தானே முடிவெடுக்க வேண்டும்..
தமிழகமும் தமிழகத்தால் பாரத தேசமும் நிச்சயம் இப்போது ஆபத்தில் அல்ல .. பேராபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறதே!!
--ரோமிங் ராமன்

Anonymous said...

This is for the 'Anonymous' who posted first. The extract you have taken is from a website which is completely biased towards DMK. Cho and Jayalalitha no doubt are brahmins, but is it the brahmin sentiment that helped in forging this alliance. Both of them are beyond this. There were days (not so long ago) when Cho worked against Jayalalitha, and he helped Moopanar and Karunanidhi forge an alliance. If some idiot is writing casteist remarks in his website, please ignore that and do no copy that.

mak said...

When MGR start ADMK, CHO said he can't survey, unnecessary things for MGR. If CHO against any party, that party grow, if CHO support, party go down. Any one can verify past politics history.

Ananth said...

Please remember that cho was the one who was against Jaya and formed DMK-TMC along with Rajini.
I dont think Karuna/Moopanar/Rajini is Brahmin.
Cho is one of the very few in Tamil nadu who oppose corrupt pliticians.
But you guys oppose just because he is Brahmin. If you want sell all your fortune to DMK, please continue to do it.

mak said...

http://www.zimbio.com/India+Tours/articles/YQ-6zInZEPk/Tamil+Nadu+Himachal+Pradesh+Win+Top+Honours

i believe DMK is doing good, can any one point none of the party doing any scam, even BJP aslo doing.

Nothing wrong if DMK come back once again. Anyway both cheers party joined, it is going to be against Vijaykanth, KK will tell to people look at both drunken asking for vote.

"Adatheriytha thodaiaku tharu konalnam" - tamil proverb

MURUGAVEL S said...

எதிர்பார்த்த கூட்டணிதான், வாழ்த்துக்கள் விஜயகாந்த அவர்களே! இனி ஊத்தி கொடுப்பவரும் வாங்கி குடிப்பவரும் வெளியில் சொல்லவேண்டிய அவசியம் வராது. யார் மூலமாக சேர்ந்தார்கள் என்பதல்ல முக்கியம், என்ன நோக்கத்திற்க இந்த கூட்டணி என்பதை தெளிவாக சொல்லுங்கள் மக்களுக்கு. தங்களது பொது எதிரியை ஒழிப்பது மட்டுமென்றால், லோக்கல் ரௌடிகள் கூட செய்வார்கள், இது மக்களுக்காக என்பதை நிருபித்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்,இந்த நேரத்தில் வைகோவை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது(இழவு காத்த கிளியோ?) ஏதாவது சமாதானம் தேடிவைக்கட்டும் இப்பவே, எப்படியும் 12 இல் இருந்து 15 மேல்தேரபோவதில்லை. ஜெயலலிதாவின் கூற்றுப்படி குடும்ப ஆதிக்கம் அரசியலில் ஒழிக்கப்டவேண்டிமெனில் (சுதீஷ், பிரேமலதா மற்று பலர் ) இவரை எப்படி அனுமதிப்பார். இது ஆரம்பம் தான் என்பதால் பார்போம் என்ன சொல்லபோகிறார்கள் இந்த தலைவர்கள், இந்த கூட்டணியில் பொது தேர்தல் அறிக்கை வெளியிட்டு, கண்காணிப்பார முயற்சிக்கட்டும், பொறுத்திருப்போம் நல்லது நடந்தால் சரி தான் பொது மக்களுக்கு. முருகவேல்.ச - அழ்வர்பேட்டை, சென்னை 18

R.Gopi said...

விஜயகாந்த் தனித்து நிற்பதை விட அதிமுக கூட்டணியில் இருப்பது நல்லதே