பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 19, 2011

இந்தியா வங்கதேசம் போட்டி முடிவு

ஐ.சி.சி தர வரிசைப்படி அணிகளை நாம் மதிப்பிட்டாலும் ... இட்லிவடை ஆஸ்தான ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் என்ன சொல்லுகிறார் என்று கீழே பார்க்கவும் :-)

உலகக் கோப்பை துவங்கி விட்டது. எத்துனையோ பேர் “ஐயா! ஜோதிடர் அவர்களே! தாங்கள் உலகக் கோப்பை தொடர்பாக ஏதேனும் பதிவு உண்டா?” என என்னிடம் கேட்க நான் இட்லிவடையிடம் கேட்டேன். அவர் உடனடியாக ஒரு ஐடியா கொடுத்தார். அதனால் விளைந்தது இந்த பதிவு.

முதலில் இந்திய அணியின் தலைவர் தோனி ஜாதகத்தை ஆராய்வோம்.


தோனிக்கு ராகு திசை சனி புக்தி நடக்கிறது.


வங்கதேச அணியின் தலைவர் ஷாகிப் அல் ஹாஸன் ஜாதகத்தை ஆராய்வோம்.



ஹாஸனுக்கு ராகு திசையில் வியாழ புக்தி நடக்கிறது.

போட்டி நடைபெறும் நாளன்றைய கிரஹ நிலை


ஜோதிடத்தில் ஒரு விஷயாதி ஆரம்பிக்கும் போதுதான் நேரம் காலம் பார்க்க வேண்டுமே தவிர விசேஷம் நடக்கும் நேரம் எடுத்துக் கொள்ள கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. எனவே முதலில் நாம் அதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நல்லது. தோனிக்கு ராகு திசையில் சனி புக்தி நடக்கிறது. ஹாஸனுக்கு ராகு திசையில் வியாழ புக்தி நடக்கிறது. இனி சில பாய்ண்ட்டுகள் ஜோதிட ரீதியாக இருக்கும். புரியாதவர்கள் விட்டு விடலாம்.

போட்டி நடைபெறும் அன்றுள்ள ஜாதக நிலைப்படி லக்னேசன் புதன். தோனி பிறந்த லக்னேசன் புதன். ஹாஸன் பிறந்த லக்னேசன் சுக்கிரன். ராகு லக்னத்திற்கு 7ல் அமர்ந்திருக்கிறார். இங்கு இருவருக்குமே ராகு திசை நடக்கிறது. புக்தி மட்டுமே வேறுவேறு. தோனியின் புக்திநாதன் சனி 4ல் அமர்ந்திருக்கிறார்(பாவத்தில் 5ல் அமர்ந்திருக்கிறார்). ஹாஸனின் புக்திநாதன் வியாழன் 10ல் அமர்ந்திருக்கிறார்(பாவத்திலும்). போட்டி நடைபெறும் அன்றைய ஜாதகப்படி லக்னேசன் வியாழ பகவானின் 12ல் அமர்ந்திருக்கிறார். இதே போன்று பல விதமான ஆராய்ச்சிகள் செய்து முடிவு:

இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் போராட்ட வெற்றியாகத்தான் இருக்கும். இரு அணிகளுக்குமே ஸம வாய்ப்பு இருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.



சதவீத கணக்கு: இந்தியா: 66% - வங்கதேசம்: 34%

ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
பிரமிட் பாண்டுரங்கா டிரஸ்ட் - ஸ்ரீ விட்டல் ஆஷ்ரமின் ஆஸ்தான ஜோதிடர்.
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/
செய்திகளின் விமர்சனங்கள்:http://newsjournalist.blogspot.com/

இந்தியா வெற்று பெற்றால் அதற்கு இட்லிவடை பொறுப்பேற்காது :-)


19 Comments:

Anonymous said...

முடியல. :>

வால்பையன் said...

டோனியும் ஹாஸனும் மட்டும் தான் விளையாடப்போறாங்களா!?

இதுல வெற்றி சதவீகிதம் வேற!

என்ன குழந்தை பிறக்கும்னு கேட்ட ஜோசிக்காரன் சொன்னானான்,
ஆண்குழந்தை தப்பினா பெண்குழந்தைன்னு!

தக்காளி என்கிட்ட சிக்க மாட்டிகிறிங்களே!

வால்பையன் said...

என்னாத்துக்கு இந்த பதிவுக்கு போட்டி முடிவுன்னு தலைப்பு!?

Anonymous said...

என்னடா இப்படி கிளம்பிட்டீங்க...

mak said...

if both total score 400, India will get 264(66%) and Bangladesh will get 136(34%). Pongada neegalum unka josiumm.

Give Idly 66% (Raman) and Vaadai 33% (Krishan)

பகுத்தறிவு பகலவன் said...

ஜோசியம்னாலே டுபாக்கூருதான். அதுவும் பெருங்குளம்னா பெரிய டுபக்கூர். வெற்றி பெறுவது, க்ரகம், ஜாதகம், ஏன் டோனி கையிலேயோ இல்லை ஓய்! பெட்டிங் சிண்டிகேட் கையில். இந்தியா ஜெயிக்கலன்னா உமக்கு இருக்கு. முதுகுல கட்டிக்க தலகாணி ரெடி பண்ணி வச்சுக்குங்கோ!

Anonymous said...

//என்ன குழந்தை பிறக்கும்னு கேட்ட ஜோசிக்காரன் சொன்னானான்,
ஆண்குழந்தை தப்பினா பெண்குழந்தைன்னு!
//

கடைசில உம்மை மாதிரி பொற்ந்திடுச்சாக்கும்?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...
This comment has been removed by a blog administrator.
ramanindia_I luv India said...

இட்லிவடைக்கு ரொம்ப நல்ல காலம் பொறந்தாச்சு(நான் ஜோதிடர் அல்ல!) ஏனென்றால் இப்போது எல்லா அந்தஸ்தும் வந்தாச்சே!! அப்படின்னா நம்ம ஆஸ்தான ஜோதிடர், தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் குறித்தும் கணிப்புகள் எழுதுவார் என்பதற்கு இது வெள்ளோட்டமா?? உஷாராகக் கவனிக்க வேண்டும் ... எங்கேயாவது பெட்டி வாங்கிக் கொண்டு அவருக்கு சாதகமாக எழுதி விடப் போகிறார்!!
-ரோமிங் ராமன்

IdlyVadai said...

ஒருவரை ஒருவர் திட்டும் பின்னூட்டம் வேண்டாமே !

Anonymous said...

இந்தியா தோற்காமல் இருக்க எதாவது பரிஹாரம் இருக்க ஜோசியரே ?

virutcham said...

ஜோசியரே, முதலிலே ஒரு விஷயத்தை விளக்குங்க.
இவங்க ஜாதகம் எல்லாம் எப்படிக் கிடைக்குது?
நீங்களே கணிச்சிடுவீன்களா?
அதன் parameters என்ன?

வால் கேட்டா மாதிரி இரு அணி கேப்டன் ஜாதகத்தை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு எப்படி வர முடியும்?

tamilkirukkan said...

As per Dhoni's birth details,
7/7/81 ,11.15.am at ranchi
dhoni's current dasa bukthi is rahu dasa budhan bukthi. please correct me if I am wrong or correct the blog if it is wrong
thanks

R.Gopi said...

அதென்னங்க... கேப்டனோட ஜாதகம்..

1)இரண்டு சைட்ல விளையாடற 11, 11 பேர் ஜாதகம்...
2)12வது விளையாட்டு வீரரோட ஜாதகம்...
3)அம்பயர், லெக் அம்பயர், தேர்ட் அம்பயர் இவங்க ஜாதகம்..
4) ஸ்டேடியம்ல மேட்ச் பார்க்கற எல்லாரோட ஜாதகம்..
5) கமெண்டேடர்ஸோட ஜாதகம்...

யப்பா... முழி பிதுங்குது....

குரோம்பேட்டைக் குறும்பன் said...

ராமகிருஷ்ணன் - நம்ம கேப்டன் ஜாதகம் இருக்கா? அவரு எந்த அணியில சேருவாரு? எவ்வளவு இடங்கள் ஜெயிப்பாரு?

Anonymous said...

ஜாதகம், ஜோசியம் உண்மையா, பொய்யா? இதைப் படிங்க முதல்ல. அப்புறமா ஒரு முடிவுக்கு வாங்கய்யா

http://ramanans.wordpress.com/

கவுண்டமணி said...

கருமாந்திரம் புடிச்சவங்களா.. ஆரம்பிச்சுட்டீங்களா இங்கயும்? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சு போடுறீங்களா? இப்படி பத்து பேரு ., இல்ல ஒரு ஆளு போதும்..நாடு உருப்பட்டுடும்..

Shri Hari said...

வெள்ள காரணங்களே சோதிடத்த ஆராய்ச்சி பண்ணி உன்மேன்னு சொல்லியாச்சு... இன்னும் பகுதறிவ குத்தகைக்கு எடுதவனுங்க திருந்த மாட்டனுங்க... இவனுக சொல்றத பாத்தா, போலி அரசியல் வாதிகள் இருக்கற காரணத்தாலே அரசியல் மற்றும் ஜனநாயகம் இருக்க கூடாதுன்னு சொல்லுவானுங்க போல இருக்கு...

http://www.naturalnews.com/030698_astrology_scientific_basis.html