பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 17, 2011

எஸ்.வி.சேகர் கடிதம் !

க்ருஷ்ண பாகவதருக்கு,
நகைச்சுவை என்ற பெயரில் என் மீது சேற்றை பூச முயற்சி செய்துள்ளீர்கள்.
முகம் காட்டாமல் அடையாளப் படுத்திக்கொள்ளாமல் மொட்டக்கடிதாசு போல எழுதியுள்ளீர்கள்.
எனக்கு வாழ்க்கையிலேயே பிடிக்காத உணவு இட்டிலி தான்.
உங்களுக்கு உண்மையான தைரியம் இருந்தால் என் CELL NO. xxxxx xxxxx போன் செய்துவிட்டு நேரில் வாருங்கள். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கின்றேன்.
என்னைப்பற்றி HINDU.INDIAN EXPRESS,TIMES OF INDIA, DECCON CRONICLE,DELHI HINDUSTHAN TIMES,NEWS TODAY,SUN T.V., WIN TV,VASANTH TV,,MEGA TV, PAALIMAAR TV,IMAYAM TV, தினத்தந்தி,தினமலர்,தினமணி,மாலைமலர்.மாலைமுரசு,மாலைச்சுடர், ஜூனியர் விகடன்,தமிழக அரசியல்,நவீன ஆதித்யன், மக்கள் கண்ணோட்டம், பத்திரிகை பேட்டிகளை படிக்கவில்லயானால் MYLAPOREMLA@GMAIL.COM முக்கு தொடர்பு கொண்டால் COPY அனுப்பிவைக்கின்றேன்.
என்னைப்பற்றி எனக்கு ஓட்டளித்த என் தொகுதி மக்களுக்கு தெரியும். எனக்கு அது போதும்.
உங்களுக்கு காலமும் கடவுளும் பதில் சொல்வாகள்.
என்றும் அன்புடன்
எஸ்.வி.சேகர்.
29 5thTRUST CROSS STREET,
MANDAVELIPAKKAM, CHENNAI.600028.
WWW.SVESHEKHER.COM

அன்புள்ள திரு எஸ்.வி.சேகருக்கு,
க்ருஷ்ண பாகவதர் எழுதிய நகைச்சுவை பதிவு உங்களை காயப்படுத்தியதற்கு உங்களின் நகைச்சுவை ரசிகன் என்ற முறையில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த பதிவையும் நீக்கம் செய்துவிட்டேன். உங்களுக்கு வாழ்க்கையில் இட்லியை பிடிக்க வைக்க எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் :-)
அன்புடன்,
இட்லிவடை.

19 Comments:

Speed Master said...

சார் இது உண்மையா???

Anonymous said...

Ethu epidi erukku...

விவேகானந்தன் said...

மிகவும் தவறான ஒரு காரியம் Mr.இட்லி வடை. எனக்கு கூட சில பதிவுகளில் விருப்பம் இல்லை அதை நான் தெரிவிக்கும் பட்சத்தில் அப்பதிவை நீங்கள் நிச்சயம் நீக்குவீர்கள் என்று வாக்குறுதி தருவீர்களா..? அவரை(எஸ்.வி.சேகர்.) பற்றி க்ருஷ்ண பாகவதர் தன் கருத்தை தானே நகைச்சுவை நடையில் எழுதி இருந்தார்... யார் வேண்டும் ஆனாலும் அவருக்கு பிடிக்காவிட்டால் உங்களுக்கு பிடித்தவராக இருந்தால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னால் நீங்கள் அந்த பதிவை நீக்கிவிடலாம்...அப்படித்தானே...!? இந்த செயல் உங்கள் மேல் இருந்த ஏதோ ஒன்றை அசைத்துப் பார்க்கிறது. இதற்கு முந்தைய பதிவில் மன்மோகன் சிங்கிடம் பத்திரிகை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று வந்திருப்பதற்கு சளைத்தது அல்ல நீங்கள் செய்த இந்த செயல். இந்த comparison கொஞ்சம் ஓவர் தான் இருந்தாலும் இதுவும் ஒரு ஊடகம் தானே..!?

jaisankar jaganathan said...

// Speed Master said...
சார் இது உண்மையா???//

இது உண்மையா?

King Viswa said...

மிகவும் நேர்மையான ஒரு செயல்.

தவறுகளை ஏற்பவனே சிறந்தவன்.


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

Anonymous said...

கோஷ்டி என்பது எல்லாக் கட்சியிலும் இருக்கிறது! - எஸ்.வி.சேகர்


எஸ்.வி.சேகர் புது விளக்கம்!

தேர்தல் நேரத்தில் திமுகவில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று சிக்ஸர் பறப்பது மாதிரி, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.

நடிப்பெல்லாம் மேடை நாடகத்தில்தான்... நேரில் பேசினால் நிஜமாகவே அனல் பறக்கிறது. அதிமுகவில் சேர்ந்தது தொடங்கி, காங்கிரஸில் இணைந்தது வரைக்கும் படபடவென்று வார்த்தை பட்டாசு வெடித்துவிட்டார் எஸ்.வி.சேகர்.

அதிமுக இல்லை என்றால், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியிருக்கமாட்டார் என்று உங்கள் முன்னாள் தோழர்கள் சொல்கிறார்களே..?

அதிமுகவில் எனக்கு சீட்டு கொடுத்தார்கள். உண்மைதான்... ஆனால், என்னைத் தேர்ந்தெடுத்தது மக்கள்தான். அதிமுகவினர் சிலர், ‘யாரை நிறுத்தியிருந்தாலும் ஜெயித்திருப்பார்கள்’ என்கிறார்கள். ஆனால், கடந்த 15 வருடத்தில் மயிலாப்பூர் தொகுதியில் எந்த அதிமுக வேட்பாளரும் வெற்றிபெறவில்லை.

என்னை எதிர்த்து நின்றதும் சாதாரண வேட்பாளர் கிடையாது. திமுக சார்பாகப் போட்டியிட்டவர் அன்றைய எம்.எல்.ஏ-வாக இருந்த நெப்போலியன். அவரைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையால்தான்.

திமுகவுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் அதிமுகவைவிட்டு வெளியேற்றிவிட்டதாகச் சொல்வது பற்றி..?

என்னைப் பொறுத்தவரை அரசியலில் நாகரிகம் இருக்கவேண்டும். முதலமைச்சர் எதிரில் இருந்தாலும் அவரிடம் பேசக்கூடாது; அவருக்கு வணக்கம் வைக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் தவறான முன்னுதாரணங்கள். என்னால் அப்படி அடிப்படை நாகரிகமற்றவனாக மாறமுடியாது. இதையெல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள் என்று அவர்கள் நினைக்கிறார்களா?

அப்படியென்றால், உள்ளிருந்து திமுகவினரோடு கூட்டணி வைத்துக்கொள்வது... திமுகவுக்கு ஆளை அனுப்புவது... ரோடு கான்ட்ராக்டில் கமிஷன் வாங்குவது... தானே கான்ட்ராக்ட் வாங்குவது... ரகசிய சந்திப்பு நடத்துவது எல்லாம் கட்சிக்கு உகந்த நடவடிக்கைகளா..?

நீங்கள் அதிமுகவில் இருந்து விலகியபிறகு, திமுகவுக்குப் போகிற மாதிரி சூழல் உருவானதே..?

சமூக நீதி என்றால் என்ன? சமூகத்தில் இருக்கிற அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும். ஆனால், பிராமணிய எதிர்ப்பு என்கிற பெயரில் திமுக இருக்கிறது. இதை சரிப்படுத்தலாம் என்று நினைத்தேன். பிராமணர்களிடம் பேசி, யாரும் யாருக்கும் எதிரி இல்லை; ஓட்டு போடுவதின் மூலமாக, நல்லது செய்தவர்களுக்கு, நாமும் நல்லது செய்வோம் என்று திமுகவுக்கும் பிராமணர்களுக்கும் இருக்கும் இடைவெளியை நிரப்பலாம் என்று நினைத்தேன். ஆனால், மறுபடியும் திமுகவில் ஆரியர் - திராவிடர் யுத்தம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் நான் எப்படி அந்தக் கட்சியில் இருக்கமுடியும். நாளைக்கு நான் இருக்கிற மேடையிலேயே யாராவது எதையாவது பேசிவிட்டால், கேட்டுவிட்டு சும்மா இருக்கிற அளவுக்கு எனக்கு தடித்த தோல் கிடையாது. அதனால்தான், திமுகவில் சேர்வதைவிட, சேராமல் இருப்பதே பரவாயில்லை; தூரத்து நண்பர்களாக இருப்பதே நல்லது என்று முடிவெடுத்தேன்.

காங்கிரஸில் இந்தப் பிரச்னை இல்லையா..?

காங்கிரஸில் இப்படி எந்தப் பிரச்னையும் கிடையாது. கடவுள் நம்பிக்கை, ஜாதி, மத வித்தியாசம் எதுவும் இல்லை.

நீங்கள் நினைக்கிற மாதிரி பிராமணர்களுக்கு கொடுக்கவேண்டிய சலுகைகள் எல்லாம் காங்கிரஸில் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா..?

ஒரு பேட்டியில் ராகுல்காந்தி, ‘யாரெல்லாம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிறார்களோ அவர்களையும் பின்தங்கியவர்களாக கருத்தில் கொள்ளவேண்டும்’ என்று கூறியிருக்கிறார். இது நல்ல ஐடியா. நான் கேட்கிற சலுகைகள் எல்லாம் டிவிஎஸ் பையனுக்கோ, எஸ்.வி.எஸ். பையனுக்கோ, சோ பையனுக்கோ, பிராமணர்கள் சங்கத் தலைவர் பையனுக்கோ கிடையாது. அடித்தட்டு மக்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கிறதோ அந்த சலுகையெல்லாம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன். அதேநேரத்தில் ஒரேநாளில் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிற அளவுக்கு இது மேஜிக் கிடையாது; நம்முடைய கருத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல வேண்டும். அதேசமயம் கட்சியினுடைய கருத்துகளுக்கும் மாறுபட்டு நடக்கக் கூடாது. இதில் நான் 100 சதவீதம் தெளிவாக இருக்கிறேன்.

சீனு said...

//க்ருஷ்ண பாகவதர் எழுதிய நகைச்சுவை பதிவு உங்களை காயப்படுத்தியதற்கு உங்களின் நகைச்சுவை ரசிகன் என்ற முறையில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.//

அவரு எத்தனை பேரை கலாய்ச்சிருக்கார். அவரை கலாய்ச்சால் காயப்படுத்துகிறதாமா? :(

சொர்க்கம் said...

Then what about this http://idlyvadai.blogspot.com/2011/02/blog-post_08.html . After so many objections from us, you did not removed the post. But if Mr. Mylapore MLA requests, You are ready to remove a post. Is it what you call neutral policy ?

You should understand that every diamond is unique and Every human is unique.

Anonymous said...

அப்ப, எஸ்.வி. சேகர் இ.வ படிப்பாரா.. ..
மறந்தும் அவரப் பத்தி கமெண்டு போடக்கூடாது அப்போ..?

sury said...

உங்களுக்கு இட்லி பிடிக்காதா !! ஒரு வேளை வெறும் இட்லி மட்டும் சாப்பிடுகிறீர்கள் போல்
இருக்கிறது.
இட்லிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, வெங்காய சாம்பார், கொத்ஸு,
புதினா சட்னி, வெங்காய சட்னி, கடப்பா சாம்பார், இதையெல்லாம் சேர்த்து சாப்பிட உங்களுக்கு
தெரியாதா என்ன ?
இட்லியில் சாதாரண இட்லியைத் தவிர காஞ்சிபுரம் இட்லி இருக்கிறது. அதுவும் வேண்டாம் என்றால்
ரவா இட்லி இருக்கிறது. கோதுமை மாவு கலந்த இட்லியும் உங்களுக்கு டயாபிடிஸ் இருந்தால் ( ?)
நல்லது.
வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, பெருங்காயம் போட்டு,
இட்லி மிளகாய் பொடி தூவி, பிறகு கருகப்பிலை, கொத்தமல்லி கிள்ளி போட்டு இட்லியை திரும்பவும் உதிர்த்து
நன்றாக பொன் நிறம் வந்தபின் சாப்பிடுங்க ஜோர் ஜோர் என்று சொல்வீர்கள்.
முக்கியமாக, இட்லி அரிசி என்றே புழுங்கல் அரிசியில் இருக்கிறது. ஒரு வேளை உங்கள் வீட்டில்
சாப்பாட்டு அரிசியை உபயோகித்து விட்டார்களோ என்னவோ ! அதில் இட்லி செய்தால், கொஞ்சம்
கொழ கொழ என்று தான் இங்கேயா, அங்கேயா என்று திண்டாடும் திருசங்கு போல் இருக்கும்.
இன்னொன்றும் இருக்கிறது. இட்லி அரைக்கும்பொழுது ஒரு பங்கு உளுந்துக்கு நாலு பங்கு அரிசி
இருக்கவேண்டும். மைய அரைக்கவேண்டும்.
இத்தனையும் சொன்ன பிறகும் உங்களுக்கு இட்லி பிடிக்காது என்றால், வேற வழியே இல்லை.
உங்கள் செல்லுக்கு ஃபோன் செய்கிறேன். ஒரு நாள் காலை குடும்பத்தோடு எங்கள் வீட்டிற்கு
வரவும். இட்லியைப்போல காலை சிற்றுண்டி உண்டா என திகைக்க வைக்கிறேன்.
சுப்பு தாத்தா.
http://pureaanmeekam.blogspot.com

நீலகண்டன் said...

இட்லி வடைக்கு
அநங்கன் என்கிற பெயரில் என்னையும், என் உமையவளையும், மற்றும் வைகுந்தத்தில் உள்ளவர்களின் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறீர்கள்.

எனக்கு கூட இட்லி என்றால் பிடிக்காது. ஆனால் ‘பிட்டு’ என்றால் கொள்ளை ஆசை. அதற்க்காக மண் சுமப்பேன், சவுக்கடி படுவேன். ஆனால் எம்.எல்.ஏ வாகவெல்லாம் ஆக மாட்டேன்.என்னை பற்றி அறிய வேண்டுமானால், சிவ புராணம், தேவாரம், திருவாசகம் போற நூல்களிலும், தருமி, நக்கிரனுக்கு நான் பேட்டி அளித்திருப்பதிலும் படித்துக் கொள்ளலாம். எஸ்.வி. சேகரிடம் போல என்னிடம் செல் ஃபோன் கிடையாது. திருவண்ணாமலையிலோ, இமய மலை அடிவாரத்திலோ வந்து என்னை ஜபித்தால் உங்கள் மண்டையிலேயே இவைகளின் சாராம்சத்தை எழுதிவிடுவேன்.
என்னை பற்றி இந்த ஜகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும், இட்லி வடை மற்றும் அநங்கன் நீங்கலாக. அது எனக்கு போதும்.

எஸ்.வீ.சேகரை போல அநங்கன் post ஐ நீக்க சொல்ல மாட்டேன். ஏனென்றால் இதுவும் எமது திருவிளையாடல்களில் ஒன்று.

ஹ ஹா ஹா ஹா.... ஹா

உங்களுக்கு காலமும் கடவுளும் கண்டிப்பாக பதில் சொல்லாது. மேலே நீங்கள் வரும்போது எமது பணியாளர்கள் எமனும், சித்ரகுப்தனும் கேள்வி கேட்பார்கள்.

என்றும் உடுக்கையுடன்

பரமசிவன்
c/o பார்வதி
கைலாசம்

எனக்கு ஈ. மெயில் எல்லாம் கிடையாது. என் பையன் சுப்ரமணியனிடம் வெறும் மயில்தான் உண்டு

Black said...

enge thailvar S.Ve S. kelambitaru

Anonymous said...

Dear IV,

you can publish the response of the concerned party to your criticism but just beacause he objected how can you remove your own post. When you have taken a decision to publish something please stick to it. Is this peoples choice program.It means you yourself dont have conviction on your writings.keep some standards and stick to it.Is S.Ve.Sekhar such a great soul & if you consider him as such why did you publish something in the first place.

Anonymous said...

I also read the posting about him. It was an unneccessary, scathing attack on him for no known sensible reason. The only mistake Sekar committed has been that he has not made up his mind to be in one party. Other than that, for mere survival, he did not remain as an obedient servant of Jayalalitha. If he wanted to just make money, he would have not antogonised her, instead, would have kept flattering her while making money paralelly. While there are many crooks in this country who are virtually looting the nation, its credibility, culture and pride in a fast pace, targetting Sekhar only means that the write wanted a soft target to insult, and satisfy his not-so-decent desires.

Anonymous said...

idly vadai endra gopuram s ve sekar'ukkae vizhundhu vittadhu..
varum vimarsanangal poela oorukku mattumey ubadesam.

PRK said...

I have no idea what you published earlier. You should think twice about your stance before you publish something. Once published, you should stand behind what you did. This raises serious questions about your neutrality. Is this because IV has turned into a place where anybody can write an catchy article and you aren't thorough in your editor role?

Anonymous said...

Sunday-naa 2...Anaal Friday-naa 2 yemaatram...
1. IV Krisha baghavatha-in post-i neekiyathu
2. Advani Sonia-vidam mannippu kettathu

Anonymous said...

நீலகண்டன்,
உங்கள் காமெடியை ரசிச்சேன்...

ரமேஷ்.

R.Gopi said...

எஸ்.வி.சேகர் இவ்ளோ சீரியஸான ஆசாமியா?

அவரோட பெரியப்பா நாடகத்தில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு போட்டு சாத்தி எடுப்பாரே...