பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 06, 2011

சன்டேனா இரண்டு (6-02-11) செய்திவிமர்சனம்

இந்த வாரம் இரண்டு பேர் (லாரன்ஸ் மற்றும் கோபி) எடுத்த சித்தம் குறும்படம் ஒரு சிறப்பு பார்வை
அவள் பூச்சூடினாள்.
விதவையானது
செடி.

-இது நான் படித்தபோது கல்லூரி மலரில் நான் எழுதிய ஹைக்கூ பாணி கவிதை. அப்போது புதுக்கவிதைகளின் தாக்கம் மெல்லமெல்ல தேய்ந்து ஹைக்கூ கவிதைகள் என்று உருவாகி, இப்போது கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் வலை உலகம் என்னும் ஒரே குடையின் கீழ் வந்துவிட்டது வலைபதிவுகளுக்கு அடுத்தபடியாக தற்போது பெரும் கவனம் பெற்றுவரும் இன்னொரு உலகம்...குறும்படங்கள்.

எப்போதும் இல்லாத அளவுக்கு குறும்படங்களுக்கு வரவேற்ப்பும், கவனமும், அந்தஸ்த்தும் தற்போது கிடைக்கதொடங்கி விட்டது. மக்கள் தொலைக்காட்சியில் "பத்து நிமிட கதைகள்" என்று ஒரு குறும்படமும், ஒரு சிறப்பு விருந்தினர் மூலமாக அதற்க்கு விமர்சனமும், இயக்குனர் சந்திப்பும், மேலும் அந்த குறும்படம் பற்றிய மக்களின் கருத்துக்களும் கொண்ட நிகழ்ச்சி ஒரு மெகா தொடராகவே இருக்கிறது. கலைஞர் டிவியில் வரும் "நாளைய இயக்குனர்" நிகழ்ச்சி நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளதாக தெரிகிறது.

திரைப்படங்கள் புதுக்கவிதைகள் என்றால், குறும்படங்கள் ஹைக்கூ கவிதைகள் போல இருக்கவேண்டும்.

அவ்வாறு ஹைக்கூ கவிதையின் வடிவமாக நான் பார்த்த ஒரு குறும்படம் - "சித்தம்".

சித்தம் - இப்படத்தை எழுதி,இயக்கி இருப்பவர்கள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆன, இட்லிவடையின் நீண்ட கால வாசகரான 'எடக்குமடக்கு' வலைப்பதிவர் கோபி மற்றும் அவரை போன்றே இட்லிவடையின் தீவிர வாசகரான லாரன்ஸ் ஆகிய இருவரும்.

"சித்தம்" படத்தின் கதைக்களம் துபாய். அங்கு ஒரு சாதாரண வேலை பார்க்கும் அன்பு என்கிற இளைஞர் , தன் சகோதரியின் திருமணதிற்காக மூன்று வருடங்கள் 'சீட்டு' முறையில் அங்கு ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ராஜாராம் என்கிற நபரிடம் பணம் கட்டிவருகிறார். ஆனால், சகோதரியின் திருமணம் நெருங்கும் வேளையில், தன்னிடம் பணம் கொடுத்தமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று அன்புவிடம் சொல்லி அவரை விரட்டுகிறார் ராஜாராம்.

ஒரு சாதாரண தமிழ் பட பாணியில் இதுவரை செல்லும் கதை, அதன் பின்னர் வேறுவிதமாக பயணித்து, வளைகுடா தமிழர்களிடம் பரவிக்கிடக்கும் மனிதாபிமானத்தை அழகாக சொல்லி முடிவடைகிறது.

இப்படத்தை பதிவின் முடிவில் தந்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இப்பொழுது "சித்தம்" பற்றிய எனது தனிப்பட்ட கருத்துக்கள்.

கோபி மற்றும் லாரன்ஸ் இருவரும் தான் தற்போது பார்த்து, வாழ்ந்துகொண்டிருக்கும் துபாய் சூழலில் கதை மற்றும் களம் அமைத்து இருப்பது இயல்பாக இருக்கிறது.

அன்பு மற்றும் ராஜாராம் ஆகிய கதாபத்திரங்களுக்கு பொருத்தமான முகங்களை தேர்வு செய்தமைக்கு பாராட்டுக்கள். "கஷ்டப்பட்டு வந்த காசு காத்திலையா போகும்", "நல்லவனா வாழறது ரொம்ப ஈசி.ஆனா, அந்த இடத்துக்கு போறதுதான் கஷ்டம்" போன்ற வசனங்கள் நன்று. இருந்தாலும், பொதுவாக குறும்படங்கள் காட்சியமைப்புகள் மூலம் கதை சொல்வதாக இருப்பதே நன்று. படம் முழுக்க வசனங்களால் நகர்வதால்,இதை ஒரு குறும்படமா? இல்லை டெலிபிலிம் என்று சொல்வதா என்று வகைப்படுத்த இயலவில்லை.

"சித்தம்" என்ற படத்தின் தொடக்கத்தில் விளக்கம் தேவைப்படுகிற தலைப்புக்கு பதிலாக, நட்பு,சகோதரி, தாய் என்று இயங்கும் கதைக்கு "அன்பு" என்றே தலைப்பே இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.இக்குறும்படத்தில் பின்னணி இசைக்காக தமிழ் சினிமா இசையை பயன்படுத்தி இருப்பது நம்மை கொஞ்சம் படைப்பில் ஒட்டாமல் செய்கிறது. இதற்க்கு பதிலாக ஒரு இசைக்கருவியை பயன்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பல்வேறு சொந்த அலுவல்களுக்கு இடையே, நம் நண்பர்கள் கோபி மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவரும் தங்களது தணியாத தேடல் மற்றும் தாகத்தால் செய்து இருக்கும் கன்னி முயற்சி என்பதால் நாம் இப்படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

எல்லாவற்றிக்கும் மேலாக, உலகில் இறைவனை காட்டிலும் உயரிய இடத்தில் நாம் வைக்கவேண்டிய "மனிதநேயம்" என்னும் உணர்வை ஏந்திபிடிக்கும் படைப்பு - "சித்தம்" . இது போன்ற நல்ல முயற்சிகளை அவர்கள் தொடரவேண்டும்.

இட்லிவடை வாசககர்கள் கோபி மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவருக்கும் என் சார்பாகவும், இட்லிவடை சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

”சித்தம்” குறும்படத்திற்கான YOUTUBE LINKS :

பார்ட் - 1 :

http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=ULபார்ட் - 2 :

http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw


(நன்றி.. இனி, அடுத்தவாரம்).


-இன்பா


13 Comments:

Nanban, Melbourne said...

I can't agree more with Inba's comments. Well done, great job guys. Looking forward for your next project :-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Congrats, Gopi & Lawrence!

Roaming Raman said...

//Nanban, Melbourne said...

I can't agree more with Inba's comments. Well done, great job guys. Looking forward for your next project :-)//

ரோமிங் ராமன்:: ---டிட்டோ---

அட ஆமாம்!! என் நண்பர்களுக்காக நான் கூட அணு என்று ஒரு குறும்படத்துக்கு கொஞ்சம் வசனமும், டப்பிங்கும் பண்ணினேன்!! மறந்தே போச்சே!!
விசாரிச்சு லிங்க் போடா முயற்சிக்கிறேன்~!!!

வாசிம்கான் said...

எல்லாம் ஆண்டவன் சித்தம்ங்க Very Nice Movie

கானகம் said...

ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க ?

Anonymous said...

SORRY BOSS! EXTREMELY AMATEURISH..
ALL THE CAST AND THE TECH TEAM HAVE A LOOOOOOOOOOOONG WAY TO GO

சுபத்ரா said...

வாழ்த்துகள் கோபி அண்ணா & லாரன்ஸ்..! சித்தம் நன்றாக உள்ளது. இன்பா சரியாக, அழகாக விமர்சித்துள்ளார்.

லாரன்ஸ் / R.கோபி. said...

//// சித்தம் குறும்படம் ஒரு சிறப்பு பார்வை ////

மிக்க நன்றி. இட்லி வடை வாசகர்களான எங்கள் முயற்சிக்கு, அன்பும் ஆதரவும், தந்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

/// இப்பொழுது "சித்தம்" பற்றிய எனது தனிப்பட்ட கருத்துக்கள். : படம் முழுக்க வசனங்களால் நகர்வதால்,இதை ஒரு குறும்படமா? இல்லை டெலிபிலிம் என்று சொல்வதா என்று வகைப்படுத்த இயலவில்லை. ////

தங்கள் பாராட்டுக்களை அன்போடு குறித்துக் கொண்டு, எங்கள் மன ஓட்டத்தையும் இங்கே ப்திக்கிறோமே...

பார்வையாளரின் அனுபவம், சொல்ல வரும் கருத்தின் பரிமாணமும் வசனங்களில் இல்லாமல், காட்சிகளிலேயே கவிதையாய் விரிய வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்று கருத்து இல்லை.

உதாரணத்துக்கு அன்புவும் அவரது நண்பரும், மானேஜரிடத்தில் தங்கள் நிலையையும் இயலாமையும் விளக்கும் காட்சியில் வசனங்களே இல்லையே. என்றாலும் காட்சி அமைப்புக்கள் வைக்க சில நடைமுறை சிக்கல்கள் உண்டு. உதாரணமாக அன்பு வேலை செய்வதாக காட்டி, அந்த கதாபாத்திரத்தின் நிலை விளக்க இன்னும் அழகான விஷுவல்ஸ் காட்ட ஆசை, ஆனால் கைக்கு கிடைத்த ஒரு பணித்தளத்தில் அதை எடுத்தது போல. ஏன் அந்த கிளைமாக்ஸ் கூட ஒரு பூந்தோட்டத்தில் இருந்திருக்க வேண்டாம்...

//// "சித்தம்" என்ற படத்தின் தொடக்கத்தில் விளக்கம் தேவைப்படுகிற தலைப்புக்கு பதிலாக, நட்பு,சகோதரி, தாய் என்று இயங்கும் கதைக்கு "அன்பு" என்றே தலைப்பே இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். /////

இந்த அவசர உலகில் சித்தம் போன்ற நல்ல தமிழ் வார்த்தைகளை நாம் மறந்து விட்டோம். அதை நினைவுபடுத்தி, கோடிட்டு காட்டுவது முக்கியம் அல்லவா. பெரும்பாலான மக்களை சென்றடையும் இந்த வடிவத்தில் நம் பங்குக்கு இது போல் ஆக்கபூர்வமான சிந்தனைகள் உணர்வினை விதைப்பது நம் கடமையும் பொறு‍ப்பும் அல்லவா.

//// இக்குறும்படத்தில் பின்னணி இசைக்காக தமிழ் சினிமா இசையை பயன்படுத்தி இருப்பது நம்மை கொஞ்சம் படைப்பில் ஒட்டாமல் செய்கிறது. இதற்க்கு பதிலாக ஒரு இசைக்கருவியை பயன்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். /////

நல்ல ஆலோசனை. ஏற்றுக் கொள்கிறோம்.

லாரன்ஸ் / R.கோபி.

M Arunachalam said...

Well done Gopi, Lawrence & Team.

R.Gopi said...

எங்களின் முதல் முயற்சியை வாழ்த்திய மற்றும் குறைகளை சுட்டிக்காட்டிய தோழமைகள் அனைவருக்கும் எங்களின் மனம் கவர்ந்த நன்றி....

முதல் முயற்சியில் செய்த (சுட்டிக்காட்டிய) சில தவறுகளை அடுத்த முயற்சியில் களைவோம்....

அனைவருக்கும் நன்றி....

Anonymous said...

//எங்களின் மனம் கவர்ந்த நன்றி....//

அண்ணா அதென்னங்க’ண்ணா மனம் கவர்ந்த நன்றி!! “நிறைந்த” -ன்னு சொல்ல வந்தீங்களா ?

வல்லிசிம்ஹன் said...

கொஞ்சம் ஆடியோ ஒத்துழைக்கவில்லை. மற்றபடி குறையில்லை. துபாய் க்ரீக் பார்க் நல்லா வந்திருக்கு. கூடவே பின்னணியில் தொழுகை ஒலி கூடக் கேட்டேன்,.
நல்ல கதை அமைப்பு. வாழ்த்துகள் கோபி &லாரன்ஸ்.

Murugan said...

Nalla muyarchi Mr.Gopi& Mr.Lawrence manamarntha valthukkal...nalla vimarsanam Inba...thodarattum...Let us live and let live...Loka samastha sukino bavanthu!