பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 18, 2011

31+1

இன்றைய தலைப்பு செய்தி கலைஞர் டிவி அலுவலததில் சி.பி.ஐ ரைடு( அதிரடி‍ சோதனை என்று சொல்லலாம் ஆனால் பல நாட்களாக கலைஞர் டிவி - 200 கோடி என்று செய்தி போட்ட பின்னர் சி.பி.ஐ வந்தால் எப்படி அதிரடியாக இருக்க முடியும் ? )
என்று இருக்க வேண்டும் ஆனால் ராமதாஸுக்கு 31 தொகுதி + 1 ( அன்புமணி ) என்று முடிவு ஆனதால் தலைப்பு செய்தி மாறிவிட்டது.

டெல்லியில் சந்திப்பு நடந்தபின் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது ஆனால் எவ்வளவு தொகுதி என்று முடிவு செய்யவில்லை. முதலில் திமுக-காங்கிரஸ் தொகுதி எண்ணிக்கை தான் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் இன்று தடால்டியாக ராமதாஸுக்கு 31+1 என்று உறுதி செய்தத்து காங்கிரஸுக்கு செக் வைக்க கலைஞர் முடிவு செய்துவிட்டார் என்று எண்ணுகிறேன். காங்கிரஸும் கலைஞரை செக் வைக்க தான் இந்த ரைடு, ராஜா ஜெயிலில் அடைப்பு என்று நாடகம் நடத்துக்கிறது என்றும் பரவலாக பேசுகிறார்கள்.

அப்படியே 31+1 என்று முடிவு செய்தாலும் அதை இப்போதைக்கு கலைஞர்/ராமதாஸ் வெளியே சொல்லியிருக்க கூடாது. விஜயகாந்த் - ஜெ கூட்டணிக்கு ( அமைந்தால் ) இது சாதகமாக இருக்கும். விஜயகாந்துக்கு ஜெ 32+1 என்று கொடுத்தாலும் கொடுப்பார். சென்னையில் இந்த மாதம் 21-ம் தேதி நடக்கவிருக்கும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் அக்கா மகள் திருமணத்தில் ஜெ. வருகை புரிந்தால் கூட்டணி உறுதியாகும் என்று பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது.

தமிழக அரசியல் எப்படி போகிறது என்று பார்க்க வேண்டும். ஆனால் ராமதாஸ் திமுகவில் இருப்பது திமுக கூட்டணிக்கு நிச்சயம் பலம் தான் என்பது மறுப்பதற்கு இல்லை.


பிகு: ஜெயா டிவி வாசலில் மாடு சானி போட்டாலே மூச்சு மூச்சுக்கு முன்னூறு செய்தி போடும் டிவியில் ரெய்டு பற்றி செய்தி கொஞ்சம் இன்னும் வரவே இல்லையாம்!. மூச்.17 Comments:

Vinoth said...

அது எந்த டீவீ ?

King Viswa said...

ரெய்டு வரப்போகிறார்கள் என்று நேற்று மாலையே தகவல் சொல்லப்பட்டு அதற்க்கு கலைஞர் டிவி அலுவலர்கள் தயாராக இருந்தனர் என்பது உள் நாட்டு தகவல்.


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

Anonymous said...

Even in Sun TV, they did not mention a single word about Kalaizhar TV Raid.... LOL....

Anonymous said...

நேற்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவும் சேதுராமனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவருக்கு மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

தனது முதல் தொகுதிப் பங்கீட்டை புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி ஆகிய தலித் கட்சிகளுடன் செய்து கொண்ட ஜெயலலிதா, அடுத்ததாக முக்குலத்தோர் பிரிவு கட்சியான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதன்மூலம் முதலில் தலித் ஓட்டுகளுக்கும், அடுத்ததாக முக்குலத்தோர் சமுதாய வாக்குகளுக்கும் ஜெயலலிதா குறி வைத்துள்ளார். புதிய தமிழகம் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்ப்பதற்கு முக்குலத்தோர் இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையி்ல் அடுத்தடுத்து இந்த இரு கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை வழங்கி, இரு தரப்பின் ஓட்டுகளையும் கவர ஜெயலலிதா முயன்றுள்ளார்.

சேதுராமனோடு சேர்த்து நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக்குக்கும் ஒரு தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கார்த்திக் என்ன பிரச்சனை தந்தோரோ, அது இன்னும் நடக்கவில்லை.

vijayaragavan said...

You are wrong. I, today morning checked Jaya TV which had this flash news running.

Anonymous said...

//ஆனால் ராமதாஸ் திமுகவில் இருப்பது திமுக கூட்டணிக்கு நிச்சயம் பலம் தான் என்பது மறுப்பதற்கு இல்லை.//

Neengala ippadi IV? Aanalum S.Ve.S kitta irunthu maruppu kaditham vanthathil irunthu ellor kittayum sarva jakkirathaiya than irukeenga pola...

LAVANYA said...

இல.கணேசன் பிறந்த நாளுக்கு நேரில் போய் வாழ்த்து.இதுவும் காங்குக்கு செக் தானே

King Viswa said...

தமிழில் மொத்தம் சேனல்கள் உள்ளன. அவற்றில் இரண்டே இரண்டில் மட்டும் தான் இந்த செய்தி வந்தது (இன்று மாலை வரை - ஜெயா டிவி, கேப்டன் டிவி). ஜெயாவின் மற்றுமொரு துணை சேனலையும் சேர்த்துக்கொண்டால் (ஜெயா பிளஸ்) மூன்று என்று சொல்லலாம். என்ன கொடுமை சார் இது?


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

ஏ டண்டணக்கா said...

31+1= 32 என்று கணக்கு வருகிறதே! தேர்தலுக்கு பிறகு எல்லாப் பல்லும் தெரிய சிரித்தபடி இருப்பார்களா அல்லது 32 பல்லையும் மக்கள் பேர்த்து விடுவார்களா! பொருத்திருந்து பார்ப்போம்.

பூ said...

அய்யா மொகத்துல அப்படி ஒரு புன் சிரிப்பு.

பூ said...

பா மா கா வோட மது ஒழிப்பு கொள்கை என்னசின்னு தெரியல? இந்த தேர்தல ஜெயிச்ச மது விலக்கு கொள்கைய அமுல்படுத்த சொல்லி மஞ்சள் துண்ட கேப்பாரா?

எல்லா கட்சியோட தேர்த்தல் அறிக்கைய இட்லி பப்ளிஷ் பண்ண நல்ல இருக்கும்

bandhu said...

காங்கிரஸ் - இற்கு செக் வைக்கும் நிலையில் கருணாநிதி இல்லை. இது அவருக்கு தெரியாமல் இருக்காது. இது போன்ற விளையாட்டுக்கள் ஆப்பை தேடி அதன் மேல் உட்கார்வதற்கு சமம்! அதை தான் கருணாநிதி பண்ணிக்கொண்டிருக்கிறார்!

R.Gopi said...

31 சீட்டு வாங்கிட்டதால பா.ம.க. இனிமே டாஸ்மாக் கடைகள் மூடுவிழா போராட்டம் எல்லாம் அறிவிக்காது தானே...

Anonymous said...

போட்டோவில் ஸ்டாலின் எங்கே? அவருக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லையா என்ன?

Anonymous said...

If this is the case of pulling others legs down before election, what will they do during election and after election. Will they not backstab the party/ies who are in their cootani (sorry cootanikku english theriyala) whether it will be a coalition or collution

R.Gopi said...

ரெய்டு வந்தவங்கள மஞ்சள் சால்வை போட்டு வரவேற்றார்களாமே!!!

மெய்யாலுமான்னு தெரில... காத்து வழி வந்த செய்தி....

Anonymous said...

SHAMELESS FILTHY PEOPLE!!

- CITIZEN