பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 20, 2011

சன்டேனா இரண்டு (20-02-11) செய்திவிமர்சனம்


இந்த வாரம்..."ஆன்மிக மலர்".

செய்தி # 1

ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

முருகன் - சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா என்ற பாடல்வரிகள்தான் எத்தனை அருமை. மூத்த குடி என்ற பெருமைக்கு உரிய நம் தமிழ்க்குடியின் முழுமுதல் கடவுள் முருகன். மலைகடவுளான முருக வழிபாடும், முருகு அல்லது முருகன் என்கிற பெயரும், தமிழின் பழம்பெரும் இலக்கிய நூலான தொல்காப்பியத்தில் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் திரு.வி.கல்யாணசுந்திரம்.
எனக்கு பிடித்த புத்தகங்களில் இன்றும் இடம் பெற்று இருக்கிறது கல்லூரி நாட்களில் எனக்கு பாடபுத்தகமாகவும் அமைந்த, திரு,வி.க என்னும் திருவாரூர் வி.கல்யாணசுந்திரம் அவர்கள் எழுதிய முருகபெருமானை பற்றிய ஆராய்ச்சி நூலான "முருகன் அல்லது அழகு" என்னும் நூல்.

முருகன் என்ற சொல் எப்போது தமிழில் தோன்றியது? முருகவழிபாட்டின் தொன்மை யாது? தமிழ் மரபுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்புகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு, தனது நீண்டதொரு ஆராய்ச்சியின் மூலம் இந்த நூலில் பதில் தந்து இருக்கிறார் தமிழ் அறிஞர் திரு,வி.க.
இயற்கையழகை முருகெனக் கொண்டு பழந்தமிழர் வழிபாடு நிகழ்த்தி வந்தனர்.முருகன் என்னும் அழகை அடிப்படையாகக் கிடத்தி நூல் வந்த நூல் என்பதால் முருகன் அல்லது அழகு என்று பெயரிட்டேன் என்று இதன் பெயர்க்காரணம் பற்றி குறிப்பிடுகிறார் திரு.வி.க. இந்நூல் பல்வேறு பதிப்புகளாக தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. இதன் மூன்றாம் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1930 .

இந்நூலில் இருந்து முருகர் வழிபாடு எப்பொழுது முதல் தொடங்கியது என்பது குறித்தான திரு.வி.கவின் விளக்கம் இடம்பெறும் ஒரு பகுதியை அப்படியே தந்து இருக்கிறேன்.

"முருகு என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை மணம், உளமை, கடவுட்டன்மை, அழகு என்பன. இந்நான்கு பொருளடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழுமுதற்பொருளை அழைத்தது வியக்கத்தக்கது. .

முருகு என்பது மிகத்தொன்மை வாய்ந்த ஒரு தமிழச் செஞ்சொல். பண்டை நாளில் தமிழ்ச் சொற்கள் பல முதல் நிலையளவாக நின்று ஆட்சி பெற்று வந்தன, பின்னே நாளடைவில் அவைகளுள் பல இடைநிலை இறுதிநிலைகள் பெறலாயின. அச்சொற்களுள் முருகு என்பதும் ஒன்று. முருகு என்னும் முதல்நிலை அன் என்றும் ஆண்பால் இறுதி நிலையேற்று முருகன் ஆயிற்று. ஆகவே முருகினின்றும் முருகன் பிறந்தானென்க.

முருகு அல்லது முருகன் என்னுஞ் சொல்வழக்கு மிக மிகத் தொன்மையது. அச்சொல் வழக்கு இந்நாளையது என்று எவராயினும் வரையறுத்துக் கூறல் இயலாது. தொன்மை வாய்ந்த முருகன் என்னுந் தமிழ்ச்சொல் இன்னும் இறந்து படவில்லை; இன்னும் ஆட்சி பெற்றே நிற்கிறது.

முருகின் தொன்மை காணச் சிறப்பாக ஈண்டு இரண்டு குறிப்புக்கள் பொறிக்கலாம். ஒன்று முருகன் தமிழ்க்கடவுள் என்பது; மற்றொன்று முருகன் மலைநிலக் கடவுள் என்பது. இவ்விரண்டானும் முருகின் தொன்மை நனிவிளங்கும். `தமிழன்', `தமிழ்ப் பெருமான்', `தமிழ் இறை', `முத்தமிழோன்' எனவும், `குறிஞ்சி கிழவோன்', `மலை கிழவோன்' எனவுந் தமிழ்ப் பெரியோர் முருகனை அழைத்திருத்தல் காண்க.

தமிழன் முதுமையையும், தமிழ் மக்களின் பழமையையும் விரிக்கிற் பெருகும். முதன் மகன் தோன்றிய இடம் தமிழ்நாடு என்று ஆராய்ச்சியாளர் கண்ட உண்மையொன்றை நினைவூட்டுவது சாலும்.

மக்கள் வாழ்வு முதல் முதல் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கொள்கை. இஃது இயற்கை நூலாசிரியர் பலர் ஒப்பமுடிந்த உண்மை. மலையில் வாழ்ந்த பழைய மக்கள் தங்கள் கடவுளைக் `குறிஞ்சிக் கிழான்' என்று கோடல் இயல்பு. பழந்தமிழ் மக்கள் மலையிடை வாழ்ந்தபோது, தங்கள் கடவுளை மலைநிலக்கடவுளாகக் கொண்டதில் வியப்பென்ன? மக்களின் நல்வாழ்வு மலையிடை அரும்பிய போழ்து முருகெனுஞ் சொல்லும் அலர்ந்தது. இத்தகைய சொல்லின் தொன்மையை எங்ஙனம் அளந்துரைப்பது?

தமிழ்நாட்டைப் பற்றிய எவ்வாராய்ச்சிக்குந் தொல்காப்பியத்தைக் கருவாயாகக் கொள்வது வழக்கம். இப்பொழுதுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம் பழமையுடையதாகலின் என்க. தொல்காப்பியக் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. அஃது இன்னும் வளர்ந்து செல்கிறது. அதுகுறித்து இதுகாறும் ஆராய்ந்தவர்க்குள்ளுங் கருத்து வேற்றுமை உலவி வருகிறது. தொல்காப்பியக் காலம் இத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறாரேயன்றி, ஏறக்குறைய ஆதல் `இக்காலம்' என்று எவரும் அறுதியிட்டுக் கூறினாரில்லை. தொல்காப்பியனார் காலம் மூவாயிரம், ஐயாயிரம், பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருத்தல் வேண்டுமென்று முறைமுறையே சிலர் கிளந்து கூறியுள்ளனர்.


தொல்காப்பியனார் காலத்தில் முருகன் வழிபாடு இருந்தது என்பதற்கு அவர் தம் நூலினுள் அகச்சான்றுகளுண்டு. தொல்காப்பியத்தில் நால்வகை நிலன்களும், அவ்வந்நில இயலுக்கேற்றவாறு மக்கள் கொண்ட வழக்க ஒழுக்கங்களும், பிற வாழ்வுத் துறைகளும் பேசப்படுகின்றன. அப்பேச்சான் தொல்காப்பியக் காலத்துக்கு முன்னரே தமிழ்மக்கள் குறிஞ்சி நிலம் விடுத்து, மற்ற முல்லை மருதம் நெய்தல் நிலங்களில் குடிபுகுந்து, வாழ்வு நடாத்தினார்கள் என்று தெரிகிறது. தமிழ் மக்கள் நால்வகை நிலங்களிலும் வாழ்வு துவங்கா முன்னர் அதாவது அவர்கள் மலைநிலத்தில் மட்டும் வாழ்ந்த வேளையில், அவர்கள் முருகன் வழிபாட்டைத் தொடங்கிப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். இது முருகனுக்குரிய `குறிஞ்சி கிழான்', `மலை கிழவோன்' முதலிய சிறப்புப் பெயர்களான் அறியக் கிடக்கிறது. மலையிடை மட்டும் மக்கள் வாழ்வு துவங்கிய நாள் எந்நாளோ?

ஆறாவது அறிவு எது? அவ்வறிவே கடவுள் உணர்வெனும் அன்புநெறி விளக்கத்துக்கு நிலைக்களனாயிருப்பது. அவ்வறிவு விளங்கிய மக்கள், அவ்வறிவு விளங்காத மாக்களினின்றும் பிரிவுற்ற போழ்து, அவர்களிடை (மக்களிடை)க் கடவுள் உணர்வு அரும்பியிருத்தல் வேண்டும். அக்கடவுள் உணர்வே மக்களையும் மாக்களையும் வேறுபடுத்துவதென்க. மக்களிடைக் கடவுளுணர்வு, அவர்கள் மலையிடை மட்டும் வாழ்ந்துபோது தோன்றினமையால், அவர்கள் கடவுளைக் `குறிஞ்சி கிழான்', `மலைக் கிழவோன்' என்று போற்றினார்கள் போலும்.

மாக்கள் மக்கள் இயல்புகளும் தொல்காப்பியனார் காலத்தில் முதிர்ந்து ஆட்சியிலிருந்தன. ஆதலால் அவ்வேற்றுமை தோன்றிய காலமும் தொல்காப்பியத்துக்கு முந்தியதே. அவ்வேற்றுமையுற்ற காலத்தைக் கணித்துக் கூறல் எளிதோ? மன்பதைக்குள் மாக்கள் மக்கள் வேற்றுமையுணர்வு தோன்றி, மக்களினத்தில் கடவுள் அறிவு அரும்பிய நாள் தொட்டு, முருகு என்னுஞ் சொல்வழக்குத் தோன்றியிருத்தல் வேண்டும். அந்நாள் இன்னும் ஆராய்ச்சி யுலகிற்கு எட்டவில்லை.

முருகெனுஞ் சொல்வழக்குக் காலத்தைக் காண்டலே அரிதாயிருக்கிறது. அங்ஙனமாக, அச்சொற் பொருள் காலத்தை ஆராயப் புகுவது அறியாமையாகவே முடியும்.

- இவ்வாறு ஒரு அருமையான விளக்கம் தருகிறார் திரு.வி.க.

சுருங்க சொன்னால் "தமிழ் மக்கள் வாழ்வு, என்று மலைநிலத்தில் துவங்கப்பட்டதோ, அன்று தொட்டு இன்றுவரை, முருகன் தமிழ் நாட்டுத் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகிறான். தமிழ்நாட்டுப் பழங்கடவுள் முருகனே". என்பதே இப்புத்தகத்தின் அடிப்படை.

நான் சொல்லவந்தது என்னவென்றால், நான் புனேவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன். அக்கோவில் ஒரு கேரளாவை சேர்ந்த டிரஸ்ட் ஒன்றினால் நடத்தபடுகிறது.அக்கோவிலின் வெளிபிரகாரத்தில் ஒரு முருகன் சன்னதியை கண்டேன்.

அப்போது என்னுடன் முதல்முறையாக வந்திருந்த வடஇந்திய நண்பருடன் பேசியபோது அவருக்கு "முருகன்" குறித்தான அதிக பரிச்சியம் இல்லை என்பது எனக்கு தெரியவந்தது. . சிவபெருமானுக்கு ஸ்ரீகணேஷ் மட்டுமே ஒரே மகன் என்ற கருத்தே வடஇந்தியாவில் இருக்கிறது. அங்கு தமிழ்நாடு, கேரளா தொடர்புடைய கோவில்களை தவிர, வேறு எங்கும் முருகர் சன்னதி இல்லை. நான் அறிந்தவரை வடஇந்தியாவில் எங்கும் முருகருக்கு தனி கோயில்களும் இல்லை.

"முருகன்" குறித்தான பின்வரும் எனது கருத்து தவறென்றால், அன்பர்கள் விளக்கம் அளித்து திருத்துங்கள்.

நம் தமிழகத்தில், தமிழர்களிடம் பெருகி இருந்த முருக பக்தியை கண்டு, பின்னாளில் சிவபெருமான் - பார்வதி - விநாயகர் என்ற குடும்பத்தில் ஒருவராக, சிவபெருமானின் திருமகனாக இந்து மதத்தை ஒன்றிணைப்பதற்காக "முருகர் " புராணங்களில் இணைக்கப்பட்டு இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.

செய்தி # 2

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், நான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று இருந்த போது,கருவறைக்கு மிகவும் அருகில் சென்றும், பிரகதீஸ்வரரை தரிசனம் செய்ய இயலவில்லை. அந்த அளவுக்கு இருட்டு.

நடிகர் எஸ்.வி. சேகர் கூட, தனது ஒரு நாடகத்தில் ஒளிந்து கொள்ள சரியான இடம் தஞ்சை கோவில் கருவறை என்று கிண்டல் செய்து இருக்கறார்.

ஆனால்,இன்று பெரிய கோவிலின் நிலை வேறு. கூட்டம் நிறைந்த,நன்கு பராமரிக்கபட்ட, தஞ்சை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகி விட்டது அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம். கோவிலின் அறங்காவலராக இருக்கும் மராத்திய வம்சத்தை சேர்ந்த சரபோஜி மன்னரின் குடும்பத்திற்கும்,பெரிய கோவில் நிர்வாக கமிட்டிக்கும் இந்த தருணத்தில் நன்றிகள் பல நாம் தெரிவிக்க வேண்டும்.

. தஞ்சாவூர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை கவுரவிக்கும் விதமாக , பெரியகோவில் கட்டி 1000 ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நமது தமிழக அரசு எடுத்த சதய விழா, அரசை பாராட்ட வேண்டிய சாதனைகளில் ஒன்று.

ராஜராஜ சோழன் - தஞ்சை பெரியகோவில் இடையிலான தொடர்புகளை தனது 'தஞ்சை பெரிய கோவிலும் ராஜராஜனும்' என்ற பின்வரும் கட்டுரையில் விளக்குகிறார் கி.ஸ்ரீதரன் அவர்கள்.

இறைவன் வீதி உலா வரும் பொழுது ஒலிப்பதற்காக பொன்னாலான காளங்கள் (பாத்திரங்கள் ) அளிக்கப்பட்டன. அவற்றில் "சிவபாத சேகரன்', "ஸ்ரீராஜ ராஜன்' எனப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கோவிலில் வழிபாட்டில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களிலும் இதே போன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை அறிய முடிகிறது. இக்கோவிலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (ஸ்ரீகார்யம்) பொய்கைநாடு கிழவன், ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் ராஜராஜ சோழன், அவனது தேவி லோகமகா தேவி ஆகியோரது பிரதிமத்தை செய்து அளித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இக்கோவிலில் காணப்படும் ஓவியங்களிலும் ராஜராஜ சோழனின் தோற்றத்தைக்கண்டு மகிழலாம்.

மேலும், திருவிசலூர், திருநாரையூர், விளநகர், கோவிந்த புத்தூர் போன்ற கோவில்களிலும் ராஜராஜ சோழனின் வடிவத்தை சிற்பங்களாகக் காண முடிகிறது.பண்டைநாளில்கோவிலை எழுப்பிய மன்னர்கள், சிற்பிகள் போன்றவர்களின் சிற்ப வடிவங்களை ஒரு சில கோவில்களில் காண முடிகிறது. உதாரணமாக, திண்டிவனம் - மரக்காணம் சாலையில் அமைந்துள்ள உலகாபுரம் என்ற ஊரில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தலைமை தேவியான தந்திசக்தி விடங்கி என்னும் உலோகமாதேவி பெயரால் இவ்வூர் உலோகமாதேவி புரம் எனக் குறிக்கப்படுகிறது. இன்று அது மருவி உலகாபுரம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் அம்பலவன் கண்டராதித்தனார் என்பவரால் கட்டப்பட்டதைக் கல்வெட்டு குறிக்கிறது. கோவிலின் கருவறைக்கு அருகில் சுவரில் கோவிலை எழுப்பிய கண்டாரதித்தனார் சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை சிற்ப வடிவிலே காண முடிகிறது. இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலிலும் தெற்குபுற அணுக்கன் நுழைவு வாயிலுக்கு (கருவறை அருகில்) அருகே உள்ள சக்கரதான மூர்த்தி சிற்ப வடிவத்திற்கு மேலே மகரதோரணத்தின் நடுவே ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானை வழிபடும் உருவத்தினை காணலாம்.

இவ்வடிவம் ராஜராஜ சோழனது உருவம் என அனைவராலும் கருத முடிகிறது. ஏனெனில், தனது குலநாயகமான ஆடவல்லான் வடிவத்திற்கு இக்கோவிலில் சிறப்பிடம் தந்து மகிழ்ந்திருக்கின்றான் ராஜராஜ சோழன். இக்கோவிலில் பயன்படுத்தப்பட்ட மரக்கால், துலாக்கோல் (தராசு), எடைக்கல் போன்றவைகளுக்கும், "ஆடவல்லான்' என்றே பெயரிட்டு போற்றியிருக்கின்றான் ராஜராஜ சோழன். எனவே, கருவறை தெற்கு தூணில் காணப்படும் சிற்பத்தினை ராஜராஜ சோழன் வடிவமாக கொள்வதில் தவறில்லை.

என்று பெரியகோயிலில் உள்ள சான்றுகளோடு விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் திரு.ஸ்ரீதரன்.

ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வருகிறது.

இன்னும் ஆறு மாதங்களில் தஞ்சை பெரியகோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இதற்க்கான ஏற்ப்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆனாலும், இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு தீராத கரும்புள்ளியாக இருக்கிறது ஒரு மூட நம்பிக்கை. அதாவது...இக்கோவிலின் நேர்வழியாக,முன்வாசல் வழியாக சென்றால், செல்லும் அரசர் அல்லது தலைவரின் பதவி பறிபோய்விடும் என்பதே அது.

இக்கோவிலில் ஒருமுறை பெரும் தீவிபத்து நடந்தபோது, முற்போக்கு சிந்தனைகளை பேசும் கருணாநிதி அவர்கள் கூட, பின்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார்.

"இது போன்ற ஐதீகம் எனக்கு தெரிந்தவரை எந்தவொரு குறிப்புகளிலும், வரலாற்றிலும் இல்லை" என்கிறார் தஞ்சாவூரில் வசிக்கும் எனது நண்பரான ஒரு தமிழாசிரியர்.

மகாகும்பாபிஷேகம் நடைபெறபோகும் அந்த திருநாளில், அன்று ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும்,இல்லாவிட்டாலும் சரி. அவர் இக்குடமுழுக்கில் கலந்துகொள்ளவேண்டும். அவர் கோவிலின் முன்வாசல் வழியாக சென்று, உலகமே வியக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவிலின் மேல் உள்ள கரும்புள்ளியை துடைக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

"கண்கொள்ளாகாட்சி" என்னும் வார்த்தைக்கு நான் உணர்ந்த சரியான,அழகான உதாரணங்கள் இரண்டு.

ஒன்று, அதிகாலை சூரியஉதயத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்.

இரண்டு, அந்திமாலையில்,...இரவில் மின்னொளியில் ...தஞ்சை பெரியகோவிலின் கோபுரம்.(நன்றி..இனி,அடுத்தவாரம்).

-இன்பா

40 Comments:

டகிள் பாட்சா said...

தமிழரின் தனிக் கடவுள் முருகன். ஒளவையார் முதல் கண்ணதாஸன் வரை முருகரை புகழ்ந்து எழுதிய தமிழ் பாடல்கள் மெய் சிலிர்க்க வைக்கும். அதுவும் கண்ணதாசனின் ‘தெய்வம்’மற்றும் ‘துணைவன்’ படப் பாடல்கள் குன்னக்குடியின் இசையில் எப்போதும் நம் நினைவில் நிற்பவை.

பல முருக பக்த கோஷ்டிகள் ‘ மலை மேல் இருப்பவன் முருகன்’ திருப்பதியில் காட்சி அளிப்பதும் முருகனே! பட்டையாய் நாமத்தை போட்டு மறைத்து பெருமாளாய் ஆக்கி விட்டார்கள்’ என்று கூறுவதில் எத்தனை உண்மை என்று ஆராய்சியாளர்கள் கூறினால் தெளிவு பெறுவோம்.

டகிள் பாட்சா said...

ஐயா!

சத்தியமாய் controversy ஐ கிளப்ப நான் இதை எழுதவில்லை. பெருமாள் பக்தர்கள் கிளர்ந்தெழுந்து திட்டி அனானி கமெண்ட் போடுவதற்க்கு முன் ஒன்று சொல்கிறேன். நானும் தீவிர விஷ்ணு & முருக பக்தன்தான். பல வருடங்களுக்கு முன் ஒரு சொற்பொழிவாளர் ‘திருப்பதி கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை மேற்கோள் காட்டி’ திருப்பதி கடவுள் முருகனே என்று confidentஆக வாதிட்டதிலிருந்து சற்று குழம்பி போய் திருப்பதி தரிசனம் செய்யும் போதெல்லாம் ‘எதுக்கு சாமி வம்பு’ என்று ‘ அப்பனே முருகா! விஷ்ணுவே!’ என்று வணங்கிவிட்டு வருவேன். உண்மை என்ன? யாராவது வாசகர்கள் விளக்க வேண்டுகிறேன்.

cho visiri said...

//நம் தமிழகத்தில், தமிழர்களிடம் பெருகி இருந்த முருக பக்தியை கண்டு, பின்னாளில் சிவபெருமான் - பார்வதி - விநாயகர் என்ற குடும்பத்தில் ஒருவராக, சிவபெருமானின் திருமகனாக இந்து மதத்தை ஒன்றிணைப்பதற்காக "முருகர் " புராணங்களில் இணைக்கப்பட்டு இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.''

Murugan is otherwise known as Kartikeya and Subramaniya.

Aadishankarar is also known as ShaNmada Sthaapakar. One of such six paths is known as Kaumaaram. (as The Muzhumudal Kadavul). Other paths are Saivam (Paramasivan), Saaktham (Paraasakti), VaishNavam (Vishnu), Sooram (Sun as Muzhumudal KadavuL.

The concept of treating Subramaniyan as a God was not inserted by Tamilians.

Simulation said...

"அலெக்சாந்தருக்கும் ஆறுமுகனுக்கும் என்ன சம்பந்தம்?"

http://simulationpadaippugal.blogspot.com/search/label/Alexander

cho visiri said...

It is a fact that Muruga's abodes are mostly Hills. But it need not mean that all Gods/Temples situate at Hills should be Subramanya's alone.
In fact , there are claims that the God of Seven Hills is Sakti (they show the existence of Lins at the four corners of the Compound Wall (called MadhiL in Tamil) as evidence.

According to some persons, the God is none other than Shiva. they cite the fact that there is long hair behind the back of the main statue (deity, the Moolavar).

One may read a lengthy article by Ramesh I.A.S, Former Executive Officer, T.T. Devasthanams. In that article the learned author, who may have had first hand information/observations, has brought out in unambiguous terms, that the God at Seven Hills is none other than Venkateswara, the Vishu incornation.

By the way, according to recorded history, Vishitadvaitha Aacharya, Srimadh Ramanujar (about One thousand years ago) put a fullstop to the controversies that were raging at that time when he left the symbols of Shiva and those of MahaaVishNu one night and the next day morning they, on entering the Sannidhi, saw the symbols adorning the shoulders of the God.

Anonymous said...

"Aadishankarar is also known as ShaNmada Sthaapakar "

This statement is not true. First understand why one needs to start six things if he is sure that one way is correct. It will mean that he was not clear on which to take.

Anonymous said...

திருப்பதியில் இருப்பது எந்த சாமியானாலும் ஓ.கே. திருப்பதி ஆந்திராவுக்கு போனதால் தப்பித்தது. தமிழ் நாட்டில் இருந்தால் திராவிட கட்சிகள் மொத்த பணத்தையும் சூறையாடியிருக்கும். 2G, 3G மாதிரி் எந்த G ஐயும் பாலாG ஐயும் நம்ம மஞ்ச துண்டு கோஷ்டி விட்டு வைக்குமா?

Anonymous said...

"Thanjai Periya Koil" -Thousand years ceremony - those who celebrated the same are now in problem as per the belief;Whether the Periya Koil or Spectrum G 2 shows its effects as believed -

Suppamani

மஞ்சள் ஜட்டி said...

அனானி சொல்லுறது ரைட். திருப்பதி தமிழ் நாட்டு கிட்ட இருந்தா, மஞ்ச துண்டு குடும்பம்....அப்படியே துபாய்க்கு வித்திருப்பாங்க. மேலும் உண்டி கலெக்ஷன் அன்னாடம் சி.ஐ.டி காலனிக்கு போயிருக்கும்.... நல்ல வேளை !!! பெருமாள் தப்பிச்சார்...இல்லாங்காட்டி, பாலாஜி யை கோமணாண்டி ஆக்கி இருப்பாங்க..

Anonymous said...

இதையும் பாருங்க. தமிழ் முருகன் புராணத்தில் இணைக்கப்பட்டது, திருப்பதி சாமி-ன்னு ஒங்க கேள்விக்கு ஆதாரத்தோட விடை கிடைச்சாலும் கிடைக்கும்.
http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...
அனானி சொல்லுறது ரைட். திருப்பதி தமிழ் நாட்டு கிட்ட இருந்தா, மஞ்ச துண்டு குடும்பம்....அப்படியே துபாய்க்கு வித்திருப்பாங்க. மேலும் உண்டி கலெக்ஷன் அன்னாடம் சி.ஐ.டி காலனிக்கு போயிருக்கும்.... நல்ல வேளை !!! பெருமாள் தப்பிச்சார்...இல்லாங்காட்டி, பாலாஜி யை கோமணாண்டி ஆக்கி இருப்பாங்க.//

************

ஹா...ஹா...ஹா...

திடீர், திடீர்னு வந்து பட்டைய கிளப்பற கமெண்ட் போடறதுல நம்ம மஞ்சள் ஜட்டிய அடிச்சுக்க ஆளில்லை.

Roaming Raman said...

இந்த வார சண்டேன்னா ரெண்டு:
இட்லிக்கு மாவு அரைச்சு அதுல கரப்பன் பூச்சி விழுந்ததுன்னு கடைசியில் தெரிய வந்து, அவசர அவசரமாக, இருந்ததெல்லாம் போட்டு ஒரு உப்புமா கிண்டின மாதிரி இருக்கு!!
அதுவும் நார்த் இந்தியாவில் தயாரிக்கும் தென்னிந்திய உணவு வகை மாதிரி... பசிக்கு சாப்பிடலாம்... அவ்வளவுதான்!!

SISHRI said...

ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய “கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்” கட்டுரை:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60604074&format=html&edition_id=20060407

Anonymous said...

//பல முருக பக்த கோஷ்டிகள் ‘ மலை மேல் இருப்பவன் முருகன்’ திருப்பதியில் காட்சி அளிப்பதும் முருகனே! பட்டையாய் நாமத்தை போட்டு மறைத்து பெருமாளாய் ஆக்கி விட்டார்கள்’ என்று கூறுவதில் எத்தனை உண்மை என்று ஆராய்சியாளர்கள் கூறினால் தெளிவு பெறுவோம்//

ம்..ம்...ம்.. விளக்கினால் போச்சு. பட் இதுல பிரச்சனை என்னென்னா, திருப்பதில இருக்குறது பெருமாளும் இல்லை, முருகனும் இல்லை. அது காளிங்குறாரு அமரர் இராமானுஜ தத்தாச்சாரியாரு... தன்னோட இந்து மதம் எங்கே போகிறது?ங்குற நூலிலே (நக்கீரன் வெளியீடு)

இணையத்தில் படிக்க - http://thathachariyar.blogspot.com/2011/01/76-to-82-1.html

(படிச்சிப்பிட்டு என்னை திட்டாதீங்கய்யா. நான் பாவம், அப்பாவி. அப்புராணி, ஆன்மீக பக்தன்)

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். அது முருகன் இல்லே. பெருமாள் இல்லே. காளியும் கூட இல்லெ. அது எங்க சாமியுங்கோங்குறாரு ஒரு டாக்டரு. அதுமட்டுமில்லீங்கோ. அய்யப்பன் ஒரு புத்தசாமியாம். பாண்டுரங்க விட்டலனும் புத்தராம். பூரி ஜகந்நாதரும் புத்தசாமியாம்.

அவரு இத்தையெல்லாம் ஆராய்ச்சி பண்ணி டாக்டரு பட்டம் வாங்கிக்குறாருங்கோ. அதை எல்லாம் படிக்க கீழா ’க்ளிக்’குங்கோ.

http://www.ambedkar.org/Tirupati/

கொஞ்சம் பொறுமையா அவரு என்னதான் சொல்ல வர்றாருன்னு படிச்சிட்டு அப்புறமா திட்டுங்கோ. நன்றிங்கோ.

இப்படிக்கு
’ஞான சூன்யம்’ அநங்கன்

Anonymous said...

//நான் அறிந்தவரை வடஇந்தியாவில் எங்கும் முருகருக்கு தனி கோயில்களும் இல்லை.

டெல்லியில் முருகனுக்கு 'மலை மந்திர்' இருக்கே! http://malaimandir.org/

solan said...

Anonymous said... I have read the links. I read more than three atricles. There is no fact in those articles. More than that... it is just an opinion... not fact... I can also make 1000 of documents for any other religious. you people have been doing such a job for such a long interval of time for doing the conversion. we know your boss very well.. Let us see...

ஸ்ரீநிவாசன் said...

//மஞ்சள் ஜட்டி said...
அனானி சொல்லுறது ரைட். திருப்பதி தமிழ் நாட்டு கிட்ட இருந்தா, மஞ்ச துண்டு குடும்பம்....அப்படியே துபாய்க்கு வித்திருப்பாங்க. மேலும் உண்டி கலெக்ஷன் அன்னாடம் சி.ஐ.டி காலனிக்கு போயிருக்கும்.... நல்ல வேளை !!! பெருமாள் தப்பிச்சார்...இல்லாங்காட்டி, பாலாஜி யை கோமணாண்டி ஆக்கி இருப்பாங்க.//

ஆமா ஜட்டி ! நீங்க சொல்றது கரக்ட். இப்போ பழநிமலையே ஒரு துபாய் ஷேக் தான் வாங்கியிருக்கிறாராம். மேலும் உண்டி கலெக்ஷன் அன்னாடம் அந்த ஷேக்குக்கு தான் போகுதாம்.

போங்கப்பா நீங்களும் உங்க கமன்டும் !உங்க கமாண்ட பாராட்ட பின்னாடி ஒரு ஜால்ரா கூட்டம். தாங்கல .

naarayanan said...

Aadishankarar is also known as ShaNmada Sthaapakar "

This statement is not true. First understand why one needs to start six things if he is sure that one way is correct. It will mean that he was not clear on which to take.//

aaha enna oru perarivu....advaitha sthapakarukku confusionaam. ellam kaala kodumai.

ella kazhisadaigalukkum gnana padhai sari varaadhu. adhanala 6 vazhigala koduthaar. ovvoruthar manasukku etha madhiri edhu iruko adha vazhipadu seiya.

adhuvum pathaama ishta deivangala raman, anjaneyan, mahamayee, saibabanu namma ethikitte porom.

adhil onnum thappu illa. loko bhinna ruchihi. adharkkaga erpattadhu than shanmatham.

eppadi kumbitaalum keshavam prathi gachathi.. keshavan enbadhum maheshwaran enbadhum maaperum unmaiyaana atmave enru sthabitha shankararukku confusionaam.......ishavaro rakshathu.

Anonymous said...

Do you know who is the hero of KUmarasambhava of Kalidasa?

Do you know one of the 18 Purana is Skanda purana?

Do you know in Valmigi Ramayana, Vishwamithra tells story about the great warrior of Deva- Karthikeya to rama when he took them for thadagai vatham?

Mahabharata have quotes on Karthikeya read abt Amba's penace to find a suitable warrior to fight Bhishma

Need more reference? I can recollect from Rig veda too..

Just because the north Indians or whom you met is an Idiot it does not mean it never existed

Sundar
-Sundar

Anonymous said...

I left this link in the previous comment

http://en.wikipedia.org/wiki/Kartikeya_Temple,_Pehowa

Sundar

Shri Hari said...

ஒரு பகுத்தறிவு குத்தகை காரர் Thirupathi moolavar முருகன் என்று சொல்றாரு? இன்னொரு பகுத்தறிவு குத்தகை காரர் அது புத்தர்ன்னு சொல்றாரு, பேசாம... பகுத்தறிவு குத்தகை காரர்கள் எல்லாம் நம்ம மஞ்ச துண்டு மற்றும் பகுத்தறிவை patent செய்து அந்த documentai அக்குளில் வைத்து இருப்பவரும், யெப்பொழுதும் ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்குபவரும், சமஸ்க்ருத பெயரையும் தரித்த வீரமணி தலைமைல ஒரு ஆராய்ச்சி பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க? அப்பறம் நாங்க அதுக்கு பதில் சொல்றோம்?


நம்ம மக்கள் எல்லாம் போதுமான அறிவியல் தகவுகள் கொண்ட லிங்குகளை கொடுக்கறத பார்த்த ரொம்பே சந்தோசமா இருக்கு... அறிவியல் மற்றும் இன்டர்நெட் மட்டும் இல்லேன.. பகுத்தறிவு குத்தகை காரணங்க நம்பலை ஊறுகா போட்டு இருப்பானுங்க.... THANKS TO SCIENCE

Shri Hari said...

’ஞான சூன்யம்’ அநங்கன் your perfectly suits you :)

\\ ம்..ம்...ம்.. விளக்கினால் போச்சு. பட் இதுல பிரச்சனை என்னென்னா, திருப்பதில இருக்குறது பெருமாளும் இல்லை, முருகனும் இல்லை. அது காளிங்குறாரு அமரர் இராமானுஜ தத்தாச்சாரியாரு...\\

read the below link... it exposes about this idiot இராமானுஜ தத்தாச்சாரியாரு

http://saranagathi.org/articles/agnihothri.pdf

Anonymous said...

Narayanan...First understand what i meant .then comment...do you what do you mean by ShaNmada? and the constitutents of ShaNmada?

Anonymous said...

Shri Hari and Solan:

தத்தாச்சாரி அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றுதான் நான் சொன்னேன். அதற்கு நான் அவற்றையெல்லாம் ஆதரிக்கிறேன் என்பது பொருளல்ல. எந்தச் சூழ்நிலையில் அந்தத் தொடர் எழுதப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு அப்போது என்ன வயது என்று அறிவீர்களா? அந்தக் கருத்துக்கள் எல்லாம் உண்மையிலேயே அவரால் சொல்லப்பட்டதுதானா என்ற பெரிய சந்தேகமே எனக்கு உண்டு. அதை இங்கே குறிப்பிடக் காரணம், இப்படியெல்லாம் அவர் சொல்லியிருக்கிறார் என்பதைக் காட்டத்தான். ஏன் பி.ஸ்ரீ. ஆச்சார்யா கூட முன்பு (அந்தக் காலத்தில் ஐயா) இது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (விகடன் என்று ஞாபகம். வயதாகி விட்டதால் மறந்து போய் விட்டது)

தற்காலத்தில் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் ஒரு புத்தகம் கூட எழுதியிருக்கிறார். திருப்பதி வேங்கடவனோ என்னவோ புத்தகம் பெயர் சரியாக நினைவில்லை. அது ஆங்கிலத்தில் எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியாகி உள்ளது என நினைக்கிறேன்.

மலை மேல் இருப்பது மாமனாக இருந்தால் என்ன, மருமகனாக இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே. ஒரே பிரம்மத்தின் பல்வேறு தோற்றங்கள் தானே இவையெல்லாம்?

முருகன், பெருமாள் என்றெல்லாம் குழம்புவது தேவையற்றது.

’ஞான சூன்யம்’ அநங்கன்

Anonymous said...

My Dear Shri Hari and Solan:


Shri Hari:

//ஞான சூன்யம்’ அநங்கன் your perfectly suits you :)
//

Thanks Sir. Welcome.

Solan:

//you people have been doing such a job for such a long interval of time for doing the conversion. we know your boss very well.. Let us see...//

என்ன கருமம் இது. நான் எங்கய்யா மதம் மாற்றினேன். அல்லது அதற்குத் துணை போனேன். சரியான வம்பா இல்ல இருக்கு?

உருவகங்களாகவும், பல உருவங்களாகவும் நம்முள் பல பிரிவாகவும் “கடவுள்” புரிந்து கொள்ளப்பட்டு தனித்தனியாக உனக்கு எனக்கு என்று பலவாறாகப் பிரிந்து இருப்பதினால்தான் பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் மோதல்களும். அதனால்தான் அந்நிய ஆதிக்க சக்திகளால் மத மாற்றங்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி சில ’கைக் கூலிகள்’ உயர்சாதிக் கடவுள், தாழ்ந்த சாதிக் கடவுள் என்றெல்லாம் பிரித்து நமக்குள்ளேயே சண்டை மூட்டிக் குளிர் காய்கின்றன. அவர்களைக் காயாமல் என்னைக் காய்வது ஏனோ?

அந்தப் பதிவுகளை (தத்தாச்சாரி, டாக்டர் ஜம்னா பாஸ்) நான் கொடுத்திருப்பதாலேயே அவற்றை ஆதரிக்கிறேன் அல்லது ஏற்றுக் கொள்கிறேன் என்பது பொருளல்ல.

நம்ம கருத்து என்றும் எப்போதும் “ப்ரம்மம் ஒக்கடே.... பர ப்ரம்மம் ஒக்கடே...” தான்.

”ஞான சூன்யம்” அநங்கன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா! இட்லி வடையில் இப்படி ஓர் ஆன்மீகமா? :)
நண்பர் ஒருவர் இந்த இடுகையைப் பற்றிச் சுட்டிக் காட்டியதால் வந்தேன்!

பதிவு இட்டவர் கேட்ட கேள்வி மிகவும் நேரடியானது! அதற்கு விளக்கம் சொல்லாமல், இத்துணை Distraction-ஆ? :)

//"முருகன்" குறித்தான பின்வரும் எனது கருத்து தவறென்றால், அன்பர்கள் விளக்கம் அளித்து திருத்துங்கள்.

நம் தமிழகத்தில், தமிழர்களிடம் பெருகி இருந்த முருக பக்தியை கண்டு, பின்னாளில் சிவபெருமான் - பார்வதி - விநாயகர் என்ற குடும்பத்தில் ஒருவராக, சிவபெருமானின் திருமகனாக இந்து மதத்தை ஒன்றிணைப்பதற்காக "முருகர் " புராணங்களில் இணைக்கப்பட்டு இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து//

இட்லி வடை
உங்கள் கருத்து மிகவும் சரியானதே!

சேயோன்-முருகன் என்பவன் பண்டைத் தமிழ்க் குடிகளின் பெருந்தெய்வம்! மாயோன்-திருமாலும் அப்படியே!

பண்பாட்டுக் கலப்புகளால், ஸ்கந்தன்-விஷ்ணுவாகி வடக்கே சென்றாலும், பல கதைகள்/புனைவுகள் இன்று பிரித்தெடுக்க முடியாதபடி சேர்ந்து கொண்டாலும்....
தமிழ்ப் பழங்குடிகளுக்கு முதற் தெய்வம், தமிழ்க் கடவுள் என்பது முற்றிலும் சரியே!

தொல்காப்பியக் காலத்துக்கு உள்ள சேயோன்-முருகனுக்கு இந்தக் கதைகள் எல்லாம் இல்லை!
நடுகல்-கந்துழி-வெறியாடல்-குறிஞ்சி அழகு என்று இயற்கையை ஒட்டிய தெய்வமாகவே பரிணமித்தவன் முருகன்!

பேரா.இராமச்சந்திரன் கட்டுரையும் வாசிப்பது தெளிவு தரும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திருமலை மேல் நிற்பது யார் என்பது சில காலங்களாகவே "கிளப்பி விடப்பட்ட" கேள்வி தான்! :) பெருஞ்சொத்து இருக்கும் இடத்தில் தானே குடும்ப மூலக் குழப்பம் இருக்கும்? :)

அவரவர் புறத் தோற்றத்துக்கு பட்டதையெல்லாம் வைத்துக் கொண்டு, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கணக்காக, "fanciful theories" கிளப்பி விட்டாலும்...இந்தக் கேள்விக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இரண்டே இரண்டு தான்!

1. இளங்கோவடிகள் - சிலப்பதிகார ஆசிரியர்!
சேரனாய் இருந்தாலும் பேதங்களின்றி சோழ/பாண்டிய நாடுகளைப் போற்றிய நேர்மையாளர்! அவர் காட்டுகிறார் வேங்கட மலை மேல் யாரென்று?

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
...
...
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
...
...
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் - காடு காண் காதை)

அதாச்சும்
பகை அணங்கு ஆழியும் = சக்கரமும்,
பால் வெண் சங்கும் = சங்கும்,
தாமரைக் கையில் ஏந்தி,
வேங்கடத்து நெடியோன் என்று இளங்கோவடிகள் படம் பிடித்துக் காட்டுவதற்கு மேல் பிறிதொரு ஆதாரம் தேவையில்லை! கி.பி.200!

2. மலை மேல் இருப்பதால் முருகனோ என்று தேவையின்றிக் குழம்பும் நல்ல முருக உள்ளங்களுக்காக....சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதரே சான்று காட்டி விடுகிறார்! (பரங்கி மலை மேல் இருப்பதும் புனித அப்போஸ்தல முருகன் தானோ? :))

உலகீன்ற பச்சை உமை அண்ணன்
வடவேங்க டத்தில் உறைபவன்
உயர் சாரங்க சக்ர கரதலன் மருகோனே....

இதற்கு மேலான ஆதாரங்கள் வேறொன்றும் தேவையில்லை! இருப்பினும் தமிழ் ஆர்வலர்களுக்காக இரண்டு சுட்டிகள்!
1. இராம.கி ஐயாவின் வேங்கடத்து நெடியோன்
2. என்னுடைய சங்க இலக்கியத்தில் - யார் தமிழ்க் கடவுள்?

முருகன் said...

திருப்பதியில் இருப்பது என் அப்பன் முருகனே!!!


பின்வரும் தகவல்களை தங்களை போன்ற தூய முருகன் அடியார்கள் புரிந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் :

வேங்கடசுப்பிரமணியன்

“பண்டு தான்வரு வேங்கடகிரியையும் பார்த்தான்!” என்று கச்சியப்பர் கூறுகிறார். அதாவது, முற்காலத்தில் தான் வந்த திருவேங்கட மலையையும் கண்டான் என்று உரைக்கிறார்.

"அண்டம் மன்னுயிர் ஈன்றவ ளுடன்முனி வாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்"
முருகனும் உமையம்மையும் ஒரு முறை, ‘கண்ணாமூச்சி’ விளையாடினர். முருகன் ஓடி ஒளிந்தான். அவனை எங்கும் காணாமல், தேடி வந்தாள் உமை. ஓர் இடத்தில் முருகனின் சிரிப்பொலி கேட்டது! கண்ணைத் திறந்து பார்த்தாள் அம்பிகை! அங்கு ஒரு மலையின் மீது முருகன் நின்று கொண்டிருந்தான்! அந்த மலைதான் வேங்கடம் என்பர். முருகனுக்கு, ‘வேங்கட சுப்பிரமணியன்’ என்ற பெயரும் தோன்றியது. வேங்கடமலையில் குமாரதாரை என்ற அருவியும், சுவாமி புஷ்கரணி என்ற பொய்கையும் முருகனின் பெயரில் தோன்றின. ‘சுவாமி’ என்றால், ‘கஜகானுஜன் (யானை முகத்தோனின் தம்பி) என்று அமரம் குறிப்பிடுகிறது, ‘பாலாஜி’ என்ற பெயரும் குழந்தைத் தெய்வமாகிய முருகனைக் குறிக்கும் சொல்லாகும்.

“நாகாசல வேலவா!” என்று அருணகிரிநாதர் தமது கந்தர் அநுபூதியில் உரைக்கிறார். நாகாசலம் என்பது வேங்கடமலையின் பெயர்களுள் ஒன்று.

“சுப்ரம்மண்யேன ரக்ஷிதோஹம்” என்று தொடங்கும் கிருதியில், முருகன் வேங்கடேசுவரன் என்ற பெயரும் உள்ளவன் என்ற பொருளில், “வேங்கடேஸ்வர நாம ரூபேண”என்று பாடுகிறார், சங்கீதமூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் அவர்கள்.

அருணகிரிநாதர் அவர்கள் திருப்புகழ் பாடல் 524-529 வரை "வடவேங்கடம் வாழ் பெருமாளே" என்கிறார்!!!

லிங்க்:http://www.kaumaram.com/thiru/nt0524.html

மேலும்,திருமலை கோயில் வரலாற்றின்படி பிருகு முனிவர் கலியுக தொடக்கத்தில்தான் முக்கண் முதல்வனை "உருவ வழிபாடு" இல்லாது போகுமாறு சபிக்கிறார்.ஆனால் அதற்கு முன்பே ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்கிறார்.அது எப்படி?

பெருமாள் பூமிக்கு வருவதை அவதாரம் என்கிறோம்.ஆனால் திருப்பதி ஸ்ரீனிவாசன் தசாவதாரங்களுக்குள் இல்லையே?

பத்மாவதி தாயார் எனப்படும் இராமாயண வேதவதி (முற்பிறவி)பற்றி வால்மீகி இராமாயணத்தில் ஒரு தகவலும் இல்லையே? கோவிலை கைப்பற்றிய பின் சேர்க்கப்பட்ட கதையோ?

ஒருவேளை கச்ச்சியப்பரும் ,அருணகிரியாரும் பொய் உரைக்கிரார்களோ?

கோபப்படாமல் நிதானமாக பதில் உரைக்கவும் :)

அன்புடன்,
முருகபக்தன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ஜெய்கணேஷ் என்னும் "முருகபக்தரே"

இங்கு கேட்டதையே, என் சிலப்பதிகாரப் பதிவிலும் வந்து கேட்டா எப்படி? :)
பாவம் இட்லிவடை! அவரையும் ஆன்மீகப் பதிவர் ஆக்கினா எப்படி? அவரை விட்டுருங்களேன்! :)

அவர் கேட்ட கேள்வி ரொம்ப எளிமையானது! முருகன் தமிழ்ப் பண்பாட்டில் இருந்து ஸ்கந்தனாய்ச் சென்றவன் தானே என்றார்! ஆம் என்று உறுதிப் படுத்தினேன்! வேங்கட மலையெல்லாம் அவர் கேட்கவே இல்லை!

எனவே, நீங்கள் அதற்கான இடத்திலோ/ ஆன்மீகப் பதிவுகளிலோ, உங்கள் வினாக்களை எழுப்பி, தாராளமாகக் கருத்துரையாடிக் கொள்ளலாமே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இன்னொரு விஷயம்:

இவர் murugan.org என்று தாமாகப் தன் Profileஐப் போட்டுக் கொண்டார்! அது முருகப் பெருமானின் அழகிய வலைத்தளம்! அவர்கள் இப்படியெல்லாம் கேட்கவில்லை என்று வாசகர்கள் அறிவார்களாக! இவரே அதை ஒருவழியாக ஒப்பும் கொண்டார்! இங்கே! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அன்பர் ஜெய்கணேஷ், இளங்கோ அடிகள்/சமணம் மேல் சற்றுக் காழ்ப்பு காட்டினாலும், அவரின் வேறு சில கேள்விகள் நியாயமானவை என்பதால்...
அனைவரும் அறியும் பொருட்டு, இதோ சுருக்கமான பதில்!

//முருகனும் உமையம்மையும் ஒரு முறை, ‘கண்ணாமூச்சி’ விளையாடினர்; அந்த மலைதான் வேங்கடம் என்பர்//

:)
இந்தக் "கண்ணாமூச்சி விளையாட்டுக்கான" தரவுகள் இருக்க வேண்டுமே? நக்கீரர் முதலான பல கவிஞர்களும் சொன்னா மாதிரி தெரியலையே!

கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம் மிகவும் பின்னாளையது! பண்பாட்டுக் கலப்புக்கு எல்லாம் பின்னால் 10th CE-யும் தாண்டி எழுதப்பட்டது! "சுப்ரமணியம்" என்ற பேரே காட்டி விடுகிறதே! :) எப்படியும் இவர் சங்க காலம் அல்ல!

இளங்கோவடிகளோ கி.பி. 200!
சிலம்பில் திருமாலுக்கு குரவைக் கூத்து, முருகனுக்கு குன்றக் கூத்து, சமண அருகர், புத்தர் என்று சமயப் பொறையுடனே காப்பியம் செய்கிறார்! "காவிரி நாடன் திகிரி போல்" என்று சோழனை ஒரு சேரன் பாட எம்புட்டு விரிந்த பார்வை இருக்கோணும்?

அப்பேர்ப்பட்ட இளங்கோ "வேங்கட மலையில் நிற்பவனைச் சங்கு சக்கரங்களோடு, திருமால் என்று காட்டுகிறார் என்றால்"?
-------------------------

//சுவாமி புஷ்கரணி என்ற பொய்கையும் முருகனின் பெயரில் தோன்றின. ‘சுவாமி’ என்றால், ‘கஜகானுஜன் (யானை முகத்தோனின் தம்பி) என்று அமரம் குறிப்பிடுகிறது//

அது பேரு அமரகோசம்-ங்க! அமர சிம்மன் வடமொழியில் எழுதியது! நீங்க சொல்வது போல் "அமரம்" இல்லை :)
அமர கோசம் ஒரு வடமொழி இலக்கண அகராதி போல! சுவாமி=சுப்ரமணிய சுவாமியைக் காட்டுகிறது! = தேவஸேனாபதி; சூர ஸ்வாமி கஜமுகாநுஜ

அதனால் எல்லா சுவாமியும் சுப்ரமணியம் என்றே ஆகி விடுமா? மல்லிகார்ஜூன சுவாமி, நரசிம்ம சுவாமி இவங்க எல்லாம் சுப்ரமணியரா? :)
---------------------

//‘பாலாஜி’ என்ற பெயரும் குழந்தைத் தெய்வமாகிய முருகனைக் குறிக்கும் சொல்லாகும்//

:)
பாலாஜி என்பது பாவாஜி என்ற இந்தி மொழிப் பக்தர் (ஹதிராம்ஜீ பாவா)பின்னாளில் செல்லமாய் அழைத்தது! ஹதிராம்ஜி மட் என்று இன்றும் திருமலை மேல் இருக்கு! பெருமாளைத் தான் அப்படி அழைச்சாரு-ன்னு அவங்களே சொல்லுறாங்க! http://www.thehindu.com/arts/books/article840610.ece
அப்பறம் எப்படி அவங்க "பாலாஜியை" நீங்க எடுத்துக்கிட்டு, "குமரன் ஜி", "முருகன் ஜி" என்று பேசுவது? :)))
---------------

//“நாகாசல வேலவா!” என்று அருணகிரிநாதர் தமது கந்தர் அநுபூதியில் உரைக்கிறார். நாகாசலம் என்பது வேங்கடமலையின் பெயர்களுள் ஒன்று//

நாகாசலம்-ன்னு பல மலைகளைச் சொல்வதுண்டே! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கூட நாகாசலம் தான்! :)
http://www.arthanareeswarar.com/ArthaHistory.asp

//மேலும், திருமலை கோயில் வரலாற்றின்படி பிருகு முனிவர் கலியுக தொடக்கத்தில்தான் முக்கண் முதல்வனை "உருவ வழிபாடு" இல்லாது போகுமாறு சபிக்கிறார்.ஆனால் அதற்கு முன்பே ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்கிறார்.அது எப்படி?//

அடங் கொப்புரானே! சிவபெருமான்-பிருகு முனிவர் episode, லிங்க புராணத்திலேயே வருகிறதே! :)
மேலும் அது "கலியுக ஆரம்பம்"-ன்னு எங்கே சொல்லி இருக்கு திருமலைக் கோயில் வரலாற்றில்? உங்க வசதிக்கு அடிச்சி விடறதுக்கு அளவே இல்லீயா? :)
http://www.tirumala.org/opage2.html

//பத்மாவதி தாயார் எனப்படும் இராமாயண வேதவதி (முற்பிறவி)பற்றி வால்மீகி இராமாயணத்தில் ஒரு தகவலும் இல்லையே? கோவிலை கைப்பற்றிய பின் சேர்க்கப்பட்ட கதையோ?//

:)
தல புராணங்கள் பெரும்பாலும் கதைகள் தான்! அதை ஒப்புக் கொள்ளும் அற நேர்மை என்னிடம் உள்ளது? உங்களிடம்? :)

உங்க லாஜிக் படியே பார்த்தா, இராமன் சிவபெருமானை இராமேஸ்வரத்தில் வணங்கியதாக மூலநூல் வால்மீகி சொல்லவில்லை! உடனே இராமேஸ்வரம் சிவபெருமான் கோயிலை "பொய்"-ன்னு இடிச்சிருவீங்களோ? :) அடக் கொடுமையே!

//அருணகிரிநாதர் அவர்கள் திருப்புகழ் பாடல் 524-529 வரை "வடவேங்கடம் வாழ் பெருமாளே" என்கிறார்!!!
லிங்க்:http://www.kaumaram.com/thiru/nt0524.html//

ஆகா! அருணகிரிப் பெருமான் "பொய்யும்" சொல்வாரோ? இல்லையே!
அப்படின்னா உங்க இந்தக் கேள்விக்கு மட்டும் நான் என்ன-ன்னு பதில் சொல்வேன்! முருகா...காப்பாத்து! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருணகிரியார் "பொய்" உரைக்கிறாரோ? = இல்லை!

என்னவென்றே புரிந்து கொள்ளாமல், ஆர்வக் கோளாறால், சில மக்கள் தான் "பொய்" உரைப்பது!

அதே அருணகிரி, முருகனை, திருச்சிராப்பள்ளி மலை மேல் வாழும் முருகா-ன்னு சொல்றாரு! இதென்ன கூத்து? திருச்சி மலை மேல உச்சிப் பிள்ளையார் தானே? :)

திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே, வானோர்... பெருமாளே!
நீங்க குடுத்த அதே முருகன் தளச் சுட்டி தான்! :))
http://www.kaumaram.com/thiru_uni/tpun0554.html

திருச்சிராப்பள்ளித் தலத்தில், தாயுமானவ சுவாமி கோயிலில் இருக்கும் முருகன் சன்னிதியை மட்டுமே அருணகிரி அப்படிப் பாடுகிறார்! உடனே, உச்சிப் பிள்ளையார் கோயில், முருகன் கோயில் தான், அருணகிரியே பாடிட்டாரு-ன்னு கிளம்புங்களேன் பார்ப்போம்! :)

அதே போல் தான் திருவேங்கடமும்! வேங்கடமலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஸ்வர சுவாமி ஆலயத்தில் உள்ள முருகனைப் பாடும் போது, அவ்வாறு அருணகிரி பாடுகிறார்! அதுக்கு இம்புட்டு கூத்து! :)

குற்றாலம் பக்கம் திருமலை என்ற குமாரசுவாமி கோயிலே உண்டு! அருணகிரி அந்தத் திருமலையைப் பாடினா, ஒடனே திருவேங்கடம் ஹைய்யா-ன்னு குதிப்பீங்க! :) நல்ல வேளை அதே பாடலில் பக்கத்தில் பாயும் ஆற்றின் பேரைச் சொன்னார் அருணகிரி! அதைக் கூடப் படிக்காம, "திருவேங்கடம், திருவேங்கடம்"-ன்னே கண்ணு அலைஞ்சா, இப்படித் தான் ஆகும்! :)))
---------------------

அன்பர் ஜெய்கணேஷ்:

சமணம் என்ற ஒரே காரணத்துக்காக, திருக்குறள் முதலான 18கீழ்க்கணக்கு தோன்றிய களப்பிரர் காலத்தை, "இருண்ட காலம்"-ன்னு பொய்யா எழுதி வச்சவங்க தானே, பெரும்பான்மைத்தனம் தந்த அதிகாரத்தால்?

எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட, இது போன்ற "சமயத் திரிபுகளைச்" சுட்டிக் காட்டியுள்ளார்கள்!
http://www.jeyamohan.in/?p=4032

தமிழ்த் திறனாய்வு - Logical Reasoning என்று வரும் போது, அவரவர் தமக்குப் பிடித்திருக்கே என்னும் நிலைப் பாடுகளையும் தாண்டித், தமிழைத் தமிழாகவே அணுகினால், தமிழ் தழைக்கும்!

முருகன் பால் மாறாத காதலும், முருகனருள் வலைப்பூவில் தொடர்ந்து பாடல்கள் இடும் நான், திறனாய்வு என்று வரும் போது, சொந்த நிலைப்பாடுகளைத் தள்ளித் தான் வருகின்றேன், வருவேன்!

எப்பொருள் "எத்தன்மைத்" தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!

ramanans said...

//சமணம் என்ற ஒரே காரணத்துக்காக, திருக்குறள் முதலான 18கீழ்க்கணக்கு தோன்றிய களப்பிரர் காலத்தை, "இருண்ட காலம்"-ன்னு பொய்யா எழுதி வச்சவங்க தானே, பெரும்பான்மைத்தனம் தந்த அதிகாரத்தால்?//


”இருண்ட காலம்” என்பது இலக்கியத்தை வைத்து இங்கு வரையறுகப்படவில்லை. வரலாற்றின் அடிப்படையில் - மன்னர்கள், அவர்களது ஆட்சிகள், அவர்களது பணிகள், அவை பற்றிக் கிடைக்கும் விவரங்கள் - இவற்றின் அடிப்படையில், அக்காலத்தில் ஆண்ட களப்பிர மன்னர்கள் என்பவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர், வீரம் கொண்ட தமிழ் மன்னர்கள் ஒடுங்கியது ஏன் போன்ற விவரங்கள், ஆட்சி பற்றிய விவரங்கள் தெளிவாகக் கிடைக்காததால் தான் அதை ”இருண்ட காலம்” என்கின்றனர். அதற்கும் இலக்கியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

-

Anonymous said...

////நம் தமிழகத்தில், தமிழர்களிடம் பெருகி இருந்த முருக பக்தியை கண்டு, பின்னாளில் சிவபெருமான் - பார்வதி - விநாயகர் என்ற குடும்பத்தில் ஒருவராக, சிவபெருமானின் திருமகனாக இந்து மதத்தை ஒன்றிணைப்பதற்காக "முருகர் " புராணங்களில் இணைக்கப்பட்டு இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.//


தவறான கருத்து. அப்படியானால் முருகன் யார்? திணைப் பிரிவுகளை முதலில் சுட்டியது தொல்காப்பியம் போன்ற நூல்கள்தான். ஆனால் அதற்கும் முன்னாலேயே முருக வழிபாடு தொன் தமிழரிடத்தே இருந்தது.

சிலப்பதிகாரம் எல்லாம் பின்னால் வந்த இலக்கியம். திருக்குறளுக்கும் பின்னால் வந்த நூல் அது. அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே மால், மருகன், சிவன் வழிபாடு தமிழரிடத்தே இருந்தது என்பதற்கு இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட பரிபாடல் நூல் ஒரு முக்கிய ஆதாரம்.

”கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி
முனைவேன் முருக னெனவிவர் முதலிய..” என்கிறது அதன் பாயிரம்.

சிவன், அகத்தியன், முருகன் முதலானோர் தலைமைப் புலவனாக இருந்து தமிழாய்ந்த சங்கத்தைப் பற்றி அது குறிப்பிடுகிறது. இறையனார் களவியலுரையும் அதையே சுட்டுகிறது. ஆக முருகன் காலத்தால் மிக மிக முந்தியவன்.

பரிபாடலின் முதல் பாடலே திருமாலைப் பற்றியது. பின்வரும் பாடல்களில் முருகனைப் பற்றியும் அவன் பிறப்பு பற்றியும் பரிபாடல் சுட்டுகிறது. சிவன், உமையின் மைந்தன் முருகன் என்பதை பரிபாடல் மிகத் தெளிவாக விளக்குகிறது. ஆகவே பின்னாளில் சிவபெருமான் - பார்வதி - விநாயகர் என்ற குடும்பத்தில் ஒருவராக முருகன் இணைக்கப்படவில்லை என்பதை அறியுமின்.

ramanan

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ திரு ரமணன்
//ஆட்சி பற்றிய விவரங்கள் தெளிவாகக் கிடைக்காததால் தான் அதை ”இருண்ட காலம்” என்கின்றனர்.//

மொஹெஞ்சதரோ, ஹாரப்பா பற்றிக் கூடத் தான் அதிக விவரணங்கள் கிடைப்பதில்லை! அதை "இருண்ட காலம்"-ன்னா சொல்றோம்? :)

Stone Age, Copper Age, Bronze Age Iron Age-ன்னு தானே சொல்றோம்?

இருண்ட காலம் = Dark Age!
பொற்கால ஆட்சி-ன்னு முதல்வரைப் புகழலாம்! :)
தமிழகத்தின் பொற்காலம்-ன்னு சொன்னா அது தமிழக மேம்பாட்டை வைத்தே! அதே போல், தமிழகத்தின் "இருண்ட காலம்"-ன்னு சொன்னா, விஷயம் வேற! புரிகிறதா?

சமண சமயக் காழ்ப்பின் காரணமாக அப்படியொரு சொல்லாடலைப் பரப்பி வைத்தது சார்புநிலை வரலாற்று/இலக்கியவாதிகள் தான்! க.ப.அறவாணன் எழுதிய களப்பிரர் காலம் வாசியுங்கள்! அது "இருண்ட" காலம் அல்ல என்று தெரிய வரும்!

ஒரு ஆட்சிமுறை பற்றி அதிக விவரம் கிடைக்கலீன்னா அது "இருண்ட" காலம் அல்ல! அந்த ஆட்சி "நாசமாப் போன" ஆட்சி என்றால் தான் தமிழகத்தின் "இருண்ட" காலம்! வேறுபாடு புரிந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சிவன், உமையின் மைந்தன் முருகன் என்பதை பரிபாடல் மிகத் தெளிவாக விளக்குகிறது. ஆகவே பின்னாளில் சிவபெருமான் - பார்வதி - விநாயகர் என்ற குடும்பத்தில் ஒருவராக முருகன் இணைக்கப்படவில்லை என்பதை அறியுமின்//

:)
ரமணன்
விநாயகர் பரிபாடலில் வராரா? எப்போது தமிழகப் பண்பாட்டு எல்லைக்குள் வந்தார்? :)

பரிபாடலில் ஒரே ஒரு வரியைக் கொடுத்து விட்டு, ஒரு முழு நாவலையே நுழைக்கப் பார்க்கிறீர்களே? :)

நீங்கள் கொடுத்த "கண்ணுதற் கடவுள்" எனத் தொடங்கும் பாடல் பரிபாடலே அல்ல! பரிபாடலுக்கு உண்டான பாயிரம்! பின்னாளில் எழுதிச் சேர்த்தது! :)
நீங்க கொடுத்த பாயிரத்தின் 20th line-இல் உரையாசிரியர் பரிமேலழகர் (13th CE) பேரு கூட வருதே! எப்படி வசதி? :)
நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற்
பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே.

பல சங்க நூல்களுக்கு, கடவுள் வாழ்த்து, பாயிரம்-ன்னு எல்லாம் பின்னாளில் எழுதிச் சேர்த்தது தான்!

நூறு வருசம் கழிச்சி, இட்லி வடைப் பதிவுகள் ஒரு நூறைத் தொகுத்து, அதுக்கு கடவுள் வாழ்த்து-ன்னு Lord of The Rings, Sauron பேரை எழுதித் தொகுக்கறேன்-ன்னு வைங்க! இட்லி வடைக்கு எம்புட்டு கோவம் வரும்? :))

பரிபாடலில் பல பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை! இப்பொழுது நமக்குப் பிரதிகளில் கிடைப்பன முதலிலிருந்து 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன. உரைகளில் இருந்து திரட்டி எடுத்து "பரிபாடல் தி்ரட்டு" என்றே சொல்கிறார்கள்! பல பாடல்கள் ஆரிய-தமிழ் பண்பாட்டுக் கலப்புக்குப் பின்னர் எழுதப் பட்டவையும் கூட!

நீங்கள் கொடுத்த 13th CE இரண்டு வரிகளும், தமிழ்ச் சங்கத்தில் "உட்கார்ந்த" சிவன், அகத்தியன், கந்தன்-ன்னு தான் சொல்லுதே தவிர, அம்மா-அப்பா உறவு பத்தியெல்லாம் ஒன்னும் சொல்லலை!
செந்தமிழில் கொடுத்து விட்டால் ஆதாரம் ஆயிரும், யாருக்கும் பொருள் புரியாது-ன்னு நினைத்து விடாதீர்கள்! :)

முருகனும் திருமாலும் இயற்கை முறைப்படி எழுந்த பண்டைத் தமிழ்க் கடவுளர்! பன்னிரெண்டு கை, பதினெட்டு கண்ணு எல்லாம் அப்பறம் தான்! :)

கலப்புக்குப் பின் இணைந்ததைத் தவறு-ன்னு எல்லாம் சொல்லலை!
ஆனா ஆதியில், தமிழில், இப்படி இயற்கையாகத் தான் இறை இருந்தது என்பதையாச்சும் சொல்ல விடுங்களேன்!
இட்லி வடை தன் பதிவில் சொன்ன கருத்து சரியானதே! தமிழிலக்கியத் தரவுகளும் அதை உறுதி செய்கின்றன!

ramanans said...

//சமண சமயக் காழ்ப்பின் காரணமாக அப்படியொரு சொல்லாடலைப் பரப்பி வைத்தது சார்புநிலை வரலாற்று/இலக்கியவாதிகள் தான்! க.ப.அறவாணன் எழுதிய களப்பிரர் காலம் வாசியுங்கள்! //

அய்யா...

அதுவும் வாசித்திருக்கிறேன். மயிலை சீனி வெங்கடசாமி நூல் உட்பட களப்பிரர் வரலாற்றையும் வாசித்திருக்கிறேன். தமிழில் அதிக இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலம் அது. அதை ஒரு இலக்கிய ஆர்வலர்கள் ”இருண்ட காலம்” என்று சொன்னால் அது தவறு.

மீண்டும் சொல்கிறேன் அது இலக்கிய அடிப்படையில் இருண்ட காலம் அல்ல. வரலாற்றின் அடிப்படையில் தான் இருண்ட காலம். அதற்கு கற்காலம், பொற்காலம் என்ற வியாக்கியானங்கள் எல்லாம் பொருந்தாது. அப்போது தமிழ் ஆட்சி மொழியாக இல்லாத காலம். பாலியும், பிராகிருதமும் ஓங்கியிருந்த காலம் (அப்படிப்பட்ட காலத்திலேயே அவ்வளவு இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன!)

பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் மூலமும், வேள்விக் குடிச் செப்பேடின் மூலமும் ஓரளவு களப்பிரரைப் பற்றி அறிய முடிகிறது. அவ்வளவுதான். மற்றபடி அக்கால மக்கள் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், மன்னர்கள் போன்றவை பற்றி ஏதும் அறியாததால் அது இருண்ட காலமாகிறது. அவ்வளவுதான். நன்றி.

Anonymous said...

//விநாயகர் பரிபாடலில் வராரா? எப்போது தமிழகப் பண்பாட்டு எல்லைக்குள் வந்தார்? //

முருகனைப் பற்றி ’இன்பா’ கேட்டிருந்த கேள்விக்கு நான் விளக்கம் சொல்லியிருக்கிறேன். விநாயகரைப் பற்றிய குறிப்புகள் பரிபாடலில் இல்லை.

//பரிபாடலில் ஒரே ஒரு வரியைக் கொடுத்து விட்டு, ஒரு முழு நாவலையே நுழைக்கப் பார்க்கிறீர்களே?//

//நீங்கள் கொடுத்த 13th CE இரண்டு வரிகளும், தமிழ்ச் சங்கத்தில் "உட்கார்ந்த" சிவன், அகத்தியன், கந்தன்-ன்னு தான் சொல்லுதே தவிர, அம்மா-அப்பா உறவு பத்தியெல்லாம் ஒன்னும் சொல்லலை!//

என்ன செய்வது, பாடலையும் அதன் பொருளையும் முழுக்க முழுக்க கமெண்டில் போட முடியுமா என்ன? நீங்கள் முழுமையாக பரிபாடலை அதுவும் செவ்வேள் பற்றிய பாடல்களைப் படித்தால் - அம்மா-அப்பா உறவு - பற்றி வருவதை ஒப்புக் கொள்வீர்கள்.

//நீங்கள் கொடுத்த "கண்ணுதற் கடவுள்" எனத் தொடங்கும் பாடல் பரிபாடலே அல்ல! பரிபாடலுக்கு உண்டான பாயிரம்! //

அதைத் தான் நானும் தெளிவாக ’பாயிரம்’ என்று சொல்லியிருக்கிறேனே!

//முருகனும் திருமாலும் இயற்கை முறைப்படி எழுந்த பண்டைத் தமிழ்க் கடவுளர்! //

நானும் அதைத்தானே சொல்கிறேன். கூடவே சிவனையும் சேர்த்திருக்கிறேன் ஐயா. அவ்வளவுதான்.

சரி ’வடவர், வடவர்’ என்கிறோமே. இப்போது இருக்கும் நமது தமிழகத்திற்கு வட இந்தியர்கள் ”வடவர்கள்”. கடல் கோளால் அழிந்துபட்ட தொன் குமரிக் கண்டத்திற்கு யார் அக்காலத்தில் வடவர்களாக இருந்திருப்பார்கள்? இப்போதிருக்கும் தமிழக நிலப்பரப்பினர் தானே!


- ramanans

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ரமணன்
சுழல் வாதமாகச் செல்வதால், ஒரே புள்ளியில் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

1. ஒருவரின் வரலாறு அறிய முடியாது இருப்பதாலேயே, அதை "இருண்ட காலம்" என்று முத்திரை குத்துவது ஏற்புடையது அல்ல - அது இலக்கிய அடிப்படையிலோ, வரலாறு அடிப்படியிலோ...எதுவாயினும்!

2. சிவபெருமானைத் தொல்காப்பியர் பண்டைத் தமிழ்க் குடித் தெய்வமாகக் காட்டவில்லை! பின்னர் வந்த இலக்கியங்களான பரிபாடல், புறநானூறு போன்றவற்றில் தான் "ஆலமர் செல்வன்", "கண்ணுதற் கடவுள்" என்றெல்லாம் லேசாக வரத் துவங்குகிறார்!

இதெல்லாம் பண்பாட்டுக் கலப்புகளுக்குப் பிறகு! ஆனால் இன்றைக்கு கிடைக்கும் நூல்களுள், மிகப் பழமையானது தொல்காப்பியம் மட்டுமே என்பதைத் தாங்கள் அறிவீர்கள்!

//நீங்கள் முழுமையாக பரிபாடலை அதுவும் செவ்வேள் பற்றிய பாடல்களைப் படித்தால் - அம்மா-அப்பா உறவு - பற்றி வருவதை ஒப்புக் கொள்வீர்கள்//

வாசித்துள்ளேன்! எழுதியும் உள்ளேன்!
http://madhavipanthal.blogspot.com/2010/08/paripaadal.html
அந்தச் செவ்வேள்-பன்னிரெண்டு கை-பதினெட்டு கண் எல்லாம் பண்டைத் தமிழ் இயற்கை முறை அல்ல! பின்னாளைய கலப்புக்குப் பிறகு தான்!

3. //சரி ’வடவர், வடவர்’ என்கிறோமே//

எனக்கு "வடக்கு"-ன்னா அலர்ஜி எல்லாம் இல்லை! வடபழனி, வடபெண்ணை, வடவாறு, வடக்கு வாசல், வட வேங்கடம் எல்லாம் "வடக்கு" தான்! :)

உங்களுக்குச் சொல்வதெல்லாம் என்னவென்றால்:
பண்டைத் தமிழ் நிலத்துக்கென்று தனிப் பண்பாடு இருந்தது; அதில் மாயோனும் சேயோனும் இயற்கை முறையிலான முதன்மைக் கடவுளர்!

கலப்பு என்று ஏற்பட்ட பின்பு, அது வடக்கோ, வடகிழக்கோ, பலவும் சேர்ந்து, முருகக் குடும்பம், 12 hands, 18 eyesன்னு எல்லாம் ஆகிப் போனது!
இதைத் தவறு சொல்லவில்லை! சொல்ல வருவது என்னவென்றால், இதற்கும் முன்பே, தமிழ்த் தொன்மத்தில் முருகன் "இயற்கையாகவே" இருந்தான் என்பதே!

கலந்த பின் வந்ததையும் நாம் பார்க்கிறோம்! தவறில்லை!
ஆனால், தொன்மத்தையும் தொன்மமாகவே பார்க்க விடுங்கள்!


நன்றி! :)

ramanans said...

//ஒருவரின் வரலாறு அறிய முடியாது இருப்பதாலேயே, அதை "இருண்ட காலம்" என்று முத்திரை குத்துவது ஏற்புடையது அல்ல - அது இலக்கிய அடிப்படையிலோ, வரலாறு அடிப்படியிலோ...எதுவாயினும்!//

நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வரலாறு அப்படித்தான் மதிப்பிட்டிருக்கிறது. உங்கள் பாணியில் சொல்வதானால் சிலரது ஆட்சி “பொற்காலம்” என்று போற்றப்படுவது போல். பின்னால் வருபவர்களும் அதற்கான தரவுகள் ஏதும் கிடைக்காத போது அதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது, அது உண்மை இல்லை என்ற போதிலும்.

//அந்தச் செவ்வேள்-பன்னிரெண்டு கை-பதினெட்டு கண் எல்லாம் பண்டைத் தமிழ் இயற்கை முறை அல்ல! பின்னாளைய கலப்புக்குப் பிறகு தான்! //

ஆக, அந்தப் பாடல்கள் மட்டும் பிற்சேர்க்கை என்கிறீர்கள் அல்லது கலப்பிற்குப் பின் எழுதப்பட்டது என்கிறீர்கள் நல்லது.

//உங்களுக்குச் சொல்வதெல்லாம் என்னவென்றால்: பண்டைத் தமிழ் நிலத்துக்கென்று தனிப் பண்பாடு இருந்தது; அதில் மாயோனும் சேயோனும் இயற்கை முறையிலான முதன்மைக் கடவுளர்! //

நான் அதை எங்கும் மறுக்கவில்லை ஐயா...

//தொன்மத்தையும் தொன்மமாகவே பார்க்க விடுங்கள்! //

தாராளமாகவே பாருங்கள். யார் மறுக்கப் போகிறார்கள்? ரூபங்களும், நாமங்களும் வேறு வேறு என்றாலும் ’இறை’ என்பது ஒன்றுதான்.

நானும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி இட்ல்வடை, இன்பா மற்றும் கண்ணபிரானுக்கு.