பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 01, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 2-2-2011

வணக்கம் இட்லிவடை,

உன்னுடைய இரண்டு கடிதங்களும் கிடைத்தது. இந்த வாரம் முழுக்க நான் டெல்லியில் கேம்ப். அதனால் உனக்குச் சுடச் சுட செய்திகள் கிடைக்கும். டெல்லியில் ஒரே கூட்டம். என்னடா என்று பார்த்தால் எல்லாம் திமுக கட்சிக்காரர்கள். டெல்லியில் இறங்கிய முதல்வர் முதல் காரியமாக ராமதாஸுடன் கூட்டணி என்று பேட்டி அளித்தார். ஆனால் ராமதாஸ் இங்கே இன்னும் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை என்று பேட்டி அளித்தார். எதற்கு அவர் அப்படி சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். கலைஞர் காங்கிரஸுக்கு X ராமதாஸுக்கு X என்று முடிவு செய்துள்ளார். ஆனால் காங்கிரஸ் X+Z கேட்கிறார்கள். இப்ப ராமதாஸ் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை என்று சொன்னால் காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் தொகுதிகள் கூடுதலாக் கேட்கலாம். எப்படியோ ராமதாஸுக்கு வந்த வாழ்வு இது. கலைஞருக்கு ஈகோ இருக்காதா "நானும் இன்னும் முடிவு செய்யவில்லை அவரும் முடிவு செய்யவில்லை" என்று கூற, நல்ல காமெடி.

பத்திரிக்கையுடன் இலவச இணைப்பாக ஷாம்பு, பல்பொடி கொடுப்பார்கள், அதே மாதிரி டெல்லிக்கு சென்றுள்ள முதல்வர் மீனவர்கள் பற்றியும் பேசினாராம். டெல்லியில் முதல்வரிடம் மீனவர்கள் பற்றி கேட்டதற்கு "தமிழக மீனவர்கள் படும் துன்பங்கள் பற்றி தொடர்ந்து பிரதமரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன். இப்போதும் பேசுவேன்" என்கிறார். பிரதமருடன் பேசியபின் "மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவரும் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்' என்றார். இது எப்புடி இருக்கு?

முன்பு திமுகவிற்கு தகுந்த மந்திரி பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்துக்கு கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம் என்று சொல்லிவிட்டு அடுத்த பிளைட் பிடித்து கோபமாக வந்தார்கள் சென்னைக்கு வந்தார்கள். ஆனா இப்போ அன்னையப் பாக்க அமைதியா நாள் முழுதும் காத்துக் கிடந்தாராம் ஐயா! என்னத்த சொல்ல!

கலைஞர் டெல்லி சென்ற அதே நாள் அங்கே ஊழலுக்கு எதிராக பேரணி நடந்தது. கூட்டமாகப் போன திமுகவை சேர்ந்த ஒருவர் கூட இதில் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே நம்ம மக்கள் மீனவர்களுக்காக டிவிட்டரில் பேரணி நடத்துகிறார்கள். டிவிட் செய்யும் பலர் திமுக அபிமானிகள் என்பது வேறு விஷயம். இவ்வளவு காலம் கழித்து இந்த விழிப்பு உணர்வு வந்தது என்பது நல்ல விஷயம். ஆனால் இந்த விழிப்பு உணர்வு எதனால் வந்தது என்று பார்க்க வேண்டும். ஆங்கில மீடியா மீனவர்களை பற்றி கண்டுகொள்ள வில்லை என்ற காரணத்தால். ஒரு வேளை ஆங்கில மீடியா இதை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தலைப்பு செய்தியாக போட்டிருந்தால் நாம் அதைப் பார்த்துவிட்டு/படித்துவிட்டு சும்மா இருந்திருப்போம்!

பி.ஜே.தாமஸுக்கு எதிரான குற்றப்பத்திரிகை விவகாரம் குறித்து, முன்கூட்டியே தேர்வுக் குழுவுக்குத் தெரியாது என்றும் "ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் தாமஸ், மிகச் சிறந்த நிர்வாகி" என்று உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது மத்திய அரசு. இது முழு பூசிணிக்காயை... ஆனால் சுஷ்மா சும்மா இருப்பாரா ? அவரும் தேர்வு குழுவில் இருந்தவர் ஆச்சே! தேர்வுக்குழு கூட்டத்தில் தாம் தனிப்பட்ட முறையிலும்கூட இதுகுறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தாகவும் ஆனால் தாமஸை நியமிப்பதில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பிடிவாதமாக இருந்ததாக அவர் கூறுகிறார். மன்மோகன் சிங்கை பார்த்தால் முன்பு இருந்த நரசிம்மராவ், தேவகவுட போன்றவர்கள் பரவாயில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் இதே சுஷ்மாதான் ரெட்டி சகோதர்களை கர்நாடகாவில் தேர்வு செய்தார் என்பது வேறு கதை. மக்களுக்கு மறதி ஜாஸ்தி. இப்ப நீதிபதி தினகரன் பற்றி எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கு? இத்தனைக்கும் இவர் கொஞ்சம் நாள் தலைப்பு செய்தியில் வந்தவர் தான்.

தமிழக மக்களுக்கு என்ன ராசி என்று தெரியாது ஆனால் இன்னும் சில மாதத்தில் அவர்களுக்கு "எதிர்பாராத பணவரவு, வீடு தேடி வந்து உபசரிப்பு" என்று நல்லது பல நடக்க உள்ளது என்று பிரபல ஜோதிடர் இட்லிவடை கோவிந்தாச்சாரியார் கணிக்கிறார். கூடவே தமிழக மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள அதிருப்தி நீங்கி, வெங்காய விலை, வெண்டைக்காய் விலை எல்லாம் மறந்து எல்லோர் கையில் செல்போனும், பையில் கரன்சியும் .. என்று நல்ல காலம் பிறக்கப்போகிறதாம். ஜோதிடர் சொல்லும் இந்த வாக்கு, வாக்கு எண்ணும் வரை என்றும் இதற்குப் பரிகாரம் எதுவும் இல்லை என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த தகவல் எந்த பத்திரிக்கையிலும் வரவில்லை. இட்லிவடை ஸ்பெஷல் - தமிழக மீனவர்கள் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ், அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். பேசிவிட்டு வரும் போது கலைஞர் உங்களிடம் ஒன்று கேட்டுவிட்டு வர சொன்னார் என்று குண்டை தூக்கி போட ராஜபக்சே என்ன என்று முழிக்க நிருபமா "இளைஞன்" படம் பார்த்துவிட்டு உங்க கருத்தை சொல்ல சொன்னார் என்று சொன்னாராம். மீனவர்களைக் காக்க அன்று ஹனுமார் செய்த மாதிரி செய்தால் தான் விடிவு வரும் போல இருக்கு.

ராணா என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பதை விட அவருக்கு ஜோடி(கள்) யார் என்பது குறித்து திரைப்படத் துறையில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. யாராக இருக்கும் என்பது தமிழகளின் பெரிய கவலையாக இருக்கிறது. வெங்காயம் கூட அதற்கு பிறகு தான்.

தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி அறிக்கைகளை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லித்தருகிறேன். இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி "எங்களுக்கு சீட் முக்கியமில்லை. தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம்" என்கிறார். இதை எப்படிப் படிக்க வேண்டும்? "ஜெயலலிதா எங்களுக்கு ஒரு சீட்டும் இல்லை என்று சொல்லிவிட்டார், அதனால் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருந்தாலும் பேப்பரில் பேர் வர வேண்டும் என்பதால் இது போல பேசிக்கறோம். கூடவே மானே தேனே என்று சேர்த்துக்கொள்ளுவது போல, மீனவர், விவசாயிகள், கரண்ட், வேலை வாய்ப்பு..." என்று சேர்த்துப் பேசுகிறோம். அப்ப தான் அறிக்கை பெரிசாக வரும். பத்திரிக்கை எடிட் செய்த பிறகு இரண்டு பாரா வரும்".

அடுத்து கம்யூ கட்சி அறிக்கை "அ.தி.மு.க. கூட்டணிக்கு வேறு சில கட்சிகள் வருகின்றன. பேச்சுவார்த்தை குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது." இதை எப்படி படிக்க வேண்டும் என்றால் "நாங்க மட்டும் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். நீங்களும் வந்தால் எங்களுக்கு துணையாக இருக்கும். அம்மாவிடம் வாங்கும் திட்டு, அடியை எல்லாம் பகிர்ந்துக்கொள்ளலாம். முதல் கட்ட பேச்சு வார்த்தை என்றால் அம்மாவிடம் ஒரு வார்த்தை தான் பேசினோம். அதுவும் "அம்மா" என்ற வார்த்தை. அதற்கு மேல் எங்களைப் பேசவிடவில்லை. கூடவே எங்களுக்குப் பிடித்த பெட்ரோல், வெங்காயம், விலை உயர்வு என்று போட்டால் தான் கம்யூனிஸ்ட் அறிக்கை என்று தெரியும். பத்திரிக்கையில் ஓரத்தில் வரும். இவர்கள் பாடு பாவம். கட்சி என்று இருப்பதால் இவர்களால் சுயேட்சையாக கூட நிற்க முடிவதில்லை.

அடுத்து ராமதாஸ் "வன்னியர் சமுதாயத்துக்கு யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி" என்பார். இவர் அறிக்கையை படிப்பது சுலபம். எங்கு எல்லாம் சமுதாயம் என்று வருகிறதோ அங்கே அன்புமணி என்று போட்டு படித்தால் உங்களுக்கு ஈஸியா புரியும்.

அடுத்த கடிதத்தில் வைகோ, திருமாவளவன் மற்றும் பலர் அறிக்கையை எப்படி படிப்பது என்று சொல்லித்தருகிறேன்,

தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதாவுக்கு சிறப்பு வேன் தயார் ஆகியிருக்கிறது. மும்பையில் அதை பார்க்க ஓ.பன்னிர்செல்வம் சென்றுள்ளார். ஆக ஜெயலலிதாவை பார்ப்பதைவிட அவர் வேனை பார்ப்பது சுலபம் போல இருக்கு.

ஸ்பெக்டரத்துல இழப்பு உண்மை ஆனா ஊழல் இல்லை என்று தனக்குத் தானே யானை மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதையா திமுக பேசிட்டு இருக்காங்க. முகவும் ராசாவக் காப்பாத்தக் கங்கணம் கட்டிண்டு டெல்லி வரைக்கும் அலையறாரு. இவருதான் இப்படி என்றால்,அமெரிக்காவில் ஒரு டுபாக்கூர் பல்கலைக் கழகத்தில் படிக்கும் (?) மாணவர்களின் காலில் கங்கணம் கட்டிய அழகு பார்த்தது(க்கிறது) ஒபாமா அரசு. முக்கா வாசிப் பேரு ஆந்திரா மாணவர்களாம். ஆந்திரா இப்போ ஒற்றுமையா இல்லை.இல்லையென்றால், அடுத்த GRE-யில் மொத்தமா எல்லாரும் எழுதி அமெரிக்காவை ஒரு வழி பண்ணி இருப்பார்கள்.


இந்த மாதிரி ரேடியோ கருவிக்கு பொறுத்தமான ஆள் மருத்துவர் ராமதாஸ் தான். எந்த கூட்டணியில் இருக்கார் என்று கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். மருத்துவக் குடி அடிக்கடி கூட்டணி மாத்தற மாதிரி ட்விட்டரில் போட்டோவையும் பேரையும் மாத்தறாங்க கொசுத் தொல்லை தாங்கலப்பா.



பை,
டெல்லியிலிருந்து முனி

17 Comments:

Anonymous said...

///ஜெயலலிதா எங்களுக்கு ஒரு சீட்டும் இல்லை என்று சொல்லிவிட்டார், அதனால் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருந்தாலும் பேப்பரில் பேர் வர வேண்டும் என்பதால் இது போல பேசிக்கறோம். கூடவே மானே தேனே என்று சேர்த்துக்கொள்ளுவது போல, மீனவர், விவசாயிகள், கரண்ட், வேலை வாய்ப்பு..///

தெளிவான லொள்ளு விரிவாக்கம் --hapeejinjin

Ramjothidar said...

/*
இந்த வாரம் முழுக்க நான் டெல்லியில் கேம்ப்.
*/

என்னது டெல்லியில் முனியா...அப்ப சனிதான் மன்னிக்கவும் சரிதான்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Ramjothidar said...

/*
ஆனா இப்போ அன்னையப் பாக்க அமைதியா நாள் முழுதும் காத்துக் கிடந்தாராம் ஐயா! என்னத்த சொல்ல!
*/

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்...

/*
நீதிபதி தினகரன் பற்றி எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கு?
*/
தினகரன்னா இந்த 2 ரூபாய்க்கு கொடுக்குறாங்களே அதுவா? ஓ இல்லை இல்லை நீதிபதியா....சரிசரி

/*
தமிழக மக்களுக்கு என்ன ராசி என்று தெரியாது
*/
நானும் இதைத்தான் கிட்டத்தட்ட 15 வருஷமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். என் நண்பர்கள் எல்லாருமே சொல்லிட்டாங்க இது தேவையில்லாத, உபயோகமில்லாத வேலைன்னு.
/*

இந்த தகவல் எந்த பத்திரிக்கையிலும் வரவில்லை.
*/
அதனாலதான் இட்லிவடைல வந்திருக்கு. இது எப்படி இருக்கு?

/*
ஸ்பெக்டரத்துல இழப்பு உண்மை ஆனா ஊழல் இல்லை
*/
அட ஆமாங்க இது கூட தெரியாதா இழப்பு மக்களுக்கு, வரவு யாருக்கோ..

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Dagil Patcha said...

Semma Kalakkal.

கிரி said...

//இவர் அறிக்கையை படிப்பது சுலபம். எங்கு எல்லாம் சமுதாயம் என்று வருகிறதோ அங்கே அன்புமணி என்று போட்டு படித்தால் உங்களுக்கு ஈஸியா புரியும்//

:-))

பூ said...

அமெரிக்க அரசு செய்தது மிகக் கேவலமான செயல். ஆனாலும், இந்த கொல்டி பண்றது அத விட கேவலமா இருக்கு.

Rathnavel said...

Wonderful Blog.

நீச்சல்காரன் said...

இந்த முறை முனி கடிதம் அருமை. டெல்லியில் நல்ல கவனிப்போ

ரோமிங் ராமன் said...

அடப்பாவிகளா! வர வர இவ போஸ்ட்டுகளை விட கமெண்ட்டுகள் கலக்கலாகிக் கொண்டிருக்கின்றன(அது இருந்தால்தான் இது-இது இருந்தால் தான் அது) விரைவில் இட்லிவடையில் வந்த கமெண்டுகள் அல்லது வலைப்பூ பின்னூட்டம் எழுதுவது எப்படி?என்று சூர்யோதய திசையிலிருந்து புஸ்தகம் வந்தாலும் வருமோ என்ன?

சீனு said...

Welcome back... LOL...

ரிஷபன்Meena said...

இளைஞனுடன் பெண்சிங்கம் படத்தையும் பார்க்க சொல்லியிருந்தால், கச்சத்தீவு கூட வேண்டாம், இனிமே பேச்சுவார்த்தைக்கெல்லாம் வராதீங்கன்னு சொல்லியிருப்பாரு.

R. Jagannathan said...

// மன்மோகன் சிங்கை பார்த்தால் முன்பு இருந்த நரசிம்மராவ், தேவகவுட போன்றவர்கள் பரவாயில்லையோ என்று தோன்றுகிறது. // .. நிச்சயமாக அதேதான். அவர்களுக்கு கட்சியின் மீதும் அமைச்சர்கள் மீதும் பிடி இருந்தது. மன்மோஹனுக்கு அவர் மனைவிமட்டும் தான் பிடித்தம்.
//தமிழக மக்களுக்கு என்ன ராசி என்று தெரியாது ஆனால் இன்னும் சில மாதத்தில் அவர்களுக்கு "எதிர்பாராத பணவரவு, வீடு தேடி வந்து உபசரிப்பு" // என்ன சொல்கிறீர்கள்! எல்லோரும் எதி்ர்பார்ப்புடன் துண்டை விரித்து காத்துக்கொண்டிருக்கிறோம்!
//ராஜபக்சே என்ன என்று முழிக்க நிருபமா "இளைஞன்" படம் பார்த்துவிட்டு உங்க கருத்தை சொல்ல சொன்னார் // நிருபமா, இளைஞன் வீடியோ காசெட்டை கொடுத்ததாகவும், ராஜபக்சே ‘உங்கள் மீனவர்கள் பக்கம் போகவே மாட்டேன், என்னை விட்டு விடுங்கள்’ என்று அலறியதாகவும் கேள்விப்பட்டேனே?
-ஜெ.

R.Gopi said...

இவரு எந்த தொகுதில நிக்க போறாரோ?

**************

அதிமுக, பாஜக, திமுக என பல கட்சிகளைப் 'பார்த்துவிட்ட' நடிகர் எஸ்வி சேகர் எம்எல்ஏ ஒருவழியாக வரும் பிப்ரவரி 6-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், ஜி கே வாசன், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலையில் சத்யமூர்த்தி பவனில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்.

அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் நின்று ஜெயித்தவர் எஸ் வி சேகர். ஆனால் பின்னர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். உடனடியாக திமுக அனுதாபியாக மாறிய அவர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் முக ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்தார். திமுக பேட்ஜ் குத்திக் கொண்டு அக்கட்சியின் பொதுக் குழுவிலும் கலந்துகொண்டார்.

ஆனால் திமுகவில் சேரவில்லை. இந்நிலையில் அவர் பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்பட்டது. பின்னர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார்.

இந்த நிலையில், வரும் பிப்ரவரி 6-ம் தேதி காங்கிரஸில் சேரப்போவதாக எஸ் வி சேகர் இன்று அறிவித்துள்ளார்

Anonymous said...

/////இங்கே நம்ம மக்கள் மீனவர்களுக்காக டிவிட்டரில் பேரணி நடத்துகிறார்கள். டிவிட் செய்யும் பலர் திமுக அபிமானிகள் என்பது வேறு விஷயம். இவ்வளவு காலம் கழித்து இந்த விழிப்பு உணர்வு வந்தது என்பது நல்ல விஷயம். ஆனால்"" இந்த விழிப்பு உணர்வு எதனால் வந்தது என்று பார்க்க வேண்டும்.""" ஆங்கில மீடியா மீனவர்களை பற்றி கண்டுகொள்ள வில்லை என்ற காரணத்தால். ஒரு வேளை ஆங்கில மீடியா இதை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தலைப்பு செய்தியாக போட்டிருந்தால் நாம் அதைப் பார்த்துவிட்டு/படித்துவிட்டு சும்மா இருந்திருப்போம்!///////

இதுதான் பாப்பார கொழுப்பு.தானும் எதுவும் செய்யற்து இல்ல.ஏதாவது செய்ய முயற்ச்சிக்கிறவனையும் நொட்டு சொல்லி கிண்டல் பண்றது! என்னிக்கு எல்லா பாப்பார வந்தேறிங்களாம் தமிழ் நாட்ட உட்டு வெளிய போறாங்களோ அன்னிக்குதான் தமிழனுக்கு விடிவுகாலம்

Shri Hari said...

\\ இதுதான் பாப்பார கொழுப்பு.தானும் எதுவும் செய்யற்து இல்ல.ஏதாவது செய்ய முயற்ச்சிக்கிறவனையும் நொட்டு சொல்லி கிண்டல் பண்றது! என்னிக்கு எல்லா பாப்பார வந்தேறிங்களாம் தமிழ் நாட்ட உட்டு வெளிய போறாங்களோ அன்னிக்குதான் தமிழனுக்கு விடிவுகாலம்\\

பெரியார் சொன்னாரு கடவுளே நம்பாதே அறிவியலே நம்புனு... Gentical analysis என்ன சொல்லுதுன்னா, பிராமணர்கள் வந்தேறிகள் கிடையாதுன்னு...

Genetic analysis report:

http://timesofindia.indiatimes.com/india/Aryan-Dravidian-divide-a-myth-Study/articleshow/5053274.cms

http://www.archaeologyonline.net/artifacts/genetics-aryan-debate.html

நம்ப வரலாற்று மேதை அம்பேடுகர் என்ன சொல்றருனு பார்த்தா அவரும் பிராமணர்கள் வந்தேறிகள் கிடையாதுன்னு சொல்றாரு...

http://www.hvk.org/articles/0302/151.html (Ambedukar interview)

http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasions.html

http://www.archaeologyonline.net/artifacts/white-invasion-aryan-theory.html

இப்பிடி எந்த விதத்திலும் நம்ப முடியாதே கால்டுவெல் அப்டிங்கரே ஒரு சுவிட்சர்லாந்த் பாதரியார் சொன்னதே இன்னும் நம்பிக்கிட்டு இந்த நாட்ல இருக்கானுங்களே இவனுங்களே நெனச்சா ரொம்பே பாவமா இருக்கு

பி.கு: நான் பிராமணன் கிடையாது

ரோமிங் ராமன் said...

//என்னிக்கு எல்லா பாப்பார வந்தேறிங்களாம் தமிழ் நாட்ட உட்டு வெளிய போறாங்களோ//
அன்புள்ள அனானி,முதலில் வந்தேறி என்ற சொல்லுக்குப் பொருள்(அர்த்தம்) தருக!
ஒருவேளை புதிதாகக் குடி வந்தவர் என்று பொருள் கொண்டால் எல்லோரும் பொருள்(செல்வம்)தேடி எங்காவது போயேறி அல்லது வந்தேறி தான் ஆக வேண்டி
இருக்கிறது.மூதாட்டி அவ்வை சொன்னதும் அதுதான் -திரை கடலோடியும் திரவியம் தேடு என்று!!! வேறு அர்த்தம என்றால் விரைவாக சொல்லவும்.அது சரி (ஆளும்)அதிகாரமில்லாமல் நீங்கள் ஏன் மற்றவருக்கு பூணூல் மாட்டக்கிளம்புறீங்க? வந்தேறி என்பதன் அர்த்தம அனுப்புங்கள் முதலில்!!!

Anonymous said...

///

இதுதான் பாப்பார கொழுப்பு.தானும் எதுவும் செய்யற்து இல்ல.ஏதாவது செய்ய முயற்ச்சிக்கிறவனையும் நொட்டு சொல்லி கிண்டல் பண்றது! என்னிக்கு எல்லா பாப்பார வந்தேறிங்களாம் தமிழ் நாட்ட உட்டு வெளிய போறாங்களோ அன்னிக்குதான் தமிழனுக்கு விடிவுகாலம்
///

அப்படீன்னா இஸ்லாமிய மதம் கும்பகோணத்திலிருந்து வந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

------ அமுதப்ரியன்