பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 10, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-2-2011

அன்புள்ள முனி,

பூலோகத்திலிருந்து இட்லிவடை எழுதுவது. அங்கே விஷ்ணு, சிவன், பார்வதி, நாரதர் எல்லாம் சுகமா? மேல் லோகத்தில் இருக்கும் இவர்களை வைத்து ஏதாவது எழுதினால், உடனே வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். மேலே என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது. நேற்று மேலே இருந்து கீழே இறங்கிய ஹெலிகாப்டர் புழுதி கிளப்பிப் பிறகு பரபரப்பைக் கிளப்பிவிட்டது.

உத்திரபிரதேசத்தில் மாயாவதி அணிந்திருந்த காலணியைப் பொதுமக்கள் மத்தியிலேயே, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தன் கைக்குட்டையால் துடைத்த சம்பவம் 2Gயை விட பெரிய சர்ச்சையாகியது. கோசாமி (கோயிஞ்சாமி இல்லை) உடனே ஒன்பது மணி நியூஸில் வழக்கம் போல சத்தமாக் கேள்வி கேட்க, மாயாவதி கட்சி எம்எல்ஏ ஒருவர் இந்தத் துடைப்பை "courtesy" என்று சொல்லிச் சொம்படித்தார். பல அரசியல் கட்சிகள் எங்கள் கட்சியில் இது மாதிரி யாருமே இல்லை என்ற கடுப்பில் கண்டனம் தெரிவித்து டிவியில் பேச வாய்ப்புத் தேடிக்கொண்டார்கள்.மாயாவதி ஒரு பெண் அவர் ஷுவை எப்படி ஒரு ஆண் துடைக்கலாம் என்ற எரிச்சல்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.. தமிழ்நாட்டில் நடக்காத கால் துடைப்பா? எனக்கு ஒரு சந்தேகம் ஏன் பாரதப் பிரதமர், ஜனாதிபதி, நீதிபதிகள் என்று பலர் அரசு செலவிலேயே போய், பொதுவில் ஏதாவடு சுவாமிஜி கால்களில் தங்கள் பதவியில் இருக்கும் போதே விழுகிறார்கள், அது தப்பு கிடையாதா? ஒரு முறை ராஜாஜி (என்று நினைக்கிறேன்) நீதிபதிகள் தங்கள் பதவியில் இருக்கும் போது இப்படிக் காலில் விழக்கூடாது என்று சொன்னார். ஆனால் யார் கேட்கிறார்கள்?

கேட்டால் பக்தி, அவர் மீது உள்ள மரியாதை என்று சொல்லுவார்கள். அதே போலத்தான் இந்தப் பாதுகாப்பு அதிகாரி மாயாவதி காலணியை துடைத்தார் என்று வைத்துக்கொண்டால் அதில் என்ன தப்பு? ஏன் நம் குருஜிக்களுக்கு பாத பூஜை, காசு பூஜை என்று நாம் செய்வதில்லையா? அதே போல இதையும் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். உங்கள் கண்களுக்கு குருஜி நல்லவராக தெரிவது போல அந்த அதிகாரி கண்ணுக்கு மாயாவதி நல்லவராக தெரிந்திருக்கிறார். இன்றும் 'ஆடர்லி' என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் உயர் அதிகாரிகள் வீட்டில் அவர்களின் ஷூக்களையும் ஏன் அவர்களின் பிள்ளைகளின் ஷூக்களையும் பாலிஷ் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். உலகமே மாயை தான் - இது ஆதிசங்கரர் சொல்லியது.


ஃபைன்டிங் நீமோ என்று ஒரு கார்ட்டூன் படம் சில வருடங்களுக்கு முன் வந்தது. த்ரிஷா ஒரு கார்டூன் படம் பச்சை குத்தியுள்ளார். அதே நீமோவை இப்பொழுது திரும்பவும் கண்டுபிடிக்க மக்களும் கேமராமேனும் போட்டி போடுகிறார்கள். இந்தக் கார்ட்டூன் படத்துடன் நடிக்கும் படம் "நமோ நாராயணா!" இந்த படத்தில் நாராயணனுக்கு முக்கியத்துவம் இல்லே; ஆனால் த்ரிஷாவின் உடம்பில் இருக்குற கார்ட்டூனுக்கு முக்கியத்துவம். அட நாராயணா! கலி முத்திவிட்டது. இது எப்படி இருக்கிறது என்றால் கல்யாணத்தில் வாழ்த்து சொல்கிறேன் என்று அரசியல் பேசிவது மாதிரிதான்.

சில நாட்களுக்கு முன்னால் ஒரு திருமண விழாவில், தமிழகத்தில் அரசியல் நாகரிகம் நலிந்தும், நசிந்தும் போய் விட்டதாக முதல்வர் கருணாநிதி வேதனையுடன் பேசினார். அடுத்த நாள் நம் சட்ட அமைச்சர் துரைமுருகன், "கருணாநிதியைப் பற்றி-- 5 முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியைப் பற்றி-- சுப்பிரமணியசாமி என்ற ஜென்மம் அநாகரிகமாக விமர்சித்திருப்பது, அவருக்கு அதிக அளவுக்கு கொழுப்பு ஏறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது" என்று பேசியுள்ளார். முதலில் கலைஞர் தன் கட்சிக்காரர்களுடமிருந்து நாகரிகம் பற்றிய டியூஷனை ஆரம்பிக்கட்டும்.

காங்கிரஸுக்கு இப்பொழுது இரண்டு புது சினிமா வரவுகள். ஒருவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் பிஜேபி/ பின்னாள் (தி)முக அ(னுதா)பியுமான எஸ்.வி.சேகர், இன்னொருவர் சிரஞ்சீவி. எஸ்.வி.சேகர் காங்கிரஸுக்குப் போகலாமா என்று கலைஞர், ஸ்டாலின் இருவருடம் பர்மிஷன் கேட்டுவிட்டு வந்தார் என்று சொன்னது அருமை. ஸ்டாலின் அவரிடம் நீங்க எங்கே இருந்தாலும் "நண்பேண்டா" என்று சொன்னாராம். வால் பையன் எங்கே போனாலும் தமாஷ்தான். சிரஞ்சீவி செய்தது நல்ல மூவ். நிச்சயம் காங்கிரஸுக்கு ஒரு பாப்புலர் லீடர் தேவை. அதனால் அவரை நம்பி இருக்கிறது. ஆனால் மூன்று வருடமாக கட்டிக் காத்த நல்ல பெயர் நாசமாகிவிட்டது. காங்கிரஸுடன் இணைந்த எவரும் உருப்பட்டதாகச் சரித்திரம் கிடையாது. டெல்லிக்கு சென்றவுடன் சரியான நேரத்தில் சோனியாவை சந்தித்துவிட்டார். ஆனால் பாவம் கலைஞர்தான் சோனியாவை பார்க்க 8 மணி நேரம் காத்துக்கிடந்தார்.

ஒரு காலத்தில் சிரஞ்சீவி கேப்டன் மாதிரி தனியாளாக இருந்தார். இப்பொழுது ஜெயுடன் கேப்டன் கூட்டு உண்டா இல்லையா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸுக்குக் கொடுக்கும் அதே அளவு இடங்களை கேப்டன் கேட்கிறார் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஜெயலலிதா வழக்கம் போலக் கொஞ்சம் பேசுவார். உடனே தொடையை தட்டிக்கொண்டு பிரச்சாரத்துக்கு புறப்பட்டுவிடுவார். இன்னும் இரண்டு வாரத்தில் தெரியும் என்று நம்பலாம். தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தாலும் அமைக்கலாம். அதனால் சோனியா மீது தாக்குதல் அதிகமாக இருக்காது என்றும் நம்பலாம். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஜெ கூட அவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டார் ஆனால் இளங்கோவன்தான் அதிகம் வருத்தப்பட்டிருப்பார். இப்பொழுதெல்லாம் அடக்கியே வாசிக்கிறார்.
ஆனால் அடக்கமுடியாமல் முழு நேர அரசியலுக்குத் தயாராகிவிட்டார் விஜய். தான் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவரே வசனம் எல்லாம் மாற்றிவிடுகிறாராம். லேட்டஸ்டாக "டேய் நான் இந்த மக்களின் பிரதிநிதி அவங்க சார்பா நாந்தாண்டா கேட்பேன்" என்று அவரே வசனம் எழுதியுள்ளாராம். அடுத்த விருதகிரி ரெடி. கூடிய சீக்கிரம் ஜெயலலிதாவிடம் ஆசி பெற்று விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது; பார்க்கலாம்.

சென்னை பழவந்தாங்கலில் லட்சுமி 'விசா' கணபதி கோயில் இருக்கிறது. இங்கே வழிப்பட்டால் சீக்கிரமே பாஸ்போர்ட் - விசா கிடைத்திவிடும் என்றூ பக்தர்கள் நம்புகிறார்கள். 'விசா' கணபதிக்கு வெளிநாடுகளிலும் பக்தர்கள் உண்டாம். இப்போது இங்கே தினந்தோறும் பூஜை செய்த சிவாச்சாரியார் என்ற குருக்களுக்கே சிங்கபூர் போக விசா கிடைத்துவிட்டதாம். விசா கணபதியும் விசா வாங்கிக்கொண்டு எங்காவது வெளிநாடு போய்விடாமலிருந்தால் சரி!

டி.பி. ரியாலிட்டி (DB reality) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான இரு வேறு நிறுவனங்கள் சுமார் 200 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. அதில் ஒரு நிறுவனம் இந்த நிதியைக் கலைஞர் டிவிக்கு தந்துள்ளது. எல்லாம் 2G கிக் பேக். இதை நாம் ஸ்பெக்டரம் ஊழல் என்று சொல்லக்கூடாது இது ஸ்பெக்டரம் சர்ச்சை என்று தான் சொல்லணும். இந்த அழகில் ரத்தன் டாடா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ.ராசாவின் விவேகத்துக்கும் செயல்பாட்டுக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதை இங்கே படிக்கலாம். http://dinamani.com/images/pdf/ratantataletter.pdf

கம்பெனி முதலாளிகள் எல்லாம் காதலர்கள் மாதிரி ரகசியமாக லெட்டர் எழுதிக்கொள்கிறார்கள். 85% வாழ்த்து அட்டைகள் எல்லாம் பெண்கள்தான் வாங்குகிறார்களாம். இப்பொழுது லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால், 'காதலர் தினத்தில் யாரும் பெட்ரோல் போடாதீங்க!" (கடலைபோடாதீங்கன்னு சொல்லாம விட்டாங்களே) என்று யாரோ ஒரு புண்ணியவான் எழுதப்போக எகிப்து மாதிரி இங்கே நடந்துவிடுமோ என்று எல்லோரும் பயந்துக்கொண்டு இருக்கிறார்கள். பெட்ரோல் விலை எக்கசக்கமாகிக்கொண்டே போவதைத் தடுக்க இந்த ஏற்பாடாம். ஃபேஸ் புக் புரட்சிதான் இப்போது லேட்டஸ்ட் ஃபேஷன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயிக்க ஸ்ரீகாந்த் காளஹஸ்தியில் சிறப்புப் பூஜை போட்டுள்ளார். பூஜை செய்தால் ஜெயிக்கலாம் என்றால்...... சரி பகுத்தறிவு பேச வேண்டாம் என்று இதோடு முடித்துக் கொள்கிறேன். பை.

இப்படிக்கு,
சொந்தமாக எழுதிய,
இட்லிவடை

30 Comments:

க்ருஷ்ண பாகவதர் said...
This comment has been removed by a blog administrator.
சுபத்ரா said...

செம :))))

Black said...

Trisha super...sir trisha sir, sir sir trisha sir.

Madhavan Srinivasagopalan said...

//..கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயிக்க ஸ்ரீகாந்த் காளஹஸ்தியில் சிறப்புப் பூஜை போட்டுள்ளார். பூஜை செய்தால் ஜெயிக்கலாம் என்றால்...... சரி பகுத்தறிவு பேச வேண்டாம் என்று இதோடு முடித்துக் கொள்கிறேன். பை. //

புரியுது.. புரியுது..

Anonymous said...

Trisha foto chance'ea illa, super kannu

Anonymous said...

"""உத்திரபிரதேசத்தில் மாயாவதி அணிந்திருந்த காலணியைப் பொதுமக்கள் மத்தியிலேயே, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தன் கைக்குட்டையால் துடைத்த சம்பவம் 2Gயை விட பெரிய சர்ச்சையாகியது. கோசாமி (கோயிஞ்சாமி இல்லை) உடனே ஒன்பது மணி நியூஸில் வழக்கம் போல சத்தமாக் கேள்வி கேட்க, மாயாவதி கட்சி எம்எல்ஏ ஒருவர் இந்தத் துடைப்பை "courtesy" என்று சொல்லிச் சொம்படித்தார். பல அரசியல் கட்சிகள் எங்கள் கட்சியில் இது மாதிரி யாருமே இல்லை என்ற கடுப்பில் கண்டனம் தெரிவித்து டிவியில் பேச வாய்ப்புத் தேடிக்கொண்டார்கள்.""""
இதாவது பரவாயில்லை.சில பதிவர்கள் இதற்க்கும் இந்து மதம் ,பாப்பாந்தான் காரணம்ன்னு பதிவு எழுதி தங்களுடைய ’பகூத்’ அறிவை காண்பித்துள்ளனர்.எங்கே போய் முட்டிக்கொள்வது? இவர்கள் மனநலம் சிக்கிறம் குணமாக எல்லாம்வல்ல பார்தசாரதி ”கோவில் கண்ணனை” பிராத்திக்கிறேன்

pvr said...

ஆனா அவுரு 20 வருசமா அந்தம்மாக்கு செக்குரிட்டியாமே. அந்த பழக்க தோசத்திலே அந்தம்மா அவரை DSP யாக்கி, அதே தோஷத்திலே அவுரு சூவைத்தொடைச்சா அது தப்பா ?

pvr said...

ஆனா அவுரு 20 வருசமா அந்தம்மாக்கு செக்குரிட்டியாமே. அந்த பழக்க தோசத்திலே அந்தம்மா அவரை DSP யாக்கி, அதே தோஷத்திலே அவுரு சூவைத்தொடைச்சா அது தப்பா ?

kggouthaman said...

காங்கிரசில் புதியதாக எஸ் வி சேகர் கோஷ்டி ஒன்று உருவாகப் போகின்றதா? சட்டமன்றத் தேர்தலில் அ இ அ தி மு க அணி பெரும்பான்மை பெற்றால், திருநாவுக்கரசு, சேகர் எல்லோருக்கும் ஐடெண்டிடி க்ரிசிஸ் நிச்சயம்.

Lakshmi said...

ஒரேபதிவில் இத்தனை விஷயங்களா? நல்லா இருக்கு உங்க சுறு, சுறுப்பு.

தஞ்ஜாவூர்க்காரன் said...

மாயாவதி சம்பவம் படித்தபோது, சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு திருவாரூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அப்பொழுது ஆட்சி மாறி, மந்திரி பதவி ஏற்றபின், திருவாரூருக்கு வந்திருந்த பொதுப்பணித்துறை அமைச்சர், விழா மேடையில் நடந்து போகும்போது, (எதேச்சையாக நழுவியது போல) தன துண்டை (அப்போ மஞ்சள் கிடையாது) நழுவவிட, அதை திருவாரூரின் மிகப் பெரிய மூன்றெழுத்து மனிதர் ஒருவர் கீழேயிருந்து எடுத்து பயபக்தியுடன் அவரிடம் கொடுத்தாராம். அப்பொழுது அந்த மந்திரி செய்த அலட்சியப் புன்னகையையும் அதன் பொருளையும் மேடையில் இருந்தவர்களைவிட முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் இன்னும் ஞாபகம் வைத்துள்ளார்கள்.

Shri Hari said...

\\ பூலோகத்திலிருந்து இட்லிவடை எழுதுவது. அங்கே விஷ்ணு, சிவன், பார்வதி, நாரதர் எல்லாம் சுகமா? மேல் லோகத்தில் இருக்கும் இவர்களை வைத்து ஏதாவது எழுதினால், உடனே வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். \\

ஒரு சிறிய கேள்வி, நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் பொழுது உங்கள் நெருக்கமானவர்களை பற்றி இந்தியாவில் யாராவது திட்டினால், வெளிநாட்டில் இருந்த ஒரு காரணத்தினால் , நீங்கள் கோபபடாமல் இருப்பீர்களா... நாங்களாவது வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு வருகிறோம்... வேறு யாராவது பற்றி கமெடி யாக எழுத வேண்டாம்... சும்மா கமெண்ட் பண்ணி பாருங்கே அப்பறம் தெரியும்....

Shri Hari said...

\\
கேட்டால் பக்தி, அவர் மீது உள்ள மரியாதை என்று சொல்லுவார்கள். அதே போலத்தான் இந்தப் பாதுகாப்பு அதிகாரி மாயாவதி காலணியை துடைத்தார் என்று வைத்துக்கொண்டால் அதில் என்ன தப்பு?\\

அதிபுத்திசாலி தனமாக விமர்சனம். அவருக்கு மாயாவதி மீது பக்தி இருந்தால் அவர் வீட்டில் அழைத்து சென்று காலில் விழுந்து வணங்கினால் குட எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் பணியில் இருக்கும் பொழுது இது போன்று செய்ததுதான் தவறு.

\\ உலகமே மாயை தான் - இது ஆதிசங்கரர் சொல்லியது\\ அப்படியா அவர் அது போன்று எந்த இடத்தில சொன்னார் கொஞ்சம் reference புத்தகத்தையோ அல்லது வலைதள link கொடுக்க முடியுமா? இது எப்படி இருக்கு தெர்யுமா

கத்தி எடுத்து வெட்டினார்...இந்த வரியை எந்த இடத்திலும் உபயோக படுத்தலாம். மருத்துவ மனைக்கும் உபயோக படுத்தலாம், கறி கடையிலும் உபயோக படுத்தலாம், தெரு சண்டையிலும் உபயோக படுத்தலாம்....

அறை குறையாக எதயாவது படிச்சிட்டு வந்து... பகுத்தறிவு சொல்லி ஊர ஏமாத்துறது...

King Viswa said...

//இப்படிக்கு,
சொந்தமாக எழுதிய,
இட்லிவடை//

அடடே,

என்ன கவிதை, வாட், அது கவிதை கிடையாதா? ஒரு லைனுக்கு கீழே மற்றொரு லைன் இருந்ததால கவிதை என்று நினைத்து விட்டேன். சாரி.

கிங் விஸ்வா

தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

Anonymous said...

Hello Idlyvadai,

It is not "டி.பி. ரியாலிட்டி (DB reality)"

It is DB Realty... real estate business!

Anonymous said...

yellow comments enka pochu ?

க்ருஷ்ண பாகவதர் said...

இ.வ
இது நியாயம்தானா? நடிகைகளை ப்ற்றி ஒரு பின்னூட்டம் போட்டேன். அதை delete செய்து விட்டீர். எங்க நடிகைகள் கேஸ் போட்டுவிடுவாங்கன்னு பயம் போலும். ஆனா இந்து சாமிகளை பற்றி மட்டும் எல்லை மீறி எழுதியதை போட்டீர். கடவுள் கேஸ் போடமாட்டார்னு தைரியம் போலும்.

இத்தனை பேர் சாடியபிறகும் மன்னிப்பு கேட்கும் மனப்பான்மையோ அநங்கனின் postingஐ எடுத்து விடவோ துணிவில்லையே உமக்கு. உங்களை பற்றி நீங்களே வெட்கித் தலை குனியும் காலம் விரைவில் வரக் கடவது!

பூ said...

த்ரிஷா வுக்கு கல்யாணமாகப் போகுதுன்னு பேசிக்கறாங்க! இட்லி, கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க.

Ramjothidar said...

/*
பூஜை செய்தால் ஜெயிக்கலாம் என்றால்...... சரி பகுத்தறிவு பேச வேண்டாம் என்று இதோடு முடித்துக் கொள்கிறேன்.
*/
ஆமா என்னமோ 2ம்நெம்பர் திருச்செந்தூர் கோவிலில் சத்ரு சம்ஹார ஹோமம் செய்து ௧௮ பேருக்கு சம்பாவனை செய்தது மாதிரியும்(ஏற்பாடு: அனிதா.ரா), திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் பாயாசன்னம் செய்து மாதாமாதம் வழிபடுவது போலவும், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பிரபலமான கோவில்களில் மாதாமாதம் தி(ரு).மு.க.வின் திருநக்ஷத்ரன்று அர்ச்சனை செய்வதாகவும், ஸ்ரீ ரங்கம் கோவிலில் மாதாமாதம் ஸ்ரீ நரஸிம்ஹர் ஸன்னிதியில் ஸுதர்சன ஹோமம் நடத்துவதாகவும் சொல்வீரோ?

முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.


பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

ரிஷபன்Meena said...

”அநங்கன்” எழுதிய கட்டுரையில் கடவுளரை இழுத்துக் காமெடி செய்ய முயன்றார் (எடுபடவில்லை என்பது வேறு விஷயம்) ஆனால் அவருக்கு புன்படுத்தும் நோக்கமில்லை.

யானை தன் தலையில் தானே மன்னைப் போட்டுக் கொள்ளும் என்பார்களே அதைத் தான் இவ இந்த ”முனி” கடிதத்தில் செய்திருக்கிறது.

பகுத்தறிவு இமேஜ்-க்கு இவ நாயா பேயா அலையுதே அது தான் மாயை

Anonymous said...

athu number2 illai.Number3

Anonymous said...

Athu No2 illai. Number3

Anonymous said...

Athu No2 illai. Number3

Anonymous said...

Dear IV

We are extremely pained at your and anangan's arrogance in justifying your abusive writing about Hindu gods. We have taken a serious view of this and registered a complaint with google to delete your blogspot. Google policy clearly says" While Blogger values and safeguards political and social commentary, material that promotes hatred toward groups based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, or sexual orientation/gender identity is not allowed on Blogger."

If you fail to apologize and remove the anangan's post, we are even ready to file a legal case and ensure justice is done.

Anonymous said...

விஷயம் வேறொன்றுமில்லை. விச்வாமித்ரரின் அதிரடி கட்டுரைக்கு இந்து தெய்வ கிண்டல் ஓர் பிராயச்சித்தம்
நம்ம உலக்கை நாயகன் பாணி " அவங்களை கொஞ்சம் கிள்ளிக்கிறேனே" ரகம்.
காளமேகபுலவர் செய்தது வேறு. இது எல்லை மீறிய , இந்த மோசமான காலகட்டத்தில் ஏற்கெனெவே நொந்து போயிருக்கும்
ஒரு குழுவினரை மேலும் கேவலப்படுத்தும் முயற்சி.
ஜம்புலிங்கமே ஜடாதரா நகைச்சுவை அல்ல. மல்லாந்து படுத்து மார்பில் எச்சில் துப்பிக்கொள்ளும் வேலை.
சரவணன்

Anonymous said...

இட்லிவடைக்கு இலக்கிய அந்தஸ்து வந்ததோ இல்லையோ,
புகழ் அந்தஸ்து அல்லது ஆசை வந்து விட்டது.
கொஞ்சம் புகழ் வந்தாலே நம் ஊரில் நம்ம தமிழ்நாடு பிராண்ட் பகுத்தறிவு பள்ளத்திற்கும் , நேர்மைக்கும் நடுவில் தள்ளாட ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதான் இந்த திடீர் பகுத்தறிவு இமேஜ் ஆசைக்கு காரணம்.
Saravanan

R.Gopi said...

இங்கே “தல” பத்தி ஏதாவது சொல்லி பாருங்களேன்...

துரைமுருகன் லட்சார்ச்சனை செய்வார்.
தொ)கு)ண்டர்கள் கொடும்பாவி எரிப்பார்கள்...
”தல” உடன்பிறப்புக்கு செல்லமா “முரசொலி”ல லெட்டர் எழுதுவார்...

அரசியலாம், நாகரிகமாம், வெங்காயமாம்... போங்கய்யா....

Anonymous said...

நண்பர்களே

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இந்த விஷயத்தினால் ஆன்மீகவாதிகள் மனம் புண்பட்டிருக்குமானால் அதற்காக நான் மனம் வருந்துகிறேன். இந்த எதிர்ப்பு, இனிமேலாவாது இந்துக்களை, மதங்களை கிண்டல் செய்வோரிடம் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தட்டும்.

வருத்தத்துடன்
அநங்கன்

SAN said...

IV,
What happened to you?
Orey pagutharivu ?
Thats why no manjal comment!!!!!!!

shamsheer said...

நீங்க அதிமுக அனுதாபியா வேண்டாமே
நான் உங்கள் எழுத்தின் ரசிகன் நான் யாருடைய அனுதாபியும் இல்லை