பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 21, 2010

பெண்ணியவாதிகள் vs குடும்பவாதிகள்

நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தாலி வேண்டுமா வேண்டாமா?, டாக்டர்கள், பொதுமக்கள், புத்திசாலிகள், ஏமாளிகள், பிசினஸ்மேன் வரிசையில் பெண்ணியவாதிகள் vs குடும்பவாதிகள் (அல்லது வீட்டுப் பெண்கள்) என்ற தலைப்பில் சென்றவாரம் ஞாயிற்றுக்'கிழமை' ஒளிபரப்பினார்கள். திருவிழாவில் சேவல் சண்டை பார்த்த ஃபீலிங். ஒரு பெண்ணுடைய கஷ்டம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்று நம் சினிமாக்களில் சொல்லுவார்கள். ஆனால் இதில் கலந்துக்கொண்ட அணியைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும், சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்பது பெண்ணியவாதிகள் வாதம்.

சாருவின் கூட்டத்திற்கு எண்ணி நான்கே பெண்கள் வந்திருந்தார்கள் (மேடையில் 2 பெண்கள்) என்று சாரு குறைப்பட்டுக்கொண்டார். விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சியைப் பாத்துவிட்டு இனி புத்தக ரிலீஸ் கூட்டத்துக்கு நிறைய பெண்கள் வருவார்கள் என்று நம்புவோம். பெண்ணியவாதிகளில் பலர் நல்ல தமிழில் அழகாகப் பேசினார்கள், நிச்சயம் இவர்கள் டிவி நிகழ்ச்சிகளை காம்பயர் செய்யப் போகலாம்.

பெண்கள் குவார்ட்டர் அடித்தால் என்ன தப்பு என்று ஒரு பெ.வாதி கேட்டுக்கொண்டே இருந்தார். குடும்பப் பெண்களால் பதில்சொல்லமுடியவில்லை. எதிர்பார்த்த மாதிரியே-- அபெண்ணியவாதிகளாகிய குடும்பப் பெண்கள் எல்லாம் அறியாமையில் உழல்கிறார்கள்; கணவனிடம் அடிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கோபிநாத் முடித்துவைத்தார். பெண்ணியவாதிகள் எல்லாம் நாகரிகமாகத்தான் உடையணிவார்கள்; கணவனோடு சேர்ந்துவாழ்வார்கள்; சேர்ந்து வாழ்பவர்களை எல்லாம் பிரித்துவிடமாட்டார்கள், பஃபிற்கெல்லாம் போகமாட்டார்கள் என்றெல்லாம் நிறுவ கோபிநாத் அதிகம் மெனக்கெட்டார். பாவமாக இருந்தது. ஒரு சமயத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்து எல்லாம் பெண்களும் மாறிவிட்டால் என்ற பயமும் தொத்திக்கொண்டு வயிற்றில் புளி.

ஏன் எப்பொழுதும் பெண்கள் தவறுசெய்தால் ஆண்களே அடிக்கிறார்கள்; ஆண்கள் தவறுசெய்து பெண்கள் அடிப்பதேயில்லை என்று எடுத்துக்கொடுத்த பெ.வாதி கடைசியில் பரிசுவாங்கிப் போனார். இட்லிவடையின் கல்யாண அசை முழுவதும் மங்கி போனது. கன்னத்தைத் தடவிக்கொண்டேன். சக ஆண்குலம் இனியாவது நாமும் வாங்குவதை வெட்கத்தைவிட்டு வெளியில்சொல்லிவிடுவது நமக்கும் நாட்டுக்கும் நல்லது. (எவ்வளவு நாள்தான் எதுவுமே நடக்காத மாதிரி நடிப்பது?)

பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும் என்று பேசினார்கள். அரசியலில் 33 சதவிகிதத்தை ஊறுகாய்க்கு தொட்டுக்கொண்டார்கள். பெண்கள் அரசியலுக்கு வருவதுபற்றி யாராவது பேசியிருந்தால், அரசியலில் இருந்துகொண்டு எப்படி நிலம்வாங்கலாம் என்று டிப்ஸாவது கொடுத்திருப்பாரோ என்னவோ, சல்மா அதிகம் பேசவேயில்லை. யாராவது வரதட்சிணை கொடுக்காமல் திருமணம் செய்துகொண்டீர்களா என்று ஒருகேள்வியை மட்டும் கேட்டு கைத்தட்டல் வாங்கிப் போனார்.

வந்திருந்தவர்களில் பலர் கவிதை எழுதுபவர்கள். ஆக கவிதை எழுதும் பெண்கள் எல்லாம் பெண்ணியவாதிகள் என்று நினைக்கிறேன். எனக்கு வலைப்பதிவில் எழுதும் பெண்கள் எல்லாரும் பெண்ணியவாதிகள்தான். அடுப்படியில் தாளித்துக்கொட்டினாலும் தைரியமாக கமல் கவிதையைப் புகழ்வதும், ராஜ்தீப் சர்தேசாய்க்கு தமிழில் டிவிட் செய்வதும், கவிதை எழுதி அதை இட்லிவடையில் போட சொல்லுவதும், தன் குழந்தைக்கு நாலரை பால் ஊட்டிவிட்டுக்கொண்டு குரங்கு கதை எழுதுவதும்... இன்னும் சொல்லப்போனால் செல்பேசியை ஆன் செய்தால் எங்கே நீரா ராடியா பேசிவிடுவாரோ என்று பயந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆண்கள். இந்தச் சூழ்நிலையில் இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் தேவையா?


அனுஷ்காவிற்கு இன்னும் இரண்டு ஆண்டில் திருமணமாம். தூங்கி எழுந்தால் எதற்குத்தான் மனுஷன் கவலைப்படுதுவது என்றே தெரியவில்லை. என்ன வாழ்கையடா இது


20 Comments:

jaisankar jaganathan said...

//அனுஷ்காவிற்கு இன்னும் இரண்டு ஆண்டில் திருமணமாம். தூங்கி எழுந்தால் எதற்குத்தான் மனுஷன் கவலைப்படுதுவது என்றே தெரியவில்லை. என்ன வாழ்கையடா இது
//
அந்த கவலை உங்களுக்கு ஏன். எனக்குத்தானே இருக்கனும்(அந்த கவலை)

ரிஷபன்Meena said...

//அடுப்படியில் தாளித்துக்கொட்டினாலும் தைரியமாக கமல் கவிதையைப் புகழ்வதும், ராஜ்தீப் சர்தேசாய்க்கு தமிழில் டிவிட் செய்வதும்//

செம நக்கல். இந்த பத்தி முழுக்க மஞ்சள் பெயிண்ட் அடித்திருக்கலாம்.

வரதட்சனை கொடுக்காத கல்யாணம் இப்ப நிறைய, அவனவன் பொண்ணு கிடைக்காம அலையிறான். (நான், இ.வ.-ஐ சொல்லலை)

நாஞ்சில் பிரதாப்™ said...

//அடுப்படியில் தாளித்துக்கொட்டினாலும் தைரியமாக கமல் கவிதையைப் புகழ்வதும், ராஜ்தீப் சர்தேசாய்க்கு தமிழில் டிவிட் செய்வதும், கவிதை எழுதி அதை இட்லிவடையில் போட சொல்லுவதும், //

ஹஹஹஹ.... இட்லிவடை நக்கலுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு....:)))

Natarajan Venkatasubramanian said...

தலைப்பு கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், என்று நினைக்கிறேன். தலைப்பு கிடைக்காவிட்டால் நிகழ்ச்சியை நிறுத்திவிட வேண்டியது தானே. ஆண்களுக்கு எதிராக பெண்களை தூண்டிவிடுவதே சிலருக்கு வேலையாகிவிட்டது.

சுபத்ரா said...

//கவிதை எழுதி அதை இட்லிவடையில் போட சொல்லுவதும்//

எப்படியோ அதைக் கவிதைன்னு ஒத்துக்கிட்டீங்களே...அது போதும் :-)

சுபத்ரா said...

//அவனவன் பொண்ணு கிடைக்காம அலையிறான். (நான், இ.வ.-ஐ சொல்லலை)//

:-)))))))

அதுசரி, படத்திற்காக மஞ்சள் கமெண்டா, கமெண்டிற்காகப் படமா?

தென்னவன் said...

பெண்கள் ஆண்கள் மாதிரி இருக்கனும்மம்?

பெண்கள் பெண்கள இருந்த போதாதா? பெண்கள் குடிப்பதில் தவறில்லை. ஆனால், குடித்துவிட்டு பிளாட் பார்மில் தூங்க முடியுமா? இல்ல நடு வீதியில குத்தாட்டம் போடா முடியுமா?

தமிழன் said...

சல்மா!
சமூக சேவகி!
உனக்கு வெக்கமா இல்லை? மனசு உறுத்தல?
இவரு பரவல்ல, யசோத ன்னு ஒரு ஆன்ட்டி. பக்க சொர்ண அக்கா மாதிரி இருக்காங்கோ! அவரெல்லாம் சாமூக சேவகி!

பாவம், ட்ராபிக் ராமசாமி மாதிரி ஆட்கள்.

जिम्पलाक्कड़ी बम्बा said...

என்னா ஜொள்ளு?? தாங்குமா?? அனுஷ்கா இன்னும் ரெண்டு வருசத்துல கலியாணம் கட்டிகினா உனுக்கு இன்னா காண்டு?

Anonymous said...

//அனுஷ்காவிற்கு இன்னும் இரண்டு ஆண்டில் திருமணமாம். தூங்கி எழுந்தால் எதற்குத்தான் மனுஷன் கவலைப்படுதுவது என்றே தெரியவில்லை. என்ன வாழ்கையடா இது
//

ரொம்ப கவலை வேண்டாம் இ.வ.
நம்ப பார்க்காத அனுஷ்காவா?
அவர் (வரப்போகும் கணவன்)என்ன புதுசா பாத்துடபோறார் ?

அமுதப்ரியன் said...

/*
இட்லிவடையின் கல்யாண அசை முழுவதும் மங்கி போனது
*/
யோவ் எத்தனை கல்யாணம்யா உமக்கு. கிழவன் ஆனதுக்கு அப்புறமும் இந்த ஆசை தேவையா?

அமுதப்ரியன்

அமுதப்ரியன் said...

/*
தலைப்பு கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், என்று நினைக்கிறேன். தலைப்பு கிடைக்காவிட்டால் நிகழ்ச்சியை நிறுத்திவிட வேண்டியது தானே. ஆண்களுக்கு எதிராக பெண்களை தூண்டிவிடுவதே சிலருக்கு வேலையாகிவிட்டது.
*/
இதுக்கு நீங்க கோபிநாத்தை முட்டாள்னே திட்டியிருக்கலாம்.

அமுதப்ரியன்

Suresh S R said...

பெண்ணியவாதிகள் அனைவரும் நன்கு தேர்ந்த பேச்சாளர்கள் ஆகவும், எழுத்தாளர்கள் ஆகவும் இருந்தனர். ஆனால் குடும்ப பெண்கள் யாரும் அப்படி இல்லை.
பெண்ணியவாதிகள் பக்கத்தை நியாயபடுத்த திட்டமிட்டு செயல் பட்டது தெரிந்தது.

Anonymous said...

We need Women empowerment in Villages and need Men empowerment in cities.

கிருபாநந்தினி said...

\\பெண்கள் குவார்ட்டர் அடித்தால் என்ன தப்பு என்று ஒரு பெ.வாதி கேட்டுக்கொண்டே இருந்தார். குடும்பப் பெண்களால் பதில்சொல்லமுடியவில்லை.// அதென்ன, பெண்ணியவாதிகள், குடும்பப் பெண்கள்னு பெண்கள்ளயும் சாதி பிரிச்சுட்டீங்க? பெண்ணியவாதிகள் எல்லாரும் குடும்பப் பெண்கள் இல்லையா?

கோயிஞ்சாமி said...

அமுதப்ரியன்,

கோபிநாத் நிச்சயமா ஒரு முட்டாள்தான்

ரிஷபன்Meena said...

// அதென்ன, பெண்ணியவாதிகள், குடும்பப் பெண்கள்னு பெண்கள்ளயும் சாதி பிரிச்சுட்டீங்க? பெண்ணியவாதிகள் எல்லாரும் குடும்பப் பெண்கள்னு பெண்கள்ளயும் சாதி பிரிச்சுட்டீங்க? பெண்ணியவாதிகள் எல்லாரும் குடும்பப் பெண்கள் இல்லையா?//

பேட்டி கொடுப்பவர் ஏதேனும் ஒரு கேள்விக்கு இது நல்ல கேள்வி என்பாரே, அது மாதிரி இதுவும் நல்ல கேள்வி

sharan said...

எதை இட்லி வடையில் போட்டாலும் படிக்க ஒரு கூட்டம் இருப்பது போல நீயா நானா, பெண்களை கேவலபடுத்தும் சீரியல் பார்க்க ஒரு கூட்டம் இருகின்ற வரை ஒரு சுப்ரமணிய சுவாமி இல்லை நூறு சுவாமிகள் வந்தாலும் திருத்த முடியாது.

Dubukku said...

ஓ இவர் தான் அனுஷ்க்காவா... இன்றைக்குத் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

Anonymous said...

கோபிநாத் மாதிரி ஒரு saddist-அ நான் பார்த்தது இல்ல.யாருக்காவது ஏதாவது தெரியலன்ன அதையே நோண்டி நோண்டி கேட்டு அவங்கள embarrass ஆக்கறது. இதுவே அந்த பயபுள்ளைக்கு வேலையா போச்சு.... கோபி...பிச்சு புடுவேன் பிச்சு ....
மொத்ததுல கோபி ஒரு கே.பி ...