பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 31, 2010

இந்தியாவின் ஒரு பகுதி குஜராத் - சுபத்ரா

அசட்டுத் தைரியம் என்று ஒன்று சொல்வார்கள். சும்மா எதையோ செய்யப்போக அது குறிப்பிடத்தக்க ஒரு முடிவிற்குக் கொண்டுவந்து விட்டுவிடும். உதாரணத்திற்கு, இரண்டு கவிதைகள் எழுதி அதை இட்லிவடையில் போடமுடியுமா ? என்று சும்மா தான் கேட்டேன். வெளிவந்துவிட்டது :-)

அதைப்போலத்தான் ஹிந்தி, குஜராத்தி மொழிகளைத் தெரிந்திருக்காமலும் உணவுமுறை, பழக்கவழக்கங்கள் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலும் ஏற்கனவே பார்த்திருந்த ஒரு நல்ல வேலையை விட்டுவிட்டு ஒரு அசட்டுத்தைரியத்துடன் குஜராத்திற்கு வந்தேன். அப்போதைக்கெல்லாம் நான் குஜராத் பற்றி அறிந்திருந்தது டாண்டிய டேன்ஸ், குஜராத் நிலநடுக்கம், மதக்கலவரம் இம்மூன்று தான்!

“There is no red tapism in my state, all red carpets” அப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பையேற்று கோட்டைக்குள் நான் குடிபுகுந்து இதுவரை ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன !! :-) ”வைப்ரண்ட் குஜராத்” - (பேரக் கேட்டாலே அதிருதுனு சொல்றது இதுதானோ?)

குஜராத்துக்கு வந்ததிலிருந்து இங்கே நடக்கும் ஆட்சிமுறையைக் கண்கூடாகக் கண்டுவரும் நான் நவம்பர் மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த சமயம் குஜராத்திலிருந்து முதல்வர் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். என் அனுபவகளை இந்த கட்டுரையில் தருகிறேன்.

தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, அதிரடியாக அவர் ஆற்றிய உரையில் சில விஷயங்களை கூறியிருந்தார். 2G மற்றும் ஊழல் செய்திகளில் இது எல்லாம் மறைந்துவிட்டது. சிலவற்றை இங்கே தருகிறேன்

- தமிழகத்தின் வியாபரிகளைக் குஜராத்திற்கு வரவேற்றும் 24 மணிநேரமும் தடையில்லாத தரமான மின்சார இணைப்பு, சிறந்த உள்கட்டமைப்பு(infrastructure), ஒளிவுமறைவற்ற அரசாங்கம் ஆகியவற்றை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.

- கல்வி அளிப்பது ஒரு சமூக சேவை எனவும் வியாபார நோக்கில் கல்வி நிறுவனங்கள் செயல்படக்கூடாது எனவும் அத்தகைய எண்ணமுடையவர்கள் குஜராத்திற்கு வரவேண்டாம் என்றும் வெளியிடங்களில் உள்ள குஜராத் மக்கள் கூட இதை மனதில் வைத்தே செயல்படுவதாகவும் கூறினார். 60 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போக 13 சிறப்பு முதலீட்டு மண்டலங்களையும் நிறுவி தொழிற்சாலைகள் வளர்வதை ஊக்குவித்து வருவதாகவும் பேசினார்.

- பாராட்டு விழா இவரையும் விட்டு வைக்கவில்லை, ஆனால் அதிலும் வித்தியாசமாக, இதுவரை தன்னைப் பாராட்டி அன்பளிப்பாக வந்த ஏறத்தாழ 8,000 பொருள்களைச் சுமார் 20 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு விட்டு அந்தத் தொகை முழுவதையும் பெண் குழந்தைகளின் கல்விக்கெனப் பயன்படுத்தக் கொடுத்துள்ளார்..!

- காந்திஜி கூறியது போல இரவு நள்ளிரவில் கூட பெண்கள் சாலைகளில் தனியே நடந்துபோக குஜராத்தில் சாத்தியமுண்டு! (Dry State என்பதாலா?)

நான் வேலை செய்யும் வங்கிக்கு வருகை தரும் பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களிடம் அணுகியபோதும் அவர்களிடம் தனியே உரையாடிய போதும் குஜராத்தில் நடைபெறும் நல்லாட்சியைப் பற்றி நான் அறிந்துகொண்டவை அதிகம். என்னுடைய ஒன்றரை ஆண்டு குஜராத் வாசத்தில் ஒருமுறையேனும் ஒருவர்கூட இங்கு நிலவும் ஆட்சியைப் பற்றிக் குறைகூறி நான் கேட்டதில்லை! இங்கே அரசியல் கட்சி ஆர்ப்பாட்டங்கள் இல்லை. இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு மின்சாரத்தைத் துண்டித்துவிடும் அவலம் இல்லை!

”சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்பதை ஆதரிக்கும் வகையில் விவசாயத்துறையில் பல்வேறு நவீன யுத்திகளைப் பயன்படுத்தியும் பல பயனுள்ள செயல்திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி ஊக்குவித்தும் லாபம் கண்டு வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் SME(Small and Medium Enterprises) துறையினரும் குஜராத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த தேர்தலைக் குறிவைக்காமல் அடுத்த தலைமுறையினரின் நலனைக் குறிவைத்து நலத்திட்டங்களை நிறுவிச் செயல்படுத்தி வரும் இதைப்போன்ற அரசே நல்லரசாக இருக்கமுடியும்…!

மேலும் ”CONVENIENT ACTION – GUJARAT’S RESPONSE TO CLIMATE CHANGE” என்று தற்போது பெரிதாகப் பேசப்பட்டுவரும் பருவ நிலை மாற்றத்தைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் திரு.மோடி அவர்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்களும் 2007-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை IPCC மற்றும் அல்கோரேயுடன் பகிர்ந்துகொண்ட திரு. ஆர்.கே.பச்சோரி அவர்களும் அந்தப் புத்தகத்தைச் சிறந்த படைப்பு என விமர்சனம் செய்துள்ளனர்.

“Generally after a rainfall, the rainwater disappears; in our places soon after the rainfall, the road disappears” இதைப்போன்ற சாலைகளை மட்டுமே பெருமளவில் நம்மூரில் பார்த்துப் பழகிய கண்களுக்குக் குஜராத்தின் பரந்து விரிந்த அகலமான சாலைகள் மகிழ்ச்சியைத் தந்தன. நம் அளவிற்கு நவீனப் பேருந்துகள் இங்கே அரிது என்றாலும், பேருந்தில் ஏறியவுடன் வில்லா, குருவியா, வேட்டைக்காரனா என்பதைப் போன்ற எந்தவித அச்சப்பாடும் இல்லாமல் ஏறலாம். அவரவர்க்குப் பிடித்த பாடல்களை அவரவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டு வரலாம். புத்தகம் படிக்கலாம். ப்ளாகில் எழுதுவதற்காகக் கவிதையோ கட்டுரையோ கதையையோ பற்றி யோசிக்கலாம். குறிப்பாகக் கைப்பேசியில் ஆங்கிலம் கலக்காத செம்மொழியாம் தமிழ்மொழியில் சத்தமாக (நாம் மட்டும்) பே(ஏ)சிக்கொண்டே வரலாம். கேட்பவர்க்குப் புரியாது. அப்படியே புரிந்துகொண்டு செல்லமாக அவர்கள் நம்மைத் திட்டினாலும் அது என்னவென்று நமக்குப் புரியாது :-)
பேருந்தில் ஒருபாதியைப் பெண்களுக்காக ஒதுக்கிவைத்துப் பார்த்துப் பழகிய என் கண்களுக்கு ஒருவரையொருவர் யாரென்றே தெரியாதவர்கள் ஜோடிஜோடியாக அமர்ந்து பயணம் செய்வதைப் பார்ப்பது முதலில் வேடிக்கையாக இருந்து இப்போது வாடிக்கையாகிவிட்டது.

பள்ளியிலும் கல்லூரியிலும் இலக்கியப்பாடங்கள் பற்றிய வகுப்புகளில் முந்திரிக்கொட்டை போல பதில்சொல்லிப் பழகிவிட்டு அலுவலகத்தின் சார்பில் நடந்த குஜராத்தி மொழி வகுப்பில் திருதிருவென்று விழித்துக்கொண்டு இருந்ததை மறக்கவே முடியாது! ஒருமுறை வகுப்பில் ஹிந்தியில் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வரியைக் கூற ஆசிரியர் அதைக் குஜராத்தியில் மொழிபெயர்த்துக் கூறிக்கொண்டே வந்தார். அப்போது என்முறை வர என்னால் ஹிந்தியில் எதுவும் சொல்லமுடியாமல் போக, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டிருந்தேன். உடனே வகுப்பில் அமர்ந்திருந்த என்னுடன் பணியில் சேர்ந்திருந்த தமிழ் மாணவர் ஒருவர் சிறிதும் யோசிக்காமல் “ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா” என்று படபடவென்று கூறிவிட்டு அமைதியாக இருந்துவிட ஆசிரியரும் அதைக் கடமையே கண்ணாக மொழிபெயர்த்து கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்க அதைப் பார்த்தவுடன் எனக்கு அழுத கண்ணீரெல்லாம் ஆனந்தக்கண்ணீர் ஆகிவிட்டது :-)

குஜராத் என்றாலே நவராத்திரி நாட்கள் தான் முதலில் நம் நினைவுக்கு வருபவை. நவராத்திரி ஸ்பெஷல் சோளிகளை அணிந்துகொண்டும் அழகாக அலங்கரித்துக் கொண்டும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என அனைத்து வயது பெண்களும் கூடிநின்று “கர்பா” ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருமணம் போன்ற சடங்குகளின் போதும் கூட இதைப்போன்ற நடனங்கள் தெருக்களை அமர்க்களப்படுத்தும். பல சமயங்களில் வாகனப் போக்குவரத்திற்கு இவை இடையூறை ஏற்படுத்தினாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் சாலையில் செல்லும் பிறமனிதர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சர்யப்படுவதை மீறி அவர்கள்மீது நமக்குப் பொறாமை ஏற்படுவதை உணர்ந்து கொள்ள முடியும்.

இனிப்பு வகைகளுக்குப் பெயர்போன குஜராத்தில் மக்கள் மிகவும் இனிமையானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை! ஆனால் அதற்காக எல்லா உணவுகளிலும் சிறிது வெல்லமோ சர்க்கரையோ சேர்த்துச் சமைப்பது..?! ஆளவந்தானில் ”கடவுள் பாதி; மிருகம் பாதி; இரண்டும் கலந்த கலவை நான்” என்று வருவதைப் போல இனிப்பையும் உரைப்பையும் கலந்து உண்ணுவதென்பது புதிதாக வந்த அப்போதைக்கு எனக்கு %$@!@&*(%#!!!!. ஆனால் பஞ்சாபி, காட்டியாவாடி, சைனீஸ், இட்டாலியன் மற்றும் தென்னிந்திய உணவுகள் போன்றவற்றைப் பறிமாறும் ரெஸ்டரண்டுகளும் இங்கு நிறைய உள்ளன. என்ன, இங்கே அசைவ உணவுப் பிரியர்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். பேச்சலர்களுக்குத் தங்குவதற்கு வீடு கிடைப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிடக் கஷ்டம் அசைவம் உண்பவர்க்கு! எனக்குத் தெரிந்து எனது பிறமாநில வட இந்திய நண்பர்கள் பலர் அசைவம் உண்பதை நான்குச் சுவர்களுக்குள் ரகசியமாகவே செய்து வருகின்றனர் :-)

இதை நான் சொல்லியே ஆகவேண்டும்! விடுமுறைகள் எடுத்துக்கொண்டு ஊருக்கு நான் வந்திருக்கும் நாட்களில் குஜராத்தை நான் மிஸ் பண்ணுவதாக உணர்ந்தால் என்னளவில் அதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்க முடியும். அது சுடச் சுட(வேகத்தைச் சொன்னேன்) மசாலாவைப் பூரியினுள்ளே வைத்துப் பானியில் முக்கித் தட்டில் வைக்க வைக்க உடனுக்குடன் மாயமாக மறைந்து போகும் “பானிப்பூரி”யாகத் தான் இருக்கும்! :-) எவ்வளவு பார்த்துப் பார்த்து வீட்டில் அதே மாதிரி செய்து பார்த்தாலும் தெருவோரத் தள்ளுவண்டியில் வாங்கிச் சுவைத்த அந்தச் சுவை மட்டும் வரவே வராது!!

குஜராத்தைப் பற்றி நான் வேறு ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் அதை அடுத்த கட்டுரையில் சொல்லுகிறேன். போட தான் இட்லிவடை ரெடியாக இருக்கிறாரே :-)
என்று கூறிக்கொண்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி என் உரையை முடிக்கிறேன்… நன்றி… வணக்கம்! அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…!! :-)
அன்புடன்
சுபத்ரா @ http://subadhraspeaks.blogspot.com/

கட்டுரை ஆசிரியர் A.R.சுபத்ராதேவி. இளமறிவியல் கணிதவியல் பட்டதாரி. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே திருநெல்வேலியில் தான். முன்னர் தமிழ்நாடு சிறப்புக் காவலில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாகவும் பின் பாண்டியன் கிராம வங்கியிலும் பணியாற்றி தற்போது அகமதாபாத், குஜராத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வருகிறார். சிவில் சர்விஸஸ் தேர்வுக்கும் தயாராகி வருகிறார். ஒரே கெட்ட பழக்கம் கவிதை எழுதுவார்.

குஜராத்தில் திருநெல்வேலி அல்வா கிடைக்குமா ?

எல்லோருக்கும் இட்லிவடையின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

45 Comments:

Speed Master said...

வடை

Speed Master said...

எதிர் மறையான விசயம்

மதச்சார்பற்ற அரசாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்
அணைவருக்கும் உள்ளுக்குள் ஒரு அச்சம் உண்டு

1 வருடம் நானும் அங்கு இருந்துள்ளேன்

Speed Master said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Mukkodan said...

Communal Riots are not new to India or Gujarat. There were 100+ riots happened in Gujarat before 2002, but we idiots still talk about 2002 and forget about all these pure revolution in development going on there. I request all those who still blame Modi for riots to pause for a moment and refer to some neutral sources on how he swiftly handled the violence.

Also 2002 was not a Genocide as most Tamil blog friends exaggerate, it was a riot when both Hindus Muslims died in huge numbers.

Anonymous said...

//மதச்சார்பற்ற அரசாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்//

Should it be "மதச்சார்பற்ற அரசாக மட்டும் இருந்திருந்தால்" ?

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Sridhar

அருண் பிரசாத் said...

குஜராத் பற்றின என் எண்ணத்தை சுத்தமா மாத்திட்டீங்க....

Good Flow

Speed Master said...

//மதச்சார்பற்ற அரசாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்//

Should it be "மதச்சார்பற்ற அரசாக மட்டும் இருந்திருந்தால்" ?

புத்தாண்டு வாழ்த்துக்கள்
Sridhar

sorry & thanks

"ஸஸரிரி" கிரி said...

சமீபத்தில் படித்த ஒரு அதி அற்புதமான கட்டுரை.

பகிர்விற்கு நன்றி!

Anonymous said...

இப்போதான் கலவரங்களுக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லைன்னு சுப்ரீம் கோர்ட் வைச்ச நடுநிலையான கமிஷனும் சொல்லிட்டதா கேள்வி

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மத பஜனையைப் பாடப் போறாங்களோ

modi is a good administrator and decent politician.

good work subadra and IV

RK

பத்மநாபன் said...

அருமையான கட்டுரை... இதை எழுதிய சுபத்ரா அவர்களுக்கும் ..அதை வெளியிட்ட இட்லி..வடைக்கும் மிக்க நன்றி...

எனக்கும் ஆசை ..தமிழ்நாட்டை பற்றி வாழ்நாளில் ஒரு கட்டுரை இப்படி எழுத...

இம்மாதிரி தமிழ்நாட்டுக்கான கட்டுரை தாமதத்திற்கு அரசியல் மட்டும் காரணமல்ல..மக்களும் தான் காரணம்.

அனைவர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

shunmuga said...

குண நாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

ரிஷபன்Meena said...

குஜராத்-லிருந்து ஒரு “நல்ல” நேரடி ரிபோர்ட். ஊழல்வாதிகள் அவர்களே அவர்களுக்கு சர்டிபிகேட் கொடுத்துக் கொள்வார்கள். மீடியாக்களும் சர்டிபிகேட் கொடுக்கும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரிஷபன்Meena said...

//எனக்கும் ஆசை ..தமிழ்நாட்டை பற்றி வாழ்நாளில் ஒரு கட்டுரை இப்படி எழுத...

இம்மாதிரி தமிழ்நாட்டுக்கான கட்டுரை தாமதத்திற்கு அரசியல் மட்டும் காரணமல்ல..மக்களும் தான் காரணம்.//

அம்மா, அய்யா ஓட்டுப் பிரிக்கும் நடிகர் ,என்ற அரசியல்தலைவர்கள் வரிசையப் பார்த்த பின்பு இப்படி ஆசை படக்கூட முடியாது என்பது உண்மை தான்

அஞ்சா நஞ்சன் said...

//ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா//

ரகு தாத்தாவை இன்னும் மறக்கலியா?

பொன்மலர் said...

தேர்ந்த எழுத்தாளரைப் போல எழுதப்பட்ட நடை சுபத்ராவின் திறமையை பிரதிபலிக்கிறது.
மிக அருமையான கட்டுரை. சுவாரஸ்யமான நடையில் குஜராத்தை தெரிந்து கொள்ள வைத்த சுபத்ரா விற்கு வாழ்த்துகள். எனது தோழியின் கட்டுரையை தங்கள்
தளத்தில் இட்டமைக்கும் நன்றி.

Anonymous said...

குஜராத்திற்கு பயணித்த அனுபவம்!!!
நன்றி சுபத்ரா!!!

JAK

ராமுடு said...

Excellent post.. Thanks subhadra. One of my ex-roomie is from Gujarath. He is so good to move along and I can imagine how gujju's are.. Thanks idly vadai.. & wish you all Happy new year...

Erode Nagaraj... said...

நல்ல பதிவு. அங்கே ஏதேனும் கச்சேரிக்கு வந்தால் சந்திக்கிறேன்.

அங்கே இருப்பதாகச் சொல்லப்படும் வெளிச்சத்தில் இருட்டுக் கடைக்கு எங்கே போவது? எனவெம் மஞ்சள் காமென்ட் செல்லாது... :)

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Rathnavel said...

Good piece of writing. Here our politicians are receiving 100s of shawls daily. What they are doing?
Your writing is good; keep it up.
Our Heartiest New Year wishes to you & your family members.
N.Rathnavel
Smt N.R.Uma Gandhi

siva said...

கட்டுரை மிக அருமை
குஜராத் பற்றி நன்கு தெரிந்துகொண்டேன்
எப்படி பட்ட அரசாங்க செயல்முறைகள்
தமிழ்நாட்டிலும் இருந்தால் எவ்ளோ நல்ல இருக்கும்

அழகான கட்டுரை பகிர்வுக்கு நன்றி
சற்று தாமதம்
அழகான பகிர்வு.

நன்றி வாழ்த்துக்கள்

bagyaraj said...

கட்டுரை மிக அழகாக குஜராத்தை வெளிபடுத்தியது.. ஆனால் எனக்கு தெரிந்தவரை முஸ்லிம் சகோதரர்கள் இந்திய முழுமைக்கும் அந்த மாநிலத்தையும் அதன் முதல்வரையும் இன்னும் எதிரியாகவே பார்த்துகொண்டு இருக்கின்றனர்... அங்கிருக்கும் முஸ்லிம் மதத்தவரின் எண்ணங்கள் அந்த ஆட்சியின் மீது எப்படி இருக்கிறது என்றும் எழுதினால் நன்றாக முழுமை அடைந்திருக்கும்...

கானகம் said...

குஜராத் கட்டுரை அருமை.

இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் நமது ஆட்களை அவர்கள் பார்வையில் அந்தந்ந்த மாநிலத்தை எழுதச் சொன்னால் என்ன?

Balaji saravana said...

மிக அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டுரை சுபா! இன்னும் சில ஆண்டுகளில் தொழில் துறையிலும் விவசாயத் துறையிலும் குஜராத் இந்தியாவின் முன்னணி மாநிலமாகிவிடும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.

//Generally after a rainfall, the rainwater disappears; in our places soon after the rainfall, the road disappears//
உண்மை உண்மை!
மிகச் சிறப்பாக தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் :)

Anonymous said...

Subhadra Madam,
Though I am living in Gujarat for the past 25 years, though I wish to convey my views about life in gujarat, I do not have the flow of language like you. Moreover, if I start appreciating Gujarat people do not believe me for the reasons better known to them. As a true Tamilian, I also dream of gujarat like situation in Tamil Nadu but
it is a mirage only. Thanks for your views on gujarat. Leave me your phone number and e-mail id to keep in touch with you please, if you do not mind.

Mohan Baroda

Anonymous said...

Madam, you have not touched upon the political meetings here and whenever chief minister visits any part of gujarat, traffic is not at all disturbed even for a minute. This is worth mentioning here.

எஸ்.கே said...

குஜராத் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் நன்றி!

Anonymous said...

//Generally after a rainfall, the rainwater disappears; in our places soon after the rainfall, the road disappears//
உண்மை உண்மை! //

In Tamil Nadu, soon after a rainfall, it is the perfect blend of sewerage with corporation water that appears never to disappear.

ரோமிங் ராமன் said...

முதலில் புத்தாண்டு வாழ்த்துகள்!!இ வ முழுக்க முழுக்க துக்ளக் ஆகி வருகிறது!!(எப்பவும் அப்படித்தான் என்றாலும்,) துக்ளக் போலவே மோடி புராணம்>.
ஆனாலும் நிச்சயம் குஜராத் இந்தியாவில் ஒரு முன்னோடி ஸ்டேட் தான் என்று எலோரும் சொல்வதை ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் என்பது வேறு விஷயம்!!

ரோமிங் ராமன்

IdlyVadai said...

//முதலில் புத்தாண்டு வாழ்த்துகள்!!இ வ முழுக்க முழுக்க துக்ளக் ஆகி வருகிறது!!(எப்பவும் அப்படித்தான் என்றாலும்,) துக்ளக் போலவே மோடி புராணம்>.
ஆனாலும் நிச்சயம் குஜராத் இந்தியாவில் ஒரு முன்னோடி ஸ்டேட் தான் என்று எலோரும் சொல்வதை ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் என்பது வேறு விஷயம்!!

ரோமிங் ராமன்//

பாராட்டுக்கு நன்றி.
1. துக்ளகில் பெண்கள் இப்படி எழுதுவார்களா ?
2. நான் ஆண்டு விழா நடுத்துவதில்லை.

Geeyar(ஜீயார்) said...

அனைத்து தமிழர்களின் மத்தியிலும் ஒரு ஏக்கத்தை உருவாக்கி சென்றுவிட்டார் கட்டுரையாளர். தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரசு வருமா என தெரியவில்லை(ஸ்டாலின்?). ஆனால் அனைவருக்கும் சந்தோசமான ஒரு செய்தி,

ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நல்ல விசயம்.

ஆம் அடுத்த பிரதமர்(வேட்பாளர்) மோடிதான்.

Anonymous said...

During the previous Election campaign when every other parties promised free Electricity/TV etc Modi bravely said NO and even warned that he will increase the electric charge, but will provide good 24/7 power.

I'm double sure that he's more than a good person than projected because of the inability of the UPA Govt and it's mouthpiece(Media) in finding anything bad on him despite 24/7/365 eavesdropping on him.

He's indeed a great Leader/Statesman.

Anonymous said...

மோடியைப் பற்றி நல்லவிதமாக நாலு வார்த்தை எழுதினாலே , ஏன் மோடியை விடுங்கள் குஜராத் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் கூட குஷ்டரோகியைக் கண்டது போல வெறுத்து ஒதுக்கும் தீண்டாமை நிலவும் தமிழ் பதிவர் உலகில் உண்மையைத் துணிந்து சொன்ன சுபத்ராவைப் பாராட்டவே வேண்டும். இங்கு ஒருவர் குஜராத் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லையே என்று குறை பட்டுக் கொண்டார். அவர் மதச்சார்பில்லாத என்றால் என்னவென்று விளக்குவாறா? இன்று திராவிடக் கட்சி ஆளும் தமிழ் நாட்டில் கிறிஸ்துவராகவோ முஸ்லீமாகவோ பிறந்திருந்தாலே போதும் அரசாங்கம் அவர்களுக்கு பள்ளிக்கும், கல்லூரிக்கும் ஆயிரக்கணக்கில் இலவச நிதியை அளிக்கிறது. கேக் சாப்பிட்டு விட்டு ரமணர் போன்ற துறவிகளை ஆபாசமாகப் பேசும் பொறுக்கிகள் ஆள்கிறார்கள். குல்லா அணிந்து கொண்டு அதே நிகழ்ச்சியில் இந்துக்களை இகழ்கிறார்கள் இழி பிறவிகள். பயங்கரவாதிகளுக்கு சிறையில் மசாஜ் அளிக்கப் படுகிறது. இதுதான் மதச்சார்பில்லாத அரசாங்கம் என்றால் அந்த மதச்சார்பின்மையும் அந்த அரசாங்கமும் நாசமாகப் போகட்டும்.

குஜராத்தில் நடந்தது இரு பிரிவினருக்கான கலவரம். அது போல கலவரம் நடந்திராத மாநிலமே இந்தியாவில் கிடையாது. அந்தக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்களும் கொல்லப் பட்டிருக்கிறார்கள். அந்தக் கலவரத்துக்குக் காரணமே அப்பாவி இந்துப் பெண்களும் குழந்தைகளும் உயிரோடு கொளுத்தப் பட்டதுதான். இன்று சுப்ரீம் கோர்ட்டில் மோடியின் மீது குற்றசாட்டு எதுவும் இல்லை என்று இத்தாலியச் சோனியாவின் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனே ரிப்போர்ட் அளித்திருக்கிறது. அங்கு நடந்த அனைத்து உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும் அளவில் முஸ்லீம்கள் மோடிக்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இனியும் அவரை தீண்டத்தகாதவராக நடத்தினால் நடத்துபவர்கள் பயங்கரவாதிகளாக மட்டுமே இருக்க முடியும்

ச.திருமலை

Mak said...

Gujarat
One of top 5 nations கடன் சுமைஉள்ள state.

top in கள்ள சாராயம் (most of them doing by sanparivar) state.

Out of 100 persons, Modi got just 20 persons vote, ruling the state from backdoor.

Some more facts, this will tell about குஜராத் - இந்தியாவின் ஒரு பகுதி?

சுபத்ரா - are you RSS or sangh parivar?
Do you know in modi time, pregnant woman and inside the baby, killed by modi group people.

http://www.inner am.com/2010123112788/nobel-laureate-ramakrishnan-refused-to-meet-modi

http://www.indianexpress.com/news/to-get-job-in-surat-muslim-took-hindu-name-revealed-when-he-was-killed/560779/

http://ibnlive.in.com/news/modi-govt-ad-mistakes-up-muslims-for-gujarat/123971-37-64.html

http://www.twocircles.net/2010jun24/muslims_gujarat_real_picture.html

Modi is same as Hitler, in another word he is an another Hitler.

சுபத்ரா - why don't you compare other factors, what ever mentioned the below articles?

சண்முககுமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இதயம் படிச்சி பாருங்க

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

நா.க.மலர்ச்செல்வன் said...

பாராட்டுகள் சுபத்ரா / இட்லிவடை.௨௦௦௨ - ஐ பற்றி பேசுபவர்கள் அதன் பின் ஏற்பட்டிருக்கும் அமைதியையும், ஏற்றத்தையும் காண தயாரில்லை. பாவம் அவர்களை மந்தி ஆக்கி வைத்திருப்பது ஊடகங்கள். உண்மை நிலை அங்கு இருபவருகே தெரியும் என்பது கூட புரியதவர்களாய் மாற்றியிருக்கிறது ஊடகங்கள். அதை சொல்பவரையும் நிந்திப்பதர்காகவே ஒரு கூட்டம் அலைவது வேதனை. பதிவின் தொடர்ச்சியை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

mugham48 said...

dear friends
"
இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் நமது ஆட்களை அவர்கள் பார்வையில் அந்தந்ந்த மாநிலத்தை எழுதச் சொன்னால் என்ன?"
good request
with regards
mugham.m

Natarajan said...

thank u...for ur experience in india's first state.

Natarajan said...

thank u...for ur experience in india's first state.

Kamesh said...

Hi IV,

Some body has accused modi and his govt by giving some links... I have not gone through them nor I wish to being here in Bots I know what is happening in Guajarat... alas own guys has no clue or living in illusion.. these peopple what to say..
By the way when somebody compared IV to Thuglak you were prompt to say that there was no woman writers in Thuglak or you don't organise or arrange for Annual Meetings.. if I remember right Sumathi was writing in Thuglak.. and by arranging annual meetings Cho was interacting with its readers and establishing his point of view.. correct me if I am wrong

Kamesh
Botswana

சுபத்ரா said...

எனது கட்டுரையைப் பொறுமையாகப் படித்து appreciate செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்!

@ Erode Nagaraj Sir
Thank You and Welcome :-)

MY SPECIAL THANKS TO IV :-)

அன்புடன் சுபத்ரா
subadhra23@gmail.com

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//குஜராத்தில் திருநெல்வேலி அல்வா கிடைக்குமா ? //

எல்லா அல்வாவும் போன தேர்தலில் மக்களால் காங்கிரசுக்கு அளிக்கப் பட்டு விட்டது!
:)

பகிர்வுக்கு நன்றி, சுபத்ரா & இ.வ.

cho visiri said...

For those who are not initiated.......

Tirunelveli (H)Alwa is very much available at all Tamil Stores situate in all major cities like Surat, Ahmedabad, Baroda(Vadodara?!).

If you visit Surat, come to Rander Road, Lakshmi Stores would provide you popular Tamil Magazines, Vegetables brought from Maatunga, Mumbai, all kinds of snacks ( a la Grand Snacks Chennai, Adayar), and the list does include Tirunelveli Halwa.

cho visiri said...

Speed Master said...
//மதச்சார்பற்ற அரசாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்
அணைவருக்கும் உள்ளுக்குள் ஒரு அச்சம் உண்டு//

Totally imaginary. Ask any Muslim in Gujarat. He/she would vouchsafe my statement that Minority people are safer in Gujarat than in any other state. The solid proof is that no riots in the last 8 years.
(I have been residing here in Gujarat for the past 18 years - near Surat earlier and at Surat now).

Anonymous said...

அவர் மோடி இல்லை மோதி. ரசிகர்களும் ஆதரவார்களுமாவது அவர் பெயரை சரியாக உச்சரிக்கவும் எழுதவும் கற்கவேண்டும்.

R Gopu