பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 26, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஆக்ஸிடண்ட் கருவை வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. ரிதம் ( இன்னொரு படம் நினைவுக்கு வரவில்லை ) மாதிரி ஆக்ஸிடண்ட் கருவை தழுவி எடுத்த படம் மன்மதன் அம்பு.

தான் வேவு பார்க்கும் பெண்ணையே காதலிக்கும் கதை. ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், பிறகு வேகம் பிடித்து இடைவேளை வரை நன்றாகவே போகிறது. திரும்பவும் கடைசியில் கொஞ்சம் வேகம் கம்மியாகி கிரேஸி மோகன் நாடகம் மாதிரி முடிகிறது.

சொந்த கேமராவை இன்னொருவரிடம் கொடுத்து படம் எடுங்க என்று சொல்லும் போது, அவர் அந்த கேமராவை சரியாக ஆப்பரேட் செய்கிறாரா என்று கவலையுடன் கேமராவை கொடுத்தவர் சிரிப்பார். இந்த படத்தில் கமல் அந்த மாதிரி தான். கதை, திரைக்கதை, வசனம் என்பதாலோ என்னவோ நடிக்கும் போது ஏனோ சில இடங்களில் அவருடைய யூஷுவல் எனர்ஜி மிஸ்ஸிங்.

கமலின் நண்பராக ரமேஷ் அரவிந்தும் அவர் மனைவியாக ஊர்வசியும் படம் முழுவதும் வீடியோ சாட்டில் வந்து கமலிடம் எப்போதும் துக்கமாக பேசுகிறார்கள். இவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் படம் முழுக்க சதா செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

சங்கீதா இரண்டு பிள்ளைக்கு தாயாக வரும் விவாகரத்து ஆன பெண். கமலை "செம கட்டை" என்று ஆண்களுக்கு நிகராக பேசுகிறார். ஏன் விவாகரத்து என்று காரணம் சொல்லவில்லை, ஆனால் அவர் பேசும் பேச்சுக்கு இரண்டு குழந்தைக்கு முன்பே ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கடைசியில் மாதவன் சங்கீதாவை ஏற்றுக்கொள்ளுவது கால் கட்டை விரல் ஜோக்கைவிட சிரிக்க வைக்கிறது.

படத்தில் அந்த காதல் கவிதையை எடுத்துவிட்டார்கள். அது கூட ஒரு விதத்தில் நல்லது தான் இல்லை தியேட்டர்காரர்களே அதை எடுத்திருப்பார்கள். படத்தில் ரிவர்ஸில் ஒரு பாடல் காட்சியில் சொல்லும் ஃபிளேஷ் பேக். இது தான் உண்மையான கவிதை. கடைசி காட்சியில் கே.எஸ்.ரவிகுமார் வந்து அச்சு பிச்சு என்று எதுவும் உளராமல் இருப்பது இன்னொரு ஆறுதல்.

முதல் பாதி ஏதோ ஃபர்ஸ்ட் கிளாஸ் படம் போலவும், இரண்டாம் பாகம் 2ஆம் கிளாஸ் டிராமா போலவும் இருப்பது தான் படத்தை பெரிய குறை. சில இடங்களில் கமலின் வசனம் குறிப்பாக சின்ன பசங்களிடம் மேதாவி தனமாக சரித்திரம் பேசுவதும், காவி உடையை பற்றி கமெண்ட் அடிப்பதும் என்று பல இடங்களில் கமல் தனியாக தெரிகிறார். குழந்தைகள் சில இடங்களில் அதிமேதாவித் தனமாக HIV பற்றி பேசுவதும் படத்துடன் ஒட்டாமல் இருக்கிறது.

மாதவன் எப்போதும் போல், கொடுத்த கூலிக்கு அதிகம் நடிக்காமல் ஒழுங்காக நடிக்கிறார். "சிட்டியில் இருக்கும் பெண்ணை சைட்டடித்துவிட்டு, வில்லேஜ் பெண்ணை கைப்பிடி" என்ற தத்துவங்களை சொல்லுகிறார்.

த்ரிஷா முன்பே சொந்த குரலில் பேசியிருந்தால், எப்போதோ வின்னைத் தாண்டியிருப்பார்.

சில இடங்களில் திரைக்கதை நன்றாக இருந்தாலும், கடைசியில் திரைக்கதையை எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும் போது கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் நினைவுக்கு வருகிறது. கமல் எண்ட்ரி கொடுக்கும் சீனில் இரண்டு ரவுடிகளை அடிப்பதும், குப்பை தொட்டியை காலால் சரி செய்வது. செல்போனை மேலே போட்டு பேண்ட் பேக்கட்டில் பிடிப்பதும், ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.

கப்பலில் நடந்தாலும், கேமரா இவர்களை எப்போதும் ஃபோகஸ் செய்வதால் எல்லா காட்சிகளும் ஏதோ நாடகத்தில் பின் தெரியும் செட் போல இருப்பது மாதிரி இருக்கிறது.

அந்த மலையாள குஞ்சனும், மஞ்சுவும் காமெடி செய்கிறேன் என்று பல இடங்களில் வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

படம் பார்த்துவிட்டு வந்த பிறகு யாராவது படம் எப்படி என்றால் உடனே நல்ல படம் என்று சொல்ல முடியாமல் கிளைமேக்ஸில் அவர்கள் தவிப்பதை போல நாமும் தவிக்கிறோம். நாம் அறிவுஜீவிகள் இல்லையே !

இட்லிவடை மார்க் : 6.1/10

ஜி..எஸ்.எல்.வி - எப்-6 ராக்கெட் முதலில் விண்ணை நோக்கி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறி கீழே விழும் காட்சி

27 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஜி..எஸ்.எல்.வி - எப்-6 ராக்கெட் முதலில் விண்ணை நோக்கி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறி கீழே விழும் காட்சி//

Picture itself tells the story!

no words needed

:)

சுபத்ரா said...

இ.வ.யின் விமர்சனத்துக்காகத் தான் காத்திருந்தோம். படத்தைக் கலைஞர் டிவியில் தான் பார்க்க வேண்டும் போல.

இட்லிவடை மார்க் : 6.1/10

இதென்ன கணக்கு 6 + 0.1?

சாமக்கோடங்கி said...

அடடா... எதுக்கும் ஒரு தடவை பாத்துடலாம்..

KrishnaDeverayar said...

Was waiting for your review anxiously. The GSLV pic was the ultimate. Both was a disaster.

IdlyVadai said...

//இதென்ன கணக்கு 6 + 0.1?//

0.1 - மும்பை மாமிக்கு :-)

பலே பாண்டியா/ said...

பதிவர்கள் உதவி செய்வார்களா???


http://selvanuran.blogspot.com/2010/12/blog-post.html

Anonymous said...

ராகெட் படமே கதை சொல்லிடுச்சு.
இந்த விமர்சனம் மிக அருமை
உங்களின் எழுத்தின் நடை புதுமையாகவும் ரசிக்கவும் நன்றாக உள்ளது.
இட்லி வடையின் சுவை எப்பொதும் மாறாது. நன்றி

seetha cookemane said...

இப்படி கண்ட குப்பையெல்லம் எழுதறதுக்க்கு பினாயக் செண் பத்தி எழுதினால் என்ன உங்களுக்கு?

ஸ்ரீதர் நாராயணன் said...

நேர்மையாக எழுதியிருக்கீங்க.

அந்த கிளைமேக்ஸ் மட்டும் இழுக்காம இருந்திருந்தா படம் பிரமாதம்னு சொல்லியிருக்கலாம்.

சுரேஷ் கண்ணன் said...

//அவர் பேசும் பேச்சுக்கு இரண்டு குழந்தைக்கு முன்பே ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.//

:-)

படத்தையும் பொருத்தமாக உபயோகித்ததையும் ரசித்தேன்.

sandoz said...

சுட்ட கவிதை போல!
http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

Tamilan said...

ஒரு சினிமாவோடு GSLV யை ஒப்பிட்டு இருக்கவேண்டாம் , இதுவும் ஒரு விபத்து தான்.

ரவிஷா said...

//படத்தில் அந்த காதல் கவிதையை எடுத்துவிட்டார்கள். அது கூட ஒரு விதத்தில் நல்லது தான் இல்லை தியேட்டர்காரர்களே அதை எடுத்திருப்பார்கள்// நான் இங்கு டல்லாஸில் படம் பார்த்தபோது, அந்தக் கவிதை எடிட் செய்யப்படவில்லை! நீங்கள் சொல்வது போல், கவிதையும் நன்றாக இல்லை, காட்சியும் நன்றாக இல்லை! Trisha-வின் குளோஸப் ரொம்பவே பயமுறுத்துகிறது படத்தில்!

Vadivelan said...

Pls. don't make fun from great Indian scientists, though the launch is flop........ because both of them had made lot of work........

R.Gopi said...

இட்லிவடை....

அருமையான படங்களுடன் கூடிய மிக சிறப்பான விமர்சனம்... மார்க் தான் ரொம்ப ஜாஸ்தியோ? “சுறா” அளவுக்கு தான் சொம்புக்கும் மார்க் போட்டு இருக்கணும், நீங்க...

நல்லா வச்சாங்களே எல்லாரும் சேர்ந்து சொம்புக்கு ஆப்பு...

அந்த த்ராபை கவிதையை தூக்கினது நல்லது... அது போல, திராபையான எல்லாத்தையும் படத்துல இருந்து தூக்கிட்டா, படத்தோட நீளம் டிரெய்லர் அளவு கூட இருக்காது...

R.Gopi said...

//சுபத்ரா said...
இ.வ.யின் விமர்சனத்துக்காகத் தான் காத்திருந்தோம். படத்தைக் கலைஞர் டிவியில் தான் பார்க்க வேண்டும் போல//

*********

சுபத்ரா...

உங்களுக்கு விஷயமே தெரியாதா? படத்தை தயாரித்த உதயநிதி, பெரும் செலவு செய்து சிங்கப்பூரில் ஆடியோ ரிலீஸ் செய்தார்..

அந்த ஆடியோ ரிலீஸ் ப்ரோக்ராம் ஹிட் ஆகல... ரிலீஸ் ஆன ஆடியோவும் ஃப்ளாப் ஆயிடுச்சு...

ஸோ, படம் வந்தா பத்து பைசா கூட தேறாது என்று முடிவு செய்து, விஜய் டி.வி.க்கு விற்று விட்டதாக செய்தி..

Anonymous said...

Sreedharan from Sharjah said,

It was a one sided review. We all know that you are a Kamal Fan. that is why 6.1??!!

Actually, it would have been very nice if you simply stopped with GSLV images which clearly tell about the film.

Try to be impartial.

By the by, why no review about Nandhalala which is far better than Kaman hassan , sorry Kamal Hassan!

சட்னி சாம்பார் said...

ராக்கெட் படமெல்லாம் போடுவீங்களாம், எதுக்குன்னு தைரியமா சொல்ல மாட்டீங்களாம், ஆனா நீங்க அறிவுஜீவி இல்லையாம். என்ன காமெடி இது!!

அப்புறம் அந்த சங்கீதா மேட்டர். உமக்குத்தான் வயசாயிடுச்சில்ல! சங்கூதற வயசுல சங்கீதா பத்தி எதுக்கு விமர்சனம்?!? ரெண்டு கொயந்தைங்கோ பொர்ந்தப்பாலும் டிவோர்சு பண்ணிட்டான் படுபாவி. அதுக்கப்புறமும் கல்லானாலே கணவன், புல்லானலே புருஷன்னு பூஜை பண்ணனுமா?!? டிவோர்ஸ் ஆன கோபத்திலும் விரக்தியிலும் அப்படி ஆகி இருக்கலாம்ல, அவளும் மனுஷிதானே!

பார்லிமெண்ட்ல இல்ல, முதல்ல உங்க மனசுல பெண்களுக்கு 33% ஆவது மரியாதை இருக்கணும்! உங்க மனசுல இருக்கோ இல்லையோ பதிவுலகில் இருக்கு! பாருங்க ரெண்டு பெண்மணிகள் மன்மதன் அம்பு பத்தி சொல்ற விமர்சனம்! அதுல நீங்க கேக்குற இன்னொரு கேள்விக்கும் பதில் இருக்கு! (ஏன் மாதவன் சங்கீதாவுடன் சேர்ந்தார்?)
http://honeylaksh.blogspot.com/2010/12/blog-post_26.html

HONESTY BECOMES LUXURY.. ஆம் பொய்யர்கள் நிறைந்த உலகில் உண்மை விலை உயர்ந்ததாகிவிட்டது.. இதுதான் மெசேஜ்.. இரண்டு உண்மையாளர்கள்., (ஒத்த குணமுடையவர்கள்.,) மட்டுமே ஒத்துப் போக முடியும்.. பொய்யோடு பொய்யும்., மெய்யோடு மெய்யும்

சட்னி சாம்பார் said...

இன்னொரு பெண்பதிவர் விமர்சனம்!
http://vidyasubramaniam.blogspot.com/2010/12/blog-post_24.html

அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் சர்ச்சைகள் வருத்தப் பட வைக்கிறது. ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை இது நிச்சயம் பாதிக்கும்.

தமிழ் சினிமாவின் பார்முலாவை அனாயாசமாக மாற்றி இருக்கிறார் கமல். ஒரு சிம்பிளான கதையை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கிறார். படத்திற்கு பலம், அவரது திரைக்கதையும் வசனமும்.

கடைசி அரைமணி நேரத்தில் எப்பேர்ப் பட்ட சிடு மூஞ்சியும் சிரிக்கும் என்பது உறுதி.

மொத்தத்தில் மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டாக எல்லா கவலையும் (வெங்காயம் உட்பட) மறந்து விட்டு குழந்தைகளோடு அமர்ந்து பார்க்கலாம்

கவிதா said...

சங்கீதாவோட நடிப்பு ரொம்ப அருமை. பொண்ணுங்க கொஞ்சம் பேசுன பொத்துக்கிட்டு வந்துருமே ஒங்களுக்கு.
தமிழ் நாட்டுல சுதந்திரமா படம் எடுக்க முடியல. கவிதை நல்ல இல்ல இந்த 'ஆண்கள் ' சொல்றங்கோ. எப்படி உங்களுக்கு புடிக்கும்? கரை படிஞ்ச பல்லும், நாற்றம் அடிக்கும் வாயும், பலூன் மாதிரி தொப்பையும், வலுவிழந்த தோள்களும், ஓட்டட குச்சி மாதிரி கையும், சோடா புட்டியும், சந்தேக புத்தியும் உள்ள உங்களுக்கு எப்படி புடிக்கும்? தமிழ் நாட்டில தகுதி வாய்ந்த ஆண்கள் இல்லை. பணம் இருந்த போதும் நினைக்கறாங்க. பொண்ணுங்கள இன்னும் அடிமையததன் பாக்குறாங்க. படிச்சவன், படிக்காதவன், ப்ளாக் எலுதறவன்னு வித்தியாசமே இல்ல. எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க!
திருந்தங்கடா!

venkki said...

கமலோட எழுத்துப் பணியை மட்டுமே பக்கம் பக்கமா எழுதி விமர்சிக்கலாம், சிலாகிக்கலாம். டைட்டிலில் வரும் பாடலில் நட்பைப் பற்றி இப்படி எழுதுகிறார்.

சேதாரம் இல்லாமல்
செய்யும் புன் நகைப்பூட்டும் நட்பு
யாரோடு செய்தாலும் சேராத
சுகம் சேர்க்கும் நட்பு....

அம்பு சந்தேகப்புத்தி மதனை காதலனாக இருந்தும் கூட "வேன்ல இன்டர்கனெக்டிங் டோரா? உங்க பேன்ட்ல ஸிப்பும், என் பிளவுஸ்ல பட்டனும் எதுக்கோ அதே காரணத்துக்குத்தான். ஃபார் கன்வீனியன்ஸ். எல்லாருக்கும் தொறந்து காட்டுறதுக்கு இல்ல. " என நாக்கை புடுங்கிக்கொள்ளுமாறு கேட்கும் போது அம்புவின் பாத்திரம் கண் முன்னே மலையளவு உயர்ந்து நிற்கிறது.

பெரும்பாலான வலைப்பதிவர்களின் முகத்திரை மன்மதன் அம்பு விமர்சனம் மூலம் கிழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. கமல் படம் என்றாலே சும்மா பேருக்கு புகழ்ந்து விட்டு அப்படியே ஆயிரம் நொட்டைகளை ஏப்பம் விடுவது போல எழுதிவிட்டு செல்லும் செம்மறியாட்டு கூட்டம். விமர்சனக் கலை என்பது ஏதோ பக்கத்தை நிரப்ப அல்ல. அங்கே கமல் ஒவ்வொரு ப்ரேமிலும் எத்தனை மணி நேர உழைப்பில் செதுக்குகிறார். அதில் ஒரு சதவீத பொறுப்புணர்வு கூட இந்த வலைப்பதிவர்களுக்கு இல்லை.

Anonymous said...

Mokka Padam.. Please carry Zandu balm while u enter...

Anonymous said...

//படத்தில் ரிவர்ஸில் ஒரு பாடல் காட்சியில் சொல்லும் ஃபிளேஷ் பேக். இது தான் உண்மையான கவிதை.//

http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0

எ.கொ.சரவணன் !!

பாரதசாரி said...

வேறொரு தளத்தில் வந்த விபத்து+கமல்+மாதவன்+கமலின் காதலி மாதவனை மணப்பது எனக்கு அன்பே சிவம் நினைவுக்கு வந்து.அதற்கு பழி வாங்கத்தான் இதில் மாதவனின் காதலியை கமல் கரம் பிடிக்கிறாரோ?

Nallavan said...

இட்லி வடையில் ரோபோ விமர்சனம் வந்ததா? வந்தது என்றால் லிங்க் தரவும்.

சுந்தர் said...

" நீங்கள் வாழ்க்கையில் எப்போதும் தோல்வி அடையவில்லை என்றால்
நீங்கள் புதிதாக எதையும் முயற்சி செய்ய வில்லை என்று பொருள் "
இது ஐன்ஸ்டீன் சொன்னது

அது போல புதியதாக முயற்சி செய்யும் கமலுக்கு தோல்விகள் வரத்தான் செய்யும்

ஆனால் இது ஒன்றும் தோல்வி படமும் அல்ல

நாலு பாடல் நாலு சண்டை ஒரு காதல் ஒரு தாதா ஒரு sexy பாட்டு
என்ற படங்களுக்கு முன்னால் இது ஒரு தனிக்கதை

Erode Nagaraj... said...

"பிரபல தொவிலறிதர் ம்மடிகை நிஷாவை ம..க்க நெருப்பு..." maddy rocks in MMA :) :)

நல்லதொரு காதல் கதையாக வந்திருக்கக் கூடும்...

என்ன செய்வது, கமலஹாசனின் முதல் மனைவிகள் எல்லா படங்களிலும் இறந்து விடுகிறார்கள். பதிலுக்கு ரேவதியோ, ஜோதிகாவோ, த்ரிஷாவோ காதலற்ற மனதின் வெற்றிடத்தை நிரப்பச் சொல்ல, அதற்குள் நிறைய "ரீல்கள்" ஆகிவிடுவதால், படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில், சுபம் போட்டு விடுகிறார்கள்.

(நிரப்பச்! இச் இல்லாத கமல் விமர்சனம் ஏது!!)

முற்றி முதிர்ந்த காதல் பாதுகாப்பாகத் தெரிவது அனுபவங்களால் மட்டும் அல்ல. பிரிவதன் அவஸ்யங்களைப் போலவே, அதை விடவும் பிரிந்தால் ஏற்படும் கஷ்டங்களை உணர்ந்த ஜாக்ரதையோ என்று தோன்றுகிறது..