பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 03, 2010

யாருக்கும் வெட்கமில்லை...- ஞாநி

ரத்தம் கொதித்தது - நவம்பர் 18ஆம் தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்.

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தாம் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தம் குடும்பமே பேரன், பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு... எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதிமாறன். பக்கத்தில் அழகிரி.


இவர்களின் சண்டையினால் தானே மதுரை தினகரன் அலு வலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்கள் செத்தார்கள். தீ வைத்தவர்கள் எல்லாம் கல்யாணப் பந்தலில் விருந்தினர்களாக...

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லோரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப் படுத்தப்பட்ட நீரா ராடியா ஃபோன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் த்ரிஷா வரை அத்தனை நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை, உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதி மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை. இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள் தான் என்ன?

1. ‘கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ). இனிமேல் தானும் ஸ்டாலினும் தான் கட்சியை நடத் திச் செல்லப் போகிறோம். காங்கிர ஸார் என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப் பாட்டில் தான் இருப்பார்’ என் றெல்லாம் தயாநிதிமாறன் தில்லியில் சொல்வதாக நீரா ராடியா, ஆ.ராசாவிடம் சொல்கிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என காங்கிரஸார் மனத்தில் விதைத்தது யாரென்று தமக்குத் தெரியும் என ராசா சொன்னதுக்குதான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட் டேன். அவர் தலைவரிடம் போய்ச் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்னை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் ஃபோனில் சொல்ல வைக்கும்படி ராசா, நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்கிறார். பாலுதான் பிரச்னை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தம்மைத்தான் தி.மு.க சார்பில் தில்லியில் காங்கிரஸாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பி இருப்பதாக தயாநிதி மாறன் தில்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்வதாகவும் பொய்களைப் பரப்புவதாகவும் கனிமொழி, நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.வி.காரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லோரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தம்மிடம் சி.என்.என்.ஐ.பி.என். சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப் போவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாகக் கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டி யதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தமக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்குச் சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தம்மிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்ட தாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமக்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்கப்போகிறேன். அவருக்கு அனில் அம்பானியைத் துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா, நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகட்டிவாக எழுதினால் உடனே விளம் பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேரா சைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வி.யின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் - தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தாம் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தாம் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இரு வருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குனர் வீர் சிங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சிங்வி, தாம் தொடர்ந்து சோனி யாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாகச் சொல்கிறார். அமைச்சர் இலாக்கா பங்கீட்டுப் பிரச்னை காங்கிரஸ்-தி.மு.க பிரச்னை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தம் சார்பில் என்று ஒரே ஒருவரைத் தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி, குலாம் நபி ஆசாதை அடிக்கடி கூப்பிட்டு நான் தான் அதிகாரபூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்கப் பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம்? தயாநிதி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும், செல்வியும் நிர்ப் பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ் நாட்டின் மானத்தை தில்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது...

மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில் லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படி யாவது காரியத்தை முடித்துவிடவேண்டு மென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை, எல்லாம் தம் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை களையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந் தெடுப்பது யார்? பிரதமரா? தொழிலதி பர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன் மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தமக்கு வேண்டுமென்று அலைகிறார்கள்? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம் பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியா காரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்கத் தெருத் தெருவாக இனி வருவார்கள் ?

பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை, கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

நன்றி: கல்கி

39 Comments:

ஹரன்பிரசன்னா said...

தமிழ்நாட்டில் இதைப் பற்றிப் பேச ஒன்றிரண்டு பத்திரிகையாளர்களுக்காவது தைரியம் உள்ளதே! ஞாநிக்கு நன்றி.

ஜீ... said...

ஆமா, தயாளு அம்மாள் 600 கோடியை வைத்து என்ன செய்வார்? கருணாநிதிக்கு புத்தி பேதலித்துவிட்டது, அழகிரி கிரிமினல்! சூப்பர்! :-)

ரோமிங் ராமன் said...

////கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது///
யோவ!! யாருப்பா அது?? தங்களை தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் (தமிழ் என்பதை தம /தாம் என்று படிப்பவர்கள் பற்றிக்கவலை இல்லை!!)
அர்ப்பணித்துக் கொண்டு இருப்பவர்களைப் பற்றி எழுதுவது?நாங்கள் எப்பவும் தமிழில் தப்பில்லாமல்
"கண்கள் பனித்தது" (பனித்தன அல்ல!!)
என்றே எழுதுவோம்! ஏன்னா, நாங்கள் சுத்த தமிழ் அறிஞர்கள்!!

ஆதி மனிதன் said...

யாருக்கும் வெட்கமில்லை. அரசியல் வியாதிகள், தொழில் அதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் கடைசியாக ஓட்டுபோடும் வாக்காளர்கள்.

புரட்சித்தலைவன் said...

தமிழ்நாட்டில் இதைப் பற்றிப் பேச ஒன்றிரண்டு பத்திரிகையாளர்களுக்காவது தைரியம் உள்ளதே! ஞாநிக்கு நன்றி.//


கல்கி, இட்லி வடைக்கும் நன்றி

புரட்சித்தலைவன் said...

//கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile)//

சம்பந்தம் இல்லாம உளறி கொட்டும் போதே அவர பத்தி தெரியும்.

அல்ரெடி தெரிஞ்ச விஷயம் இப்போ conform ஆயிடுச்சி

புரட்சித்தலைவன் said...

ஆங்கில பத்திரிக்கைகளில் கூட இவ்வளவு தெளிவாக எழுதபடவில்லை.நன்றி ஞாநி
வட இந்திய ஆங்கில பத்திரிக்கைகளிலும் வர வேண்டிய செய்தி.
எல்லா மக்களையும் சென்றடயும்.

யதிராஜ சம்பத் குமார் said...

இந்த வார பூச்செண்டு ஞாநிக்கு!! சபாஷ்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

ஏன்னா நாமெல்லாம் இ.வா...
ஐயோ நான் தப்பா ஏதும் சொல்லலீங்க...

ந்திய வாக்காளன் அப்படீன்னுதான் சொன்னேன்.

புரட்சித்தலைவன் said...

இந்த வார “மலர் வளையம்” மு.க குடும்பத்துக்கு. ஞாநிக்கு!! சபாஷ்

Harish said...

ஞாநி எழுதிய உருப்படியான கட்டுரை இது. இம்முறையாவது சரியான கருத்தை எழுதினாரே என்று என் கண்கள் பனித்தது!!!

Anonymous said...

ஞாநி அவர்கள் எழுத்தில வழக்கமாக இருக்கும காரம இதில இல்லை.
இது மனம நொந்ததாலா அல்லது ஊழல மற்றும அராஜகத்தின வீர்ய்த்தை விளக்க வார்த்தை இல்லாததாலா ? இனி 4G ஊழலைப பற்றி எழுத வேண்டியிருக்கும். தயவு செய்து வார்த்தைகளை இப்பொழுதே யோசித்து வைத்துக கொள்ளவும்.

Damodar said...

Yenakku ennavo Family photo pathu..yen kolluperan kalathil kooda kalaignar kudumbathukku sevai seyyanum pola...

Appadiye.. aduthatha WIMAX scam varudhu..varudhu..2G yellam summa.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

போட்டோவில் அண்ணாதுரை மட்டும் அனாதையாய்....

தமிழகத்தில்தான் அவர் அனாதை என்றால் போட்டோவிலுமா?

நாஞ்சில் பிரதாப்™ said...

இந்தவார ஷொட்டு. புச்செண்டு எல்லாம் ஞானிக்கே...
வேற ஒருபயலுக்கு இதைகேட்க தைரியம் கிடையாது...எல்லாம் சோத்துகட்சி மீடியாக்கள்.

Don said...

People in TN didn't react much as they're used to it. For decades they've known corruption exists at every level in a govt organization. They've seen govt officers becoming millionaires in no time. But my question is why this focus on DMK family alone??. What about your father or mother who works in govt office, did they ever refuse to accept bribe?. My point is everyone wants to get rich and they don't mind looting the govt and people.
The problem isn't just in DMK, it is in the minds of every people.
It's a collective breakdown of ethics. Pranab foolishly answers BJP ministers also got bribes as exposed by Tehelka. DMK was intelligent enough so far, it didn't take that route. I mean they didn't say - even JJ looted so much, so what's wrong in it. And MK's release of property valuation at this juncture, just means that they've equiped themselves for any form of investigations.
The core theme- Mannan evvali, Makkal avvali, the vice versa is also true.
My anger is not towards the people who voted them foolishly, not even towards those who loot the nation but towards the so called CBI, which became a partner in crime instead of exposing and taking stringent action against such people.
CBI is no better than a pimp.

Anonymous said...

http://dinamani.com/edition/photoonStory.aspx?SectionName=photoon&artid=340266&SectionID=220&MainSectionID=220&SEO=&Title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

srividya said...

thanks gnani......

தமிழ்க் குறும்பன் said...

தமிழர்களே தமிழர்களே!

நீங்கள் என்னை நதியினிலே தள்ளிவிட்டாலும்,
நான் மணல் கொள்ளையடித்து கோடிகள் காண்பேன். (நம்ம ஊரு நதிகளிலே ஏதய்யா தண்ணீர்?)

நீங்கள் என்னை கடலிலே தள்ளிவிட்டாலும் உப்பு ஊழல செய்து கோடிகள் காண்பேன்.

நீங்கள் என்னை காட்டுக்கே துரத்திவிட்டாலும், சந்தனக் கடத்தல் செய்து கோடிகள் காண்பேன்.

நீங்கள் என்னை நாடு கடத்திவிட்டாலும் தீவுகள் வாங்கிவிடுவேன்.

நான் ஒரு ஏழை. என்னிடம் இருப்பதெல்லாம் இந்த மஞ்சத் துண்டும், தமிழ் (?) பேசும் இந்த வாயும்தான்!

Anonymous said...

///என் றெல்லாம் தயாநிதிமாறன் தில்லியில் சொல்வதாக நீரா ராடியா, ஆ.ராசாவிடம் சொல்கிறார்.///

////அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.///

///ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை, கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.///

எல்லாம் கற்பனையான பிதற்றல். ஏஜண்டுகள் மற்றும் மீடியாக்கள் சொல்லும் மிகைபடித்தபட்ட பொய்கள்.அப்படியானால் உர மானியம் ,பெட்ரோல் மானியம், காஸ் சிலிண்டர் மானியம், போக்குவரத்துக்கு மானியம், சென்னை தண்ணீருக்கான ( வீராணம்) தண்ட செலவு , விபத்து நடந்தால் ( இயற்கை அல்லது செயற்கை ) அதற்கு நஷ்ட ஈடு தருவது அனைத்தும் மக்களின் வரிப்பணம். இப்போதும் தொடன்ர்து கொண்டிருக்கும் அதை முதலில் நிறுத்தினால் பல இலட்சம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும். கற்பனையான பணத்தை மிகை படுத்தும் மீடியாக்கள் அதை ஏன் எழுதுவதில்லை.

டில்லியில் ஒரு ரூபாய்க்கு விற்கும் நாளேடுகள் இங்கு நான்கு ருபாய்க்கு விற்பதால் கிடைக்கும் பணம் ஆகிய அனைத்தும் கொள்ளைதான்.

3G என்னும் புது லக்ஸ்சுரி தொழில் நுட்பம் மகளிடம் எடுபட போவதில்லை. எனவே பலமடங்கு ஏலத்துக்கு எடுத்த முட்டாள் கம்பனிகள் பின்னர் அரசிடம் கெஞ்சி கூத்தாடி சலுகைகள் பெரும் அப்போது தான் உண்மையான 3G இன் பண மதிப்பு தெரியும்.

மக்கள் மிஞ்சி மிஞ்சி போனால் போன் பேசுவதை தவிர SMS மற்றும் கேமிர வை தாண்டி போகபோவதில்லை. அதற்கு 3G தேவையில்லை. இப்போது வரும் புதிய தேவைகள் கிராமத்து மக்கள் தான் அவர்களுக்கு 3G தேவையில்லை.

இந்த உண்மை தெரியும் போது ( ஒரு வருடம் கழித்து) இப்போதைய மேதாவிகள் முகத்தில் கறியை பூசி கொள்வார்கள்.

மற்றும் மீடிய மறைக்கும் மற்றொரு உண்மை. பல ஏலம் எடுத்த கம்பனிகள் இன்னமும் தங்கள் சேவையை தொடங்க வில்லை ( தொடங்க முடியவில்லை) எனவே காசு சம்பாதிக்க வில்லை. எனவே அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்பதும் உண்மை இல்லை.

உள்ளபடியே பார்த்தால் தொடங்காத சேவைக்கு அவர்கள் அரசுக்கு நுழைவு கட்டணம் கட்டி உள்ளார்கள் . அந்த பணம் அரசுக்கு லாபம் தான். தொடங்காத சேவைகளை அரசு கான்சல் செய்து விட்டு மறு ஏலம் விட்டால் அதன் மதிப்பு தெரிந்துவிடும்.

எனவே பத்திரிகை விட்டு பத்திரிகை மாறும் பச்சோந்தி மேதவிகள் உண்மையை எழுதவேண்டும்.
ஏஜண்டுகள் பீத்திகொள்ளும் பொய்யான மிகை படுத்தப்பட்ட பேச்சுகளை ( காசு பண்ண ) பொய்களை உண்மை என்று நம்ப முடியாது.

நான் லஞ்சத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் இதில் லஞ்ச குற்றச்சாட்டு இல்லை. இலஞ்ச பணம் இல்லை. அரசு கொள்கைகளினால் அரசுக்கு கிடைக்காமல் போயிருக்க கூடிய ( மிகை படுத்தப்பட்ட) பணம் தான். இலஞ்சம் அல்ல. இதை மீடியாக்கள் விளக்கமாக சொல்லவில்லை.

-----கொஞ்சம் சிந்திக்கும் நடு நிலையாளன்.

RedChipRobot said...

//கொஞ்சம் சிந்திக்கும் நடு நிலையாளன்.//

Are you really an idiot or posing as an idiot?

ரூம் போட்டு யோசிப்பவர் said...

// -----கொஞ்சம் சிந்திக்கும் நடு நிலையாளன்.//

அதிகமாக சிந்திப்பது நல்லது. கொஞ்சம் (மட்டும்) சிந்தித்தால் இதுதான் நிலைமை. நீங்க கட்டியிருக்கும் கோவணம் களவு போகும்வரை எல்லோரையும் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்க!

Anonymous said...

Agree with Nadu niLaiyaaLan.

Anonymous said...

Spectrum: Real Background
1. As Per CAG report, it’s not a Scam, it’s a revenue loss to Govt and the Value mentioned is a Paper Value and not a real accrual one.
2. Telecom Ministry followed the TRI regulatory norms (No Auction for 2G) and the same procedure followed from 1998/99 by various Telecom Ministers.
3. 2G is basic Voice feature and to be a one of basic needs for millions of people of India and it’s not like 3G which is a luxury Service and to be priced at action model.
4. For argument sake, If 2G is auctioned and given to Operators at much higher prices / market price, they’ll back charge the cost from the Users of mobile services. Think of the mobile call rates prevailed at the time of initial stages of its usage in India and compare it with existing rates. Also when compare the Mobile Tariff of India with US & UK or Other Countries, it’ll be very less.
5. Due to the low pricing of the spectrum, the real beneficiaries are Citizens of India, who uses 2G services for basic voice calls. They pay less cost for minute usage when compared to other Countries. Because of low rates, the user volume and tele-density is increased a lot.
6. Those who oppose this are those who have mindset that Middle-Class/Poor/rural/underprivileged people of India SHOULD NOT use Mobile Phones. In case the 2G Spectrum was auctioned at higher Prices, then the Mobile Cost might be 10 Rs per Minute. So the real beneficiaries are Middle-Class/Poor/rural/underprivileged people of India.
7. In Ration Shops Rice is given for 1Re, you can’t say market price for Rice is 11 Rs and hence there’s a loss of 10 Rs for each Kg and calculate the overall loss for Tones of Rice distributed thru Ration Shops (If you calculate it’ll be in lacks of Cores). Rice distribution is done thru Ration Shops for the benefit of millions of people who can’t afford to buy at market price. In the same manner, 2G Service is one of basic needs in this modern world of communication. If it’s priced at market value, then it can’t be afforded/useable by millions of people in India. How many of you ready to buy LPG Gas Cylinder, Petrol and Diesel at market price?, if you expect some form of subside from Govt for these products, it’s all so a revenue loss for Government.
8. 2G in the year 2007 was at declining stage of Product / Technology life cycle. The next generation, 3G was very much at the initial stage of discussion. No fool will invest huge money in form of auction/market price in a Near-Decline technology. They can buy only at nominal price and this was actually happened.
9. For example, If Microsoft is about to launch New Software with advanced features in next couple of months, will you buy it’s Old version at the price of New Version?. You may not even buy old version at existing price, you will be ready to buy it ONLY if some Price reduction/discount is given on the Old Version (Like, Sale Offers given for Products)
10. There might be some deviations in giving licenses to operators and it’s common in every department of Government.
11. The Whole issue is just blown out of proportion for vested elements and it’s a witch hunting on A Raja.

Anonymous said...

Spectrum: Real Background
1. As Per CAG report, it’s not a Scam, it’s a revenue loss to Govt and the Value mentioned is a Paper Value and not a real accrual one.
2. Telecom Ministry followed the TRI regulatory norms (No Auction for 2G) and the same procedure followed from 1998/99 by various Telecom Ministers.
3. 2G is basic Voice feature and to be a one of basic needs for millions of people of India and it’s not like 3G which is a luxury Service and to be priced at action model.
4. For argument sake, If 2G is auctioned and given to Operators at much higher prices / market price, they’ll back charge the cost from the Users of mobile services. Think of the mobile call rates prevailed at the time of initial stages of its usage in India and compare it with existing rates. Also when compare the Mobile Tariff of India with US & UK or Other Countries, it’ll be very less.
5. Due to the low pricing of the spectrum, the real beneficiaries are Citizens of India, who uses 2G services for basic voice calls. They pay less cost for minute usage when compared to other Countries. Because of low rates, the user volume and tele-density is increased a lot.
6. Those who oppose this are those who have mindset that Middle-Class/Poor/rural/underprivileged people of India SHOULD NOT use Mobile Phones. In case the 2G Spectrum was auctioned at higher Prices, then the Mobile Cost might be 10 Rs per Minute. So the real beneficiaries are Middle-Class/Poor/rural/underprivileged people of India.

Anonymous said...

7. In Ration Shops Rice is given for 1Re, you can’t say market price for Rice is 11 Rs and hence there’s a loss of 10 Rs for each Kg and calculate the overall loss for Tones of Rice distributed thru Ration Shops (If you calculate it’ll be in lacks of Cores). Rice distribution is done thru Ration Shops for the benefit of millions of people who can’t afford to buy at market price. In the same manner, 2G Service is one of basic needs in this modern world of communication. If it’s priced at market value, then it can’t be afforded/useable by millions of people in India. How many of you ready to buy LPG Gas Cylinder, Petrol and Diesel at market price?, if you expect some form of subside from Govt for these products, it’s all so a revenue loss for Government.
8. 2G in the year 2007 was at declining stage of Product / Technology life cycle. The next generation, 3G was very much at the initial stage of discussion. No fool will invest huge money in form of auction/market price in a Near-Decline technology. They can buy only at nominal price and this was actually happened.
9. For example, If Microsoft is about to launch New Software with advanced features in next couple of months, will you buy it’s Old version at the price of New Version?. You may not even buy old version at existing price, you will be ready to buy it ONLY if some Price reduction/discount is given on the Old Version (Like, Sale Offers given for Products)
10. There might be some deviations in giving licenses to operators and it’s common in every department of Government.
11. The Whole issue is just blown out of proportion for vested elements and it’s a witch hunting on A Raja.

அமுதப்ரியன் said...

//கொஞ்சம் சிந்திக்கும் நடு நிலையாளன்.//

நீங்க சொல்றது ஓகே நாங்க ஒத்துக்குறோம். ஆனா ஒரு சின்ன கணக்கு சொல்றேன்.

ஒரு கம்பேனியில் ஒரு பொருளின் விலை - 10 ரூபாய். அதை 10 ரூபாய்க்கு விற்க வேண்டும். ஆனால் விற்பவர் அதை 2 ரூபாய்க்கு விற்கிறார். 2 ரூபாயை தன் பாக்கெட்டில் நிரப்பிக் கொள்கிறார். இப்போது கம்பேனிக்கு 6 ரூபாய் நஷ்டம். வாங்கியவனுக்கு 6 ரூபாய் லாபம். வாங்கிக் கொடுத்தவனுக்கு 2 ரூபாய் லாபம். மொத்தத்தில் மக்களுக்கு நாமம்.

இப்போது புரியுதா?
விளக்கம்:
கம்பேனி: இந்தியா
பொருள்: 2ஜி அலைக்கற்றை
வாங்கியவன்: பல பேர்
வாங்கி கொடுத்தவன்: ரா..

:-)

Anonymous said...

Dear Nadunilaiyalan and anony,
Do you think M.K and his gang are foolish enough to make it look like a scam? Or do you expect them to get suitcases under the table?. Do you expect A.Raja to loot the govt coffers in person with a kerchief around his mouth?. You people must stop watching tamil cinemas.
Wake up to the reality of the modernized theft. Sure no one can file a criminal case against Raja, that's how a planned loot is supposed to be. If people can file criminal case at Raja, why would he even attempt this?. The crime here is fooling the system.
This sort of scam is usual at other govt offices - tender rigging, but none was done at this scale.
You said there is no bribe involved here. How do u know this?
Can you get a ration card/birth certificate without bribe? How can these companies get spectrum at 2001 prices? Use your common sense.
And you're talking about 3G, hope you know it's a "2G" spectrum scam.
Please read well before calling yourself a Nadunilaiyallan.
Anonymous,all your questions have been answered earlier. Please ignore this issue, it's too complex for your tiny brain.

Anonymous said...

//ஆமா, தயாளு அம்மாள் 600 கோடியை வைத்து என்ன செய்வார்?//

பேர பசன்க படம் எடுக்க குடுப்பார இருக்கும் . ஞாநி சூப்பர் . -- vasu

♥Manny♥ said...

Even CBI's website was hacked on Friday night by Pakistan hackers...Cant rely on CBI also :-(

Anonymous said...

கோபாலபுரம் வீட்டை 45000 ரூபாய்க்கு வாங்கினாராம். அதே விலைக்கு வாங்க ரெடி. ராசா எற்பாடு பண்ணுவாரா?-- ஜம்பஜார் ஜக்கு

Anonymous said...

ஞாநி அவர்களுக்கு

தமிழ் நாட்டில் கூட முதுகெலும்புள்ள சூடு சொரணையுள்ள பத்திரிகையாளர்கள் உங்களைப் போல ஒரு சிலரும் கல்கி, துக்ளக், தினமணி (ஓரளவுக்கு) போன்ற பத்திரிகைகளும் இருப்பது நம் ஜனநாயகத்தின் அந்திமகாலத்திலும் கூட பெருத்த ஆசுவாசம் அளிக்கின்றது. எமர்ஜென்ஸியின் பொழுது கூட அகில இந்திய அளவில் ஏற்பட்ட ஒரு விழிப்புணர்வு தமிழ் நாட்டில் ஏற்பட்டதில்லை. உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள அதே ஆத்திரமும் கோபவும் பொது மக்களிடம் ஏற்பட வேண்டும். அதை ஏற்படுத்த தமிழ் நாட்டின் எதிர்க்கட்சிகள் கூட முழு முனைப்புடன் செயல்படாததும் பலத்த ஏமாற்றமே. ஜெயலலிதாவும், கம்னியுஸ்டுகளும் தெருக்களுக்கு வந்து அல்லவா இந்த விஷயத்தில் போராட வேண்டும், இத்தனை ஆயிரம் கோடி கொள்ளை போனது மக்களின் சொந்தப் பணம் என்ற உண்மையை அல்லவா அவர்கள் சொல்லிப் போராடியிருக்க வேண்டும். உங்களைப் போன்ற ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டுமே தனித்துப் போராட நேர்ந்துள்ளது. கோபிகிருஷ்ணனுக்கு பூச்செண்டு கொடுக்கும் நீங்கள் சுப்ரமணியன் சுவாமியை மறப்பதும் மறைப்பதும் ஏனோ? உங்களைப் போன்ற் பத்திரிகையாளர்கள் மக்களிடம் இந்த கொள்ளையை எடுத்துச் சொல்வது போலவே நீதிமனறங்களில் போராட சுப்ரமணியன் சுவாமி போன்ற ஒரு சிலரே இன்று இருக்கிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் ஜெ பி யின் தலைமையில் திரண்ட ஒட்டு மொத்த ஒரு எழுச்சி போல இன்று இந்தக் கொள்ளைக்காரர்களை எதிர்த்து உருவாக வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களிடம் இந்த முறை கூடுதலாக ஓட்டுப் போடக் காசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மன நிலையே நிலவுகிறது. மக்கள் இப்படி இருந்தால் அவர்களை ஆள்பவர்கள் எப்படி இருப்பார்கள்? இதில் யாரை நொந்து கொள்வது? தொடர்ந்து இந்த விஷயம் குறித்தான உண்மைகளை உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து மேடைகளிலும் மக்களுக்கு உரக்கச் சொல்லுங்கள்.

பாராட்டுக்களுடன்
ச.திருமலை

Anonymous said...

இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும், ஞாநியின் குமுறலில் நியாயம் இருக்கிறது என்று நம்பும் அனைவரும் ஊழலுக்கு எதிரான இயக்கமான டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணனின் லோக் சத்தா இணையதளத்தின் பெட்டிஷனிலும் கையெழுத்துப் போட்டு மன்மோகனுக்கு உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும், மேலும் ஒவ்வொருவரும் மன்மோகன் சிங்கை வற்புறுத்தி ஒரு இமெயிலும் உடனே அனுப்பவும். மக்களாகிய நாம் சகிக்க முடியாத கோபத்தில் இருக்கிறோம் என்ற செய்தியை உரக்க பிரதமருக்குச் சொல்ல வேண்டியது மிக மிக அவசியம். ஒவ்வொருவரும் பெட்டிஷனில் கையெழுத்துப் போடுவதுடன் ஒரு இமெயிலும் உடன் அனுப்பவும். நம் குரலை உரக்கச் சொல்வோம். அது டெல்லிக்குக் கேட்கட்டும்

Dear Rajan Sadagopan,

In the light of the Rs. 176,000 crores telecom spectrum scam, we all need to raise our voice for action. We encourage you to sign the online petition at www.ipetitions.com/petition/KillCorruption

Please visit www.KillCorruption.org

Also, please write to the Prime Minister (manmohan@sansad.nic.in, pmosb@nic.in) and demand concrete steps to punish the guilty parties and affect institutional changes as outlined below:

Anonymous said...

ஏன் இப்படி எல்லாரும் அங்கலாய்க்கிறீங்களோ?
சிவில் ஏவியேஷன் கனவு போச்சு; வோல்டாஸ் மனை கனவு போச்சு.
அவங்களைப் பத்தி யாராவது நெனைச்சிப் பாத்திங்களா? - ஜா.ஜக்கு

Anonymous said...

"தமிழனை கொள்ளை யடிக்கும் தமிழர்கள்", என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதலாம் போல ஈரோடு ,ராமசாமி தொடங்கி கனிமொழி வரை, இவ்வளவு தானா? இல்லை தமிழ் வைத்து இன்னும் எவ்வளவு பேர் பிழைப்பு நடத்த போறீங்க? .... அந்த தமிழ் கடவுள் முருகன் தான் தமிழனையும் ,தமிழையும் காக்கணும் ............,கந்தா, கடம்பா,கதிரவேல ,கார்த்திகேயா .....

sami said...

"தமிழனை கொள்ளை யடிக்கும் தமிழர்கள்", என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதலாம் போல ஈரோடு ,ராமசாமி தொடங்கி கனிமொழி வரை, இவ்வளவு தானா இல்லை தமிழ் வைத்து இன்னும் எவ்வளவு பேர் பிழைப்பு நடத்த போறீங்க .... அந்த தமிழ் கடவுள் முருகன் தான் தமிழனையும் ,தமிழையும் காக்கணும் ............,கந்தா, கடம்பா,கதிரவேல ,கார்த்திகேயா .....

sami said...

"தமிழனை கொள்ளை யடிக்கும் தமிழர்கள்", என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதலாம் போல ஈரோடு ,ராமசாமி தொடங்கி கனிமொழி வரை, இவ்வளவு தானா இல்லை தமிழ் வைத்து இன்னும் எவ்வளவு பேர் பிழைப்பு நடத்த போறீங்க .... அந்த தமிழ் கடவுள் முருகன் தான் தமிழனையும் ,தமிழையும் காக்கணும் ............,கந்தா, கடம்பா,கதிரவேல ,கார்த்திகேயா .....

vignaani said...

Even if it is only Papaer Value, as Anani puts it, where was the haste to allot it without referring it to GOM, as suggested by Law Ministry and in a round-about way seconded by Prime Minister? Where was the need to preclose the effective date of receipt of applicatins? What is the logic of opening the window for only fortyfive minutes, within which the bidders are to submit the Demand Draft and Bank Guarantee for Rs 16oo crores, that too withour prior notice?

Guruvajii said...

Well said. This is the fact. At least he is speaking the truth. No media is speaking about this. Even people also. There must be some agitation in future otherwise all the rich people will kill these poor people. Once after that these bleedy politician will think..