பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 01, 2010

நிஷ்காம்ய கர்மம்! - வாலி

'கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை!'

-சிவாஜி, பிரபு நடித்த 'சுமங்கலி' என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து - இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை - நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் 'நிஷ்காம்ய கர்மம்'. விருப்பு வெறுப்பின்றி - நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், 'நிஷ்காம்ய கர்மம்'.

'காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!'

- 'நியூ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் -

"வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க... 'தெய்வம்'கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!" என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.

"ய்யோவ்! என்னய்யா நீ... இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு... சரி... சரி... தெய்வம்கிறதுக்குப் பதிலா 'தேவதை'ன்னு வெச்சுக்கோ!" என்று மாற்றிக் கொடுத்தேன்.

பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் 'பாய்ஜூபாவ்ரா'! ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

அதில் 'ஓ! பகவான்!' என்று இந்துக் கடவுளை விளித்து - தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத் திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள் அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!

நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே - படேகுலாம் அலிகான் கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு -அவர் பாதங்களில் விழுந்து பரவியவர்.

திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும் சமயப்பற்று இல்லையா? ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது - 'நிஷ்காம்ய கர்மம்'; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த சம்பந்தம், படத்தளவே!

திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் - 'ராமன் அப்துல்லா'. இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு பாட்டு எழுதினேன்.

'ஆண்டவன் எந்த மதம்?

இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?'

- என்று வரும் இந்தப் பாட்டை - முழுமுதற் கடவுளாக அல்லாவையே முப்பொழுதும் கருதி - அஞ்சு வேளை தொழுகை புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப் பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து! இதுதான் 'நிஷ்காம்ய கர்மம்'!

கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில் ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

தியாகராஜரையும், தீட்சிதரையும் - அவர் பாடி நான் கேட்டிருக்கிறேன்!

கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப் பாடி - ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும் செருக்கும் ஏறி நிற்பவன்-

ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

'தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை' என்று அந்த முனிவன் ஒப்புக்கொண்டு -

அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை வேண்டுகிறான்.

அவள் - ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம் அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் 'தரும வியாதன்'; அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டுகிறான்.

'இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!' என்று அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன்!

வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில் இந்துக்களால் உச்சரிக்கப்படுவது - 'ஓம்! சாந்தி! ஓம்!'

இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் கதாநாயகன் - ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

B.R.சோப்ராவின் புகழ்வாய்ந்த 'மகாபாரதம்' டி.வி. சீரியலுக்கு உரையாடல்கள் எழுதியவர் - மகா மேதையான ஓர் உருதுக் கவிஞர்!

சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்...

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் -

கதைகளில்

காணுகின்ற

சமயத்துக் கேற்றபடி;

சமயத்துக் கேற்றபடி அல்ல!
நன்றி: விகடன்

இதை நிச்சயம் இட்லிவடையில் போட வேண்டும் என்று சொன்ன 'அவருக்கு' நன்றி :-)

25 Comments:

யோவ் said...

"நிஷ்காம்ய கர்மம்" - சமூக நல்லிணக்கத்திற்கு பொருத்திப்பார்க்கும் வகையில் நல்ல தத்துவம்தான்.

யதிராஜ சம்பத் குமார் said...

கலைஞருக்கு ஜால்ரா போடுவதும் நிஷ்காம்ய கர்மத்தில் ஒன்றோ?

யதிராஜ சம்பத் குமார் said...

கலைஞருக்கு ஜால்ரா போடுவதும் நிஷ்காம்ய கர்மத்தில் ஒன்றோ?

Anonymous said...

mr. AR Rahmanoda Matha Pattai avar kattivittar aana neenga ippavum emmathamum sammathamnnu irukeenga

கலாநேசன் said...

nice to read

ம.தி.சுதா said...

சரியாகச் சொல்லியுள்ளார்... கடவுளுக்கு மதம் இருக்கிறதா..??

Vijay said...

கொலைஞருக்கு ஜால்ரா அடிப்பது நிஷ்காம்ய கர்மம் என்று சொல்கிறார். புரிகிறது புரிகிறது.

R.Gopi said...

சொல்றதுல என்னய்யா.... நிஷ்காம்ய கர்மம்.... குஷ்புவாய தர்மம்-னு எது வேணும்னாலும் சொல்லலாம்... கையில காசு வந்தா சரி....

தலைவா உன் வருகை
கண்டதும் கூப்புவேன் என் இரு கை

நீ ரஜினியை விட பாப்புலர் ஃபிகர்
உன்னை கண்டதும் ஏறுது என் ப்ளட் ஷுகர்....

இதெல்லாம் கவிஞர் வாலி கருணாநிதி அவர்களை குறித்து ஒன்று, இரண்டு என்ற வரிசையில் பாடியது....

சுழியம் said...

மண்ணாங்கட்டி.

காசு தராவிட்டாலும் நல்ல விஷயங்களைச் சொல்லுவேன் என்று சொல்வதுதான் நிஷ்காம்ய கர்மம்.

காசுக்காக வேலை செய்வதையெல்லாம் நிஷ்காம்ய கர்மத்தில் சேர்க்க முடியாது.

புரட்சித்தலைவன் said...

கலைஞருக்கு ஜால்ரா போடுவதும் நிஷ்காம்ய கர்மத்தில் ஒன்றோ//
ஹா....ஹா...
"அவரு".......எவரு????

jaisankar jaganathan said...

//இதை நிச்சயம் இட்லிவடையில் போட வேண்டும் என்று சொன்ன 'அவருக்கு' நன்றி :-)
//
அந்த அவர் யார்?

usenet8988 said...

"நிஷ்காம்ய கர்மம்" - என்ன பித்தலாட்டம். இது இந்து மதத்தில் கீதை மூலமாக அடித்தட்டு (கீழ் சாதி) மக்களை, எழவிடாமல் தடுக்க கொண்டுவரப்பட்ட ஒன்று. வேதங்களில் எந்த இடத்திலும், மறுபிறவி, கர்மா, என்பவைகள் இல்லை. வேத காலங்களுக்குப் பிறகு, மக்கள் விழித்துக் கொள்ளத்துவங்கிய போதுதான், உபநிஷங்களின் மூலமாக கர்மா, மறுபிறவி புகுத்தப்பட்டது. அதாவது, “இப்பிறவியில் நீ கீழ்சாதியில் பிறந்து கஷ்டப்படுவதெல்லாம், முன்பிறவியின் கர்மா. கவலைப்படாதே. நீ உன் கடமையை ஏற்று அதை ஒழுங்காக செய். பலனை இப்பிறவியில் எதிர்பார்க்காதே. அப்படி செய்தால், அடுத்த பிறவியில், நீ எங்களைப் போல் உயர்சாதியில் பிறந்து அனுபவிக்கலாம்.” பின்பு வந்த கீதை, அதையே தங்க முலாம் பூசி, சாதீயத்தை நிலைநாட்டியது.

ராகுல் சாங்கிருத்தியாயனின் இந்து தத்துவயியல் படித்தால், இன்னும் விளங்கும்.

kggouthaman said...

கர்மம், கர்மம்!

kggouthaman said...

அந்த அவரு யாருன்னு சொல்லிவிடுங்க. எனக்கும் சஸ்பென்ஸ் தாங்காது!

Anonymous said...

//சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்...

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் -

கதைகளில்

காணுகின்ற

சமயத்துக் கேற்றபடி;

சமயத்துக் கேற்றபடி அல்ல!//

இது இப்படி இருக்கணும்னேன்.

கலைஞரைப் பாராட்டி ஜால்ரா தட்டி, புகழ்ந்து நான் வசனம், பாடல்கள் படிப்பது, எழுதுவதெல்லாம்...

நிஷ்காம்ய கர்மத்திற்கேற்றபடி அல்ல

கர்மத்துக் கேற்றபடி...

(கர்மம்- எல்லாம் என் தலையெழுத்து)

Anonymous said...

//"நிஷ்காம்ய கர்மம்" - என்ன பித்தலாட்டம். இது இந்து மதத்தில் கீதை மூலமாக அடித்தட்டு (கீழ் சாதி) மக்களை, எழவிடாமல் தடுக்க கொண்டுவரப்பட்ட ஒன்று. வேதங்களில் எந்த இடத்திலும், மறுபிறவி, கர்மா, என்பவைகள் இல்லை. வேத காலங்களுக்குப் பிறகு, மக்கள் விழித்துக் கொள்ளத்துவங்கிய போதுதான், உபநிஷங்களின் மூலமாக கர்மா, மறுபிறவி புகுத்தப்பட்டது.//

ஆஹா.. பிரமாதம், பேஷ்.. பேஷ்.. ரொம்ப நன்னாருக்குன்னேன்.

வேதம் முந்தையதா, உபநிஷத் முந்தையதா என்று தெரியுமான்னேன். வேதங்களில் மறுபிறவி, கர்மா இல்லையாமா? யார் சொன்னது? நல்ல காமெடிப்பா இது..

//இந்து தத்துவயியல் படித்தால், இன்னும் விளங்கும்//

ஆஹா.. நல்லாவே வெளங்கிருச்சிப்போய்..

Anonymous said...

//சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்...
படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் -
கதைகளில்
காணுகின்ற
சமயத்துக் கேற்றபடி;
சமயத்துக் கேற்றபடி அல்ல!//
அது புர்யிது, ரகுமானு அப்படிச் சொன்னது தப்பு , அதான .. அதையும் ஒரு தடவ ஆணி அடிச்சா மாதிரி சொல்லலாமுல?

ராதை/Radhai said...

A very nice need of the hour concept.

Anonymous said...

சுருக்கமாக சொல்லனும்னா...
காசுக்காக மலத்தையும் திங்க சொல்லுறார்.
ஒரு கூத்தடியிடம் , இதை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?..
வாழ்க வளமுடன்...

ஹரன்பிரசன்னா said...

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படிச் சொன்னது பெரிய ஆச்சரியம். இதுகூடவா அவருக்குத் தெரியாது. பல பாடல்களை உதாரணம் காட்டிய வாலி, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களையே உதாரணம் காட்டியிருக்கலாம். மாங்கல்யம் தந்துதனானே என்ற வரியை இஸ்லாம் ஏற்கிறதா? கும்பிட்டா பரமசிவம் என்பது இதைவிட எத்தனை வெளிப்படையான வரி? இதற்கும் அவர்தானே இசை அமைத்தது? கும்பிட்டா பரமசிவம் இஸ்லாமில் ஓகேயா?

பெரியார் படத்துக்கு இசையமைக்கமாட்டேன் என்று சொன்னபோது ஓங்கி ஒலித்த பகுத்தறிவுக் குரல்கள் இப்போது காணாமல் போன இடம் என்ன? இளையராஜா ஹிந்துபோலச் செயல்படுவதைக் கண்டு ஆய்ந்த இசை அறிஞர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

ராவுல் கந்தி said...

ராகுல சங்கிருத்யாயன் ஒரு ஃப்ராடு. பிழைப்புக்காக ரஷ்யர்களின் காலை நக்கிப் பிழைத்த ஒரு ஜடம். அந்த ஆள் சொன்ன அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை எல்லாம் நம்புபவர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன?

Anonymous said...

வாலி அப்பப்போ உளறுவார்ன்னு தெரியும் ஆனா இவ்வளவு உளறுவார்ன்னு தெரியாது..

ஒரு பரம ஆத்திகரான பார்பன டாக்டர் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம்.அவர் வேறு எந்த சலுகையும் எதிர்பார்க்காமல் கருணாநிதிக்கு குடும்ப டாக்டராக செயல்பட்டால் அது நிஷ்காம்ய கர்மம்
அவரே கருணாநிதியை கவியரங்கில் புகழ்ந்து கவிதை படித்தால் அது வெறும் கர்மம்...

பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்த அந்த மாபெரும் வீரன் எங்கே,கேவலம் சில ஆயிரம் ரூபாய்க்காக
'கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை!'
என்று உளறிய இந்த அல்பம் எங்கே!
இதில் நிஷ்காம்யம், அது, இது என்று பிதற்றல் வேறு!

"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்;
அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்"

என்ற கண்ணதாசன் வரிகளை பாட மறுத்து
"அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்"
என்று மாற்றிய பிறகே பாட இசைந்த
TMS ஆ இப்படி பாடினார்?
கேட்கவே நாராசமாக உள்ளது!

எப்போவும் விபூதி குங்குமம் தரிக்கும் MSV இதற்கு இசை !!!பேஷ் பேஷ்

திரு வாலி அவர்களே
நீங்கள் துக்ளக் படத்திற்கு
அல்லா அல்லா என்ற பாட்டை
எழுதியது "நிஷ்காம்ய கர்மம்"

கருணா,வீரமணி,பெரியாரை புகழ்வது
"பிழைக்கும் தர்மம்"

எப்படி வேண்டுமானாலும் பிழையுங்கள் ஆனால் பாலுக்கும் காவல்;பூனைக்கும் தோழனாக இருக்க முயலாதீர்கள்.

நன்றி

Anonymous said...

வாலி சொல்வதையெல்லாம் படித்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.
ஆனாலும் பாருங்கள் முதல்வரை எத்தனை புகழ்ந்தாலும் வாலிக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கவில்லை.
விவேக்,வைரமுத்து விற்கு கிடைத்தது வாலிக்கு இன்னும் கிடைக்கவில்லை.

KrishnaDeverayar said...

I am surprised Rahman is sensitive even for such things. I agree with the comment below...

//Anonymous said...
mr. AR Rahmanoda Matha Pattai avar kattivittar aana neenga ippavum emmathamum sammathamnnu irukeenga//

Muslims always showing to everyone that they are staunch muslims. But hindus always want to be secular.

wilde's dog said...

not at all impressive.. if you and the others mentioned in your article had been real nishkaamya kaarmics you people should have denied the payment for going against your beliefs. It's just money mindedness.please don't give false names to your monetary interests.