பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 23, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-12-2010

நல்லா இருக்கையா முனி?
கோமாளி என்று சொன்னவர்கள் எல்லாம் இப்ப சு.சாமியை புகழ ஆரம்பித்துவிட்டர்கள். புத்தகக் கண்காட்சி சமயத்தில் பிஸியாக இருந்தாலும், சரக்கு மாஸ்டர் வேட்டியை வரிந்துக்கட்டிக்கொண்டு இட்லிவடை பதிவில் திருமலையுடன் சண்டை போட, சு.சாமிக்கு இன்னும் தைரியம் வந்து இப்ப ரஜினியையே டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ரஜினிகாந்த் சினிமாவில் மட்டும் தான் வீரத்தை காட்டுவார். அரசியல் என்றால் அவருக்கு பயம்" என்று சொல்லியுள்ளார். இதற்கு மக்கள் என்ன சொல்லுவார்களோ ? இனி சு.சாமியை அந்த ஆண்டவன் கூடக் காப்பாத்த முடியாது.

சென்னை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரியை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்த கனிமொழி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமியிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனதாக இன்று செய்தி வந்துள்ளது. சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம் என்பது இது தான். இருந்தாலும் அண்ணா தங்கை ரெண்டு பேரும் ஒரே விமானத்தில் தான் போனார்களாம். ஆனால் பேசிக்கொள்ளவில்லையாம்.

ராகுல் காந்தி சென்னை வருகைக்கு தனி விமானம், டெல்லியிலிருந்து வரவழிக்கப்பட்ட குண்டு துளைக்காத கார், மேடை என்று சகலமும் கொண்டு வந்துள்ளார். குண்டு துளைக்காத டாய்லட் பேப்பர் கூட கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இங்கே வந்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கப் போகிறேன் என்று குடிசையில் ஒரு கிளாஸ் டீ குடிப்பார். இளைஞர் காங்கிரஸ்காரர்கள் கைத்தட்டுவார்கள், இளங்கோவன் பலமாகத் தட்டுவார். சென்னை வந்த ராகுல் காந்தி, வெங்காயத்தை பிரதமர் பாத்துக்கொள்ளுவார் என்கிறார். பேசாம ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்திவிட்டு, வெங்காய இலாக்கா என்று ஒன்றை அமைத்து அதற்கு பிரதமரை அமைச்சராக நியமித்துவிடலாம். அட்லீஸ்ட் ஜெ.பி.சியிலிருந்தானும் தப்பிப்பார். எது எப்படியோ சென்னையில் படி ஏறி போய் யாரையும் பார்க்க மாட்டாராம் ராகுல் காந்தி, நம்ம இளங்கோவனே சொல்லிட்டாருப்பா!

கலைஞர் தானும் ஒரு பத்திரிக்கையாளர் என்று அடிக்கடி சொல்லிகொள்வார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லிவிடுவார். ஆனால் எடுக்கு மடக்கான கேள்வி கேட்டால் அவ்வளவுதான். உடனே அசிங்கமாத் திட்டுவார். இல்லேன்னா காமெடியாகப் பதில் சொல்லுவார். ரெண்டு நாள் முன்னாடி "பூங்கோதை ஆலடி அருணா நிரா ராடியா டேப் பற்றி என்ன நினைக்கறீங்க?" என்ற கேள்விக்கு அவங்க பொம்பளைங்க, என்னவோ பேசிக்கிறாங்க..உனக்கென்ன? அவங்க வடநாட்டுக்காரங்க...இவங்க நாடார் வீட்டுப் பொண்ணு, மதுரை ஜில்லா" என்று சம்பந்தமே இல்லாம உளறினார்.....வெங்காய விலை உயர்வு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு "அதைப் பெரியாரிடம்தான் கேட்க வேண்டும்" என்று சொல்லிவிட்டார். நல்ல வேளை நீரா ராடியாவிடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்தாரே.

வெங்காயம் மேமொரிக்கு நல்லது ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க. ஒரு வேளை மக்களுக்கு ஞாபக சக்தி வரக் கூடாது என்பதாலோ என்னவோ வெங்காய விலைய ஒசத்த வைத்து விட்டார்கள். வெங்காயம் இல்லாமல் போனாலும் மக்கள் ஒழுங்காச் சாப்பிடணும். சரியாச் சாப்பிடலை என்றால் மூளை வளராது என்று சொல்லுகிறார்கள். இப்படி இருக்க ஆந்திராவில் இப்ப எல்லோரும் உண்ணாவிரதம் இருப்பது ஃபேஷனாகிவிட்டது. கூடவே இப்போல்லாம் மக்களுக்கு எல்லாம் மூளையே இல்லை என்ற ரேஞ்சில் அரசியல் தலைவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். “ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் “வழுக்கைத் தலையில் முடி வளர்க்கலாம்” விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். முதலில் மூளையை வளர்க்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

கைத்தறி ஃபேஷன் ஷோவில் ஸ்ரேயா வலம் வருகிறார். மார்கெட் போய்விட்டதோ? மார்கெட் போன சினிமா நடிகர்கள் டிவியில் நடிக்கப் போய்விடுகிறார்கள்; டிவி நடிகர்கள் டாய்லெட் கிளினீங், பாத்திரம் தேய்க்கும் சோப் என்று போய்விடுகிறார்கள். மார்கெட் போன இயக்குனர்கள் இதயம் நல்லெண்ணை என்று போய்விடுகிறார்கள். அங்கே போனாலும் முருங்கைக்காய் நறுக்குவதை மட்டும் விடவில்லை.

அந்த வரிசையில் பதவி போன மந்திரியிடம் என்ன செய்வார்கள்? சி.பி.ஐ விசாரணை நடத்துவார்கள். ராஜாவிடம் 24ஆம் தேதி சி.பி.ஐ விசாரணை என்று சொல்லுகிறார்கள். இன்றைக்கு டிவியில் அவர் சந்தோஷமா சிரிச்சுட்டு இருபத்தி நாலாம் தேதி, பத்து மணி என்றெல்லாம் சத்தமாச் சொன்னதைப் பாத்தா, ராஜா தலீத் அவர் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு கஷ்டமான கேள்விகள் எல்லாம் கேட்க கூடாது, உங்க பேர் என்ன உங்க அப்பா பேர் என்ன? என்று சிம்பிளான கேள்விகளை கேட்டு விட்டு விட்டு விட வேண்டும் என்று கலைஞர் சொல்லி இருப்பாரோ என்று தோணுது.

ராசா தொடர்புடைய இன்னொரு பிரச்சனை கிளப்பப்பட்டு, டைம்ஸ் நெள துவங்கி தெஹல்கா வரை சீப்படுகிறது. பெரம்பலூரில் MRF நிறுவனத்தின் 900 கோடி மதிப்பிலான க்ரீன் ஃபீல்டு ப்ராஜக்டிற்காக நிலம் வாங்கியது தொடர்பான பிரச்சனை. இந்த திட்டத்திற்காக "க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டார்ஸ்" நிறுவனம் ஏழை தலித் விவசாயிகளின் நிலங்களை ராசா துணையுடன் மிரட்டிப் பறித்தது, MRF நிறுவனத்திற்கு அதிக லாபத்திற்கு விற்றுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 32000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்கிய நிலங்களை MRF நிறுவனத்திடம் பதினைந்து முதல் பதினேழு லட்சம் வரை விற்றுள்ளனர். ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாதான் இந்நிறுவனத்தின் இயக்குனர்; தவிர, ராசாவின் மனைவி இந்நிறுவனத்தில் ஒரு பங்குதாரர். சமீபத்திய சிபிஐ ரெய்டில் இவர்கள் நிறுவனமும் சிக்கியது என்பதெல்லாம் பழைய கதை.

இதில் விநோதம் என்னவென்றால், இந்த நில அபகரிப்பு தொடர்பாக, ராசாவிற்கு எதிராக நெற்றிக்கண் பத்திரிக்கையில் ஆக்ரோஷமாக கட்டுரைகள் தீட்டிய செந்தில் முருகன் என்பவரே, பிறகு ராசாவுக்கு ஆதரவாக தரகு வேலை செய்து நிலங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். காரணம், நெற்றிக் கண்ணிலிருந்து இந்த செந்தில் முருகன் பிறகு முரசொலிக்குத் தாவியுள்ளார். நிலத்தை விற்க மறுத்த விவசாயிகளை பொய் கேசில் பதினைந்து நாட்கள் வரை சிறையிலடைத்து, மிரட்டி நிலத்தை எழுதி வாங்கியுள்ளனர். செந்தில் முருகன் தரப்போ, ஏக்கருக்கு இருபத்தைந்தாயிரம் கூட போகாத நிலத்தை அதிக விலைக்கு விற்று விவசாயிகள் லாபமடைந்துள்ளனர் என்கிறது . ராசாவும் தலித் என்பதால் எங்கள் பிரச்சனைகளை அவர் புரிந்து கொள்வார் என்று நம்பினோம். ஆனால் அவர் எங்களை முதுகில் குத்தி விட்டார் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

ஆதர்ஷ் ஊழல் தொடர்பான ஆவணங்களை தொடர்ந்து இப்ப டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் பைல்கள் திடீர் மாயம். இப்ப சி.பி.ஐ. இதை விசாரணை செய்ய கிளம்பியுள்ளது. ஆனால் சேலத்தில் போலீஸ் செய்த சாதனையை கேட்டால் அசந்து போய்விடுவீர்கள். சேலத்தில் வாங்கிங் போன வக்கீலை அங்கு இருந்த சேவல் ஒன்று அவரை கொத்தியுள்ளது. உடனே அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க போலீஸார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் உரிமையாளர் 200 ரூபாய் அபராதம் கட்டி சேவல் பிரியாணியை தவிர்த்தார். "கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வையகம் போறானாம்" என்ற கதை மாதிரி இருக்கு இது :-)

கொசுறு செய்திகள்:
கைது என்றவுடன் நினைவுக்கு வருவது இரண்டு செய்திகள். ஜெயலலிதாவை திமுக அரசு கைது செய்த போது அவரை ஜெயிலில் சந்தித்த வீரமணி அவரைச் சந்தித்து புத்தகம் பரிசு தந்தாராம். ஆனால் நள்ளிரவில் கலைஞரை கைது செய்த போது சம்மன் கொடுத்தால் போக வேண்டியதுதானே? சண்டித்தனம், செய்தால் இழுத்துப் போகத்தான் செய்வார்கள்!’ என்றாராம். ராசாவை ஒரு வேளை சிபிஐ கைது செய்தால் என்ன சொல்லுவார்? இருக்கவே இருக்கு பூணூல் சமாச்சாரம்.

நாடார் சமுதாயத்துக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசியலுக்கு வந்தேன். 'சூரியவம்சம்’ படம் ரிலீஸ் நேரத்தில் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டேன். சினிமாவில் தொடர்ந்து இருந்தால், நிச்சயம் சூப்பர் ஸ்டாராகி இருப்பேன். இப்போது என்னை நீங்கள் ஆதரியுங்கள்... உங்களை நான் ஆதரிக்கிறேன்!'' என்று சரத்குமார் பேசியுள்ளார். நாடார் எவரையும் நாட மாட்டார்கள் என்றல்லவா கூறுவார்கள்? அது பழைய மொழி போல.
வீடியோ இங்கே http://timesofindia.indiatimes.com/videoshow/7132947.cms

சங்கீத சீசன் வந்தாலும் வந்தது, பிரச்சனைல இருக்கற அரசியல்வாதிகள் கூட நிரவல் ஸ்வரம் பாடற மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த வீடியோவில் பாருங்க. I am not afraid என்ற கீர்த்தனையில் ராசா எப்டி எல்லாம் த, த, த, த -- க, க, க, க என்று பிரமாதமா ஸ்வரம் பாடறார்! தர்பார் என்று ராகம் பேரெல்லாம் வேற சொல்லறாரு. அவர் பின்னால் நிறைய ஜால்ராக்கள் இருப்பது கச்சேரிக்கு வலு சேர்க்கிறதா என்று தெரியல. Are you understand my question? :-)


இப்படிக்கு,
கமல் படத்துக்கு இன்னும் டிக்கெட் வாங்காத,
இட்லிவடை

23 Comments:

விக்கி உலகம் said...

அருமையான பதிவு நண்பரே.

ஆதி மனிதன் said...

"As if I am afraiding" - என்ன இங்கிலீஷ் இது?

naarayanan said...

as usual manjal comment super. if kanimozhi can attend sanjay's concert then why not raja sing a neraval?

kalathin kattayamo? kattayathin kaalamo?

jaisankar jaganathan said...

//சு.சாமியை அந்த ஆண்டவன் கூடக் காப்பாத்த முடியாது/
ஹி ஹி ஹி

Anonymous said...

Nothing will happens, Fakheerr, old man, does not know how to answer the questions that has been put b4 him.. even in rural areas people talk about this. The time has come for the entire family to live unitely (Behind Bars).

Madurai Veeran.

Anonymous said...

ராஜாவின் பொன்மொழி” " I will prove my innocency!" - என்ன இங்கிலீஷ் இது? --கபாலி

Anonymous said...

இரண்டு பொம்பளைங்க
ராடியா- கனி,
ராடியா-ராசாத்தி
பேசினதை பத்திக்கூட கேட்கக்கூடாது.
அவங்க சமையல் குறிப்பைப் பற்றி பேசிக்கிட்டு இருந்தாங்களோ என்னவோ?
--கபாலி

Anonymous said...

வீரமணீ என்பது தவறு. வீரmoney
என்பதுதான் சரி

அஞ்சா நஞ்சன் said...

"Are you understand? "மட்டும் என்னவாம்? "Do you understand?" என்றெல்லவா இருக்க வேண்டும்?

Raja said...

I.V.,
"Are you understand my question" is not so perfect. It should be "Do you understand my question"... What idli ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Kalakkal post!

Anonymous said...

// ராஜா தலீத் அவர் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு கஷ்டமான கேள்விகள் எல்லாம் கேட்க கூடாது, உங்க பேர் என்ன உங்க அப்பா பேர் என்ன? என்று சிம்பிளான கேள்விகளை கேட்டு விட்டு விட்டு விட வேண்டும் ... என்று தோணுது.//

அது மட்டுமல்ல, SC/ST ஆக இருப்பதால், நூற்றுக்கு முப்பதைந்து வாங்கினால் போதுமானது. இன்னும் ஒன்று.
கேள்வி கேட்கும் இன்டர்வ்யூ பேனலில் குறைந்த பட்சம் ஒருவராவது SC/ST ஆக இருக்க வேண்டும்.

சுபத்ரா said...

//Anonymous Raja said...
I.V.,
"Are you understand my question" is not so perfect. It should be "Do you understand my question"... What idli ?//

ஐயோ.. ஐயோ.. :-)

சுபத்ரா said...

//Are you understand my question? :-)//

Oh no.. Me no under stand ya :))

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// குண்டு துளைக்காத கார், மேடை என்று சகலமும் கொண்டு வந்துள்ளார். குண்டு துளைக்காத டாய்லட் பேப்பர் கூட கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். //

வேகமாகப் படித்துக்கொண்டு வரும்பொழுது, 'குண்டி துடைக்காத டாய்லட் பேப்பர்' என்று படித்தேன்!

VJ said...

Manmadhan Ambu - என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...

smk981 said...

Many has spoken abt his bad english.Everybody should know that the substance (the content)is much important than the tenor or the craft.His genuineness should have been discussed more than everything.

Anonymous said...

//Oh no.. Me no under stand ya :))//

Oh you mean he is not under the stand?

சுபத்ரா said...

//Oh you mean he is not under the stand?//

Dont know. But he tries to 'stand from under' :-)

Venkat said...

I agree with SMK981. For the magnitude of corruption charges being leveled against Raasa, he has maintained (publicly) his cool. Even in the interview that was linked in this post, you cannot say that he appears jittery. He has pretty much conveyed what he wanted to convey in that interview.

With respect to the English language of Mr Raasa, you need to go by the English language levels of individuals in a specific industry. Remember Azhagiri cannot even talk in this language. And most of the Northies (politicians) when they open their mouth they will talk proudly in Hindi (and in reality they would not know English or not comfortable).

For example, in Tamil Nadu it is very common to say when just one female needs a seat to sit in the bus - "Sir, please get up, ladies have to sit"

Another time, I was watching some Tamil TV news and a policeman was reporting that one person was injured in the clash, he mentioned that "one public got injured"

I am not saying that Raasa is innocent and is being framed in spectrum, but we cannot be blaming his English or about his confidence levels....That in my opinion is not relevant to the discussion.

I think he appears confident because - individuals from the Tamil Nadu's first family and Cong biggies (at President level) are involved in 2G - so why should I be worried. He may think that "if I go to jail, I will take half of the remaining culprits with me to go..."

The key is when "Cong-DMK" alliance breaks, then Raasa may be made by Cong team as an approver (or someone else)... Until something like that happens, MK and Raasa will hold their face high in public....I do not think that these corruption charges are going to go anywhere as long as Cong needs DMK.

"விநாச காலே விபரீத புத்தி"

Anonymous said...

Looking at the interview by Raja and MK, one must feel ashamed and understand the hard reality, that a state with so many engineers and so many educated elites, is ruled by fools(தற்குறி) whose english is worse than the rickshaw-mans'. What qualification does MK have to be a CM? Is being a poet/playwright a qualification for the CM post??
Fools of TN pls wake up.

ரிஷபன்Meena said...

//With respect to the English language of Mr Raasa, you need to go by the English language levels of individuals in a specific industry. Remember Azhagiri cannot even talk in this language. And most of the Northies (politicians) when they open their mouth they will talk proudly in Hindi (and in reality they would not know English or not comfortable).//

வெங்கட்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் படித்த நல்ல பின்னூட்டம்.

R.Gopi said...

//சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் தான் உழைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் உருவானது - கலைஞர்//

/************

இட்லிவடை...

செய்தி சோமாரி என்கிற சைட்பார் டயலாக் சூப்பர் ஹீ...ஹீ....ஹீ... ரகம்...

பெரிய பூசணி தோட்டத்தையே ஒரு சின்ன சட்டி சாப்பாட்டுக்குள்ள போட்டு அமுக்கிட்டாரே!!?