பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 28, 2010

2011ல் வரப்போகும் தமிழ் (உலக) சினிமா - ரவி நடராஜன்

யாராவது விருத்தகிரி போன்ற மொக்கை பட விமர்சன்த்தைப் பார்த்து மேலும் எழுதுவார்களா? சத்தியமாக அப்படிப்பட்ட ஜீவன்கள் இந்த உலகில் இருப்பதற்கு இந்த பதிவு ஒரு சான்று. அட, 2010 போயே போய்விட்ட்து. 2011 ல் தமிழ் சினிமா எப்படி எல்லாம் நம்மை வாட்டி எடுக்கப் போகிறது என்று நினைத்தாலே கலக்குகிறது.
பொதுவாக ஹாலிவுட் மொக்கைப் படங்கள் நம்மூர் சினிமாவின் முன்னோடி என்பது என் செல்லத் தியரி. 2010 ல் வந்த 3 மகா மொ.படங்கள் அடுத்த வருடம் தழுவி நம்மை தமிழில் வாட்டி எடுக்க சீரியஸான வாய்ப்பு இருக்கு என்பது என் கிரிஸ்டல் பந்தில் தெரிந்து தொலைத்து விட்ட்து!


முதலாவது காவியம் 2012 என்ற உலகம் அழியும் பூச்சாண்டி பூச்சூடல். அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் பார்க்கில் தொடங்கி ஒரே களேபரம் மற்றும் குழப்பம். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்ஸிடம் ஹாலிவுட் சரணமடைந்து 1 மணி நேரம் நம்மை எல்லாம் படுத்தி எடுத்து விட்டார்கள். அப்பளம் சுடுவதைப் போல கண்டதை எல்லாம் சுடுகிறார்கள். சென்னை பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் டில்லியருகே ஒரு சுறங்கத்தில் உலகம் அழியப் போவதை கண்டுபிடிக்கிறார். அட்டா, நம் புவியியலைப் பற்றி ஹாலிவுட்டின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, டில்லியருகே எந்த சுரங்கமும் இல்லை – 2ஜி ராசாவைத்தான் கேட்க வேண்டும்! விஜய்காந்த் பாணியில் இந்த படத்தில், உலகம் அழியும் நேரத்தில் கூட, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெரிய படகை உருவாக்குமாறு சைனாவிடம் அமெரிக்கா அவுட்சோர்ஸ் செய்வது ஒரே ட்மாஸ். இப்படத்தில் உள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிச்சயமாக 2011 ல் கோடம்பாக்கத்தில் சைனா அனெமேட்டர்களுடன், ‘ஹாலிவுட்டே வியக்கும் வித்த்தில்’ என்ற ரேஞ்சுக்கு அலட்டுவார்கள்.
இரண்டாவது காவியம் டாம் க்ரூஸ் வந்து போன (நடித்த என்று எல்லாம் சொல்லி அடிவாங்க விருப்பமில்லை) Knight and Day என்ற அபத்தம். பறக்கும் விமானத்தில் எல்லோரையும் (விமானி உட்பட) சுட்டுத் தள்ளும் நேரத்தில் பாத்ரூமில் கதாநாயகி அலங்காரம் செய்து கொள்கிறார். சத்தியமாக இது விஜய் படமில்லை. இதற்கு பின், ஷாம்பெயின் அருந்திவிட்டு, விமானத்தை ஒரு வயலில் இறக்கி வெடிக்கும் விமானத்தின் பின்னணியில் மெதுவாக நடந்து செல்கிறார். அட்டா, இன்னா ஹீரோயிசம்! ஓடும் காரில் சுடுகிறார், பைக்கில் இரு கைகளாலும் சுட்டு துவம்சம் பண்ணுகிறார், ஸ்பெயினில் முரட்டு காளைகள் நடுவில் பைக் ஓட்டி எல்லோரையும் குத்துபட (குத்துப்பாட்டு இல்லை சார்) செய்து அவர் மட்டும் புன்னகைக்கிறார். என்ன நடக்கிறது என்று கேள்வி எல்லாம் கேட்க்க் கூடாது. 2011 ல், விஜய், சூர்யா அல்லது அஜித் ஏதாவது விமானத்தில் அல்லது பைக்கில் தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு (?) உயர்த்தினால் அதன் காரணம் இட்லிவடையாகக் கூட இருக்கலாம்.
மூன்றாவது காவியம் Inception என்ற கனவு பற்றிய விஞ்ஞான பூச்சூடல். கனவுக்குள் கனவுக்குள் கனவு என்று முடிமுடிச்சு போட்டு படுத்தி விட்டார்கள். இப்பட்த்தில் உள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இது வரை எந்த பட்த்திலும் வரவில்லை. உதாரணத்திற்கு, தலை கீழாக லிஃப்ட் அருகே சண்டையிடும் காட்சி அபாரம். உடனே, குட்டை பாவாடை கதாநாயகி அயிட்டம் சாங் இப்படி படமெடுத்தால் என்ன என்று நம் சினிமா சிந்தனை போனால் நான் பொறுப்பல்ல. இப்படத்தில் கட்டிடக்கலை நிபுணரான கதாநாயகி, கனவின் ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு எப்படி வருவது என்று திடீரென்று ஞானம் பெற்று அசத்தவெல்லாம் செய்வார். இப்படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு (audiography) பிரமாதம். ஹான்ஸ் ஜிம்மர் பின்னணி இசையில் அசத்திவிட்டார். அதெல்லாம் ரஹ்மான் தன் அடுத்த கொரியப் பட்த்தில் பார்த்துக் கொள்வார்.
2011 ல் ஒரு சிறிய தமிழ் சினிமா கற்பனை.
சேர்ந்து போன தமிழ் சினிமா தயாரிப்பாளரை விசாரித்த்தில் கிடைத்த்து:
“பட்ஜெட் இடிக்குது சார். லொகேஷன் பிரச்னை வேற கழுத்தறுக்குது. பேசாம ராமராஜன் ஸ்டைலில் சின்ன பட்ஜெட் படம் எடுத்துறலாம்னு இருக்கேன்”
“விவரமா சொல்லுங்களேன்”.
“இசையமைப்பாளர் ஹாங்காங் போனாத்தான் மூடு வருங்கறார்” (அங்கதான் மலிவா மேல்நாட்டு இசை சிடி எல்லாம் கிடைக்கிறதாம்).
“வைரமுத்து ஸ்விஸ் போகணும்னு அடம் பிடிக்கிறார்”
“எதுக்கு சார்?”
“நியூட்ரான், ப்ரோட்டான் எல்லாம் எழுதினால் இளைஞர்களை கவர முடியாதாம். ஜெனிவாவில் உள்ள சேர்ன் (CERN) சென்று புதிய நுண்துகள்களைப் பற்றி தெரிய வேண்டுமாம்”
”டைரக்டர் ஆஸ்திரேலியாவில்தான் பாட்டு பதிவு என்று அடம் பிடிக்கிறார்”
“கதை என்ன சார்”
“நாட்டுப்புறக் கதைதான். உலகமே அழியப் போகுதுன்னு எல்லாம் பயப்படறாங்க. கதாநாயகன் எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி, சென்னை வந்து, விமானம் ஏறி பறக்கையில், ஒரு சதி கும்பல் உள்ளே வந்து, சண்டையிடுகையில் எல்லோரையும் சுட்டு விடுகிறான். தலைகீழாய் பறக்கும் விமானத்தில் ஒரு டூயட் சார்”.
கழண்டு கொண்டேன். பாவம் சுஹாசினி, தராசை வைத்துக் கொண்டு எவ்வளவோ முயற்சி செய்து விட்டார்!

- ரவி நடராஜன்

ரவி நடராஜன் சொல்வனம் இதழில் தொடர்ந்து எழுதுபவர். இந்த மாதிரி இலக்கிய பதிவுகளை சொல்வனம் பிரசுரிக்காது; தமிழ் பேப்பரில் போட்டால் புத்தகமாக வந்துவிடும் அபாயம் இருப்பதால் இட்லிவடைக்கு அனுப்பிவிட்டார் என்று நினைக்கிறேன். எது எப்படியோ இட்லிவடைக்கு வழக்கம் போல் ஒரு ஓசி பதிவு.

பிகு: கவிதை பிரசுரிக்கும் நீங்கள், என் சிறுகதையும் போட வேண்டும் என்று ஒரு ஒருவர் அனுப்பியுள்ளார், அது அடுத்த பதிவு

7 Comments:

ஆதி மனிதன் said...

என்று தணியும் இந்த ஹாலிவூட் (மொக்கை படங்களின்) தாகம்?

தேடுதல் said...

படத்துல அந்த பொண்ணு காளை மாதிரி கெட்டப் நல்லாதான் இருக்கு......ஆனா......
அதுல ஒரு தப்பு பாருங்க
திமிலு கீழே இருக்கு

ஹிஹி...ஹிஹி...

ரிஷபன்Meena said...

கட்டுரையும் ஹாலிவுட் தரத்தில் வந்துவிட்டது. நிறைய இடங்களில் நின்று நிதானமா படிக்க வேண்டி இருந்தது.

sakthistudycentre.blogspot.com said...

மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

parvathi said...

உங்கள் வருங்கால சினிமா கருத்து கணிப்பு மிக அருமை. தொடர்ந்து எழுதவும். கிண்டலும் கேலியுமா அசத்துங்க!

G.Mohanraj said...

Inception ellam mokkai padam'nu sonna ungalukku ellam sura maathiri padam thanga laikku.

Aandavan said...

அய்யா ரவி நடராஜா உமக்கு Inception திரைப்படம் பிடிக்காவிடின்/விளங்காவிடின் நீர் பேசாமல் இருக்கலாம். Inception படத்தில் பூச்சூடவில்லை. படத்தை தெளிவாகப் பார்த்தவனுக்கு அது புரியும்.உமக்கெல்லாம் குத்துப் பாட்டுத்தான் சரி.