பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 15, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-12-2010

மைடியர் இட்லிவடை,

டிசம்பர் சீசன் என்றால் கச்சேரி நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த வருஷம் சிபிஐ ரெய்டும் சேர்ந்து நடக்கிறது. இந்த ரெய்டுக்கு காரணம் கருணாநிதி தான். இளைஞன் பட விழாவில் என்ன பேசினார் தெரியுமா? பழைய காலத்தில் பகாசுரனைப் பார்த்து சொல்லப்பட்ட மிகைப்படுத்திய காட்சிகளை போல இன்று ஒரு 1.76 லட்சம் ஊழல் என்று சொல்லும் போது அதே போல தான் இருக்கிறது. எப்படி இவ்வளவு தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? என்று கேள்வி கேட்டிருக்கிறார். ஆக ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் ஒருவர் மட்டும் செய்யவில்லை என்று சொல்லுகிறார். படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும் என்கிறார் சர்க்காரியாவால் விஞ்ஞானி என்று பேர் பெற்ற கருணாநிதி. இதுக்கு பேர் தான் பகுத்தறிவு. பெரியார் சொல்லித்தந்தது. அதுவும் ராசா ஒரு தலித் அதனால் அவருக்கு மந்திரி பதவி தர வேண்டும் என்று பேசுவதும் பகுத்தறிவில் ஒரு வகை.

இந்த படத்துக்கும் சிறந்த வசனத்துக்காக கலைஞருக்கு பரிசு கிடைக்கும் என்று நம்புவோமாக. ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் என்பது லேட்டஸ்ட் வசனம் ! )

பகுத்தறிவு பேசும் இவர்கள் ஜாதியை ஒழிக்காமல் பொண்ஜாதி பற்றி அசிங்கமாக பேசுகிறார்கள். "தமக்குத் திருமணமாகவில்லை என்ற கோபத்தால்தான் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா என்று துணைமுதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஏதோ துர்கா ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போன வாரம் போனார், பெருமாள் இவர்கள் குடும்பத்துக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை.


காங்கிரசில் மனிஷ் திவாரி, ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் செய்தித் தொடர்பாளர்கள் என்று வந்து சாவடித்துக் கொண்டு இருக்கும் வேளையில், யாருடைய வேண்டுதலோ பிஜேபிக்கு நல்ல செய்தித் தொடர்பாளராக நிர்மலா சீதாராமன் கிடைத்துள்ளார். எடியூரப்பா போன்றவர்கள் இருக்கும் பிஜேபியில் இவரை போன்றவர்கள் இருந்து என்ன பயன்? ஆர்.எஸ்.எஸ் பற்று உள்ளவர்கள் நல்ல தைரியசாலிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எடியூரப்பா மாதிரி ஊழல் செய்துவிட்டு தைரியமாக இருக்கிறார்கள்.

இப்போது நீதிபதிகள் கூட தைரியமாக தங்கள் மிரட்டப்பட்டதை சொல்ல முன்வந்துள்ளாகள். சரியாக ஓராண்டிற்கு முன்னர், போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஒருவரை காப்பாற்றும் நிமித்தம், தம்மை ஒரு மத்திய அமைச்சர் மிரட்டினார் என்று நீதிபதி.திரு.ரகுபதி அவர்கள், நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக தெரிவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. இது குறித்து நீதிபதி ரகுபதி அவர்கள் அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கோகலேவிற்கு புகார் கடிதம் ஒன்றை எழுதி, அதில் குறிப்பாக ராசாவின் பெயரையும் குறிப்பிட்டு, அதனுடைய மற்றொரு நகலை அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கும் அனுப்புமாறு வேண்டியிருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், திரு.கே.ஜி.பாலகிருஷ்ணன், கோகலேவால் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ராசாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். அதனை தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலுள்ள் திரு.கோகலே, கே.ஜி.பியின் கூற்றை பகிரங்கமாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், அக்கடிதத்தின் இரண்டாவது பத்தியில் ராசாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது என்று அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். ஆயினும் இன்றுவரை திரு.கே.ஜி.பாலகிருஷ்ணன் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. கழகத்தினர் பூனைக்கு மணி கட்டுவதில் வல்லவர்கள் என்பது ஊரறிந்த விஷயம். அரசியலமைப்புச் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டு, காகிதத்தைத்தானே கிழித்தோம் என்று வியாக்யானம் செய்ததைப் போல், இதற்கும் கலைஞர் ஏதேனும் ஒரு வியாக்யானமோ, கடிதமோ அல்லது அட்லீஸ்ட் ஒரு கவிதையானும் வைத்திருப்பார் என நம்புவோமாக.

சாலமன் பாப்பையாவின் தினம் ஒரு திருக்குறள் போல, காங்கிரஸார் தினம் ஒரு சர்ச்சையில் மாட்டுகின்றனர். அந்த வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங். மும்பை தாக்குதலில் கஸாபால் கொல்லப்பட்ட காவல்துறை உயரதிகாரி திரு.கர்கரே, தாம் கொல்லப்படுவதற்கு இரண்டு மணிநேரம் முன்பாக தன்னை தனது மொபைலில் தொடர்பு கொண்டதாகவும், தனக்கு ஹிந்து தீவிரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார், என்று தெரிவித்தார். இவ்வறிக்கை வெளியான சில மணிநேரத்திலேயே இதனை வன்மையாகக் கண்டித்ததோடல்லாமல், மறுக்கவும் செய்தார் மறைந்த கர்கரேவின் மனைவி. கர்கரேவின் படுகொலையைப் பற்றி இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பேசுவது பாகிஸ்தானுக்கு ஆதரவான செயல் என்று அவர் கூறினார். அவர் மட்டுமல்லாமல் காங்கிரஸார் பலரும் வெளிப்படையாக திக்விஜய் சிங்கின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். பிறகு மறுபடியும் பேசிய திக்விஜய், அவர் தன்னுடன் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார். பின்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அக்குறிப்பிட்ட தினத்தில் கர்கரேவின் செல்பேசியிலிருந்து திக்விஜய் சிங்கிற்கோ அல்லது திக்விஜயினுடைய செல்பேசியிலிருந்து கர்கரேவிற்கோ கால்கள் ஏதும் செய்யப்படவில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தவுடன் பல்டியடித்தார் திக்விஜய். அவர் தொடர்புகொள்ளவில்லை, நானாகத்தான் தொடர்பு கொண்டேன், ஆதாரங்கள் இருக்கின்றன என்றார். இப்பொழுது, ஆதாரம் ஏதும் இல்லை, ஆனாலும் பேசினேன் என்கிறார். நாளை என்ன சொல்வாரோ? தூக்கத்தில் நடக்கும் வியாதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், பேசும் வியாதி என்று இப்போது தான் கேள்விப்படுகிறோம்.

சன் டிவியும் வட இந்திய மீடியாக்களுக்கு இணையாக நிரா ராடியா, சிபிஐ ரெய்டு விவகாரங்களை பலமாக எதிரொலிக்கிறது. காரணம் ஒன்றும் அதிசயக்கத்தக்கதல்ல. நிரா ராடியாவின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் தயாநிதி மாறனுக்கு எதிராகவும், நெருடலாகவும் பல விவகாரங்கள் இருக்கின்றன. அதற்கு பதிலடியாகத்தான் கனிமொழி, ராசா தொடர்பான இச்செய்திகளுக்கு சன் டிவியில் மிகுந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் கலைஞர் டிவி எந்த உலகத்தில் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏதோ செவ்வாய் கிரகத்தில் நடந்தது போல் ஏதுமறியா அப்பாவி போல் எந்த ஊரில் எந்த ஒன்றியக் கவுன்சிலர் ஜெயலலிதாவிற்கு எதிராக அறிக்கைவிட்டார் என்று வாசித்துக் கொண்டிருக்கிறது. பார்த்தார் கலைஞர். அம்மாவுக்கு கொட நாடு. ஐயாவுக்கு ஏலகிரி.

எனக்கு ஒரு பெரிய சந்தேகம். கலைஞர் குடுபத்தில் நடக்கும் விஷேசங்களுக்கு ஏன் நீரா ராடியா வருவதில்லை. கலைஞரை தவிர குடும்ப உறுப்பினர், அமைச்சர்கள் என்று எல்லோரிடமும் பேசிவிட்டார். இருந்தாலும் அவர் அழகிரி மகன் திருமணத்துக்கு வந்திருந்தால் இவர்களுடன் நேரிலேயே பேசியிருக்கலாம். ஏனோ வரவில்லை. ஒருவேளை ராசா சி.ஐ.டி காலனிக்கு வந்தது போல அங்கதான் தான் வருவார் போல.

இந்த உரையாடல்களில் என்னை கவர்ந்தது கனிமொழிக்கு தான் விரும்பிய துறை கிடைப்பதற்கு அவரது தாயாரை கடவுளிடம் செய்யும் பிராத்தைனையை விட வேண்டாம் என்று சொல்லுகிறார். அட பிராத்தனை செய்வாரோ? பெரியார், அண்ணா, இயற்கை, பகுத்தறிவு என கனிமொழிக்கான கடவுளர்களாக நிச்சயம் இருக்கமாட்டார்கள். ஆக ஒன்று மட்டும் நிச்சயம். அமைச்சரவை உருவாக்கம் என்பது பிரதமருக்கு உட்பட்ட விஷயம் அல்ல, கடவுள் + நீரா ராடியா உட்பட்ட விஷயம்.

நடிகர் விஜய்யின் தந்தை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் என்பது போன வார நியூஸ். முன்பு மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தின் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அவர் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கறேன் என்று மட்டும்தான் சொன்னார். அதற்கே அந்த நடிகரின் 4, 5 படங்களை தோல்விப் படங்களாக ஆக்கி விட்டனர். இதைப் பற்றி அந்த நடிகர் என்னிடம் முறையிட்டார் என்றார். ஆக குருவி, அழகிய தமிழ்மகன், வேட்டைக்காரன், வில்லு, சுறா போன்ற படங்கள் தோல்விக்கு இது தான் காரணம். மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள். இப்பவே காவலன் படத்துக்கு டிக்கேட் வாங்கிவிட்டேன். என்னை இடியட் என்று நீங்க திட்டினாலும், ஏதோ விஜய்க்கு நம்மால் முடிந்த உதவி.

இப்ப 3-இடியட்ஸ் படத்தில் விஜய் முடியை வெட்டியவுடன் அவரை தூக்கிவிட்டார்கள். விஜய். முடி ஒட்ட வெட்டப்பட்டுவிட்டதால் தற்போது எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதால், விஜய் மயிரே போச்சு என்று ஃபாரினுக்குப் போய்விட்டார்.

இளங்கோவன் சும்மா இருப்பாரா குஷ்பு, விஜய் போன்ற சினிமா நடிகர்கள் முதலில் காங்கிரசில் சேரவே விரும்பினார்கள். ஆனால் வழியில் வந்தவர்கள் அவர்களை தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள். எனினும் அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக இருக்கும். இதில என்ன வேடிக்கை என்றால் காங்கிரஸும் குஷ்பு போல திமுகவில் சேர்ந்துவிட்டார்கள் என்பது தான்.

கதை எழுதுவது எப்படி?, தூங்காமல் சிறுகதை எப்படி எழுதுவது, எடிட்டிங் எப்படி செய்வது என்று கிழக்கு பதிப்பக எழுத்தாளர்கள் அடிக்கடி பேசுவார்கள். ஆனால் இவர்கள் முரசொலியில் எடிட்டிங் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். கபில் சிபில் பேட்டியை முரசொலியில் மறுபிரசுரம் செய்தார்கள். அதில் ஒரு கேள்வி 'தான் கடைப்பிடித்த கொள்கைகளுக்கு பிரதமரின் ஒப்புதலைப் பெற்றதாக ஆ.ராசா கூறி இருக்கிறாரே?’ என்று பர்கா தத் கேட்க... 'இல்லை! அது உண்மை இல்லை! பிரதமர் உள்ளிட்டோரின் ஒப்புதலைப் பெற்றதாக ராசா கூறுகிறார். ஆனால், அப்படி ஒப்புதல் எதுவும் தரப்படவில்லை’ என்று கபில் சிபல் அழுத்தமாகச் சொன்னார். அந்த வார்த்தைதான் முரசொலி எடிட் செய்திருப்பது!" இப்படி இருக்க வேண்டும் எடிட்டிங்.

ராஜாத்தி அம்மாள் கம்பெனி நடத்துறாங்க. இங்கே இருக்கும் படங்களை பாருங்க. கருணாநிதியின் போட்டோவைத் தேட வேண்டும். வெங்கடாஜலபதி போட்டோவிற்கு கீழே இருக்கும் சாமியின் போட்டோ என்ன ? யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கப்பா. சுப்பிரமணிய சாமியாக இருக்குமோ? நான் முருகனை சொன்னேம்பா!


இந்த வார ஜோக்
இவர்கள் யார் ?
1. தி.மு.க.வில் இணைந்த எல்.கணேசன்
2. மகளிர் ஆணையத் தலைவி சல்மா
3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான யசோதா

இவர்கள் சமூக சேவகர்கள் என்று 79.86 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைகளை தமிழக அரசு (அதாவது நம்முடைய அரசு) ஒதுக்கி இருக்கிறது.


இன்னிக்கு நடந்த ரெய்டை பார்த்தால் அடுத்த வருஷம் சங்கமம் இருக்குமோ இருக்காதோ. பேசாம இந்த சமூக சேவகர்களை நலிந்த கலைஞர்கள் என்று சர்டிப்பிகேட் கொடுத்து ஆட வைக்கலாம்.நயன்தாரா தற்போது தெலுங்கில் தயாராகி வரும் புராண படமொன்றில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். ( அப்பா இந்த படம் போட இந்த நீயூஸ் போதும் )இப்படிக்கு,
இன்னும் நீரா ராடியாவுடன் போன் பேசாத முனி

45 Comments:

மானஸ்தன் said...

:>

Erode Nagaraj... said...

raid at aa!"cash" gang... as it seems (sarvam) jagath-cash-per-rAj, aathee!! enna idhu... enga pOgudhu....!!

Anonymous said...

அருமை. நாழு சொன்னலும் நருகுனு சொன்னிங்க!
-- சிதம்பரம்

Anonymous said...

அருமை. நாழு சொன்னலும் நருகுனு சொன்னிங்க!
-- சிதம்பரம்

Anonymous said...

முனியின் உற்சாகக் கடிதம்... முனியின் சட்டையை அவிழ்த்து பார்க்கணும், மூணு நூல் இருக்குதான்னு...
ஏலகிரிக்கு போன மர்மம் என்ன? என்று முனி ஏன் எழுதலை?

SOMETHING FISHY கார்ட்டூன் மகா தவறு. முதலைப் பண்ணையில் எடுத்த படத்தைதானே போட்டிருக்க வேண்டும். --மலை முழுங்கி மகாதேவன்

ரிஷபன்Meena said...

விஜய் படத்தை தோற்கடித்தார்களாமே! அவர்களையும் அறியாமல் எதாவது நல்லது செய்யத் தான் செய்கிறார்கள்/

எந்த எதிர் கட்சியாவது ஆளும் கட்சி செய்த ஒரு நல்ல காரியத்தை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுமா ?

டி.வி செய்திகளில் கிடைக்கும் ஓரிரண்டு நிமடங்களை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ளும் செய்தித் தொடர்பாளார்கள் குறைவு தான்.

நயன் போர்டில் எழுதுவது மஞ்சள் கமெண்டையே தூக்கி சாப்பிட்டு விட்டது.

கோகலே-கேஜிபி மேட்டருக்கு புது விளக்கம் எதாவது ஒரு திசையிலிருந்து வராமலா போகப் போகுது.

Anonymous said...

இட்லிவடை மேதைகளுக்கு ஒரு கேள்வி.
1 .நீங்கள் நிஜமாகவே 1.76 லட்சம் கோடி பணம் லஞ்சம் ராஜா வாங்கினார் என்பதை நம்புகிறீர்களா?
2. இந்திய மக்கள் அவ்வளவு பணத்தை கட்டணமாக மொபைல் கம்பனிகளுக்கு வருடாந்திரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
எதற்கெல்லாம் ஆம் என்றல் உங்களை கடவுள் வந்தாலும் திருத்த முடியாது.

கருணாநிதி பாமர மக்களுக்கு நன்மை செய்வதை பிடிக்காத மேல்மட்ட மீடியாக்கள் கிளப்பும் மிகைபடுத்தப்பட்ட கற்பனை என்பதை இட்லிவடை ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை நம்ப முடியவில்லை.(கருணாநிதி எதிர்ப்பு என்ற உங்கள் எண்ணத்தை ஒரு கணம் மறந்து பின் சிந்தித்து பாருங்கள்
அரசு பெட்ரோலுக்காக கேசுக்காக ,மண்ணெணைக்காக,உரதிற்காக , ரேஷன் பொருளுக்காக அரசு செலவிடும் பணம் இதைவிட பல மடங்கு அதிகம். அவை லஞ்ச பணமாக அநதந்த மந்திரி வாங்கினார்களா?
அதைப்போல அரசு குறைந்த கட்டணத்தை விதித்ததால் தான் பாமர மக்கள் , வேலைகாரர்கள் , விவசாயிகள் ஒரு பைசாவுக்கு போன் பேச முடிகிறது. இல்லாவிட்டால் உங்களை போன்றவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் போல எட்டா கனியாக இருந்திருக்கும்)
) ----ஒரு பாமரன்

வலைஞன் said...

இந்த வீடியோவை தவறாமல் பார்க்கவும்.இதில் இருக்கும் அரசியவாதி நம் மு.க / ராசா/ஜெயா வாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துகொண்டே!
http://www.youtube.com/watch?v=xKgmScYcK6g&feature=related

யதிராஜ சம்பத் குமார் said...

மும்மூர்த்திகள் சீஸன் - மு.க. மூர்த்திகள் ஃப்யூஷன்... நச்!! :)

Anonymous said...

Thiru Anonymous - we do not believe that Raja has swindled Rs.1.76 crores. But something lesser than that - maybe a few thousand crores. Currently, there is no evidence to suggest the exact amount of bribes as there seem to be many parties involved.
Incicentally, let me squarely ask the question back to you 'do you believe that Raja and entire DMK is innocent and only the oppressive media is creating some story out of nothing?' If you beleive so, I hope there are not many people like you. Otherwise, I would say that even God cannot help not only you but the entire nation (which includes people like us, as well), as I can understand on what basis you guys vote

IdlyVadai said...

//இட்லிவடை மேதைகளுக்கு ஒரு கேள்வி.......//

எதுக்கும் உங்க அட்ரஸை கொடுங்க. சி.பி.ஐயை உங்க வீட்டுக்கு வந்து காபி குடித்துவிட்டு போக சொல்றேன் :-)

IdlyVadai said...

This comment has been removed by the author.

ரிஷபன்Meena said...

பாமரன்,

எலெக்‌ஷன் சமயத்தில் நீலகிரி பகுதிக்கு இது போன்ற வாதங்களுடன் போனா நல்லா கல்லா கட்டலாம்.

Black said...

//இட்லிவடை மேதைகளுக்கு ஒரு கேள்வி.
1 .நீங்கள் நிஜமாகவே 1.76 லட்சம் கோடி பணம் லஞ்சம் ராஜா வாங்கினார் என்பதை நம்புகிறீர்களா?
2. இந்திய மக்கள் அவ்வளவு பணத்தை கட்டணமாக மொபைல் கம்பனிகளுக்கு வருடாந்திரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
எதற்கெல்லாம் ஆம் என்றல் உங்களை கடவுள் வந்தாலும் திருத்த முடியாது. //

Please check the yearend statement of the cellphone companies. you will be shocked to know 1.76 lakh crore is a very small amount. Its like they spend for tea/coffee

அருண் செல்வா said...

To Mr.Anonymous...

First try to understand the issue and write your comments. No one says that raja had taken 1.76 crores. If they alot this 2G in a perfect way.. govet might have got this much money where they can use to develop a lot for india. But they bribe some money and alot 2G to some crab companies.

And one more thing is those companies are not the direct providers. They sold those alotment to the direct providers and made huge money without even touching any single wire. So people are not benefited by alloting 2G in a low rate.

Oru sadharan padikadha pamaranukku therinja vishayam kuda ungalukku puriyala nenaikkumbodhu.. romba kashatam irukku..

விவேகானந்தன் said...

The last line is Highlight:

"இன்னும் நீரா ராடியாவுடன் போன் பேசாத முனி"

SAN said...

Erode Nagaraj,
Appadi podu!!!!!

Anonymous said...

Normally Stalin does not speak like this. It is surprising that having Kanimozhi and Rajathi with them they speak like this. Even today Karunanidhi cannot call Rajathi as his wife. The moment he calls like that he will be accused of bigamy and has to surrender his public post of being a Chief Minister. No Govt. servant even a peon can afford to have two wives. The entire media is ablaze with the relationship between Kanimozhi and Raja. True brothers would have broken the back of the person who is spreading such news. For them afterall the affected person is a step sister. It will be ethically and morally good for Karunanidhi and family not to talk about other people and their morality particularly females at this time. Their own house is full of foul deeds.
It is the duty of every honest Indian to spread the message of loot a single family has carried out. This is much beyond what was done even in Phillipines and some of the South African countries. It is surprising that even the stalwarts in DMK like Anbalagan keep quite. The damage to DMK is considerable. The party is being compromised for a single family. Every true DMK man must retrospect and see to it that the party is saved from this family.

சீனு said...

//ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் என்பது லேட்டஸ்ட் வசனம் !//

திருத்தம். வசனம் அல்ல இட்லிவடையாரே...பஞ்ச் டயலாக்.

"உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" - LOL...

sivakumark said...

yellorum raasa. raidu yendru pesikkondu irukka, idhukku monnaadi irundha marumagan, spectrum, bsnl revamp yendra kathaiyil siemens, hcl contract yendru kodi kodiyaga adithuvittu kadapparaiyai mulungivittu sukku kashayam kudithadu pola kamukkamai irukkirar. nadakkattum.. nadakkattum... yellaam therintha yethirkatchigalum vaayai moodikkondu irukkindrana.

kggouthaman said...

// இப்படிக்கு,
இன்னும் நீரா ராடியாவுடன் போன் பேசாத முனி//

அது சரிதான்! அப்பிடிப் பேசியிருந்தா, இப்போ சி பி ஐ யிடம் அல்லவா பதில் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்!

ஆழ்வார்க்கடியான் said...

//இன்னும் நீரா ராடியாவுடன் போன் பேசாத முனி//

பாக்கி இருக்கற டேப் எல்லாம் வெளில வந்தால் தெரியும் முனி ராடியா கிட்ட பேசினாரா இல்லையான்னு :)

ரூம் போட்டு யோசிப்பவர் said...

// இட்லிவடை மேதைகளுக்கு ஒரு கேள்வி.
1 .நீங்கள் நிஜமாகவே 1.76 லட்சம் கோடி பணம் லஞ்சம் ராஜா வாங்கினார் என்பதை நம்புகிறீர்களா?
2. இந்திய மக்கள் அவ்வளவு பணத்தை கட்டணமாக மொபைல் கம்பனிகளுக்கு வருடாந்திரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா? //

ராஜா வாங்கவில்லை. இவ்வளவு வாங்கியிருக்க முடியாது, ஒரு தனி நபரால். ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பினாமி பெயர்களில், நூற்றுக் கணக்கான போங்கு கம்பெனிகள் உருவாக்கப் பட்டு, அவைகளுக்கு, அடிமாட்டு விலையில் லைசென்ஸ் கொடுக்கப் பட்டு, அவர்கள் அந்த லைசென்சை, பல நூறு மடங்கு விலையில் உடனே விற்றுவிட்டனர். அப்படிக் கிடைத்த பல கோடி ரூபாய் கணக்கில், பாதியை சுவிஸ் வங்கியில், லைசென்ஸ் கொடுத்த / வழங்கப் படக் கையெழுத்திட்டவர்களின் பெயரில் போட்டாலே பல்லாயிரக் கோடி வரும். இந்தியாவிற்குள், இந்தியர்கள் பெயரில் இருந்தால், எப்போதாவது, எப்படியாவது இந்தியர்களுக்கு உதவும் என்று நம்பலாம். மாறாக, சுவிஸ் வங்கியில், அயல் நாட்டவர் பெயரில் இருந்தால், நீங்களும் நானும் பஞ்சு மிட்டாய் நக்கவேண்டியதுதான்!

ரோமிங் ராமன் said...

//இட்லிவடை மேதைகளுக்கு ஒரு கேள்வி.
1 .நீங்கள் நிஜமாகவே 1.76 லட்சம் கோடி பணம் லஞ்சம் ராஜா//...

முதலில், முதல்வர் மாதிரி யாரும் தன்னைத்தானே மேதை என்றோ தமிழறிஞர் என்றோ சொல்லிக் கொள்வதில்லை(காமராஜர்,ராஜாஜி,மொரார்ஜி உட்பட..)
ஒரு ஆயிரத்துச் சில்லறை கோடிக்கு வாங்கப்பட்ட கம்பெனியின் லைசன்ஸ்,விற்கும்போது (சட்டப்படி விற்கக்கூடாது) 45சதவீதம் மட்டுமே 11ஆயிரம் கோடியைத்தொடுகிறது.. இது போல ஒரு நூறு லைசன்ஸ் போயாச்சு!!இதையே அரசாங்கம் நேரடி ஏலத்தில் விட்டிருந்தால் இந்த வருமானம் வந்திருக்காதா?? இது தேசத்திற்கு நஷ்டமில்லையா? இதற்குள் இருக்கும் உள்குத்து என்ன என்பதுதானே கேள்வி சாமி!!!

யோகி said...

கடைசி ஃபோட்டோவுக்கு என்னுடைய முதல் application!

Anonymous said...

ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

வலைஞன் said...

கீழே உள்ள செய்தி இன்றைய
மாலைமலரில் வந்துள்ளது!:
(நன்றி: மாலை மலர்)
===================================
புதுடெல்லி டிச.16-

புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றியவர் கூத்தப்பெருமாள். ஒரு நிதி நிறுவனத்தில், நயினார் முகமது என்பவர் கடன் வாங்கத் தேவையான சான்றிதழ் அளிக்க இவர் கடந்த 1993-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி ரூ.50 லஞ்சம் வாங்கினார். இது குறித்து நயினார் முகமது அளித்த புகாரின் பேரில் கூத்தப்பெருமாளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கூத்தப்பெருமாளுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் செய்த அப்பீல், 2007-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கூத்தப்பெருமாள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, சுரிந்தர் சிங் ஆகியோர் ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தனர்.

===================================

jaisankar jaganathan said...

//ஆழ்வார்க்கடியான் said...
//இன்னும் நீரா ராடியாவுடன் போன் பேசாத முனி//

பாக்கி இருக்கற டேப் எல்லாம் வெளில வந்தால் தெரியும் முனி ராடியா கிட்ட பேசினாரா இல்லையான்னு :)//

அருமை
இப்படிக்கு
வந்தியத்தேவன்

Palanivel Raj G said...

Dont worry.. He wont get award for this movie.. Cuz they are not going to come back to power again....

Mukkodan said...

//இட்லிவடை மேதைகளுக்கு ஒரு கேள்வி.
1 .நீங்கள் நிஜமாகவே 1.76 லட்சம் கோடி பணம் லஞ்சம் ராஜா வாங்கினார் என்பதை நம்புகிறீர்களா?
2. இந்திய மக்கள் அவ்வளவு பணத்தை கட்டணமாக மொபைல் கம்பனிகளுக்கு வருடாந்திரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
எதற்கெல்லாம் ஆம் என்றல் உங்களை கடவுள் வந்தாலும் திருத்த முடியாது. //

------------

1. It's an approx loss to the Exchequer to the Govt based on 3G auction. The Actual 2G loss would be even higher(5L Crores+) because 2G market is very very big and 3G is completely negligible as compared to 2G market volume.

2. This is an one-time payment from the Mobile comps to Govt and they will make their money and break-even within 4-5 yrs. depending on the auction amt.

With ppl like you Corruption has already Won leaps and bounds.

ராஜரத்தினம் said...

//ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன்//

ஊர்ல ஒழுக்கம் கெட்ட பெண்கள் மற்றவர்களிடம் நான் கற்பில் நெருப்பு போன்றவள் அப்டீனு சொல்லிகிட்டே அந்த வேலையை தொடர்வார்கள். அதே போலதானோ இதுவும்?

தென்னவன் said...

இட்லி,
இந்த மாதிரி பாமரர்கள் இருக்கும் வரை கருணாநிதிக்கு கவலையே கிடையாது. 1. 8 லட்சம் அரசுக்கு ஏற்பட்ட தோராயமான இழப்பு. லெட்டர் பட கம்பனிகளுக்கு விதிமுறைகளை மீறி குறைந்த விலைக்கு 2G அலைவரிசையை விற்றதால் ஏற்பட்ட இழப்பு. இப்படி குறைந்த விலைக்கு விதிமுறைகளை மீறி விற்க ராசா அண்ட் கோ சில ஆயிரம் கோடிகளை சுருட்டி இருக்கலாம் எனபது குற்ற சாட்டு.
மக்களுக்கு குறைவான விலையில் 2G சேவை கிடைக்க வேண்டும் என குறைந்த விலைக்கு விற்றதாக சொல்கிறார் திருவாளர் ராசா. குறைந்த விலைக்கு வாங்கிய நிறுவனங்கள் மிக மிக அதிக விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று விட்டு பல கோடிகளை லாபம் பார்த்து விட்டது. அதிக விலை கொடுத்து வாங்கிய பெரிய நிறுவனங்கள் மக்களுக்கு குறைந்த விலைக்கு சேவை அளிப்பார்கள் என்று யாராவது நம்புகீர்களா??
ராஜா மட்டும் அல்ல, சில பல தலைகளும் இதில் வெளியே வரும் உண்மையாக விசரை நடத்தினால். உச்ச நீதி மன்றம் மட்டும் தான் ஒரு நம்பிக்கை. இடையில் நீதி பதிகளை மாற்றில் அதுவும் அம்போதான். ஊழல் வாதிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. சு. சாமி கூட கட்சி மாறி விடுவார்.
இதை எல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருப்பதக்கு பிரதமருக்கு கேவலமாக இல்லையா?

Anonymous said...

அப்பா பாமர சனமே,
உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்

கலைஞரே ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி ஊழலை
ஒருவர் மட்டும் செய்திருக்க முடியாது என்று "எங்கப்பன் குதிருக்குள் இல்லை"
என்ற கணக்காய் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.

இன்னொரு விஷயம்!
1996: "ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று எங்கேயோ ஒருகுரல்
கேட்டது.
அன்று அது மனிதன் குரல்.

2010
இன்று எந்திரனாய் மாறி விட்டதால் அதற்கு பேசும் திறன் இல்லை என்று சொல்கிறார்கள்!

பாலாஜி

சீனு said...

//இட்லிவடை மேதைகளுக்கு ஒரு கேள்வி.
1 .நீங்கள் நிஜமாகவே 1.76 லட்சம் கோடி பணம் லஞ்சம் ராஜா வாங்கினார் என்பதை நம்புகிறீர்களா?
2. இந்திய மக்கள் அவ்வளவு பணத்தை கட்டணமாக மொபைல் கம்பனிகளுக்கு வருடாந்திரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
எதற்கெல்லாம் ஆம் என்றல் உங்களை கடவுள் வந்தாலும் திருத்த முடியாது.
//

மிஸ்டர். பாமரன்,

நிஜமாகவே நீங்க பாமரன் தான்.

1. ராஜா அத்தனை கோடிகளையும் சுருட்டிக்கொண்டார் என்று யாரும் சொல்லவில்லை. 1 ரூ தனக்கு வருகிறது என்பதற்காக அரசாங்கத்துக்கு வரவேண்டிய 1000 ரூபாயை வரவிடாமல் செய்துவிட்டார் என்பது தான் குற்றச்சாட்டு. இதை தெரியாமல், நீங்களும் கருணாநிதி போல பேசுறீங்களே! ராஜாவுக்கு வந்தது சில ஆயிரம் கோடிகள். அவர் அதற்காக விட்டுக்கொடுத்தது பொதுமக்களின் சில லட்சம் கோடிகள். புரியும் என்று நினைக்கிறேன்.

2. இந்திய மக்கள் அவ்வளவு கொடுப்பார்களா என்ற புள்ளிவிபரம் எனக்கு தெரியாது. ஆனால், இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பேப்பர் வேல்யு. அதுக்காக அந்த பணம் வெறும் கற்பனை என்று சொல்ல முடியாது. அண்ணா அறிவாலயத்தை, 2001-ல் இருந்த market value-வுக்கு கருணாநிதி கொடுப்பார் என்று சொல்லுங்கள். நான் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறேன். கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்? இல்லை. ராசா தான் அவர் வீட்டை பழைய market value-வுக்கு கொடுப்பாரா? கொடுக்கமாட்டார் தானே? ஏனென்றால் அவர் முட்டாள் இல்லை. ஆனால், ராசா என்கிறா மத்திய அமைச்சர் முட்டாள் தனமாக நடந்து கொண்டு, அனைவரையும் முட்டாளாக்கியிருக்கிறார். சும்மாவா? அவர் படித்து வந்த பாடசாலை அப்படி...

//அரசு பெட்ரோலுக்காக கேசுக்காக ,மண்ணெணைக்காக,உரதிற்காக , ரேஷன் பொருளுக்காக அரசு செலவிடும் பணம் இதைவிட பல மடங்கு அதிகம்//

அதற்காக இதை விட்டுவிடலாம் என்கிறீர்களா? சரி தான். இப்ப, "உங்களை கடவுள் வந்தாலும் திருத்த முடியாது".

// அவை லஞ்ச பணமாக அநதந்த மந்திரி வாங்கினார்களா?//

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 35-க்கும் கீழே. ஏன் என்று சிந்தித்தது உண்டா? அது சரி! சிந்தித்தால் தான் நீங்கள் பாமரராக இருக்கமாட்டீர்களே!!!

//கருணாநிதி பாமர மக்களுக்கு நன்மை செய்வதை பிடிக்காத மேல்மட்ட மீடியாக்கள் கிளப்பும் மிகைபடுத்தப்பட்ட கற்பனை என்பதை இட்லிவடை ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை நம்ப முடியவில்லை.//

நீங்கள் மக்கள் என்று சொல்வதை அவருடைய மக்கள் தானே? இல்லை, பாமர மக்கள் என்று சொல்வதை பார்த்தால் உங்களை சொல்கிறீர்களா?

நீங்கள் சொன்னதில் இரண்டாம் பாதியில் வேண்டுமானால் உண்மை இருக்கலாம். அவர்களுக்கு 'ஏதோ' ஒரு காரணத்தால் சுரேஷ் கல்மாடியையும், இப்ப ராசாவையும் பிடிக்கவில்லை. அந்த 'ஏதோ' பணமாக இருக்கலாம் என்பது என் வியூகம்.

ஆனால், நேற்று NDTV-Hindu-வில் 'மட்டும்' ஜெகத் கஸ்பர் பக்கம் தவறில்லை என்பதை திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்களே, கவணித்தீர்களா? அது சரி! உங்களை போன்ற பாமரர்களுக்கு எங்கே புரிய போகிறது?

//கருணாநிதி எதிர்ப்பு என்ற உங்கள் எண்ணத்தை ஒரு கணம் மறந்து பின் சிந்தித்து பாருங்கள் //

கருணாநிதிக்கு ஜால்ரா என்ற உங்கள் எண்ணத்தை ஒரு கணம் மறந்து பின் சிந்தித்து பாருங்கள்.

//அதைப்போல அரசு குறைந்த கட்டணத்தை விதித்ததால் தான் பாமர மக்கள் , வேலைகாரர்கள் , விவசாயிகள் ஒரு பைசாவுக்கு போன் பேச முடிகிறது.//

டெலிபோனை பொருத்தவரை ஒரு குருந்தகவலுக்கு 1 பைசாவிற்கும் குறைவான செலவே ஏற்படுகிறது. 135 characters SMS செய்ய அந்த அலைவரிசை மூலமாக செல்ல செலவு, 1 பைசாவிற்கும் குறைவு. 1 பைசாவை விட குறைவாக எனக்கு தெரியவில்லை. வேண்டுமென்றால் .1 பைசா என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால், தொலைபேசி நிறுவனங்கள் ஒரு SMS-க்கு விலையை 1 ரூபாயாக வைத்திருக்கிறது. அதாவது 1000 மடங்கு லாபம். இதை எந்த அரசாங்கம் இதுவரை தட்டிக்கேட்டது?

//இல்லாவிட்டால் உங்களை போன்றவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் போல எட்டா கனியாக இருந்திருக்கும்)//

இன்னும் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? ஒரு காலத்தில் 1 மணிநேர Brosing-க்கு 60 ரூபாய். இன்று 15 ரூபாய். இதைவிட குறையுமா என்றால், குறையலாம். Usage அதிகமால் விலை குறையும்.

சீனு said...
This comment has been removed by the author.
சீனு said...
This comment has been removed by the author.
சீனு said...
This comment has been removed by the author.
சீனு said...
This comment has been removed by the author.
சீனு said...
This comment has been removed by the author.
சீனு said...
This comment has been removed by the author.
Anonymous said...

1 ரூ தனக்கு வருகிறது என்பதற்காக அரசாங்கத்துக்கு வரவேண்டிய 1000 ரூபாயை வரவிடாமல் செய்துவிட்டார் என்பது தான் குற்றச்சாட்டு.

---------
It's exactly the same logic/modus operandi as all other corruptions done since '47. "Pamaran"s of this State/Nation will never understand with a biased vision.

Anonymous said...

Karunanithi & all party politician who took so much corruption during last 30 years should be jailed immediately by finding their growth in wealth. Also peoples who are supporting them should be jailed to clean up our country to make sure that only hard work, honestly and transparency are way to live, way to succeed us as a super power in the world.

சுபத்ரா said...

””மும்மூர்த்திகள் சீசன்;
மு.க. மூர்த்திகள் ஃப்யூஷன்””

Nuclear(Family) Fusion :))

R.Gopi said...

//ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன்//

ஊழலுக்கு நெருப்பு போன்றவன்...
சாம்பாருக்கு பருப்பு போன்றவன்..
மழைக்கு குடை போன்றவன்...
வெயிலுக்கு செருப்பு போன்றவன்..

இதெல்லாம் தான் தமிழறிஞர் பட்டம் குடுத்தப்பவே / வாங்கினப்போவே எழுதுவீங்கன்னு தெரியுமே?

1,76,00,000 கோடி எங்கய்யா போச்சு? இதுக்கு எல்லாருக்கும் புரியற மாதிரி பதில் சொல்லுங்க "வாழும் வள்ளுவரே”!!??

Anonymous said...

Karuna felt guilty of this scam from the beginning. That's why he repeatedly said - "தமிழர்களே தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் கிடப்பேன், அதில் நீங்கள் பயணம் செயலாம், கவிழ்ந்து விட மாட்டேன்". It's really shameful that there isn't any large scale demonstrations or protest in Tamilnadu except by DYFI.