உச்ச நீதிமன்றம் 2ஜி விவகாரத்தில் சிபிஐ, மற்றும் மத்திய அரசை திட்டி பிறகு உடனே ரோஷம் வராமல், ஓபாமா இந்தியா வந்து டான்ஸ் ஆடிவிட்டு போன பிறகு மீடியாவிற்கு வந்துள்ளது.
மத்திய தணிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையில் 2ஜி ஏலத்தில் மத்திய அரசிற்கு சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடிகள் வரை நஷ்டமாகியிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜெயந்தி நடராஜனை தினமும் டிவியில் பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. ராகிங் தடை சட்டம் கொண்டு டிவியில் அவரை கேள்விக் கோட்பவர்களை அரஸ்ட் செய்தாலும் தப்பு இல்லை.
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாகியது ஒரு புறமும், பிரதமர் ஜி20 உச்சி மாநாட்டிற்காக சென்றிருப்பதுவும் சேர்ந்து இப்பொழுதும் இவ்விவகாரத்தை ஒன்றுமில்லாமல் அடிப்பதற்காகப் புறப்பட்டிருக்கின்றன. ராஜா நான் ராஜினாமா செய்ய முடியாது என்று சொன்னவுடன், மீடியா மன்மோகன் சிங் பக்கம் திரும்பி "Mr.Clean , what is your take on this ?" என்ற ரீதியில் கேள்வி கேட்க அவரோ அசராமல், விஷயம் கோர்ட்டில் இருக்கு என்று பதில் சொல்லுகிறார்.
நீண்ட காலமாக எதிர்க்கட்சிகளின் போராட்டம், தொடர்ச்சியாக சுப்ரீம் கோர்ட்டின் கண்டனம், மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை, சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு என ராசாவிற்கு எதிராக பல்வேறு சக்திகளின் ஆதரவு இருந்தாலும், இன்னும் இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மழுப்பியே வருவது ஏனென்று புரியவில்லை.
காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், ஆகியவற்றில் கட்சியின் செல்வாக்கைக் காபந்து செய்யும் முயற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ், ஸ்பெக்ட்ரத்தில் மட்டும் விநோதமான காரணத்தைக் கூறுகிறது. மற்ற ஊழலில் தொடர்புடையவர்கள் காங்கிரஸார், இதில் தொடர்புடையது திமுக அமைச்சர்; எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கழகமே என காங்கிரஸ் கூறுகிறது. இது எவ்வகையான சமாதானம் என்று புரியவில்லை. ஊழலுக்கு கட்சி பேதம் கற்பிக்கப்படுகிறது. இந்த காங்கிரஸின் வலுவற்ற சால்ஜாப்புகளைப் பார்த்தால் காங்கிரஸுக்கே இதில் கணிசமான பங்கு இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.
இந்நிலையில் ராசாவின் இடத்தைக் கனிமொழி நிரப்புவார் என்ற ஹேஷ்யங்களெல்லாம் பத்திரிக்கையில் கிளம்பின. இதற்கு கனிமொழியின் பிரணாப் முகர்ஜியினுடனான சந்திப்பு ஒரு காரணம். என்ன பேசினார் என்று நமக்கு என்ன தெரியும் ? இதற்கிடையே ராசா பதவி விலக வேண்டுமென காங்கிரஸிற்குள்ளேயே ஈவிகேஎஸ், மணி ஷங்கர ஐயர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். பாவம் மன்மோகன் சிங்கால் அது மாதிரி சொல்ல முடியவில்லை. ராகுல் எப்படி பட்ட முதலமைச்சர் வேண்டும் என்று சொல்ல முடிகிறது ஆனால் ராசா பற்றி மூச் !
கிழக்கு பத்ரி சமீபத்தில் ஏதும் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டாரா எனத் தெரியவில்லை. இராசா பற்றி அவர் எழுதியதை பார்த்தால் ஜெயந்தி நடராஜனுக்கு பக்கத்தில் இவருக்கு ஒரு சேர் போட்டு உட்கார வைத்துடுடலாம் போல. இது அவரது சொந்தக் கருத்தாகவே இருந்தாலும், பேத்தலான கருத்தாகத் தெரிகிறது.
"இத்தனை ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விட்டால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று கேனையன் ஒருவன் கணக்கிட்டால், அதையும் அனைவரும் நம்புகிறீர்களே!"
என்று கேட்டுள்ளார். அது சரிதான். ஆனால் 3G அலைக்கற்றை ஏலத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இப்போது அரசிற்குக் கிடைத்துள்ளதே?? அதற்கு என்ன சொல்கிறார் பத்ரி? 2G விவகாரத்திற்குப் பிறகு பயந்து போன ராசா சற்றே வெளிப்படையாக நடத்திய ஏலம் இது. இதில் வந்துள்ள வருமானத்தை நம்புவர்களையும் பத்ரி கேனையன் என்று விளிப்பாரா என்பது அவருக்கே வெளிச்சம். அல்லது அவரும் கழக பாணியில் 2G ஏலம் ஒரு ரூபாய் ரேஷன் அரிசி, 3G ஏலம் டபுள் டீர் பாஸுமதி அரிசி என்று சொல்வாரோ?
2G அலைக்கற்றை ஏலத்தை எடுத்த யூனிடெக் நிறுவனம், அதே அலைக்கற்றையை அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு பலமடங்கு லாபத்தில் விற்று விட்டது. இதிலும் யார் கேனையன்? யூனிடெக்கா? அதனை விலைக்கு வாங்கிய அரபு நிறுவனமா அல்லது பாரதத்தின் ஸ்ரீமான் பொது ஜனங்களா?
இந்த ஏல விவகாரம் தொடர்பாக பிரதமருக்கும் ராசாவிற்குமிடையே மூன்று கடிதப் போக்குவரத்து நிகழ்ந்திருக்கிறது. இவற்றில் முதலாவது கடிதத்தில் ராசாவிடம், 2G ஏலத்தில் வெளிப்படைத் தன்மையையும், நேர்மையையும் கடைபிடிக்குமாறு பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஆனால் நடந்தது நேரெதிர்...
பத்ரி பிரசன்னாவிடன் ( உதாரணத்துக்கு தான் ) இப்படி செய்யாதே என்று சொல்லுகிறார் ஆனால் பிரசன்னா ( உதாரணத்துக்கு தான் ) அவர் இஷ்டம் போல செய்கிறார் அப்படி செய்தால் பத்ரி பிரசன்னா செய்தது சரி என்று சொல்லுவாரா ?
ஜவுளிக் கடை ஆடித் தள்ளுபடி ரீதியில், முதலில் வருபவருக்கே முதலில் தரப்படும் என்று சொல்லி, டெண்டர் முடிவடையும் தேதியையும் மறைத்து முன்னதாகவே ஏலத்தை முடித்து விட்டார். ( இன்றைய மாத்தூர் பேட்டியை பாருங்கள்). இந்த விவகாரத்தில் பிரதமரின் வார்த்தை மீறப்பட்ட பிறகும் கூட, ராசா ஊழலில் ஈடுபடவில்லை என அவரே என்னிடம் தெரிவித்து விட்டார் என பிரதமர் ராசாவை காபந்து செய்கிறார். விஞ்ஞானப் பூர்வமான நேர்மை!!
இதை பத்ரி கூற்றிப்படி, பார்த்தால் கிழக்கு புத்தகங்களை MRP விலைக்கு விற்காமல் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கலாம் என்பது போல இருக்கு. அப்படி விற்றால் அது விற்றவரின் கொள்கை என்று சொல்லுவாரா ?
இவ்விவகாரத்தில் இன்னும் விநோதமாக, ஒருவர் போல் மற்றொருவர் என பிரதமர் துவங்கி ஜெயந்தி நடராஜன் ராசா என அனைவருமே மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கையை தாம் பார்க்கவில்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். ஆனால் அதே வேளையில், தணிக்கைக் குழுவின் அறிக்கை இறுதியானதல்ல என்றும் கூறுகின்றனர்.
ராசா மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் திமுக தனது ஆதரவை திரும்பப் பெறும் என்ற பயம் ஏதும் காங்கிரஸுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா துவங்கி, மாயாவதி வரை அரசை காப்பாற்ற பலர் இருக்கின்றனர். இன்னமும் சொல்லப் போனால் அரசைக் காப்பாற்றும் கலையில் காங்கிரஸ் மிகுந்த தேர்ச்சியுடைய கட்சி என்பது அண்டமனைத்திற்கும் வெளிச்சம். சில வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற மைய மண்டபத்திலேயே அவ்விவகாரம் சந்தி சிரித்தது. ஆக காங்கிரஸிற்கு அந்த பயமெல்லாம் இல்லை என்பது தெளிவு. வேறு என்னவாகயிருக்கும் என்று யோசித்தால் புலப்படுவது ஒன்றே ஒன்றுதான். ஒன்றரை லட்சம் கோடி ஊழலில் பயிருக்குப் பாயும் நீர் களைக்கும் பாய்வது போல காங்கிரஸில் "சிலருக்குப்" பாய்ந்திருக்கிறது. யார் அந்த சிலர் என்பது நிச்சயமாக வெளிவரப் போவதில்லை. இதுவும் ஒரு மெகா போஃபர்ஸ் போலதான்.
ராசா விஷயத்தில் பிரதமர் சரியாக நடந்துக்கொள்ள வில்லை என்றால், Mr.Clean சோப்பு விளம்பரத்துக்கு கூட அவர் போஸ் கொடுக்க லாயக்கு இல்லாதவராக போய்விடுவார்.
தொடர்புடைய பதிவுகள்:
பூதாகாரமாகும் 'ஸ்பெக்ட்ரம்' பூதம்..
ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ...
ராசா சென்னை பயணம் !
முக்கோணக் கதை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, November 13, 2010
Mr.Clean
Posted by IdlyVadai at 11/13/2010 02:43:00 PM
Labels: அரசியல், செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)

பொண்ணுக்கு நல்லா பாட தெரியுமா ?
பானிபூரிக்கும் பேல் பூரிக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள், எப்படி தான் ஹன்சிகா அடுத்த குஷ்பு என்று கண்டுப்டிச்சாங்களோ ?








13 Comments:
//ராசா விஷயத்தில் பிரதமர் சரியாக நடந்துக்கொள்ள வில்லை என்றால், Mr.Clean சோப்பு விளம்பரத்துக்கு கூட அவர் போஸ் கொடுக்க லாயக்கு இல்லாதவராக போய்விடுவார்.//
அப்ப சர்ஃப் எக்சல்க்கு போஸ் கொடுக்கலாமா?
சர்ஃப் எக்சல்க்கு= "கறை நல்லது"
//இன்னமும் சொல்லப் போனால் அரசைக் காப்பாற்றும் கலையில் காங்கிரஸ் மிகுந்த தேர்ச்சியுடைய கட்சி என்பது அண்டமனைத்திற்கும் வெளிச்சம்//
:))
Raja : நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாட்டப்படுகின்றேன்.? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்து வைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா போன்ற ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது. மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கையை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தக கூட்டு உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான் அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
பிரதமர் இதுகுறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை. நீரோட்டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும். என்று குறிப்பிட்டு இருக்கிறேன். அது மட்டுமல்ல இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிறுப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தக் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.
2ஜி என்பது பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசிபோல! பொதுவிநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது. என்பதற்காக பாசுமதி அரிசியை ஒப்பிடு காட்டி ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2ஜி சேவை எனபது சதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் சேவை. 3ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்க்கும், விடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம் விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர 3ஜி அல்ல! இன்னுமொரு 10,20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்பதாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுக்குப் பிறகு 3ஜி சேவை கூட எளிதாக்கப்படலாம்; பட வேண்டும். அப்போது 4ஜி சேவையும் வந்துவிடும். இது குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும் இப்போதைய ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.
தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல்... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன,. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது.
அரசியல் நையாண்டியில் இட்லியை அடிக்க ஆளே இல்லை.
//இதை பத்ரி கூற்றிப்படி, பார்த்தால் கிழக்கு புத்தகங்களை MRP விலைக்கு விற்காமல் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கலாம் என்பது போல இருக்கு. அப்படி விற்றால் அது விற்றவரின் கொள்கை என்று சொல்லுவாரா ?//
என்ன சார் அரசின் பணத்துக்கு சொல்ற லாஜிக்-ஐ அவங்க அவங்க பணத்துக்கும் பொருத்தி பார்க்கலாமா ? அப்பறம் கருத்து சுதந்திரம் என்னாவது?
சில சந்தேகங்கள்:
1. 3ஜி 66,000 கோடிக்கு போயிற்று; 2ஜி 90,000 - 1,76,000 கோடிக்குப் போயிருக்கலாம் என்று சி ஏ ஜி சொல்கிறது. இருக்கலாம் என்றால், 2ஜி லைசென்ஸ் வாஙிய கம்பனிகள் இத்தனை லாபம் பார்த்துவிட்டார்களா? அவர்களின் இன்கம் ஸ்டேட்மென்ட்டில் தெரியுமே? யாரிடமாவது விவரம் இருக்கிறதா?
2. ராஜா / தி மு க / காங்கிரசிற்கு எத்தனை போயிருக்கும் என்று நம்பப்படுகிறது? அந்தப் பணத்ததை இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் கண்டுபிடிக்க முடியாதா? இல்லை, எல்லாமே ஸ்விஸ் போய்விட்டதா?
3. முதலில் லைசன்ஸ் வாங்கியவர்கள் அதை விற்கக்கூடாது என்று அரசு அதிகாரிகள் நிபந்தனை ஏன் போடவில்லை?
4. நிலத்தில் பாடுபடும் விவசாயிகள் அரசுக்கு நிர்ணயிக்கப் பட்ட விலையில்தான் தங்கள் விளைச்சலை விற்கவேண்டும்; ஆனால் மற்ற எந்த வியாபாரத்திலும் லாபத்திற்கு எல்லை கிடையாது! (மருந்துகள் விலை நிர்ணயம் கூட நியாயமாக இல்லை). இதற்கு எதிர்கட்சிகள் என்ன செய்தன?
5. ஸெய்ன்ட் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்ததற்கு, காங்கிரஸ் ஏன் அவரது ஊழல்களைக் குறிப்பிட்டு அந்த ஆதரவை நிராகரிக்கவில்லை?
6. இந்த விவகாரத்தின் முடிவில் தி மு க பாதிக்கப் படுமானால், அதன் கோபத்தை / வெறியைத் தாங்கும் சக்தி தமிழக மக்களுக்கு இருக்கிறதா?
7. அதை விட, செய்ன்ட் ஜெயலலிதா (உ பி ச வுடன்) மீண்டும் வந்தால் தமிழகம் தாங்குமா?
எது நல்லது என்று எனக்குப் புரியவில்லை! யாரேனும் உதவுங்களேன்.
-ஜெகன்னாதன்
//அப்ப சர்ஃப் எக்சல்க்கு போஸ் கொடுக்கலாமா?
சர்ஃப் எக்சல்க்கு= "கறை நல்லது"//
Super ji....
2ஜி லைசென்ஸ் வாஙிய கம்பனிகள் இத்தனை லாபம் பார்த்துவிட்டார்களா? அவர்களின் இன்கம் ஸ்டேட்மென்ட்டில் தெரியுமே? //
ஆனாலும் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்களே? எந்த கம்பெனி சார் பாலன்ஸ்ஷீட்ல நிஜத்தை சொல்றாங்க? எந்தக் கம்பெனியும் சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸை ஹையர் பண்றதே பொய் சொல்றதுக்குதானே?
//ஆனாலும் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கீங்களே? எந்த கம்பெனி சார் பாலன்ஸ்ஷீட்ல நிஜத்தை சொல்றாங்க? எந்தக் கம்பெனியும் சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸை ஹையர் பண்றதே பொய் சொல்றதுக்குதானே?//
ம்ம்.. 99.9999...% உண்மை!
ராஜவைக்காப்பாற்ற முயலும் கருணாநிதி, "பா. ஜ. க. ஆட்சியில் 1G ஏலத்தைப்போல் தான் முதலில் வருபவர்க்கு முதல் பங்கு என்ற விதிமுரையைப்பயன்படுதினார்" என்று கூறுவது அபத்தம். பா. ஜ. க. ஆட்சியின்போது இந்தியாவில் செல்பேசி மிகக்குறைவு. அயல்நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதுப்பற்றி அதிகம் யோசித்தார்கள். அவர்களை ஊக்குவிக்கவே இந்த முறையைக்க்கையன்டர்கள். பாத்து வருடத்திற்கு பிறகும் அதே முறையை உபயோகிப்பது வேடிக்கை தான்.
// இந்த விவகாரத்தின் முடிவில் தி மு க பாதிக்கப் படுமானால், அதன் கோபத்தை / வெறியைத் தாங்கும் சக்தி தமிழக மக்களுக்கு இருக்கிறதா?//
எனக்கு இந்த கேள்வியே புரியவில்லை. ஒரு தனி கட்சியின் கோபம் ஒரு நாட்டு மக்களை என்ன செய்துவிடும் ?
What Badri is saying is correct. In all the bloggers only he has understood the different between auction and "first come first served basis". Unlike you point out, 2G was not auctioned at all. That is the problem. The question is why 2G was not auctioned as 3G and his response is it was never auctioned since 1999 and therefore he did not.
I am not suggesting that Raja did not do anything wrong. But just indicating if we understand the problem correctly we will have better solutions.
You should understand the issue and check facts first. It is not a Arabic Company. Its a Norwegian co.
//What Badri is saying is correct. In all the bloggers only he has understood the different between auction and "first come first served basis". Unlike you point out, 2G was not auctioned at all. That is the problem. The question is why 2G was not auctioned as 3G and his response is it was never auctioned since 1999 and therefore he did not.//
The question is also at what price and we seem to ignore that even if we assume it is FCFS policy!!
PM apparently asked aa.raasaa to follow certain procedures and aa.raasaa seemed to have ignored all of that but still insists that PMO was kept in the loop. What a contradiction!!
Post a Comment