பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 11, 2010

சூடு பிடிக்கும் அரசியல்

இன்று கோடநாடு புறப்படுவதற்கு முன் ஜெயலலிதா டைம்ஸ் செய்தி சேனலுக்கு இந்த பேட்டியை அளித்துள்ளார்.
அதில்

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசாவை நீக்க வேண்டும். அவ்வாறு அவரை நீக்கினால் கூட்டணி அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளும் என்று காங்கிரஸ் கருதுவது இயற்கையே. அத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு தரும்."

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தருவதற்காக தான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், பொது வாழ்க்கையில் தூய்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மக்களவையில் உள்ள 9 அதிமுக எம்.பி.,க்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 18 எம்.பி.,க்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முழு பேட்டியை இங்கே படிக்கலாம்

இன்று அல்லது நாளை கலைஞர் மன்மோகன் சிங்கிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராசா விவகாரம் மூலம் திமுகவை களங்கப்படுத்த முயற்சி என்று சில மணி நேரம் முன்பு கி. வீரமணி சொல்லியிருக்கார்.

12 Comments:

Anonymous said...

persukku thookam pochu

Congress Replyகூட்டணியில் எங்கே இடமிருக்கிறது: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பதில்

http://nakkheeran.in/users/frmNews.aspx?N=43094

Anonymous said...

காங்கிரஸுக்கு தலையெழுத்து...

Between the devil and the deep sea! :-)

Anonymous said...

மீடியா பசிக்கு கருவாடு போட்டுவிட்டு ,அம்மா எங்கே கொடநாடு போயாச்சா?

kishore said...

தமிழன் என்ன மடையனா.இவங்க காது குத்திட்டே இருப்பாங்க நம்ம மண்டைய போட்டு குழம்பிட்டே இருக்கணுமா ? ராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் நாம் கவலைபடக்கூடாது.நம்ம பணிய சிறப்பா செய்வோம் நாம் செய்போம்.

அமுதப்ரியன் said...

/*
ராசா விவகாரம் மூலம் திமுகவை களங்கப்படுத்த முயற்சி என்று சில மணி நேரம் முன்பு கி. வீரமணி சொல்லியிருக்கார்.
*/
ஐயா வீரமணி களங்கப்படுத்துனத எப்படி மறுபடியும் களங்கப்படுத்த முடியும். அதாவது திமுக ஏற்கனவே களங்கப்பட்டு விட்டது. இது உமக்கும் தெரியும். என்ன செய்ய நீரும் மணியை ரொம்பத்தான் ஆட்டுறீரு.

Anonymous said...

அம்மாவுக்கு அரசியல் தந்திரம் பத்தாது, இந்த மாதிரி எடுத்தேன் கவிழ்தேன்னு பேசுனா காங்கிரஸ் எப்படி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும். ஆர்டிஸ்ட் ரொம்ப சந்தோசமா இருப்பார், அம்மாவோட அறிக்கைய கேட்டு.

நல்லூரான் said...

அய்யா இட்லிவடை,சென்சார் பண்ணிட்டு comment போடுமய்யா.....
last comment ரொம்ப அருவருப்பு....

IdlyVadai said...

//அய்யா இட்லிவடை,சென்சார் பண்ணிட்டு comment போடுமய்யா.....
last comment ரொம்ப அருவருப்பு...//

Removed ... nandri

Anonymous said...

Raja : நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாட்டப்படுகின்றேன்.? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்து வைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா போன்ற ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது. மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கையை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தக கூட்டு உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான் அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பிரதமர் இதுகுறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை. நீரோட்டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும். என்று குறிப்பிட்டு இருக்கிறேன். அது மட்டுமல்ல இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிறுப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தக் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.

2ஜி என்பது பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசிபோல! பொதுவிநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது. என்பதற்காக பாசுமதி அரிசியை ஒப்பிடு காட்டி ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2ஜி சேவை எனபது சதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் சேவை. 3ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்க்கும், விடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம் விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர 3ஜி அல்ல! இன்னுமொரு 10,20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்பதாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுக்குப் பிறகு 3ஜி சேவை கூட எளிதாக்கப்படலாம்; பட வேண்டும். அப்போது 4ஜி சேவையும் வந்துவிடும். இது குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும் இப்போதைய ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.

தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல்... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன,. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது.

R. Jagannathan said...

Can you identify the new Saint Jeyalalithaa! - R. J.