பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 19, 2010

டாய்லெட் தின வாழ்த்துகள்


பிரதமர் ராஜினாமா என்ற வதந்தி நேற்று கசிய தொடங்கியது. நிச்சயம் பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் ஒரு பக்கம் பார்லிமெண்ட் அதில் பேச முடியாமல் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை மாதிரி பார்க்கவே பாவமாக இருந்தது. அழகிரி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தால் அட்லீஸ்ட் அழகிரி பேசுவதை தான் கேட்க முடியவில்லை, பாடுவதை பார்த்தாவது குஷியாகியிருக்கலாம். இன்னொரு பக்கம் வலைப்பதிவு அறிவுஜீவிகளால் ஜோக்கர் என்று போற்றப்படும் சு.சாமி தொடர்ந்த சுப்ரீம் கோர்ட் வழக்கை பார்த்து இந்த நாடே Mr.Clean என்று எல்லோராலும் போற்றப்படும் மன்மோகன் சிங்கின் நிலமை தான் சிரிப்பாய் சிரித்துக்கொண்டு இருக்கிறது.

நேற்று ஆங்கில தொலைக்காட்சிகள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை தன்னிடமே விட்டு விடுமாறு தயாநிதி மாறன் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகக் கூறி செய்தி வெளியிட்டது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இப்பொழுது எண்டிடிவி புகழ் பர்க்கா தத் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வீர் சங்வி ஆகியோர் கார்பொரோட் லாபியிஸ்ட் நிரா ராடியாவிடம் திமுக அமைச்சர் பதவிகள் தொடர்பாக பேசிய தொலைபேசி உரையாடற் பதிவு வெளியாகி இருக்கிறது. அமைச்சர் பதவியை கிலோ என்ன விலை என்பது போல இருக்கிறது.

பர்க்கா தத் காங்கிரஸ் சார்பில் லாபியிஸ்டாக செயல்படுவதாகவும், வீர் சங்வி சில சிறிய அரசியல் கட்சிகளுக்காக செயல்படுவதாகவும் ஓபன் மாகஸின் என்ற பத்திரிக்கையின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டு, தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் இணையத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பேனையெல்லாம் பெருச்சாளியாக்கி ஓலமிடும் வட இந்திய மீடியாக்கள் அனைத்துமே சொல்லி வைத்தாற்போல், ஹெட்லைன்ஸ் டுடே நீங்கலாக இது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன் என்றால் மீடியா வியாபாரமாகிவிட்டது. IBNல் பர்க்கா தத் தங்கை வேலை செய்கிறார் அதனால் அவர்கள் இதை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். டைம்ஸ் நௌ அவர்களுக்கு பிக் பாஸ்-4 தான் முக்கியம்.

இதற்கு எண்டிடிவி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் ஒருவருக்கு பல தொழில்சார் நபர்களுடன் நட்பு இருக்கும், தவிர பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் சேகரிப்பதற்காக பலரிடமும் பேச வேண்டியிருக்கும். இதை லாபியிங் என்று சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பது மட்டுமில்லாமல், முட்டாள்தனமானதும் கூட என்று எண்டிடிவி பொறிந்து தள்ளியுள்ளது. இந்த உரையாடலை எவ்வகையான செய்தி சேகரிப்பு என்று வகைப்படுத்துவது என்று புரியவில்லை

ஏற்கனவே 2009 இல் ஸ்பெக்ட்ரம் ராசா, மற்றும் நிரா ராடியா இடையே நடந்த தொலைக்காட்சி உரையாடலை ஹெட்லைன்ஸ் டுடே அம்பலப் படுத்திய போது எண்டிடிவி போன்ற சானல்கள் வாயே திறக்கவில்லை என்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

மன்மோகன் சிங்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது. வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டோமோ என்று எண்ண தொடங்கியிருப்பார். இனி உச்ச நீதி மன்றம் என்ன சொன்னால் என்ன ? சில மாதங்களுக்கு முன் ராசா கொடுத்த பத்திரிக்கை பேட்டியை படித்துவிட்டு "தவறு எதுவும் நடக்கவில்லை என்று ராசாவே கூறிவிட்டார். ஆகையால் தவறு நடக்கவில்லை" என்று சர்டிபிக்கேட் வழங்கிட்டார். கலைஞரும் தன் பங்கிற்கு ராசா தங்கமானவர் என்று சொல்லிடுட்டார், ஏன் பத்ரி கூட சொல்லிவிட்டார். இனி உச்ச நீதி மன்றம் என்ன சொன்னால் என்ன ?

ராசா பதவி விலகா விட்டால், ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ பற்றிய பேச்சு நீடித்துக் கொண்டேயிருக்கும் என்பதால் ராஜினாமா செய்ய சொன்னார்கள். ஆனால் இன்று இது பெரிய அளவில் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சாமி என்ற ஜோக்கருக்கு இந்த நாடு கடமை பட்டிருக்கிறது. சாமி என்ற ஜோக்கர்தான் அரசியல் சீட்டாட்டத்தில் எவ்வளவு முக்கியமான துருப்புச்சீட்டாகிவிட்டார் பாருங்கள்!


படிக்க வேண்டிய கேட்க வேண்டிய பகுதிகள்

=> The 2G Tapes

=> The Power Tapes

=> The Ratan Tata, Barkha Dutt & Other Tapes

=> The Vir Sanghvi- Niira Radia Tapes

=> The Kanimozhi-Radia Tapes

=> The Raja-Radia Tapes

=> “Tell me what should I tell them?”

=> “What kind of story do you want?”

( all these files are given to SC in new petition )

PM letters to Raja

MMS_ARaja_Correspondence_20101115

இன்று டாய்லட் தினம் எதை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள் !


18 Comments:

Anonymous said...

"i-met-raja-today-he-is-a-happy-man"

http://www.openthemagazine.com/article/nation/i-met-raja-today-he-is-a-happy-man

சுரேஷ் said...

இது எல்லாம் படித்தவுடன் தலை எல்லாம் சுற்றுது. கடவுளே!!!!

Anonymous said...

வசூல் ராஜா என்பது இனிமேல் தேவையில்லாத வார்த்தை. றாஜா என்றாலே போதும்...
யூனிடெக் நிறுவனம் 2G யில் அடித்த லாபத்தில் ஆயிரக்கணக்கில் இலவச டாய்லெட் தமிழ் நாட்டிற்குக் கட்டித் தரும்..

Prakash said...

Swamy case doesn't have any legal standing this case was not efficiently handled by PMO & Govt Council. Swamy is getting political mileage due to improper handling of the case by the Solicitor General.

Anonymous said...

Prakash,

You created gmail a/c in november only just to confuse/support raja and dmk in spectram scam.

Also that you are the own circulating an email publishedin many blogs as "white paper on the scam" by many arivu jeevis.


Now you are saying swamy's case wont stand.
If it wont stand why should raja resign?

நாட்டை காப்பாற்ற வேண்டிய ராஜா கை விட்டு விட்டார்.

இனி சுப்பிரமணிய சுவாமி தான் காப்பாற்ற வேண்டும்

KrishnaDeverayar said...

Barkha Dutt from NDTV reading the rebuttal message. Watch here.

http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/2g-scam-is-pms-silence-in-parliament-counter-productive/176698

Gopal said...

I just now watched Sibal's interview with Arnab goswami. Now I can understand that nothing would happen to anybody with likes of Sibal handling the issue. Everything will be closed in course of tie. Sibal says that Swamy is a private person and PM need not reply to all Tom.,Dick & Harry. In fact he was so evasive about Raja's culpability itself in the scam.In all probability rasa may come back again into the ministry to continue his loot. Long live CON gress and its swindles.

R. Jagannathan said...

நேற்று வரை மன்மோஹன் சிங் நல்லவர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் (நான் ரொம்ப நல்லவனுங்க) - இன்று தயாநிதியின் கடிதத்தை டி வி யில் பார்க்கும் வரை. ஏன் இப்படி வாயில் போண்டா வைத்துக் கொண்டிருக்கிறார் என்று வியந்து கொண்டிருந்தேன். வாயில் ப்ளாஸ்திரியே போடலாம்.
அன்னை சோனியா இன்று நாட்டைப் பற்றிக் கவலைப் பட்டு நல்ல் அரசாங்கம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அவர் கட்சி ராஜினாமா செய்யுமா என்று தெரியவில்லை!
பேசாமல் மன்மோஹனை வெளி நாடுகளுக்கான பி எம் ஆகவும், ப்ரணாப் முகர்ஜீயை உள்ளூருக்கான பி எம் ஆகவும் போடலாம். ப்ரணாப்தான் எங்கும் - மும்பை ப்ரச்சனைஆகட்டும், அழகிரிவீட்டு கல்யாணம் ஆகட்டும், அத்வானியுடன் மீட்டிங் ஆகட்டும் அவரைத்தான் அனுப்புகிறார்கள்.
சு. சுவாமியை இனி ஜோக்கர் என்பவர்கள் இந்தியர்களெ இல்லை என்பது என் அபிப்ராயம். அவருக்கு இருக்கும் துணிவு யாருக்கு இருக்கிறது?
- ஜெ.

Don said...

I don't know whom to trust now. The shocking news was journalists taking up part time jobs as lobbyists. Vir Sanghvi being a lobbyist is the most shocking. It's good that a few medias exposed them. This trend is more frightening than the actual scam.
Andimuthu Raja has attained world fame - http://www.economist.com/blogs/asiaview/2010/11/punishing_corruption_india
Funny he is referred as - "License Raja".
The letters reveal it's a carefully planned theft, with Maran setting up the foundation and Raja building the rest. And the lobbying tapes shockingly reveals the huge money transactions involved for getting posts. Where do they get these sorts of money from?. Did Karunanidhi earn this by writing books and plays in his past times?

Nothing surprising in the way Kapil Sibal tries to hide the elephant in the room. They're trained professionals in saying one thing at an occasion and opposing the same at another. Media persons are short-memoried to catch these folks lying. People like Kapil Sibal are a bigger threat than terrorists.
It's in people's hands now. I don't believe justice will be done. I won't call Swamy a joker or whatever as Prakash tries to put it. Swamy emerged as an hero/lone fighter in this whole episode. I don't care whatever his early life may be. I'm sure he didn't loot the nation to be mocked at. His bad character is trying to make news, which isn't a big crime comparable to those, whom you voted, are doing now. Swamy's case helped establish how incapable the PM is. In satyaraj's words, PM is nothing more than a "allakai".I lost my respect for him. More crimes happen in this world as good men in power, just watch and do nothing. PM is no different from the blind Dhritarashtra.

After reading all this if the people of TN vote for DMK again, even God won't save the fools in TN.

Anonymous said...

The story is ready for Shankar's next film.

சாய் said...

நம் நாடாளு மன்ற தலைவர்களின் "நாற்றம்"

Anonymous said...

//After reading all this if the people of TN vote for DMK again, even God won't save the fools in TN.//

எங்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.பிரியாணி,க்வாட்டர்,போய் வர பேட்டா கொடுத்தா எந்த கட்சி கூட்டத்திற்கும் போய் ஜே போடுவோம்.ரூ.5000 கொடுத்தால் ஹிட்லருக்கு கூட ஒட்டு போடுவோம்
இலவசமாக கிடைத்தால் ப்பியை கூட தின்போம்.
இப்படிக்கு,
தமிழக வாக்காளர்கள்

Rajaraman said...

இந்த பர்க்கா தத் மற்றும் வீர் சங்கவி போன்ற பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் உலவும் நாதாரிகள் உண்மையிலேயே காங்கிரசிடமிருந்து காசு வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக மக்களை திசை திருப்பும் வேலையை செய்யும் புரோக்கர்கள். இது போன்றவைகளை பிடித்து காயடித்தால் பல உண்மைகள் வெளி வரும்.

gopi said...

I agree with the anonymous. Tamilnadu voters will never get a chance to rectify what they have done in Thirumangalam. There wont be any redemption from these thieves of karuna family if they are voted back to power.
I am ashamed to live in the same period and place where likes of Raja and share holders in his loot live.

Anonymous said...

Outlook has said 'Indian republic is for Sale'...i read all transcripts in open magazine.Cho's Name is also figured in one of the transcript, not as lobbyist but as an advisor All these stuff remind me a novel 'Thanthira Boomi' of Indira Parthasarthy......Hamish Mcdonald in his latest book 'Ambani and Sons' exposed all our politcians ,officers from nehruvian era...It is pity that a nation which gave 'gandhi' now lost all moral rights to call him as 'father of nation'...let god save our innocent indian common man

Jai said...

Thanks to blogs that we see truth... Otherwise we will get only paid news... Hope we get a good alternative to Sun TV in Tamilnadu!!! Spread this news through e-mail to all your friends and ask them to Vote!!! Hope the educated votes in india... They can make a huge difference.. If the voting % moves from 55 % to 90 - 95 % that will be a big change

Ramakrishnan said...

I do not agree, that subramaniam swamy is a Joker. It's only people who call him are jokers. How many of us have guts to take on PM. WHo is is prominently mistaken as Mr Clean in India.
How did Manmohan Singh won the vote of confidence during cut motion.He does all this things on the instructions of Sonia for the sheer love for his power.If some one feels otherwise, he should plunge now when the issue is hot he needs to arrest and take action of confisicating the properties & wealth of Minsisters like Raja & Kalmadi and start belling the cat on corruption..
Till today there is no sign of Manmohan to be in mood for this. THis Clearly says he is the most corrupt prime minister of India.

குடுகுடுப்பை said...

சுசாமி ஜோக்கர் அல்ல, ஆனாலும் பல நேரங்களில் அவர் ஜோக்கர் போலவும் பேசுவதும் உண்மையே, அதனால் அவர் வெளிக்கொண்டு வந்த ஊழல்கள் முன்னால் நிற்பதில்லை.