பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 16, 2010

நைட் டின்னர், மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் = சாப்பாடுபெரிய ஏப்பம் வருது :-)

24 Comments:

பிரதீப் ஜெயப்பிரகாஷ் said...

CAG அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்' என்று சொல்லுவது தவறு. அரசுக்கான வருமான இழப்பு என்ற வார்த்தையை வேண்டுமானால் இப்பிரச்சினையில் பயன்படுத்தலாம். அவ்வறிக்கையின் படியும் கூட, இது யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) தவிர, நிஜமான இழப்பல்ல.

2ஜி என்பது கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையும், உரிமையும் கூட. 3ஜி மாதிரியான ஆடம்பரச்சேவை அல்ல இது. எனவே 2ஜி, 3ஜி இவற்றுக்கு இடையேயான நடைமுறைகளை பொதுமைப்படுத்தி பேசுவது தவறு. முந்தையது லாபநோக்கமற்ற சேவையை அடிப்படையாகவும், பிந்தையது லாபத்தை எதிர்நோக்கிய சேவையையும் கொண்டது. வீடியோ கால் உள்ளிட்ட லொட்டு லொசுக்குகள் 3ஜியில். மொபைல் போனில் பேசுவதற்கான அலைவரிசை 2ஜியில். இந்த அடிப்படை தெரியாதவர்கள்கூட 'ஸ்பெக்ட்ரம் - ஊழல்' என்றெல்லாம் பேசுவது வினோதமானது.

ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். CAG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.

2ஜி என்ற விஷயம் 2007ஆம் ஆண்டிலேயே காலாவதியாகக் கூடிய தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தப் பரிணாமமான 3ஜியை பற்றி அப்போது எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை CAG அறிக்கை குறிப்பிடும் பணத்தை முதலீடாக செலுத்தி வாங்க பைத்தியக்காரன் கூட தயாராக இருந்திருக்க மாட்டான்.

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சந்தை விலையில் கிலோ பதினோரு ரூபாய் என்பதால், இந்த பத்து ரூபாய் பணம் ஊழல் செய்யப்பட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இந்த அடிப்படையில் பார்த்தால் 'பல்லாயிரம் கோடி ரூபாய் அரிசி ஊழல்' என்று ஜெயலலிதா உளறுவாரேயானால், தமிழக ஏழை மக்கள் அவரை காறி உமிழ மாட்டார்களா?

அரிசி எப்படி சந்தை விலையை விட பத்து மடங்குக்கும் கீழாக தமிழகத்தில் வழங்கப்படுகிறது? இது அரசு ஏழை மக்களுக்கு தரும் சலுகை, உரிமை. இதே அடிப்படையில் தான் 2ஜி சேவையையும் நாம் பார்க்க வேண்டும். நவீன உலகம் தொலைதொடர்பால் நிர்மாணிக்கப் படுகிறது. தேசத்தின் கீழ்த்தட்டு குடிமகன் வரைக்கும் இந்த வசதி கிடைத்தாக வேண்டும்.

நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில், லெசென்ஸு வழங்குவதில் சில 'தள்ளு-முள்ளு' மேட்டர்கள் நிச்சயமாக நடந்திருக்கலாம். எந்த ஒரு அரசு தொடர்பான விஷயத்திலும் இது சகஜம்தான். ஆயினும் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை, யூக அடிப்படையில் கூறி, அவற்றை மக்கள் நிஜமென்று நம்புமளவுக்கு ஊடகங்கள் பூசி, மெழுகுவது என்பது ராஜா என்ற தனிநபருக்கு எதிரான மனோபாவம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னே? தென்மாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழர் - அதிலும் ஒரு தலித்.. நாட்டின் முக்கியமான துறையை ஆண்டால் கோபம் வராதா என்ன? நியாயம்தானே?

எழுதியவர் பிரதீப் ஜெயப்பிரகாஷ்

பிரதீப் ஜெயப்பிரகாஷ் said...

ஸ்பெக்ட்ரம் ஊழல என்று சொல்லுவது தவறு. அரசுக்கான வருமான இழப்பு என்ற வார்த்தையை வேண்டுமானால் இப்பிரச்சினையில் பயன்படுத்தலாம். அவ்வறிக்கையின் படியும் கூட, இது யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) தவிர, நிஜமான இழப்பல்ல.

2ஜி என்பது கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையும், உரிமையும் கூட. 3ஜி மாதிரியான ஆடம்பரச்சேவை அல்ல இது. எனவே 2ஜி, 3ஜி இவற்றுக்கு இடையேயான நடைமுறைகளை பொதுமைப்படுத்தி பேசுவது தவறு. முந்தையது லாபநோக்கமற்ற சேவையை அடிப்படையாகவும், பிந்தையது லாபத்தை எதிர்நோக்கிய சேவையையும் கொண்டது. வீடியோ கால் உள்ளிட்ட லொட்டு லொசுக்குகள் 3ஜியில். மொபைல் போனில் பேசுவதற்கான அலைவரிசை 2ஜியில். இந்த அடிப்படை தெரியாதவர்கள்கூட 'ஸ்பெக்ட்ரம் - ஊழல்' என்றெல்லாம் பேசுவது வினோதமானது.

ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். CAG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.

எழுதியவர் பிரதீப் ஜெயப்பிரகாஷ்

ஜீ... said...

hi hi nice interview!
night dinner..mrng breakfast..then night dinner and again breakfa...
:))

ராமகிருஷ்ணன் said...

தினமும் சாப்பிட உழைத்து வாழும் மக்களுக்கு நடுவில், இனி வாழ்நாள் முழுதும் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு கொள்ளை அடித்து விட்டேன் என்று சொல்லுகிறாரோ இந்த ராசா !!!

ராசாவிற்கு ஏப்பம்
மற்ற மந்திரிகளுக்கோ ஏக்கம்
கிடைக்கவில்லையே இப்படி ஒரு விருந்து என்று..
அதனால் தான் செய்கிறார்கள் அழிச்சாட்டியம் இன்று

ராமகிருஷ்ணன்

Anonymous said...

raja is mr clean iam sdure. if BJP dance i cont bleave.i thing higher people is once about cheeting lower peoples, what raskales B J P s yours orginal Tamil man ,Lemuriea land

subramanian said...

Mr.Pradeep,

The quantam of loss may not be the 1.76 lakh crores as specified by CAG but no one can deny the fact that there were errors and malfide intentions on the part of Raja in advancing the closing date of the application process. If their is a reduction in the call rates it is due to competion for market share and not due to the fact that the licenses were obtained at throwaway costs.Why even talk about caste here when it is evident that he has erred.

ஹலோ Mr. ஜெயப்ரகாஷ்:

2G குறித்து நீங்கள் கூறிய கருத்து முட்டாள் தனமாக உள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலேயும் ஒவ்வொரு டெக்னாலஜி முன்னணியில் உள்ளது.. அவ்வாறு முன்னணியில் இருக்கும் போது அந்த டெக்னாலஜியை பெற மக்கள் விரும்புவர்..அந்த டெக்னாலஜியை தர நிறுவனங்களும் போட்டி போடும். நிறுவனங்கள் போட்டி போடும்போது தானாகவே விலையும் குறையும். எனவே நீங்கள் கூறுவது போல மக்களுக்கு லாபம் எனபது எல்லாம் ஒன்றும் இல்லை. இதில் உங்களுடைய மரமண்டைக்கு உரைக்காத இன்னொரு விஷயம்.... அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலைக்கு 2G யை வாங்கிய தகுதியே இல்லாத நிறுவனங்கள் அதை மிக அதிக விலைக்கு மற்ற தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு (இந்த நிறுவனங்கள் தான் மக்களுக்கு சேவை வழங்கி வருகின்றன) விற்றிருகிறர்கள். அதனால் இதில் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை.. அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் நஷ்டம்தான்.

"""ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.""""

உங்களுடய மேற்குறிய கருத்து மிகவும் முட்டாள் தனமானது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு ஒதுக்கியிருந்தாலும், அதை வாங்கிய பெரும்பாலான நிறுவனங்கள் அதை பெரிய விலைக்கு விற்று லாபம் அடைதிருகின்றன.. அதனால் நீங்கள் கூறியது போல இன்று மூலை முடுக்கெல்லாம் எளியவர்களும் பயன் படுத்தும் பொருளாக மொபைல் மாறியதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... சொல்ல போனால் இது சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதிகரித்ததால், அவர்களுக்கு இடையேயான போட்டி அதிகரித்ததால் மக்களுக்கு கிடைத்த லாபம்.

உங்களை மாதிரி ஆட்கள் இந்த மாதிரியான உழல்களை ஆதரிப்பதை, நியாயபடுத்துவதை நிறுத்துங்கள்.

Mani said...

Karthik said...

Pls add facebook like button and Google buzz buttons to ur blog.

Don said...

Pradeep Jayprakash seems to be a poster boy of A.Raja.
Do you want people to assume that the govt lost so much without any corruption?. Please read the Tehelka report on the 2G scam, you'll know how corruption took place and the modus-operandi of this scam. Don't expect the ministers to get cash under the table, as they show in films, to call it a corruption. Technology has changed a lot brother and no doubt ministers are also hi-tech.
Surprising of all, why didn't Raja file cases at the media for calling such a lawful thing a scam?
And do you think CAG is so stupid to quote some figure from the air?. Do you think the PM and cabinet(and media) are less intelligent than you, to accept such figures without reasoning it?
And your statement 2G is a service without profit intent is funny. Later you say that as it was sold cheaper we get it cheaper, which is again a flawed argument as the companies(Telenor) had purchased the stocks for sky high prices. Anyway what do you know about the profits these companies make, to say it's cheaper?. And the amount not in the equation is the corruption money that A.Raja and Kanimozhi&Co had bagged in this scam from these companies alloted. CAG also reports that there are some 85 companies that are illegally allocated spectrum. Whose companies do you think those are?

Your claim that 2G is a obsolete technology is again funny.
And you are trying to connect this with the unrelated 1Re rice scheme, which was explicitly a subsidized scheme by the govt unlike 2G. Do you want to claim that they subsidized 2G(Raja will be surprised to know this), come on. If so the govt wouldn't have sold it to private, wherein it would have no control over the charges. It's the competition in private that's solely responsible for cheaper service and nothing else.

And your statement that people will spit on JJ if she makes a statement about 1Re rice, exposed you're a DMK poster boy. No wonder you toss the same line as your boss - MK saying Raja is a tamil, english etc.,. The guy who filed cases in Supreme court against this is also a Tamil.
Apart from Raja, the supreme court has also criticised the PM for his silence.

It's time to feel proud that your man has entered the record books and made history.
Don't think you can fool us with such arguments, we are educated, though not empowered to stop such fools from robbing us.
The interviewer appeared more professional than a ex-minister in the interview - the curse of this nation.

Anonymous said...

Hi ALL,
I agree with ex Minister Raja.
No corruption - he just followed rules. We also have to believe that this amount is not in Swiss bank..so where is it?

Raja is shamelessly shameless.

Sam

ரிஷபன்Meena said...

/உங்களை மாதிரி ஆட்கள் இந்த மாதிரியான உழல்களை ஆதரிப்பதை, நியாயபடுத்துவதை நிறுத்துங்கள்.//

எவ்வளவோ பண்னீட்டாங்க இதை பண்ணமாட்டாங்களா ?

பதிவுகளில் குரைப்பதற்கு இவரை மாதிரி ஆட்களுக்கு பணம் கொடுத்திருப்பார்கள் போல. பிரபலபதிவர் போல் தெரியுது , நல்ல பூசி மொழுகுறாரு.

தமிழ் பதிவுகளுக்கு அவ்வளவு மக்கள் தொடர்பு இல்லை என்றாலும் , எதற்கும் இருக்கட்டுமே என்று சில எலும்புத் துண்டு வீசி இருப்பாங்களோ ?

Mukkodan said...

Forget about 2 lakh Crores loss to the Govt.

What about the "Extra charges" levied on to the Customers by the Telecom companies because of the huge cost they ACTUALLY gave to a fake company which managed to get the licenses.

Pradeep Jayakumar kind of naivetes will again say that they can make calls for Rs.1, without realizing that they could've got it for just 5 paise and lost their 95 paise even in that because of this huge scam.

Anonymous said...

அவர்களுக்கு இடையேயான போட்டி அதிகரித்ததால் மக்களுக்கு கிடைத்த லாபம்./// We must see how 3G will reach public.As per you, It must be cheaper.

Anonymous said...

ப்ரதீப்பு

கொஞ்சம் கீழ் கண்ட லிங்களைப் படித்து விட்டு அதில் கேட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வீர்களா?

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/

வந்துட்டானுங்க வக்காலத்து வாங்கிகிட்டு. பத்ரி சேஷாத்ரின்னு ராஜாவுக்கு ஏற்கனவே ஒரு கூஜா எழுதிகிட்டிருக்காரு இப்ப இந்த ப்ரதீப்பு புதுசா. இணையத்தில் பத்ரி போன்றவர்களுக்கு ஒரு அறிவுஜீவி இமேஜ் இருக்கிறது அதை முதலீடாக வைத்துக் கொண்டு ராஜாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யச் சொல்லி இவர்களைப் போன்றவர்களுக்குக் கூலி அல்லது ஏதேனும் பிசினஸ் லாபம் கொடுக்கப் பட்டிருக்கலாம். எலும்புத் துண்டுக்கு அலையும் ஜென்மங்கள். பத்ரி சொல்கிறார் ராஜாவை விச் ஹண்ட் செய்கிறார்கள் என்று. மனசாட்சியை அடகு வைத்த பேச்சு.

ப்ரதீப்பு கண்ணா வருமான இழப்பு இங்கு பேச்சே இல்லை. ஸ்வான் என்றொரு கம்பெனியை ராஜாவும் கனிமொழியும் எப்படி ஆரம்பித்து இந்த 2 ஜி காண்ட்டிராக்டை தாங்களே ஸ்வான் என்ற பினாமி பேர்களில் எடுத்துக் கொண்டு உடனேயே அதை விற்று விட்டதுதான் இங்கு மாபெரும் கிரிமினல் குற்றம் அப்படி விற்ற லாபமே 16000 கோடிகளுக்கு மேலே வருகிறது. ஆக முதலில் இந்த 16 ஆயிரம் கோடி எங்கே யார் கணக்கில் போனது என்பதைச் சொல்லவும். இதில் யார் யார் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் யார் யார் கணக்கில் போனது என்பது முதலில் முக்கியம் அடுத்துத்தான் வருமான இழப்பே. புரிகிறதா நான் என்ன சொல்கிறேன் என்பது? அது சரி இப்படி எழுதச் சொல்லி உங்களுக்கு எவ்வளவு வெட்டினார்கள்? அந்த ரகசியத்தைச் சொன்னால் கொஞ்சம் வேலை வெட்டியில்லாத பதிவர்களும் கூட கொஞ்சம் காசு பார்த்துக் கொள்வார்கள். நீங்களும் பத்ரியும் அந்த ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்க ராஜாக்களே

Anonymous said...

we still have some idots in the country who belives that BJP is the upper caste people. the super star of BJP, Narendra modi doesnt belong to upper caste, yedurapa doesnt belong to upper caste, jarkand CM mathukoda doesnt belong to upper caste, MP BJP CM Shivraj Singh Chauhan doesnt belong to upper caste. rajasthan CM vasundra doesnt belong to UP, the leader of opposition susma sivaraj doesnt belong to upper caste. Still there are some crap in the world who beleaves the existance of lemuria.. so pity...

Kamesh said...

Anony you have given a fitting reply to Pradeep... 16000crores on a benomi deal... yappa.. with all these information around I don't know how Mr.P can support Raasaa..
he must be behind bars... no doubt about it.

Kamesh

Anonymous said...

Super Post @ below link. Please read

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=163:2010-11-15-20-03-33&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

Baski said...

அடுத்த முதல்வர் ராஜா வாழ்க..
தமிழகத்தின் விடிவெள்ளி ராஜா வாழ்க..
தன்மான சிங்கம் ராஜா வாழ்க..
அடுத்த பிரதமர் ராஜா வாழ்க..

நீங்க அடிச்சதில் லட்சத்தில் ஒரு பங்கு என்றாலே கோடி ரூபா கிடைக்குமே..
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார்...

எங்கே வந்து பொட்டி வாங்கிகினும்...

ரோமிங் ராமன் said...

பிரதீப் ஜெயப்பிரகாஷ் _ சொல்வது கொண்சூண்டேனும் உண்மைதான் என்று எடுத்துக்கொண்டாலும்(கவனிக்க- எடுத்துக்கொண்டாலும்!!) இதில் ஊழல அளவு மிகப்பெரியதுதான்!! இந்த தேசத்தை முழுக்க முழுக்க காதலிக்கும் யாருக்கும் ஒரு துளியூண்டு ஊழலைககூட நிச்சயம் ஏற்றுக்கொள்ள மனசு வருமா?? உண்மையான இந்தியர்கள் நாம் சிந்திக்க வேண்டாமா?? நாளை நம் சந்ததி தானே இங்கு வாழப்போகிறது!! இந்த தேசம சாக்கடையாவதை நாம் சகித்துக்கொள்ளலாமா??
ரோமிங் ராமன்

Anonymous said...

"The media is making a mountain out of a molehill,"

Anonymous said...

உண்மையிலேயே இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றால், “நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்குத் தயார்” என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்து, நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?--Jeya( Advise only for others.I will not reply for my 1998 IT case which is still pending for silly reasons in the court)

R.Gopi said...

யோவ்... என்னய்யா 1,73,000 கோடி அடிச்சுட்டு வேலை முடிஞ்சுட்ட மாதிரி அலுத்து போயிருக்கீங்க....

இன்னும், எங்கெங்க, எவ்ளோ அடிக்க முடியும்னு கணக்கு ரெடி பண்ணி, எடுக்க ஆரம்பிங்க....

நம்ம மேல எந்தெந்த ஊழல்ல கேஸ் போடணும்னு தெரியறதுக்கே இன்னும் ஒரு 50 வருஷம் ஆகணும்....

அந்தளவுக்கு வெளையாடுங்க
(”தல” அறிவுரை)