பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 14, 2010

ஹி ஹிஜெயலலிதா தைரியசாலியாக இருக்கலாம் அதற்காக ராசா அவரை ஹி ஹி என்று சொல்லுவது நிஜமாகவே நமக்கு ஹி ஹி

16 Comments:

he he said...

மற்றுமொரு ஹீ ஹீ ... மீட்டிங் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அறையினுள் செல்வதைப்பாருங்கள்!
ஒரு வேளை "ஹி ஹி" என்று சொதப்பிவிட்டோம் என்று உணர்ந்ததனாலோ என்னவோ திடீரென்று interview முடித்து விட்டார்

பாமரன் said...

ஒண்ணுமே புரியல ஒலகத்துல! லட்சம் கோடி ஊழல் சொல்றாக.....இல்லைகன்ராக...
இட்லி வடைய நம்பறத , கிழக்க நம்பாறதா? ராசாவ? ஜெய வா?

ரூம் போட்டு யோசிப்பவர் said...

ராஜா, ஜெ ஜெ வை 'ஹி' என்று சொன்னதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
* முன்பு இந்திரா காந்தி அமைச்சரவையில், ஒரே ஆண் இந்திரா காந்திதான் என்று பலர் சொன்னதுண்டு. அது மாதிரி, இதுவரையிலும் இருந்த தமிழக முதலமைச்சர்களில், ஜெ ஜெ ஒருவர்தான் ஆண் என்று நினைத்திருக்கலாம்!

* Spectrum, Scam, swindling - என்ற எஸ் எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கேட்டால் Silent ஆகிவிட வேண்டும் என்று லீகல் அட்வைசர் கூறி இருப்பார். அதனால்தான், she என்ற வார்த்தையில் கூட 'எஸ்' சை அமுக்கி விட்டு, ஹி என்று கூறியிருக்கின்றார் போலிருக்கு!

ஜீ... said...

//ஒண்ணுமே புரியல ஒலகத்தல//

//இதுவரையிலும் இருந்த தமிழக முதலமைச்சர்களில், ஜெ ஜெ ஒருவர்தான் ஆண் என்று நினைத்திருக்கலாம்!//

he he! :)

Anonymous said...

Funny english. I bet it's not a spontaneous speech but a memorized one. As soon as his speech is over, he escaped saying there is a meeting.
Whether JJ has a moral right or not, he didn't deny the scam. He also said NDA has also followed the same way and looted. Meaning the fools are none but people of India. Every govt has looted people's money. The problem is with people's mindset, they don't recognize other parties apart from
Congress and BJP,DMK and ADMK.

வலைஞன் said...

நாட்டிலேயே நடந்த மிகப்பெரிய ஊழல் இது என சொல்லப்படுகிறது.அதற்கான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மந்திரி பதில் அளிக்கிறார்.அந்த பதில்களில் இருக்கும் உண்மைகளையும் முரண்பாடுகளையும் விளக்குவதை விட்டுவிட்டு அவர் ஒரு பெண்மணியை she என்று சொல்லாமல் he என்று சொல்கிறார் (அதுவும் ஒரு அந்நிய மொழியில்)என்பதை நகைச்சுவையாக்கி மகிழும் நாமெல்லாம் இருக்கும்வரை நம் நாடு உருப்படாது!

Anonymous said...

Msingh is seriouly considering making rasa pm and escaping from the shit of the spectrum scam. Then who will be finance minister in rasa's cabinet. Kanimozhi?

Anonymous said...

"There is more to former Chief Minister Ashok Chavan’s threat not to go to the airport to receive President Obama than his claim that he was insulted because the US consulate officials in Mumbai asked for his personal details to verify his antecedents. It seems the US consulate, after reading daily news reports on the Adarsh Housing scam, was anxious that Obama should not be photographed shaking hands with Chavan. Consulate officials suggested that if indeed Chavan had to greet Obama at the airport, photographers should not be present. However, New Delhi made clear to the consulate that it could not lay down such conditions.
"

What about MMS, Rasa, kanimozhi?

http://www.indianexpress.com/news/family-included/710788/2

மடல்காரன்_MadalKaran said...

அப்படியா பகுதியில்...

2011ல் மக்களின் எதிர்ப்பார்க்காமல் இருக்கணும்

தட்டெச்சு பிழையா..?
சுட்டச்சு பிழையா..?

புரியல...

அன்புடன், கி.பாலு

kalaingar said...

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசினால் இட்லி வடை போன்ற மேல் சாதியினருக்கு பொறுக்காதே ??

alagiri said...

நானும் இத மாதிரி பேசணும்னு ட்ரை பண்றேன்.. ஒரு வார்த்தைக்கு மேல முடியல... ஹும் !! யாராவது ஹெல்ப் பண்ணுங்கப்பா...

kggouthaman said...

SPECTRUM RAJA RESIGNS !! 10.45 PM NEWS REPORTS. 14/11/2010

Anonymous said...

3-G ஏலம் போன விலைக்கு 2-G போயிந்திருந்தால் இவ்வளவு லாபம் இருந்திருக்கும்; அது இப்போது நஷ்டம் என்பது ஒரு extrapolation ; சரியாக இருக்கும் என்று அடித்து சொல்ல முடியாது தான். அந்த "அடிமாட்டு" விலைக்கு வாங்கிய ஒரு நிறுவனம் மிகுந்த லாபத்துடன் விற்றிருப்பது இந்த "extrapolation" முற்றிலும் தவறு இல்லை எனக் காட்டுகிறது.
இரண்டு: ராசா NDTV பேட்டியில் திருப்பி திருப்பி சொல்வது என்ன என்றால் பழைய ஆட்சியிலும் இதே முறை பின் பற்றப்பட்டது; அப்போதும் நஷ்டம் என்று இதே CAG தணிக்கை அறிக்கை கூறியது என்றும் அப்போது ஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்பதும் தான். அதாவது அப்போது பின்பற்றமுறை சரி இல்லை; அதனால் அரசுக்கு இழப்பு என்று தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டிய பின்னும் தம் அரசு அதே தவறான முறையைப் பின்பற்றியது தவறு இல்லை என ஒரு அமைச்சர்/அரசு சொல்ல முடியுமா?
சரி அரசுக்கு இவ்வளவு இட்டாவிட்டலும் ஓரளவு நஷ்டம் வந்திருக்கக் கூடும்; அதற்கு வருந்துகிறேன் என்று கூட கூற ஒரு அமைச்சர் தயாராக இல்லையே!
Worse, you see the same smirk seen on the face of Rathod, Retired DGP, let off in two cases by CBI, recently.

M Arunachalam said...

After all this public posture, DMK lost Raja as Telecom Minister on Sunday night.

Now comes the news that DMK has lost the IT & Telecom portfolio itself, which has been given to Kapil Sibal.

http://timesofindia.indiatimes.com/india/Kapil-Sibal-given-charge-of-Telecom-Ministry/articleshow/6930174.cms

Slowly, but surely, Sonia Cong. is asserting itself & DMK meekly surrenders. Can anyone see Rahul Gandhi's hand behind all this?

Anonymous said...

பத்ரி எதையுமே முழுவதும் படிக்காமல் முக்கியமாக பயனீர் நிருபர் கோபிக்கிருஷ்ணனின் பதிவுகளைக் கூடப் படிக்காமல் கேனத்தனமாக உளறிக் கொட்டியிருக்கிறார். பொது அபிப்ராயத்திற்கு எதிராகப் பேசினால் கிடைக்கும் அறிவு ஜீவி பிம்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளாரா அல்லது ராஜாவின் மூலமாக வேறு ஏதும் டீலா என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவர் சொல்லியிருப்பது பேத்தல். இந்த விஷயம் தொடர்பாக தமிழில் வந்த ஒரே முழுமையான கட்டுரைகள் இங்கே அவற்றைப் படித்தால் பத்ரியின் அனைத்து அச்சு பிச்சு கேள்விகளுக்கும் பதில் கிட்டும்

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/

Anonymous said...

'நீங்கள் குறிப்பிடுவது 'ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகை' அல்ல... 'நுழைவுக்கட்டணம்' (Entry fee)! இந்த நுழைவுக் கட்டணம் ஸ்பெக்ட்ரம் ஏலமுறை இருந்த காலத்தில், அதாவது தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 1999 (NTP) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. அந்த சமயத்தில் விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகையின் அடிப்படையில்

(ரூ. 1650 கோடி) நிர்ணயமானது அது. இக்கட்டணத்தை மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும்TRAI க்குதான் உண்டு. அல்லது, அமைச்சரவை முடிவெடுக்கலாம். அதிகாரிகளோ, நானோ 2,000 கோடி என்றோ, 1,950 கோடி என்றோ மாற்றிவிட முடியாது.

உண்மை என்னவென்றால், 2007-ம் ஆண்டு புதிய உரிமங்கள் வழங்கிட 'டிராய்' பரிந்துரை செய்தபோது, ஏற்கெனவே இருந்த நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி பரிந்துரை செய்யவில்லை. பரிந்துரை என்று இருந்து, அதைப் பின்பற்றாவிட்டால் அது தவறு. பரிந்துரையே இல்லாதபோது எந்தத் தொகையை நிர்ணயிக்க முடியும்? யார் நிர்ணயிக்க முடியும்?

இன்னொரு விஷயம், 3G எனப்படும் மூன்றாம் அலைவரிசை சேவைக்கும் இதே உரிமங்கள்தான். அவைகளுக்கும் இதே நுழைவுக்கட்டணத்தைத்தான் (ரூ. 1650 கோடி) விதிக்க உயர்மட்ட அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக, இதை உயர்த்தலாமா என்ற வினா எழுந்தபோது, 'தேவை யில்லை... இது நுழைவுக்கட்டணம்தான்' என்று அந்த அமைச்சரவைக் குழு சமீபத்தில் முடிவெடுத்துள்ளது. அமைச்சரவைக் குழுவின் அறிக்கை பிரதமருக்கும் அனுப்பப்படும் என்று அனைவருக்கும் தெரியும். இதுதவிர, நான் உரிமம் வழங்கிய ஒரு மாதத்துக்கு முன்பு வரை, இதே கட்டணத்தில்தான் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன
''நுழைவுக் கட்டணம் (Entry Fee) என்றால் என்ன? உரிமக்கட்டணம் என்றால் (Licence Fee) என்ன? ஸ்பெக்ட்ரம் கட்டணம் (Spectrum charge) என்றால் என்ன? இந்தத் துறையின் நடைமுறைகள் என்னென்ன? 'டிராய்' பரிந்துரைகள் எவை? இதுபற்றியெல்லாம் மிகவும் படித்தவர்களுக்கே போதுமான புரிதல் இல்லை. மற்றவர்களுக்கு என்ன சொல்ல..!

உரிமத்தின் மீதும், வழங்கப்படும் ஸ்பெக்ட்ரத்தின் மீதும், 'வருவாயில் பங்கு' எனும் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிப்பதற்கு கடந்த பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. நுழைவுக்கட்டணம் என்பது வேறு. உரிமத்தின் மீதும், ஸ்பெக்ட்ரத்தின் மீதும் வசூலாகும் வருவாய் ஆண்டுதோறும் தொலைபேசி எண்ணிக்கை அடிப்படையில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை இந்த அடிப்படையில் சுமார் 60,000 கோடி அரசுக்கு வருமானம் வந்துள்ளது. உரிமம் வழங்கப்படும்போது, அவ்வாறு வழங்கப்படும் 4.4 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தைவிடக் கூடுதலாக வழங்கப்படும் ஸ்பெக்ட்ரத்துக்கு கட்டணம் (upfront charge)வசூலிக்கவேண்டும் என்று முடிவெடுத்த இந்தத் துறையின் ஒரே அமைச்சர் நான்தான். என்னுடைய முடிவை டிராய்க்கு அனுப்பியுள்ளேன். அடுத்த மாதம் டிராய் பரிந்துரை வரும் என்று நம்புகிறேன். வந்தால் சுமார் 15,000 கோடி அளவுக்கு அரசுக்கு வருமானம் வரும்.

ஆனால், எந்த விதிமுறையும் இல்லாமல் அடிப்படை ஸ்பெக்ட்ரம் 4.4 மெகா ஹெர்ட்ஸ் மேல் 10 மெகா ஹெர்ட்ஸ் வரை எந்தவித முன் கட்டணமும் (upfront charge) இல்லாமல் - 8 மெகா ஹெர்ட்ஸ்க்கு மேல் வருவாயில் அரசுக்குப் பங்கு என்றுகூட இல்லாமல் - எனக்கு முன்பு இருந்தவர்கள் வழங்கிய சுமார் 250 மெகா ஹெர்ட்ஸ்க்கு இன்றைய சந்தை மதிப்பீடு என்ன? வருவாய் பங்கு கட்டணம் எவ்வளவு வந்திருக்கவேண்டும்? இன்னும் சொல்லப்போனால், பாரதிய ஜனதா ஆட்சியில் அருண் ஷோரி அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 1,000 கோடி உரிமத்தின் மீது கட்டணக் குறைப்பு செய்து 2003, டிசம்பர் 19 அன்று ஒரு கோப்பில் கையெழுத்துப் போட்டிருக்கிறார். இதனால் பயனடைந்த தனியார் நிறுவனங்கள் எவை? ஆண்டுக்கு ஆயிரம் கோடி என்றால், 2003 முதல் இன்றுவரையில், இப்போதுள்ள தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் இழப்பே சுமார் 10,000 கோடி வருமே! இவற்றையெல்லாம் சரி செய்தவன் என்பதால், இந்த துறையில் ஈடுபட்டுள்ள சில முதலாளிகள் எனக்கு எதிரியானார்கள் என்பதுதான் உண்மை!''------


-Raja's Interview Extract from JV 8/11/2009