பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 11, 2010

நச் பூமராங் !

1. ஜி20: பிரதமர் நேற்று கொரியா பயணம்.
வந்தவுடனாவது 2ஜி- க்கு ஒரு முடிவு சொல்வாரா?

2. ராசாவை பதவி நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு இந்தியர்கள் தந்தி அனுப்பவேண்டும்:ஜெ
இவங்க எப்ப கலைஞர் கட்சில சேர்ந்தாங்க? அப்டி ஒரு வேளை அனுப்பினா அன்றைய தினத்தந்தி சர்குலேஷன் கூடுமா?.


3. லக்ஷ்மன் இன்னும் ஒரு மேட்ச்சைக் காப்பாற்றினார் - செய்தி.
ராமருக்குக் கோவில் கட்டினாத்தான் அடிக்க வாராங்க! லக்ஷமனுக்குக் கட்டி
ராமர் செலைய உள்ள வெக்கலாமுல்ல?


4. ஊழல் புகார்களில் சிக்கிய அசோக் சவான் மற்றும் சுரேஷ் கல்மாடி
ஆகியோர் மீது, காங்கிரஸ் மேலிடம் அதிரடி நடவடிக்கை.
ஒருவர் மாடி வீடு. இன்னொருவர் கல்மாடி.


5. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், ஆதாரத்துடன்
நிரூபித்தால் பதவி விலக தயார்" என என துணை முதல்வர் ஸ்டாலின்
கோபமாகக் கூறினார்.

எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது எந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம்
எழுதபோகிறேன் என்று கிளம்பாமல் இருந்தாரே.( நன்றி: இதற்கு )


6. தீப்பிடிப்பது உள்ளிட்ட பிரச்சனைக்குரிய நானோ கார்களை தி்ரும்பப் பெறப்போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நெறைய மாமியார்கள் மருமகளுக்கு இதை
புக் செய்திருப்பார்கள்.

7. தீபாவளிக்கு மதுபான விற்பனையை, 300 கோடி ரூபாய். - செய்தி
ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ் !

8. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து, ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு தான்
எதையும் உறுதியாகக் கூற முடியும் - ராமதாஸ்
பொங்கலில் ஜாதிக்காய்-சிறிது அளவு ஏன் போடுகிறார்கள் என்று இப்போது புரிந்திருக்கும்.


9. உங்க வீட்டுக்கு ஆற்காட்டார் வந்தால் என்ன போகும் ?
கரண்ட் :-)


பிகு: படம் - நச் என்று இச் வைப்பது பற்றிய பூமராங் படம் :-)

3 Comments:

ரிஷபன்Meena said...

மஞ்சள் தான் இழந்த பெருமையை இந்தப் பதிவில் மீட்டுவிட்டது.

// ஊழல் புகார்களில் சிக்கிய அசோக் சவான் மற்றும் சுரேஷ் கல்மாடி
ஆகியோர் மீது, காங்கிரஸ் மேலிடம் அதிரடி நடவடிக்கை.
ஒருவர் மாடி வீடு. இன்னொருவர் கல்மாடி.//

பிரமாதம்

ரிஷபன்Meena said...

ஆமா அந்தப் படம் எதுக்கு ?

அமுதப்ரியன் said...

இத கட்டாயமாக நீர் எழுதவில்லை இட்லிவடையாரே!!!

என்ன சரியா?