பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 06, 2010

இரண்டு கவிதை - மானஸ்தி

Dear இட்லிவடை,

அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அனைத்தையும் பரிமாறும் இ.வ. கடையில் எத்தனை நாள் தான் ஓசியிலேயே சாப்பிடுவது? இதுவரை உள்ள கணக்கைத் தீர்த்துக் கொள்ள வேண்டி இரண்டு கவிதைகள் எழுதி அனுப்பியிருக்கும் மானஸ்தி(தை) :

- சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.com

பொம்மை உலகம்
காலுடந்த கரடிப்பொம்மைக்குக்
காயம் வலிப்பதில்லை
கண்சிமிட்டும் பார்பிக்குக்
கண்ணீர் வருவதில்லை
அடித்தாலும் உடைத்தாலும்
அழுகை சிறிதுமின்றிச்
சிரித்தே கிடக்கின்றன
அத்தனை பொம்மைகளும்
எனது ஆர்வமோ
இரண்டு பொம்மைகளில்
அவை
அடிக்கடி அழுகின்றன
அரிதாகச் சிரிக்கின்றன
அழுகின்ற நேரங்களில்
அருகினில் செல்லமாட்டேன்
சில சிரிக்கின்ற சமயங்களில்
நான்
உறக்கத்தில் உறைந்திருப்பேன்
விடியும் முன்பே
விழித்துக் கொண்டு
விறுவிறுவென்று
உடுத்திக் கொண்டு
ஓடிவிடுகிறது ஒன்று.
அது போனதும்
இது வருகிறது
இழுத்துப் போர்த்திக்கொண்டு
இருட்டறையில்
கிடக்கிறது
விழித்ததும்
இது போகிறது
அது வருகிறது
பால் ஊட்டும்
பாட்டியிடம்
பலமுறை கேட்டுவிட்டேன்
இந்த
அம்மா பொம்மையும்
அப்பா பொம்மையும்
எப்போது என்னோடு
விளையாட வருமென்று
பாவம் அவளுக்குத்
தெரியவில்லை போலும்
பாவமாகப் பார்க்கிறாள்
என்னையும்
என் பொம்மைகளையும்.

கல்வி

மனனம் செய்தவை
மறந்த பின்பும்
மனதிற்குள்
மிச்சம் இருப்பது.
மனிதம் என்னும்
விதையை விதைத்து
மனிதனில்
இறைவன் சமைப்பது
கல்வி கரையில்லாதது
இன்றோ
கல்வி
காசில்லாமல் இல்லாதது
அன்று
எடுத்தவன் கொடுத்தான்
கல்வியை.
இன்று
கொடுத்தவன் எடுக்கிறான்
காசை..

கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-)

24 Comments:

kggouthaman said...

// கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-) //
கவிக்குயில்களும் கவிதாயினிகளும் பிறந்த நாட்டில் இப்படி ஒரு கமெண்ட்டா?

kggouthaman said...

1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குவது போல,
1330 Followers கண்ட இட்லி வடை, உலகப் பொது வலையாக இன்று முதல் அழைக்கப்படும்!

Madhavan said...

//கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-) //

தாங்கள் 'சோ'வின் ஃபாலோயரோ ? மஞ்சள் கமெண்டு பெண்களுக்கு எதிராக ?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// 1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குவது போல,
1330 Followers கண்ட இட்லி வடை, உலகப் பொது வலையாக இன்று முதல் அழைக்கப்படும்!//

கொஞ்சம் மாத்தி யோசித்தால்,
'1330 Followers கண்ட இட்லி வடை, (உலகப் பொது) மரை கழன்றதாக இன்று முதல் அழைக்கப்படும்!

கலாநேசன் said...

கவிதைகள் அருமை

அன்பரசன் said...

//அம்மா பொம்மையும்
அப்பா பொம்மையும்
எப்போது என்னோடு
விளையாட வருமென்று
பாவம் அவளுக்குத்
தெரியவில்லை போலும்
பாவமாகப் பார்க்கிறாள்//

Nice..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நிதர்சனத்தைச் சொன்ன அருமையான வரிகள். வாழ்த்துகள் மானஸ்தி!

//அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அனைத்தையும் பரிமாறும் இ.வ. கடையில் எத்தனை நாள் தான் ஓசியிலேயே சாப்பிடுவது?//

உங்களுக்கு விஷயமே தெரியாதா? இட்லிவடையே இப்போதெல்லாம் அடுத்த கடை சாப்பாட்டை தான் வாங்கி பரிமாறுகிறார்.
//கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-)
//

இந்த ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்த்து சாப்பிடும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.

ஆதி மனிதன் said...

எல்லாம் இ. வ. யை திட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? கவிதாயினி சுபத்ரா வாழ்த்து சொல்வது யார்?

சுபத்ரா. கவிதை அருமை. அதிலும்...
//அழுகின்ற நேரங்களில் அருகினில் செல்லமாட்டேன் சில சிரிக்கின்ற சமயங்களில் நான் உறக்கத்தில் உறைந்திருப்பேன்//
செம டச்சிங்.

R.Gopi said...

கவிதை....கவிதை....

அபிராமி.... அபிராமி....

// kggouthaman said...
1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குவது போல,
1330 Followers கண்ட இட்லி வடை, உலகப் பொது வலையாக இன்று முதல் அழைக்கப்படும்!//

கௌதமன் சார்.... கலக்கல்....

R.Gopi said...

//கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-) //

*****

இட்லிவடை... மெதுவா சொல்லுங்க...

“தல” வீட்டுல நீங்க சொல்ற மாதிரி ஒரு கவிதாயினி இருக்காங்க....

சைவகொத்துப்பரோட்டா said...

பொம்மை உலகம் நல்லா இருக்கு சுபத்ரா.

JUJU said...

The first one is VERY TOUCHING. A sad & real perspective from a Child's point of view.

Second one too is nice..it is Kalvi Chandai by Kalvi Thanthais

You have amazing talent "Manasthi". Pls do write often. Yours refreshing as we are only used to the "Kavithayinis of the family's" kavithai which are gost written by someone else these so called Kavithayini's even read out the commas & full stops when they read them.

சுபத்ரா said...

//கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-)//

அழையா விருந்தாளியா வந்தா மரியாதை இவ்வளவு தான் கிடைக்கும்.

//எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்//

ஹ்ம்ம்..

Anonymous said...

சரி, ஏதோ கவிதைன்னு சொன்னீங்களே, எங்கே காணும்?

சென்னை பித்தன் said...

IV,
உங்களுக்கு பிடிக்கக் கூடிய ஒரு கவிதை என் பதிவில் பாருங்கள்
http://chennaipithan.blogspot.com
”உதய சூரியனும் இரட்டை இலையும்”

திரு.திருமலை said...

மஞ்சள் கமெண்ட்-ஐ தவிர்த்திருக்கலாமே! இட்லி வடை

LK said...

//ரி, ஏதோ கவிதைன்னு சொன்னீங்களே, எங்கே காணும்?

November 07, 2010 3:19 PM//

hahahah

KICHA said...

' அம்மா பொம்மையும்
அப்பா பொம்மையும்
எப்போது என்னோடு
விளையாட வருமென்று
பாவம் அவளுக்குத்
தெரியவில்லை போலும்
பாவமாகப் பார்க்கிறாள '
very nice

சி.தவநெறிச்செல்வன் said...

வாழ்த்துக்கள் சுபத்ரா. இரண்டு கவிதைகளும் அற்புதம், வீட்டுக்கு ஓடிவிடலாமா குழந்தைகளைப்பார்க்க என்று தோன்றுகிறது

Anonymous said...

kavithai ezhutha varalai na vaaye moodikittu utkarnthu irukkanum.anavasiya pechu koodathu.

விஜயசக்கரவர்த்தி said...

அந்த கேவலமான ஆணாதிக்க கமெண்ட் தேவைதானா?

Kamesh said...

IV,

You have shown that you r a true follower for cho by your yellow comment...By the way Bommaigal Kavithai Nice.. Iyanthira Vaazhkaiyile ippadiye ponaall.. niraya kavithayinigal varuvaargal..

Kalvi... athu kasukku vilai poi aandugal pala..

Kamesh

jaisankar jaganathan said...

//கவிக்குயில்களும் கவிதாயினிகளும் பிறந்த நாட்டில் இப்படி ஒரு கமெண்ட்டா?
/

repeatu

rightsaidfaiz said...

Hi,

Would you please read my blog below and place your comments / suggestions over there?

rightsaidfaiz.blogspot.com

warm regards
Right Said Faiz