பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 02, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 2-11-2010

முனிக்கு கடிதம் ...


அன்புள்ள முனி,

நேற்று தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 'ஓச்சாயி' போன்ற படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க முடியாது என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் அந்த செய்தி குறிப்பில் "வ" குவட்டர் கட்டிங் என்ற படத்தை பற்றி மூச்சுவிடவில்லை. அதன் விளம்பரம் தான் கலைஞர் டிவியில் வருகிறதே பிறகு அதை பற்றி எப்படி சொல்லுவார்கள். அப்படியே சொன்னாலும் சொன்னவர் முழு கட்டிங்கிற்கு உட்படுத்தப்படுவார். இதற்கு எல்லாம் பதில் சொல்லும் தமிழக அரசு ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி சுப்ரீம் கோர்ட் சொன்ன கருத்துக்கு ஊமையாக இருக்கிறது.

பாரதத்தின் மிகப் பழம்பெரும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் இவற்றைவிடப் பெரியதும், புகழ்பெற்றதுமாக இப்போது கருதப்படுவது திராவிடச் சுடர் ஆ.ராசாவினால் செய்யப்பட்டுள்ள 2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு. இதனால் அரசிற்கு ஏற்பட்ட எழுபதாயிரம் கோடிகள் என ஏற்கனவே பலமுறை கதறியாகிவிட்டது. இந்த மேரு மலையை விட உயர்ந்த முறைகேட்டை மூடி மறைக்க காங்கிரஸும், அதன் கொள்கை நடைமுறைச் செயலகமுமான மத்திய புலனாய்வுத் துறையும் மிகவும் முனைந்திருப்பது அனைவரும் அறிந்த சரித்திரமே. இடையிடையே கழகம் செய்த சில உருட்டல் மிரட்டல்களை அடக்கி வைப்பதற்காக தொலைத் தொடர்பு அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத் துறை அதிரடிச் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வெளியானதெல்லாம் ஏற்கனவே நமக்குத் தெரியும்.

இது இப்படி இருக்க தன்னார்வ நிறுவனம் ஒன்று, 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்படுகின்றனவா என்றும், விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் உச்ச நிதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தது. இதனிடையே ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடைபெறவில்லையென ராசாவே தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் வேறு ராசாவைக் கொண்டாடினார். மும்பை தாக்குதலில் எனக்கு எவ்வித தொடர்புமில்லை என அஜ்மல் கஸாப் எதும் பிரதமரிடம் கூறாமலிருக்க வேண்டும்.

சில நாட்கள் முன் இவ்வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச், சிபிஐ வேண்டுமென்றே இவ்வழக்கைத் தாமதம் செய்வதாக கடும் கண்டத்தைப் பதிவு செய்தது. அதோடல்லாமல், சிபிஐ தமது காலை தாமே வாரிக் கொள்வதாகவும், மற்றவர்கள் விஷயத்திலும் சிபிஐ இதே தாமதத்தைக் கடைபிடிக்குமா என்றும், மத்திய அரசு செயல்படும் லட்சணம் இதுதானா என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. தவிர விசாரணை நடைபெற்றிருக்கும்போதே அமைச்சர் பதவியில் தொடர்வதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்விஷயத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பும் இரண்டாவது கண்டனக் குரல் இது. ஏற்கனவே ஒருமுறை கண்டனம் செய்தபோது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசு தனது வழக்கமான பதிலைக் கூறியது. ஆனால் பாவம் சுப்ரீம் கோர்ட் இதையெல்லாம் நம்பும் நிலையில் இல்லை. தற்போது தெரிவித்திருக்கும் கண்டனம் மத்திய அரசை சங்கடப் படுத்தியுள்ளது போல் தெரிகிறது. இம்முறையும் அரசு நடவடிக்கை எடுக்கும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து ராசா சொன்ன கருத்து "எனக்கு உடம்பு சரியில்லை, பிறகு பேசலாம்" என்பது. ஆக மருத்துவமனையில் படுத்துக்கொள்ள இப்பவே அவர் ரெடியாகிவிட்டார் போல. கலியுகத்தில் உடுத்திக்கொள்ல கோவணம் கிடைக்குமோ கிடைக்காதோ, ஊழலுக்குக் வண்ண வண்ண கோவணம் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் தலைவர் இது தாழ்த்தப்பட்ட ஊழல் என்ற கோவணத்தை இதற்கு மாட்டுவார். பொறுத்திருங்கள்.

மஹராஷ்டிர காங்கிரஸ் அரசாங்கத்த்தால் ஊழல் பாதுகாப்புப் பேரவையான மத்திய காங்கிரஸுக்கு புதிய தலைவலி உண்டாகியுள்ளது. கார்கில் போர் வீரர்களுக்கும், அதில் வீர மரணமெய்தியவர்களின் குடும்பத்தாருக்கும் மும்பையின் கொலாபாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. இக்குடியிருப்பில் தற்போதைய ( தீபாவளிக்கு பிறகு அவர் முன்னாள் ஆகியிருப்பார்) முதல்வர் அஷோக் சவான் தனது மாமியார், மைத்துனி, மைத்துனர் என சகட்டுமேனிக்கு வீடுகளை ஒதுக்கியுள்ளது இப்போது பெரும் பிரச்சனையைக் கிளப்பி அவரது பதவிக்கே வேட்டு வைத்துள்ளது.

ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி என்ற இக்குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதியளிப்பதில் துவங்கி, வீடுகள் ஒதுக்கீடு செய்வது வரையிலான காலகட்டத்தில் மஹராஷ்டிரம் நாராயண் ரானே (சிவசேனை), சுஷில் குமார் ஷிண்டே (காங்கிரஸ்), விலாஸ் ராவ் தேஷ்முக் (காங்கிரஸ்) அஷோக் சவான் (காங்கிரஸ்) என நான்கு முதல்வர்களைக் கண்டுவிட்டது. இப்பிரச்சனை வெடித்ததும் முதல்வர் சோனியாவைச் சந்தித்து தனது ராஜிநாமாவை சமர்பித்து விட்டார். ஆனால் சவானுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்துள்ளதால் இப்போதைக்கு பிரச்சனை விசாரணை என்ற பெயரில் நீண்டு கொண்டிருக்கிறது. இப்போது இந்த நான்கு முதல்வர்களுக்குமே இம்முறைகேட்டில் தொடர்பிருப்பதாக புகைந்து கொண்டிருக்கிறது.

தற்போது டி.ஆர்.பாலு அவர்கள் அனுமதி அளித்த்துள்ளார் என்ற பூதம் கிளம்பியுள்ளது. எப்போது தமிழன் காங்கிரஸ் ஊழலுக்கு 'நண்பெண்டா'
சி.பி.ஐக்கு அடுத்த கேஸ் ரெடி.

எனக்கு தூக்கம் வருவது இல்லை என்று எடியூரப்பா கூறியிருக்கார். எதற்கு என்று அந்த நியூஸை பார்த்தால் விவசாயிகள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். விவசாயிகளின் கஷ்டங்களை நினைத்தால் எனக்கு சரியான தூக்கம் வருவது இல்லை என்று விளக்கம். இவ்வளவு நாள் குதிரை, யானை பேரம் நடத்தியவருக்கு எப்படி இந்த மாதிரி கூலாக பொய் சொல்ல முடிகிறது ?


அடுத்த கூல் நியூஸ் எல்லோருக்கும் ஒரு ஓட்டு, ஒரு முன்னாள் முதல்வரான எனக்கு இரண்டு ஓட்டு ஏன் கூடாது என்று இரண்டு முறை ஓட்டு மிஷினில் ஓட்டு போட்டுள்ளார் லல்லுவின் மனைவி ரப்ரி தேவி. "இரண்டு முறை அழுத்தினேன் ஆனால் ஒரே ஒரு சவுண்டு தான் வந்தது. எனக்கு என்னமோ இந்த காங்கிரஸ்காரங்க தேர்தல் ஆணையத்த கைக்குள்ள போட்டுக்கிட்டு ஓட்டு மெஷின்ல தில்லுமுல்லு பண்ணுறாங்கண்ணு தோணுது! அப்படியும் என் கணக்குல நான் ரெண்டு ஓட்டு போட்டுட்டேனே!" என்று கூறியுள்ளார். மணிரத்தினம் படத்தில் ஒரு வசனம் வரும், அதே போல "பேசாம அந்த மாநிலத்தில பிறந்திருக்கலாம்" என்று எண்ண தோன்றுகிறது.

கடைசி தகவல். எந்திரன் சிடி 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. சன் டிவி ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் மதுரைப் பேச்சு சி.டி.க்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி சரித்திரம் படிக்கிறதாம். ஜெயா டிவியில் தீபாவளிக்கு மீண்டும் ஒளிபரப்புவார்கள் என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதாவின் மதுரை கூட்டதுக்கு போனவர் வீட்டிலிருந்த இலவச டிவியையும், இலவச கேஸ் அடுப்பும் திமுகவினரால் திரும்பப் பறிக்கப்பட்டனவாம்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டவர்கள் இப்போது பயந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஏன் என்று சொன்னால் அசிங்கமாக இருக்கும் :-)


இப்படிக்கு,
இட்லிவடை

13 Comments:

ரிஷபன்Meena said...

மாதச் சம்பளகாரர்களிடம் வருமானவரி பிடித்துக் கொண்டுவிடுகிறார்கள்.ஆனால் எந்திரன் மாதிரி கொள்ளையாய் சம்பாதிக்கும் சினிமாக்காரர்களுக்கு எதுக்கு தான் வரிவிலக்கோ ? இது என்ன மாதிரி தமிழ் வளர்ப்போ தெரியல.

பொறுங்க அந்தப் படத்தை கடைசி நேரத்தில் பேரன் யாராவது விலைக்கு வாங்கினா வரி தானா விலகிடும்.

நாஞ்சில் பிரதாப்™ said...

//ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டவர்கள் இப்போது பயந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஏன் என்று சொன்னால் அசிங்கமாக இருக்கும் //

சேப்டி டேங்க் உள்ளேயெல்லாம் எறங்கி வாருவானுங்களோ???:))

Mukkodan said...

Bihar has changed a lot coz of BJP's superb Governance, but Congress doing well in the election is very much a possibility with the support of Rigged EVM's, thanks to the loyal Naveen Chawla.

மஞ்சள் ஜட்டி said...

ஸ்பெக்ட்ரம் கேசுல பல அரசியல் வாதிகள் (including Manmohan Singh & Sonia) இப்படி தான் புலம்புவார்களா? "ராசாவே !!! உன்னை நம்பி........." இதில் ஒரு கழக வி.ஐ.பி பெண்மணியும் அடக்கம்??

R.Gopi said...

// "வ" குவட்டர் கட்டிங் என்ற படத்தை பற்றி மூச்சுவிடவில்லை. அதன் விளம்பரம் தான் கலைஞர் டிவியில் வருகிறதே பிறகு அதை பற்றி எப்படி சொல்லுவார்கள். அப்படியே சொன்னாலும் சொன்னவர் முழு கட்டிங்கிற்கு உட்படுத்தப்படுவார்//

// ராசாவே தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் வேறு ராசாவைக் கொண்டாடினார். மும்பை தாக்குதலில் எனக்கு எவ்வித தொடர்புமில்லை என அஜ்மல் கஸாப் எதும் பிரதமரிடம் கூறாமலிருக்க வேண்டும். //

// கலியுகத்தில் உடுத்திக்கொள்ல கோவணம் கிடைக்குமோ கிடைக்காதோ, ஊழலுக்குக் வண்ண வண்ண கோவணம் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் தலைவர் இது தாழ்த்தப்பட்ட ஊழல் என்ற கோவணத்தை இதற்கு மாட்டுவார். பொறுத்திருங்கள்.//

//"இரண்டு முறை அழுத்தினேன் ஆனால் ஒரே ஒரு சவுண்டு தான் வந்தது. எனக்கு என்னமோ இந்த காங்கிரஸ்காரங்க தேர்தல் ஆணையத்த கைக்குள்ள போட்டுக்கிட்டு ஓட்டு மெஷின்ல தில்லுமுல்லு பண்ணுறாங்கண்ணு தோணுது!//

//கடைசி தகவல். எந்திரன் சிடி 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. சன் டிவி ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை//

********

படு கலக்கல் முனி கடிதம்....

Anonymous said...

super punch manjal comment...

venkatramanan said...

//மணிரத்தினம் படத்தில் ஒரு வசனம் வரும், அதே போல "பேசாம அந்த மாநிலத்தில பிறந்திருக்கலாம்" என்று எண்ண தோன்றுகிறது.//

அது பாலசந்தரின் அழகன் அல்லவா?!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Anonymous said...

தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கும், கனி, ராசா நடிப்பில் "தூக்கு கனி, அமுக்கு ராசா" விரைவில் வெளியீடு. டைரக்ஷன் : கே.எஸ் ரவிக்குமார்.., இசை : அறிவுநிதி. பைனான்சியர்: கருணாநிதி...

அமுதப்ரியன் said...

வணக்கம்.
ரொம்ப நாளைக்கு பிறகு கடையை திறந்திருக்கிறீர்கள்...

அரவிந்த் said...

//மும்பை தாக்குதலில் எனக்கு எவ்வித தொடர்புமில்லை என அஜ்மல் கஸாப் எதும் பிரதமரிடம் கூறாமலிருக்க வேண்டும்.//

சூப்பர்... இட்லி வரை ரிடர்ன்ஸ் வித் ஃபுல் ஆஃப் எனர்ஜி. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா, சூடா வந்திருக்கே இட்லி.. நல்லாருக்கு.

Anonymous said...

ஸ்டாலின் நான்கு எழுத்து,
அழகிரி நான்கு எழுத்து,
கனிமொழி நான்கு எழுத்து,
கழகம் நான்கு எழுத்து,
கலைஞர் நான்கு எழுத்து,

எங்களில் யாராவது ஒருவர்
தொடர்ந்து அரியணையில் இருப்பது
தமிழனின் தலை எழுத்து

நன்றி: http://adrasaka.blogspot.com

seetha said...

ஒரு தகவல் தேவை இட்லிவடை. இந்த வரிவிலக்கு சசாசார்த்துக்கு யாரும் பொதுனல வழக்கு போடவில்லையா?

Anonymous said...

Pls look at this also


http://sathish777.blogspot.com/2010/12/2g.html