பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 15, 2010

மண்டேனா ஒன்று - 15/11/2010


ஒவ்வொரு தீபாவளி தினத்தன்றும், தினசரிகள், ஆட்சியிலிருக்கும் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகளைப் பிரசுரிக்கும். இந்த தீபாவளிக்கும், இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சோனியா காந்தி, மற்றும் ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் பல அரசியல் தலைவர்கள் மக்களுக்கு "இத்தினத்தில் மக்களது வாழ்வில் ஒளி பிறக்கட்டும்" என்ற ரீதியில் வாழ்த்துச் செய்திகளை விடுத்திருந்தனர்.

இந்த மரபை குறிப்பிடத்தகுந்த அளவில் தவிர்த்தவர் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். பெரியார் ஈ.வே.ராமசாமியால் போஷிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பகுத்தறிவாளர் என்று தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் இவர், கடவுளரும், சாத்தானும் தொடர்புடைய தீபாவளிக்கு வாழ்த்துக் கூறுவதைத் தவிர்த்தது சித்தாந்த ரீதியாக அவரைப் பொறுத்தவரை மிகவும் சரியானதே. ஆனால் கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாத பகுத்தறிவாளர். ரமலான், கிறிஸ்த்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்துக்கள் வெளியிடுவதிலிருந்து தவறுவதே இல்லை.

இஸ்லாமியர்கள் அணியும் தலைக் குல்லாயை அணிந்து, இஃப்தார் விருந்துகளில் கலந்து கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது மகளும், கவிஞரும், நாத்திகம் மற்றும் பெண்ணியம் போன்றவற்றின் மீது புரட்சிகர சிந்தனைகளை உடையவருமான கனிமொழி ஒரு இஃப்தார் விருந்தில், தலையை முழுவதும் மறைக்கும் விதமான பாரம்பரிய உடையுடன் கலந்து கொண்டார்.

ஆனால் கருணாநிதியின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம், அவருடைய குருநாதர் பெரியாரைப் போலல்லாமல் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டுமே சாடும் தன்மையை உடையது. ஒருமுறை கருணாநிதி தம்முடைய கட்சி சகா ஆதி ராஜாராம் நெற்றித் திலகம் அணிந்ததற்காக அவரைக் கடிந்து கொண்டதோடு, அது ரத்தம் வடிவது போலுள்ளது எனவும் கேலி செய்தார். தவிர கூட்டணியில் இல்லாத வேளைகளில் கருணாநிதி அறிவிக்கப்பட்ட ஹிந்துத்துவக் கட்சியான பாஜகவை பண்டாரப் பரதேசிகள் என்றும் வர்ணிப்பார்.

ஆனால் அவருடைய குடும்பம் எப்போதும் அவருடைய பகுத்தறிவுப் பிரசாரங்களிலிருந்து விலகியே நிற்கிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்களில் சிலர் மத நம்பிக்கையுடையவர்கள். அவருடைய மருமகளும், மு.க.ஸ்டாலினினுடைய மனைவியுமான துர்கா, ஒருமுறை தன்னுடைய சேகரிப்பில் இருக்கும் விநாயகர் விக்ரகங்களை ஒரு பிரபல தமிழ் பத்திரிகைக்கு பெருமிதத்துடன் காட்சிப்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு, மைலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணியம்மன் கோவிலில் ஒரு புதிய உணவு அரங்கத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதியின் பேத்தியான எழிலரசி அவரது மகள் செல்வியின் மூலமாக ஒரு கோவில் கட்டுவதற்காக ரூபாய் பதிமூன்று லட்சத்தை சமீபத்தில் நன்கொடையாக அளித்தார். கருணாநிதியின் அதிகாரப்பூர்வ மனைவியான தாயாளு அம்மாள், புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பக்தை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அரசாங்க விழா ஒன்றை நடத்தும் பாவனையில், சாய்பாபா சென்னைக்குத் தருவிக்கப்பட்டு, சாய்பாபா கருணாநிதியின் இல்லத்திற்கு தனிப்பட்ட வருகை தந்ததோடு மட்டுமல்லாமல், தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

கருணாநிதியினுடைய அக்காள் பேரன் கலாநிதி மாறன், மற்றும் பேரன்களான உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி ஆகியோர் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கின்றனர். இவர்களுடைய படங்கள் அனைத்துமே பிராமண பூஜாரிகளின் பூஜைக்குப் பிறகே துவங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த குடும்பமுமே இறை நம்பிக்கையாளர்கள் என்ற பட்சத்தில் கருணாநிதி மற்றும் தனித்து நிற்கிறாரா? அப்படித் தெரிந்தாலும், அதுவல்ல நிஜம். கருணாநிதியும் அவருடைய மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்தான். சில வருடங்களாக அவர் அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மஞ்சள் துண்டு - அவருடைய நன்மையை முன்னிட்டு அவருடைய குடும்ப ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்ட நிறம் என்று பரவலாக அடிபடுகிறது. மிக சமீபத்தில் தஞ்சை கோவிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதற்கு வருகை தந்த கருணாநிதி பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து பக்கவாட்டு நுழைவு வாயிலின் மூலமாகவே கோவிலை அடைந்தார். கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் மூலமாக வருகை தரும் அரசியல் தலைவர்களது அரசியல் வாழ்வு வீழ்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை முன்னிட்டே இம்முடிவு. தவிர, தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து தப்புவதற்காக, பட்டுசட்டை, வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்தார்.

கருணாநிதி அரசாங்க கட்டிடங்களையும், திட்டங்களையும் கூட அத்திட்டப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே சுப தினங்களில் திறந்து வைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடம், முழுமையான கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கும் முன்பாகவே பல் கோடி ரூபாய் செலவிலான சினிமா செட்டிங்குகளில் பயன்படுத்தப்படக் கூடிய போலியான மேற்கூரையுடன் மிகுந்த துரித கதியில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகும், தலைமைச் செயலகம் பழைய கட்டிடத்திலிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டூர்புரம் நூலகமும் பணிகள் முடிவடைவதற்கு முன்னதாகவே திறந்து வைக்கப்பட்டது.

இருந்தாலும், கருணாநிதி தீபாவளி வாழ்த்துக் கூறுவதிலிருந்து சற்று தள்ளியே இருக்கிறார். அவரைப் பொருத்தவரை தீபாவளி கொண்டாட்டம் என்பது திராவிட தீய சக்திகளுக்கு எதிரான ஆரியக் கடவுளரின் வெற்றி என்று கருதப்படுகிறது. ஆனால் குறிப்பிடத்தகுந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகனைப் பொருத்தவரை, தீபாவளி என்பது திராவிடர்கள் (திசம்பர் மாதத்தில்) கொண்டாடும் கார்த்திகை தீபத்திருநாளின் மூலமே என்றும், பிறகு புத்தர்களால் அது வடவர்களின் பண்டிகையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

முதல்வரின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம் ஒருபுறமிருக்க, அவருடைய குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி தீபாவளி கொண்டாடக் கூச்சப்படவில்லை. விளம்பரதாரர்கள் மூலமாகக் கிடைக்கும் கணிசமான தொகையை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இப்பொழுதாவது கருணாநிதி தனது சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதத்தை விட்டொழித்து, அனைத்து மதத்தவரின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், அல்லது அவருடைய குருநாதர் பெரியாரைப் போல அனைத்து மத நிகழ்ச்சிகளிலிருந்தும் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் இவை நடக்கமலேயே போகலாம்....இப்பொழுது துவங்கியே சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான சுப தினங்கள் கணிக்கப்படுகின்றன.

கட்டுரை ஞாநி, தமிழாக்கம் யதிராஜ்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஞாநி இதை மறந்துவிட்டார் - :-)


8 Comments:

Simulation said...

"இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை"

http://simulationpadaippugal.blogspot.com/2010/11/blog-post.html

சிமுலேஷன்

ரிஷபன்Meena said...

ஐந்தில் வளையாதது என்பதில் எங்கே வளையப் போகிறது.

அவர் அப்படி தான் இருப்பார் இறுதிவரை. வாரிசுகள் காலத்தில் (ஆட்சியில் இருந்தால்) இந்த அளவு தீவிரம் இருக்காது

Rajaraman said...

தமிழகத்தின் மூத்த பச்சோந்திக்கு ஞானி சரியான நெத்தியடி கொடுத்திருக்கிறார். ஒரு திருத்தம் ஆதிராஜாராம் என்பதற்கு பதிலாக ஆதி சங்கர் என்றிருக்க வேண்டும். இவர் தற்போதய கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்பி.

Anonymous said...

all this are like sevidan kathil oothiya sangu pola.why talk about manjal thundu.it was Karunanidhi who ensured breaking of his own statue erected in mount road for reasons which he calls moodanambikkai.he was aware that Kamaraj losthis eletion after his statue was unveiled when he was alive.Likewise Anna lost his life within a year of unveiling of his statue.hence the nathigar has conveniently not reinstalled his statue.all people who agitated for KANNAGI statue to be reinstalled keep quite on this. VEERAMANI AND CO are also silent his fanclub starting from JAGATRAKSHAGAN can attempt to reerect KARUNANIDHIS statue.they will be thrown out.
KANIMOZHIS PENNIYAM IS ANOTHER HOAX.NO LADY SPEAKING PENNIYAM WILL ALLOW ANOTHER LADY TO BE INSULTED ON PALIYAL/MORAL GROUNDS.HER FATHER IS DOING THIS TO JAYALALITHA DAY IN AND DAY OUT.
HER FATHERS REMAKS CAN BE APPLIED TO KANIMOHI IN TOTO.PEOPLE CAN TALK ABOUT HER PAST AND PRESENT.SHE HERSELF HAS ON RECORD THAT A WOMANS PALIYAL PIRALVUGAL MUST NOT BE REFRRDE TO.OF ALL THESE WHY TALK OF PALIYAL PIRALVUGAL. KUTTAMULLA NENJA.
IF SHE IS A REAL PENNIYAVATHI SHE MUST PUBLICLLY CONDEMN HER FAHERS REMARKS ON JAYALALITHA. NEWTONS THIRD LAW WILL OPERATE IN LIFE ALSO.KARUNANIDHI WILL GET BACK VIA KANIMOZHI ALL HE SAID ABOUT JAYALALITHA.
WHY NOT KARUNANIDHI PUBLICALLY PEOCLAIM THAT HE DOES NOT WANT THE VOTES OF ALL AATHIGAS AND BELIEVERS.AFTERALL HE IS A PERSON LIVING FOR HIS KOLGAI WHY NOT LOSE THE VOTES OF AAYHIGAS FOR A CAUSE.

Anonymous said...

//WHY NOT KARUNANIDHI PUBLICALLY PEOCLAIM THAT HE DOES NOT WANT THE VOTES OF ALL AATHIGAS AND BELIEVERS//

What are you talking?
The ball is now in Asthika's court who should unite and proclaim that they would not vote for him.THIS WILL NEVER HAPPEN IN TN as there is a highest level of brahmin hatred here and all non brahmins even though they are asthikas are silently supporting him.He knows about it fully well and thats why indulging in all mischief!

Anonymous said...

IF Mr.Karunanidhi believes that he can appease the minorities in Tamil Nadu by doing this. Then it is a shame for the chair he is occupying. The anti-god theory the Dravidian parties propogated is a lost case. Majority of the people in Tamil Nadu do not believe this.

For the sake of vote bank, he is going to the extent of not extending even a wish to the majority of the people who celebrate an important festival.

Imagine the plight of the minority people if the situation turns tomorrow.

Siva, New Delhi

Anonymous said...

ஞாநி சொல்வது எல்லாம் சரிதான். கருணாநிதிக்கு இந்துப் பண்டிகைகள் என்றால் மட்டும் குரோதம் ஏனென்றால் இத்தனை நாட்கள் ஆரியன் திராவிடன் என்று சொல்லி மக்களிடம் விஷத்தை விற்றுப் பிழைப்பு நடத்தியாகி விட்டது அந்த வியாபாரமே நன்கு விலை போவதினால் தொடர்ந்து விற்கிறார். மேலும் சர்ச்சுக்களின் கவனிப்பு வேறு கிடைக்கும். ஞாநி கருணாநிதிக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள். ஆனால் அதே ஞாநி தன் குருநாதனும் பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டு விட்டுப் பாப்பானை அடி என்று சொன்ன வெறியனும், அக்கிரஹாரங்களையெல்லாம் தீயை வைத்துக் கொளுத்து என்று தன் குண்டர்களுக்கு உத்தரவிட்ட தீவட்டியுமான ஈ வெ ராமசாமிநாயக்கனும் இதே போலவே கிறிந்துவ, இஸ்லாமுக்கு சலாமும் இந்து கடவுள்கள்க்கு மட்டும் செருப்படியும் கொடுத்தாரே அந்த இரட்டை வேடத்தையும் இதே போன்ற ஆவேசத்துடன் இதே ஞாநி தன் அடுத்த எக்ஸ்ப்ரஸ் கட்டுரையில் கிழி கிழியெனக் கிழிப்பார் என்று நம்புவோமாக என்ன இருந்தாலும் ஞாநி மானஸ்தர் கருணாநிதிக்கு ஒன்று ஈ வெ ரா வுக்கு ஒன்று என்று இரண்டு விதமான ஸ்கேல்களை வைத்துக் கொண்டு அளக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஞாநி ஈ வெ ரா அப்படியெல்லாம் இல்லை நல்ல குடி நாணயம் அவர் எல்லா மதங்களையுமே ஒரே மாதிரித்தான் அவமதித்தார் என்று சொல்ல வருவாரேயென்றால் அவரை தயவு செய்து மா வெங்கடேசன் என்ற தலித் எழுதிய ஈ வெ ரா வின் இரண்டு முகங்கள் அல்லது சுப்பு எழுதிய திராவிட மாயையை ஆகியவற்றைப் படித்து விட்டும் பழைய குடியரசு, விடுதலை ஆகிய கழிசடைகளைப் புரட்டிப் பார்த்து விட்டும் பேச வந்தால் அவருக்கு நல்லது. இல்லாவிட்டால் ஈ வெ ரா வின் வண்டவாளங்களை, அசிங்கங்களைச் சொல்லி ஞாநிக்குப் பதிலடி கொடுக்கும் நிலை வந்து விடும்.

ஈ வெ ரா வையும் ஞாநி இதே வேகத்தில் கண்டிப்பார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்

அப்பாவி வாசகன் ஒருவன்

santhosh said...

well written post . Eventhough he says dat he is a supporter of tamil then why did he allow his family members to name their production companies in English. He fools each and every tamilans and we all keeps silence to his acting and keep on clapping for his wonderful acting. When will india become developed nation?