பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 13, 2010

கர்நாடக குழப்பம்

எடியூரப்பா பல யாகம், கோயில்களை என்று சுற்று வந்தாலும் அவரை சூழ்ந்துள்ள தோஷம் விட்டபாடு இல்லை. கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவில் நடக்கும் கூத்தை படிக்க ஜாலியாக இருக்கிறது. தமிழகத்தில் ஏன் இந்த மாதிரி இன்னும் நடக்கவில்லை என்று எல்லோரும் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இது தான் அரசியல். அரசியலில் நாற்காலி முக்கியம் என்பது எழுதப்படாத விதி. ஆட்சி அமைக்க சுயேட்சை எம்.எல்.ஏக்கு மந்திரி பதவி கொடுத்து தன் பக்கம் எழுத்ததிலிருந்து நேற்று கவர்னர் கோதாவில் இறங்கியவரை சுவாரஸியமாகவே இருக்கிறது.

இரண்டு நாளைக்கு முன்பு ஜனாதிபதி ஆட்சிக்கு சிபாரிசு செய்துவிட்டு, நேற்று திரும்பவும் மெஜாரிட்டியை நிரூபிக்க மீண்டும் என்று கூறியுள்ளார் கவர்னர் பரத்வாஜ். ஏதோ அவரால் முடிந்தது. கவர்னர் செய்தது பெரிய டோங்கு வேலை என்றாலும், எடியூரப்பா ஒன்றும் நல்லவர் இல்லை. அவர் கிட்டதட்ட மன்கோகன் சிங் மாதிரி. அவர் நல்லவர் ஆனால் கெட்டவர்களை பாதுகாப்பாவர். தன் நாற்காலியை பாதுகாக்க ரெட்டி சகோதரர்கள் செய்த அட்டுழியங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அனுபவிக்கிறார். காலில் முள்ளு குத்தினாலும் உடனே டெல்லிக்கு சென்று மேலிடத்தில் முறையிடுகிறார். பேசாம கர்நாடகா மக்கள் எல்லோரும் இனிமே டெல்லிக்கே சென்றுவிடலாம்.

முன்பு எம்.எல்.ஏக்கள் சட்டசபையை ஹோட்ட்டல் மாதிரி பாவித்து, தங்கி, குளித்து, சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள். இந்த முறை கோவா, சென்னை என்று தனி விமானத்தில் உல்லாசமாக இருக்கிறார்கள். எங்கிருந்து எவ்வளவு பணம் இவர்களுக்கு ? கட்டுக்கோப்பான கட்சி என்று ஒரு காலத்தில் பிஜேபிக்கு பேர் ஆனால் இன்று ? கவர்னர் சரியில்லை என்று கோஷம் போடும் பிஜேபிகாரர்கள் யோசிக்க வேண்டும் "நீ என்ன ஒழுங்கா ?" என்று யாராவது அவர்களை கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் ?

Return on Investment மாதிரி பேசாமல் எல்லா எம்.எல்.ஏக்களும் 30 கோடிக்கு கவுடாவுக்கோ, காங்கிரஸுக்கோ விற்றுவிடலாம். நல்ல லாபம் கிடைக்கும். இவர்கள் காசி, ராமேஷ்வரம் என்று யாத்திரை கிளம்பிவிடலாம். அதற்கு தான் இவர்கள் லாயக்கு.


இதற்கு மேல் நான் ஒன்றும் எழுதவில்லை, எடியூரப்பா படித்தால் அழுதுடுவார் பாவம்.

9 Comments:

tdch88 said...

பதினாறு வயதினிலே படத்தில் காந்திமதி ஒரு வசனம் சொல்வார்: "இது என்னடி, இதுக்கு மேலயும் இருக்குடி" என்று. அதுபோல, பதினாலாம் தேதி இன்னும் என்னென்ன இருக்கிறதோ!
மற்றபடி, தமிழ்நாடு பின் தங்கி விட்டதோ என்று குறைப்பட்டுக் கொள்ளவேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கண்ணாடியை உடைத்து, வேட்டியை இழுத்து, சேலையை உருவி எல்லாம் நிகழ்ந்தாகி விட்டது. பஸ் நிறைய எம்.எல்.ஏக்களை ஊர் ஊராக ஷேத்திராடனமும் கொண்டு சென்றாகி விட்டது. அதோடு பார்க்கையில், இதெல்லாம் சும்மா ஜுஜூபி.
தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா, இல்லையா!

Red Chip Robot said...

Tamil Nadu - 60 C; Andhra - 30 C; Karnataka - 8 C; Kerala - 4 C; North India - 15 C.

Is it the price of MLAs in these states?

Nah... it is the amount Rajini's Endhiran netted during its first week run.

Gelusil parties - Keep bashing Rajini & Endhiran. No impact on BO collections.

geeyar said...

//எடியூரப்ப பற்றி அறியாயோர்க்கு: இந்தியாவின் மிக மிக அரிதான நேர்மையான (இருக்க முயல்கின்ற) ஒரு அரசியல் வாதி//

நேர்மையான முதல்வர் என்றால் துண்டை உதறி தோளில் போட்டு போய் இருப்பார்.

Anonymous said...

சுயேட்சை என்பது சரியல்ல. சுய + இச்சை = சுயேச்சை.
சன், கலைஞர் டிவியைப் பார்த்துத் தமிழ் கற்றுக் ”கொல்லாதீர்கள்1”-- டில்லி பல்லி

SENTHIL said...

watch 14

Anonymous said...

பிஜேபியின் பிரச்சினை அதன் ஜனநாயகப் போக்கு.

இந்த மாதிரி பிரச்சினை காங்கிரசுக்கோ, கம்யூனிஸ்டுக்கோ, திமுகவுக்கோ கிடையவே கிடையாது.

யாரவது இன்னும் ஒரு 20 வருடம் கழித்து எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று தோன்றினால், அவர்கள் விமான விபத்தில் செத்துப் போய்விடுவார்கள்.

பாசக பயலுக, பாசக்கார பயலுக. அதுக்கெல்லாம் தில்லு கிடையாது.

tdch88 said...

1. //எடியூரப்ப பற்றி அறியாயோர்க்கு: இந்தியாவின் மிக மிக அரிதான நேர்மையான (இருக்க முயல்கின்ற) ஒரு அரசியல் வாதி//
இந்தக் கருத்தை மற்றொரு இடத்திலும் கண்டேன். இது ஒரு வேளை 'சுரங்கத்திலிருந்து' வெளிப்பட்ட உண்மையாக இருக்குமோ?

2. //பிஜேபியின் பிரச்சினை அதன் ஜனநாயகப் போக்கு//
கட்சிக்குள்ளாகவே இருந்தால் அது ஜனநாயகம். இது குழாயடிச் சணடை. மேலும், பிஜேபியின் தலைவலிகள் எல்லாம் அதன் உள்ளிருப்பவர்களை விட வெளியிலிருந்து ஆட்டி வைப்பவர்களால்தான் விளைகிறது என்பது தெளிவு. இது, 1977ஆம் ஆண்டு ஜனதாவின் வீழ்ச்சிக்குக் காரணமான இரட்டை உறுப்பினர் விவகாரம் தொட்டே தொடர்வதுதான். ஒன்றும் புதிதில்லை.

Anonymous said...

The fact is Yeddy has lost his stature as a leader(thanks to mining barons) and the alternative to Yeddy isn't available. Nor does Congress have good leaders to challenge Yeddy. The funny thing is that all this is happening in a state which is considered the IT capital of India. Yeddy hasn't done any worthwhile thing during his rule nor did earlier CMs and this will continue.
What's the point in calling it a IT capital, when it's about to be under President's rule?. BJP have to learn from DMK on how to garner support by freebies and other populist schemes and acting against troubling members. But if the person is capable of learning why would he be in politics?. He would be instead working as a salaried professional, isn't it? Funny India!.
There is no future for India till the common man - (whom I mean as a educated salaried taxpayer) moves into politics. He would be far more intelligible than our Netas.

ஆதி மனிதன் said...

படம் சொல்லும் கதை...

ஓ... அதுதான் நம்மூர் தலைவர்கள் எப்போதும் கையை காட்டும் போது விரல்களை விரித்து காட்டுகிறார்களா? அப்படினா D.M.K. யை விட A.D.M.K. தேவலை. ஏனா அவங்களுக்கு ஐந்து விரல்களையும் விரித்து காட்ட முடியாது :)