பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 27, 2010

7 !


யார் கண்பட்டதோ தெரியவில்லை, கடந்த சில வாரங்களாக அலுவலகத்தில் அதிக வேலை. கடையை சரியாக கவனிக்க முடியவில்லை. இன்னும் சில வாரங்களில் திரும்பவும் வரலாம் என்று இருக்கேன். இந்த பதிவை பார்க்கும் என் மேனேஜர் எனக்கு அதிக வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்.
அதுவரை ஓசி பதிவர்களுக்கு நன்றி.


இட்லி வடைக்கு ஏழாவது ஆண்டு. அதற்கு எனது வாழ்த்துகள். இத்தனை
வருடங்கள் ஆகியும் ஊசிப் போகாமல் சுவையாக இருப்பது அதன் சிறப்பு. சில சமயம், அதுவே ‘ஊசி’யாகப் போய் பலரைக் குத்திச் சட்னியாக ஆக்கியுள்ளது. அதுவும் அதன் சிறப்பு.

பாராட்டுவதுடன் இட்லி வடைக்கு என் நன்றியையும் தெரிவிக்க வேண்டும். கடுகு தாளிப்பின் CEO- வான நான் இட்லி வடைக்கு கடமைப்பட்டுள்ளேன். என் வலைப்பூவைப் பற்றி இட்லி வடையில் போட்டதும் திடிரென்று ஹிட்ஸ் ஏறியது, தொடர்ந்து இட்லி வடையில் எனக்கு ஒரு இடம் தந்து வருவது எனக்குப் பெருமை அளிப்பதாகவும் உள்ளது.

இட்லி வடை ஒரு பொறுப்பான வலைப்பூ. ஆனால் பல சமயம் சில்லறை விஷய்ங்களுக்கும், பதிவர்கள் குழாயடி சண்டைக்கும் முக்கியத்துவம் கொடுத்து விலாவாரியாக எழுதுவது ஏற்புடையதாக எனக்குப் படவில்லை. இதெல்லாம் ஆரம்ப கால் கட்டத்தில் செய்தால் தப்பில்லை. இ.வ. இன்று முன்னணி வலைப்பூ. ஆகவே பொறுப்புள்ள தளமாகச் செயல்பட வேண்டும். மனிதனை மேம்படுத்தும் தக்வல்களையும் கட்டுரைகளையும் நிறையப் போடவேண்டும். இது என் ஆசை. என் அட்வைஸ்!

தகுதியே இல்லாவிட்டாலும் கூட, யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசனைக் கூறலாம் மற்றும் அட்வைஸ் கொடுக்கலாம் என்பதால் இ.வ.க்கு நான் அறிவுரைக் கூறத் துணிந்தேன்!

இட்லி வடைக்கு மீண்டும் என் வாழ்த்துகள்!

- கடுகு
http://kadugu-agasthian.blogspot.com/


ஒரே சந்தோஷம் - நேற்று அசினுக்கு பிறந்த நாள், இன்று எங்களுக்கு :-)

27 Comments:

இலவசக்கொத்தனார் said...

எங்களுக்கு?!!

நல்லா இரும், ச்சே, இருங்கள்!! :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இட்லிவடையாருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

Kayal said...

வாழ்த்துக்கள்

kggouthaman said...

ஏழு முடித்து, எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இட்லி வடைக்கு,வாழ்த்துக்கள்!
Many more happy returns of the day!
வாழ்க பல்லாண்டு, கேலி, கிண்டல் சகிதமாக!

ஆதி மனிதன் said...

வாழ்த்துக்கள் இட்லி வடை.

என்ன இட்லி ஷேப்ப மாத்திட்டாங்களா? படம் என்ன சொல்லுது?

Selvamani said...

Best Wishes

லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
Tamil Movie Gallery

சீனு said...

வாழ்தூக்கள்...

ரிஷபன்Meena said...

வாழ்த்துக்கள் இட்லி!!

Anonymous said...

Congrates
By Senthilkumar

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

சரியாக இரண்டரை வருடம் ஆகிறது நான் 'இட்லிவடை' படிக்க ஆரம்பித்து! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

சினிமா விரும்பி

R. Jagannathan said...

பெரியவர் வாயால் முதல் வாழ்த்துக்களைப் பெற்றுவிட்டீர். அந்த அறிவுரைகளையும் மதித்து நடக்க முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்! - ஜெ.

Anonymous said...

Happy B'day Idly vadai Oh sorry Tamil paper :)

Bala
Texas

நீச்சல்காரன் said...

விஷயம் தெரியுமா என்று தெரியவில்லை. இருப்பினும் கூறிவிடுகிறேன் தமிழ் பதிவுலகத்தில் அதிகமான மறுமொழிகள் வாங்கிய வலைப்பூக்களில் இட்லிவடைதான் தற்போதைக்கு டாப்.

உங்களை நீங்களே ஓவர்டேக் செய்ய வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இட்லிவடை.

R.Gopi said...

மனம் கனிந்த இனிய 7வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் இட்லிவடை....

அசினோடு ஒப்பிட்டு கடைசியில் பிறந்த நாளை குறிப்பிட்டது தவிர, இட்லிவடையில் எந்த குறையும் இல்லை....

அஹ‌ம‌து இர்ஷாத் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Anonymous said...

asiniku piranthanaal vaalthu kooriya unkali ehirkiroom

ராஜ சுப்ரமணியன் said...

மதுரையை சார்ந்த திரு நாராயணன் கிருஷ்ணனின் உன்னதமான மனித நேய சேவையைக் குறித்து (Heroes of 2010 - CNN) பதிவு எப்போது வரும்?

Anonymous said...

//R.Gopi said...//
அசினோடு ஒப்பிட்டு கடைசியில் பிறந்த நாளை குறிப்பிட்டது தவிர, இட்லிவடையில் எந்த குறையும் இல்லை...


ரஜினியோடு நடிக்க மாட்டேன் என்று அசின் உறுதியா இருப்பதால் எப்படியெல்லாம் கோபப்படராரப்பா கோபியண்ணன்!

NSR said...

வருங்கால ஜனாதிபதி இட்லிவடை வாழ்க!

ரோமிங் ராமன் said...

அஞ்சா நெஞ்சனாக, தமிழ்ப்பதிவர்களின் தளபதியாக நல்ல வழிகாட்டியாக தொடர்ந்து மக்கள் சேவை செய்ய (இன்னைக்கு படிச்ச மீதி பேனர் மறந்து போச்சே!) வாழ்த்துகள்!!

virutcham said...

வாழ்த்துக்கள்

Vikatan_priyan said...

இட்லி வடைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்படியே போனால் TOP one தமிழ் வலைத்தளம் இட்லி வடை தான்.

Anonymous said...

மொக்கை காரணங்கள் சொல்லி பதிவே போடாமல் ஜிம்பலக்கடி வேலை செய்யும் இட்லி வடைக்கு பிறந்த நாள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
- அம்பத்தூர் அனானிகள் சங்கம்

Narayanan said...

வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

என்ன ஆச்சு, இன்னும் வேலை முடியலையா! சீக்கிரம் கடைய திறங்க.

thillai said...

Idly vadai are you sleeping,students are getting kidnpped brutally murdered,why dont u do an R&D on this and write an article on the same.Coimbatore and chennai same incidents,can we still say that that Tamilnadu ia "amaithi poonga".