பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 09, 2010

போலீஸ் ஸ்டோரி பாகம் 4

மூத்த டி.ஜி.பி.க்களாக தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியலில் உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறை படி தனது பெயரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடந்தார் நடராஜ்.

தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமனம் செய்ததில் சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, அவரை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.


தமிழக அரசு பல பெயர்களை பரிசிலீத்தோம் அதில் விஜயகுமார் பெயரும் உண்டு ஆனால் அவர் மாநில பணிக்கு அர விரும்பவில்லை என்று சொல்லியுள்ளது.

இதற்கு விஜயகுமார் அளித்த பதில் மனுவில் மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. மாநில அரசு பணிக்கு நான் வர விரும்பவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்திருப்பது தவறு. நான், மத்திய அரசு பணிக்கு போயிருந்தாலும், என்னையும் டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஒரு அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு டெபுடேஷனில் போனால் அவர் மீண்டும் மாநில அரசுப் பணிக்கு வர மாட்டார் என்று அர்த்தம் கிடையாது. அவருக்கு மாநில அரசுப் பணி பிடிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. ( ஆக அழகிரி மத்திய அரசுக்கு சென்றாலும் மாநில அரசுக்கு வர வாய்ப்பு உள்ளது அது போல )

உயர்நீதிமன்றத்தில், உள்துறை முதன்மை செயலர் உண்மையான தகவலை தெரிவிக்கவில்லை. நான் தகவல்களை மறைத்தேன் என சொல்லி இருப்பது எனக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல உள்ளது. நான் எந்த தகவலையும் மறைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இவ்வளவு நடக்கும் போது கலைஞர் ரத்தம் கொதிக்க தான் செய்யும். என்ன செய்வார் ? நானே கேள்வி நானே பதில் எழுதுவார் இல்லை முரசொலியில் டபுள் ஸ்டாராங்காக ஒரு கட்டுரை எழுதுவார். நீதியின் கதி என்னாவது? என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மத்திய அரசில் ஒரு குறிப்பிட்ட பதவியை அடைய வேண்டுமென்பதற்காக முதலமைச்சரை அணுகினார். முதலமைச்சரும் அந்தப் போலீஸ் அதிகாரி திறமையானவராயிற்றே என்ற எண்ணத்தில் பரிந்துரை செய்தார்.

எனினும், குறிப்பிட்ட பதவி அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக, வேறொரு பதவியில் தலைநகரத்தை விட்டு வெளி மாநிலம் ஒன்றில் அவர் அமர்த்தப்பட்டார்.

அந்தப் பதவியில் அமர்ந்தது முதல், தான் முதலில் விரும்பிய பதவியை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறுவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு, கடைசியில் அந்தக் குறிப்பிட்ட பதவியிலிருந்த ஒரு அதிகாரியை வேறொரு பதவிக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பதவியில் அவர் தற்போது அமர்ந்துவிட்டார்.

தமிழகத்தில் முதல்முறையாக, ஒரு பெண்மணி தலைமை அதிகாரியாக வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதலமைச்சர் முடிவு எடுத்தார்.

ஆனால் அந்த முடிவினால், தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லி, மற்றொரு உயரதிகாரி நீதிமன்றத்தை நாடினார். அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஆட்சிக் கட்சியாக இருந்த அ.தி.மு.கவுக்கு அனுசரணையான அதிகாரி என்று பெயர் எடுத்ததால்; தேர்தல் ஆணையமே அவரை வேறொரு பதவிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றத்திற்குச் சென்ற அந்த அதிகாரிக்கு ஆதரவாக மத்திய அரசு பதவிக்குச் சென்ற அந்த அதிகாரியும் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தின் உயர் பதவியை நிரப்பும்போது, தன்னுடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்படி நீதிமன்றத்தில் இங்கே குறிப்பிட்டவர், அங்கே குறிப்பிட்ட பதவியை அடைவதற்காக மற்றொருவரை வேறொரு பதவிக்கு அனுப்பிவிட்டு, தற்போது அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார்.

உயரதிகாரிகளும், சந்தர்ப்பத்திற்கேற்றவாறு இங்கே ஒருவாதம், அங்கே ஒருவாதம் என்ற ரீதியில் போனால், நீதியின் கதி என்னாவது ?

பெண் அதிகாரி - லத்திகா சரண்
அந்த உயிர் அதிகாரி - நட்ராஜ்
ஆதரவாக மனு செய்வதர் - விஜயக்குமார்பேசாம இதிலும் வாரிசு முறையை கொண்டு வந்துவிடலாம்....

10 Comments:

udhavi iyakkam said...

சந்தர்ப்ப அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள்
கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது
மற்றும் ஒரு முறை நிருபணமாகி
ஆகியுள்ளது

kggouthaman said...

நீதியின் கதி என்னாவது - நீங்கள் வெளியிட்டிருக்கும் பகுதியில் மட்டும் 'பதவி' என்னும் வார்த்தை பதினான்கு முறை வந்துள்ளது.

Palanivel Raj G said...

It started from the day DMK came to power... I mean from 1967.. We should have stopped them in the beginning itself... We didnt do that .. Thats why a Family is trying to persuade us.... Everything will come to an end oneday in someway(;-)... Am eagerly waiting for that...

Anonymous said...

Why don't they have a no-nonsense bidding system for the posts?. The highest bidder will get the post. That'll be more transparent and without issues.

Anonymous said...

shows how the government really functions.and they try to justify their actions, in spite of adverse court rulings! great respect for the judicial system and a poser for the intelligence of the public!

willi said...

/பேசாம இதிலும் வாரிசு முறையை கொண்டு வந்துவிடலாம்/.... super.....

இ.வெள்ளத் துரை said...

அட ஆண்டவா.... இன்னும் என்னவெல்லாம் நாமெ பார்க்கப் போறோமோ....

ம.தி.சுதா said...

அரசியல வேணாம் அது ரொம்ப நாறும்...

Anonymous said...

//ஆக அழகிரி மத்திய அரசுக்கு சென்றாலும் மாநில அரசுக்கு வர வாய்ப்பு உள்ளது அது போல //

idhukku manjal paint adithirukkalaam.. super punch..

Anonymous said...

In Sarunivedita's website an IAS officer's letter's copy sent to the National SC and ST commission is published which graphically says as to how those officers who don't tow the lines set by the politicians are bandies about in the system is so disgusting to read , I fee ashamed to see this. Besides having seen this, how we can expect youths of intelligence would ever come to this so called higher echelons of power in the Administration. When fools tread the path with all the paraphernalia, intellects and intelligent people have to hide to save their lives.