பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 26, 2010

மண்டேனா ஒன்று 26/10/2010

கடந்த சில நாட்களாக கொஞ்சம் பிஸி அதனால் கடைப் பக்கம் வர முடியவில்லை. அதே போல யதிராஜும் பிஸி போல அதனால் அவரும் வரவில்லை. நேற்றி அவர் அனுப்பிய மண்டேனா ஒன்று பதிவு. ..


தேர்தல் தீர்ப்பிற்கு பொதுக் கூட்டம் அளவுகோல் அல்ல! என்று முதல்வர் கருணாநிதி முத்துதிர்த்திருக்கிறார். இது யாருக்காக சொல்லியிருப்பார் என்று சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். எல்லாம் அதிமுக வின் மதுரைப் பொதுக் கூட்டத்தின் ஆஃப்டர் ஷாக். பல்வேறு கொலை மிரட்டல்கள், இடையூறுகளையும் கடந்து கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றிருப்பது, அதுவும் மதுரையில் இவ்வளவு கூட்டம் கூடியது திமுகவின் கிலியை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சோனியாவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி பற்றி ஒன்றும் உறுதியான பேச்சு எழாததாலும், தவிர தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்தவே இக்கூட்டம் என சோனியா அடித்துப் பேசவும், அதன்பிறகு நடைபெற்ற மதுரைப் பொதுக் கூட்டம் இவ்வளவு கூட்டத்தை ஈர்த்ததால், திமுகவின் கிலி அதிகரித்துள்ளதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இப்பொதுக் கூட்டத்திற்கு முந்தைய தினத்தில் வெளியிட்ட அறிக்கையில் எதிர்க்கட்சியினரின் பலத்தை கூட்டத்தைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை; பிறகு எதற்கு அனாவசியமாக கூட்டத்தை கூட்டி சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும்? என்ற ரீதியில் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு முன்னதாக இரண்டு காமெடிகள் நிகழ்ந்ததை நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். ஜெயலலிதாவிற்கு வந்தது போலவே தமிழக முதல்வருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தனவாம். ஒன்று மின்னஞ்சல் மூலமாகவும், மற்றொன்று குறுஞ்செய்தி மூலமாகவும் வந்ததாக செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் அவற்றை யார் அனுப்பினார்கள் என்ற தகவல் இல்லை. அதாவது கோபாலபுரத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தி கலைஞர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கப் போவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லக்குடி போராட்டம், குடமுருட்டி குண்டு, ரயில் நிலையத்தில் ஸ்டாலின் கொலை முயற்சி போன்ற பல படு பயங்கரமான நிகழ்வுகளுடன் இந்த வான்வழித் தாக்குதல் நிகழ்வும் பிற்கால சந்ததி திமுகவினரால் நினைவு கூறப்படும் என்பது திண்ணம்.

இப்போது புதிதாக கலைஞருக்கு, பொதுக்கூட்டங்கள் தேர்தல் முடிவுகளின் அளவுகோல் அல்ல என்ற பகுத்தறிவு ஞானோதயம் பிறந்துள்ளது. முன்னதாக, திருச்சியில் நடைபெற்ற போட்டிப் பொதுக் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பதற்காக திருச்சியைச் சுற்றியுள்ள மனித வாடையற்ற குக்கிராமங்களுக்குக் கூட தமிழக அரசாங்கத்தின் சொகுசு பேருந்துகள் படையெடுத்தன. இப்போது அதிமுகவின் கூட்டத்தைப் பார்த்த பிறகு பிறந்த ஞானோதயம், சற்று முன்னதாகவே பிறந்திருந்தால் தமிழக மக்களின் வரிப்பணமாவது மிச்சமாகியிருக்கும். ஆளுங்கட்சித் தொலைக்காட்சியிலும் கழகத்தின் திருச்சி பொதுக்கூட்டத்தின் ஜனத்திரள் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது ஏன் என்று புரியவில்லை.

முதலில் மத்திய அரசு உதவி பெறும் திட்டங்கள் மாநில அரசின் திட்டங்கள் போல தோற்றமேற்படுத்தப்பட்டது; பிறகு மத்திய அரசில் சிலர் விழித்துக் கொள்ளவும் மத்திய அரசின் பங்கு அரைமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது; இப்பொழுது சோனியா மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்ட பிறகு, திட்டங்களை ஏன் மாநில, மத்திய அரசினதாகப் பிரித்துப் பார்க்க வேண்டுமென முதல்வர் பகுத்தறிவு வியாக்யானம் பேசுகிறார். திருச்சி போட்டிக் கூட்டத்தில் ஆள் பிடிப்பதற்காக அரசாங்க இயந்திரமனைத்தையும் முடுக்கி விட்டபிறகு, இப்பொழுது மதுரை கூட்டத்தைப் பார்த்து கூட்டம் தேர்தல் முடிவின் அளவுகோல் அல்ல என்று திரும்பவும் ஒரு வியாக்யானம். இன்னும் தேர்தலுக்குள் என்னென்ன நடக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கொசுறுச் செய்தி:

கடந்த புதன் கிழமையன்று தில்லி விமான் நிலையத்தில் மத்திய அமைச்சர் அழகிரி, ஸ்பெக்ட்ரம் ராசாவை சக்கையாக ஒரு பிடி பிடித்து விட்டாராம். ஜெயா செய்திகளிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியிலும் மட்டும் இப்பிரச்சனை குறித்த செய்தி வெளியாகியது. மற்ற பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கழகத்தின் கண்ணியத்தை காற்றில் விடவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கருத்து கூற விரும்பவில்லை என்ற ரீதியில் தெரிவித்தார். அழகிரியோ, ராசாவிடமே கேட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டார்.

- யதிராஜ்

நாளை :-)

12 Comments:

ஆதி மனிதன் said...

//இன்னும் தேர்தலுக்குள் என்னென்ன நடக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்//

//இன்னும் தேர்தலுக்குள் என்னென்ன நடக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்//

கரும்பு தின்ன கூலியா வேண்டும்? தேர்தல் வரையும் அதற்கு அப்புறமும் உங்க பாடு கொண்டாட்டம் தான். மக்களுக்கு தேர்தல் வரை மட்டுமே. அப்புறம் அடுத்த தேர்தல் வரை திண்டாட்டம் தான்.

Vino said...

ராஜா திட்டு வாங்குனது சுட்டி தாருமையா!

Anonymous said...

வர வர கடையில எல்லாமே ஓசி ஐட்டமாபோச்சு

யதிராஜ சம்பத் குமார் said...

http://expressbuzz.com/states/tamilnadu/alagiri-%E2%80%98bombards%E2%80%99-raja-at-delhi-airport/217007.html

thamizhan said...

கழக கூட்டங்களுக்கு வருபவர்கள் தானாக வருபவர்கள் என்பதே இல்லை எனலாம்.மக்களை பிடித்துவரும் முறையை ஆரம்பித்ததே தி.மு.க.தான்.அ.தி.மு.க.வின் தலைவர்கள் எம்.ஜி.ஆர்.ஜெயலிதா ஆகியோரை சினிமாவில் பலமுறை பார்த்ததால் நேரில் பார்க்கும் ஆர்வத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வருவது இயற்கையே.ஆனால் இதையெல்லாம் வைத்து வந்த கூட்டம் யாருக்கு ஒட்டு போடும் என்றெல்லாம் கணிக்க முடியாது.இது கருணாநிதிக்கு மட்டுமல்ல சாதாரண நகர,வட்ட செயலாளர்களுக்கே தெரியும்.பிறகு ஏன் இந்த ரகசியத்தை கருணாநிதி போட்டு உடைக்கிறார்.மண்டையில் ஒன்றுமில்லாமல் கட்சிக்காக இன்னும் நகையை அடகு வைத்து வேலை செய்யும் தொண்டனை சமாதானப்படுத்தவே இந்த அறிக்கை.தொண்டனுங்க திருந்தினாத்தான் நாடு உருப்படும்.

Krishna said...

Update to Kosuru..Alagiri has filed a case against The New Indian Express and Jaya TV for the new release...Not sure what he wants to prove end of day :)

//வர வர கடையில எல்லாமே ஓசி ஐட்டமாபோச்சு// Repeateee...May be I should write a letter to Muni on this :) Krishna

Vikram said...

"கடந்த சில நாட்களாக கொஞ்சம் பிஸி அதனால் கடைப் பக்கம் வர முடியவில்லை"

veetukku auto vandadha ippadiyum sollalamma :)

Kayal said...

அழகிரி ராசா உரையாடல் பற்றி இட்லிவடையில் நிச்சியம் போடுவார்கள் என எதிர்பார்த்தேன்...ஹ்ம்ம் இட்லிவடைக்கும் பயமா இல்லை எழுதுவதற்கு ஆள் பஞ்சமா??

Anonymous said...

ஜெயா டிவி, இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அழகிரி நோட்டிஸ்

Anonymous said...

Ayya,

Thuglak attai pada cartoon neengal podamale irukkalam...link-ai suttinal pazhaya padame varuvadhu patri pala murai kooriyam ondrum nadapadhau pola theriyavillai...

kggouthaman said...

// கடந்த சில நாட்களாக கொஞ்சம் பிஸி அதனால் கடைப் பக்கம் வர முடியவில்லை. அதே போல யதிராஜும் பிஸி போல அதனால் அவரும் வரவில்லை.....//

நாங்க மட்டும்தான் வெட்டிப் பசங்க. டெய்லி கடைப் பக்கம் வந்து புதிய பதிவு வந்திருக்கா என்று பார்த்துப் போவதால்!

வடிவேலு said...

வடிவேலு: கணபதி அய்யர்,கணபதி அய்யர் ஒருத்தர் இருந்தாரு........

:)