பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 20, 2010

சென்னையில் ஜெ.வுக்கு கூடிய குபீர் கூட்டம்! - யுவகிருஷ்ணா

கடந்த 18ஆம் தேதி சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமியின் மகன் திருமண வரவேற்பு. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்தது. கொடநாட்டில் இருந்து அம்மா வருவாரா வரமாட்டாரா என்று அதிமுகவினருக்கு டென்ஷன். இந்த விழாவில் அம்மாவும், விஜயகாந்தும் சந்திக்கப் போகிறார்கள். கூட்டணியில் புதுக்கணக்கு எழுதப்படும் என்று அநாமதேயமாக பத்திரிகையாளர்கள் காதில் யார் யாரோ ஓதிவிட்டு டென்ஷனை கூட்டிக் கொண்டிருந்தார்கள். நந்தனம் முழுக்க மனிததலைகளால் உருவான அலை சுனாமியாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.

இதே வேளையில் அண்ணாசாலை பிலிம்சேம்பர் வளாகத்திலும் கூட்டம் கும்மிக் கொண்டிருந்தது. பிலிம்சேம்பரில் சுமார் 200 இருக்கைகள். அத்தனையும் நிரம்பி, கூடுதலாக 100 பேர் திமுதிமுவென்று அரங்குக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்.

முந்தைய கூட்டத்துக்கு காரணம் அரசியல் ‘ஜெ’. பிந்தைய கூட்டத்துக்கு காரணம் இலக்கிய ‘ஜெ’. எப்படியோ ‘ஜெ’ என்றாலே ஜெயம்தான் போலிருக்கிறது. இலக்கிய விழாக்கள் என்றாலே காத்தாடும் என்ற தமிழ் சம்பிரதாயத்தை சில வருடங்களாக உயிர்மை உடைத்தெறிந்து வருகிறது. சாருவின் நூலாகட்டும். ஜெயமோகனின் நூலாகட்டும். விஜயமகேந்திரன் உள்ளிட்ட இளம் எழுத்தாளர்களின் நூலாகட்டும். எது குறித்த விழாவை உயிர்மை நடத்தினாலும் வாசகர்களின் நெரிசல் தவிர்க்க இயலாத ஒரு ‘ட்ரெண்டு’
உருவாகியிருக்கிறது. இனி உயிர்மை விழாக்களில் கூட்டத்தை நெறிப்படுத்த, மனுஷ்யபுத்திரன் காவல்துறையை நாடுவதைத் தவிர வேறுவழியேயில்லை.

கடந்த ஆண்டு இறுதியில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் நடந்த உயிர்மை விழாவொன்றின் போது, ஜெயமோகனின் புத்தகத்தை மேடையில் சாருநிவேதிதா கிழித்தெறிந்தார். இதையடுத்து மனுஷ்யபுத்திரனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையிலான உறவு ‘கோயிங் ஸ்டெடி’யாக இல்லாமல் ‘போயிங் விபத்தாக’ மாறிப்போனது. அம்மா முன்பு, “இனி உ.பி.ச.வோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று அறிவித்ததற்கு ஒப்பான ஒரு ஸ்டேட்மெண்ட் ஜெயமோகனால் வெளியிடப்பட்டது.

இத்தகைய சூழலில் இசைவிமர்சகர் ஷாஜியின் ‘தனிமையின் இசை’ நூல் கலந்துரையாடல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயமோகன் கலந்துகொள்கிறார் என்று சொல்லப்பட்டதால் வாசகர்களிடையே பரபரப்பும், எதிர்ப்பார்ப்பும் தாறுமாறாக கூடிப்போனது.

ஆறு மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விழா, உலகின் மூத்தக்குடியின் பாரம்பரியத் தொடர்ச்சியை காக்கும் வண்ணம் அரைமணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. விழா தொடங்குவதற்கு முன்பாகவே அரங்கு ‘ஹவுஸ்ஃபுல்’.

மணிரத்னம், பாலா போன்ற நட்சத்திய இயக்குனர்களும், பாடகர் மலேசியா வாசுதேவனும் கலந்துகொள்கிறார் என்ற கவர்ச்சி காக்டெயிலான அறிவிப்பு இருந்தபோதிலும், மவுசு என்னவோ ஜெயமோகனுக்குதான். விழா நாயகன் ஷாஜி என்றாலும், சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாக ஜெயமோகனே இருந்தார் என்பது மறுப்பதற்கில்லை. எண்பதுகளின் ‘ஜெண்டில்மேன்’ பாணி உடையலங்காரத்தில் (சாரு பாணியில் சொன்னால் குமாஸ்தா டிரெஸ்) அடக்கமாகத் தெரிந்தார் ஜெயமோகன்.

முழுக்க நரைத்த தலையோடு, சிரித்த முகமாக இருந்தார் மணிரத்னம். அவரோடு ஜெயமோகன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்ததை கண்டிருந்தால் பல சினிமா தலைகளுக்கு காதில் புகை வந்திருக்கும். ஜெ. வாய்திறந்து சிரிக்க மாட்டார். லேசான முறுவல் அவரிடமிருந்து வெளிப்பட்டாலே அதிசயம். மணிசார்தான் கஞ்சத்தனம் பார்க்காமல் சிரித்து வைத்தார். ஏனோ இயக்குனர் பாலா வரவில்லை. பிற்பாடு “பாலாவின் வாழ்க்கையில் இன்று மிக முக்கியமான தினம். அது என்னவென்று எல்லோருக்கும் பின்னால் தெரியும்” என்று சஸ்பென்ஸாக மேடையில் ஜாலி பஞ்ச் வைத்தார் ஷாஜி.

நிகழ்வை தொகுத்து வழங்கியவர் மகாவோ, மகானோ என்னவோ பேர் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ ஏதோ வானொலியில் பணிபுரிந்து வந்ததாகவும், இப்போது சென்னைக்கு வந்து சும்மா இருப்பதாகவும், சினிமா அல்லது ஊடக வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஒரு பெரிய ‘பிட்டு’ போட்டுவிட்டே நிகழ்வை தொகுக்க தொடங்கினார்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். ஜெயமோகன் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் அரங்கு ஆர்ப்பரித்தது. அட, மனுஷ்யபுத்திரனுக்கு பக்கத்து சீட் ஜெமோவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இருவரும் கலைஞர், எம்.ஜி.ஆர். பாணியில் காதோடு காதாக கிசுகிசுத்துக் கொண்டு சிரித்துக் கொள்வார்கள். அந்த அதிசய அற்புதக் காட்சியை கேமிராவுக்குள் சுருட்டிக் கொள்ளலாம் என்று பேராசையோடு காத்துக் கொண்டிருந்த பல ஜோடி கண்களில் இந்த ஜோடி மண்ணை வாரிப் போட்டது. புன்னகை மன்னரான(?) ஜெ. அடிக்கடி கூட்டத்தையும், பேசிக் கொண்டிருந்தவர்களையும் மட்டுமே பராக்கு பார்த்துக் கொண்டிருந்தார். மனுஷ்யபுத்திரன் உயிர்மை விழாக்களில் மடைதிறந்த வெள்ளமாக சிரித்துக் கொண்டிருப்பார். ஏனோ இன்று நரசிம்மராவ் பாணியில் அமைதியாக இருந்தார். மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரை வழக்கம்போல நாகரிகமாகவும், மென்மையாகவும் இருந்தது.

பிரபஞ்சன் பேசும்போது, ஷாஜியை வானளாவப் புகழ்ந்துவிட்டு மற்ற இசைவிமர்சகர்களை பற்றி குறிப்பிடும்போது ‘சுப்புடுவோ, பப்புடுவோ’ என்றொரு வார்த்தையை உச்சரிக்க கூட்டத்தில் ஒரு பகுதி எரிச்சலடைந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டு சுப்புடுவையும் புகழ்ந்து தனது உரையை சமன் செய்தார். முன்னதாக மலேசியா வாசுதேவன், கடந்த பத்தாண்டுகளாக தான் கண்டுகொள்ளாமல் இருக்கப்படுவதாக ஆதங்கப் பட்டிருந்தார். அதை குறிப்பிட்ட பிரபஞ்சன், “கலைஞர்கள் எப்போதுமே கலைஞர்கள்தான்” என்று இலக்கியப் பஞ்ச் வைத்தார்.

அடுத்து ஜெயமோகன் பேச அழைக்கப்பட முப்பது வினாடிகளுக்கும் மேலாக கைத்தட்டல் தொடர்ந்தது. விசில் அடிக்கப்படாதது ஒன்றுதான் குறை. இசையறிவு குறித்த தனது போதாமையை சொன்னார். இசையைப் பொறுத்தவரை தான் ஒரு சாதாரணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் சின்ன சின்ன ஜோக்குகளாய் கோர்த்து பேச ஆரம்பித்த ஜெமொவின் பேச்சு ஒரு கட்டத்தில் புயல்வேகத்தை அடைந்தது. எளிமை அடிப்படையில் அவரது எழுத்துக்கும், பேச்சுக்கும் ஏணிவைத்தாலும் எட்டாத உயரமிருக்கிறது. கடைசியாக “மையமாக நின்று விமர்சிக்க வேண்டும்” என்று ஏனோ தானோவென்று ஒரு அறிவுரையை ஷாஜிக்கு வழங்கிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.

தீவிர இளையராஜா விசிறியான ஜெமோ, ஷாஜியின் இளையராஜா எதிர்ப்பு விமர்சனங்களுக்கு காரசாரமாக ஏதேனும் பதிலளிப்பார் என்று எதிர்ப்பார்த்து (அதாவது வம்புகளை எதிர்நோக்கி) ஆவலோடு வந்திருந்த இளையராஜா ரசிகர்கள் பலருக்கும் இது பலமான ஏமாற்றம். ஆயினும் தான் இளையராஜா ரசிகன் தான் என்பதை அன்னக்கிளி வெளியானபோது ஒவ்வொரு டீக்கடையாக நின்று இளையராஜா இசையை ரசித்த அனுபவங்களை சொல்லி ஆணித்தரமாக நிரூபித்துவிட்டே சென்றார்.

ஜெமோவுக்கு அடுத்து பேசவந்தவர் எஸ்.ரா. “இசைன்னுலாம் நான் சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இசைன்னா பாட்டுதான். பாட்டுன்னு தான் சொல்லுவேன்” என்று ஜோவியலாக தொடங்கியவர், அடுத்தடுத்து சமகால உலக இசை, அது இதுவென்று அவரது ரேஞ்சுக்குப் போனார். ஒருக்கட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது எஸ்.ரா.வா அல்லது சமகால உலகத்தமிழ் எழுத்தாளர் பேயோனா என்று சந்தேகம் வந்துவிட்டது.

ஷாஜியின் ஏற்புரைக்கு முன்னதாக மணிரத்னம் ‘கொஞ்சூண்டு’ பேசினார். மணிரத்னம் படங்களின் வசனம் ஏன் இப்படியிருக்கிறது என்பதை அவரது பேச்சினைக் கேட்டவர்கள் உணரலாம். வெள்ளக்காரத்துர மாதிரியான ஒரு இரண்டரை, மூன்று நிமிட சினிமா டிரைலர் பாணி பேச்சு மணிசாருடையது.

இறுதியாக விழாநாயகர் ஷாஜியின் ஏற்புரை. எம்.எஸ்.வி.யில் தொடங்கி ஏ.ஆர்.ரகுமானின் பெருந்தன்மை வரை வாயாரப் புகழ்ந்தார். கவனமாக இசையராசாவை மட்டும் கண்டுகொள்ளாமல் தவிர்த்தார். “இசையை எப்படி விமர்சிக்க முடியும்? அனுபவிக்கத்தான் முடியும். இசை விமர்சகனென்றால் பாட்டு பாடத்தெரியுமா? பாடிக்காட்டுங்கள் என்றெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று பிட்டு, பிட்டாக கொஞ்சம் ஜாலியான மொழியில் பேசினார். பேச்சுக்கிடையே சாருவின் பெயரை ஓரிரு இடங்களில் குறிப்பிட இதற்கும் பலத்த கரகோஷம்.

நிகழ்வு சுபம்.

நிகழ்வை கண்ட சாதாரணர்களுக்கு சில சந்தேகங்கள் + ஆதங்கங்கள்.

மேட்டுக்குடியினரின் ரசனைக்கு மட்டுமே உரித்தாக இருந்த இசையை சாதாரணர்களுக்கும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகப் படுத்தியவர் இளையராஜா. அவரது ஹார்மோனியத்தில் இருந்து பிறந்தது நாட்டுப்புற இசை மட்டுமல்ல. பாரம்பரிய இசையின் நுணுக்கங்களையும் எளிமையாக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இசை என்றால் நினைவுக்கு வருவது இளையராஜாவின் பெயர்தான். ஆனால், அவரைக் கண்டுகொள்ளாத, அவரது இசையை சரியான முறையில் மதிக்காத ஒருவர் எப்படி தமிழ்ச்சூழலில் மிக முக்கியமான இசை விமர்சகராக கருதப்பட முடியும்? அவரது தனிப்பட்ட ஆளுமையையோ அல்லது அவரது இசைப்படைப்பையோ விமர்சிக்கவே கூடாது என்பதில்லை. ஆனால் தமிழில் நடைபெறும் இசை தொடர்பான ஒரு கலந்துரையாடலில், ஒரு முக்கியமான இசைவிமர்சகர் இளையராஜாவை குறிப்பிடாமல் எப்படி பேசமுடியும்?

அடுத்ததாக பேசியவர்களில் பலரும் இங்கே இசைவிமர்சனம் செய்ய ஆட்கள் இல்லை என்றே ஒரு முன்தீர்மானத்தோடு பேசினார்கள். எளிய பாமரனான எனக்கே இதில் உடன்பாடு இல்லை. நம் சூழலில் இசை என்பது பாரம்பரிய இசை, திரை இசை என்று இருபிரிவாக இருக்கிறது. மேலைநாடுகளில் திரையிசை என்பது வெறுமனே பேக்கிரவுண்டு ஸ்கோர்தான். இங்கே திரைப்படங்களில் பாடல்கள் இன்றியமையாதது என்பதால் திரையிசை என்றொரு பிரிவு ஏற்பட்டுவிட்டது.

பல ஆண்டுகளாக வெகுஜனப் பத்திரிகைகளிலேயே டிசம்பர் சீசன்களில் இசைவிமர்சனம் அமளிதுமளிப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். இச்சூழலில் “இசையை விமர்சிக்க, ஷாஜியைத் தவிர்த்து விமர்சகர்களே இல்லை” என்று இலக்கிய ஜாம்பவான்கள் கருதுவார்களேயானால், அது பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று சொல்வதற்கு ஒப்பானதாகும். ஷாஜி ஒரு திரையிசை விமர்சகர். வேலை மெனக்கெட்டு மற்றவர்கள் திரையிசையை விமர்சிப்பதில்லை. ஒருவேளை நிஜமான இசை விமர்சகர்கள் திரையிசைக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்க்கலாம். ஷாஜி அதை செய்கிறார். அவ்வளவுதான். – இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பே தவிர, ஒட்டுமொத்த தீர்ப்பு அல்ல.

கடைசியாக இன்னொரு மேட்டர். இதுமாதிரி மேடைப்போட்டு இசையை இலக்கியவாதிகள் திருகலான மொழிகளில் பேசும்போது ஒரு அச்சம் மெல்ல அடிவயிற்றில் இருந்து மேலெழுந்து படர்கிறது. கடினப்பட்டு இளையராஜா வெகுஜனமாக்கிய இசையை, இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு மீண்டும் அறிவுஜீவிகளுக்கான மேடைகளுக்குள் மட்டும் அடைத்துவிடுவார்களோ என்ற ஆதாரமான அச்சம்தான் அது.

கலைஞரை புகழாமல் லக்கி கட்டுரையா ? அவர் புகழவில்லை என்றால் என்ன நான் 'பச்சையாக' சொல்லுகிறேன் கலைஞர் வாழ்க!!

25 Comments:

Black said...

"மனுஷ்யபுத்திரனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையிலான உறவு ‘கோயிங் ஸ்டெடி’யாக இல்லாமல் ‘போயிங் விபத்தாக’ மாறிப்போனது." - Idly vadai punch. Super Super

Anonymous said...

/***இதுமாதிரி மேடைப்போட்டு இசையை இலக்கியவாதிகள் திருகலான மொழிகளில் பேசும்போது ஒரு அச்சம் மெல்ல அடிவயிற்றில் இருந்து மேலெழுந்து படர்கிறது. கடினப்பட்டு இளையராஜா வெகுஜனமாக்கிய இசையை, இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு மீண்டும் அறிவுஜீவிகளுக்கான மேடைகளுக்குள் மட்டும் அடைத்துவிடுவார்களோ என்ற ஆதாரமான அச்சம்தான் அது.
***///

Totally agree with you.

Balu said...

/***இதுமாதிரி மேடைப்போட்டு இசையை இலக்கியவாதிகள் திருகலான மொழிகளில் பேசும்போது ஒரு அச்சம் மெல்ல அடிவயிற்றில் இருந்து மேலெழுந்து படர்கிறது. கடினப்பட்டு இளையராஜா வெகுஜனமாக்கிய இசையை, இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு மீண்டும் அறிவுஜீவிகளுக்கான மேடைகளுக்குள் மட்டும் அடைத்துவிடுவார்களோ என்ற ஆதாரமான அச்சம்தான் அது.
***///


TOTALLY AGREED WITH YOU.

Black said...

"சென்னையில் ஜெ.வுக்கு கூடிய குபீர் கூட்டம்! - யுவகிருஷ்ணா"

Suntv pola mega mega build up...but there is no news about "ஜெ.". The so called "ஜெ.வுக்கு " can never match Jaya.

அமுதப்ரியன் said...

/*
கலைஞரை புகழாமல் லக்கி கட்டுரையா ? அவர் புகழவில்லை என்றால் என்ன நான் 'பச்சையாக' சொல்லுகிறேன் கலைஞர் வாழ்க!!
*/

இது வஞ்சப்புகழ்ச்சி அணி...

கிருஷ்ண பிரபு said...

ஞாயமான கேள்விகளை எழுப்பி இருக்கிறீர்கள். அவர் திரை இசையைப் பற்றி எழுதுவதாக நினைத்துக் கொண்டு, இசைக் கலைஞர்களின் வாழ்கைக் குறிப்பைத் தான் மிகுதியாக எழுதுகிறார்.

மானஸ்தன் said...

மண்டேனா ஒண்ணு வராம வேற ஏதோ வருது!

ஒண்ணு நிச்சயம்! இட்லிக்கு இன்னொரு ஆளு சிக்கிட்டாரு, ஓசில போஸ்ட் எழுத!

லக்கி யு, மிஸ்டர் இட்லிவடை! :>!

Anonymous said...

/*
கலைஞரை புகழாமல் லக்கி கட்டுரையா ? அவர் புகழவில்லை என்றால் என்ன நான் 'பச்சையாக' சொல்லுகிறேன் கலைஞர் வாழ்க!!
*/
ulkuthu puriyavillaiyay...kalaignar vandhal "manjal" commenthaanay varanum...adhuvum traditional idlyvadai style-la? "JJ" patri pesiyathaal "Pachai"ya comment-o?

உண்மையான இஸ்லாமியன் said...

பரபரப்பாக தலைப்பு வைக்க வேண்டும் என்பது மட்டும்தான் குறிபோல.

Jose said...

யுவா இட்லிவடையில உங்க கொத்துபரோட்டாவ கலந்துடீங்கலே ம்ம் பரவாயில்ல இதுவும் சுவையாத்தான் இருக்கு

அமுதப்ரியன் said...

இன்றைய கேப்டன் டீவி 7.30 மணி செய்திகளில் புத்துணர்ச்சியுடன் ஜெயலலிதா என்று நியூஸ் போட்டனர். அப்படீன்னா டீல் முடிஞ்சதா? என்ன இட்லிவடையாரே, வெந்து கொண்டிருக்கும் இட்லி போல் அமைதியாக உள்ளீரே? விஷயத்தை கறந்து கொடும்...

அமுதப்ரியன்

kggouthaman said...

கடைசி இரண்டு பாராக்களுடன் ஒத்துப் போகின்றேன்.

Anonymous said...

ஜெயமோகனின் தீவிர வாசகன் நான், நேற்றுவரை.

S.வெங்கட்ரமணன்
திருச்சி

velji said...

ஆதாரமான அச்சம்-கருத்தில் கொள்ளவேண்டியதே!

R.Gopi said...

இசை மேதை சாரு பற்றி விபரமாக எதுவும் எழுதப்படாத இந்த பதிவை நான் புறக்கணிக்கிறேன்....

Anonymous said...

இ.வ. உன்னை உதைச்சா தப்பே இல்ல. இந்த மாதிரி தனா குனாவயெல்லாம் இசை விமர்சகர்னு பெரிய ஆளாக்கிவிட்றதே வேலையாப்போச்சு

Anonymous said...

//இசையை எப்படி விமர்சிக்க முடியும்? அனுபவிக்கத்தான் முடியும். இசை விமர்சகனென்றால் பாட்டு பாடத்தெரியுமா? பாடிக்காட்டுங்கள் என்றெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்//

என்னய்யா இது பெரிய அநியாயமா இருக்குது! ஜெயமோகன், சாரு, எஸ்.ராவின் படைப்புகளை விமர்சிக்க, அதுபற்றிப் பேச என்றால் வாசகனுக்குத் தகுதி இருக்க வேண்டுமாம். அவர்களது எல்லாப் படைப்புகளையும் படிச்சுருக்கணுமாம்.குறைந்த பட்சம் இலக்கியப் பத்திரிகைகளில் ஏதாவது எழுதியாவது இருக்க வேண்டுமாம். அப்போதான் கேள்வியே கேட்க அனுமதிப்பாங்களாம். ஆனால் இசை பற்றிய அடிப்படை அறியாதவர்கள் எல்லாம் ராஜாவையும், ஜானகியையும், லீலாவையும் விமர்சிப்பார்களாம். அதற்கு அவர்களுக்குத் தகுதியும் இருக்கிறதாம்!

இதைத் தான் நானும் சொல்றேன். ஜெமோ, சாரு, எஸ்.ரா எழுத்தை விமர்சித்தால் “ நீ யாரு. உனக்கு எழுதத் தெரியுமா? ஏதாவது எழுதி இருக்கிறாயா? எத்தனை படைப்புகள் வெளியாகி இருக்கிறது?” என்று அவர்கள் கேட்கலாமாம். அது சரியாம். ஆனால் ஷாஜியைப் பார்த்து இசை தெரியுமா, அதன் இலக்கணம் தெரியுமா, அட்லீஸ்ட் பாடவாவது தெரியுமா என்று கேட்டால் அது தவறாம்! என்னய்யா இது பெரிய மோசடியா இருக்குதே! மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடமா?

ரெகார்டிங் ஸ்டூடியாவில் வேலை பார்த்தவர்கள், கேசட் கம்பெனியில் பணியாற்றியவர்கள் எல்லாம் இசையை விமர்சிக்கலாம் என்றால், எழுத்தாளர்களின் புத்தகங்களை பைண்ட் செய்பவர்கள், டைப் செய்பவர்கள், பேக் செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், எடைக்கு வாங்கும் காய்லான் கடைக்காரர்கள் கூட விமர்சிக்கலாமே! அதில் என்னய்யா தவறு இருக்கிறது? உங்களுக்கு ஒரு சட்டம், அவங்களுக்கு ஒரு சட்டமா?

இதுலே வெகுஜன இசை, மரபிசைன்னு வேற என்னன்னெமோ சொல்லுறாங்க... தங்கள் பேச்சை சரின்னு நியாயப்படுத்துறாங்க. ஆனா வெகு ஜன எழுத்தாளர்களை மட்டும் சகட்டு மேனிக்குத் திட்டி கட்டுரை எழுதுறாங்க. அது இலக்கியம் இல்லைன்னு புறக்கணிக்குறாங்க. அப்போ வெகுஜனங்களால் விரும்பப்படும் இசையையும் புறக்கணிச்சுடுவீங்களா ஐயா?

இதில பசப்பாக பரப்பிசை, பரங்கிக்காய் இசை என்று பம்மாத்து வேறு. இந்த ”அரிவு” ஜீவி எழுத்தாளர்கள் ஷாஜிக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குறதுக்கான மர்மம் என்னன்னு தெரியலயே! எங்கே போனாங்க தெளிவான இசைஞானம் உள்ள வாமனன், மகாதேவன் ரமேஷ், யுவன் சந்திரசேகர், சேதுபதி எல்லாம்?

நான் கூட ”பரப்பிசையும் பல்லாங்குழியும்” ங்குற தலைப்புல புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன். யாராவது விமர்சனம் பண்ண வாறீகளா ஐய்யா? வெயிட்டா கவனிச்சுருவேன் சரியா, வாங்க வாங்க!

இசைவாணன்

Anonymous said...

//இசையை எப்படி விமர்சிக்க முடியும்? அனுபவிக்கத்தான் முடியும். இசை விமர்சகனென்றால் பாட்டு பாடத்தெரியுமா? பாடிக்காட்டுங்கள் என்றெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்//

என்னய்யா இது பெரிய அநியாயமா இருக்குது! ஜெயமோகன், சாரு, எஸ்.ராவின் படைப்புகளை விமர்சிக்க, அதுபற்றிப் பேச என்றால் வாசகனுக்குத் தகுதி இருக்க வேண்டுமாம். அவர்களது எல்லாப் படைப்புகளையும் படிச்சுருக்கணுமாம்.குறைந்த பட்சம் இலக்கியப் பத்திரிகைகளில் ஏதாவது எழுதியாவது இருக்க வேண்டுமாம். அப்போதான் கேள்வியே கேட்க அனுமதிப்பாங்களாம். ஆனால் இசை பற்றிய அடிப்படை அறியாதவர்கள் எல்லாம் ராஜாவையும், ஜானகியையும், லீலாவையும் விமர்சிப்பார்களாம். அதற்கு அவர்களுக்குத் தகுதியும் இருக்கிறதாம்!

இதைத் தான் நானும் சொல்றேன். ஜெமோ, சாரு, எஸ்.ரா எழுத்தை விமர்சித்தால் “ நீ யாரு. உனக்கு எழுதத் தெரியுமா? ஏதாவது எழுதி இருக்கிறாயா? எத்தனை படைப்புகள் வெளியாகி இருக்கிறது?” என்று அவர்கள் கேட்கலாமாம். அது சரியாம். ஆனால் ஷாஜியைப் பார்த்து இசை தெரியுமா, அதன் இலக்கணம் தெரியுமா, அட்லீஸ்ட் பாடவாவது தெரியுமா என்று கேட்டால் அது தவறாம்! என்னய்யா இது பெரிய மோசடியா இருக்குதே! மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடமா?

தொடரும்

Anonymous said...

ரெகார்டிங் ஸ்டூடியாவில் வேலை பார்த்தவர்கள், கேசட் கம்பெனியில் பணியாற்றியவர்கள் எல்லாம் இசையை விமர்சிக்கலாம் என்றால், எழுத்தாளர்களின் புத்தகங்களை பைண்ட் செய்பவர்கள், டைப் செய்பவர்கள், பேக் செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், எடைக்கு வாங்கும் காய்லான் கடைக்காரர்கள் கூட விமர்சிக்கலாமே! அதில் என்னய்யா தவறு இருக்கிறது? உங்களுக்கு ஒரு சட்டம், அவங்களுக்கு ஒரு சட்டமா?

இதுலே வெகுஜன இசை, மரபிசைன்னு வேற என்னன்னெமோ சொல்லுறாங்க... தங்கள் பேச்சை சரின்னு நியாயப்படுத்துறாங்க. ஆனா வெகு ஜன எழுத்தாளர்களை மட்டும் சகட்டு மேனிக்குத் திட்டி கட்டுரை எழுதுறாங்க. அது இலக்கியம் இல்லைன்னு புறக்கணிக்குறாங்க. அப்போ வெகுஜனங்களால் விரும்பப்படும் இசையையும் புறக்கணிச்சுடுவீங்களா ஐயா?

இதில பசப்பாக பரப்பிசை, பரங்கிக்காய் இசை என்று பம்மாத்து வேறு. இந்த ”அரிவு” ஜீவி எழுத்தாளர்கள் ஷாஜிக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குறதுக்கான மர்மம் என்னன்னு தெரியலயே! எங்கே போனாங்க தெளிவான இசைஞானம் உள்ள வாமனன், மகாதேவன் ரமேஷ், யுவன் சந்திரசேகர், சேதுபதி எல்லாம்?

நான் கூட ”பரப்பிசையும் பல்லாங்குழியும்” ங்குற தலைப்புல புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன். யாராவது விமர்சனம் பண்ண வாறீகளா ஐய்யா? வெயிட்டா கவனிச்சுருவேன் சரியா, வாங்க வாங்க!

இசைவாணன்

Anonymous said...

செப்டம்பர் 21,2010 : தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இருக்கும் கலைக்கூடம் ஆயுத கோபுரத்தின் கீழ் அமைந்துள்ளது. இன்று காலை முதல் தஞ்சையில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பலத்த இடி தாக்கியது. இதில் ஆயுத கோபுரத்தில் 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டது. --இதற்கு காரணமும் கருணாநிதி குடும்பம் தானா ? (வழக்கம் போல இட்லி வடை அபிமானிகள் அப்படிதானே சொல்வார்கள்)

Litmuszine said...

"/இதற்கு காரணமும் கருணாநிதி குடும்பம் தானா ? (வழக்கம் போல இட்லி வடை அபிமானிகள் அப்படிதானே சொல்வார்கள்)/"
'நாங்கதான் இடிச்சோம்' என்று கருணாநிதி தன் குடும்பத்துடன் தள்ளுவண்டியில் வந்து உங்கள் வீட்டுக்கே வந்து சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்!! ம்ம் ...உங்களுக்கெல்லாம் ஆயிரம் இட்லிவடைகள் வந்தாலும் பயனில்லை!!!. கருணாநிதியின் குடும்பத்தாரின் அட்டகாசங்கள் என்று தமிழில் ப்ளாக்குகள் எழுத ஆரம்பித்தால் இணையமே இடம் இல்லை என்று ஓடிவிடும். இருந்தும் இணையத்தில் மட்டும்மல்ல வேறு எந்த ஊடகத்திலும் கருணாநிதி, அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அவர் கழகத்தினர் செய்யும் எந்த தவறும் வெளிவருவது கிடையாது அல்லது வெளிக்கொண்டு வருவதுற்கு தைரியம் கிடையாது. ஏதோ இல்லாத ஊருக்கு இலுப்பை flower போல இ. வ மாதிரி ஆட்கள். ஆனா இ. வ மாதிரி யாராவது வந்துட்டா தர்மஅடி கொடுக்க க்யு நிக்கிறான்கப்பா!!!

தனுசுராசி said...

ஷாஜி-யா... ? யாரு அது...

இளையராஜா இசையே அவருக்கு புடிக்கலைன்னா/புரியலைன்னா அவரு என்னத்த இசை விமர்சகர்...?

This is funny... :-)

Anonymous said...

ராமசுப்புவும், பாலாவும் இந்த நிகழ்ச்சிக்குச் செல்லவில்லையாமே?

//நீங்கள் எழுதிய ‘இளையராஜா அன்றும், இன்றும்’ என்ற கட்டுரையை, உங்கள் கட்டுரையின் நேர்மை மீதும் உங்கள் கருத்துகளின் மீதும் ஆழமான நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், நீங்கள் உங்கள் விழாவுக்குத் தலைமையேற்க அழைத்திருக்கும் பெரியவர் ராமசுப்புவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் விழா ஆரம்பிப்பதற்கு முன் ஒரே ஒரு முறை படித்துக்காட்டும் தைரியம் உங்களுக்கு உள்ளதா?//

ஒருவேளை ஷாஜி அக்கட்டுரையை இருவருக்கும் படித்துக்காட்டிவிட்டாரோ? :-)

purushothaman said...

//இதுமாதிரி மேடைப்போட்டு இசையை இலக்கியவாதிகள் திருகலான மொழிகளில் பேசும்போது ஒரு அச்சம் மெல்ல அடிவயிற்றில் இருந்து மேலெழுந்து படர்கிறது. கடினப்பட்டு இளையராஜா வெகுஜனமாக்கிய இசையை, இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு மீண்டும் அறிவுஜீவிகளுக்கான மேடைகளுக்குள் மட்டும் அடைத்துவிடுவார்களோ என்ற ஆதாரமான அச்சம்தான் அது.//

இதை நான் வழி மொழிகிறேன் ....... ( இந்த வாசகம் திக வுக்கு மட்டும் தானா சொந்தம் )

கட்டுரை ஒரு கோர்வையாக உள்ளது மச்சி . பாலாவுக்கு நான் சேது வின் )கட்டுரையை மெயில் செய்து இருந்தேன் . ( பாலாவுக்கே சேது படம் ( போட்டு !!!)காட்டி நமிள்ள !!! ) . பாலா வாழ்க . மணி ரத்தினம் எந்த காலத்திலேயோ வெகு ஜனம் பார்க்கும் அதுவும் ஒன்னு ரெண்டு படம் எடுத்தார் இப்ப எல்லாம் அவர் படத்தை அறிவு ஜீவிகள் பார்கிறார்கள் , -- புருஷோத்தமன்

Anonymous said...

//இதுமாதிரி மேடைப்போட்டு இசையை இலக்கியவாதிகள் திருகலான மொழிகளில் பேசும்போது ஒரு அச்சம் மெல்ல அடிவயிற்றில் இருந்து மேலெழுந்து படர்கிறது. கடினப்பட்டு இளையராஜா வெகுஜனமாக்கிய இசையை, இவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு மீண்டும் அறிவுஜீவிகளுக்கான மேடைகளுக்குள் மட்டும் அடைத்துவிடுவார்களோ என்ற ஆதாரமான அச்சம்தான் அது.//

அதென்ன இசையை எளிமைப்படுத்தியவர், பண்டிதரிடமிருந்து பாமரருக்கு கொண்டு சேர்த்தவர் என்றால் உடனே இளையராஜாவை தலையில் வைத்துக்கொண்டு ஆடுவது சிலருக்கு வழக்கமாகிவிட்டது?. அவர் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, பட்டிக்காட்டில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் வரையில் சினிமா இசை 'எம்.ஜி.ஆர். பாட்டு, சிவாஜி பாட்டு' என்ற அடைமொழிகளுடன் சென்று சேர்ந்து விட்டன. இசையமைப்பாளர் பெயர வெளியே தெரியாவிட்டாலும், அந்தப்பணியை சத்தமில்லாமல் செய்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன். அதிலும் குறிப்பாக எம்.எஸ்.விஸ்வநாதன். ப்ளாக் எழுதுபவர்கள் சுவரைப்பிடித்துக்கொண்டு நடந்த காலத்திலேயே திரைப்பட இசை பட்டி தொட்டியெங்கும் பரவி விட்டது. ராஜா வந்தபின் அதை பயன்படுத்திக்கொண்டார். அவ்வளவே.