பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 29, 2010

அடடே.....உலக தலைஞர் !


(நன்றி: தினமணி, மதி - அடடே .. )

கீழே நன்றி முரசொலி, கல்கி இருக்கிறது :-)



இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரி கையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால் - "கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப் பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்" என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர் கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். "அடடே .....!" என்ற தலைப்பில் வெளி வந்து ள்ளது இது.

என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு

பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத் திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?

அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா விலே பிரிதிவி ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், அவருடைய சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் மைசூரில் "நாம்" திரைப்படத் திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது - மைசூரில் பிரிதிவி ராஜ் கபூரின் நாடகம் "பதான்" என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம். பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார். அவர் பல படங்களில் நடித்தார். "அக்பர்" அவர் நடித்த படம் தான். நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் பார்த்த "பதான்" நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது - வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு - சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார். அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள். அதை அவ்வளவு பெரிய நடிப் பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு - அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவி ராஜ் கபூர் - அவருடைய மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்கள வையிலே உறுப் பினராக இருந்தவர் அல்லவா? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசீ கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீவ் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ள வில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை.

ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே - மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் - என்னு டைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடு பட்டுக் கொண்டிருக் கிறான், அவன் திராவிடச் சமுதாயத் திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். (கைதட்டல்) என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நான் ஏதோ அவர் மீது கோபத் தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை.

ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத் துறை நண்பர் களை எப்படி நேசிக்க முடியும்? கலைத் துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக் கின்ற காரணத்தால் தான் தம்பி பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல - ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு - நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்க ளிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அதை யாரும், எவரும் எந்த வகை யிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத்தான் பையனுhரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்பட வுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
( நன்றி: முரசொலி, 23/8/2010 )

கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார்.

நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை.

கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வல்லமை கலைஞர் குடும்பத்தில்தான் இருக்கிறதே தவிர, பிருத்விராஜ் கபூர் குடும்பத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. போட்டி கம்பெனிகளின் கேபிள்களை வெட்டிப் போட்டு அராஜகம் செததற்காக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செயப்படவேண்டுமென்று கபூர் குடும்ப வாரிசுகள் யாருக்கும் எதிராக எந்த அரசு அதிகாரியும் பரிந்துரை எழுதும் அவலம் நிகழவில்லை.


ஒரு படத்தின் ரிலீஸ் தேதி, எந்தெந்த தியேட்டரில் எத்தனை நாள் என்பதையெல்லாம் கட்டுப்படுத்தி முழு திரையுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தில் எந்தக் கபூரும் இருந்ததில்லை. திரையுலக சங்கத் தேர்தல்களில் ஜெயித்த அணியை மிரட்டி, தோற்றதாகக் கையெழுத்து போடச் சொல்லி தன் ஜால்ராக்களைப் பதவியில் உட்காரவைக்கும் வேலையை ஒரு கபூரும் செததில்லை.

கலைஞர் கருணாநிதி இப்போதெல்லாம் வசனம் எழுதும் ஒரு படம் கூட மக்கள் ஆதரவைப் பெற்று அமோகமாக ஓடுவதில்லை. ஆனால் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்துக்கு வசனத்துக்காக 50 லட்ச ரூபா சம்பளம் அவருக்கு மட்டும் தரப் படும் மர்மம், எந்தக் கபூருக்கும் புரியவே புரியாது. ராஜ்கபூரின் வசனகர்த்தா கே.ஏ.அப்பாஸ் முதல் இன்று வசூலைக்குவிக்கும் படங்களின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி வரை யாருக்கும் இப்படிச் சம்பளம் கிடைத்ததில்லை.

பரம்பரை மிராசுதாரரான ஜி.கே வாசனின் அறிவிக்கப்பட்ட சொ த்து மதிப்பு மூன்று கோடி 78 லட்சம். எந்த சினிமாவுக்கும் கதை வசனம் எழுதி ஒரு நாளும் சம்பாதிக்காத கனிமொழியின் சொத்து எட்டுக் கோடி 56 லட்சம்; அழகிரியின் சொத்து மதிப்பு 19 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருப்பதன் மர்மங்கள் கபூர்களுக்குத் தெரியாது. கபூர்கள் முழு நேரம் நாடகமேடையில் நடிகர்களாக உழைத்து சினிமாவுக்கு வந்து ¦º¡ந்தக் காசில் ஜெயித்தவர்கள். அரசியலுக்காக சினிமாவையும், சினிமாவை ஆதிக்கம் செöய அரசியல் அதிகாரத்தையும் கலைஞரும் அவர் வாரிசுகளும் பயன்படுத்துவதால்தான் விமர்சனங்கள் எழுகின்றன. இனியும் எழும்.

இனி இந்தக் குறுக்கே நூல் போடும் விவகாரத்துக்கு வரலாம். கலைஞர் கருணாநிதியின் கணக்குப்படி தமிழகத்தில் பூணூல் போடும் பார்ப்பன சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவிகிதம்தான். ஆனால் மொத்த வாக்காளர்களில் கலைஞர் கருணாநிதியை ஆதரித்து வோட்டுப் போடுபவர்கள் எப்போதும் சுமார் 25 சதவிகிதம்தான். மொத்தப் பூணூலார் மூன்று சதவிகிதம் பேரும் எதிர்த்ததாக வைத்தாலும், கருணாநிதியை விரும்பாத இதரர் 72 சதவிகிதம். மக்கள் இன்னமும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டுதான் வோட்டுப் போடுகிறார்கள். ஜாதி அடிப்படையில் மட்டுமே வோட்டுப் போட்டார்கள் என்றால் கருணாநிதியின் ஜாதியும் பூணூலார் ஜாதியும் ஏறத்தாழ ஒரே சதவிகிதம்தான். அவருக்கு 25 சத விகித ஓட்டு கூட வந்திருக்க முடியாது.

குறுக்கே நூல் போட்டவர்களை நம்பித்தான் கருணாநிதியின் மீடியா வியாபாரங்களே நடந்து வந்திருக்கின்றன. குங்குமம் பத்திரிகையைத் தொடங்கியபோது அவர் ஆசிரியராக அழைத்து வந்தது, பூணூல் போட்ட சாவியைத்தான். நிர்வாகத்தை கவனிக்க நியமித்தது, பூணூல் போட்ட டி.கே.தியாகராஜனைத்தான். பத்திரிகையின் முதல் இதழின் அட்டைப் படத்தில் கண்ணாடியில் முகம் பார்த்து பொட்டு இட்டுக் கொள்ளும் பெண்ணுக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கவிடப்பட்டது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேநதிரர் படத்தைத்தான். மறைந்த முரசோலி மாறனின் நெருங்கிய நண்பரும் இன்றளவும் தி.மு.க அரசின் ஆதரவுடன் கிரிக்கெட் வாரியப் பதவியில் இருப்பவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், கலைஞரின் ஒரு பேரனுக்குப் பெண் கொடுத்த வீட்டார், வக்கீல்கள், ஆடிட்டர்கள் பலரும் குறுக்கே நூல் போட்ட பார்ட்டிகள்தான். பேரன்கள் கம்பெனியின் பெயரான சுமங்கலி என்ற வார்த்தைப் பிரயோகமே ‘அவாளு’க்குரியதுதான்.

மீண்டும் சொல்கிறேன். கலைஞர் நேரடியாக விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். முடியாவிட்டால், ஜாதியம் பேசுவது முனைமழுங்கித் துருப்பிடித்த ஆயுதம். அது உதவாது. இன்றைய புதிய வர்ணாஸ்ரமத்தில் ஆதிக்க ஜாதி,கண்ணுக்குத் தெரியாத அதிகாரப் பூணூலை அணிந்திருக்கும் புதிய பார்ப்பனரான கருணாநிதி வகையறாக்களே.
( நன்றி: கல்கி, ஓ - பக்கங்கள் )

பூணூல் பற்றி அவணி அவிட்டம் அன்று ஸ்பெஷலாக பேசிய கலைஞருக்கு நன்றி


39 Comments:

Anonymous said...

முதல் முறையாக கல்கியில் நெத்தியடி வாதங்களை பார்க்கிறேன்...

Vinoth said...

Super, thanks for posting, but they(He) will not realize.....

KUTTYKANNU said...

மக்களை ஏமாற்றும் மன்னர்கள்...மன்னர்களிடம் ஏமாறும் மக்கள்... 3010 லும் நாம் இவ்வாறே இருப்போம்....வித்தியாசம்...ஒரு ஓட்டிற்கு மக்களுக்கு 1 லட்சம் தரப்படும்...

Anonymous said...

idli vadai neenga poonula?

Anonymous said...

Only Kalaignar Family Could see a fantabelous movie.

யதிராஜ சம்பத் குமார் said...

ஞாநியின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அஸாத்ய துணிச்சல்காரர்.

ஹரன்பிரசன்னா said...

ஞாநி - கிரேட். ஆனால் கனிமொழியின் மீதும் அழகிரியின் மீதும் ஏதோ பாசம் உள்ளது அவருக்கு என நினைக்கிறேன். இவ்வளவு கம்மியாகவா அவர்கள் சொத்து வைத்திருக்கிறார்கள்? :>

அதிகாரப் பூணூல் அணிந்த புதிய பார்ப்பணர் கருணாநிதி - :)))

Anonymous said...

ஞாநி: நி எத்தனை கோடி வாங்கின ஜெ.

RG said...

Superb reply by Gnanni

RG said...

Superb reply by Gnanni

R.Gopi said...

ஞானி அவர்களின் தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது....

”திருக்குவளை தீயசக்தி” (பெயர் உபயம் ஜெ.ஜெ.) அவர்களின் நிழலில் இருக்கும் கனிமொழி, அழகிரி ஆகியோர்களின் சொத்து மதிப்பு நெம்ப கம்மியா இருக்கே....

அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே........

Anonymous said...

நான் ஞாநியைப் பற்றி இங்கு எழுதும் பொழுது கருணாநிதியின் பிராமணக் காழ்ப்பை ஞாநி கேள்வி கேட்ப்பாரா என்று கேட்டிருந்தேன். சபாஷ் கேட்டிருக்கிறார் பாராட்டுக்கள். நாளைக்கே கருணாநிதி முரசொலியில் ஞாநியையும், கூடவே கல்கி பத்திரிகையின் ஆசிரியரையும் மிக ஆபாசமாக பாப்பாத்தி என்றும் பாப்பான் என்றும் நிச்சயம் ஏசுவார். அப்படி கருணாநிதி செய்தால் நிச்சயம் ஞாநி கோர்ட்டுக்குப் போக வேண்டும் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை வன்மத்துடன் ஆபாசமாகத் திட்டுவதினால் அவர் முதல்வர் பதவி வகிக்க தகுதியில்லாதவர் ஆகி விடுகிறார் என்று வழக்குப் போட்டு கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து ஞாநி அகற்ற வேண்டும். செய்வாரா ஞாநி? செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ஞாநி இத்தனை நாளில் எழுதி எந்தப் புண்ணியமும் இல்லை. இணையத்தில் யாரோ ஒரு அப்பாவி மாயவரத்தான் மேல் கேஸ் போடுவேன் என்று மிரட்டிய ஞாநி, இணையப் பத்திரிகை திண்ணை மன்னிப்புக் கேட்க்க வேண்டும் என்று கெடு விதித்த ஞாநி நிச்சயம் கருணாநிதியின் மீது கேஸ் போட வேண்டும். கருணாநிதி இனி என்றுமே முதல்வராக முடியாதவாரு இன வெறுப்பு வழக்கில் உள்ளே தள்ள வேண்டும் அதை ஞாநி செய்வாரா? இல்லை வெறுமே ஏட்டில் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளப் போகிறாரா? என்ன செய்யப் போகிறார் ஞாநி? கருணாநிதி செய்யும் இந்த இழி காரியத்தை ஒரு மோடி செய்திருந்தால் ஞாநியும் ஒட்டு மொத்த மீடியாவுமே கொந்தளித்து மோடியை இந்நேரம் தூக்கில் போட்டிருக்காதா? ஞாநி போன்ற பத்திரிகையாளர்கள் மோடி என்றால் உடனே சுப்ரீம் கோர்ட் வரை போய் கேஸ் போடுவதும் கருணாநிதி என்றால் மட்டும் கேஸ் போடாமல் வெறுமே கண்டிப்பதும் ஏன்? ஏன் இந்த இரட்டை வேடம் ஞாநி? கருணாநிதி உங்களை இன்னும் ஒரு முறை அப்படி இழிவாகப் பேசினால் நிச்சயம் அவர் பதவியைப் பறிப்பீர்கள்தானே?

Gaana Kabali said...

நெத்தியடி !

மன்னார்அன்கம்பெனி said...

பூணுலை சொல்லி தமிழர்களை திசைதிருப்புவது எப்போதும் கலைஞருக்கு கைவந்த கலை. சாத்திரங்கள் தெய்வங்கள் எல்லாம் அவருக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம். ஆனால் அவர் கையில் இருக்கும் பவள மோதிரம் அண்ணா போட்டதாக சொல்வார்கள். அது ராசிக்கல் அல்ல. காரணம் ராசிபலன் எல்லாம் அக்மார்க் முட்டாள்களுக்கு மட்டுமே. முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ராசியான ரிஷப ராசிக்கு உகந்த கல் பவளம்.அதுவும் அவருக்கு தெரியாது.ஏதோ அண்ணா பாசத்தால் அதை அணிந்திருக்கிறார். மஞ்சள் நிறம் வியாழன் என்ற குருபகவானுக்கு உகந்த நிறம். ரிஷபராசிக்கு சாதகமாக சொல்லப்படிருக்கும் நிறம் இது. அதைத்தான் கலைஞர் எப்போதும் தோளில் சுமக்கிறார். காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் திராவிடம் பேசும் இவர்களின் குருவான பெரியாருக்கு பிடித்தது என்னவோ கருப்பு நிறம் தான். குடும்பமே சாய்பாபவை வீட்டுக்கு வரவைத்து கும்பிட்டு விழுந்து மோதிரத்தை வாங்கி போட்டுக் கொண்டது தனிக்கதை இப்படி எப்போதும் சொல் வேறு,உள்ளுக்குள் இருப்பது வேறு. வாழ்க வளமுடன் திராவிட தலைவர்.வளர்க அவரது நாத்திக பற்று.

Anonymous said...

ALL THESE REMARKS WILL NOT UPSET ANY OF THEM.THEY KNOW TILL CONGRESS IS WITH THEM THEY WILL WIN AND FORM THE GOVERNMENT.THE WORLD BELONGS TO WINNERS. ALL OF US CAN JUST BE FALSELY HAPPY BY WRITNG LIKE THIS AND APPLAUDING CHO,GNNAI ETC.THE REAL CULPRITS ARE THE SILENT CONGRESS MEN.THEY MUST COME OUT OPENLY AND TELL KARUNANIDHI TO BEHAVE HIMSELF.POLITICAL ALLIANCES ARE DIFFERENT DECENCY IS DIFFERENT.NO OTHER CHIEF MINISTER TALS LIKE THIS.IT IS NOT UNDERSTOOD HOW A PERSON WITH TWO WIVES IS THE CHIEF MINISTER OF A STATE WHEN EVEN A PEON INGOVT SERVICE CANT HAVE TWO WIVES.KARUNANIDHI STOOPS SO LOW IN CRITISISING JAYALALITHA HE FORGETS HIS OWN FEMALE KITH AND KIN CAN BE SIMILARLY TALKED ABOUT. A MAN IN GLASS HOUSE SHOULD NOT PELT STONES.IF SOMEONE ASKS ABOUT THE SOURCE OF INCOME OF KANIMOZHI IT WILL BE SLANDER. HYPOCRISY IS THE STYLE OF RULING FAMILY.ALL OF THE HAVE GIVEN THEIR RELIGION AS HINDU.A MAN WHO TALKS SO MUCH FOR MINORITIES AND TAMILS WAS INSTTRUMENTAL IN DENYING A SECOND TERM FOR SHRI.ABDUL KALAM ATAMIL MUSLIM WHEREAS SHIVSENA VOTED FOR MRS.PATIBA PATIL INSPITE OF THE ALLIANCE SINCE SHE WAS A MAHARASHTRIAN.THIS WAY TAMILNADU WILL GO TO DARK AGES BACK AND LAW/ORDER IS WORSE THAN BIHAR ALREADY. WHAT IS CALLED FOR IS ANOTHER FREEDOM STUGGLE TO SAVE THIS STATE FROM THIS FAMILY. IT IS NOT DMK IT IS A HANDFUL OF FAMILY MEMBERS WHO ARE RULING.SOMEONE MUST TAKE THE LEAD AND SAVE HE STATE.

Anonymous said...

முக்கியமான ஒன்றை விட்டுவிட்டார் ஞானி. தி.மு,க. அரசின் ஊதுகுழலாகச் செயல்படும் நாளிதழ் ஒன்றின் பிரதம ஆசிரியர் (ஆரியர்?) குறுக்கே நூல் போட்ட பரம்பரையினர்தான்.
அ. நாமதேயன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னாது, காந்தி செத்துட்டாரா?????????????!!!!!!!!!!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இதெல்லாம் ஒரு மேட்டர்னு வந்துட்டாங்க................போங்கப்பா, புள்ள குட்டிங்களை படிக்க வைங்க!

Anonymous said...

supper gnani sir. really good. i like most of ur works. carry on the great work

Anonymous said...

Why blame Karunanidhi.It was E.V.Ramasamy who started all this.
Let Gnani condemn him first before condemning Karunanidhi

Anonymous said...

Sabaash Gnani!

I feel sorry for the Congress in TN. Inspite of having good leaders, the lack of unity, makes them a poor party with so many divisions. The Congress party in TN reflects the problem in India as a whole. Imagine if the Congressmen were all united, they can surely give DMK a run for the seats in the next election. But inspite of having capable leaders, the lack of unity is holding them behind. All matters apart, Thangabalu might be too naive compared to MK, to be a leader of the state of thieves and backstabbers.
My belief is that Congress men can never excel DMK in corruption/scams however they try - my belief could also be wrong. To me congressmen look like ordinary householders much different from the tainted DMK men.
I wonder why they aren't popular amidst people, when funny poets,self praising paranoids in DMK are held in esteem.
Congress doesn't even seem to get the respect, Vijayakanth's party gets. I think this is due to the problem with the people to run behind actors, and the high sounding orators of DMK. They ignore if the leader is a commoner like them. It's people's attraction towards actors and those poetic orators that's ruining our state.

R. Jagannathan said...

I am surprised that no one remembers that Kalanidhi Maran paid a hectic 100 C plus to MK to get back the shares in Sun TV and that MK promptly distributed the cash to his wives and wards to avoid feud after his end. I feel that no one question how did the successful Kalanithi Maran made the wealth which is open and legal - though his ridding of the competition is questionable.

I wish MK at the age of 86 is really matured and ignore cartoons like the one being debated and laugh it off.

Someone is trying to provoke Gnani to sue MK and it is childish. If you feel Gnani's article is worth supporting, raise your voice also loud. An organised voice can only be heard in a democracy. An individual is exposed to harm in the present vengeful attitude of political parties.

My salutes to Gnani for a brave response to MK. - R. J.

வஜ்ரா said...

ஞாநியே குறுக்கே நூல் போட்டவர் தானே. அது தான் ரோசம் பொத்திக்கிட்டு வந்துருச்சுன்னு ஒரே அடியா சொல்லி முடிப்பார்கள்.

கலைஞர் சவுதி ஷேக் மாதிரி ஒரு மகாராஜா. தமிழகம் சவுதி மாதிரி மன்னர் ஆட்சி நடக்கும் மாநிலம்.

இங்கே கல்லால் அடித்துக்கொல்லும் தண்டனை போன்ற தண்டனைகள் இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதைத் தவிற ஒரு வித்தியாசமும் இல்லை.

roaming raman said...

piramaadham...verenna solla??

Anonymous said...

சரி, ஒரு போட்டி வைக்கலாமே.. ஞாநியின் கட்டுரைக்குத் தமிழ் ’பண்பாடோடு’ என்ன மாதிரி பதிலை முரசோலி வெளியிடும் என்று இ.வ. வைக்கலாமே. - கருப்பன்

R. Jagannathan said...

/இங்கே கல்லால் அடித்துக்கொல்லும் தண்டனை போன்ற தண்டனைகள் இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை / உண்மை. பஸ்ஸோடு எரிப்பார்கள் அல்லது காலையில் வாக் போகும்போது கொல்வார்கள். ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் சாமர்த்தியம் / அதிர்ஷ்டம். - ஜெ.

Anandkrish said...

well said, people should think to throw these sh!@# away of the politics.

Baski said...

ஞாநி - கிரேட்.

மன்னார்அன்கம்பெனி said...

இட்லி வடையாரே..
கீழே அறிமுகம் பகுதில உங்கள பயோ டேட்டால சாப்பிடுறவர் யாரு? பரிமாறுபவர் யாரு?
படத்த மாத்துங்க இட்லியரே.முரசு ஒலிச்சு(முரசொலி)அதுல பூணுல் பார்ட்டிகள் திராவிட சிங்கங்கள பத்தி பதிவு போடுராங்கனு ன்னு உங்க பேரு வந்துட போவுது.

pachhamilaka said...

என்னங்க ஞானின்னு பெயர் வைத்திருகிங்க தமிழ் நாட்டை வித்து வந்ந்தகாசுன்னு தெரியாதா, ஒரு மொழியை வைத்து ஆசியா பண்னக்காரங்க ஆகமுடியும் தெரியாதா,ஜாதிய வைத்து பேசி சன்னங்கள முட்டள்ளக்க முடியும்ன்னு தெரியாதா?

Anonymous said...

I was looking for some Tanjore painting pictures and came across this blog and I have been a follower of this blog for that time. This is my first post (which i think will endup a bit long).

Anyway, wrt this post it is very well written.

Regarding 300% hike to MP's: I agree to an extent that they can take this hike provided they pay all the expense like what we do. This includes rent to the Delhi house, petrol price for the car that they use, Flight charge that they use to travel within India every week. They should not get any government allowance like free phone, free servants etc. Let them pay from this 300% hike.


Regarding Endiran: Not all sun pictures are flop. But what we need to cross check is whether sun picture is paying tax for the money they have. If Karunanadhi is so keen on Tamil and Tamil marabu, why can’t he close all pubs, nightclubs etc which is not tamil marabu in at least so called Singara Chennai. The money that he has spent on Tamil Conference (or Karunanadhi family conference) could have been use for a better project. I do not see any difference bw this tamil conference and Jayalalitha's adopted son (Sudakaran) marriage. Both are done as a family function using public property, public money, and huge money spent (one used corruption money (AADMK) and the other openly used tax money (DMK)).

Regarding Rs.1 rice: I should agree that it not an easy job to give rice for one rupee. But we need to see how much we lose from our tax money because of such scheme. We people only talk about one rupee rice, but we don’t talk about how was it possible. DMK/Government is paying the rest (may be Five rupees per kg) to buy this rice may be by from loan amt or from our tax money. Tamil Nadu alone has lots of loan to be paid because of such schema and if we say such things to Karanunadhi, he claims even USA has around $200 billions in loan and we Tamil Nadu has very less amount. What a comparison?:)-


Until such leaders vanish, things will always happen. I can write more on this…..but will stop here.

Anonymous said...

ஒருமுறை ஒரு பொங்கல் நாளில் இந்த ஞாநி என்பவர் சென்னைப் புத்தகக்கண்காட்சியில் யாரோ ஒருவருடன் உரத்தகுரலில் வாதிட்டுக் கொண்டிருந்தார். அப்படி என்ன சொன்னார் என்றால் பிராமணர் என்பவர் தமிழர் இல்லை; பிராமணன் வேறு தமிழர் வேறு; பொங்கல் பிராமணர் பண்டிகை இல்லை. அவர்களுக்கு அது மகர சங்கராந்தி என்ற பெயரில் ஒரு ஆரிய பண்டிகை இத்யாதி. அவருக்கு பதில் சொன்ன இளைஞர் பொறுமையாக எல்லாமே பாகன் மரபில் வந்த பண்டிகைதான்; இதெல்லாம் உலகளாவிய பாகன் திருவிழாக்கள் என்று எடுத்துச் சொன்னதெல்லாம் இந்த ஞாநி செவிமடுக்காமால் புறந்தள்ளி தன் ஜால்ராக்கள் சிலரை வைத்துக்கொண்டு மிஷநரி பல்லவியையே பாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பார்ப்பனர்களில் பலர் தத்தம் தமிழ் வேரை வெட்டிப்போகும் கொடுமைக்கு அவர்களே பொறுப்பு. இதனால்தான் கருணாநிதி வீரமணி கோஷ்டிகளுக்குக் கொண்டாட்டமாகிப் போகிறது. ஞாநி போன்றவர்களுக்கு கீழ்க்காணும் இராசமாணிக்கனார் உரை சமர்ப்பணம்.

தமிழ் அந்தணர்களைத் தமிழர் இல்லை என்று சொன்னால் தமிழ்நாட்டின் எந்தப் பிரிவினரையுமே தமிழர் என்று சொல்ல முடியாது. தமிழுக்கும் நம் சமயத்துக்கும் அவர்கள் ஆற்றியுள்ள அருந்தொண்டை மறப்பவர் நன்றி கொன்றவர் ஆவர்.

இதை ஏதோ பாரதியாரையோ, தமிழ்த்தாத்தா உவேசாவையோ கருத்தில் கொண்டு சொல்லவில்லை. அவர்கள் தொண்டும் போற்றப்பட வேண்டியதுதான். ஆனால் அவர்க்கு எல்லாம் முன்னர் பண்டைக்காலத்திலிருந்தே அந்தணர் செய்திருக்கும் அருந்தொண்டு அளவிடற்கரியது.

இடைக்காலத்தில் இந்துசமய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த ஆழ்வார்கள், நாயன்மாரில் பெரும்பான்மை அந்தணரே. சைவக்குரவர் நால்வரில் மூவர் அந்தணரே.
சங்ககாலப் புலவரிலும் பெரும்பான்மையினர் அந்தணரே. அவர்களுள் பலர் கோத்திரப்பெயராலேயே அறியப்படுபவர்.
கபிலர்,
பாலைக் கௌதமனார்,
தாமப்பல் கண்ணனார்,
மார்க்கண்டேயனார்,
வடம நெடுந்தத்தனார்,
வான்மீகியார்,
காசிபன் கீரனார்,
வேம்பற்றூர்க் குமரனார்,
தங்கால் ஆத்திரேயனார்,
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்,
பிரமசாரியார்,
பெருங்கௌசிகனார்,
கடம்பூர்ச் சாண்டில்யனார்,
கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்,
பிரமனார்,
நெய்தற்கார்க்கியர்,
குமட்டூர்க் கண்ணனார்
என்று மிக நீண்ட பட்டியலே சங்கப்புலவரில் காணக் கிடைக்கிறது. இது முழுமையான பட்டியலல்ல.

வேதமும், வேதியர் நல்லொழுக்கமும் சங்கப் பாடல் நெடுகக் காண்கிறோம். எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடல் மதுரைக்காஞ்சியில் இருந்து:
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்
(மதுரைக்காஞ்சி 468-474)

அப்படி 'அறநெறி பிழையா அன்புடை நெஞ்சங்களாய்' தமிழுக்கும் தமிழருக்கும் அரும்பணி ஆற்றியிருக்கும் அந்தணர் பெருமக்களைப் போற்றாவிட்டாலும், அவன் வெளிநாட்டான், வந்தேறி என்று வெள்ளைக்காரன் சொன்ன பொய்களால் தூற்றுவதையாவது நம் சமுதாயம் இனி நிறுத்த வேண்டும்.

(இந்துசமய எழுச்சி மாநாட்டு மலரில், அருஞ்சொல்மணி வே.இராசமாணிக்கனார் உரையின் ஒரு பகுதி. )

-ச.வெற்றிவேல்

Krish said...

முரசொலியில் பதில் வந்ததா?

IV, follow up

Anonymous said...

கருணாநிதி, (நெற்றியில் விபூதி இடும்) மாலதி என்கிற பிராமண ஐ.ஏ.எஸ் ((சிறிது காலம் முன்பு உள்துறை செயலாளராக இருந்தவர்)) அதிகாரியை Chief Secretaryயாக நியமித்துள்ளாரே ? ஸ்ரீபதியும் 'அவா' தானே?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=74661

விஜிலென்ஸ் கமிஷனராக இருந்த எஸ்.மாலதியை, தலைமைச் செயலராக நியமித்து, தமிழக அரசு நேற்று மாலை உத்தரவிட்டது. உத்தரவு வெளியான சூட்டோடு சூடாக, புது தலைமைச் செயலராக மாலதி பதவியேற்றார். இதுவரை தலைமைச் செயலர் பதவியில் இருந்த ஸ்ரீபதி, தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.



புது தலைமைச் செயலர் விவரம்: மாலதி, தஞ்சாவூரைச் சேர்ந்தவர். 1954ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி பிறந்த இவர், எம்.எஸ்சி., விலங்கியல் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் பல்கலையில், நிதித்துறை சார்ந்த டிப்ளமோ பெற்றுள்ளார். 1977ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்தவர். இவரது பணிக்காலம் முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன.

Anonymous said...

//குங்குமம் பத்திரிகையைத் தொடங்கியபோது அவர் ஆசிரியராக அழைத்து வந்தது, பூணூல் போட்ட சாவியைத்தான். நிர்வாகத்தை கவனிக்க நியமித்தது, பூணூல் போட்ட டி.கே.தியாகராஜனைத்தான். பத்திரிகையின் முதல் இதழின் அட்டைப் படத்தில் கண்ணாடியில் முகம் பார்த்து பொட்டு இட்டுக் கொள்ளும் பெண்ணுக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கவிடப்பட்டது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேநதிரர் படத்தைத்தான். //

ஆமா இந்த பூணூல் போட்ட பயித்தியக்கார சிவராமன் குங்குமத்திலதானே வேலை செய்கிறார்? #டவுட்டு

geeyar said...

முதலில் அந்த கார்ட்டூனை போடுவதற்கு காரணம் என்ன? ஒரே குடும்பத்தினர் இப்படி வரிசையாக களத்தில் இறங்குவதால் ஏற்படும் ஒரு வகை பொறாமைதானே. அப்புறம் நிறைய அய்யர்கள் பல உயர்ந்த பதவிகளை சொல்லி அவற்றிலெல்லாம் எங்களைத்தானே வைக்கின்றீர்கள் என சாடியுள்ளனர். உண்மை உண்மை. போன தலைமுறைவரை எங்களால் உங்கள் அளவு படிக்க முடியவில்லை சாமி. வர்ணாஸ்ரமம் எங்களை அடக்கியது. சாதிவாரி இடஒதுக்கீடு எங்களை மீட்டெடுத்தது. அதனால் இந்த தலைமுறையில் நாங்கள் நல்லா படிக்க ஆரம்பித்துவிட்டோம். அதனால் நீங்கள் வருத்தபட வேண்டாம் சாமி. உதயநிதி ஸ்டாலின் முதல்வராக இருக்கும்பொழுது நிச்சயம் உங்க ஆட்கள் யாரும் அந்த ஏரியா பக்கமே வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

Anonymous said...

//
ஒரே குடும்பத்தினர் இப்படி வரிசையாக களத்தில் இறங்குவதால் ஏற்படும் ஒரு வகை பொறாமைதானே.
//

தோடா...

பொறாமை இல்ல தம்பி. முழு சினிமா/டீவி/மீடியா மார்க்கெட்டையும் ஒரு குடும்பம் கைப்பற்றிக்கொண்டுவிட்டது, அரசு அதிகாரம் கையில் இருக்கு என்கிற தைரியத்தில்.

இதே வேறு ஒரு நாட்டில் நடந்திருந்தால் அதற்கு சர்வாதிகாரம் என்ற பெயர் கிடைத்திருக்கும்.
//
நிறைய அய்யர்கள் பல உயர்ந்த பதவிகளை சொல்லி அவற்றிலெல்லாம் எங்களைத்தானே வைக்கின்றீர்கள் என சாடியுள்ளனர். உண்மை உண்மை. போன தலைமுறைவரை எங்களால் உங்கள் அளவு படிக்க முடியவில்லை சாமி. வர்ணாஸ்ரமம் எங்களை அடக்கியது.
//


உங்க கணக்கு தப்பு சீயர்வாள்.

போன தலைமுறையிலயும் சரி, இந்த தலைமுறையிலயும் சரி, உங்களைவிட நல்லாவே காக்கா புடிக்கத் தெரிந்தவர்கள் கிராஸ் பெல்டுகள் என்பதைத் தான் அது காட்டுகிறது. இட ஒதுக்கீட்டுக்கும் அந்தப்பதவி வகிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

//
சாதிவாரி இடஒதுக்கீடு எங்களை மீட்டெடுத்தது.அதனால் இந்த தலைமுறையில் நாங்கள் நல்லா படிக்க ஆரம்பித்துவிட்டோம். அதனால் நீங்கள் வருத்தபட வேண்டாம் சாமி. உதயநிதி ஸ்டாலின் முதல்வராக இருக்கும்பொழுது நிச்சயம் உங்க ஆட்கள் யாரும் அந்த ஏரியா பக்கமே வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
//

சர்வாதிகாரிக்கு சப்பைக்கட்டு கட்டும் சீயர் சார். கிராஸ் பெல்ட்டை உள்ளே வராதமாதிரி செய்யும் உத்தியை நீங்கள் உதயநிதி காலத்தில் செய்வீர்கள் என்று ஏன் சொல்கிறீர்கள் ? அதை இப்பவே ஆரம்பிக்கவேண்டியது தானே ? யாராவது உங்களைத் தடுத்தார்களா ?

தடுத்தால் ஆட்டோ அனுப்பி முடிக்கவேண்டியது தானே சார். உங்க தொழில்ல இதெல்லாம் சகஜம் இல்லையா ?

போற போக்கைப் பார்த்தா...காக்கா புடிக்கிறதுலயும் இடஒதுக்கீடு கேப்பீங்க போல இருக்கே ?

Thobey srinivasan said...

கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப் பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்" - அடிப்படையில் இந்த கார்ட்டூன் சொல்வது ஏற்ககூடியதே அல்ல! கருணாநிதி கதை வசனம் எழுதிய படத்தை தயாரித்து கையை சுட்டுக்கொள்ளும் அளவு அவருடைய பேரன்கள் முட்டாள்கள் அல்ல; தேர்ந்த வியாபாரிகள்!

Thobey srinivasan said...

அடிப்படையில் இந்த கார்ட்டூன் சொல்வது ஏற்ககூடியதே அல்ல! கருணாநிதி கதை வசனம் எழுதிய படத்தை தயாரித்து கையை சுட்டுக்கொள்ளும் அளவு அவருடைய பேரன்கள் முட்டாள்கள் அல்ல; தேர்ந்த வியாபாரிகள்!