பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 25, 2010

புழுக்கை அளவு கூட இல்லாத ...


"இந்தியர் தானா என்று கேள்வி : ஆனந்திடம் கபில்சிபல் சமாதானம்" என்ற தலைப்பில் ஆனந்த பற்றிய செய்தி பல நாளிதழில் வந்துவிட்டது. இதற்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? கீழே சில கமெண்ட்ஸ்... :-)


* அறிவு என்பது புழுக்கை அளவு கூட இல்லாத ஒரு அரசாங்கம். இதை தவிர இவர்களை என்ன சொல்வது?...

* காங்கிரஸ்கார்களை பொருத்தவரை இந்தியர்கள் என்றால் அது இந்திகார்கள் மட்டுமே. தமிழக இழி பிறவி காங்கிரஸ்காரர்களுக்கு வெறிநாட்டில் இருந்து இந்தியாவில் 13 ஆண்டுகளாக குடியு ரிமையே பெறாத சோனியா கான் தான் இந்தியர் , இந்தியாவின் மருமகள், அதைவிட பெற்றெடுத்த தமிழச்சியை விட அவர்தான் அன்னை. ஆனந் இந்த பட்டத்தை ஏற்க்க கூடாது

* திரு .ஆனந்த் அவர்கள் பட்டத்தை பெறாமல் தவிர்ப்பது நலம் . அதைவிட , ஸ்பெயின் குடிஉரிமையை பெறுவது மிக்க நலம் .இந்த "டாக்டர்" பட்டத்தை விட ஸ்பெயின் குடிஉரிமை மதிப்பும் மரியாதையும் கொண்டது . இளையராஜா வே சொன்னது போல் நம் தேசம் கிரிக்கட்டை கட்டிக்கொண்டு அழட்டும் ...

* ஆனந்தத்தை பார்த்தா இத்தாலி நாட்டுக்காரர் மாதிரியா தெரியுது ?...

* சந்தேகத்திற்கு இடமின்றி இது கருணாநிதியின் சதியே ! ஸ்பெயினிலிருந்து உலக தமிழ் மாநாட்டிற்கு வந்து கருணாநிதியை புகழவில்லை என்று ஆத்திரத்தில் செய்திருக்கலாம் !

* தமிழர்கள் டைரெக்ட் செய்த தெலுங்குப்படங்களுக்கு அரசு Nandi விருது கொடுக்கக்கூடாது என ஆந்திரத் திரையுலகம் தகராறு செய்தது நினைவுக்கு வருகிறது.அவர்கள் எல்லோரும் அப்படித்தானோ?

* திரு விஸ்வ‌நாத‌ன் ஆன‌ந்த் முழுக்க‌ முழுக்க‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்துக்கு த‌குதியான‌வ‌ர் என்ப‌து என் க‌ருத்து என்றாலும் விசாரித்து கொடுப்ப‌தில் த‌வ‌றொன்ருமில்லையே. க‌ல்ப‌னா சாவ்லா இந்திய‌ரே அல்ல‌ ஆனால் அவ‌ர் பெய‌ரில் விருதே இருகின்ற்து. அவ‌ர் உயிருட‌ன் இருக்கும்போது த‌ன்னை இந்திய‌ர் என்று எப்பொழுதும் சொன்ன‌தில்லை. இது போன்று விசாரிப்ப‌தால் இந்திய‌ க‌வுர‌வ‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்தின் ம‌திப்பு உய‌ரும் சில் நாடுக‌ளில் சில் நூரு டால‌ர்க‌ள் கொடுத்தாலே டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைத்துவிடும். கோட‌ம்பாக்க‌ம் சினிமா கும்ப‌ளிட‌ம் போய் கேளுங்க‌ள் எந்த‌ எந்த‌ நாட்டில் எவ்வ‌ள்வு கொடுத்தால் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைக்கும் என்று அவ‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள். ஆன‌ந் நீங‌க‌ள் அதை வாங்கி விருதுக்கு பெருமை சேருங்க‌ள் வாழ்த்துக்க‌ள்

* விஸ்வநாதன் ஆனந்த் என்ன எம். எஃப். ஹூசைனா, வெளிநாடுதான் என் நாடு என்று அறிவித்த பின்னாலும் டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு?

* நமது நாட்டில் இருந்துட்டு நல்ல பேரும்,புகழும் , நெறைய பணமும் சம்பாதித்துவிட்டு , அடுத்த நாட்டின் குடியுறிமை பெற்ற ஆனந்த் அவர்களே உங்களுக்கு எதுக்கு டாக்டர் பட்டம்?...

* You learn chess in india but u sold in spain In Spain there is no dual citizen so anand is spain citizen not indian. Hi anand dont blame indian Govt. You sold your indian citizen to spain Govt....

* சரி இந்த சினிமா நடிகர் விஜய்க்கு எல்லாம் எப்படிப்பா டாக்டர் பட்டம் கொடுத்தாங்க.... அதுக்கெல்லாம் கபில் delay பண்ணவே இல்லையே ....... அவரு இந்தியரோ?

* Hello Anand, I really don't understand why did you receive spain citizenship when you are been treated as Indian in the whole world . You were born as Indian, brought up as Indian and you should live as Indian. May be it's your personal, but whoever going out of country, remember that we should not forget that we are indians and we should pay our tax also to India. I heard that, Tax is very less if you live in Spain :)...

* Anand had NOT lived in India and its good he has clarified he is an Indian. He cannot play for other countries really. They'll not let him do so - there is no need for his wife to be annoyed - they must submit docs required - its great that the experienced Sibal has apologized , so Indians should stop going mad about cricket, get educated and look at other sports as well, esp. Hockey.

* தமிழா நிமிர்ந்து நில் .தமிழன் என்றால் யார் என்று காட்டு.வட நாடு காரனுக்கு புத்தி மந்தம்தான்....


குறைந்த காற்றழுத்த நிலை: தமிழகத்தில் கன மழை பெய்யும்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நமக்கு தான் ஆபீஸ் என்ன செய்ய :-)

43 Comments:

Anonymous said...

என் அன்பு கண்மணி இராச தாழ்த்தப்பட்டவர் அவருக்காக பேசலாம்,
என் ஆஆசை கண்மணி குஷ்பூ என்றால் ஆறிக்கை விடலாம்,
அன்னனை சோனியா என்றால் கேள்வி பதிலே எழுதலாம்..

ஆனந்த் யார்,
மிக சிறு வயதிலேயே உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர செய்த ஆரியனாக இருக்கலாம், ஸ்பெயினில் வசித்தாலும் இந்தியாவில் தான் செஸ் பள்ளி நடத்துகிறாராமே இருக்கட்டும்.. இந்திய கொடியுடன் தான் விளையாடுகிறாராமே இருக்கட்டும்..

குறுக்கே நூல் போட்டவன் எப்படி தமிழனாக முடியும்?


Bala
Texas

R.Gopi said...

//குறைந்த காற்றழுத்த நிலை: தமிழகத்தில் கன மழை பெய்யும்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நமக்கு தான் ஆபீஸ் என்ன செய்ய :-) //

பரவாயில்ல....ஆஃபீஸ் இருக்கறதுனால தானே இந்த ஆஃபீஸர் இது போல மேட்டர் எல்லாம் கொளுத்தி போட முடியுது.....

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் said...

நான் இந்தியன் அல்ல. நான் தமிழன்.
இதை முடிவு பண்ணி ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆகி விட்டன. (மே 2009 முதல்).

/*திரு .ஆனந்த் அவர்கள் பட்டத்தை பெறாமல் தவிர்ப்பது நலம் . அதைவிட , ஸ்பெயின் குடிஉரிமையை பெறுவது மிக்க நலம்*/

மிகச்சரியான கருத்து. முதலில் அதை செய்யுங்கள்.

ரிஷபன்Meena said...

கலைமாமணி, பத்மஸ்ரீ (விவேக் வாங்கிய பிறகு), டாக்டர் பட்டம் பெற்றால் அது பெறுபவருக்கு பெரிதாக என்ன புகழை பெற்றுத்தரப் போகிறது ?

இந்த சர்சைகளுக்கு முன்பாகவே இதை வேண்டாம் என ஒதுக்கியிருக்கலாம்.

நான் கூட 90 களில் ”துக்ளக்” வழங்கிய டாக்டர் பட்டம் பெற்றவன் தான் ஆனால் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதில்லை.

Anonymous said...

/***இளையராஜா வே சொன்னது போல் நம் தேசம் கிரிக்கட்டை கட்டிக்கொண்டு அழட்டும் ...***/

When did Raja tell like this? I didn't hear such a news in pappers and other medias :)

மிளகாய் பொடி said...

Anand is based in spain due to the fact that most tournaments are played in europe and not in india.. will the govt pay him airfare every time he goes to a tournament? in fact Anand is world champion now based on his efforts only... the govt didnt support in any way financially... did he ask for a doctorate degree now? no.... then you do people humiliate him in this manner? If you dont want to recognize Anand for his achievements it is okay, but already dont humiliate him like this..

யதிராஜ சம்பத் குமார் said...

With great respect, i recommend the following video link to the HRD Ministry which raised some doubts about Anand's citizenship.

http://www.youtube.com/watch?v=z5As3uAc0vU&feature=related

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//குறைந்த காற்றழுத்த நிலை: தமிழகத்தில் கன மழை பெய்யும்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நமக்கு தான் ஆபீஸ் என்ன செய்ய :-)
//

மஞ்சள் கமெண்ட் போஸ்ட் சம்பந்தமா தெரியலை, "ஆனந்"தத்துல என்ன எழுதறதுன்னே தெரியலையோ?

வீரராகவன் said...

அனைவரும் இச்செயலுக்கு உணர்ச்சிகரமாகத்தான் அணுகியிருக்கிறார்களே தவிர தெளிந்த சிந்தனையுடன் அறிவுப்பூர்வமாக அணுகினார்ல் இதில் தீர்வு காண முடியும்.
1)ஆனந்த் ஸ்பெயின் குடியுரிமை விரும்பித்தான் பெற்றுள்ளார். அங்கு இரட்டை குடியுரிமை கிடையாது.
2)ஸ்பெயின் நாட்டிற்காகவோ, வேறு எந்த நாட்டிற்காகவோ என்றுமே அவர் விளையாட விரும்பியதும் இல்லை. இனிமேலும் அவ்வாறு விரும்ப மாட்டார் என்பது அவரது நடவடிக்கைகளில் தெளிவாக தெரிகிறது.
3)பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற பட்டங்களை அவருக்கு வழங்கும் போதோ, வழங்கிய பின்னரோ இத்தகைய விளக்கங்க்ளை அவரிடம் கேட்டுப் பெறுவது அரசின் கடமை. ஆனால் ஒரு பல்கலைக் கழகத்தில் பெயருக்கு அளிக்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம் அந்த நிகழ்ச்சி முடிந்ததுமே அதன் பயன் முடிந்துவிடக் கூடிய ஒரு தற்காலிக தகுதிக்கு இத்தகைய விளக்கங்களை கேட்டுப் பெறுவதும் அதனை மீடியாக்கள் பெரிதுபடுத்தவும் சரியல்ல.
4) ஒருவர் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் நடப்பதாலேயே அவர் செய்யும் தவறுகளை சுட்டி கூட காண்பிக்கக் கூடாது என்பது சரியல்ல. தினைத் துளியானாலும் பனையளவு கொள்வர் பழி நாணுவர்.
5)சோனியாரை ஆனந்துடன் ஒப்பிடுவது விட ஆனந்துக்கு பெரும் இழுக்கு வேறு இல்லை.
6)ஆனந்தின் அடுத்த மூவ் அவர் வாழ்க்கையிலும் பரபரப்பை இப்போதுதான் காட்டியுள்ளது. இதுவரை அவரது விளையாட்டைக் கூட விமர்சிக்காதவர்களுக்கு கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை எப்போதுமே பரபரப்பு ஏற்பட்டதில்லை என்பது தெரியும். அவரோ, அவர் குடும்பத்தினரோ இந்த பரபரப்பை விரும்பாதபோது நாமும் அவர்களிடமே இப்பிரச்சினையை விட்டுவிட்டு ஒதுங்கி விடுவதுதான் ஆனந்துக்கு நாம் தரும் கவுரவம்.

Guru said...

why didn't TN MPs resign after this insult to a tamilian Anand ?

அஞ்சா நஞ்சன் said...

// இதற்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த 'மக்களை' எங்கிருந்து பிடிச்சீங்க?

vignaani said...

The annoyance is not about the question asked whether he is an Indian; it is about the time at which it is raised by the bureacracy: at the last minute, even though the reference was made to the Government of India two months back. There would have been no embarassment if the university had not invited him to receive the Hon.Degree; but had followed up with the well-known bureacray and known of their bureacratic process and announced only after the clearance is received.

ஆகாயமனிதன்.. said...

மொதல்ல...அதை டாக்டர் பட்டம் என்று சொல்லாதீர்கள்....
கௌரவ, கவுரவ - இப்படி ஏதாவது சேர்த்து சொல்லுங்க....
மைனாரிட்டி - மெஜாரிட்டி இப்படி நெறைய பிரிவினை இருக்கு எல்லா இடங்களையும்....
ஒரு பக்கம்....அணு ஆயுதப் போர் வரும்ம்ன்னு சொல்லீட்டு இருக்கானுக...
இந்த நேரத்துல....இந்த டாக்டர் காலரா'வ கூட குணப் படுத்த முடியாது
ரொம்ப தேவை....
ஆமா, யார் இந்த ஆனந்த் ?

Anonymous said...

Nothing wrong in clarifying but they should have done it before itself. However all news channels got matter for one full week.

Black said...

manja commentukku oru "O" podu

R. Jagannathan said...

எனக்குத் தெரிந்து நிறைய வெளிநாட்டுக் காரர்களுக்கும் டாக்டர் பட்டங்கள் தரப் படுகின்றன. ஹைதராபாத் பல்கலைகழகம் மட்டும் ஏன் தயங்கியது! அதுவும் சென்ட்ரல் கவெர்ன்மெண்ட் ஏன் தலையிடுகிறது?

ஒருவர் கேட்கிறார் - நமது நாட்டில் இருந்துட்டு நல்ல பேரும்,புகழும் , நெறைய பணமும் சம்பாதித்துவிட்டு , அடுத்த நாட்டின் குடியுறிமை பெற்ற ஆனந்த் அவர்களே உங்களுக்கு எதுக்கு டாக்டர் பட்டம்?...> ஆனந்த் பணம் சம்பாதித்தது எல்லாம் வெளி நாட்டில் தான். இந்தியாவில் ரொம்ப கொஞ்ஜம் தான். அதற்கு நிச்சயம் வரி கட்டி இருப்பார்.

இன்னொருவர் குற்றம் சாட்டுகிறார் - ஸ்பெய்னில் வரி குறைவு என்பதால் அங்கு தஙுகிறார் என்று. புரிந்து கொள்ளுங்கள் - வளைகுடாவில் வேலை செய்யும் NRI ஒருவரும் வரி கட்டுவதில்லை. நிறைய தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும்தான் நாட்டை ஏமாற்றுகின்றனர்.
மற்றபடி மீண்டும் அழைத்தால் பட்டத்தை ஏற்பது ஆனந்தின் இஷ்டம் / பல்கலைக்கு பெருமை. நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. - ஜெ.

வலைஞன் said...

சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு இந்தியர் ,எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதுகூட தெரியாத ஒரு "திறமையான அரசு" நம்மை ஆள்கிறது!

♥Manny♥ said...

போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கப்பா... கப்பித் தனமா பேசிக்கிட்டு. :-)

Anonymous said...

Anand is NOT a citizen of spain. He is only a resident. There is a big difference between the two

Anonymous said...

//
ஸ்பெயினிலிருந்து உலக தமிழ் மாநாட்டிற்கு வந்து கருணாநிதியை புகழவில்லை என்று ஆத்திரத்தில் செய்திருக்கலாம்.
//
கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்காது. வந்திருந்தால் இது பார்ப்பனர்களின் சூழ்ச்சி, பார்பனத் திமிர் என்றும் ஏதாவது சொல்லி(உளறி)யிருப்பார்.

யதிராஜ சம்பத் குமார் said...

2008 இல் சென்னை பல்கலை தனது 150 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கருணாநிதி, மன்மோகன் மற்றும் சோனியா ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை அளித்தது. இத்தனைக்கும் சோனியா இந்தியாவில் குடியேறி 16 ஆண்டுகளுக்குப் பிறகே இந்தியக் குடியுரிமையைப் பெற்றவர். இன்றைய தேதி வரையிலும் தனது இத்தாலியக் குடியுரிமையையும் விட்டுக் கொடுக்காதவர். அப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த கேள்வியை ஏன் எழுப்பவில்லை? (சோனியாவின் வாழ்க்கை மற்றும் அவரின் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான சேவை போற்றி இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.) அவர் செய்த சேவைகள் குவாத்ரோக்கியை தப்பவிட்டது மற்றும் குடியரசுத் தலைவரிடம் 273 எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக பொய் சொன்னது.

மறுபடியும் 2009 ஆம் ஆண்டு அலிகர் முஸ்லிம் பல்கலை சோனியா, மன்மோகன் மற்றும் எம்.எஃப்.ஹூஸேன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதாக அறிவித்தது. அப்போதும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சோனியா, ஹுஸேன் ஆகியோர் குடியுரிமை தொடர்பாக எந்த பிரச்சனையையும் கிளப்பவில்லை. இது ஏன்?

இவ்விவகாரத்தில் கபில் சிபல் உடனே மன்னிப்பு கோரியது மட்டும் ஒரே ஆறுதல். மற்றபடி அவரது அமைச்சகம் ஆளும் தலைமைக் குடும்பத்தினர் விஷயத்தில் மட்டும் இதே அணுகுமுறையைக் கையாள்வதில்லை.

http://www.youtube.com/watch?v=SidLY-nSqvA&feature=related

Ezhil Azhagan said...

@Bala Texas: TEXAS இல் இருந்து கொண்டு தமிழை பற்றி பேசுவது மிக காமடியாக உள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒரு இந்தியரை வெறும் ஆரியன் என்று காரணத்திற்காக பேசுவது உனது ஜாதி வெறியை நன்கு காண்பிக்கிறது நானும் ஒரு தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவன் தான்.எனக்கு நிறைய அறிய நண்பர்கள் உள்ளனர்
ஒன்றை நினைவில் கொள் என்றைக்குமே ஆரியர்கள் யார் உரிமைகளையும் பறித்ததில்லை உங்கள் பெரியார் கூட்டம் தான் இன்றளவும் சகல வேலைகளையும் இன்றளவும் செய்கிறது என்பதை நினைவில் நிறுத்து .

இங்ஙனம்
எழில் அழகன்

Anonymous said...

திரு வீரராகவனும் இன்னும் சிலரும் “ஆனந்த் ஸ்பெயின் நாட்டு குடியுரிமையை விரும்பித்தான் பெற்றுள்ளார் என்றும், ஆனந்த் ஸ்பெயின் நாட்டு குடிமகன் தான்” என்ற தவறான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

உண்மையில் ஆனந்த் ஸ்பெயின் நாட்டு குடிமகனோ, அந்த நாட்டு குடியுரிமையை பெறவோ இல்லை. அன்று முதல் இன்று வரை அவர் இந்தியக் குடிமகன் தான்; அவரிடம் இருப்பது இந்திய அரசு அளித்த பாஸ்போர்ட் மட்டுமே.

அவர் இதுவரை விளையாடிய எல்லா செஸ் (உலக) போட்டிகளிலும் தன் அருகில் இந்திய மூவர்ண தேசியக் கொடியை வைத்துக் கொண்டுதான் விளையாடியிருக்கிறார்.

விஷயம் தெரிந்தால் மட்ட்மே எழுதுங்கள்

usenet8988 said...

இது ஆனந்திற்கு செய்யப்பட்ட மிகப்பெரும் அவமானம். இதற்கு காரணமானவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். HRD அதிகாரிகள் உண்மையாகவே அவருடைய குடியுரிமையைப் பற்றி அறியவேண்டுமானால், வெளியுறவுத்துறைக்கு ஒரு போன் போட்டிருந்தால், வெளிப்பட்டிருக்கும். வெளியுறவுத்துறை கணிணிகள் ஆனந்த் இந்தியா திரும்பி வந்தபோது எந்த பாஸ்போர்ட் மூலம் வந்தார் எனத்தெரிந்துவிடும். அதை விட்டுவிட்டு அவரை இப்படி பொதுவில் அவமானப்படுத்தியதை ஏற்க முடியாது. HRD மந்திரி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும். ஆனந்த் நரேந்திரமோடியுடன் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதற்காக பழிவாங்கப்படுகிறார் என்றால், இன்னமும் மோசம். அப்படி இருக்காது என நம்புகிறேன். இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கானகம் said...

எல்லாம் பார்ப்பணர்களின் சதி... நான் இந்தியனா எனக் கேள்வி கேளுங்கள் எனச் சொன்னதே ஆனந்த் தான் என்று சொன்னால் முடிந்துபோயிற்று!!!

குறுக்கே நூல் போட்டவனுக்கெல்லாமா டாக்டர் பட்டம்.. ஐயகோ...

Kannan said...

உடன் பிறப்பே!, நான் ஏன் ஆனந்த்திற்காக பேசவில்லை என்று ஒரு குள்ள நரி கூட்டம் கேட்கிறது! நீ அறிவாய் நான் கேட்பதும் எடுப்பதும். ஏன் இந்த வையகதிற்கே தெரியும் நம்மை பற்றி. ஒரு ஒற்றுமையை கவனித்தாயா உடன்பிறப்பே! அவரும் அவா, இவரும் அவா, இந்த ஆரிய சூழ்ச்சியை நீ புரிந்து கொள்ள வேண்டும். இந்த தமிழ் நாடே என் குடும்பம், என் குடும்பம் தான் தமிழகம் என்று தியாக வாழ்க்கை வாழும் நமக்கு இப்படி ஒரு சோதனை!. அண்ணா(ன்னை) வழியில் சென்று ஜனநாயக முறையில் இதையும் வெல்வோம். அடுத்த முறை ஆனந்த் சென்னை வரும் பொழுது தொண்டர்கள் அமைதியான முறையில் செருப்பு எறியாமல் நம் ஒற்றுமையை காண்பிப்போம். ஒரு விஷயத்தை கவனித்தாயா. நான் எவ்வளவு அடித்தேன் என்று உனக்கு தெரியாது, நீ எவ்வளவு அடித்தாய் என்று எனக்கு தெரியாது. அப்படி இருக்கும் பொழுது அவா எந்த நாட்டவர் என்று யாருக்கு தெரியும்.

usenet8988 said...

//இன்றைய தேதி வரையிலும் தனது இத்தாலியக் குடியுரிமையையும் விட்டுக் கொடுக்காதவர்.//

யதிராஜ் வழக்கம்போல் RSS & பஜ்ரங்தள் பரப்பும் பொய்யை, இங்கே சந்தில் நுழைக்கிறார். இந்திய அரசியல் சட்டத்தின்படி, ஒருவர் இந்தியக்குடியுரிமைப் பெற்றவுடன் அவர்களின் ஏனையக்குடியுரிமைகள் அனைத்தையும் இழந்துவிடுவார்கள். அதன் அடிப்படையில், 1983 ஆண்டு அவர் இத்தாலியக்குடியுரிமையை இழந்துவிட்டார். இதோபோல்தான் அமெரிக்காவிலும் சில மறைகழண்டவர்கள் ஒபாமா அமெரிக்கக் குடியுரிமை இல்லாதவர்கள் என பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ரோமிங் ராமன் said...

//இது ஆனந்திற்கு செய்யப்பட்ட மிகப்பெரும் அவமானம்//

அய்யா இந்த அவமானம் ஆனந்த்துக்கு அல்ல--இந்த தேசத்துக்கு!!
அது சரி எழில் அழகா. உங்களைத்தொட்டால் ஏன் கூகுள வாயைப் பிளக்கிறார்??

Anonymous said...

முதலில் இந்த டாக்டர் பட்டம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்!!! சோனியா முதல் எங்க ஏரியா கவுன்சிலர் வரை, விஜய் முதல் விவேக் வரை, 'டாக்டர்' பட்டம் மலிவாக விற்கப் பட்டுள்ளது.

Anonymous said...

/////TEXAS இல் இருந்து கொண்டு தமிழை பற்றி பேசுவது மிக காமடியாக உள்ளது.////

தமிழ் நாட்டுல இருந்தா தான் தமிழ் பேசனுமா

ராசராசசோழன் said...

நல்ல தொகுப்பு...சில உளறல்களையும் பொறுத்து கொள்ள வேண்டும்....

யதிராஜ சம்பத் குமார் said...

யதிராஜ் வழக்கம்போல் RSS & பஜ்ரங்தள் பரப்பும் பொய்யை, இங்கே சந்தில் நுழைக்கிறார். இந்திய அரசியல் சட்டத்தின்படி, ஒருவர் இந்தியக்குடியுரிமைப் பெற்றவுடன் அவர்களின் ஏனையக்குடியுரிமைகள் அனைத்தையும் இழந்துவிடுவார்கள். அதன் அடிப்படையில், 1983 ஆண்டு அவர் இத்தாலியக்குடியுரிமையை இழந்துவிட்டார். இதோபோல்தான் அமெரிக்காவிலும் சில மறைகழண்டவர்கள் ஒபாமா அமெரிக்கக் குடியுரிமை இல்லாதவர்கள் என பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.//

யார் பிதற்றுகிறார்கள் என்று தெரியவில்லை இங்கு. இத்தாலியக் குடியுரிமைச் சட்டத்தின்படி ஒரு இத்தாலியக் குடிமகன்/மகள் வேறு எந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்றாலும், இத்தாலியக் குடியுரிமையை முறைப்படி ரினெளன்ஸ் செய்யாதவரை அவர் இத்தாலியக் குடிமக/மகளாகவே கருதப்படுவார்!! சோனியா இன்றுவரை தனது இத்தாலியக் குடியுரிமையை ரினெளன்ஸ் செய்யவில்லை. இத்தகைய சட்டச்சிக்கலால்தான் அவர் பிரதமராவது மறுக்கப்பட்டது.

ரோமிங் ராமன் said...

//இத்தகைய சட்டச்சிக்கலால்தான் அவர் பிரதமராவது மறுக்கப்பட்டது.//
சோனியா தனக்கு பெரிய எண்ணிக்கையில் எம் பி க்கள் ஆதரவு இருப்பதாக(பொய் சொல்லி!!)., பிரதமர் பதவிக்காக திரு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பேசியது என்ன என்பது இன்னமும் கூட சிதம்பர ரகசியமாக உள்ளது எல்லாருக்கும் தெரிந்ததுதானே!!.. கவனிக்க .. சிலரைக் குறிப்பிடுகையில் திரு என்னும் அடைமொழி இயல்பாகவே வருகிறது பாருங்கள்!!

Kumar said...

Sania Mirsa enda natu citizen?

usenet8988 said...

// இத்தாலியக் குடியுரிமைச் சட்டத்தின்படி ஒரு இத்தாலியக் குடிமகன்/மகள் வேறு எந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்றாலும், இத்தாலியக் குடியுரிமையை முறைப்படி ரினெளன்ஸ் செய்யாதவரை அவர் இத்தாலியக் குடிமக/மகளாகவே கருதப்படுவார்!! சோனியா இன்றுவரை தனது இத்தாலியக் குடியுரிமையை ரினெளன்ஸ் செய்யவில்லை.//

யதிராஜுக்கு எதுவும் எளிதில் புரியாது. சரி விளக்குகிறேன்.

1. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, ஒருவர் இந்தியக்குடியுரிமையைப் பெற்ற உடனே, அவரின் வேறு நாட்டு குடியுரிமைகள் செல்லாததாகிவிடும். அதற்குப்பிறகு அவர் வேற்றுநாட்டு குடியுரிமையைப் பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றமாகும். ஆகவே 1983ல் சோனியா இந்தியக்குடியுரிமையைப்பெற்ற உடனே, அவருடைய இத்தாலியக் குடியுரிமை செல்லாததாகிவிட்டது. அதை அவர் முறைப்படி ரினௌன்ஸ் செய்யவேண்டிய அவசியமேயில்லை. (அவர் 1983ல் இத்தாலிய பாஸ்போர்ட்டை இத்தாலிய தூதரகத்தில் சமர்ப்பித்து, ரினௌன்ஸ் செய்துவிட்டதாக சொல்கிறார். அப்படி செய்யவில்லை என்று நம்பினாலும், மேலே சொன்ன சட்டப்படி பாதகமில்லை)

இதற்குமேலும், சந்தேகம் வந்தால், இத்தாலியின் அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம்.

2. இத்தாலியின் அரசியல் சட்டமும் 1992 வரை ஒன்றுக்கு மேல் குடியுரிமை வைத்திருப்பதை அனுமதிக்கவில்லை. சோனியா 1983ல் இந்தியக்குடியுரிமையைப் பெற்றதால், இத்தாலிய குடியுரிமைச் சட்டத்தின்படி அவர் அந்நாட்டின் குடியுரிமையை இழக்கிறார். அவர் ரினௌன்ஸ் செய்யவேண்டிய அவசியமேயில்லை. கீழே உள்ள பக்கம் 1992க்கு பிறகு உள்ள மாற்றப்பட்ட சட்டமாகும். அதன்படி, ஒருவர் ரினௌன்ஸ் செய்யவேண்டும். இது சோனியாவுக்கு பொருந்தாது.
http://www.trentininelmondo.it/cittadinanza/come_si_perde_en.asp

//இத்தகைய சட்டச்சிக்கலால்தான் அவர் பிரதமராவது மறுக்கப்பட்டது.//

ம்ம்..another myth. யாரால் மறுக்கப்பட்டது? ஜனாதிபதி ஒருவர்தான் மறுக்க முடியும். அவர் மறுத்தற்கான ஆதாரம் என்ன? ஒன்றுமில்லை. வெறும் ஊகம்களும், கிசுகிசுக்களும்தான்.

Anonymous said...

விஜய் வீரப்பன் சுவாமிநாதன்.

ஒரு வருடம் மூன்று மாதங்க்ளாக மன நோயை அப்படியே வைத்திருக்கக்கூடாது. உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவும். அதிலும் ஜாக்கிரதை. சில மெண்டல்களே மன நல மருத்துவராகவும் அலைந்து கொண்டிருக்கின்றன. எச்சரிக்கை தேவை.

Anonymous said...

டியூயல் சிட்டிசன்ஷிப் என்கிறார்களே, அது என்ன?

mayakunar said...

ஆனந்த் அக்மார்க் தமிழன் . இந்திய குடிமகன் . சந்தேகம் வேண்டாம் . அடிக்கடி ஸ்பெயின் செல்ல வேண்டி உள்ளதால் அங்கே வீடு வாங்கி தங்கி உள்ளார் .இது தெரியாத அறிவிலிகள் இந்த குழப்பதை யுண்டாக்கி உள்ளனர் .பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் , இந்தியர்களே .அது போல்தான் இதுவும் . ஒரு நாட்டில் தற்காலிகமாக தங்கி இருப்பது வேறு , குடிஉரிமை பெறுவது வேறு .
கோபாலன்

Haripandi Sivagurunathan said...

உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல் ... இந்தியாவிற்க்க இந்தியக் கோடி ஏந்தி பங்கேற்கும் ஆனந்த்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை ... இவ்வளவு நாட்களும் இல்லாத திருநாளாக இப்பொழுது என்ன திடீர் சந்தேகம், ஆனந்த் இந்தியரா இல்லையா என்று .. மேலும் அறிய http://haripandi.blogspot.com/2010/08/blog-post_26.html

Anonymous said...

yathiraj sir :

mr.usenet1888 sonnathurku reply pannungalen.mathatellaam vaai kilia pesiringale.

mr.roaming raman sonna madhiri thaanave indha mr. thiru ellaam thaanave varudhu. oru silaruku yeno adhellam vara maatendhu. madam sonia madhiri ethana peraala vitu kuduka mudiyum..

Mukkodan said...

Please read about the life of Chess players before commenting on why he permanently lives in Spain.

I can't believe this can happen to a Indian, especially for Vishy.

Venkat said...

பாவம்! சோனியா காந்தி இந்தியர்!! அனால் இந்தியரா என்று இவர்களுக்கு சந்தேகம்!! இவர்களை சொல்லி குற்றம் இல்லை. இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களை சொல்லவேண்டும்.

Anonymous said...

யதிராஜ்

உங்கள் தகவல்கள் தவறானவை. ஆனந்த் இந்திய குடியுரிமை மட்டுமே பெற்றவர் மற்றபடி ஸ்பெயினில் விசிட்டர் விசாவில் வாழ்பவர் மட்டுமே. அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிக் கொண்டு வாழும் இந்தியர்கள் போலவே.

ஆனந்தை அவமானப் படுத்தியதற்கு ஒரே காரணம் அவர் மோடி அவர்களுடன் செஸ் விளையாடிய குற்றம்தான். ஆம் சோனியாவின் அருள் பார்வையைப் பெற இந்தக் கேவலமான இழிவான காரியத்தைச் செய்திருக்கிறான் கபில் சிபல். எம் ஜி ஆருக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர் கானு என்ற ஜப்பானியருக்கு தமிழ் நாட்டின் அத்தனை பல்கலைக் கழகங்களிலும் டாக்டர் பட்டம் கொடுத்துத் தள்ளினார்கள். அப்பொழுது டாக்டர் கானு ஜப்பானிய பூர்வீகம் கொண்ட அமெரிக்கர் என்பது இவர்களுக்குத் தெரியாதா என்ன? முதலில் ஆனந்த் போன்ற மேதைகள் இது போன்ற டுபாக்கூர் டாக்டர் பட்டங்களை மறுக்க வேண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. உதயகுமார் என்ற மாணவனின் பிணத்தின் மீது டாக்டர் பட்டம் வாங்கிய கேவலமான பிறவிகள் வாழும் இந்த நாட்டில் டாக்டர் பட்டத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? தவறு ஆனந்தின் மீதுதானே அன்றி சிபல் போன்ற சோனியா அடிவருடிகள் மீது இல்லை. தகுதியில்லாத ஒரு பட்டத்தை ஆனந்த் ஏற்றுக் கொள்ள ஒத்துக் கொண்டதே தவறு. இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதென்பது குப்பைத் தொட்டியில் கிடக்கும் எச்சில் இலையைப் பெறுவதற்குச் சமானமானது. ஆகவே இனியொரு முறை இந்தத் தவறைச் செய்யாதீர்கள் ஆனந்த் அவர்களே