பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 19, 2010

பிட் நியூஸ்


சில பிட் நியூஸ் :-)

அம்மாவைப் பார்க்க திருச்சியில் திரண்ட கூட்டம் 'அவதார்' படத்தின் கிராஃபிக்ஸ்
அல்ல! இந்த ஒரு வரிக்காகவே முரசொலி நம்மை முழுப் பக்கத்துக்குத் திட்டும். பார்ப்பன கேமராவோ, சூத்திர கேமராவோ மலைக் கோட்டை நகரில் கூடிய கூட்டத்தைப் பார்த்து மலைத்தே போயிருக்கும். - அம்மா அலை ஆரம்பம் - விகடன் கட்டுரையின் முதல் பகுதி

I use Sun Direct at home. On Independence day, Kalaignar TV broadcased the movie Tamil Padam. Just to avoid the viewers watching the long running movie, they blocked the Kalaignar TV from 9:30am to 1:00pm. I was getting signal scrambled message.
Later when i turned the channel at around the channel was made available at 1:15pm.
Exceptional marketing strategy by Sun TV. - இரண்டு நாளைக்கு முன் எனக்கு ஒருவர் அனுப்பிய மெயில்

கே : ரெட்டி சகோதரர்களைக் காப்பாற்ற, கர்நாடக முதல்வர் ஏன் இத்தனை அக்கறை செலுத்துகிறார்? இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் என்பது மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமைக்குத் தெரியாதா?

ப : ரெட்டி சகோதரர்களிடம் எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள் என்பது எடியூரப்பாவின் அச்சம். ஆனால், ரெட்டிகள் சிக்கினால், அவர் அதற்காக வருந்துவார் என்று தோன்றவில்லை. அகில இந்திய அளவில், மேலிடத் தலைவர்களே ரெட்டிகள் மீது அக்கறை காட்டுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. - துக்ளகில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி :- விடுதலை நாள் விழாவினையொட்டி, முதலமைச்சர் விவசாயிகளுக்கு இலவசமாக பம்ப்செட் வழங்க முன்வந்து அறிவித்த அறிவிப்பினை "தினமலர்" நாளேடு "தேர்தல் ஆண்டில் விவசாயிகளுக்கு சலுகை" என்று உள்நோக்கத்தோடு தலைப்பிட்டு குரோதத்தோடு வெளியிட்டிருக்கிறதே?

பதில் :- தேர்தல் முடிவுற்று, பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நாளில் முதலமைச்சர் கலைஞர் விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடனை ரத்து செய்து அறிவித்தாரே, அது தேர்தல் ஆண்டு என்பதாலா? தேர்தல் ஆண்டு என்பதால் தான் கழக ஆட்சியில் இந்த நான்காண்டு கால மாக அடுக்கடுக்காக சலுகைகள் செய்யப் பட்டதா? "தினமலர்" நாளேட்டுக்கு ஏன் இந்த வக்கிரபுத்தி? அண்மையில் நடை பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கூட உங்கள் பத்திரிகையின் ஆசிரியரை அழைத்து, ஆய்வுக் கட்டுரை படிக்கச் செய்ய ஏற்பாடு செய்யும்படி முதலமைச்சர் கலைஞரே அதிகாரிகளிடம் தெரிவித்தாராமே! ஜெயா ஊருக்கு ஊரு திடீரென்று புறப்பட்டுச் சென்று கட்டுரை படிக்கிறாரே, அது தேர்தல் ஆண்டு என்பதற்காக நடைபெறும் செயல் என்று எழுத ஏன் "தினமலர்" முன் வரவில்லை? - முரசொலியில் தினமலருக்கு ஏன் இந்த வக்கிரபுத்தி? என்ற தலைப்பில்

ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத் தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு? என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம்.

உடனே இறைவன் சொன்னாராம் "நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும், நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல் தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து விடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால் தான் உன்னை எல்லாரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள். இந்தக் கதை சொல்கிற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்து விடும். ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதிந்து வைத்துக் கொள்ளும். - இப்தார் விருந்தில் ஜெ., சொன்ன குட்டிக்கதை

பல்வேறு இடங்களில் பிட் அடித்த நியூஸ் :-)


22 Comments:

Anonymous said...

துக்ளக் கார்டூன் அதகளம்.

அடுத்த ஆட்சி அம்மா ஆட்சிதான்.

கேப்டன் துணை முதல்வர்..

மு.கவுக்கும் & தளபதி ஸ்டாலினுக்கும் அல்வா ரெடி.

கானகம் said...

கார்ட்டூந்தான் கலக்கல்.. இனிமேல் தமிழர்கள் ”சோற்றாலடித்த பிண்டங்கள்” என்பதை கருணா கண்டுபிடிப்பார்.

:-)

ரோமிங் ராமன் said...

இது சரியில்லை இ.வ. !! மேலே துக்ளக் பெயரைத்தான் எடுத்திட்டீங்க_ குறைந்தபட்சம் "நன்றி:துக்ளக்" என்றாவது போட வேண்டாமா?? அய்யா இட்லி வடைசாமி, பார்ப்பன என்று வேண்டுமானால் திட்டலாம்.,இந்த தேசத்தில் அடுத்த வார்த்தை சொன்னாலே சர்ச்சைதான்..ஏனய்யா வம்பை விலை கொடுத்து வாங்குகிறீர்??

உண்மையான இஸ்லாமியன் said...

திருச்சியில் திமுக கோஷ்டிப் பூசல்-நேரு, சிவா ஆதரவாளர்கள் அடிதடி-மண்டை உடைப்பு

http://thatstamil.oneindia.in/news/2010/08/19/trichy-nehru-shiva-clash.html

யதிராஜ சம்பத் குமார் said...

செப்டம்பர் 8 ஆம் தேதி திருச்சியில் கருணாநிதி பங்குகொள்ளும் திமுக செயல்வீரர்கள் மாநாடாம். ஜெ'க்கு திருச்சியில் கூடிய கூட்டத்தைக் கண்ட பின்பு பம்ப்செட் அறிவிப்பு வேறு. பம்ப்செட் கொடுத்து என்ன செய்வது?? அதை இயக்குவதற்கு விவசாயிகளுக்கு 3 ஃபேஸ் மின்சாரம் கிடைப்பதில்லையே? இலவச தொலைக்காட்சி!! ஆனால் கேபிள் கனெக்ஷன் இல்லை. இலவச பம்ப்செட்!! ஆனால் பணம் கொடுத்தாலும் மின்சாரம் இல்லை. பலே!!

snkm said...

அருமை! நன்றி! சுடச்சுட நன்று!

Anonymous said...

Good Joke

People will come whoever gives biriyani. Parties which are desperate try harder.

so desperate idly vadai and Thuglak.

duraisuku said...

Idlyvadai enna thaan thalai keezha ninnu Cho koottaniyil pathivu pottalum ,adutha aatchi enga kalaignar ayya aatchi than. unga JJ chayam seekirum veluthu pogum.oothi koduthavalum vaangi kudichavanum kootu senthalum engalai yaarum asaikka mudiyaathu.

kggouthaman said...

பிட் அடிச்சு எழுதி இருந்தாலும், பாஸ் மார்க் போட்டுவிட்டேன்.

R. Jagannathan said...

கலைஞருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதென்றால், எனக்கு பயம் அதிகமாகிவிட்டது. என்ன செய்வாரோ, ஏது செய்வாரோ என்று. இனிமேல் அடிதடி/வன்முறை, பார்ப்பன த்வேஷம், வேண்டியவர்களுக்கு தானம், அரசுக் கடன் எல்லாம் அதிகமாகும். ஜெயலலிதா வந்தாலும் 4 வருஷத்துக்கு கஜானா காலி என்றே பேசிக்கொண்டிருப்பார்.

விகடன் போனால் என்ன, குமுதம் இருக்கிறதே ஐயாவுக்கு.

என்ன புலம்பி என்ன, தமிழன் தலையில் எழுதியிருப்பதுதான் நடக்கும். - ஜெகன்னாதன்

Anonymous said...

What "Amma Alai"?...May be , but don't forget , during 2006 election also people believed it was Amma Alai. But all of a sudden people were carried away by "ilavsa TV" Tsunami. So, the so called Amma Alai is only an illusion, until it reaches the shore.

Anonymous said...

//oothi koduthavalum vaangi kudichavanum kootu senthalum engalai yaarum asaikka mudiyaathu.//

velakku pudichavan theramai avangalukku kedayathunnu solreengalo?

Anonymous said...

http://paraneetharan-myweb.blogspot.com/2010/08/blog-post_19.html

இந்தக் காமெடியைப் பாருங்க!

Anonymous said...

so idlyvadai is the official admk blog from now onwards :).u have abandoned capitan vijayakanth in favor of jj :)

Anonymous said...

romba comediya irukku

பழையசோறு said...

அத விடுங்க. இந்த வாரம் விகடன் தலயங்கம் 'குடி'யரசு பாத்திங்களா? செம ஹாட்..

பழையசோறு said...

இந்த வாரம் விகடன் தலயங்கம் 'குடி'யரசு செம ஹாட்.....

R.Gopi said...

இட்லிவடையின் இந்த பிட்டு
இப்போ எங்கெங்கும் சூப்பர் ஹிட்டு

என்னை கருணாநிதி என்று பெயரிட்டு அழைக்கிறார் ஜெயலலிதா - கருணா புலம்பல்....

இட்ட பெயரை சொல்லி அழைத்தால் மூக்கால் அழும் மு.க.வை இனி புரட்சி தலைவர் சொன்னது போல் ”திருக்குவளை தீய சக்தி” என்ற புதிய பெயரிட்டு அழைக்கிறேன்... ஜெ சொன்னது...

Anonymous said...

/// பம்ப்செட் அறிவிப்பு வேறு. பம்ப்செட் கொடுத்து என்ன செய்வது?? அதை இயக்குவதற்கு விவசாயிகளுக்கு 3 ஃபேஸ் மின்சாரம் கிடைப்பதில்லையே? ////


தமிழ் நாட்டில் நிலவும் மின்சார பற்ற குறைக்கு காரணம். ஜெயா, ராமதாஸ், இடதுசாரிகள் உள்பட அனைத்து மீடியாகளுமே காரணம்.எந்த ஒரு பொருளும் உற்பத்தி விலையை காட்டிலும் குறைவாக விற்றால் அந்த பொருள் தொடர்ந்து தர முடியாது. காரணம் அதை யாரும் உற்பத்தி செய்ய மாட்டார்கள். புதிய தொழில் சாலைகள் வராது.
மின்சார கட்டணம், பெட்ரோலிய பொருட்கள், பேருந்துகள் கட்டணம் ரயில் கட்டணம் முதலியன கட்டுபடியாகும் விலையில் நிர்ணயம் செய்ய பட வில்லை. மக்களை காப்பாற்றுவதாக சொல்லி எதிர் ( எதிரி ) கட்சிகளின் ( எல்லா பொருளாதாரமும் தெரிந்த ) நயவஞ்சக போராட்டத்தின் காரணமாக நியாயமான லாபம் வரும்படி விலைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை.
மக்களை காப்பாற்றுவதாக சொல்லி எதிர் ( எதிரி ) கட்சிகளின் ( எல்லா பொருளாதாரமும் தெரிந்த ) நயவஞ்சக போராட்டத்தின் காரணமாக நியாயமான லாபம் வரும்படி விலைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதனால் தான் இப்போது மின்சார தொழில் சாலை கள் தொடங்க யாரும் முன் வரவில்லை. அரசாங்கமும் அரசு நிறுவனங்களும் கடனே என்று தொடங்கும்/ நடத்தும் மின் நிலையங்களால் இப்போது மின்சாரம் கிடைக்கிறது. எனவே இப்போது நலவும் மின்சார தட்டுப்பாடு முழுவதற்கும் காரணம் நியாயமான மின்கட்டணம் இல்லாததுதான். அதற்கு மூல காரணம் ஜெயா, ராமதாஸ், இடதுசாரிகள் உள்பட அனைத்து(மக்கள் விரோத)
கட்சிகளுமே காரணம்.தஞ்சை மாவட்ட விவசாயிகள் அதிக மின் கட்டணம் தர தயாராக உள்ளனர். அவர்கள் பிழைப்பில் மண்ணை போடுபவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். தினசரி மக்களை சந்திக்காத தேர்தல் நேரத்தில் கோட நாட்டிலிருந்து (சொகுசு ) தேர்தல் நேரத்தில் புஸ்வானம் விடும் ஜெயாவையும் அவரை உசுப்பி விடும் மீடியாக்களையும் மக்கள்
புரிந்து கொண்டுள்ளனர்

ஜால்ரா said...

ஆமாம் ஆமாம் - அனானி மின் தட்டுப்பாடுக்குக் காரணம் எதிர்க்கட்சிகள்தான். ஆளும் கட்சியினராவது ஆங்காங்கே மின் உற்பத்தித் தொழிற்சாலைகள் தொடங்கி, ஆளுக்கு ஒரு ஐந்து மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து, அதை தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு அனுப்பிவைத்து, அவர்களிடமிருந்து அதிக லாபம் பெற்றுக் கொள்ளவேண்டும்.

கொஸ்டின் கோவாலு said...

Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....

இதுக்கு பதிலா "ரத்தத்தின் ரத்தங்களுக்கு மட்டும்னு" போட்டுடீங்கனா எங்கள மாதிரி வலை மேயும் நடுநிலையாளர்களுக்கு தெறிச்சு ஓடறதுக்கு வசதியா இருக்குமில்லே?

Anonymous said...

ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 100 ரூபாய் கட்டுகள் 21ஐ உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினார்.

உண்டியலில் காணிக்கையாக, 21 நூறு ரூபாய் கட்டுடன், 551 ரூபாயை தனியாக காணிக்கையாகச் செலுத்தினார்.