பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 13, 2010

பெட்டி வாங்கிய செய்தியும், பெட்டி செய்தியும் !

இரண்டு செய்தியும் வைகோ பற்றி

பெட்டி வாங்கிய செய்தி
தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பம் அதிகம் - அ.தி.மு.க. கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் வைகோ.....

......2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இருந்த வைகோ, திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டுக்கு வருவதாக வாக்களித்துவிட்டு, மாநாட்டுக்கு முதல் நாளன்று போயஸ் தோட்டத்துக்குப் போய் ஜெயலலிதாவிடம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து சரணாகதி அடைந்தார்.

அப்போது அவர் நாற்பது கோடி ரூபாய்க்கு விலை போய்விட்டதாக பல்வேறு பத்திரிகை களும் கிசுகிசுக்களை எழுதின. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இப்போதும் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில் இன்னும் எத்தனை எத்தனை கோடிகள் பேசுமோ? அல்லது வைகோவை பேசவைக்குமோ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுமானால் அது எப்படித் தவறாகும்?

நன்றி: முரசொலி


பெட்டி செய்தி:

கடந்த 7-ம் தேதி நடந்த சம்பவம். ஈரோடு புத்தகக் காட்சியில் வைகோ ஒன்றே முக்கால் மணி நேரம் ஆற்றிய உரையில் ... எழுத்தின் வரலாறு, எழுத்துலக மாமேதைகள் பற்றிய குறிப்புகள், அவர்களது எழுத்துகளால் விளைந்த புரட்சிகள் என வரிசையாக வெளிப்பட்டது. தனது உரையில் 168 பெயர்களைச் அடுக்கிக்கொண்டு வ்ந்தார் அப்போது 'பொது உடைமை எழுத்தாளர்கள், திராவிட இயக்க எழுத்தாளர்கள் வரிசையில், சங்கத் தமிழையும், 'பொன்னர் சங்கரையும்' தந்தார் கலைஞர் கருணாநிதி' என்று சொல்லியுள்ளார்.

கலைஞர் பெயரையும் அவருக்கு இலக்கிய அந்தஸ்தையும் கொடுத்ததற்கு வைகோ ஏதாவது பெட்டி வாங்கியிருப்பாரோ ? கோடிகளில் இல்லை என்றாலும் சில லட்சங்கள் வாகியிருப்பார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுமானால் அது எப்படித் தவறாகும்?

18 Comments:

மானஸ்தன் said...

இந்த முரசொலி விளம்பரங்கள் போட உமக்குப் பெட்டி குடுத்தார்களா?
:>

Kannan.S said...

//சந்தேகம் எல்லோருக்கும் எழுமானால் அது எப்படித் தவறாகும்?//

-அதே தான்...அதே தான்...

Anonymous said...

தி.மு.க வின் சார்பாக பதினெட்டு ஆண்டுகள் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு அனுப்பினார்களே, அந்த நன்றி விசுவாசத்தில் சொல்லியிருக்கலாம் அல்லவா?

ரோமிங் ராமன் said...

வைகோ எது சொன்னாலும் ஏன் உள்ளர்த்தம் தேட வேண்டும்?? அவர் சொன்ன ஒரே தவறான விஷயம் கருணாநிதி இலக்கியவாதி என்பது மட்டுமே! நான் கூட வாய்ப்பு இருக்குமானால் அதிகார துஷ்ப்ரயோகதினால் என்னை தமிழ் இலக்கியவாதி என்று மற்றவரை ஏமாற்றிவிட முடியும்.அவ்வாறு ஏமாற்ற மிகக்குறைந்த தமிழ் அறிவே போதும்!!
வர வர தமிழில் புதிய (செம்மொழி )கலைச் சொற்களும், சொற்களுக்கு புதிய பொருட்களும் வரத்தொடங்கி விட்டன! உ.ம் : பெட்டி= பணம் !! அவ்வாறே., அரசியல்=சாக்கடை, கூட்டணி= கொள்கை அடமானம்,எதிர்ப்பு= பூணூல்/தர்ப்பை, ஆதரவு=
தாழ்த்தப்பட்டவர் .மேலும் தொடர்க..

Kovilpatti Anandhan said...

ennamo nee pakkathil irunthu petti vangi kodutha madiri pesura...

Ethir katchi thalaivariyum madhikka therintha thalaivan than Vaiko....

Pls dont degrade a good politician... a good man

Anonymous said...

பெட்டி வாங்கறது தானே? இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.

R. Jagannathan said...

முரசொலி செய்தி வைகோவிடம் கேட்கிறது - ‘ உங்கள் தற்போதைய விலை என்ன? நாங்கள் விலைக்கு வாங்க தயார்! ‘ - ஜெ.

Yuva said...

முரசொலியை பொருத்தவரை முன்னது வைகோ-வின் "பெறும்தன்மை" பின்னது "பெருந்தன்மை" யாக இருக்கலாம்.

sowri said...

Can you upload the speech of Vaiko at thirupur book fair. It seems to be one of the best without any political reference in recent times.

Anonymous said...

IT IS AN ABSOLUTELY UNDESIRABLE COMMENT FULL OF MISCHIEF.ONE MAY EVEN THINK THAT IDVADAI IS TRYING TO CREATE A RIFT BETWEEN AIADMK & MDMK.ONE HAS TO APPRECIATE THE MAGNANIMITY OF VAIKO.ONE MAY DISAGREE WITH THE LITERARY VALUE OF KARUNANIDHIS WRITINGS.BUT VAIKO HAS TOLD HIS VIEWS.TO DEGRADE HIM ON THIS ACCOUNT AS PETTI VAGITTAR ETC MEANS THAT IDLY VADAI IS ALSO FOLLOWING THE PATH OF THE DRAVIDIAN PARTIES.IT IS NOT UPTO IDLY VADAIS STANDARDS TO STOOP TO SUCH LEVELS.

kggouthaman said...

ஜெ முதல்வராக இருந்த காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகைக்கு (குமுதம்?) அளித்த பேட்டியில், கலைஞரிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்ற கேள்விக்கு, 'கலைஞரின் தமிழ்' என்று கூறினார் என்று படித்த ஞாபகம்.
அதனால நீங்க, வைக்கோ கூறியதை வைத்துக் கொண்டு சிண்டு முடிய முயற்சிக்கவேண்டாம்!

அப்பாதுரை said...

கலைஞரின் இலக்கியப் பங்கை அறியாதவர்கள் அறியாதவர்கள்.

ஜியார் said...

///ஜெ முதல்வராக இருந்த காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகைக்கு (குமுதம்?) அளித்த பேட்டியில், கலைஞரிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்ற கேள்விக்கு, 'கலைஞரின் தமிழ்' என்று கூறினார் என்று படித்த ஞாபகம்.///

இல்லையே அவரது குடும்ப பாசம் என்றுதானே சொன்னார்.

பொட்டிப் பாம்பு said...

எல்லோரும் மறந்து போய் விட்ட வை கோ வை ஞாபகப்படுத்தும் முயற்சிக்கு அவரிடம் எவ்வளவு பெட்டி வாங்கினீர்?

Anonymous said...

last 3 lines of your post shows that the way Media people in tamil nadu thinks.Thats a non-political function where Vaiko appreciates MK for his literary skills.Why do u connect this to the Politics.

பாலா said...
This comment has been removed by a blog administrator.
moulefrite said...

Roming Raman & Bala's comments ,,
ரிப்பீட்டு

Anonymous said...

பெட்டிகள் என்றதும் இப்பொது நினைவுக்கு வருவது இந்த துணுக்கு:

The best anagram ever !!!!!!!!!!!!!! Try and beat it.....

SURESH KALMADI = SIR U MADE LAKHS

(Ofcourse the "lakhs" is in $ and not in Rs`)