பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 14, 2010

மீண்டும் ஓ !
தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான சமூக, அரசியல், பத்திரிகைச் சூழல் என் ‘ஓ’பக்கங்கள் பகுதிக்கு இதழியல் வரலாற்றில் இடம் தேடிக் கொடுத்திருக்கிறது. ஓர் எழுத்தாளரின் ‘பத்தி’ தொடர்ந்து வெவ்வேறு பத்திரிகைகளில் வருடக்கணக்காக வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த ஏழாண்டுகளில் இரண்டு பத்திரிகைகளில் இடம் மாறி இப்போது மூன்றாவதாக ‘கல்கி’ இதழுக்கு வந்திருக்கிறது. காரணங்கள் விமர்சனங்களைச் சகிக்காத அரசியல் சூழலும், கருத்துச் சுதந்திரத்தைவிட வணிகத்தை முதன்மைப்படுத்துகிற பத்திரிகைச் சூழலும் தான்.

கல்கி இதழில் நான் எழுதும் முதல் தொடர் பகுதி இதுவேயாகும். என்னுடைய இரண்டு சிறுகதைகள் எழுபதுகளில் கல்கியில் வெளிவந்திருக்கின்றன. அதில் ஒரு கதை ‘டெலிவிஷன்’. நேரடி ஒளிபரப்பில் பங்கேற்கும் ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞன், யாரும் எதிர்பாராதபோது லஞ்சம் ஊழல் பற்றிப் பகிரங்கமாகப் பேசி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பற்றிய கதை. இது வெளியானதும் அப்போது தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். வெவ்வேறு தேர்தல் சமயங்களில் சிறப்பு நிருபராக கல்கி சார்பில் சென்று தொகுதி நிலவரங்கள் பற்றி சில கட்டுரைகள் எழுதி யிருக்கிறேன். 1978-இல் நாங்கள் பரீக்‌ஷா நாடகக் குழு தொடங்கியபோது. முதல் நாடகம் பற்றி எழுதிய ஒரே வார இதழ் ‘கல்கி’தான்.

லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டும்; சக மனிதர்களிடம் அன்பும் சமத்துவமும் பேணும் வாழ்க்கை நெறி குழந்தையிலிருந்தே ஊட்டு விக்கப்படவேண்டும்; ஆபாசமும் வக்கிரமும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தாத கலை இலக்கியச் சூழல் வேண்டும்... என்ற பார்வைகள்தான் நானும் ‘கல்கி’ இதழும் சந்திக்கும் புள்ளிகள். என்னை ‘ஓ’ போடவைக்கும் ஆச்சரியமான, அதிர்ச்சியான, அவலமான, அக்கறைக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே வாசகர்களுடன் பகிர்வதே இந்தப் பகுதியின் நோக்கம். பல விஷயங்களைப் பற்றி நம் கருத்து உடன்படலாம்; மாறுபடலாம். ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கும் சிந்திப் பதற்குமான ஒரு கருத்துச் சுதந்திரச் சூழல் தேவை என்பதே நம்மை இணைக்கும் ஒற்றைப் பார்வை.


பொதுவாக நடிகர்களுக்குக் கூச்சம் இருக்கக்கூடாது என்பது நடிப்பின் தேவைகளில் ஒன்று. எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க அப்போதுதான் முடியும். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, வசனகர்த்தாவாக நாடகத்திலும்

சினிமாவிலும் பெயர் வாங்கியவர்; நடிகராக அல்ல. ஆரம்ப நாட்களில் ஒரு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்குக் கூச்சம் விட்டுப் போயிருக்க வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் எதைப் பற்றியும் எந்தக் கூச்சமும் இல்லாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் அவர் ஒருவர்தான்.

அரசு திட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வ மாக இருந்ததை, எழுபதுகளில் தாம் ஆட்சிக்கு வந்தபிறகு மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

இதற்கு முன்பெல்லாம் அரசு திட்டங்களுக்கு பெரியார், அண்ணா பெயரையோ அஞ்சுகம் அம்மையார் பெயரையோ முத்துவேலர், முத்துலட்சுமி பெயர்களையோ சூட்டிக்கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் தம் பெயரையே சூட்டிக் கொண்டிருக்கிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் மாளிகை என்று பெயர்கள் சூட்டப்படுகின்றன.

அரசாங்கத்தின் ராணி மேரி மகளிர் கல்லூரியில் புதிய கட்டடத்துக்குத் தம் பெயரைச் சூட்டிவிட்டு தானே அதைத் திறந்தும் வைத்திருக்கிறார். ஒப்புக்காக அதைத் திறக்கப் பேராசிரியர் அன்பழகனாரைக் கூட அழைக்கவில்லை. இன்னும் பாக்கியிருப்பது தமக்கான சிலை, தம் உருவப்படம், தம் பெயரில் அருங் காட்சியகம்... இவற்றையும் அவரே திறந்து வைப்பதுதான்.

கலைஞர் பெயர் சூட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கிறது என்று கூட்டணியை ‘வலி’க்கச் செய்யும் ஒரு பேச்சை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதும், அதற்கு கருணாநிதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர் வீட்டு வசதி திட்டம் முழுக்க மாநில நிதியில் நடக்கிறது. மத்திய அரசின் இந்திரா காந்தி திட்டத்துடன் அதை இளங்கோவன் குழப்பிக்கொண்டு விட்டார் என்பதுதான் அறிக்கையின் சாராம்சம். ஆனால் மாநில அரசு நிதியில் நடப்பதால், அதற்கு தம் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்பது பற்றி பதிலே கிடையாது.

இதில் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் கலைஞர் என்பதை தம் பெயர் என்று கலைஞர் கருணாநிதியே நம்பத் தொடங்கிவிட்டார் என்பதுதான். அதனால் தான் ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிட்டுப் பேசுவதைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். ‘என் வயது என்ன, உன் வயது என்ன’ என்றெல்லாம் ஏகவசனம் வேறு. கூடவே ‘நான் வயதில் பெரியவன் என்பதால் உன்னைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும் என்பதால் ஏகவசனத்தில் கூப்பிடும் உரிமை எனக்கு உண்டு’ என்று சமாதானம் வேறு.

ஒருவரை அவர் பெயர் சொல்லி அழைப் பது தவறு என்ற விசித்திரமான பண்பாடு தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மீதி எல்லா கட்சிகளும் தங்கள் தலைவர்களுக்கு அடைமொழி சூட்டும் கலாசாரத்தில் விழுந்திருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் பிரதமரை ‘மிஸ்டர் மன்மோகன் சிங்’ என்றோ மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என்றோ முகத்துக்கு நேரே கூப்பிடுகிறார்கள். இங்கே அப்படிப் பேசினால் உதை விழும். அலுவலகத்துக்கு ஃபோன் செய்து நிருபரைப் பற்றிப் புகார் செய்வார்கள்.

ஜெயலலிதா தம்மைக் கருணாநிதி என்று அழைப்பது பண்பாட்டுக் குறைவு என்று அறிக்கை விடுத்திருக்கும் இதே கருணாநிதி தான், தொடர்ந்து தம் ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க அரசு என்று ஜெயலலிதா பேசினால், அவரை திருமதி ஜெயலலிதா என்று அழைப்பேன் என்று பண்பாடு பொங்கித் ததும்பும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டார். ஜெயலலிதா திருமதியா இல்லையா என்பதற்கும் தி.மு.க. மைனாரிட்டி அரசா இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

உலகத்தில் எந்த நாட்டிலும் இங் குள்ளது போல அரசியல்வாதிகளின் பெயர் சூட்டும் கலாசாரம் இல்லை. மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை விமான நிலை யத்துக்கோ நூலகத்துக்கோ சூட்டும் போதுகூட அவர் இறந்த பிறகே சூட்டுகிறார்கள். சிலைகள் வைப்பதும் அப்படித்தான்.

ஜாதிச் சண்டைகள் வருகின்றன என்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்கள் பெயர்களில் இருந்த தலைவர்கள் பெயர்களையெல்லாம் நீக்கி உத்தரவிட்டவர் கலைஞர் கருணாநிதி. தம் நெஞ்சறிவது பொய்யற்க என்ற கூச்சம் இன்னும் கொஞ்சமேனும் அவருக்கு மீதம் இருக்குமானால், உடனடியாக அரசு திட்டங்கள், கட்டடங்கள் பெயர்களிலிருந்து தம் பெயரை நீக்க அவர் உத்தரவிட முன்வரவேண்டும். இல்லாவிட்டாலும் பின்னாளில் ஆட்சி கைமாறும்போது, இந்தப் பெயர்களெல்லாம் அடுத்த ஆட்சியாளரால் நீக்கப்படும் என்ற உண்மையாவது அவருக்கு உறைக்க வேண்டும்.

இன்னும் நூறு வருடம் கழித்து வரும் தமிழ்க் குழந்தைகள் இப்படித் தம் பெயரை தாமே சூட்டி மகிழ்ந்த தலைவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தயவுசெய்து கற்பனை செய்து பாருங்கள். கூச்சமாக இருக்கும்.
கல்கி, ஞாநிக்கு வாழ்த்துகள்


21 Comments:

Anonymous said...

ஞானியின் ஓ என்ற ஒப்பாரியை கேட்க
யாரும் இல்லாததால் இப்பொழுது கல்கி பகவானிடம் சரணடந்திருக்கிறார் போல.
நல்ல கூட்டணி போங்கோ

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாராவாரம் இது போல் காப்பி பேஸ்ட் செய்து போட்டால் எனக்கு ஒரு பத்து ரூபாய் மிச்சமாகும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இட்லிவடையாரே..

நீங்களே பின்னூட்ட மட்டுறுத்தல் செய்வது சூரியன் தனக்குத்தானே டார்ச் லைட் அடித்துப் பார்த்துக் கொள்வது போல..!

kavirimainthan said...

ஞானி அவர்கள் குமுதத்திலிருந்து
ஏன், எந்த சூழ்நிலை / அழுத்தம்
காரணமாக வெளியேற நேர்ந்தது என்பதைப் பற்றியும் விவரமாக எழுத வேண்டும்.
எந்தெந்த விதத்தில் எழுத்தாளர்கள்
மடக்கப்படுகிறார்கள் என்பதை
எல்லாரும் அறிய வேண்டும்.

- காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com

Jagatheesh Ramakrishnan said...

Arumai.

♥Manny♥ said...

”ஓ” பக்கங்கள் ஓ.கே.

இந்த மனம் கொத்திப் பறவை Status என்ன சார்??

ரிஷபன்Meena said...

மூச்சுப் பயிற்ச்சி உடலுக்கு நல்லது- கலைஞர் உரை

திருச்சியிலும் நல்ல கூட்டமாமே !

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ரோமிங் ராமன் said...

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!! இ வ வுக்கு துக்ளக் வாசனை உள்ள கட்டுரை எங்கு கிடைத்தாலும் உடனே போடுவார்- ஞானிக்கு(ஞானியை ஞானி என்று சொல்லலாமா அல்லது எழுத்தாளர் ஞானி என்றா??) ஒரு கேள்வி- கல்கிக்கு கருணாவின்(ஆங்கில சேனல்கள் இவ்வாறே அழைக்கின்றன) நிர்பந்தங்கள் இல்லையா என்ன?? கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று அழைக்காமல் கலைஞர் கல்லாப் பெட்டி காப்பீட்டு திட்டம் என்றா பகிரங்கமாக சொல்ல முடியும்?? ஞானிக்கு(எனக்கும்) பழ.கருப்பையா வுக்கு வந்த நிலை வாராதிருப்பதாக!!

R.Gopi said...

ஞானியின் “ஓ” பக்கங்கள் வழக்கம் போலவே நல்ல ஜூடு....

எது சொன்னாலும், எப்படி சொன்னாலும் உரைக்காத ஜென்மங்களிடம் என்ன தான் சொல்லி என்ன பயன்!!?

gnani said...

ஏன் குமுதத்தில் ஓ பக்கங்கள் வெளிவருவது நின்றது என்பதைப் பற்றி என் இணைய தளத்தில் என் இரு கடிதங்கள் உள்ளன. அவற்றைப் படித்தால் தெரியும். www.gnani.net

ஞாநி

kggouthaman said...

// காரணங்கள் விமர்சனங்களைச் சகிக்காத அரசியல் சூழலும், கருத்துச் சுதந்திரத்தைவிட வணிகத்தை முதன்மைப்படுத்துகிற பத்திரிகைச் சூழலும் தான்.//
// எல்லாவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கும் சிந்திப் பதற்குமான ஒரு கருத்துச் சுதந்திரச் சூழல் தேவை என்பதே நம்மை இணைக்கும் ஒற்றைப் பார்வை.//
பத்திரிக்கைகளைவிட, பதிவுலகில்தான், கருத்துச் சுதந்திரச் சூழல் அதிகம் நிலவுகின்றது என்று எனக்குத் தோன்றுகிறது.

Anonymous said...

Where are trichy photos?
What Idly.. no hardwork now-a-days?

Bala
Texas

முகமூடி said...

ஜனநாயகம் போற்றும் பல வெளிநாடுகளில் அரசுப்பொருப்பிலிருக்கும் எந்த வெங்காயமாகயிருந்தாலும் சரி சர்ச்சைக்குள்ளானால் எல்லா மீடியாவும் குடையத்தான் செய்யும் இவர்கள் பொருப்பாக பொருமையாக பதில் சொல்லித்தானாக வேண்டும். காந்தி படத்திற்கு பதில் கருணாநிதி படம் போட்டு ருபாய் நோட்டுக்கள் இனி வந்தாலும் ஆச்சரியமில்லை.

Anonymous said...

// இது வெளியானதும் அப்போது தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். //

சுவாரசியமாக உள்ளதே! யாருக்காவது விவரங்கள் தெரியுமா?

Venky said...

As usual, Gnani is thinking the right way and registering his view. But Karunanithi has reached his insanity and his sons would make sure Gnani and Kalki would get condemn posters and even threats. Karunanidhi should be listed under African military rulers...Let us hope there is a relief at the election

யதிராஜ சம்பத் குமார் said...

கருணாநிதியை வெளிப்படையாக விமர்சிக்கும் விஷயத்தில் ஞாநியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஹிந்து உட்பட பல பெரிய பத்திரிக்கைகளே செய்யத் தயங்கும் விஷயத்தை தனியொருவர் செய்வது மெச்சத் தகுந்ததே. ஆற்காட்டார் சொன்னது போல பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டாமா?

ரோமிங் ராமன் said...

சபாஷ் யதி ராஜ அய்யரே ... . //பெரிய பத்திரிக்கைகளே செய்யத் தயங்கும் விஷயத்தை தனியொருவர் செய்வது மெச்சத் தகுந்ததே. // ஆனால் நீர் கையில் தர்பையை வைத்துக்கொண்டு இவ்வாறு விமர்சனம் எழுதுவது இந்த ஏழை கலைஞர் தாழ்த்தப்பட்டவன் என்பதால் தானே??

Krish said...

ரொம்ப நல்ல கட்டுரை. ஞானி, சோ போன்ற தைரியசாலிகள் மட்டுமே உணமையை எழுத முடியும். தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

ஞாநி இன்று கல்யாணப் பத்திரிகை தவிர தமிழ் நாட்டின் அனைத்து பத்திரிகைகளிலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். சாதனைதான். அது சரி எம் எஸ் சுப்புலஷ்மி அம்மாள் இறந்த பொழுது ஞாநி திண்ணையில் எழுதிய வக்கிரமான கட்டுரையைப் படித்த பிறகுமா கல்கிக்காரர்கள் ஞாநியை எழுதக் கூப்பிட்டார்கள்? அல்லது சீதா ரவி அவர்கள் திண்ணை எல்லாம் படிப்பதில்லையா? ஆர்.வெங்கடேஷ் இணையத்தில் வருவதையெல்லாம் படிப்பாரே? போகட்டும்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் பாப்பாத்தி, முண்டச்சி, மொட்டைச்சி என்றெல்லாம் எழுதுகிறார்? அதைக் கேட்க்க ஒரு பெண் கவிஞருக்கும், ஒரு பெண்ணுரிமைவாதிக்கும், ஒரு மனித உரிமை ஆர்வலர்களுக்கும் துப்பு இல்லை, நாதி இல்லை. ஞாநியாவது கேட்கட்டும் பதிலுக்கு அவரை எப்படி வசைபாடுவார்கள் என்று தெரிந்ததுதான். இப்படி தமிழச்சி, சல்மா என்று ஆரம்பித்து ஆயிரக்கணக்கான பெண்ணுரிமைவாதிகள் இருக்கிறார்கள் ஒருவர் கூட இதைக் கண்டிக்கவில்லை என்ற உண்மையையாவது ஞாநி தன் கட்டுரையில் குட்டிக்காட்டட்டும். ஒரு எஸ் ரா ஒரு குட்டி ரேவதியை சினிமாவில் ஏதோ சொல்லி விட்டார் என்று சொன்னதற்காகவே அவரை ஓட ஓட விரட்டிய புறநானூற்று மகளிர் புலவர்களில் ஒருவருக்குக் கூட மொட்டச்சி, பாப்பாத்தி எல்லாம் பெரிதாய் தெரியவில்லை போலும்?

ஞாநி கருணாநிதியிடம் கேட்க்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. அடுத்த முறை ஞாநியைக் கருணாநிதி பாப்பான் என்று அழைக்கும் பொழுது (நிச்சயம் முரசொலியில் ஆயிரம் முறை எழுதுவார்), பதிலுக்கு உன்னை நான் உன் உண்மையான ஜாதிப் பெயரான .... ... என்று சொல்லி அழைத்தால் உனக்கு எப்படி இருக்கும் என்று ஒரே ஒரு கேள்வியை ஞாநி கேட்க்க வேண்டும். எங்கேயோ குஜராத்தில் ஒரு மோடி முஸ்லீம்களை எதிர்த்து ஏதேனும் பேசியதாக ஒரு வதந்தி வந்தாலே பொங்கி எழுந்து மோடியைத் தூக்கில் போடக் கிளம்பி விடும் ஞாநி நிச்சயம் தன் மாநிலத்து முதல்வர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவாகப் பேசுவதைக் கடுமையாகக் கண்டிப்பார் என்றே நினைக்கிறேன். அல்லது முஸ்லீம்களை யாராவது என்னவாவது சொன்னால் மட்டுமே ஞாநிக்கு ரத்தம் செலக்டிவாகக் கொதிக்குமா என்பதும் தெரியவில்லை. சமீபத்தில் கருணாநிதி பாப்பாத்தி என்று அழைத்தது கல்கி ஆசிரியை சீதா ரவி அவர்களை. கல்கி ஒரு கண்யமான பத்திரிகை. இன்று கருணாநிதியைத் துணிவுடன் கேள்வி கேட்க்கும் இரண்டு பத்திரிகைகளில் ஒன்று. ஞாநி தன் முற்போக்கு அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுச் செயல்படுவார் என்று நம்புகிறேன் அப்படிச் செயல் பட்டால் அதற்கான ஆதரவு உண்டு

R.Gopi said...

//ரோமிங் ராமன் said...
சபாஷ் யதி ராஜ அய்யரே ... . //பெரிய பத்திரிக்கைகளே செய்யத் தயங்கும் விஷயத்தை தனியொருவர் செய்வது மெச்சத் தகுந்ததே. // ஆனால் நீர் கையில் தர்பையை வைத்துக்கொண்டு இவ்வாறு விமர்சனம் எழுதுவது இந்த ஏழை கலைஞர் //

********

அய்யா.... ரோமிங் ராமன் அவர்களே..

இந்த ஏழை கலைஞர் என்ற ஒரு வார்த்தை வருகிறதே... யார் அவர்?

Sasi said...

I was trying to read gyaani' s page after checking tbis out. But i was pretty frustrated because, just to read gyaani's post i need to registered with a login, and provide tooooo much detail for registeration. So ended up with this.t ... http://www.driving-under-the-influence.blogspot.com/2010/08/and.html