பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 12, 2010

விகடனுக்கு வந்த தைரியமும், முரசொலிக்கு வந்த கோபமும்

போன வார விகடனில் வந்த 'மீண்டும் காவிரி?' தலையங்கத்தைப் படித்து விட்டு விகடனின் அட்டைப் படத்தை திரும்பவும் பார்த்து அது விகடன் தானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அடுத்து இதற்கு கலைஞர் என்ன பதில் சொல்லுவார் என்று யோசித்தேன். அதற்கும் முரசொலியில் பதில் வந்துவிட்டது.

விகடனில் தலையங்கம் + முரசொலியில் அதற்கு வந்த பதிலும் உங்கள் பார்வைக்கு...

மீண்டும் காவிரி?

மேட்டூர் அணை திறக்குமா? காடு கழனிகளில் பசும்கதிர்கள் தலையாட்டுமா? எதிர்வரும் தை, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா? காவிரியை மையப்படுத்தி மீண்டும் சோதனைச் சுழல் தொடங்கிவிட்டது டெல்டா பகுதிகளில். வருடாவருடம் இதையே அரசியலாக்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு என்று அரசியல்வாதிகள் பொழுதுபோக்குவது வழக்கம்தான். ஆனால், இந்த வருடம் நாடகமாடவும், கண்துடைப்புக் காட்சிகள் அரங்கேற்றவும் அத்தனை சுலபமாக முடியாது.

காரணம், நெல் அறுவடை நடத்த வேண்டிய தை மாதத்தை ஒட்டியே ஓட்டு அறுவடை நடத்தவேண்டிய தேர்தலும் வருகிறது. தண்ணீரை மையப்படுத்தி, 'கடித இலக்கியம்' படைத்துவிட்டுச் சும்மா இருக்கவோ, தண்ணீர் கேட்டுத் தந்தி அடித்துவிட்டு மக்களின் மறதி நோயைப் பயன்படுத்திக்கொள்வதோ இந்த முறை முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மத்திய அரசில் அங்கம் வகிப்பதைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவது மட்டும் இன்றி, அண்டை மாநிலத்துக்கு டெல்லி மூலமாக அழுத்தம் கொடுத்து, நம் மாநிலத்தின் நலனைக் காப்பதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையேல், விவசாயிகள் அனைவரையும் அரசாங்கமே கட்டடக் கூலிகளாக மாற்றி நகரத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, விவசாய நிலங்கள் அனைத்தையும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றி செல்போன்களும், கார்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் தயாரித்துக்கொண்டே இருக்கலாம். வந்தாரை வாழ வைத்துக்கொண்டே இருக்கலாம். தமிழ்நாட்டில் பிறந்தோரைத் தத்தளிக்க வைத்துக்கொண்டே இருக்கலாம்.

'வாடிய பயிரைக் கண்டால்தானே வாட வேண்டும்' என்று, இங்குள்ள 'நவீன வள்ளலார்கள்' பயிர் வைப்பதற்கே வழி இல்லாமல் செய்துவிடக் கூடாது!

வலது கையில் தர்ப்பையும் இடது கையில் துப்பாக்கியும் ஏந்தி டெல்லி செல்வாரோ விகடன் ஆசிரியர்? - முரசொலி கட்டுரை
4.8.2010 தேதியிட்ட ஆனந்த விகடனில் ‘மீண்டும் காவிரி’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.

காவிரிப் பிரச்சினை பற்றி ஆனந்த விகடன், தலையங்கம் எழுதியிருப்பதை கூர்ந்து படித்தால், காவிரி டெல்டா விவசாயிகள் மீது அதற்குள்ள கரிசனத்தை விட, கலைஞர் மீது அதற்குள்ள பாப்பாரத்தனம் கலந்த துவேஷ உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

‘‘மேட்டூர் அணை திறக்குமா? காடு கழனிகளில் பசும் கதிர்கள் தலையாட்டுமா? எதிர் வரும் தை விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்குமா? காவிரியை மையப்படுத்தி மீண்டும் சோதனைச் சுழல் தொடங்கி விட்டது டெல்டா பகுதிகளில்..... வருடா வருடம் இதையே அரசியலாக்கி போராட்டம். ஆர்ப்பாட்டம் டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு, என்று அரசியல் வாதிகள் பொழுது போக்குவது வழக்கம்தான். ஆனால், இந்த வருடம் நாடகமாடவும், கண்துடைப்புக் காட்சிகள் அரங்கேறவும் அத்தனை சுலபமாக முடியாது.

காரணம் நெல் அறுவடை நடத்த வேண்டிய தை மாதத்தை ஒட்டியே ஓட்டு அறுவடை நடத்த வேண்டிய தேர்தலும் வருகிறது.

தண்ணீரை மையப்படுத்தி கடித இலக்கியம் படைத்து விட்டு சும்மா இருக்கவோ தண்ணீர் கேட்டு தந்தி அடித்து விட்டு மக்களின் மறதி நோயை பயன் படுத்திக் கொள்வதோ இந்த முறை முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மத்திய அரசில் அங்கம் வகிப்பதை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துவது மட்டு மின்றி அண்டை மாநிலத்துக்கு அழுத்தம் கொடுத்து நம் மாநிலத்தின் நலனைக் காப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்’’

என்பது சீனுவாச அய்யர் எகத்தாளம் பொங்க ஆனந்த விகடனில் எழுதியிருக்கிற தலையங்கத்தின் ஒரு பகுதி.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்தால் காவிரி நீர் வேண்டும் என்பதற்காகவோ முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்காகவோ ஆந்திரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக் கூடாது என்பதற்காகவோ ஆர்ப்பாட்டம்தான் நடத்த முடியும். போராட்டம்தான் நடத்த முடியும். பிரச்சினை முற்றினால் டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு என்பதெல்லாம் இயல்பாக நடைபெறும் இன்றியமையாத பணிகள்தான்.

அதுபோலவே மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் பிரச்சினையின் முக்கியத்துவம், அவசரம் கருதி டெல்லிக்குக் கடிதம் எழுதத் தான் முடியும். காவிரியில் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று அண்டை மாநிலமான கர்நாடகத்துக்கு வேண்டுகோள் விடத்தான் முடியும்.

இவர்களெல்லாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர்கள் எதிர்க்கட்சியினராக இருந் தாலும் ஆளுங்கட்சியினராக இருந்தாலும் செய்தே தீர வேண்டிய இன்றியமையாக் கடமைகளாகும் - காரியங் களாகும்.

இதைத்தான் தமிழக எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியினரும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுவது பற்றிய பிரச்சினையில் சிறப்பாகச் செய்து கொண்டிருக் கிறார்கள்.

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி ஏன் தண்ணீர் திறந்து விடவில்லை? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப,

கலைஞர் உடனடியாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரினார். கர்நாடக அரசும் தண்ணீர் திறந்து விட ஒப்புக் கொண்டது. அதேசமயம் தென் மேற்கு பருவக்காற்று தொடர்பான மழை இந்த ஆண்டு முன்கூட்டியே பெய்ய ஆரம்பித்ததால் கர்நாடகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களெல்லாம் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டன.

தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று ஒப்புக் கொண்ட அடிப்படையிலும் கபினி, மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததாலும் கர்நாடக அரசு கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது.

அதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமாகி காவிரி டெல்டா விவசாயிகளின் பாசன வசதிக்கு தண்ணீர் திறந்து விடும் நல்ல நிலைமை உருவானது.

அதனாலே ஜூலை 28ம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு விட்டது. எனினும் ஆகஸ்ட் 4ஆம் தேதியிட்ட ஆனந்த விகடனில் அதன் ஆசிரியர், மேட்டூருக்கு தண்ணீரே வரவில்லை என்பது போலவும் கர்நாடக அரசை தண்ணீர் திறந்து விடுங்கள் என்று முதல்வர் கலைஞர் கேட்டுக் கொள்ளவே இல்லை என்பது போலவும் -மீண்டும் காவிரி என்ற தலைப்பிட்டு பிலாக்கனம் பாடியிருக்கிறார். ஒப்பாரி வைத்து ஓவென்று அழுதிருக்கிறார்.

கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், அதனை கடித இலக்கியம் என்று நையாண்டி செய்கிறார் சீனுவாச அய்யர்.சீனுவாச அய்யர் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆர்ப்பாட்டம், போராட்டம், டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு, பிரதமருக் குக் கடிதம் இவைகளையெல்லாம் தவிர்த்து விட்டு புதிதாக என்ன செய்திருப்பார்? முதல்வர் சீனுவாச அய்யர் ஒரு கையில் தர்ப்பைப்புல்லும் இன்னொருகையில் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஏந்திய துப்பாக்கியும் ஏந்திக் கொண்டு டெல்லி சென்று விகடனின் சின்னமான குரங்கு குதித்தது போல பிரதமர் மன்மோகன் சிங்கின் மேஜையின் மீது குதித்து ``பிரதமரே, காவிரியில் தண்ணீர் திறந்துவிட நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால், இதோ பாருங்கள்! வலது கையில் உள்ள தர்ப்பைப்புல்லை வைத்துக் கொண்டு அக்னி ஸுத்தம் சொல்லி உங்களை எரித்து சாம்பலாக்கி விடுவேன் அல்லது காந்தியடி களை கோட்சே எப்படி சுட்டுக் கொன் றானோ அதுபோல இதோ இடது கையில் இருக்கிற இந்தத் துப்பாக்கியால் உங்களை முழங்காலுக்குக் கீழே சுட்டு எச்சரிப்பேன்" என்று கூறிவிடுவாரோ முதல்வர் சீனுவாச அய்யர்? அதுபோல அக்னி ஸுத்தம் சொல்ல தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் தெரியாது, முதல்வருக்கும் தெரியாது. துப்பாக்கியால் சுடுவது ஜனநாயகத்துக்கு உகந்த மரபும் அல்ல. ஆனால், எழுதவே தெரியாத சீனுவாச அய்யர், மத்திய அரசுக்கு கலைஞர் கடிதம் எழுதுவதை கடித இலக்கியம் என்று கேலி செய்கிறார்.


கலைஞர் கடிதம் எழுதினாலே அதுவும் ஒரு இலக்கியமாக - கடித இலக்கியமாக வளர்ந்து விடுகிறது என்றால் கொண்டை உள்ளவள் பூ முடித்துக் கொள்கிறாள். மொட்டைச்சிகள், முண்டைகள் அதைப் பார்த்து வயிற்றிலும் வாயிலும் லபோ திபோ என்று அடித்துக் கொண்டால் அதற்கு யார் என்ன செய்வது? அது ‘அவாள்’ புத்தி!

- நன்றி, முரசொலி

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது என்றும், நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன் என்றும் நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம் - ஆயிரம் மாச்சரியங்கள் தோன்றலாம். எல்லாவற்றையும் விட, தமிழ்ப் பண்பாடு என்று ஒன்று இருக்கிறது, அதைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றும் சில வாரங்களுக்கும் முன் மூன்று மேடைகளில் கலைஞர் பேசினார்.


39 Comments:

அஞ்சா நஞ்சன் said...

அவர் கேவலப்படுத்துவது அண்ணாவையும் பெரியாரையும்

யதிராஜ சம்பத் குமார் said...

எந்த குற்றச்சாட்டிற்கும், விமர்சனத்திற்குமே கலைஞருக்கு நேரடியாக பதில் சொல்லத் தெரியாதென்பதற்கு மற்றுமொரு சான்று. ராசா மேல் ஊழல் புகார் என்றால் அவர் தாழ்த்தப்பட்டவர். தமிழக அரசின் மீது குற்றம் சாட்டுகிறார்களா? அவர்கள் தர்ப்பை தூக்கும் பாப்பாரவர்கள். இதுதான் கலைஞருடைய பகுத்தறிவு சித்தாந்தம்.

இந்த லட்சணத்தில் காமராஜரிடம் அரசியல் நாகரீகம் பயின்றவர் என்ற பெருமை வேறு. கோவையில் ஜெயலலிதாவிற்கு எதிராக நடந்த போட்டி மாநாட்டில் ராமநாதன், பொன்முடி, ஸ்பெக்ட்ரம் ராசா ஆகியோர் பேசிய அபத்தங்களை சிலாகித்தார் கலைஞர். ஆனா ஜெ' கூறிய ஒரு குற்றச்சாட்டிற்கும் பதிலே இல்லை. இது என்ன பிழைப்பு?

Gaana Kabali said...

//சீனுவாச அய்யர் எகத்தாளம் பொங்க ஆனந்த விகடனில் எழுதியிருக்கிற தலையங்கத்தின் ஒரு பகுதி./முரசொலி கட்டுரை


திரு ஸ்ரீனிவாசன் அவர்களே ஐயர் என்று போட்டுக் கொள்வதில்லை. இவருக்கு எதற்கு அந்த வேலை?

நாவிதர் கருணாநிதி என்று எழுதினால் இவருக்கு எப்படி இருக்கும். ஆனால் பண்பாடு கருதி அவ்வாறு யாரும் எழுதுவதில்லை. ஆனால் பகுத்தறிவு சிங்கம், பண்பாட்டின் உறைவிடம் என்று சொல்லிக் கொள்ளும் இவர் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போவதேன்?

Saravanan said...

இப்பொழுது தான் இட்லி வடை அதனுடைய "Form" க்கு வந்திருக்கிறது.

அப்படியே சென்னையில் "மதுரை" சம்பவம் குறித்தும் கட்டுரை எழுதுங்கள்.

sowri said...

Highlighted ones are the best one.! so We can understand that there will be no water for crops this year,from the reply

Kayal said...

போற போக்க பாத்தா இட்லிவடைக்கு கூட கலைஞர் முரசொலில பதில் எழுதுவாரு போல. இட்லியாரே எதுக்கும் உங்க ஜாதி certificate a பத்திரப்படுத்தி வையுங்க. பின்னாளில் தேவை படலாம்

Thomas Ruban said...

:-))))

♥Manny♥ said...

அட தண்ணி வைங்கப்பா..(கலைஞருக்கு) :p

Dwarak R said...

How is it possible for MK to negotiate MP seats with delhi ?
He flied overnight and got the portfolios. If he can show such dedication urgency on seat negot. what can't the same attention given to sort out the water issue.

Instead on finding permanent solution within Tamilnadu why shld someone has talk with other states every year?. miserable moron.

In the recent events, replying back for chop-shop comment from US Senator, Mr. Narayana Murthy stated 'The culture in Infosys is, we collect data, make analysis, come to conclusions and then comment on it. I wish everyone could have done that'.

Better MK learn how to handle criticism.

Anonymous said...

//மொட்டைச்சிகள், முண்டைகள் அதைப் பார்த்து வயிற்றிலும் வாயிலும் லபோ திபோ என்று அடித்துக் கொண்டால் அதற்கு யார் என்ன செய்வது//

அதுதானே! முடி உள்ளவன் தலை சீவிக் கொள்கிறான், வழுக்கைகளும் சொட்டைகளும் அதுபற்றி வயித்தெரிச்சல் கொட்டுவதால் என்ன ஆகப்போகிறது?

வாழ்க செம்மொழி! வாழ்க கலைஞர்!! வாழ்க கலைஞர் நாடு!!!

R.Subramanian@R.S.Mani said...

Whether the Cauvery Water would be opened and reached Delata Areas or not the purpose of the Vikatan's Thalaiyangam is served; attract the mass by thr reply given in Murasoli by Kalaignar. good ;can hope to increase the sale by a few thousand copies of the next issue of Vikatan;Why Both Vikatan and Kalaignar has to worry about th farmers of the delta area, without night sleep;

Suppamani

Anonymous said...

It is true that Vikatan Group is not neutal in reporting correct picture.It has not opened his mouth about the agitation of DMK Youth wing against the Jayalaitha's game plan of prolonging her IT wealth case for decades.It is also the duty of press to recollect all the case which is going on on on for several years before the public.

Krishnakumar said...

This useless vikatan is hell bent on spreading separatism in Tamilnadu. they are flaming Elam cum Tamilnadu separatism by writing nonsense stories about elam and now when everything is going smooth on cauvery this bloody shit magazine is creating chaos.

These bloody brahmins can go to any extent to fulfill their shitty bank. shame on these yellow magazine journalist sreenvasan.

Anonymous said...

சோழியன் குடுமி சும்மா ஆடாது.

Anonymous said...

Awesome.. Idlyvadai is like a mini "Thuklak" :)

hayyram said...

//பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK// நிரூபிக்கிறீங்க தல!

Anonymous said...

அட அரசியல இதெல்லாம் சகஜயமப்பா…..

தமிழ் பயணி said...

"ஒரு விவாதம் நடக்கும் போது எந்த தரப்பு முதலில் தோல்வியை உணர்கிறார்களோ அவர்தான் கோபப்படுவார்"

"பூரண ஞானமும் கனிவும் எங்கே இருக்கிறதோ அங்கே கொச்சையான வெறுப்புகளும் தூஷனைகளும் இருக்காது !
கொச்சையான வெறுப்புகளும் தூஷனைகளும் ஞானத்தை பஸ்மம் ஆக்கிவிடும்"

எழுத்தாளர் நா.பா வின் மேற்கண்ட வரிகள் தான் நினைவுக்கு உடனடியாக வருகின்றன.

ஜியார் said...

//நாவிதர் கருணாநிதி என்று எழுதினால் இவருக்கு எப்படி இருக்கும்.//

கண்டிப்பாக ஒரு பத்திரி்க்யையிலாவது போடணும். அப்பத்தான் இவங்களுக்கெல்லாம் உரைக்கும். ஆவி சான்ஸ் இல்லை. பாப்பாத்தினு முரசொலியில் சொல்லும் போது நமது எம்ஜியாரில் போடணும்.

Anonymous said...

கேவலமாக உள்ளது.எல்லா பிரச்னையயும் தீர்க்கக்கூடியய ஒரே வார்த்தை “அவாள்” போலும்!

Manoj Kumar said...

நன்ற கவனித்து பார்த்தல்..கடந்த மேடைகளில் கலைஞர் பேச்சை கேட்டால் பழிக்கு பழி வாங்குவது போல தான் பேசி வருகிறார்.
கலைஞர் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்று அவருக்கே பயம் வந்திருக்கலாம்.பயத்தினால் ஏதேதோ பினாத்துகிறார்.....விட்டுவிடுங்கள் அவருக்கு எப்பவோ வயதாகி விட்டது....கருத்து சொல்லும் தகுதியை அவர் இழந்து வெகு நாளாகி விட்டது.

shiva said...

I dont know what went wrong with these tamil nadu ppl??Each and every problem in tamil nadu has to be solved by MK.Apart from that the sri lankan tamils problem also has to be solved by MK??Did any one CMS holding office (including MGR,JJ)took any action to solve this issues?Part from JJ JJ paased a resolution in tha assembly to send indian army to arrest LTTE leader and bring him to india for execution.When the 1987 accord wasa signed LTTE notified MGR that agreement did not provide any solution to the sri lankan tamils issue.MGR couldnt do anything althogh he was in the coalition with Rajiv Gandhi.JJ was a popular CM and why she couldnt do anything to solve sri lankan problem???Now this parpanese want to bring down the MKs govt.So they doa ndn speak all what they can.Thas all.

Anonymous said...

/Awesome.. Idlyvadai is like a mini "Thuklak" :)/
Small correction.
Idlivadai is like NAMATHU MGR.

sundar said...

MK is obsessed with caste and also believes in Varnashrama dharma and thats precisely the reason why he makes his heir take over all his vocation and the mantle to rule TN.No wonder he talks of Darbai and Poonal

Anonymous said...

தயவு செய்து கலைஞர் என்று எழுதாதீர். 'கருணா' என்று எழுதுவீர்

Anonymous said...

பலருக்கு நினைவிருக்கலாம்.
பண்டித நேருவை “நேருப் பண்டிதர்” என்று நக்கலாகவும் நாகரிகம் இல்லாமலும் விளித்தவர் நம் செம்மொழிச் சித்தர் முதல்வர் அவர்கள்.
ஓ.வி. அளகேசனை “மயிரீசன்” என்று செம்மொழியில் பெயர்த்து போஸ்டர் ஒட்டியதும் இவர்தான்.
தமிழில் மிகவும் பாண்டித்யம் பெற்றுத் திகழும் நமது முதல்வரை கருணாநிதிப் பண்டிதர் என்று அழைத்தால் சினந்து கொள்வாரா என்ன?

Anonymous said...

rendaapu padikkira pullayaattam aayittu varaar.

Anonymous said...

இந்தாளு என்னைக்கு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிருக்கான் இப்போ சொல்ல?

பார்ப்பண கலைஞன் said...

இருக்குங்கடா இருக்கு உங்களுக்கு! திண்ணை காலியாகட்டும்.. சேத்து வச்சு வாங்குவீங்கடா!

M Karunanidhi said...

வாழ்க ஜாதி. ஜாதி வாரி கணக்கெடுப்பு வளர்க.. நிறைய ஜாதி வேண்டும், நிறைய உட்பிரிவு வேண்டும்...
மக்கள் எல்லாம் மாறி/மாறி ஒருவரை ஒருவர் சண்டையிட்டும், காரி உமிழ்ந்தும் இருக்க வேண்டும்...

அப்போ தான் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்.

சொட்டை தலையன் said...

//மொட்டைச்சிகள், முண்டைகள் அதைப் பார்த்து வயிற்றிலும் வாயிலும் லபோ திபோ என்று அடித்துக் கொண்டால் அதற்கு யார் என்ன செய்வது//

துணையில்லாத பெண்களை (விதவைகளை) இப்படி தான் முண்டை, மொட்டச்சி என்று பகுத்தறிவோடு அழைக்கவேண்டும்.

நீல சாயம் வெளுத்து போச்சு.... டும் டும் டும்...


//நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன்//

யப்பா அந்த ரெண்டு பெரும் பாவமப்பா... உயிரோடு இருந்தால் இந்த ஆளை செருப்பாலயே அடித்திருப்பார்கள்...
எண்ணா லூட்டி அடிக்கிறான்.. எதாவாது சொன்னால் உடனே "அவாள்"...நல்ல ஆயுதம் தான் வச்சுருக்கான்..


//நாவிதர் கருணாநிதி என்று எழுதினால் இவருக்கு எப்படி இருக்கும்.//
இவரு நாவிதாரா?? இல்லை முதலியாரா??

Venky said...

When will kalaignar will stop writing? seriously imagine a TN without kalaignar and his stupid age old views.
Shame on us

Anonymous said...

யதிராஜ்

உங்கள் மேல் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறேன். கலைஞர் என்று ஒரு ஆளை அழைத்து உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். பெயர் சொல்லியே அழையுங்கள். இல்லாவிட்டால் நம் தரத்தை நாமே தாழ்த்திக் கொள்வது

கருணாநிதி நாவிதர் அல்ல. அவர் தேவரடியார் ஜாதி. அந்த ஜாதிக்கு வேறு பெயர்களும் உண்டு. அதையெல்லாம் சொன்னால் இவர் பொறுத்துக் கொள்வாரா? இளங்கோவன் ஊதிப் பெருசாக்குகிறார் என்று சொன்னதற்கு எவ்வளவு தூரம் இதே கருணாநிதி என் ஜாதியைச் சொல்லி விட்டான் என்று திட்டியிருப்பார். கருவிலே குற்றம் கவிதை எழுதிய நாஞ்சில் மனோகரன் என்ன பாடு பட்டார். ஆம் கருவில் குற்றம் உள்ளவர்கள்தான் இப்படி ஆபாசமாகப் பொறுக்கித் தனமாக எழுதுவார்கள் பேசுவார்கள். கருணாநிதி ஒவ்வொரு முறை பாப்பான் பாப்பாத்தி என்று சொல்லும் பொழுதும் பதிலுக்கு அவரது ஜாதியை ஒருமுறையாவது யாராவது சொன்னால்தான் உறைக்கும்.

R.Gopi said...

கருணா இது போல் பேசினால் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்....

வயதாக ஆக, மனதில் வக்கிரம் கூடிக்கொண்டே போகிறது என்றால் அது இவர் ஒருவருக்கு தான்...

யாரின் குற்றச்சாட்டிற்கும் நேரடியாக பதில் சொல்வதில்லை... கேட்டால், இது அண்ணா எனக்கு சொல்லி கொடுத்தது, தம்பி வாங்கி கொடுத்தது என்று ஜல்லி அடிப்பார்....

இவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை... அந்த அளவுக்கு, தரம் தாழ்ந்து போயிருக்கிறார் இந்த கோபாலபுரத்து பெரியவர்...(!!)

R.Gopi said...

யாராவது பெயரிட்டு அழைத்தால் “தல”க்கு என்னா கோவம் வருதுங்க...

பெயர் என்பதே அழைப்பதற்காக தானே..

Anonymous said...

This is too much for Kalaignar for always mentioning Poonal, Paarpaan etc. He is facing any issues directly. Why don't feel ashame of mentioning brahmins always by their caste. Even at this old age he is very chilly in these types of criticisim.

Manion said...

இட்லிவடை
நீங்க கலியுக கர்ணன்,
எங்கள் அண்ணாவிடம் அரசீயல் பாடம்படித்த தம்பீ
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக, உண்ணாவிரதம் மூலம் உயிர் துறக்க முயன்ற தன்மான தலீவரை வச்சி ஏய் காமெடி கீமெடி பண்ணலியே?

Mohamed said...

மானங்கெட்ட பொழப்பு!! மோளக்கார கருணாநிதி நு எங்க ஊருல சொல்லுவாங்க..இப்போ அப்படி சொன்னா.. பொருத்துக்குமா கிழம்?

Jawahar said...

தன்னம்பிக்கையும், தன்மானமும் இருக்கிறவர்கள் தேவையில்லாமல் ஜாதியை இழுக்க மாட்டார்கள். பிரச்சினை குறித்து மட்டுமே பேசுவார்கள்.

http://kgjawarlal.wordpress.com