பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 08, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 8-8-2010

இட்லிவடைக்கு முனி எழுதும் கடிதம். ..


அன்புள்ள இட்லிவடை,

ரொம்ப நாளா ஆளை காணோம் ? விருத்தாசலத்துக்கு போய்விட்டாயா ? நேற்று “விருத்தகிரி” படப்பிடிப்பில் மன்னர் வேஷத்தில விஜயகாந்த் தடித்ததை பார்த்தியா ? இவர் எப்ப மன்னர் ஆகி, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து எப்ப முதலமைச்சர் ஆவது. நித்தியிடம் போய் ஆசிர்வாதம் வாங்கினாலாவது எதாவது நடக்கும் என்று நினைக்கிறேன்.

நம்ம எஸ்.வி.சேகரை பாரு. ஏதோ தொண்டை வலியாம், டாக்டரிடம் போகாமல், நேராக நித்தியிடம் போய் தன் வலியை சரி செய்துள்ளார். இதிலிருந்து தெரிவது என்ன ? நித்திக்கு தொண்டை தெரப்பி மட்டும் தான் தெரியும் போல. எனக்கு தெரிந்து தொண்டையில் கிச் கிச் என்றால் விக்ஸ் சாப்பிட வேண்டும். இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும் வரை நித்தியை ஒன்றும் செய்ய முடியாது. சன் டிவி காட்சிகளை பற்றி கேட்ட போது அதற்கு சேகர் சொன்ன பதில் "முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர்". சேகருக்கு காமெடி கூட பிறந்த குணம்.

நித்தியின் வீடியோவை போட்டு ஒரு கலக்கு கலக்கிய சன் டிவி நேற்றும் இன்றும் எந்திரன் பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியை போட்டு கலக்குகிறது. விளம்பரங்களுக்கும், 'அடுத்து வருவது.." என்பதற்கும் இடையில் நிகழ்ச்சியை பார்ப்பது என்பது ஒரு பெரிய சவால்.

நித்திக்கே ரசிகர்கள் இருக்கும் போது, சிம்புவின் இருக்க மாட்டார்களா ? போன வாரம் ஒரு பத்திரிக்கைக்கு 3 இடியட்ஸ் படத்தில நீங்களும் நடிக்கிறீங்களா என்று கேள்விக்கு அவரின் பதில்.

"விஜய் சார் பெரிய ஹீரோ. அவர்கூட நடிக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, எனக்கு அஜீத் ஃபேன்ஸ் அதிகம். அதையும் யோசிச்சுதான் முடிவு எடுக்கணும். அஜீத்ரசிகர் களை சங்கடப்படுத்திடக் கூடாதுன்னு தயக்கமா இருக்கு. இன்னும் முடிவு பண்ணலை!"

என்ன ஒரு 'வில்லத்தனம்'. கமல் படத்தில் இவர் நடித்தால் எனக்கு ரஜினி ரசிகர்கள் அதிகம் அதனால் தயக்கமா இருக்கு என்று சொன்னாலும் சொல்லுவார். எது எப்படியோ அஜித், சிம்புவிற்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். லிட்டில் சூப்பர் ஸ்டார் குட் பிகம் பிக் சூப்பர் ஸ்டார். ஆனால் சிம்புவிடம் ஒரு நல்ல குணம் இருக்கு. அது, பேண்ட் பாக்கெட்டில் எப்போது சில சாக்கிலேட் இருக்கும். 'குட்டி' குழந்தைகள் யாராவது வந்தால் அதை கொடுத்து மயக்குவாராம். நான் சொல்லுவது நிஜ குட்டி குழந்தைகள்.


இது கலி காலம், சூப்பர் ஸ்டார் யார் என்பதை கூட மறந்துவிடுகிறார்கள். மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் நடந்த எந்திரன் பாடல் விழாவில் ஐஸ்வர்யா பேசி முடித்துவிட்டு கொஞ்சம் தூரம் நடக்க உடனே பதறித் துடித்து மீண்டும் மைக் முன்னாடி வந்து ஐஸ் ரஜினியை பற்றி கலைஞர் பேசினார். ( புகழ்ந்து என்பதற்கு செம்மொழி வார்த்தை கலைஞர் ). மேடையிலே இப்படி நடித்தால், படத்தில் எப்படி நடித்திருப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை.

நிச்சயம் தமிழ் படங்களில் ஒரு ரவுண்ட் வருவார் என்று தெரிகிறது. எந்திரன் பாடலை கேட்டுவிட்டி ரஜினி/ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் "கேட்க கேட்க தான் நல்லா இருக்கும் ஹிட்டாகும்" என்று சொல்லுகிறார்கள். சுமாரான பெண்ணை தினமும் பார்த்தால் கொஞ்ச நாளில் அவரே பரவாயில்லை மாதிரி தெரிவதில்லையா ? அதே டெக்னிக் தான் இது. ஆண்களுக்கு சகிப்பு தன்மை அதிகம் உண்டு ஆனால் சாமர்த்தியம் போறாது. சகிப்பு தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன வித்தியாசம் ? மனைவி கொடுக்கும் காப்பியை குடித்தால் அது சகிப்பு தன்மை. அதை அவளுக்கு தெரியாமல் சிங்கில் கொட்டினால் சாமர்த்தியம். இப்ப முருகனை எடுத்துக்கொள்ளுங்கள் உலகத்தை சுற்றி வா என்று சொன்னவுடன் உடனே மயில் மீது ஏறி சுற்றினார். அவருக்கு சாமர்த்தியம் போறாது.

ஞாநி தமிழ் பத்திரிக்கையை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார். ஆனந்த விகடன், குமுதமை தொடந்து இப்ப கல்கியில் ஓ-பக்கங்கள் வர போகிறதாம். சில வாரங்களுக்கு முன் ஞாநி 'நேசமுடன்' கல்கியில் எழுதுவார் என்று டிவிட் விட்டேன். பலர் ஜோக் என்று நினைத்தார்கள். ஆனால் சில சமயம் ஜோக் நிஜமாகும் வாய்ப்பு இருக்கிறது. இனி கல்கிக்கு முரசொலியில் 'இலவச' விளம்பரங்களை எதிர்ப்பார்க்கலாம்.

முருகனை பற்றி சொல்லிவிட்டு பிள்ளையார் பற்றி சொல்ல வேண்டாமா ?

ஆன்மீகத்தில் இப்ப எல்லாம் சந்தேகம் வந்தால் யாரை கேட்பது என்று குழம்ப வேண்டாம். இருக்கவே இருக்கார் கலைஞர். பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சில வாரங்களுக்கு முன் பேசியுள்ளார்.

"ஏதோ இந்த அரசு எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிற அரசு, எது கேட்டாலும் தருகிற அரசு என்பதற்காக எதையும் கேட்டுவிடக் கூடாது. புராணத்தில் பிள்ளையாருக்கு ஏன் கல்யாணம் ஆகவில்லை என்றால், அவர் கேட்கக் கூடாததை கேட்டு விட்டார். "உனக்கு பெண் எப்படி இருக்க வேண்டும்' என கேட்ட போது, பார்வதியை காட்டி, "எங்க அம்மா மாதிரி பொண்ணு இருக்கணும்' என பிள்ளையார் சொன்னார். அதனால் கோபம் வந்து, "பிள்ளையாருக்கு கல்யாணமே இல்லை' என சாபமிட்டனர் என்கிறது ஒரு புராணம்"


ஆக புராணம், பிள்ளையார் எல்லாம் உண்மை போலிருக்கு.

அவருக்கு தெரியாது வேறு ஒரு புராணத்தில் புள்ளையாருக்கு இரண்டு உண்டு என்பது. அந்த புராணம் பற்றி வேறு நிகழ்ச்சியில் பேசுவார். கவலைப்படாதே. கலைஞர் ஆட்சியில் இலவச பேச்சுக்கும் பஞ்சம் இல்லை.

திமுகவின் அடுத்த இலவச திட்டம் என்ன தெரியுமா ? இலவச ஃபிரிட்ஜாம். நிஜமாக மக்களுக்கு ஐஸ் வைப்பது என்றால் இது தான். ஸ்பெக்டரம் பணம் எப்படியோ மக்களுக்கு வினியோகம் ஆனால் நல்லது. துக்ளகில் ஒரு கேள்வி இப்படி போகிறது ‘அமைச்சர் ராசா மீது ஊழல் புகார் என்றதும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் மீது பொய்யாகக் குற்றம் சொல்கிறார்கள் என்று புலம்பிய கருணாநிதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கிறாரே? அவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தானே?’

நல்ல கேள்வி. நன்றி பத்ரி.

பத்ரி உலகமயமாதல் பற்றி நீயா நானாவில் நடித்திருக்கிறார். சாரி, பங்குகொண்டுள்ளார். எனக்கு தெரிந்து இந்தியா உலகமயமாகுமோ ஆகாதோ நிச்சயம் நீயா நானா உலகமயமாகியது - சாரு, ஜெயமோகன், பத்ரி, ஞாநி என்று பிளாக் உலகம் வந்துவிட்டார்கள். பா.ராவும், சரக்கு மாஸ்டரும், இட்லிவடையும் தான் பாக்கி. கூடிய சீக்கிரம் வந்துவிடுவார்கள். கனகவேல் காக்கும் தெய்வமா அல்லது ஸ்ரீராகவேந்தர் காக்கும் தெய்வமா என்று ஒரு டாப்பிக் வைத்தால் நல்லா இருக்கும். நான் பார்வையாளனாக வர ரெடி.

கிட்டதட்ட ஒரு லட்சம் பார்வையாளர்கள் வர இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் தோண்ட தோண்ட பலதும் கிடைக்கிறது. காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது என்று முடிவெடுத்ததுமே, மும்பை தாக்குதலைக் காரணம் காட்டி, பாதுகாப்பை முன்னிட்டு பல நாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வர மறுப்பு தெரிவித்தனர். அதையெல்லாம் ஒருவழியாக தாஜா செய்து, மேற்கொண்டு ஆகவேண்டியவற்றைக் கவனித்தால், இன்றுவரை இன்னும் மைதானங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்குண்டான வசதிகள் இன்றுவரை தயாராகவில்லை. போட்டிகள் துவங்க இன்னும் 60 நாள்கள் இருக்க பல விதங்களில் லஞ்சம் பற்றி தினமும் ஒரு பக்கம் பேப்பரில் விளம்பரம் கிடைக்கிறது, 100ரூபாய் குப்பை தொட்டியிலிருந்து பல லட்சம் பொருட்கள் வரை லஞ்சம் விளையாடியிருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் மணி சங்கர ஐயர் மணி அடித்ததால் தான். ஐயர் என்றால் கோயிலில் மணி அடிக்க வேண்டும். மைக் முன்னால் மணி அடித்தால் ? கத்தி போய் வால் வந்த கதையாக இப்போது இது. அடுத்த ஊழல் வரை டிவியில் இது ஓடும். ஊழல் நம் நாட்டு பாரம்பரியம்.

"பார்க்க ரொம்ப பாரம்பரியமா இருக்கிறது தான் என் ஸ்டைல். நான் எப்பவும் திருநாள்ளாறு தியாகராஜர் சன்னதியோட வீபூதியை வெச்சுகிட்டு தான் மேடை ஏறுவோன். மேடையில பாடுறப்போ மார்டனா இரு, மத்தவங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கோன்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க. ஆனா கவர்ச்சி உடைகள்ல எனக்குத் துளிக்கூட விருப்பம் இல்லை. அதே போல பாடகிகள் காம்பியரிங் டப்பிங்.... எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு நல்லா பாடறதிலும் கர்நாடக சங்கீதத்தை இன்னும் முழுக்க கத்துக்கறதுலயும் தான் விருப்பம்" சொன்னது பாடகி சைந்தவி. அம்மணி 'சங்கீத மஹா யுத்ததுக்கு' ரெடியாயிட்டாங்க என்று நினைக்கிறேன். அம்மணிக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் அழகான கவர்ச்சி தான் என்றுமே எடுப்படும் :-)

ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் அனைத்துமே திமுகவிற்கு உரைக்கிறது என்பது தினசரி முரசொலியைப் பார்த்தாலே தெரிகிறது. அதுவும் கோவை மாநாட்டிற்குப் பிறகு திமுக ரொம்பவே பயந்து போயுள்ளது, கலைஞர் அங்கு இரண்டாம் இன்னிங்ஸ் ஆடியதிலிருந்து தெரிகிறது. சென்ற வார முரசொலியில் ஜெயலலிதாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் கண்டன கூட்டம் வேற. ஜெயலலிதாவின் தாய் சந்தியாவைப் பற்றி எழுதப் போவதாக முரசொலி பூச்சாண்டி காண்பிக்கிறது. இந்த லட்சணத்தில் தமக்கு அரசியல் பண்பாட்டை காமராஜரும், அண்ணாவும் கலந்து புகட்டியதாக வேறு கலைஞர் மார் தட்டுகிறார். நாம் தலையில் ரத்தம் வரும் வரை தட்டிக்கொள்ள வேண்டியது தான்.

தமது வாழ்க்கை வரலாற்று நாவலின் கையெழுத்துப் பக்கத்துக்காக 'ரத்தம் சிந்தியதாக' சச்சின் பற்றி கொஞ்சம் நாளைக்கு முன் ஒரு செய்தி வந்தது. நல்ல வேளையாக அது தவறான செய்தி என்று சச்சினே சொல்லிவிட்டார். இல்லை என்றால் அவர் திராவிட பரம்பரையில் சேர்ந்திருப்பார்.

"
என்னுடைய ரத்தத்தை எடுத்து சிவப்பு வண்ணத்திற்கு பதிலாக கொடுத்து திராவிடர் கழகக் கொடியை அன்றைக்கு உருவாக்கினோம். அதனுடைய விரிவாக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி. இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற "திராவிட'' என்கிற சொல்லை சேர்த்துக் கொண்டிருக்கின்ற எந்த கட்சியின் கொடியிலும் - காணப்படுகின்ற சிவப்பு இருக்கிறதே, அது என்னுடைய ரத்தம் தான் என்பதை அவர்களுக்கெல்லாம் நான் நினைவூட்ட விரும்புகிறேன்"
இது கலைஞர் பேசியது. சச்சின் தப்பித்தார்.

பாவம் 2 தேர்வு போலி சான்றிதழ்கள் கொடுத்த மாணவர்கள் தான் தப்பிக்க முடியவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர், பிளஸ் 2வில் 80 சதவீத மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். டாக்டராக வேண்டும் என்ற ஆசையில் முன்னணி கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இந்த குறுக்கு வழியை முயற்சித்துள்ளனர். இப்ப இவர்களின் எதிர்காலத்தை பாருங்கள்நல்லா படிச்சா
இந்தியாவுல நீ டாட்டா
ரொம்ப நல்லா படிச்சா
இந்தியாவுக்கே டாட்டா


இப்ப உனக்கு டாட்டா,
இப்படிக்கு,
முனி

பிகு: இந்த மாதிரி படம் இல்லை என்றால் கடிதம் பூர்த்தியாகாது, அதனால்... :-)22 Comments:

ரோமிங் ராமன் said...

முனி தாங்குவாரா ?? ஒரே சமயத்தில விஜயகாந்த்து,எஸ் வீ சேகர், ஐஸ்வர்யா,சிம்பு,அஜீத்து, விஜய், சூப்பர் ஸ்டாரு,ஞானி, உமா சங்கரு,பத்ரி, நீயா நானா, கருணா, ஜெயா,டெண்டுல்கரு, சைந்தவி..எல்லாரையும் பற்றி ஒரே லெட்டரில் எழுதினால் பாவம் என்ன பண்ணுவார் சாமி! இது என்ன சென்ற வார செய்திகள் நிகழ்ச்சியா??

மானஸ்தன் said...

:>

Anonymous said...

தமிழகத்தில் குடிகாரர்கள் அதிகமானதட்கு பொருளாதார முன்னேற்றமே கரணம்
ஒரு american survey about பொருளாதாரமும் குடியும்
http://www.esquire.com/blogs/food-for-men/drinking-statistics-by-income-080210

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யாரோ ரொம்ப நல்லா சரக்கு வச்சு படைச்சுட்டாங்க போலிருக்கு, கடிதம் சூப்பரோ சூப்பர்!

ரிஷபன்Meena said...

எஸ்.வி. சேகர்-க்கு இதுவும் ஒரு நாடகம் போல தான். செமத்தியா செக் வெட்டி இருப்பாரா இருக்கும்.

எஸ்.வி. சேகர் இப்படி பணத்துக்கு நாயா பேயா அழைய வேண்டாம்.

இப்படியெல்லாம் பண்ணினால் மீண்டும் நமக்கு கூட்டம் வரும் என்று நம்புதே இந்த நித்தி. மானங்கெட்ட ஜென்மம்.

Anonymous said...

நல்ல கேள்வி. நன்றி பத்ரி.

இட்லிவடை கிழக்கு பதிப்பக கூட்டம் என்று சொல்லாமல் சொல்றீங்க. மாவவோட நடத்துங்க.

Bala said...

திருநாள்ளாறு தியாகராஜர் சன்னதியோட

it must be Thiruvaiyaaru

குரோம்பேட்டைக் குறும்பன் said...

// ஐஸ் ரஜினியை பற்றி கலைஞர் பேசினார். ( புகழ்ந்து என்பதற்கு செம்மொழி வார்த்தை கலைஞர்)//

ஆஹா! புதிய வார்த்தை கண்டுபிடித்த முனியை 'கலைஞர்'சொல்ல வார்த்தைகளே இல்லை!

//கலைஞர் பிள்ளையாருக்கு ஏன் கல்யாணம் ஆகவில்லை என்று சில வாரங்களுக்கு முன் பேசியுள்ளார்.... எது கேட்டாலும் தருகிற அரசு என்பதற்காக எதையும் கேட்டுவிடக் கூடாது. //

எதுகேட்டாலும் தருகிற பிள்ளையாரிடம், அவ்வையார், 'பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் என்ற நாலும் கலந்து கொடுத்துத்தான் (சங்கத்தமிழ்) மூன்று தா என்று கேட்டார். இந்த அரசிடம் மூன்று கேட்பவர்கள், நாலு கொடுத்துதான் பெறவேண்டும் என்று நமக்குத் தெரியாதா என்ன!

kggouthaman said...

// மன்னர் வேஷத்தில விஜயகாந்த் தடித்ததை...//

ஹி ஹி !!

kggouthaman said...

// மேடையில பாடுறப்போ மார்டனா இரு, மத்தவங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கோன்னு நிறைய பேர் சொல்லிட்டாங்க. ஆனா கவர்ச்சி உடைகள்ல எனக்குத் துளிக்கூட விருப்பம் இல்லை.//

சைந்தவி இப்பொழுது கடைபிடிக்கும் உடை வகை நன்றாகத்தான் உள்ளன. அவர் அதை மாற்றிக்கொள்ள வேண்டாம்.

R.Gopi said...

// மன்னர் வேஷத்தில விஜயகாந்த் தடித்ததை...//

முனியின் முழு லெட்டருக்கு இந்த ஒரு வார்த்தை பதம்.....

R.Gopi said...

//ரோமிங் ராமன் said...
முனி தாங்குவாரா ?? ஒரே சமயத்தில விஜயகாந்த்து,எஸ் வீ சேகர், ஐஸ்வர்யா,சிம்பு,அஜீத்து, விஜய், சூப்பர் ஸ்டாரு,ஞானி, உமா சங்கரு,பத்ரி, நீயா நானா, கருணா, ஜெயா,டெண்டுல்கரு, சைந்தவி..எல்லாரையும் பற்றி ஒரே லெட்டரில் எழுதினால் பாவம் என்ன பண்ணுவார் சாமி! இது என்ன சென்ற வார //

அதானே... ஒரே ஒரு வார்த்தை “மன்மத அம்பு” பத்தியும் எழுதி இருக்கலாமே!!!

Santhappan சாந்தப்பன் said...

உமாசங்கருக்கு உங்கள் ஆதரவை இதில் தெரிவியுங்கள்


PROTECT HONEST IAS OFFICER of INDIA and TAMILNADU

Campaign to save democracy and Justice for Umashankar IAS

Anonymous said...

iv
watch this.now we can start to believe that "thoppukaranam" does have some meaning.( only after "white skin" recognises it)
what a pity?:-)
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs
dev

Smith said...

http://twitter.com/siththarkal

http://siththarkal.blogspot.com/

Anonymous said...

நேற்று தான் ரஜினியின் முழு பேச்சும் கேட்டேன்.எல்லோரையும் மஞ்சள் மஞ்சளா( புகழ்-> கலைஞர்->மஞ்சள்) பேசியிருக்காரே.

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

Thomas Ruban said...

சுவையான பதிவு
//புகழ்ந்து என்பதற்கு செம்மொழி வார்த்தை கலைஞர் //

சூப்பர்...வரவர முனி கலக்கறாரு... நன்றி.

Thiru said...

Idly,
Humble request! ASk yuthiraj to translate the following, do not bother some idiotic readers, please do it.
http://www.hindunet.org/hindu_history/modern/taj_oak.html

Anonymous said...

ROBO.....RoBO da

Anonymous said...

Yuthiraj,
Do not try this
http://www.hindunet.org/hindu_history/modern/taj_oak , people will decide you are inclined or something else:)

Anonymous said...

The Singer is Chinmayi and Not Shaindhavi... :)