பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 16, 2010

மண்டேனா ஒன்று 16/8/2010

63 64 ஆவது சுந்தந்திர தினத்தையொட்டி ஏழாவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக்கொடியேற்றுகிறார் என்று பெருமையுடன் காங்கிரஸார் மார்தட்டுகின்றனர். வட இந்திய மற்றும் கூட்டணிக் கட்சியினரின் மீடியா அடிப்பொடிகளும் அதனை மணித்துளிக்கொருமுறை அறிவித்து பூரிப்படைகின்றனர். தனியொரு பிரதமர் ஐம்பதாயிரம் பாதுகாப்புப் படைவீரர்கள் புடை சூழ, குண்டு துளைக்காத கூண்டிற்குள் இருந்து கொடியேற்றும் நிகழ்வை சுதந்திரம் என்று நாமும் மார்தட்டுவது துரதிருஷ்டவசமானது;

சுதந்திரமடைந்த அறுபத்து மூன்றாண்டுகளில், தொண்ணூறு சதவிகித ஆட்சிக்காலத்தை காங்கிரஸே ஆக்ரமித்திருந்தது. அக்காலத்தில் காங்கிரஸ் வளர்த்து விட்ட பிரச்சனைகள், பிரதமரைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை விட அதிகம். அப்பிரச்சனைகள் இன்றும் தேசத்தைச் சூழ்ந்து கொண்டு சுழட்டியடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பிரதமரோ இவற்றைப் பற்றி சற்றும் கவலையற்றவராக இருக்கிறார். அவருடைய அமைச்சரவை சகாக்கள் கருமமே கண்ணாக கல்லாவை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மக்களோ, இந்த தேர்தலில் என்ன இலவசமாகத் தருவார்கள் என விட்டத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நமது அதிர்ஷ்டம், ஆடுவோமே, பள்ளு பாடுவோமே என்று பாடியவர் இன்று இல்லை.

காங்கிரஸ் முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த நற்காரியம், ராஜீவின் ஆட்சியில் நடைபெற்ற போஃபர்ஸ் ஊழலை சவக்குழியில் புதைக்கும் முயற்சியில் இறங்கி வெற்றிபெற்றது. இந்த விவகாரத்தை சூட்டோடு சூடாக முன்னமே தமது ஆட்சிக்காலத்தில் முடித்து வைக்காத பாஜகவை இதில் முக்கியமாகக் குற்றம் சாட்ட வேண்டும். சோனியாவிற்கு வேண்டியவர் என்ற ஒரே காரணத்திற்காக, குவாத்ரோக்கி பிடிபட்ட செய்தி தெரிந்திருந்தும், அவரை விடுவிக்கும் வரை ஆக வேண்டியவற்றை எல்லாம் கவனித்து விட்டு, பிறகு ஒன்றுமே நடவாதது போல், அவர் குற்றமற்றவர், அவரை தொந்தரவு செய்யக் கூடாது என பிரதமர் அவருக்காக வருத்தப்படுகிறார். இப்பேற்பட்டவர் எழுபதாவது முறை செங்கோட்டையில் கொடியேற்றினாலும், பெருமைப்படுவதற்கு ஏதுமில்லை.

அடுத்து போபால் விஷவாயுக் கசிவு விவகாரம். அதென்னவோ தெரியவில்லை? அயல்நாட்டவர்கள் என்றாலே காங்கிரஸாருக்கு அலாதிப் பிரியம் போலும். குவாத்ரோக்கியை எப்படி தப்புவிக்க விட்டனரோ, அதே போல ஆண்டர்ஸனுக்கும் பாதையமைத்துக் கொடுத்துவிட்டனர். குவாத்ரோக்கியாவது பொருளாதார ஊழலில் தொடர்புடையவர்; தொலைகிறான் சனியன் என்று விடலாம். ஆண்டர்ஸன் இருபத்தையாயிரம் உயிர்களை நரபலி கொண்டவன். ராஜீவ் முதல் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் அவன் தப்புவிக்க துணைபோயிருக்கின்றனர். இதில் இப்பொழுது யார் மேல் குற்றம் சுமத்துவது என்பதே பெரும் குழப்பமாக இருக்கும்படியாக அத்தனை தலைகள் உருள்கின்றன. பார்த்தார் அர்ஜூன் சிங்!! நரசிம்மராவ்தான் முழுமுதற்காரணம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். ஒழிந்தது பிரச்சனை. நரசிம்மராவ் போயே போய்விட்டார். அவருக்காக குரல் கொடுக்க இப்பொழுது யாரும் இல்லை. தவிர, நரசிம்மராவ் சோனியாவுக்கு பிடித்தமில்லாதவர். இந்த ஒருகாரணம் போதாதா? இதிலும் பிரதமர் வாய் திறக்கவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? வேண்டுமானால் ஆண்டர்ஸன் சார்பில் மன்னிப்பு கோருவார்; வருத்தம் தெரிவிப்பார். ஏற்கனவே சீக்கிய கலவரத்திற்கு யாரின் சார்பிலோ மன்னிப்பு கோரியது போல!!

அடுத்ததாக, முந்தைய வரலாற்று நிகழ்வுகளின் வரிசையில் இடம்பெறக் கூடிய அளவு தகுதி படைத்த ஸ்பெக்ட்ரம். இந்த ஒரு விஷயத்தில், இவர் பிரதமராக செயல்பட உண்மையாகவே தகுதி படைத்தவர்தானா என்று பெருவாரியான மக்கள் மனதில் கேள்வியை எழுப்ப வைத்த விஷயம். என்னதான் பிரதமர் நேர்மையாளராகவும், யோக்கிய குணசீலராகவும் இருந்தாலும், அவரது செயல்பட இயலாத தன்மை, அவருடைய நேர்மையையே கேள்விக் குறியாக்கிவிட்டதே? இவ்வளவு பெரிய இமாலய ஊழல்; தேசத்தின் மிகப்பெரிய, பாரம்பரியம் மிக்க தேசியக் கட்சியின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்க வைத்த ஊழல். பிரதமரின் உத்தரவிற்க்குப் பிறகும், முறைகேடாக ஒரு ஏலத்தை நடத்தியிருக்கிறார் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை சகா. அப்படியென்றால் அந்த அமைச்சரவையில் பிரதமரின் மதிப்புதான் என்ன? அத்தனை குற்றச்சாட்டுகள், அதனை ருசுப்பிக்கும் ஆதாரங்கள், டெலிபோன் உரையாடல்கள் என கைப்புண்ணாக இருந்த பிரச்சனையில், பிரதமர் இன்னும் மெளனம் சாதிப்பது எதனால்? சுதந்திரமடைந்த அறுபத்து மூன்றாண்டுகளில், ஒரு பிரச்சனையில் கூட சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையில்லாத பிரதமர் எத்தனை லட்சமாவது முறையாக கொடியேற்றினால்தான் என்ன? யாருக்குப் பெருமை?

காஷ்மீர் விவகாரம்!! பாரத தேசம் இந்த அண்டத்தில் உள்ளளவும், காஷ்மீர் பிரச்சனையும் இருக்கும்; அதன் பரிணாமமும் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் என்று கூறும்படியான அளவிற்க்கு ஆட்சியாளர்களின் நிர்வாக, மற்றும் முடிவெடுக்கும் திறமையின்மையால் விளைந்த ஒரு கோரம். இதன் தீவிரம் இப்பொழுது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. தினமும் வன்முறை, கலவரம், கொலைகள் என வளர்ந்து கொண்டே போகிறது. இதனையெல்லாம் ஒரு முடிவிற்கு கொண்டுவர என்ன செய்வது என்று செய்வதறியாமல் காங்கிரஸ் திகைத்து நிற்கிறது. எல்லாம் காங்கிரஸின் கர்மவினை என்று சொல்லாமல் என்ன செய்வது? பிரதமர் வருத்தப்படுகிறார்; கெஞ்சுகிறார். போதுமே!! வேண்டாமே என்று நா தழுதழுக்கிறார். காஷ்மீரில் பிரிவினைவாதிகளோடு சேர்ந்து முன்னாள் முதல்வரின் அரசியல் கட்சியும் சேர்ந்து பிரச்சனையை இன்னும் தீவிரப்படுத்துகிறது. ஆட்சியாளர்கள் விழி பிதுங்குகிறார்கள். காஷ்மீருக்கு சுயாட்சி கொடுப்பது பற்றி பரிசீலிப்போம் என்கிறார் பிரதமர். இதுதான் தீர்வா இதற்கு? இப்படி செய்வதற்க்கு பதிலாக பேசாமல், காஷ்மீரை பாகிஸ்தானுக்கே பிரதமர் தாரை வார்த்து விடலாம். இரண்டும் ஒன்றுதான்! நாமும் அறுபத்து மூன்றாவது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்.

பாகிஸ்தான் தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்டுகள் பிரச்சனை. பாகிஸ்தான் பிரச்சனைக்கு காஷ்மீர்தான் காரணம் என்று சொல்வதுதான் ஒரே தீர்வு. காஷ்மீர் பிரச்சனைக்கும் முடிவில்லை. ஆக பாகிஸ்தான் தீவிரவாதமும் ஒரு தொடர்கதைதான். இது ஒருபுறமிருக்க மாவோயிஸ்டுகள் பிரச்சனை. தினமும் ஒரு ரயில் கவிழ்ப்பு; ஐம்பது பாதுகாப்பு படையினர் மரணம் என பத்திரிக்கைத் தலைப்புச் செய்திகள். மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டால் நமது சாயம் வெளுத்து விடுகிறது. பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் அதிலும் பிரயோஜனமில்லை. ஆட்சியாளர்களின் நிலை அந்தோ பரிதாபம். மாவோயிஸ்டுகளுக்கு ஐ எஸ் ஐயும், தாவூத் இப்ரஹீம் மற்றும் சோட்டா ஷகீலின் உதவியும், தூண்டுதலும் இருக்கிறது என புதிய கண்டுபிடிப்பு வேறு. என்ன பிரயோஜனம்? பிரதமர் தீவிரவாதிகளின் தாயார் அழுவதைப் பார்த்து இரவுத் தூக்கத்தைத் தொலைக்கிறார். மனிதாபிமானவாதி. மக்கள் பிரதமரின் செயல்பாட்டினைப் பார்த்து வாழ்க்கையில் தூக்கத்தையே மறந்து விடுவர் போலும்.

மேற்கண்ட பெருமைகள் போதாமல், தற்போது பாரதத்தின் மேன்மைக்கும் மேலும் மேன்மை சேர்க்க காமன்வெல்த் ஊழல். ஸ்பெக்ட்ரம் ஊழலையே மிஞ்சும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இதனைப் பற்றிப் பேசிய மணிசங்கர ஐயர் தேசத்துரோகியாகிவிட்டார். அயல்நாடுகளில் இந்தியாவின் பெருமை இவ்விவகாரத்தால் சந்தி சிரிக்கிறது. அயல்நாட்டு தூதரகத்திலிருந்து வந்த கடிதத்தை போர்ஜரி செய்யுமளவிற்கு படு கேவலமாக ஒரு காங்கிரஸ் எம்.பி நடந்து கொண்டிருக்கிறார். பிரதமர் என்ன செய்கிறார்? யாருடைய ஆணைக்காக காத்திருக்கிறார். ஒரு ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களையெல்லாம் பதினைந்து ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். வேலையைத்தான் ஒழுங்காகச் செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. ஏராளமாகப் பணம் செலவழித்து கட்டிய கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுகிறது. இந்த லட்சணத்தில் மத்திய பொதுப்பணித்துறை, தில்லி பொதுப்பணித்துறை என்று பலர் வரிந்து கட்டிக் கொண்டு ஈடுபட்டுள்ளனராம். ஊக்கத்தொகை வேறு!! சுதந்திரமடைந்து அறுபத்து மூன்றாண்டுகளாகியும், பிரதமர் மட்டும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது.

இவை தவிர, விலைவாசி உயர்வு, பண வீக்கம், விவசாயிகள் தற்கொலை, கிரிமினல் பின்னணி அமைச்சர்கள், மாயாவதி, மம்தா பானர்ஜி, தண்ணீர் பிரச்சனைகள், கட்ட பஞ்சாயத்து மற்றும் இதர சமூக விரோத செயல்கள் போன்றவை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டதாலும், அவற்றைப் பற்றி மக்களே கவலையற்றிருப்பதாலும் பிரதமரும் அதைப் பற்றி கவலையுறத் தேவையில்லை.

" ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று....."

- யதிராஜ்50! ?


21 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யதிராஜ் - 50-க்கு வாழ்த்துகள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//63 ஆவது சுந்தந்திர தினத்தையொட்டி ஏழாவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக்கொடியேற்றுகிறார்//

எனக்கு ஒரு சந்தேகம், இது 63-வதா, 64-வதா?

Madhavan said...

நாட்டோட நெலமையை 'நெத்தியடி' மாதிரி சரியாச்ச் சொன்னீங்க.... என்ன பண்ணுறதுன்னு தான் எனக்கும் புரியல..பாப்போம்.. ..

यदा यदा ही धर्मस्य ग्लामिर्भावती भारत |
अब्युत्थानमधर्मस्य तथात्मानं श्रजाम्यहम :
पवित्रानाया साधुनाम विनासयाकादुस्क्रुताम |
धर्मास्म्स्थानापनार्थाया संभवामि युगे युगे :

அஞ்சா நஞ்சன் said...

63 ஆ? 64 ஆ?

குமாரவேல் said...

திருத்தம்
64 ஆவது சுந்தந்திர தினம்
63 ஆண்டு சுந்தந்திர

bandhu said...

//
//63 ஆவது சுந்தந்திர தினத்தையொட்டி ஏழாவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக்கொடியேற்றுகிறார்//

எனக்கு ஒரு சந்தேகம், இது 63-வதா, 64-வதா?
//
ரொம்ப முக்கியம்.. எனக்கு விபத்து ஆனா பேருந்தின் conductor இறந்தவர்களின் சட்டை பையில் எதையோ தேடினாராம்.. என்னவென்று கேட்டால் டிக்கெட் எண்ணிக்கை சரி பார்க்கிறேன் என்றாராம்.. அது போல் உள்ளது. எண்ணிக்கை சரியாக இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன.. இந்த சுதந்திரத்தை வைத்து சாதிக்க வேண்டியவைகளை சாதிக்காமல் விட்டோமே..

ramanindia25@gmail.com said...

.யதிராஜ் / இ.வ.க்கு வாழ்த்துகள்!மிக மிகச்சரியான ஒரு பதிவு... நூறு சதம் சரியான விஷயங்கள் மட்டுமே உள்ள ஒரு பதிவு.. ஒவ்வோர் நாள் விடியும் போழ்தும் இன்று இந்த தேசம மேலும் ஒரு பெரும் பெயரும் புகழும் உய்க்குமென்று ஓர் நம்பிக்கையுடன் கண் விழிக்கிறேன்!! நிஜத்தில் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சுகிறது.. " இந்த தேசத்தின் சட்டங்கள் அத்தனையும் கிழித்து எறிந்து விட்டாலும் நான் ஒரு நாளும் தவறு செய்யவே மாட்டேன்" என்று சொன்னார் ஒரு real leader- சொன்னது யாரென்று உடனே நினைவுக்கு வரவில்லை--இந்த நாட்டில் எக்கு போன்ற உறுதியுடன் கண்டிப்பான ஒரு அமைப்போ அல்லது கட்சியோ தலைமை ஏற்கும் வரை விடிவு ஏது??
குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை உண்டு என்னும் நிலை வர வேண்டும்.ஆனால் துணை போகிறவர்கள் கையில் அல்லவா மாட்டிக்கொண்டு நம் நாடு திண்டாடுகிறது.
ramanindia_I Love India

யதிராஜ சம்பத் குமார் said...

இந்த தேசத்தின் சட்டங்கள் அத்தனையும் கிழித்து எறிந்து விட்டாலும் நான் ஒரு நாளும் தவறு செய்யவே மாட்டேன்"///

If i am not wrong, it was quoted by our former Prime minister "Morarji Desai".

64 ஆவதை 63 ஆகக் குறைத்த குற்றத்திற்காக மன்னித்தருள்க. :)

rk said...

Congragulations to Yahthiraj, good observation and rightly put.This MM Singh is the most corrupt of them all. Anyone who is willing to hold on to his position, in this case PMship,by hook or crook and who is willing to close his eyes to all the corruptions happening right in front of him and is willing to fetch the ball Sonia throws like poodle, is as corrupt as the rest. MMS is a spineless, gutless, corrupt jelly fish( apology to jelly fish).
Rama

Anonymous said...

யதிராஜ்

குமுறியிருக்கிறீர்கள். மன்மோகனை முதலில் யோக்யவான் என்று அழைப்பதை நிறுத்துங்கள். அவர் தன் மந்திரி சபையில் யார் மந்திரி என்று தீர்மானிப்பதைக் கூட யாரோ ஒரு ப்ரோக்கர் நீரா ராடியா தீர்மானம் செய்ய அனுமதிக்கிறார் என்றால் இவரைப் பிரதமர் என்று நாம் அழைப்பதே மஹா கேவலமான ஒரு விஷயம். யோக்யன் என்றால் தன் உரிமையில் ஒரு ப்ரோக்கர் தலையிடுவதை எப்படி அனுமதிப்பார்? யோக்யன் என்றால் 1 லட்சம் கோடி ரூபாய் மோசடியை ஒன்றுமே நடக்கவில்லை என்று எப்படி நற்சான்று பத்திரம் வழங்குவார்? யோக்யன் என்றால் மனிதாபிமானி என்றால் நம் இந்தியர்கள் நூற்றுக்கணக்காணோர் விபத்துக்களிலும் குண்டு வெடிப்புக்களிலும் இயற்கை சீற்றங்களிலும் எல்லாம் இறந்த பொழுது மரியாதை நிமித்தமாக ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்காத மன்மோகன் சிங் பாக்கிஸ்தான் விமான விபத்தில் நூறு பேர் செத்தவுடன் ஒப்பாரி வைத்து அழுகிறார். ஆஸ்த்ரேலியாவில் ஒரு முஸ்லீம் பயங்கரவாதி கைது செய்யப் பட்டால் தனக்கு உறக்கும் போனதாகச் சொல்கிறார் ஆனால் நம் சொந்த சமீபத்திய கல்கத்தா ரெயில் விபத்து உட்பட இந்தியர்கள் பரிதாபகரமாக இறக்க நேர்ந்த பல்வேறு துக்க சம்பவங்களுக்கு அதே யோக்யன் ஒரு மரியாதை நிமித்த அஞ்சலி கூட செலுத்தவில்லை. ஆகவே மன்மோகனை யோக்யன் என்று அழைத்து யோக்யவான் என்ற வார்த்தைக்கே அவப் பெயரைச் சம்பாதித்துத் தராதீர்கள். எனக்கென்னமோ கோல்டன் டெம்ப்பிளுக்குள் இந்திரா ராணுவம் அனுப்பிய குற்றதிற்கு இன்று சீக்கியத் தீவீரவாதிகள் வேறு வகையில் ஒட்டு மொத்த இந்தியர்களையுமே பழிவாங்குகிறார்களோ என்ற சந்தேகம் இந்த ஆளின் அயோக்யத்தனமான காரியங்களைப் பார்க்கும் பொழுது ஏற்படுகிறது.

Anonymous said...

கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்,
அம்மா 'கை' கூட்டணி வரும்னு சொல்றாங்க. கொஞ்சம் பொறுங்க. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுஅப்புறம் திட்டலாம்.

R.Gopi said...

63 இல்லேன்னா 64, எண்ணிக்கையில் என்ன இருக்கிறது....

இந்த 63 - 64 வருடங்களில் என்ன சாதித்தோம், காங்கிரஸை மாநிலத்தில் இருந்து அகற்றி கழகங்களின் கையில் ஒப்படைத்ததை தவிர!!??

ரிஷபன்Meena said...

//எனக்கென்னமோ கோல்டன் டெம்ப்பிளுக்குள் இந்திரா ராணுவம் அனுப்பிய குற்றதிற்கு இன்று சீக்கியத் தீவீரவாதிகள் வேறு வகையில் ஒட்டு மொத்த இந்தியர்களையுமே பழிவாங்குகிறார்களோ என்ற சந்தேகம் இந்த ஆளின் அயோக்யத்தனமான காரியங்களைப் பார்க்கும் பொழுது ஏற்படுகிறது.//

வாய் விட்டு சிரிக்க வைத்தது. உன்மையில் அது தான் நிஜம் என்று நினைக்கிறேன். முன்பு நிதித்துறை இப்போ திட்ட கமிஷனில் இருக்கும் இவர் சிஷ்யர் அலுவாலியாவும் வேண்டிய மட்டும் கெடுதல் செய்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.

udhavi iyakkam said...

சரியான ஒரு பதிவு... வாழ்த்துகள்!

Anonymous said...

I will equate PM to Bhishma...Though has good intentions he has no guts to rise to the occasion. HE IS SURELY A WEAK PM INDEED

அமுதப்ரியன் said...

இந்தியக் குடிமகன்: கடவுளே, எங்கள் நாடு எப்போது வல்லரசாகும்?
கடவுள்: நான் அழிந்து மறுபிறப்பெடுக்கும் போது.

-- அமுதப்ரியன்

R. Jagannathan said...

Suspend ஆகியுள்ள உமாசங்கர் IAS சிறுபான்மை கௌன்சிலுக்கு எழுதியுள்ள கடிதம் எனக்கு மெயிலில் நண்பர் அனுப்பியிருக்கிறார். நீண்ட கடிதம். யெல்லொரும் அவசியம் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ராஜாத்தி அம்மாள், அழகிரி, நிறைய அதிகாரிகள் அவரை காயப்படுத்தி இருக்கிறார்கள். உங்கள் மெயில் அட்ரெஸ் கொடுத்தால் அனுப்பி வைக்கிறேன். - ஜெ.

Manion said...

//தனியொரு பிரதமர் ஐம்பதாயிரம் பாதுகாப்புப் படைவீரர்கள் புடை சூழ, குண்டு துளைக்காத கூண்டிற்குள் இருந்து கொடியேற்றும் நிகழ்வை சுதந்திரம் என்று நாமும் மார்தட்டுவது துரதிருஷ்டவசமானது; //


-- நறுக்!

rk said...

Please do not ever compare Bhisma to this corrupt MMS. Bhisma was embodiment of Dharma and what is known as SPECIAL DHARMA. He had eaten the salt ( tamil saying) of Dhuruyodana and his dharma was to fight for him. Abandoning him in the war would have amounted to a greatest treason and betrayal, hence he chose to fight for Kavuravas.MMS is corrupt and selfish and is interested only in holding onto his postion by any means.
Rama

Kamesh said...

அருமையான பதிவு, திருவாளர் பிரதமர் என்ன செய்ய வல்லவர் என்பது தெரிந்தும் அவர்களுக்கு வாக்களித்த நாம் தான் குற்றவாளிகள், நாளொரு குண்டுவெடிப்பு, கலவரம், ஊழல் இவற்றோடு சுடந்தந்திர தினம் . மாற்றம், கட்டாயம் தேவை, ஆனால் யார் இருக்கிறார்கள் தேநேடுப்பவன் புறங்கை நக்காமல இருப்பான்.

cho visiri said...

Yathirajjee said,
//64 ஆவதை 63 ஆகக் குறைத்த குற்றத்திற்காக மன்னித்தருள்க. //:

In my view, 63rd I'day was celebrated on 15.08.2010, if Independence day is akin to Birthday.

The logic for my view is that First Birthday of a child is celebrated only on completion of one year since birth.