பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 15, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-8-2010

முனிக்கு இட்லிவடை எழுதும் அவசரக் கடிதம்...

வணக்கம் முனி,
முதலில் சுதந்திர தின வாழ்த்துகள். இந்தச் சுதந்திர தினத்தில் குமுதம் 'பை பை' காமிச்சிட்டாங்க. ரிப்போர்ட்டர், சிநேகிதி இரண்டு பை வீக்லியும் வரதராஜனுக்கு, மற்றவை ஜவஹர் கைவசம். இனி ரிப்போர்ட்டர், சிநேகிதியில் 'குமுதம்' லேபிள் இருக்காது. ரிப்போர்ட்டருக்கு பதிலா குமுததுலேருந்து வேற ஒரு பை வீக்லி வரும் என்று எதிர்ப்பார்க்கலாம். அரசியலில் புலனாய்வு பத்திரிக்கை என்று பார்த்தால் இவர்களைப் பற்றியே ஒரு பெரிய புலனாய்வு செய்ய வேண்டியிருக்கும் போல. கோயில் பற்றி எழுதும் முக்கிய நபர் இப்ப எந்த பக்கம் போவது என்று யோசித்துக்கொண்டு இருக்காராம்.

அடுத்த மேட்டர் சிம்பு தேவன் பத்திரிக்கை ஆரம்பிக்க போகிறாராம். பேசாம கலைஞரை கவுரவ ஆசிரியராக நியமிக்கலாம். நல்ல காமெடியாக எழுதுவார். துக்ளக் கலைஞர் ஜோக்ஸ் என்று இந்த வாரம் போட்டிருக்கிறார்கள். சமயம் கிடைக்கும் போது படித்து பார்.

சில நாட்களுக்கு முன் கலைஞர் இப்படி சொல்லிஇருக்கார். "மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் மொத்த கடன் பொறுப்பு 592 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2009-10ம் ஆண்டின் இறுதியில் அரசுக்கு உள்ள மொத்த கடன் 88 ஆயிரத்து 882 கோடி ரூபாய் தான்!"

எவ்வளவு நாளைக்கு தான் கலைஞர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று மற்ற மாநிலங்களோட ஒப்பிட்டு கருத்து சொல்றது... இந்த முறை உலக அளவில் அமெரிக்காவோட ஒப்பீடு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் "ஒபாமாவிற்கு கற்றுக்கொண்டுத்த தலைவர் என்று பெருமை இவருக்கு வந்து சேரும்". என்ன ஒன்று, ஒபாமா மிஸ்டர் கருணாநிதி என்று சொல்லாமல் கலைஞர் என்று சொல்ல வேண்டும்.

ஜோக்ஸ் அப்பார்ட், கொஞ்சம் கோப மேட்டர் பற்றி பார்க்கலாம்.

இன்போசிஸை திருட்டுக் கம்பெனி என்று சொன்னவுடன் எல்லாரும் கடுப்பாகிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 'பாடி ஷாப்' என்று சொல்லும் போது வராத கோபம் இப்ப எதற்கு வந்தது என்று ஆச்சரியம் தான். முன்பு படிக்காதவர்களை அடிமைகளாக விற்றார்கள் இப்ப படித்த அடிமைகளை விற்கிறார்கள். அமெரிக்க விசா கட்டணம் ரொம்ப அதிகம் என்று புலம்புகிறார்கள். அமெரிக்கா போவது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக ஆகிவிட்டது, உண்மையான சாப் ஷாப் யார் என்பதை இந்த கார்ட்டூனை பார்த்தால் தெரியும். அவ்வளவு தான்.

அமெரிக்காவை விட ஜெயமோகன் கூட்டத்துக்கு ஊட்டி போவது இன்னும் கஷ்டம் என்று பலருக்கு தெரிவவில்லை. பேசாம மக்கள் அமெரிக்காவுக்கு சென்று அங்கிருந்து ஊட்டிக்கு விசா வாங்கிகொண்டு வரலாம். ஜெயமோகன் கூட்டத்துக்கு இவ்வளவு பேர் வர கூடாது என்று நிபந்தனை எல்லாம் போட்டிருக்கார். நானும் ஏன் என்று யோசித்தேன். அப்பறம் தான் புரிந்தது, இல்லோரும் கூட்டமாக போய் ஊட்டியில் உட்கார்ந்தால் இவர்கள் விடும் மூச்சு காற்றி ஊட்டி சூடாகிவிடாதா? அதுவும் இலக்கிய கூட்டம். அப்பறம் தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு நஷ்டம் வராதா? அந்த நல்லெண்ணம் தான். ( நல்ல படம், நன்றி பத்ரி )

நல்லெண்ணத்துக்குக் காரணம் பகவத் கீதை என்று நரேஷ் குப்தா ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.

நான் எப்போதுமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. பலனை எதிர்பார்க்காமல் சந்தோஷமாகக் கடமையைச் செய்வதைப் பெருமையாக நினைத்தேன். இதற்கான மனோபலத்தை எனக்கு அளித்தது பகவத்கீதையும் காந்தியக் கொள்கைகளில் எனக்குள்ள ஆழ்ந்த ஈடுபாடும்தான். படிக்கிற காலத்தில் என்னிடம் எப்போதும் ஒரு பாக்கெட் சைஸ் பகவத் கீதை புத்தகம் இருக்கும். உண்மையை எழுதினால் பிரச்னை வரும்! ஆக பகவத் கீதை படித்தால் நல்லெண்ணத்துடன் வாழலாம். முன் உதாரணம் காந்தி. அடுத்து இவர். இவர் கலைஞரைப் பார்க்கவில்லை என்று கலைஞர் ரொம்ப வருத்தப்பட்டார். ஆனால் பகவத் கீதை படித்ததால் ஒரு நல்ல கொள்கையுடன் வாழ்த்துள்ளார் நரேஷ் குப்தா.

உமாசங்கர் பற்றிய பெட்டிஷனை உடனே இட்லிவடையில் போடுங்கள் நிறைய மெயில் வந்துவிட்டது. நேற்று கூட ஒரு மெயில் 'அர்ஜண்ட்' என்று வந்தது. திறந்து பார்த்தால் உமாசங்கர் பற்றி உடனே போடவும் என்று அவர் எழுதிய லெட்டர்.

அதில் இது மாதிரி எழுதியிருக்கார்.

"While I was working in ELCOT, twice I was called by Tmt.Rajathi Ammal, wife of the Hon'ble Chief Minister of Tamil Nadu to her office at Alwarpet. I should have refused to meet her. However, by way of courtesy I met her in her office. She attempted to influence me to award contract to her men in the matter of purchase of 45000 fishermen wireless sets. I told her that only through e-tender contracts are finalised and I should not be disturbed."


போலீஸ்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் பணியாற்றும் `ஆடர்லி' முறை நீண்ட நெடுங்காலமாக பழக்கத்தில் இருந்தது. இந்த `ஆடர்லி' முறையை ஒழித்து முன்பு கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். இருந்தாலும் மறைமுகமாக இந்த `ஆடர்லி' முறை வேறு மாதிரியாக பழக்கத்தில் உள்ளது. உமா சங்கர் முதலவர் அழைத்தால் போகவேண்டும் ஆனால் அவர் குடும்பத்தில் யாராவது அழைத்தால் எதற்குப் போகவேண்டும் ? அதுவும் இரண்டு முறை ? இதுவும் கிட்டத்தட்ட ஆடர்லி மாதிரி தான். முன்பு பார்த்துவிட்டு இப்ப ஆங்கில கடித இலக்கியம் எழுதி என்ன பயன்? அவர் முன்பு சமர்ப்பித்த ஜாதிச் சான்றிதழ் நிஜமா, போலியா என்று தெரியாத நிலையில் இவர் எவ்வளவு நேர்மையாக நடந்திருந்தாலும் அது எல்லாம் வேஸ்ட் என்று நினைக்கிறேன். நரேஷ் குப்தாவுக்கு இவருக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பார்க்கலாம். எல்லாம் கீதை செய்த வேலை. உடனே உமா சங்கருக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் ஒரு செட் கீதை பார்சேல்..

இதை சொன்னதால் உடனே என்னைப் பார்ப்பான் என்று நீங்க திட்ட வேண்டாம். கலைஞர் ரெடியாகத் திட்டு வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் புதுசாக 'அவாளுக்கு' ஒரு ஃபார்முலா கொண்டு வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன் அவர் பேசிய பேச்சு இது. பார்ப்பனீயம், பிராமணர் உருவத்தில் மட்டுமல்ல செட்டியார், முதலியார், தலித் என யார் உருவத்தில் வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். அதுதான் திமுகவின் கொள்கை. இந்த கொள்கைப்படி நாங்கள் செயல்படுவதால்தான் எங்கள் இயக்கம் இந்தியா அளவில் முழு வெற்றி வாகை சூடியுள்ளது.

அதை விடக் காமெடி, அசினுக்கு போலீஸ் பாதுகாப்பு. ஏன்? இலங்கை சென்று வந்துள்ளார். நம்ம தமிழ் தொண்டர்கள் செய்ய முடியாத ஒன்றை இவர் செய்துள்ளார். அதனால் பாதுகாப்பாம். அசின் பரவாயில்லை, ஆனால் கருணாஸ் நிலமை தான் பாவம். இலங்கைக்கு செல்லக் கூடாது என நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்ந்து மொபைலில் மிரட்டி வருவதாக சென்னை கமிஷ்னரிடம் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். ஏதோ நேர்த்தி கடனுக்கு போகணுமாம். ஆனால் நம்ம தமிழர்கள் விட மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால் கருணாஸ் அசின் மாதிரி மிரட்டலுக்கு பயந்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். உண்மையான தமிழன். சபாஷ்! அசினுக்கு பாது காப்பு குடுத்தாங்க, சரி. கருணாஸுக்குக் குடுத்தாங்களா? தெரியாது. ஆனா குடுக்கலாம். இலங்கைக்கு டிக்கெட் வாங்கறவங்க எல்லாருக்கும் குடுக்கலாம். இன்று பிரதமர் கொடி ஏற்றுவதற்கு பாதுகாப்பு என்றால் பரவாயில்லை, ஆனால் அசின் டான்ஸ் ஆடினால் பாதுகாப்பு என்றால் நம் வரி பண்ம் எப்படி எல்லாம் வீணாகிறது என்று பாருங்கள். இப்ப எல்லாம் இலங்கைக்கு பயணம் செய்வர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மாதிரி ஹார்லிக்ஸ் ஏற்றிக்கொண்டு போகும் லாரிகளுக்கும், மிட்டாய் ஏற்றிக்கொண்டு போகும் வண்டிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதுவும் மதுரை பக்கம் என்றால் ராணுவப் பாதுகாப்பு தேவைப்படும்.

திருச்சியில் ஜெயலலிதா கூட்டத்தை பார்த்துச் சிலர் மிரண்டு போயிருக்கிறார்கள். பத்திரிகையாளுக்கு தனியாக விநியோகிக்கபட்ட அறிக்கையின் காப்பியில் "கை" என்ற வார்த்தை அடைப்பு குறிக்குள்ள இருக்காம். அதனால அனைவரும் “கை” கோர்த்துச் செயல்படுவோம்னு அவர் சொன்னதுல ஏதோ "கை"மேல் பலன் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

இதை படிக்கும் போது அனுபம் கேர் செய்த டுவிட் தான் ஞாபகம் வருகிறது
There is Father’s Day, Mother’s Day, Friendship Day, etc. But no dog day? Every dog has his day, but when?

சிலர் கருணாநிதி என்று என் பேரை சொல்லி தான் கூப்பிடுகிறார்கள் என்று ரொம்ப வருத்தப்படுகிறார் கலைஞர். மரத்தைக் கொத்திக்கொண்டு இப்ப நம்மை கொத்திக்கொண்டு இருக்கும் பறவை ஒன்று இலக்கியக் கட்டுரை ஒன்றில் கருணாநிதி என்று எழுதி, அது வெளி வந்த போது அதைக் கலைஞர் என்று மாற்றி விட்டார்களாம். கட்டுரையே எடுத்திருந்தால் எடிட்டருக்குப் பரிசு தந்திருக்கலாம். அது கூடப் பரவாயில்லை, நடிகர்களில் இந்த "சார்" கலாச்சாரம் எப்ப வந்தது? ரஜினி சார் என்று ரைட்டர் பேயோன் சொன்னால் போனால் போகிறது என்று விடலாம். ஆனால், சூரியா சார், தனுஷ் சார், என்கிறார்கள் ஆனால் அசினை அசின் என்றும், நயந்தாராவை நயன் என்று தான் சொல்லுகிறார்கள். பெண்களுக்குத் தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதை இவ்வளவு தான்.



அப்படியே "சார்" என்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியானவர் நமிதா மட்டும் தான் !


( எது எப்படியோ, இதோ இவர்களை பற்றி எழுதியதால் இந்தப் படத்தை போட முடிந்தது. )

இப்போதைக்கு பை,
இட்லிவடை



8 Comments:

ரிஷபன்Meena said...

சிம்பு தேவன் , ஏன் இப்படி , எல்லாம் நல்லத்தானே போய்டிருக்கு !

எல்லோரையும் நரேஷ் குப்தா ரேஞ்சுக்கு ஒப்பிடுவது சரியில்லை. உமா சங்கர் அளவிற்கேனும் நாணயமான அதிகாரிகள் எத்தனை பேர் உண்டு. அவரை இப்படி டபுள் குட்டு குட்டியிருக்க வேண்டாம்.

ரோமிங் ராமன் said...

முனி சாருக்கும், இ வ சாருக்கும் வணக்கம் .. ஒபாமாவுக்கு உலக ஆங்கில செம்மொழி மாநாடு நடத்த ஆலோசனை வழங்கி கருணா சார் கடிதம் எழுதி இருப்பதாக ஒரு செய்தி!! பரவாயில்லையே... கருணாவுக்கு(அவர் குடும்பத்துக்கும் கூட ) கடன் என்று ஒரு சொல் தெரியுமா என்ன? பாவம் நரேஷ் குப்தா .. காமராஜர் காலத்தில் வாழ்ந்திருந்தாலாவது ஒரு பெரிய கெளரவம் கிடைத்திருக்கும்..
[ edited ]

ராகவேந்திரன் said...

இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர், குஷ்பு என்ன பாவம் செய்தார், அவரையும் குஷ்பு சார் என அழைக்கலாம் என திருத்தி வாசித்து கொள்ளவும்

kggouthaman said...

// அப்படியே "சார்" என்று மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியானவர் நமிதா மட்டும் தான் !
//

ஏன்?

priya said...

Karunanidhi - kalaingzar
Jayalalitha- Amma
Ramadass-Ayya
Vijayakanth - Captain

Makkal - Maakangal

Gaana Kabali said...

//பத்திரிகையாளுக்கு தனியாக விநியோகிக்கபட்ட அறிக்கையின் காப்பியில் "கை" என்ற வார்த்தை அடைப்பு குறிக்குள்ள இருக்காம். அதனால அனைவரும் “கை” கோர்த்துச் செயல்படுவோம்னு அவர் சொன்னதுல ஏதோ "கை"மேல் பலன் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.//

ஐயையோ! அப்படி நடந்துவிட்டால் மாபெரும் ஊழல் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அம்மாவோடு சேர்ந்து நாமும் வக்காலத்து வாங்கவேண்டி வருமே! சோனியாவின் கைப்பாவையாக செயல்படும் உழல் பிரதமருக்கு அம்மாவே அங்கீகாரம் கொடுத்துவிடுவார்களே இதை விட்டால் வேற வழியே இல்லையா?

Anonymous said...

கொஞ்சம் அடக்கி வாசிங்க சார்,
அம்மா 'கை' கூட்டணி வரும்னு சொல்றாங்க. கொஞ்சம் பொறுங்க. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுஅப்புறம் திட்டலாம்.

பாரதசாரி said...

இந்த 'சார்' கலாச்சாரம் ரொம்பவே கேவலம், அதுவும் பெயரோடு சார் என்று அழைப்பது அபத்தம்.