சினிமா பாடல் காட்சிகளுக்கு மலேசியா சிங்கபூர் என்று போவார்கள். இப்ப வெளியீட்டுக்கும் போகிறார்கள். க்லோபல் வார்மிங் காரணமாக இருக்கலாம். எந்திரன் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது. சூப்பர் ஸ்டார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் ராவணாவை விட அதிக எதிர்ப்பார்ப்பு!. இதுவரை எந்த படத்திலும் இந்த மாதிரி காட்சிகளை பார்த்திருக்க மாட்டீர்கள், இது வித்தியாசமாக படம், ரஜினி சார் சூப்பர், ஐஸ் சூப்பரோ சூப்பர் போன்ற ஹைப் எல்லாம் திட்டமிட்டு பத்திரிக்கையில் வர தொடங்கியிருக்கிறது.
படத்தில் ஆறு பாடல்கள்...
1. புதிய மனிதா...
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரஹ்மான், ஹதீயா ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
மைக்குக்கு Feedback கிடைக்கும் போது, வரும் சவுண்டுடன் ஆரம்பித்து மெதுவாக ஆரம்பிக்கும் பாடல் எஸ்.பி.பி வந்த பின் வேகம் பிடிக்கிறது. ஏ.ஆர்.ரஹமான், ஹதீயா ரஹ்மான் சேர்ந்து கலக்கியிருக்கியிருக்கிறார்கள். மெதுவாக ஒரு ரோபோ உருவாகுவது போல பாடல் அமைத்திருக்கிறார்கள். எஸ்.பி.பி வந்தவுடன் ரோபோவுக்கும் பாடலுக்கு உயிர் வந்துவிடுகிறது. மனிதனுக்கும் ரோபோவும் போட்டி போட்டுக்கொண்டு பேசிக்கொள்ளுவது போல அமைந்த பாடல் வரிகள் அருமை. "ரோபோ ரோபோ பன் மொழிகள் கற்றாலும், என் தந்தை மொழி தமிழ் மொழி அல்லவா ?" தாய் மொழியை தந்தை மொழியாக்கிய பெருமை வைரமுத்துக்கு.
2. காதல் அணுக்கள்...
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
பாடல் : வைரமுத்து
டெஸ்பரடோ ஆங்கில படத்தில் மெக்ஸிகோ பாடல் ஒன்று வரும் அதை போல ஆரம்பிக்கும் காதல் டூயட். ஸ்ரேயா கோஷல் பாடினாலும் விஜய் பிரகாஷ் 'ஹய்யோ' என்று சொல்லும் போது நம்மை அள்ளிக்கொண்டு போகிறார்.
காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை ?
நியூட்ரான் ஏலேக்ட்ரோன் -உன்
நீல கண்ணில் மொத்தம் எத்தனை ?
உன்னை நினைத்தாள்
திச்சுகள் தோறும் ஆசை சிந்தனை ஹய்யோ
என்று ஒருவர் மாறி ஒருவர் காதல் வரிகளை இறைத்துக்ஜொல்லும் வழக்கமாக பாடல், நிச்சயம் கேட்க கேட்க ஹிட்டாகும் என்று நம்புகிறேன். நடுவில் oh baby oh baby என்று வரும் வரிகள் நிச்சயம் மூன்றாம் முறை கேட்கும் போது தான் புரியும் :-)
3. இரும்பில் ஒரு இதயம்...
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், காஷ் என் கிறிஸ்ஸி
பாடல் : மதன் கார்க்கி, காஷ் என் கிறிஸ்ஸி(ஆங்கில வரிகள்)
ரோபோ என்று சினிமாவில் வந்தால் ஒரு பாடல் சின்தசைசர் குரலில் வர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 'விக்ரம்... விக்ரம்..." என்று நாம் ஏற்கனவே கேட்ட மாதிரி ஆரம்பித்து நல்ல வேளை அதை பாடல் முழுவதும் இல்லாமல் கொண்டு வராமல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் காஷ் என் கிறிஸ்ஸி பாடி கலக்கியிருக்கும் பாடல். தமிழ் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் பாட ஆங்கில வரிகளை காஷ் இன் கிரிஸ்ஸி பாடியிருக்கார். வித்தியாசனாம கலக்க பாடல். பாடல் லிரிக்ஸ் புரிகிறது !
4. அரிமா அரிமா...
பாடியவர்கள் : ஹரிகரன், சாதனாசர்க்கம்
பாடல் : வைரமுத்து
அரிமா அரிமா-நானோ
ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்- யம்மா
சும்மா விடுமா?
என்று எந்திரனாக இருக்கும் மனிதனுக்கு காதல் வந்து பாடும் பாடல் என்பதால் ஹரிஹரன் பாடாமல் கொஞ்சம் மிரட்டியிருக்கார்.
திரையரங்களில் நிச்சயம் மக்கள் கை தட்ட வேண்டும் என்று இந்த வரிகள் எழுதப்படிருக்கலாம்.
இவன்
பேரைச் சொன்னதும், பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைதட்டும்
இந்த பாடல் கொஞ்சம் சுமார் தான்.
5. கிளிமஞ்சரோ...
பாடியவர்கள் : ஜாவிட் அலி, சின்மயி
பாடல் : பா.விஜய்
ஷங்கர் படத்தில் க்ளைமேக்ஸுக்கு 20 நிமிஷம் முன்னாடி ஒரு "உப்பு கருவாடு", "ரதீ தீ தீ தீ" பாடல் மாதிரி ஒன்று வர வேண்டும். அந்த வரிசையில் இந்த பாடல். ஜாவிட் சத்தம் போட்டு பாடினாலும் பாடலில் ஸ்பீட் கம்மி. பா.விஜய் பாடல் வரிகள் ரொம்ப சுமார் ரகம் தான். சின்மயி பாடியிருக்கார் என்று அவரே டிவிட் செய்து சொல்லிக்கொள்ள வேண்டும். நிச்சயம் தியேட்டரில் மக்கள் தம் அடிக்க வெளியே போக கூடிய பாடல் இது என்று நினைக்கிறேன். ஷங்கரிடம் ஒரு நம்பிக்கை, காட்சிகளில் நம்மை கட்டிப் போட்டுவிடுவார் பார்க்கலாம்.
6. பூம் பூம் ரோபா டா...
பாடியவர்கள் : யோகி பி, கீர்த்தி, ஸ்வேதா, தன்வி
பாடல் : மதன் கார்க்கி
கிட்டதட்ட "ஒரு குடை சன்லைட்" மாதிரி ராக் கலந்த சிவாஜி பாடல். படத்தில் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும். பட்டி தொட்டி ரோபோ, சுட்டி சுட்டி ரோபோ என்று ரோபோ பாடல். அடுத்த வருடம் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சேர்த்தாலும் ஆச்சரியப்பட கூடாது. நிச்சயம் குழந்தைகள் பள்ளி விழாக்களில் ரோபோ வேஷம் போட்டு ஆட போகிறார்கள்.
7. பூம் பூம் ரோபா டா தீம் பாடல்
பாடியவர்கள் : பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி பி
கம்யூட்டர் மியூசிக், ஜதி எல்லாம் கலந்த தீம் பாடல். படம் முழுக்க ரோபோ அட்டகாசங்கள் செய்யும் போது வரும் தீம் பாடல்.
கனகவேல் காக்க பாடல்கள் இதை விட பெட்டர் என்று பா.ரா டிவிட் செய்வார் கண்டுக்காதீங்க :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, July 31, 2010
எந்திரன் பாடல்கள் FIR
Posted by IdlyVadai at 7/31/2010 12:00:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










32 Comments:
குட், கேக்க சந்தோஷமா இருக்கு
இன்று காலை Music World -ல் முதல் ஆளாக CD வாங்கி வந்து பலமுறை பாடல்களை திரும்ப திரும்ப கேட்டேன். முதலில் பிடிக்காதது போல் தோன்றிய பாடல்களும் கேட்க கேட்க பிடிக்க ஆரம்பித்து விட்டன.
CD யோடு தரப்பட்ட பாடல் புத்தகத்தில் ரகுமான் இவ்வாறு எழுதியிருக்கிறார்:
The movie redefines Tamil commercial cinema.
I hope it sows seeds to inspire people to take leadership in giving the original inventions from the East.
இது முழுக்க முழுக்க உண்மை. உலக அளவில் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தன்னுடைய முந்தைய சாதனைகளின் மூலமும் மேற்கண்ட எண்ணங்களின் மூலமும் இளைய சமுதாயத்திற்கு ஊட்டிவரும் ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.
'பூம் பூம் ரோபோடா' பாடலில் வரும்
"வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு ஆனால் மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர்தான் உண்டு திமிரே இல்லை"
என்று வைரமுத்துவின் மகன் கார்க்கி எழுதியுள்ள வரிகள் எனக்கு பிடித்திருந்தன.
நல்ல பதிவு நன்றி,
சொன்னது பதிவுக்கல்ல, மஞ்சள் பூச்சுக்கு
பாடல்கள் சுமார்.
ரஜினி ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.
எந்திரன் - இரைச்சல்
சங்கர் படத்துக்கு பாடல்கள் தான் பிரதானமே- பாட்டு சொதப்பலா இருந்தாக்கூட காட்சிகளில் கவர்ந்து விடுவார்.
Songs rock!
//பலமுறை பாடல்களை திரும்ப திரும்ப கேட்டேன். முதலில் பிடிக்காதது போல் தோன்றிய பாடல்களும் கேட்க கேட்க பிடிக்க ஆரம்பித்து விட்டன.//
இதே ரோதனையாப் போச்சு!! ஏன் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் தடவை கேட்ட உடனே பளிச்சுனு மனசில உக்கார்ற மாதிரி, பிடிக்கற மாதிரி இசை போடத்தெரியாதா? திரும்பத்திரும்ப கேட்டா எந்தப் பாடலா இருந்தாலும் மனசில பதிஞ்சு நல்லாத்தான் இருக்கும்.. இது பாடலைப் புடிச்சுப் போறது இல்லை..மக் அடிக்கறது....
’பலமுறை கேட்டுப்பார், you will love it' என்றே எல்லா ரஹ்மான் பாடலுக்கும் அறிவுறுத்தப்பட்ட எரிச்சலில்,
சீனு
songs Rockzzzzzzzzzzzzzz
Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
திரும்ப திரும்ப கேட்டா கோலங்கள் பாட்டு கூட ஹிட் ஆகும். ரெஹ்மான் பாட்டு அது போல தான்.
//ஏன் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் தடவை கேட்ட உடனே பளிச்சுனு மனசில உக்கார்ற மாதிரி, பிடிக்கற மாதிரி இசை போடத்தெரியாதா?//
நண்பர் சீனு அவர்களே,
A .R. ரகுமான் நம் மனதிற்கு பரிச்சயமில்லாத புதியபரிமாணத்தில் புதுமாதிரியாக இசை அமைப்பதால் அந்த ராகத்தை மனசு உள்வாங்கி பழக்கப் படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப் படுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் பலவற்றில் அவருடைய வழக்கமான டியூன்களே மீண்டும் மீணடும் வருவதால், அவை ஏற்கனவே நமக்கு பழக்கப் பட்டிருப்பதால் முதல் தடவையே பிடித்துவிட சாத்தியமிருக்கிறது.
அதே மாதிரி தான் விஜய் படத்தில் வரும் குத்துப் பாடல்களும். அந்த பாடல்களில் வரிகள் மாறியிருக்குமேயன்றி, டியூன் ஒரே மாதிரி இருப்பதால் சீக்கிரமே மக்களுக்கு பிடித்து விடுகிறது. விஜய் பட குத்துப் பாடல்களுகெல்லாம் ஆதாரமான் டியூன் எது தெரியுமா ? இசைஞானி இளையராஜா 'பணக்காரன்' படத்தில் இசையமைத்த "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்" என்ற பாடலின் டியூன் தான். இசைஞானியின் இந்த பாடலின் இசை நமக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருப்பதால், ஏறத்தாழ அதே சாயலில் இருக்கும் விஜய் பட குத்துப் பாடல்கள் முதல் தடவை கேட்டவுடனே பிடித்துவிடுகிறது.
நம்மிடம் பல வருடங்களாக இருக்கும் பழக்கப் பட்ட செல் போனை ஆபரேட் செய்வது நமக்கு மிகவும் எளிதாக இருக்கிறது.
புதிதாக வாங்கிய ஒரு ஹை டெக் மாடல் செல் போனை புரிந்துக் கொண்டு ஆபரேட் செய்வதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப் படுகிறது, அது போல் தான் இதுவும்.
எந்த இசையமைப்பாளர்களுக்கும் பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றித் தர முடியும். ஆனால் ஏனோ தெரியவில்லை ஏ.ஆர்.ரகுமான் அப்படி செய்வதில்லை. அதனால் தானோ என்னவோ அவருடைய இசை உலக அளவில் எல்லா மொழியினராலும் விரும்பப் படுகிறது.
அப்பப்பா!! ஒரு பெரிய சங்கீத ஆராய்ச்சியே நடக்கிறது! அதான்யா சங்கர் மற்றும் ரஹ்மான் கூட்டணியின் வெற்றியே!!
மேலும் சங்கர் வெறும் பெரிய டைரக்டர் மட்டுமல்ல -- அபாரமான நெளிவு சுளிவு தெரிஞ்ச மிகப்பெரிய வியாபாரி!! கண்டிப்பாக ஜெயிப்பார் !!
Adappavi... Arima Arima really rocks. Listen onemore time.
Adappavi... Arima Arima really rocks. Listen onemore time.
காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ இரண்டு பாடல்கள் மட்டும்தான் பாஸ் மார்க் என்று தோன்றுகிறது.
//kggouthaman said...
காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ இரண்டு பாடல்கள் மட்டும்தான் பாஸ் மார்க் என்று தோன்றுகிறது//
*******
அப்படி இல்லையே கௌதமன் சார்...
பாடல்கள் இதுவரை கேட்காத / கேட்டிராத புதிய பாணியில் இசையமைக்கப்பட்டுள்ளது... இசைக்கோர்வு / ஆர்செஸ்ட்ரேஷன் மிக நன்றாகவும் ரிச்சாகவும் உள்ளது..
இசையில் தொய்வு காணப்படவில்லை
மொத்தத்தில் எந்திரன் ஆல்பம் நிஜமான ஹிட் ஆல்பம்தான்... (சொல்லப்போனால், சிவாஜி படத்திற்கு பிறகு ஹிட்டான ஒரு முழு ஆல்பம் இதுவாகவே இருக்கும்...)..
ராஜ்குமார் சொன்னது போல், அரிமா அரிமா பாடல் மிக நன்றாகவே உள்ளது..
இன்னும் ஓரிரண்டு முறை கேட்டால், கண்டிப்பாக பிடிக்கும் சார்....
நான் எந்திரனில் அதிகமா கேட்கும் பாடலே அரிமா அரிமா பாடலும் கிளிமஞ்சாரோ பாடலும் தான் ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை. பாவம் அவர் என்ன தான் செய்வார்... உலகத்துக்கே பிடிக்கிற மாதிரி இசை கோர்க்க வேண்டிய கட்டாயம் அவருக்கு.
/***நண்பர் சீனு அவர்களே,
A .R. ரகுமான் நம் மனதிற்கு பரிச்சயமில்லாத புதியபரிமாணத்தில் புதுமாதிரியாக இசை அமைப்பதால் அந்த ராகத்தை மனசு உள்வாங்கி பழக்கப் படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப் படுகிறது.**/
Dear Gaana Kabali,
I am pretty sure that you do not know what is mean by ragaa??? Hahahahaha.....
/***அதே மாதிரி தான் விஜய் படத்தில் வரும் குத்துப் பாடல்களும். அந்த பாடல்களில் வரிகள் மாறியிருக்குமேயன்றி, டியூன் ஒரே மாதிரி இருப்பதால் சீக்கிரமே மக்களுக்கு பிடித்து விடுகிறது. விஜய் பட குத்துப் பாடல்களுகெல்லாம் ஆதாரமான் டியூன் எது தெரியுமா ?***/
Vijay eppo music direcor aanaar???
Kabali Neenga sariaana comedy piece boss :)
/***அதே மாதிரி தான் விஜய் படத்தில் வரும் குத்துப் பாடல்களும். அந்த பாடல்களில் வரிகள் மாறியிருக்குமேயன்றி, டியூன் ஒரே மாதிரி இருப்பதால் சீக்கிரமே மக்களுக்கு பிடித்து விடுகிறது. விஜய் பட குத்துப் பாடல்களுகெல்லாம் ஆதாரமான் டியூன் எது தெரியுமா ?***/
//Vijay eppo music direcor aanaar???//
oru velai - kabali sir meant vijay "antony" ;-)
can anyone tell what's the meaning of அரிமா?
/*** ♥Manny♥ said...
can anyone tell what's the meaning of அரிமா?***/
Lion.
oh.. Thanks..
SPB rocks in Puthiya Manitha song and Irumbile iruthayum is very good in music :-) i think I have to hear the other songs few more times to make sure they are good or not :p
//I am pretty sure that you do not know what is mean by ragaa??? Hahahahaha.....//
அன்பு நண்பர் பாலு அவர்களே,
"what is mean by ragaa?" என்பதை
"what is meant by ragaa?" என்று தானே நீங்கள் எழுதியிருக்கவேண்டும்?
உங்களுக்கு எப்படி இந்த தவறு நேர்ந்ததோ அது போலவே 'இசையை' என்பதற்கு பதிலாக 'ராகத்தை' என்று நான் தவறாக எழுதிவிட்டேன். என் தவறை நகைச்சுவையோடும், பெருந்தன்மையோடும் சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
//Vijay eppo music direcor aanaar???//
"விஜய் படத்தில் வரும் குத்துப் பாடல்கள் " என்று தான் எழுதியிருந்தேனே அன்றி "விஜய் இசையமைத்த பாடல்கள் ' என்று நான் எங்கும் எழுதவில்லையே!
இருந்தாலும் பரவாயில்லை, என்னை உங்கள் அன்யோநியமான நண்பராக பாவித்து என்று கிண்டலடித்ததற்கும் , உங்கள் நகைச்சுவை உணர்விற்கும் என் பாராட்டுக்கள்.
Check this http://www.apple.com/euro/itunes/charts/top10worldalbums.html
//A .R. ரகுமான் நம் மனதிற்கு பரிச்சயமில்லாத புதியபரிமாணத்தில் புதுமாதிரியாக இசை அமைப்பதால் அந்த ராகத்தை மனசு உள்வாங்கி பழக்கப் படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப் படுகிறது.//
I agree with Mr. Gaana Kabali.
/***♥Manny♥ said...
//A .R. ரகுமான் நம் மனதிற்கு பரிச்சயமில்லாத புதியபரிமாணத்தில் புதுமாதிரியாக இசை அமைப்பதால் அந்த ராகத்தை மனசு உள்வாங்கி பழக்கப் படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப் படுகிறது.//
I agree with Mr. Gaana Kabali.
*****
Ithellaam ungalukkey overah theriala? Raagam ndreenga isainkreenga, paatta ketta appadi onnum therialaiye, ungalukku paattu pidichirukkuthu enbatharkaaka romba overah persureengale ssaami thaangaldaa iyaa...
/***Ithellaam ungalukkey overah theriala? Raagam ndreenga isainkreenga, paatta ketta appadi onnum therialaiye, ungalukku paattu pidichirukkuthu enbatharkaaka romba overah persureengale ssaami thaangaldaa iyaa...***/
I agree with Mr. Annony
/****"விஜய் படத்தில் வரும் குத்துப் பாடல்கள் " என்று தான் எழுதியிருந்தேனே அன்றி "விஜய் இசையமைத்த பாடல்கள் ' என்று நான் எங்கும் எழுதவில்லையே!****/
Anthar baldi!!!! Neenga enna solla varrenganu onnume puriala???
You are a Noise kabali.
songs are rocks இதே உங்களுக்கு over....இதுல கமெண்ட்ஸ் ரொம்பவே ஓவர்
இதே உங்களுக்கு over....இதுல கமெண்ட்ஸ் ரொம்பவே ஓவர்
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
by
TS
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
Post a Comment