பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 29, 2010

தன் வண்டவாளங்களை தகர்க்கும் பா.ம.க

தமிழக அரசியல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பீஹார் அரசியல் போல் தரம் தாழ்ந்து வருகிறது. காமராஜரும், கக்கனும் இருந்த புனிதமான தமிழக அரசியலில் இன்று குண்டர்களும், சமூக விரோதிகளும் ஜாதிப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

பாமகவினர், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அரியலூரில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமகவின் வெற்றிக்கொண்டான் காடுவெட்டி குரு, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்காவிடில் தண்டவாளங்களைத் தகர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே கருணாநிதியை அவதூறாகப் பேசியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, பின்பு கூட்டணி கண்டபிறகு, கூட்டணி தர்மத்தின்பாற்பட்டு மன்னிக்கப்பட்டார்.

பாமக மறுபடியும் அதிமுக கூட்டணிக்குச் சென்று விட்டு, பிறகு வழக்கம்போல திமுக கூட்டணிக்குத் திரும்பி அன்புமணி ராமதாஸுக்கு மந்திரி பதவி பிச்சையில் தோல்வி கண்ட பிறகு காடுவெட்டி குரு சகட்டு மேனிக்கு பேச ஆரம்பித்துள்ளார்.

அதன் ஒருகட்டமாகத்தான் இந்த தண்டவாளாத் தகர்ப்பு எச்சரிக்கை. அரசனும் கைவிட்டு, புருஷனும் கைவிட்ட கையறு நிலையில் பாமக மறுபடியும் வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தை இப்போது கையிலெடுத்துள்ளது. ஏன் இந்த திடீர் வன்னியர் பற்று இவர்களுக்கு வந்தது ?

அநேகமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு கழகக் கூட்டணியில் ஐக்கியமாகும் வரை இந்த ஜாதி பஜனை தொடரலாம். பொதுச் சொத்தான தண்டவாளத்தைத் தகர்ப்பேன் என்கிற இம்மாதிரியான குண்டர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் நாடு என்னவாகும் ? தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் பா.ம.க உருப்படாமல் போகவேண்டும்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, வன்னியர்கள் கொதித்தெழுந்தால் தமிழகம் தாங்காது என்று அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தையே கொதித்தெழக் கூடிய அளவிற்கு சக்தி வாய்க்கப்பெற்ற அன்புமணி எதற்காக ராஜ்யசபா சீட்டிற்காக கோபால புரத்தில் பிச்சை எடுத்து அல்லாடுகிறார் என்பதுதான் பெரிய புதிர்.

ரமணா விஜயகாந்த் பாணியில், புள்ளி விவரம் தருகிறார் அன்புமணி. என்னவென்றால்? 53 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியராம்; தமிழகத்தில் பணியாற்றும் 355 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒன்பது பேர் மட்டுமே வன்னியராம்; இது போன்று ஒவ்வொரு பதவிக்கும் ஒரு கணக்கு தருகிறார். வன்னியர் மீது இவர்களுக்கு அக்கறை இருந்தால் அவர்களை உங்களை போல டாக்டருக்கு படிக்க வையுங்கள் அல்லது பின் கேட் வழியாக உங்களை போல மந்திரி பதவி கொடுங்கள். முதலில் உங்கள் கட்சிகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு தாங்க அப்பறம் தண்டவாளங்களை தகர்கலாம்.

தேர்தல் நெருங்க நெருங்க, காலையில் கக்கா வரலை என்றால் கூட ஆர்பாட்டம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.


20 Comments:

ராகவேந்திரன் said...

இந்த கட்டுரையை அருள் என்கிற அன்பருக்கு உடனடியாக ஒரு பார்சேல் சாமி

தமிழன் said...

உடனிடியாக அழிய வேண்டிய கட்சி பா ம க. அவர்கள் இருக்கும்வரை தமிழ் நாடு உருப்பட போவதில்லை.

ஜெயக்குமார் said...

தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று இந்த பா.ம.க. இதுபோன்ற ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் கட்சிகளின் அழிவில்தான் தமிழகத்தின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது.

Krish said...

இவர்களை எல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!

Anonymous said...

...வெட்டிய, _____ய வெட்டி போட்டா சரி ஆகிடும்

geeyar said...

தற்போது இருக்கும் சாதிகட்சிகளிலேயே பெரிய கட்சி பாமக தான். பிற ஜாதிகாரர்கள் பாமகவை வெறுப்பதால் பலன் ஒன்றும் இல்லை. வன்னியரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துவதாக வன்னியர்கள் உணர்ந்து வன்னியர்களே பாமகவை வெறுத்தால் மட்டுமே இதேபோல் பிற கட்சியினர் வரமாட்டார்கள்.

இன்று பாமகவை வெறுக்கும் பலர் நாளை பாப்பாத்தி சொன்னா, ஊதுவார் சொன்னார், நாயக்கர் சொன்னார், நாயுடு சொன்னார் என பாமகவிற்கு வோட்டு போடத்தான் போறீங்க.

Anonymous said...

I don't believe PMK will vanish away anytime soon. I expected members of PMK to get split/abandon after DMK neglected them, but it didn't happen. Though the educated society might find it hard to believe, PMK does have a loyal following. I only feel angry and sad about the future of TN.

smart said...

//இந்த கட்டுரையை அருள் என்கிற அன்பருக்கு உடனடியாக ஒரு பார்சேல் சாமி//
repeatukiren

smart said...

இந்த விஷயத்தை வச்சு நானும் ஒரு பதிவுப் போட்டுருக்கேன்.
யாராச்சும் சாதி ஒழிக்க பெரியார் பாடுபட்டாருனு வந்தால் அனுப்பிவைங்கள்

ramanindia25@gmail.com said...

ஒருவன்,ஒரு ஜாதியின் பெயரால் அந்த மற்றும் இதர ஜாதிகாரர்களையும் ஏமாற்றி மத்திய மந்திரி பதவி etc. etc. கிடைத்து மிக சுகமான வாழ்க்கை வாழ முடியும் என்னும் நிலை இருக்கும் வரை இந்த நாடு எப்படி முன்னேறும்??

//தமிழக அரசியலில் இன்று குண்டர்களும், சமூக விரோதிகளும் ஜாதிப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்//

இதை சரி செய்ய வேண்டியது இந்த சமூகமன்றி வேறோருவரில்லை!! ஏனென்றால் அரசியல்வாதிகளின் முதல நோக்கம் மக்களை ஏமாற்றி தானும் தன குடும்பமும் (எந்த கட்சியும் விலக்கல்ல) பெரும் (also பெறும்) செழிப்படைவது. இதற்காக மக்களை MISLEAD செய்து எதையும் செய்யத்தயாராகி விடுகிறார்கள்! அறிவை நல்ல நோக்கத்தில் பயன் படுத்தும் ஒரு தலைவர் / வழிகாட்டி வரும் வரை இந்த சமூகம் காத்திருக்க வேண்டியதுதான்!

Mukhilvannan said...

சாதி துவேஷம் வகுப்பு வாதமா?
சட்டம் என்ன சொல்லுகிறது?
வழிப்போக்கன்

ரமி said...

//
தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் பா.ம.க உருப்படாமல் போகவேண்டும்.
//

100% correct.

R. Jagannathan said...

குரு பேசியது தேசீய சொத்துக்களுக்கும், மக்களுக்கும் எதிரானது என்னும்போது, தமிழக அரசு இன்னும் மெத்தனமாக இருப்பது ஆபத்தானது. தேச நலனை பாதுகாக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கலாம். - ஜெ.

ராசராசசோழன் said...

அரசியலுக்கும் கலிகாலம் வந்துவிட்டது....

rk guru said...

காடுவிட்டி பய புள்ள குரு....

R.Gopi said...

காடுவெட்டி குருவின் இந்த ஆபத்தான பேச்சுக்கு தமிழ்நாடு அரசு இன்னமும் மவுனம் சாதிப்பது எதை காட்டுகிறது?

வரவிருக்கும் தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி என்பதையா?

இன்னமும் உள்ளே தூக்கி போட்டு, அவனின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டாமோ?

Anonymous said...

/*
தேர்தல் நெருங்க நெருங்க, காலையில் கக்கா வரலை என்றால் கூட ஆர்பாட்டம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
*/
இதுதான் ஹிட்....

Anonymous said...

//தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் பா.ம.க உருப்படாமல் போகவேண்டும்.//

ஜாதிக் காட்சிகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
கால ஓட்டத்தில் தானாகவே இவைகள் கரைந்து விடும்.
பா ம க இப்போது கட்டெறும்பாகி விட்டது. டாக்டருக்குப்பின் தானாகவே காணாமல் போய் விடும்.

இப்போது புதிதாக வின் டி வியில் 'ஒரு யாதவா கட்சி' ஒன்று முளைத்துக் கொண்டிருக்கின்றது. இதும் முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டும்.

ஜாதி காட்சிகளை சுய லாபத்திற்காக வளர்த்து விட்ட மஞ்சள் துண்டு கட்சியும், பெருசின் காலத்திற்குப் பின் பொடிப் பொடியாக சிதறுவதை நாம் காணத்தான் போகின்றோம். அடுத்த வருடம் தமிழ் நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும். காணக் காத்திருப்போம்.

இப்படிக்கு
காசு வாங்கி ஓட்டுப் போட்டு மானம் கேட்ட டமிலன்.

Manion said...

//காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, வன்னியர்கள் கொதித்தெழுந்தால் தமிழகம் தாங்காது என்று அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தையே கொதித்தெழக் கூடிய அளவிற்கு சக்தி வாய்க்கப்பெற்ற அன்புமணி எதற்காக ராஜ்யசபா சீட்டிற்காக கோபால புரத்தில் பிச்சை எடுத்து அல்லாடுகிறார் என்பதுதான் பெரிய புதிர்.//
இந்த ஈன பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்!

Sathish said...

தமிழகத்தையே கொதித்தெழக் கூடிய அளவிற்கு சக்தி வாய்க்கப்பெற்ற அன்புமணி எதற்காக ராஜ்யசபா சீட்டிற்காக கோபால புரத்தில் பிச்சை எடுத்து அல்லாடுகிறார் என்பதுதான் பெரிய புதிர்.