பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 09, 2010

அசினும் அசல் அசடுகளும்

தமிழ் நாட்டு நடிகர் சங்கத்துக்கு திடீர் திடீர் என்று தமிழ்ப்பற்று வந்துவிடும். கூலீங் கிளாஸ் போட்டு கொண்டு மைக்கில் சிரித்துப் பேசிக்கொண்டு, காலையில் நல்லாச் சாப்பிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்து தமிழ்ப்பற்றைக் காண்பிப்பார்கள்.

அசின் சல்மான்கானுடன் நடிக்கும் 'ரெடி' இந்தி படத்துக்கு ஷூட்டிங்கிற்காக இலங்கை சென்றார். உடனே இந்த வீராதி வீரர்கள் எப்படி நீங்க இலங்கைக்குச் செல்லலாம் என்று கேட்டு தமிழ் நடிகர் சங்கம் அவர் மீது நடவடிக்கை எடுக்க போகிறது என்று அறிவித்து உள்ளனர். ரஜினிகாந்த் அல்லது கமல் அவர்களின் படத்துக்கு இலங்கை சென்றால் இவர்கள் இதே போல நடவடிக்கை பூச்சாண்டி காண்பிப்பார்களா? அஜித் கலைஞர் முன்னாடி இவர்களின் ரவுடி தனத்தை அடித்துப் பேசிய பின்பும் இவர்களுக்குப் புத்திவரவில்லை.
தமிழ் சினிமா என்ற மாஃபியா கும்பல் செய்யும் இந்த வகையான செயல்கள் சட்ட விரோதமானது என்று யாராவது வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும்?

அசின் கேட்கும் சில கேள்விகள் நியாயமானது:


சினிமா நட்சத்திரங்கள் இலங்கைக்குப் போகக் கூடாது என்கிறோம். அதேநேரம் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி அங்கே நடந்தபோது நம்முடைய இந்திய கிரிக்கெட் அணி அங்கே சென்று விளையாடியது. சென்னையிலிருந்து தினமும் பல விமானங்கள் இலங்கைக்குச் செல்கின்றன. பல மக்கள் தினமும் இலங்கைக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், துயரத்திலிருக்கும் மக்களை சந்தோஷப்படுத்தும் அரசியல், மொழி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட கலைஞர்களுக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை என்று புரியவில்லை.நான் ஒரு நடிகை மட்டுமே. எனக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன்.அரசியலையும்,சினிமாவையும் கலக்காதீர்கள்.


இதை எல்லாம் ராதாரவி (அவர் தாம்பா இப்ப நடிகர் சங்கப் பொதுச்செயலாளர்) இந்த மாதம் 30 தேதி திரும்ப நடிகர் சங்கச் செயற்குழுக் கூட்டம் கூட்டி அசின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று டிஸ்கஸ் செய்ய போகிறார்களாம். என்னே இவர்களின் தமிழ் பற்று. அசின் மலையாள நடிகை அவர் மீது தமிழ் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க போகிறதாம். தற்போது விஜய், அஜித் படத்திலும் என்ற ஹீரோக்களுடன் அசின் நடிக்கிறார். ஆனால் நிஜ ஹீரோ இவர் தான்.

தற்போது குஷ்பு திமுகவில் முக்கியப் புள்ளியாகத்தானே இருக்கிறார்? அவர் இந்த விவகாரத்தில் ஏன் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்க கூடாது? தமிழ் நாட்டில் பெண் சிங்கத்துக்கு பஞ்சம் போல!20 Comments:

zeno said...

பதிவுக்கேற்ற படம்!

யதிராஜ சம்பத் குமார் said...

இனமானம் பற்றி நெற்றி நரம்பு தெறிக்க முழங்கும் சீமான், தனது படத்தில் சிங்கள நடிகையை நடிக்க வைத்த போது இந்த நடிகர் சங்கம் எங்கே போயிருந்தது?

rk guru said...

இருக்குற குடுமைய்லே அசின் ஒரு கொடுமை...

சூர்யகதிர் said...

புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களே விடுமுறைக்காக இலங்கை செல்லும் போது அசின் தொழில் ரீதியாக போவதில் என்ன பிழை?

தமிழர்களில் படிபறிவில்லாதவர்களே தலைவர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

கிரி said...

//ரஜினிகாந்த் அல்லது கமல் அவர்களின் படத்துக்கு இலங்கை சென்றால் இவர்கள் இதே போல நடவடிக்கை பூச்சாண்டி காண்பிப்பார்களா? //

இட்லிவடை தெரியாத மாதிரி கேட்கறீங்க!

ரஜினி படம் என்றால் புரட்டு சாரி புரட்சி தமிழன் சத்யராஜ், புரட்சி இயக்குனர் செல்வமணி உட்பட பலர் பொங்கி எழுந்து விட மாட்டார்களா! கூட்டம் போட்டு தங்கள் தமிழ் உணர்வை!!! காட்ட மாட்டார்களா! உடன் தமிழில் உள்ள "அழகான" சொற்களை பயன்படுத்த மாட்டார்களா!

நல்லா சொல்றாங்கய்யா டீடைலு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

(தமிழ் சினிமா) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..............

Thalapathi said...

//தற்போது விஜய், அஜித் படத்திலும் என்ற ஹீரோக்களுடன் அசின் நடிக்கிறார். ஆனால் நிஜ ஹீரோ இவர் தான்

app ithu... :)
அஜித் - வேட்டி கட்டின ஆம்பளை

http://idlyvadai.blogspot.com/2010/02/blog-post_08.html

ஆளவந்தான் said...

பதிவுல தெரியுது உங்க அசட்டு தனம்.

அவனை நிறுத்த சொல்லு.. நான் நிறுத்துறேன்னு.. நாயகன் வசனத்தை அசின் பேச.. அதை ஆமோதிக்குது இ.வ.

ஒரு இயக்கம் - தென்னிந்திய நடிகர் சங்கம், தன் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு கட்டளை இடுகிறது.. இதுல கிரிக்கெட்/அரசியல் எங்கு இருந்து வந்துச்சு??


அந்த படத்தை அங்க தான் எடுக்கணும்’னு எதாவது அவசியம் உண்டா? ஏற்கன்வே மொரிஷியஸ்’ல எடுக்கிறதா தானே திட்டம்.. ஏன் இலங்கை? ராஜபக்சே/சல்மான் சொல்றத கேக்குற அசின், ஏன் தமிழ் மக்கள் உணர்வை புரிஞ்சுக்க கூடாது..

அவர் இயக்கத்தின் கோரிக்கை நிராகரித்ததால், அவருடைய படத்திற்கு ஒத்துழைப்பு தரப்பட மாட்டது’ங்கிறது எங்க இருந்து வந்துச்சு “பஞ்சாயத்து தனம்”?

J. Ramki said...

இப்படி மொக்கை பதிவு போட்டதுக்கு நாலு அசின் படத்தை போட்டிருக்கலாம்.

பைதபை, அடுத்த முறை ஒரு சேஞ்சுக்கு ரஜினி அல்லது கமல்ஹாசன் அவர்களின் படத்துக்குன்னு எழுதுங்க!

//
ரஜினிகாந்த் அல்லது கமல் அவர்களின் படத்துக்கு இலங்கை சென்றால் இவர்கள் இதே போல நடவடிக்கை பூச்சாண்டி காண்பிப்பார்களா? //

Krish said...

சினிமால இருக்குற பாதி பேர் கூமுட்டைங்க......அறிவிலிகள். இவங்ககிட்ட என்ன எதிர்பாக்க முடியும்.

Krish said...

It is better for Asin. She can get rid of this ugly heros. Stay in Bollywood Asin

Anonymous said...

The whole issue with IIAF is that these celebrities were invited to show off a political message that Sri Lanka can kill innocent Thamils but now the whole India should not get into their business..

Its different flying to SL for personal reasons.

First of all, Indian cricket team doesnt go on a tour with Rajapaksa's son on an open Jeep waving and holding any hands.. Please note that most of the Indian actors were latterly holding his Blood stained Vellai Vesti and parading for money and fame...! Thats what is being argued here..

கலாநேசன் said...

//தமிழ் சினிமா என்ற மாஃபியா கும்பல் செய்யும் இந்த வகையான செயல்கள் சட்ட விரோதமானது என்று யாராவது வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும்?//
அ.. அ ..அ.. உங்களுக்குத் தெரியாதா? ஒன்னும் ஆகாதுன்னு

RasaRasaChozhan said...

நல்ல சொன்னீங்க போங்க...

முகமூடி said...

யதி நல்ல கேள்வி!! ஆனா நீங்களும் எதையோ கொளுத்தி போடற மாதிரி தெரியுதே!!

ஜோதிஜி said...

உங்களை தவிர்க்க முடியாத அளவிற்கு பின்னால் வரவழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

நாளைக்கு உலகம் அழியப் போகுதுன்னு தெரிந்தால் உங்களைப் பற்றி வெளியே அப்பொழுதாவது சொல்வீர்களா?

மானஸ்தன் said...

@ஜோதிஜி
//நாளைக்கு உலகம் அழியப் போகுதுன்னு தெரிந்தால் உங்களைப் பற்றி வெளியே அப்பொழுதாவது சொல்வீர்களா?//

உலகம் அழியறதுக்குள்ள ஆட்டோ அனுப்பிட்டுதான் போகணும் என்று ஒரு முடிவோட இருக்கீங்க போல.
நல்லா இருங்க. :>

R.Gopi said...

//யதிராஜ சம்பத் குமார் said...
இனமானம் பற்றி நெற்றி நரம்பு தெறிக்க முழங்கும் சீமான், தனது படத்தில் சிங்கள நடிகையை நடிக்க வைத்த போது இந்த நடிகர் சங்கம் எங்கே போயிருந்தது?//

கொளுத்தி போட்டுட்டியே தல....

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்...(என் வீட்டை தவிர)....

ரெட் ஜயண்ட் மூவிஸ்
கிளவுட் நைன் மூவிஸ்
சன் டி.வி...

Thameez said...

இவளுக்கு இத்தனை பேரு கருத்து சொன்னதே ஆச்சிரியம் ! நீங்க என்ன அசின் ரசிகர் மன்ற தலைவர? இல்லை ஜொள்ளு விடுறதுல மன்னனா ? தப்பு தான் அவ போனது. நீங்க சொன்ன அத்தனை காரணங்களும் செம மொக்கை. குறிப்பா ரஜினி கமல் பத்தி சொன்னது. ஒரே ஒரு ஆறுதல் இந்த ப்ளாக்ல இத்தனை பேரு வந்ததுதான்.

thiru said...

asin/pisin is not the worry. Has anyone so far looked up about muthukumar's parents?If his family is ok?

yes i'll be told 'why cannt you do'.But i am not the one screaming with ina mana unarvu?eh?"