பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 16, 2010

ஆழித் தேர்

நமது ஊர் கோவில்களில் எல்லாம் திருவிழா என்றால், ”தேரோட்டம்” நிச்சயமாக இடம் பெறும். எல்லா ஊர்களிலும் தேர் திருவிழா நடைபெறும். ஊர் கூடி தேரிழுப்பார்கள். இரண்டு வடங்களைக் கொண்டு, காலையில் தொடங்கி, மாலையில் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே என்கிறீர்களா?

ஊர் கூடி இழுத்தால் மட்டும் போதாது, புல்டோசர்கள் நான்கை வைத்து தேர் இழுத்து பார்த்திருக்கிறீர்களா? லாரி, லாரியாக ஸ்லீப்பர் கட்டைகளையும், முட்டுக் கட்டைகளையும் வைத்து அங்குலம் அங்குலமாக தேர் நகர்ந்து பார்த்திருக்கிறீர்களா? ஹைட்ராலிக் ப்ரேக் முறையில் தேர் அசைந்து ஆடுவதை பார்த்திருக்கிறீர்களா? தேர் என்று நிலைக்கு வரும் என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான கூட்டம் காத்திருந்ததை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

மேற்க்கண்ட கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் இல்லையென்றால், நீங்கள் திருவாரூர் ஆழித் தேரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை.

”திருவாரூர் தேரழகு” மாத்திரம் இல்லை. தலைமுறை, தலைமுறையாக, ஆழித் தோரோட்டத்தை நடத்தும் குடும்பங்களுக்கு, ஒரு தவம்.

சுமார் 96 அடி (30 மீட்டர்) உயரம், 360 டன் எடை கொண்ட தியாகராஜரின் ரதம்தான் திருவாரூர் தேர். ஆசியாவின் மிகப் பெரிய தேர்களில் ஒன்று என்று புகழப் படும் ஆழித்தேர் நான்கு நிலைகளை கொண்டது. முதல் நிலை 6 மீட்டர்களும், இரண்டாவது நிலை 1.2 மீட்டர்கள் உயரமும் கொண்டது. மூன்று மட்டும் நான்காவது நிலைகள 1.6 மீட்டர் உயரம் கொண்ட பீட வடிவமைப்பு கொண்டது. இந்த நிலைகளில் தான் தியாகேசப் பெருமான், அம்மையுடன் வீற்றிருப்பார்.

இரும்பு தகடுகள் பொருத்தப்பட்ட தேரினுடைய ஆறு சக்கரங்கள், ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரை நிறுத்த ஹைட்ராலிக் ப்ரேக் முறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவன (BHEL) பொறியாளர்களைக் கொண்டு கையாளப் படுகிறது.

மரத்தினால் ஆன தேரில், அழகிய கலை நயத்துடன் புராணத்திலிருந்து சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மரத்தேரின் மீது, 20 மீட்டர்கள் அளவிற்க்கு, மூங்கில் கம்புகள், தோரணங்கள், தேர் சீலைகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டு, காகிதக் கூழில் செய்யப் பட்ட பிரம்மா தேரோட்டியாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும் நிறுத்தகின்றனர்.

26 டன் எடை கொண்ட அலங்கரிக்கப்படாத தேர், அலங்கரிக்கப் பட்டபின் 360 டன் எடை கொண்ட ஆழித் தேராக உருவெடுக்கிறது. தேரை அலங்கரிக்க மட்டும் 3000 மீட்டர் அளவிலான தேர்சீலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. தேரின் உச்சியில் 1 மீட்டர் உயரத்திற்க்கு கூம்பு வடிவ கலசமும், கொடியும் வைக்கப் பட்டு, 30 மீட்டராக வடிவெடுக்கின்றது. (சென்னை வள்ளுவர் கோட்டம், திருவாரூர் தேர் மாதிரியில் வடிவமைக்க பட்டது)

சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேரிழுக்க, திருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள். நவீன யுகத்தில், பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டு, முன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்க, பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்

ஆழித் தேரின் சிறப்பம்சம், வளைவுகளில் திரும்புவது. ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக் காட்சி. தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்து, நின்ற நிலையிலேயே (முன் நகராமல்) தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள். தேர் திரும்பும் காணொளி இங்கே

ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால், தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் முட்டு கட்டைகள் கூடவே கொண்டுவரப்படும்.

1927-ம் ஆண்டு வாக்கில், தேர் மேற்கு கோபுரத்திற்க்கு அருகில் வரும் போது தீப்பிடித்து எரிந்து போய்விட்டதாகக் கூறுவார்கள். பின்பு புதிய தேர் செய்யப் பட்டு 1947 வரை நடைபெற்ற திருவிழா, சுதந்திரத்திற்க்கு பின் நிதி பற்றக்க்குறையால் நிறுத்தப்பட்ட தேரோட்டம் 1970-ஆம் ஆண்டு வாக்கில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் திரும்ப தொடங்கியது.

”அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம். அதாவது மாசி மாதம் (பிப்ரவரி) அஸ்த நட்சித்தரமன்று கொடியேற்றி, பங்குனி (மார்ச் இறுதி/ஏப்ரல் முதல் வாரம்) ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் ஒட்டி, பங்குனி உத்திர நட்சத்திரன்று சுவாமி தீர்த்தம் கொடுப்பது ஐதீகம்.

தியாகேசர், ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால், தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார். அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார். முறைப்படி எல்லாம் நடந்தால், அடுத்த ஒரு வாரத்திற்க்குள், சுவாமி யதாஸ்தானம் வரவேண்டும். பணம் சம்பாதிக்கும் கும்பல்கள தங்கள் வேலையை காட்ட தொடங்கியதன் விளைவு, கடந்த சில ஆண்டுகளாக எல்லாம் மாறி போய்விட்டது.

தொண்ணூறுகளின் இறுதிவரை ஐதீக முறைப்படி நடைபெற்று வந்த பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆழித் தேரோட்ட திருவிழா, அதற்க்குப் பின்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைக்கு மாறி அவர்களுக்கு ஏற்ற நாட்களில், அவர்களுக்கு ஏற்றார் போல் நடத்தப்படும் சடங்காக மாறிப் போனதுதான் சோகம்.

கடந்த பல ஆண்டுகளாகவே, தேரோட்டத் திருவிழா, குறிப்பிட்ட பங்குனி ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுவது இல்லை. பள்ளி/கல்லூரி தேர்வு சமயமாக இருப்பதால், திருவிழாவை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை சுவாமி, ஆயிரங்கால் மண்டபத்தில் மாதக் கணக்கில் தேவுடு காக்க வேண்டிவரும்.

பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகப் போகக் கூடாது என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி அக்கறை ஏதாவது இருந்தால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மட்டார்கள் அல்லவா? இதை விட பல்லாயிரம் மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில்தான் நடக்கும் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி நாட்களில் நடத்தினால் திருவிழாக் கூட்டம் குறைந்து, அவர்களுக்கு வருமானம் இல்லையாம்.

இந்து அமைப்புகள் மட்டும் ஐதீக முறைப்படி குறிப்பிட்ட நாளில் தான் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில், இந்து அமைப்புகள், தாங்களே செலவு செய்து சப்பரம் போன்ற ஒன்றை இழுத்து வருவார்கள். அரசு நிர்வாகம் தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவர்க்ளை ராஜ வீதிகளில் வரவிடாமல் செய்யும். இந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.

அடுத்தது, தேரோட்டத்திற்க்கு நாள் குறித்துவிட்டு, தேரை முன்னதாகவே கட்டி வைத்து விட்டு, சுவாமியை தேருக்கு கொண்டு வந்து ஒரு வாரம்/பத்து நாட்கள் வைத்து, பார்வையாளர்களை தேரில் ஏறவைத்து அதற்க்கு கட்டணம் வசூலித்து காசு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வழியாக, ஆழித் தேரோட்டம் நடைபெறும். செருப்பு/ஐஸ்கீரிம் உட்பட சகலவிதமான பொருட்களும் கிடைக்கும் திருவிழா வியாபாரம், பெரிய கோவிலின் நான்காம் பிரகாரத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தின் முன்) கொடி கட்டி பறக்கும்.

இத்தனைக்கும் தியாகேசப் பெருமான் ஒன்றும் பஞ்சபராரி அல்ல. பல கோடி ரூபாய் சொத்து உள்ள, தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்று. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தன. இன்று என்னவானது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால் நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.

திருவாருர் ஆழி தேர் யூ ட்யூப்பில் காணொளி -1
காணொளி-2
காணொளி-3

திருவாரூர் பிக்காசா ஆல்பம்

திருவாரூர் கோவில் 360 டிகிரி கோணத்தில் – தினமலர் தளத்தில்


பங்குனி 10 (மார்ச் 26) அன்று நடைபெற வேண்டிய இந்த ஆண்டிற்க்கான தேரோட்டம், அதிகாரிகள்/மற்றும் அரசியல்வாதிகளின் கைங்கர்யத்தால் ஜூலை 16-ம் நாள், இன்று நடைபெறுகிறது.

- சாந்தப்பன்

போன பதிவில் கடவுளிடம் கேட்டதற்கு உடனே இந்த பதிவை அனுப்பிவிட்டார் :-)23 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முந்தைய பதிவில் என்னுடைய பின்னூட்டத்தை நிரூபித்த இட்லிவடைக்கு நன்றி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால் நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.
//

இந்த ஆட்சியாளர்களுக்கு ஆண்டவன், கோவில் எதுவும் வேண்டாம், ஆனால் அதன்மூலம் வரும் பணம் மட்டும் வேண்டும். வெட்கம்!

சாந்தப்பன் said...

மிக்க நன்றி இட்லிவடை!

Anonymous said...

Nice & Informative post

Madhavan said...

"..ங்குனி 10 (மார்ச் 26) அன்று நடைபெற வேண்டிய இந்த ஆண்டிற்க்கான தேரோட்டம், அதிகாரிகள்/மற்றும் அரசியல்வாதிகளின் கைங்கர்யத்தால் ஜூலை 16-ம் நாள், இன்று நடைபெறுகிறது...//

அடப் பாவிங்களா.. சாமியவே காக்க வைச்சுட்டீங்களா?

திருக்குடந்தை (கும்பகோணம்), ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி சித்திரைத் தேர் 25 வருடங்களுக்கு முன் புல்டோசரால் தள்ளப்பட்டு (push ) நான் பார்த்திருக்கிறேன்...

பா. ரெங்கதுரை said...

”திருவாரூருக்கு நீதியால் வந்தது சரித்திரம்
நிதியால் வந்தது தரித்திரம்”
- என்று மிகச் சரியாகத்தான் எழுதியுள்ளார் கவிஞர்.

- பா. ரெங்கதுரை

Kara said...

Me the First

Kara said...

இன்று எதோ 2 கோடி செலவில் தேர் அமைக்கப்படும் என்று ஒரு செய்தி வந்ததே

Anonymous said...

Nice Anushka's photo...

Santhose said...

You havn't mention our C.M Karunanidhi who contribute his efforts to fix it after long break.

You simply pass that section after so many efforts.......

Santhose

Anonymous said...

//புதிய தேர் செய்யப் பட்டு 1947 வரை நடைபெற்ற திருவிழா, சுதந்திரத்திற்க்கு பின் நிதி பற்றக்க்குறையால் நிறுத்தப்பட்ட தேரோட்டம் 1970-ஆம் ஆண்டு வாக்கில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் திரும்ப தொடங்கியது//

கருணாநிதி எப்பவாவது இது மாதிரி நல்லது செய்கிறார். அதையும் நீங்க வேண்டுமென்றே சொல்லாமல் விட்டு விடுகிறீர்களே!

திருவாரூரில் உள்ள ஆழித்தேர் 22 ஆண்டு ஓடாமல் இருந்தது. 1970ல் தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் இத்தேர் ஓட நடவடிக்கை எடுத்தார.-தினமலர் செய்தி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40843

Anonymous said...

//சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால் நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.//
இங்கே மட்டுமல்ல. பல கோயில்களின் திருவிழாக்களும் வியாபாரிகளின் லாப நோக்கங்களை முன்னிறுத்தியே நடத்தப்படுகின்றன.

சாந்தப்பன் said...

//கருணாநிதி எப்பவாவது இது மாதிரி நல்லது செய்கிறார். அதையும் நீங்க வேண்டுமென்றே சொல்லாமல் விட்டு விடுகிறீர்களே!//

தேர் ஒட ஆரம்பித்தது கருணாநிதியின் முயற்சியால் தான். அது நடந்தது 1970-ல்; முதல் முறை ஆட்சிக்கு வந்த பிறகு. சொந்த ஊருக்கு இதைக் கூட அவர் செய்ய வில்லை என்றால் எப்படி?

அதற்கு அப்புறம் எவ்வளவு கோடிகளை கருணாநிதியின் குடும்பம் திருவாரூரில் சுருட்டுகிறது என்று ஊருக்கே தெரியும்

சாந்தப்பன் said...

//இன்று எதோ 2 கோடி செலவில் தேர் அமைக்கப்படும் என்று ஒரு செய்தி வந்ததே//

தேரை செப்பனிடப் போகிறார்களாம். அதற்க்கு 2 கோடி என்று கணக்கு போட்டிருக்கிறார்கள். எல்லாம் உடன்பிறப்புகளுக்காகத்தான்..

சாந்தப்பன் said...

வருண பகவான் கருணை செய்து, இந்த வருடம் இரண்டாவது நாளாக் தேர் நிலைக்கு வரவில்லை!

Unmaiyana Islamiyan said...

Uthavum karangal Advertisement link is not working.. Please check

Veliyoorkaran said...

Nice to see my Aalither in a article..! :)

-Thiruvaroorkaaran.

ஷ்யாம் said...

"தியாகராஜா உனக்கு தேர் அவசியமா " என்று கேட்டவர் தான் இன்றைய முதல்வர்.

mani said...

அருமையான தகவல் அடங்கிய செய்தி !!
பகிவிற்கு நன்றி

மணி
திருவாரூர் -- சிங்கப்பூர்

Anonymous said...

ஆண்டிற்க்கான --spelling mistake

Srividhya Sudhakaran said...

Hi, Thanks for the post. The real reason behind this year's late function is this... Every year when its comes around the roads had to be relaid after the function. So this time the authorities had struggled hard to construct concrete roads for the 4 veedhis and the municipality too joined and completed the underground sewage work. Hope next year we will have the thaerottam in panguni itself.

Srividhya

Santhappan சாந்தப்பன் said...

@சுனிதா

திருவாரூர் நகராட்சி, இந்து சமய அற நிலையத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனைவருக்குமே தேர் திருவிழா மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடத்தப் படவேண்டும் என்பதை அறிவார்கள். அதற்கேற்றார் போல் சாலைப் பணிகளை அவர்கள் ஏன் திட்டமிடவில்லை.

சிதம்பரம்/மதுரை/தஞ்சாவூர் திருவிழாக்களை இதுபோல சில காரணங்களைக் கூறி மாற்றிவைக்க இயலுமா?

அப்படியே இந்த வருடம் தவிர்க்க இயலாமல் கால தாமதம் ஏற்பட்டது என்றே வைத்துகொள்வோம், கடந்த பல வருடங்களாக என்ன காரணத்திற்க்காக குறிப்பிட்ட நாளில் நடத்தப் படவில்லை என்பதை தங்களால் கூற இயலுமா?

Thiruvarur News said...

திருவாரூர், உலகம், அறிவியல், தொழில் நுட்பம், ஆரோக்கியம் மற்றும் சமயல் தொடர்பான செய்திகளுக்கு

திருவாரூர் செய்திகள்