இந்திய ரூபாய்க்கான குறியீடு பற்றி இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஹிந்தி எழுத்து 'ர' ஆங்கில எழுத்து 'R' இரண்டையும் சேர்த்து உதயகுமார் என்பவர் வடிவமைத்துள்ளார். தமிழர்.
உலக செம்மொழி மாநாடு நடந்த முடிந்த இந்த சமயத்தில் இவருக்கு பரிசு கிடைத்திருப்பது எமக்கு எல்லாம் பெருமை. ஆனால் நம் தமிழ் நாட்டில் யாரும் இவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஹிந்தி எழுத்தையும் ஆங்கில எழுத்தும் சேர்த்து வடிவமைத்தால் எப்படி கண்டுகொள்ளுவார்கள் ? தமிழ் பற்றுக்கும் வெறிக்கும் இது எடுத்துக்காட்டு.
சமீபத்தில் இவர் பேட்டி ஆனந்த விகடனில் வந்தது. அதில் ஒரு கேள்விக்கு அவரின் பதிலில் 101% உடன்படுகிறேன். இனி அந்த கேள்வி பதில்..
"ஒரு தமிழராக இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியலை... தமிழராக இருந்தும் ஏன் இந்தி எழுத்துருவைப் பயன்படுத்தி நீங்க குறியீட்டை வடிவமைச்சு இருக்கீங்க?" "போட்டியின் நிபந்தனைகளுள் ஒன்று, குறியீடு இந்திய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்பது!
இந்தி எழுத்துருக்களால்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பாரம்பரியம் பளிச்சிடும்னு நம்பி னேன். நம்ம புராணங்கள், வேதங் கள்னு மக்களோட கலாசாரக் கூறுகள் எல்லாமே 'இந்தி'ங்கிற மொழி அடிப்படையிலேயே இருக்கு. பொதுவா, இந்தியாவுக்கு வெளியே, 'இந்தியா'ன்னு சொன்னதும் இந்தி பேசறவங்களும், இந்தி சினிமா உலகமும்தான் நினைவுக்கு வருது. ஓர் இந்தியனா யோசிச்சதால், இந்தியின் தாக்கத்தை என்னால் தவிர்க்க முடியலை. நீங்க ஏன் அப்படிப் பார்க்குறீங்க? ஒரு தமிழன்தான் இந்தி மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொன்னான்னு பாருங்க. தமிழர்களுக்கு இதில் ஒரு செய்தி... இந்தி நாம் தவிர்க்கக்கூடிய மொழியல்ல. எனக்கு இந்தி தெரிஞ்சதால மட்டும்தான் இந்த வெளிச்சம் சாத்தியமாச்சு! அதே சமயம், தமிழுக்கும் என்னால முடிஞ்ச சேவையைப் பண்ணிட்டுதான் இருக்கேன். இப்போ நான் பண்ணிட்டு இருக்குற பிஹெச்.டி., ஆராய்ச்சிப் படிப்பே தமிழ் மொழிமீதுதான். தோன்றியதில் இருந்து இன்று வரை நாம் எழுதிட்டு இருக்குற தமிழ் எழுத்துக்கள் மாறிட்டே இருக்கு. அந்த மாற்றங்களுக்கான காரணம்பற்றியும் அதில் எந்த எழுத்துக்களை நம்மால் கணினி யில் சுலபமாகப் பயன்படுத்த முடியும் என்பதைப்பற்றிய டைப்போகிராஃபி மீதும்தான் என் ஆய்வுப் படிப்பு!"
உதயகுமாரின் பதிலில் உடன்படாதவர்களுக்கு ஒரு நற்செய்தி - 3 இடியட்ஸ் ஹிந்தி படம் விரைவில் தமிழுக்கு வர போகிறது, வந்தவுடன் பாருங்கள். அது வரை காத்திருங்கள்.
பிகு1: இவர், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகு2: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் தெரிவிததுள்ளார் அழகிரி
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, July 29, 2010
குறியீடு சொல்லும் குறுஞ்செய்தி
Posted by IdlyVadai at 7/29/2010 07:43:00 AM
Labels: செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










38 Comments:
--ஹிந்தி எழுத்து 'ர' ஆங்கில எழுத்து 'R' இரண்டையும் சேர்த்து உதயகுமார் என்பவர் வடிவமைத்துள்ளார்.--
இதில் எங்கே 'R' இருக்கு? र என்பதுதான் முழுவதுமாக தெரிகிறதே.
ரூபாயே தமிழ் கிடையாது. அப்புறம் என்ன ரூபாய் குறியீட்டில் தமிழ்? நாளைக்கு அண்ணன் சீமான் தமிழ் தேசியம் அமைத்தபிறகு புதிய தமிழ் பணமுறைகளும், குறியீடுகளும் கொண்டு வருவோம். அதுவரை रதான் நமக்கு டப்பு.
//இதில் எங்கே 'R' இருக்கு? र என்பதுதான் முழுவதுமாக தெரிகிறதே.//
நல்லா பாருங்க பாதி R தெரியும்.
//ஆனால் நம் தமிழ் நாட்டில் யாரும் இவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஹிந்தி எழுத்தையும் ஆங்கில எழுத்தும் சேர்த்து வடிவமைத்தால் எப்படி கண்டுகொள்ளுவார்கள் ? தமிழ் பற்றுக்கும் வெறிக்கும் இது எடுத்துக்காட்டு.//
மறத்தமிழனான இட்லிவடை கண்டுகொண்டது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
அடடா, கண்டுகொள்ளவில்லை என்பது வெறியா? சூப்பர் கண்டுபிடிப்பு!
//ரூபாயே தமிழ் கிடையாது//
உரூவாய் என்று சொல்லி பாருங்கள் தமிழ் மாதிரி இருக்கும்.
ஹிந்தி கத்துக்காதவன் தமிழ் நாட்டிலேயே நொண்டி அடிக்க வேண்டியது தான். வாழ்க்கையில் மேலே வரணும்னா ரெண்டு மொழி கத்துகிரதுல தப்பே இல்ல. மு.க மாதிரி ஊருக்கு ஒரு சட்டம், தன குடும்பத்துக்கு ஒரு சட்டம் ன்னு இருந்தா உருப்படாது.
யோசிங்க மக்களா..!!! யோசிங்க..!!
அட போங்கப்பா!! எதற்கெடுத்தாலும் மொழிவாரி,சாதிவாரி பார்க்கணுமா என்ன? ரொம்பதான் இந்த மக்கள் (இட்லி வடையும் சேர்த்துதான்) கெட்டு போயாச்சு!!இந்த குறியீடு தேசத்தின் அடுத்த அடையாளம் அ ஒரு சின்னம் -- அவ்வளவே!!மேலும் கிரந்த மற்றும் தமிழ்(ஹிந்தி அல்ல) என்று கேட்ட ஞாபகம!! ஹிந்தி என்றாலும் பெருமைக்கு உரிய நம் நாட்டின் மொழி தானே!!
//ரூபாயே தமிழ் கிடையாது//
ஓங்க இஷ்டத்துக்கு நோட்டு அடிச்சு நீங்க விரும்பின பேரு / குறியீட்டை வெச்சுக்கங்களேன்.. நாங்களா வேண்டாம்னு சொன்னோம்..
------- பேச வந்த்துட்டாங்க..
இந்த ரூபாய் குறியீடு NHM Writer-லோ, ஈ-கலப்பையிலோ அல்லது வேறு ஏதாவது தமிழ் மென் பொருளிலோ வந்துவிட்டதா?
இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பவரை தமிழர் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க வேண்டாமே இட்லி வடை.
//இந்தி எழுத்துருக்களால்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பாரம்பரியம் பளிச்சிடும்னு நம்பினேன்//
அது தேவநகரி எழுத்து இல்லையோ? அம்பி மறந்துட்டாரா?
எங்கும் தமிழ்.... எதிலும் தமிழ்.. இது அண்ணா எனக்கு சொல்லி கொடுத்தது..
எதிலும் தமிழ், எங்கும் தமிழ் (என் வீட்டை தவிர).. இது நான் எனக்கே
சொல்லிக்கொண்டது..
சொல்வது “அவரே” தானுங்கோ...
தமிழ் மொழி சாயல் ல மட்டும் வடிவமைச்சிருந்தாலும் அத மைய அரசு தேர்ந்தெடுத்திருக்குமா???
Super. Vekkamilla petti vera kodukkuthu idhu.. idhukku vakkalathu vera!! vilangirumda saami
இந்த ரூபாய் குறியீடு இருந்து விட்டு போகட்டும். ஆனால் மத்திய அரசு ஹிந்தி தவிர மாநில மொழிகள் எதையும் கண்டு கொள்வதுபோல் தெரியவில்லை. ரயில்களின் பெயராகட்டும், நாம் அனுப்பும் செயற்கைகோள்கள் ஆகட்டும், இப்படி பட்டியலிடலாம். அனைத்திலும் ஹிந்தி தான். இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருப்பதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. மூன்று மொழிகள் நாம் மட்டும் ஏன் கற்கவேண்டும். ஹிந்தி பேசுவோர் ஏன் மாநில மொழி எதையும் கற்பது இல்லை? அவர்கள் இங்கு வர வேண்டிய தேவையே இருப்பதே இல்லையா?
புதிய குறியீடு கண்டு பிடித்தவருக்கு பரிசுத்தொகை எவ்வளவு என்பதையும் பதிவில் குறிப்பிட்டிருக்கலாம். (தகவலுக்காக, வேறு எதற்கும் இல்லை)
மூன்று இடியட்ஸ் தமிழ்ப் படத்தில் தான் நடிக்கப் போவதில்லை என்று மாதவன் ட்விட்டியிருக்கிறாராமே? அப்படியா?
//மூன்று மொழிகள் நாம் மட்டும் ஏன் கற்கவேண்டும். ஹிந்தி பேசுவோர் ஏன் மாநில மொழி எதையும் கற்பது இல்லை? அவர்கள் இங்கு வர வேண்டிய தேவையே இருப்பதே இல்லையா?//
தவளை எதனால் கெடும் ????
//உதயகுமாரின் பதிலில் உடன்படாதவர்களுக்கு ஒரு நற்செய்தி - 3 இடியட்ஸ் ஹிந்தி படம் விரைவில் தமிழுக்கு வர போகிறது, வந்தவுடன் பாருங்கள். அது வரை காத்திருங்கள்.//
என்ன சதுர் ராமலிங்கத்துக்கு பதிலா ஒரு புதர் மேத்தாவ நக்கல் அடிக்கப் போறாங்க.
தொடர்பான வினவின் இடுகையைப் பாக்கலையோ?
//ஹிந்தி கத்துக்காதவன் தமிழ் நாட்டிலேயே நொண்டி அடிக்க வேண்டியது தான்.//-மஞ்சள்ஜட்டி
ஐயா மஞ்சள்ஜட்டி அவர்களே,
இந்த கருத்து எனக்கு உடன்பாடில்லை.
எனக்கு வடநாட்டில் வேலை கிடைக்கும் வரை இந்தியில் ஒரு அட்சரமும் தெரியாது. "இந்தி மாலும் நஹி' என்ற வாக்கியத்தை தவிர வேறு ஏதும் இந்தியில் எனக்கு பேசத் தெரியாது. அங்கிருந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியை எழுத, படிக்க , பேச கற்றுக் கொண்டேன். பல் இந்திகாரர்கள் எனக்கு நண்பர்கள் ஆகிவிட்டார்கள். எனக்கு தமிழ்நாட்டிற்கு மாற்றலான போது, பிரிவு உபச்சார விழாவில் இந்தியிலேயே பேசினேன். ஆங்கிலமே தெரியாத பாமர மக்களிடம் இந்தியில் தான் பேசினேன்.
வட நாட்டில் வேலை கிடைக்கும் என்பதற்காக பள்ளிக் கூடத்திலேயே இந்தி படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் வடநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் என் மேலதிகாரிகள் ஒருவருக்கும் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் துளிகூட இல்லை என்பதையும் இப்போது இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது.
இங்கு ஹுண்டாய் மோட்டார்ஸ் -ல் பணிபுரிந்த என் நண்பன் இப்போது கொரியாவில் இருக்கிறான்.அங்கு கொரிய மொழி கற்றுக் கொண்டு இப்போது நன்றாக பேசுகிறானாம்.கொரிய மொழியை பள்ளியிலா படித்தான்? தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாம்.
ஜெர்மனியில், பிரான்சில், சீனாவில் பணிபுரியும் எவ்வளவோ இந்தியர்கள் அங்கு சென்ற பின் தான் அந்த மொழியை கற்றுக் கொள்கிறார்கள்.
கான்வென்ட் பள்ளி ரிக்க்ஷாகாரன் கூட பிள்ளைகள் பேசுவதைக் கேட்டு நன்றாக ஆங்கிலம் பேச ஆரம்பித்து விடுகிறான்.
அழகிரி டெல்லி சென்று இவ்வளவு நாளாகியும் இந்தி இந்தி கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது அவர் கையாலாகாததனம்.
இப்பொழுதெல்லாம் தமிழர்கள் பல வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்காக ஏராளமான மொழிகளை பள்ளியில் படித்துக் கொண்டிருக்க அவசியம் இல்லை. ஆகவே இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற பாவ்லா இனியும் வேண்டாம். விருப்பம் இருக்கிறவன் படித்துவிட்டு போகட்டும்.
--நல்லா பாருங்க பாதி R தெரியும்--
எனக்கு ‘உ’ கூடத்தான் நீட்டினாப்புல தெரியுது. முழுசா ஒரு இந்தி எழுத்தைப் போட்டுட்டு பாதி இங்க்லீஷ் இருக்கு பாதி அராபிக் இருக்குன்னு... சிரிப்பா வருது போங்க.
Rs.2,50,000 is the prize money.
தமிழ்ல ரூவா குறியீடு இல்லேன்னு “நாம் தமிழர்” இயக்கம் போராட்டம் எதுவும் அறிவிக்கலியா?
“தல” கூட ஆட்சி முடியற சமயம், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டம் இருக்குன்னு சொல்லி இருக்காறாராமே...
என் ராஜஸ்தானி மேலதிகாரி சென்னைக்கு வந்து இருவருடங்கள் ஆனாலும் இன்னமும் ஆங்கிலமும், இந்தியும்தான் எல்லா இடங்களிலும் பேசுகிறார். இவரால் இப்படி சமாளிக்க முடிகிறதென்றால் தமிழனும் வட இந்தியா போகும்போது சமாளிக்க முடியாதா ?
திரு கானா கபாலி அவர்களே, நீங்கள் சொல்வதெல்லாம் சரி, ஒன்று யோசியுங்கள். ஒரு வடநாட்டு வேலை வாய்ப்பிற்கு இருவருக்கு சமமான தகுதிகள் இருக்கையில், ஆனால் ஒருவருக்கு இந்தி மற்றொருவரை விட நன்றாக தெரியும் என்றால், யாருக்கு அந்த வாய்ப்பு கிட்டும்? மொழி கற்றுக்கொள்வது அவர் அவர் விருப்பம், அவர் அவர் நோக்கம். எந்தவிதத்திலும் வற்புறுத்தல் கூடாது.
Well, it depends on which position you occupy in north india. In one of the central govt. research center, the director is tamil guy and he is there nearly three decades. He never speaks single hindi word.
Theru oram pitchi edukaravan thaan local baasai pesanum.
Bitter truth, just swallow it.
நம்ம question என்னன்னா...
keyboard-ல இதை எப்படிங்கண்ணா type பண்றது...
!@#%^&*()<>?":{}
இப்படி எதாச்சும் வச்சிருந்தா useful-லா
//மொழி கற்றுக்கொள்வது அவர் அவர் விருப்பம், அவர் அவர் நோக்கம். எந்தவிதத்திலும் வற்புறுத்தல் கூடாது.//
நீங்க தமிழைச் சொல்லலையே?
யாரும் இங்கு ஹிந்தி கற்பதை தடுக்கவில்லையே?
ஹிந்தி படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையோர் அரசாங்கத்தை நம்பி இராமல் தன்முயற்சியால் கற்றுக் கொள்ளுங்கள் என்றுதானே அரசு சொல்கிறது.
This symbol will not be recognized by the central government if he did not design it other than Hindi. That is the truth.
This symbol will not be recognized by the central government if he did design it other than Hindi. That is the truth.
//ஒரு வடநாட்டு வேலை வாய்ப்பிற்கு இருவருக்கு சமமான தகுதிகள் இருக்கையில், ஆனால் ஒருவருக்கு இந்தி மற்றொருவரை விட நன்றாக தெரியும் என்றால், யாருக்கு அந்த வாய்ப்பு கிட்டும்?//
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள் பலவற்றில், வடநாட்டு IAS அதிகாரிகள் தமிழே தெரியாமல் எப்படி வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு எப்படி அந்த வேலை கிடைத்தது?
தமிழில் IAS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் எப்படி வடநாட்டில் IAS அதிகாரிகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
அவர்களுக்கு எப்படி அந்த வேலை கிடைத்தது?
மொழிக்கும் அப்பாற்பட்டு நிர்வாகத் திறமைக்குத் தான் அங்கு முதலிடம் தரப்படுகிறது.
>>பிகு2: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் தெரிவிததுள்ளார் அழகிரி<<
"ஒ! நான் இந்த(2010) ஜூன் 3ந்தேதி க்குப்பிறகு பொறுப்புகளில் இருந்து விலகி கொள்ளப்போகிறேன் என்று சென்ற வருடம் சொல்லி அதை நிறைவேற்றினால்போல,நீயும் சொல்லலாம்" என சொல்லியிருப்பார்,நயினா!
எனக்கு ”ரூ” வை அடித்து நிமித்தி இந்த உருவாக்கம் வந்தது போல் தெரிகிறது.
foradian.ttf என்ற ஃபாண்ட் ரூவா சிம்பலை தருகிறது என் அறிகிறேன்
கபாலி
நீங்கள் பெரிய மேதாவி போலிருக்கிறது. எல்லோருக்கும் உங்களைப் போன்ற பெரிய மூளை இருப்பதில்லை. எங்களைப் போன்ற மண்டுகளுக்கும் சிறு மூளை உள்ளவர்களுக்கும் எதையுமே மெதுவாக ஆற அமரச் சொல்லித்தந்தால்தான் புரியும். அதனால் எங்களுக்கு எல்லாம் யாராவது டீச்சர் வந்து சொல்லிக் கொடுத்தால்தான் ஹிந்தியோ, கொரியாவோ புரியும். ஆகவே இந்தியைப் பள்ளிக் கூடத்தில் ஒரு விருப்பப் பாடமாகவேனும் அரசு நடத்தாமல் விட்டது குற்றமே.
இங்கு இன்னொரு நண்பர் குறிப்பிட்டுள்ள இந்தி ஏற்கனவே தெரிந்திருந்தால் வேலை கிடைக்கக் கூடிய சாத்தியம் தனியார் நிறுவன வேலைகளையே பெரிதும் குறிக்கிறது. நீங்கள் உடனே பெரிய மேதாவி போல வந்து ஐ ஏ எஸ் பற்றி பேசுகிறீர்கள். ஐ ஏ எஸ் வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. மேலும் ஐ ஏ எஸ் தேர்வாகிப் போபவர்கள் உங்களைப் போன்ற ஒரு ஊருக்குப் போனவுடனேயே அந்த மொழியைக் கரைத்துக் குடித்து வாந்தி எடுத்து விடும் அதி புத்திசாலிகள். அவர்களோடு எங்களைப் போன்ற பி ஏ, பி.காம் படித்து விட்டு ஏதாவது எங்காவது ஒரு வேலை கிடைக்காதா என்று அலையும் சராசரிகளைக் கம்ப்பேர் பண்ணக் கூடாது என்பது உங்களது அதி புத்திசாலித்தனமான மூளைக்கு ஏனோ எட்டாமல் போய் விட்டது. போகட்டும். நாங்கள் எல்லாம் உங்களைப் போன்ற சூப்பர் மேன்கள் கிடையாது. ஏற்கனவே படித்து இருந்தாலேயே ஒரு புது மொழியை அரைகுறையாகவேனும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவர்கள். ஆகவே இந்தி படிக்க வேண்டும் என்று சொல்லப் படும் அறிவுரை எங்களைப் போன்ற பி ஏ, பி காம், பி எஸ் ஸி படித்து விட்டு வேலைக்கு அலைபாயும் அழுக்கு வேட்டிக் கொண்டு நக்கித் தின்னும் ஆட்களுக்கு, உங்களைப் போன்று வெள்ளை வேட்டிக் கட்டிக் கொண்ட அதி புத்திசாலிகளுக்கு அல்ல. ஆகவே சற்று ஒதுங்குங்கள். உங்கள் அறிவு வீச்சையும் அதி புத்திசாலித்தனத்தையும் நாங்கள் அனைவரும் அறிய பறைசாற்றிக் கொண்டமைக்கு மிக்க நன்றி.
கொஞ்சம் இடம் கிடைச்சா பீ த்திக் கொள்ள வந்துறுனாங்கப்பா
//நீங்கள் பெரிய மேதாவி போலிருக்கிறது. எல்லோருக்கும் உங்களைப் போன்ற பெரிய மூளை இருப்பதில்லை.//Anony
என் அன்புள்ள அனானி அவர்களே,
நீங்களும் என்னுடைய இனம் தான் என்பதை கேள்விப்பட்டு உங்கள் எழுத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு வந்து விட்டது. நானும் சாதாரண முனிசிபாலிட்டி பள்ளியில் பனிரெண்டாம் வரை தமிழ் மீடியத்தில் படித்து விட்டு,சரியாக மதிப்பெண் வாங்காததாலும், வசதியில்லாததாலும் அரசுக் கலைக் கல்லூரியில் "துய்ப்போர் உபரிக் கோட்பாடு" (தியரி ஆப் கன்ஸ்யுமர் சர்ப்லஸ் ) என்று பி.ஏ எகனாமிக்சை தமிழில் படித்துவிட்டு, வேலைக்கு அலைந்து விதிவசத்தால் ஒரு வேலை கிடைத்து, வடநாட்டிற்கு மாறலாகி போன பிறகு நடந்த அனுபவத்தை தான் சொன்னேனே தவிர தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை.
தோழரே , உங்கள் வார்த்தைகளில் இருந்த நக்கல்களை நான் ரசித்தேன். நன்றி.
//அவர்களோடு எங்களைப் போன்ற பி ஏ, பி.காம் படித்து விட்டு ஏதாவது எங்காவது ஒரு வேலை கிடைக்காதா என்று அலையும் சராசரிகளைக் கம்ப்பேர் பண்ணக் கூடாது என்பது உங்களது அதி புத்திசாலித்தனமான மூளைக்கு ஏனோ எட்டாமல் போய் விட்டது.//
ஸ்வாமி,
கம்மியான பாடங்கள் இருக்கும்போதே உங்களால் உங்கள் வகுப்பில் இருப்பவர்களுடன் போட்டியிட்டு முதல் இடத்தை அடைய முடியவில்லை. பீ.ஏ, பீ.காம் ஒழுங்காப் படிச்சா இங்கயே வேலை கிடைக்குமே? இதில் இந்திய வேற சொல்லிக் கொடுக்க வேணுமாம். இந்தியை படமா வைத்தததா பாஸ் ஆவீங்கண்ணு உறுதி கொடுப்பீங்களா? இல்ல அதுக்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்வீங்களா?
கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போறேன்னு சவடால் உட்டா எப்புடி?
தகவலுக்கு:
நெம்ப ஆசையா இருந்தா நடுவண் அரசு இலவசமாகவே அஞ்சல் முறையில் இந்தி சொல்லிக் கொடுக்குதே. அதை முயற்சிக்கலாமே.
சிவாண்னே,
வேற இன்னும் ஏதாவது சப்பானிய, மங்கோலிய எழுத்தை மாத்துன மாரி இருக்கா?
பல தேசம் போனவுக. உங்களுக்குத் தெரியாததா?
எனக்கு இந்தி தெரியாது. அதனால், இந்தி எழுத்தும் தெரியாது. ஆங்கில 'R'
உருவம்தான் எனக்குத் தெரிந்தது.
இந்தி தெரியாத மற்ற உலக மக்களுக்கும் நிச்சயம் 'R' மட்டும்தான் தெரியும்.
தமிழரின் இந்தச் சாதனையை பாராட்டத்தான் வேண்டும்.
புடலங்காய் சாதனை. ஒரு தம்மாதூண்டு டிசைன் பண்ணி பரிசு வாங்கிட்டா அது பெரிய சாதனையா? டாலர், பவுண்ட், யூரோ, யென் சின்னங்கள் போல் இது ஒன்றும் அழகாக இல்லை. தினகரன் நாளேட்டில் இந்த சின்னம் பயன்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கிறது, கண்களை உறுத்துகிறது.
Post a Comment