பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 28, 2010

கோபப் பேச்சு

செம்மொழி மாநாடு முடிந்த இரண்டு வாரங்களில் ஜெயலலிதா கோவையில் கண்டன ஆர்பாட்டம் என்று அறிவித்து அதை பொதுக் கூட்டமாக மாற்றி காட்டினார். இட்லிவடையில் ஏன் இதை பற்றி எழுதவில்லை என்று கூட சிலர் கேட்டார்கள். நாங்கள் அதை ஒரு முக்கிய செய்தியக இதை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் கலைஞர் நினைத்து நினைத்து திட்ட ஆரம்பித்ததால் இந்த பதிவு. ஜெயலலிதாவின் கோவை பேச்சுக்கு கலைஞர் கொடுத்திருக்கும் டைட்டில் 'கோபப் பேச்சு' கலைஞரை பின்பற்றி இந்த பதிவுக்கும் அதே தலைப்பு.

எதிர்கட்சிகளின் வழக்கமான டெம்பிளேட் - சட்ட ஒழுங்குப் பிரச்சனை, மணல் கொள்ளை, காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு, மின்வெட்டு மற்றும் இதர பிரச்சனைகளைக் ஒரு பிடி பிடித்தார் ஜெயலலிதா. ஆனால் இந்த பேச்சு எதற்கு கலைஞருக்கு ஜூரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று யோசித்தால் சில விஷயங்கள் புலப்படுகிறது.

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு வாரம் கூடிய கூட்டம் ஒரே நாளில் இங்கு கூடியதால் திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்ன என்றால் ஜெயா டிவி மாபெரும் கூட்டம் என்று சொன்னால் பரவாயில்லை ஆனால் முரசொலியே (வயிற்றெரிச்சலுடன்) ஒப்புக் கொண்டுள்ளது. என்ன கூடவே தலைக்கு 200 ரூபாய் மற்றும் பிரியாணி கொடுத்து கூட்டி வந்த கூட்டம் என்று சமாதானப் படுத்திக் கொண்டுள்ளது.

செம்மொழி மாநாட்டுக்கு இலவச பேருந்து, லெமன் ரைஸ் என்று இவர்கள் கொடுத்தது எல்லாம் எந்த கணக்கில் வருமோ ? ஒரு முழு அரசாங்க இயந்திரமும் ஒரு வருடமாகப் பாடுபட்டு, பல கோடியில், நான் ரிடையர் ஆக போகிறேன் என்று உதார் விட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், சும்மா பதினைந்து நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட மாநாட்டிற்கு திரண்டது என்றால்? எனக்கே கோபம் வருகிறது கலைஞருக்கு வராதா ?

சில மணிநேரப் பொதுக் கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் கூடியதும், கடைசியில் ஜெயலலிதா கூட்டணி பற்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும், கலைஞர் குடும்பம் பற்றி கூறிய பேச்சும் திமுகவின் கலக்கத்திற்குக் ( எரிச்சல் என்று சொல்ல வேண்டும்) இன்னொரு காரணம்.

நா‌ன் சும‌த்‌திய கு‌ற்ற‌ச்சா‌ட்டுகளு‌க்கு ச‌ப்பை க‌ட்டு‌ம் ‌வித‌த்‌தி‌ல் கருணா‌நி‌தி பல நா‌ட்களாக ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌‌ப்பதை பா‌ர்‌க்கு‌ம்போது, கோவை ம‌ட்‌டு‌ம் குலு‌ங்க‌வி‌ல்லை, கருணா‌நி‌தியு‌‌ம் குலு‌ங்‌கி‌ப் போ‌ய் இரு‌க்‌கிறா‌ர் என்கிறார் ஜெயலலிதா. சில சாம்பிள் குலுக்ஸை பார்க்கலாம்.


டி‌க்கெ‌ட் வா‌ங்‌க‌க்கூட பண‌மி‌ல்லாம‌ல் ‌‌திருவாரூ‌ரி‌ல் ‌திரு‌ட்டு இர‌யி‌ல் ஏ‌றி செ‌ன்னை‌க்கு வ‌ந்தவ‌ர் கருணா‌நி‌தி. த‌ற்போது இவருடைய குடு‌ம்ப‌ம் ஆ‌சியா‌வி‌ன் பண‌க்கார‌ர்க‌ள் வ‌ரிசைய‌ி‌ல் மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌க்‌கிறதே. இ‌ந்த தகு‌தி கருணா‌நி‌‌தி‌ குடு‌ம்ப‌த்‌‌தி‌ற்கு எ‌ப்படி வ‌ந்தது?


"திருட்டு ரயில் ஏறி வந்தவன் நான்" என்று எப்போதும் நான் கூறிக் கொண்டதில்லை.ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். கோவை, சேலத்தில் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி சம்பாதித்து அதன் பின் தான் சென்னை வந்தேன். நான் எழுதிக் குவித்த திரைப்படங்கள், நூல்கள் வாயிலாக சம்பாதித்தேன். அவற்றிலிருந்து பொது நலன்களுக்காக நிதியும் வழங்கி வருகிறேன்.


அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், பெரியமகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி., மகனின் நண்பர்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி இவ்வாறு சர்வாதிகாரி ஆட்சியில் கூட பதவிகள் பங்கு போட்டது இல்லை.

நான் ஒரு குடும்பத் தலைவனாக இருந்து - அகில இந்திய அளவில் பண்டித நேரு அவர்களின் குடும்பத்தைப் போல - தமிழகத்தில் என்னுடைய குடும்பமும், நானும் அரசியலில், நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பது தான் தொல்லை.

பல பேர் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் - அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் - என்னைப் பற்றிச் சாட்டுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது தான்.

அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல.

கூட்டணி உண்டு கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். கருணாநிதியின் கொட்டத்தை நீங்கள் அடக்குங்கள், அடக்குவோம்"

நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்று தான் கூறிவருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார். என் பெயரைச் சொல்லி அவர் அடிக்கடி திட்டும்போது, யார் அந்த கருணாநிதி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருபவர் தானே என்று மக்களிடம் நான் பிரபலமாவேன். என்னை திட்டுபவர்கள் பெருக, பெருக, திமுக வளர்ந்துக் கொண்டேயிருக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது.


காவிரி விஷயம் தொடர்பாக ஜெயலலிதாவின் குற்றச்சாட்டிற்கு கருணாநிதியின் பதில், ஜெயலலிதா கர்நாடகத்தில் பிறந்தவர் என்பது. இது எவ்விதத்தில் பதிலாகும் ?

"என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். "எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்" என்று கலைஞர் சொல்லுவது தான் கொஞ்சம் கவலை அளிக்கிறது.

கடைசியாக "நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், தேர்தல் பணியை நீங்கள் துவங்குங்கள்" என்று கூறிய பின் சில காங்கிரஸ் தலைவர்கள் சமீபத்திய தாக்குதல்கள் கலைஞர் குலுக்கலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

கலைஞர் சும்மா இருப்பாரா ? சோனியாவை 'பதிபக்தி இல்லாதவர்; இந்தியாவை ஆளத் தெரியாதவர்' என்று ஜெயலலிதா விமர்சித்ததை காங்கிரஸ் நண்பர்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள் என்று கருணாநிதி காங்கிரஸுக்கு கருணை மனு போடுகிறார்.

ஆனால் அம்மையார் சும்மா இல்லாமல்

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் மதுரைக்கு வந்த போது அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது; கருணாநிதியின் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருப்பதாகக் ஜெயின் கமிஷன் அறிக்கை குற்றம் சாட்டியது; பெருந்தலைவர் காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்று சொன்னது; விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கேட்டு இந்திரா காந்தி அவர்கள் விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கிண்டல் அடித்தது ஆகியவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து, கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் தன்னைவிட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தில் கருணாநிதி இது போன்று புலம்புகிறார் போலும்!

சில டிட் பிட்ஸ் : ஜெயலலிதா கூட்டிய கூட்டதுக்கு கோவை நகரில் வரும் வாகனங்களை திருப்பி விட்டு கூட்டம் வராமல் பார்த்துக்கொண்டதாம் காவல் துறை ( ஆ.வி நியூஸ் ). அதையும் தாண்டி கூட்டம் வந்ததால், சென்னையிலிரிந்து "இவ்வளவு கூட்டம் எப்படிய்யா வந்தது?" என்று செல்லமாக விசாரித்தார்களாம்.

செம்மொழி மாநாட்டுக்கு கோவை வணிகர்களிடம் கலக்ஷன் செய்தார்களாம் அதிலும் கோவை மக்கல் ஏக கட்டுப்பில் இருக்கிறார்களாம்.


இது கூட பரவாயில்லை, கனிமொழி "காமராஜரின் வாரிசு கருணாநிதி என்று ஒரு போடு போட்டார் பாருங்க" இதுக்கு மேல என்னால் எழுத முடியவில்லை.


எதுவாக இருந்தாலும், கலைஞர் கூட்டணி பற்றி பயப்பட வேண்டாம், ஜெயலலிதாவின் கடந்த கால டிராக் ரெக்கார்ட் அது மாதிரி.


17 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எதுவாக இருந்தாலும், கலைஞர் கூட்டணி பற்றி பயப்பட வேண்டாம், ஜெயலலிதாவின் கடந்த கால டிராக் ரெக்கார்ட் அது மாதிரி.//

இதுக்கு அடிங்கப்பா மஞ்சள் பெயிண்ட்டு!

நாஞ்சில் பிரதாப் said...

பேசாம...லல்லுவை கூப்பிட்டு தமிழ்நாட்டை அவர்கைல ஒப்படைச்சாத்தான் தமிழ்நாட்டுக்கு விடிவு காலம்... வரும்..:))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இது கூட பரவாயில்லை, கனிமொழி "காமராஜரின் வாரிசு கருணாநிதி என்று ஒரு போடு போட்டார் பாருங்க" இதுக்கு மேல என்னால் எழுத முடியவில்லை.//

இதுவும் அவங்களோட கவிதை மாதிரின்னு லூசுல விட்டுட்டு போவீங்களா, அதை விட்டுட்டு ரொம்ப பீல் பண்றீங்களே!

Anonymous said...

அடுத்த வேட்டு வுட்டு கல்லா கட்ட, இதோ அடுத்த சமாசாரம் வந்தாச்சு பாருங்க!! ராஜ ராஜ சோழன் விழா பராக்!பராக்!! நான் கட்டும் வரிப்பணத்தை நீ எடுத்து வேட்டு விட யாரிடம் அனுமதி கேட்டாய்?? மன்னர்கள் ஆண்ட போழ்தும இவ்வாறிருந்திருக்குமா என் தாய்த்திருநாடு? கணப்போழ்தும் பொய்யேயுரைத்து தன வம்சம் மட்டும் வாழவைக்குமுனக்கு வெட்கம் மானம் ஏதுமுண்டா??

kggouthaman said...

அடுத்த வருட சட்ட மன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை இனிமேல் எல்லோருக்கும் நன்றாகப் பொழுது போகும்.

Gaana Kabali said...

"கார் விற்பனையில் வருமான வரி கட்டாத நடராஜனுக்கே, 2 ஆண்டு என்றால் 68 கோடி ரூபாய் ஊழல் பணத்தை மறைத்து வைத்திருக்கும் மகாராணி ஜெயலலிதாவுக்கு எத்தனை ஆண்டுகளோ, என்றெல்லாம் நாடு சிரிக்கின்றது "-கருணாநிதி

பல ஆயிரம் கோடி சுருட்டி வைத்திருக்கும் இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் என்ன தண்டனை?

"தலைக்கு 200 ரூபாய் மற்றும் பிரியாணி கொடுத்து கூட்டி வந்த கூட்டம"-முரசொலி

கருணாநிதிக்கு கூடிய கூட்டம் மட்டும் என்ன பாசத்தால் தானாக வந்த கூட்டமா?

"நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்று தான் கூறிவருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார். "
இதை விட மரியாதையாக மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கவேண்டும்.அரசியல் நாகரிகம் கருதி ஜெயலலிதா அப்படி பேசவில்லை போலும்.

"நீதிமன்றத்தை ஏமாற்றக் கூடிய, நீதிமன்றத்தில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறக் கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களை, இனிமேல் எதிர்க்கட்சி தலைவர் அம்மையார் ஜெயலலிதா என்று சொல்வதைவிட, வாய்தா ராணி ஜெயலலிதா என்று எல்லோரும் குறிப்பிட வேண்டும். இதற்காகத்தான் அந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. "-மு.க.ஸ்டாலின்

எது எதுக்குத் தான் போராட்டம்னு ஒரு விவஸ்தையே கிடையாதா? ஐயா ஸ்டாலின், எதிர்க்கட்சி தான் ஆளுங்கட்சிக்கு எதிரா போராட்டம் நடத்தும். இதென்னையா கேலிக்கூத்து ஆளுங்கட்சியே போராட்டம் நடத்துது?ஜெயலலிதா கேட்கும் கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்ல தெரியாததால் நடத்தும் காமிடி போராட்டமா இது?. பொய் கேஸ் போட்டா இப்படித் தாங்க நடக்கும் நீங்களே வெறுத்து போய் கேசை வாபஸ் வாங்கற வரைக்கும்.

Anonymous said...

ரொம்ப நாறுது!

Anonymous said...

இது இட்லிவடையா இல்ல நமது எம்.ஜி யாரா?(இன்னும் இருக்கா?) இதுக்கு வாலியே பரவாயில்லை!
ஆனா ஒண்ணு உங்கள் நூல் புத்தி மட்டும் மாறவே மாறாது.
'''''
இட்லிவடையில் ஏன் இதை பற்றி எழுதவில்லை என்று கூட சிலர் கேட்டார்கள். நாங்கள் அதை ஒரு முக்கிய செய்தியக இதை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் கலைஞர் நினைத்து நினைத்து திட்ட ஆரம்பித்ததால் இந்த பதிவு. '''''''''
ஆக ஜெவுக்கு ஜால்ரா தட்ட முடியலனாகூட,கலைஞரை திட்ட/விமர்சிக்க ஒரு சான்ஸா? எடு வண்டிய!!
ஆஹா என்னே நடுநிலை!!!

'''''''''
என்ன கூடவே தலைக்கு 200 ரூபாய் மற்றும் பிரியாணி கொடுத்து கூட்டி வந்த கூட்டம் என்று சமாதானப் படுத்திக் கொண்டுள்ளது'''''''''''
இதயே செம்மொழி மாநாடு கூட்டத்திற்கு உங்களவா சொன்னா அது பரிபூரண உண்மை.அதையே கலைஞர் சொன்னா "சமாதானப் படுத்திக் கொண்டுள்ளது"
இதுவல்லவா ஞாயம்!!!! பலே!! பலே!!

0000000
""ஆனால் முரசொலியே (ஆனால் முரசொலியே (வயிற்றெரிச்சலுடன்) ஒப்புக் கொண்டுள்ளது.""""
வயிற்றெரிச்சல் உமக்கா இல்ல முரசொலிக்கா ஸ்வாமின்?? எதுக்கும் ஆத்துல மாமிகிட்ட சொல்லி ஒரு டம்ளர் மோர் (ஐஸ் போட்டு) சாப்புடும்!!
000000

""""ஜெயலலிதா கூட்டிய கூட்டதுக்கு கோவை நகரில் வரும் வாகனங்களை திருப்பி விட்டு கூட்டம் வராமல் பார்த்துக்கொண்டதாம் காவல் துறை ( ஆ.வி நியூஸ் )""""
இந்தவார பெஸ்ட் ஜோக்!!
அது என்ன ஆ.வி நியூஸ் !!ஏதோ ஆ.வி(யி) நியுயார்க் டைம்ஸ் மாதிரி! அதுவும் பாப்ஸ் குட்டதானே!!
00000
கருணாநிதிதான் கரெக்டா விளக்கம் கொடுத்து இருக்காறே.வேற என்ன வேணும்??
000000
iv
This is the reality!!!
"""என்னை திட்டுபவர்கள் பெருக, பெருக, திமுக வளர்ந்துக் கொண்டேயிருக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது."""
ஒரு உண்மயான தமிழன்

RR said...

"கருணாநிதியை" கருணாநிதின்னு கூப்பிடாம அரவிந்த்சாமின்ன கூப்பிட முடியும்?.........முத்துவேலன்னுசொல்லியிருக்கணும்!

மஞ்சள் ஜட்டி said...

கருணாநிதியை அரவிந்த சாமிக்கு சமப்படுததுகிரீரே? அவ்வளவு அழகா அவர்?? "அடுப்பிலே வெந்த சாமின்னு சொல்லுங்கோ.."

அம்மா அப்பா பெயர் வைப்பது அடுத்தவர் கூப்பிட தான்..இதிலே அய்யா, அம்மையார் எங்கே வந்தது?? ஆனாலும் மு.கவுக்கு ரொம்பவே எதிர் பார்ப்பு தான்...

R.Gopi said...

இது அறிக்கை போரின் ஆரம்பம்... இனி, இது போன்ற அறிக்கை போரும், அக்கப்போரும் தொடரும்........

கவலை வேண்டாம்.....

R.Gopi said...

// மஞ்சள் ஜட்டி said...
கருணாநிதியை அரவிந்த சாமிக்கு சமப்படுததுகிரீரே? அவ்வளவு அழகா அவர்?? "அடுப்பிலே வெந்த சாமின்னு சொல்லுங்கோ.."

அம்மா அப்பா பெயர் வைப்பது அடுத்தவர் கூப்பிட தான்..இதிலே அய்யா, அம்மையார் எங்கே வந்தது?? ஆனாலும் மு.கவுக்கு //

யோவ்... மஞ்சள் ஜட்டி... எங்கேய்யா போயிடற அடிக்கடி....

வந்து அப்பப்போ தலைய காட்டுய்யா... “தல”ய பத்தி மட்டும் எழுதினா தலைய காட்டணும்னு இல்ல.. வேற பதிவுகளுக்கும் வந்து போயிட்டு இருய்யா....

Anonymous said...

//ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். கோவை, சேலத்தில் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி சம்பாதித்து அதன் பின் தான் சென்னை வந்தேன். நான் எழுதிக் குவித்த திரைப்படங்கள், நூல்கள் வாயிலாக சம்பாதித்தேன்.//

இவுரு எழுதியே இம்புட்டு சம்பாரிச்சிருந்தா அவுக நடிச்சு அம்புட்டு சம்பாரிச்சிக்க முடியாதா என்ன? என்ன நாஞ்சொல்றது!

//என்னைப் பற்றிச் சாட்டுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது தான்//

பெர்ர்ர்ரிய குடும்ம்ம்பம். பெர்ர்ரிய்ய குற்றச்சாட்டு. இதுல தப்பு என்னா கீது?

//நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்று தான் கூறிவருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார்//

இந்த விஷயத்தில் நான் சயலிலாதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். ’தக்ஷிணாமூர்த்தி’ன்னு அய்யாவோட முன்னோர்கள் வச்ச பேரக் கூப்பிட வேண்டியதுதானே, இதுல ஏன் ஓர வஞ்சகம். எல்லா கோயில்லயும் போய் அந்தப் பேருல தான அய்யாவோட மச்சினன் மாருக குடும்பம் அர்ச்சனை பண்ணிக்கிட்டு வாராக, பொறவு என்னவாம்,?

//முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் மதுரைக்கு வந்த போது அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது; கருணாநிதியின் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருப்பதாகக் ஜெயின் கமிஷன் அறிக்கை குற்றம் சாட்டியது; பெருந்தலைவர் காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்று சொன்னது; விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கேட்டு இந்திரா காந்தி அவர்கள் விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கிண்டல் அடித்தது //

என்ன இது கொஞ்சத்தை மட்டும் சொல்லிப்பிட்டு மிச்சத்தை அப்படியே சொல்லாம விட்டுப் போட்டீக... “அடியிலே ரத்தமா? அடியில ரத்தமா....” “பாவாடை நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்...”, “இந்து என்றால் வேசி மகன் என்று அர்த்தம் பாரசீக மொழியில்...” அப்புறம்... வேணாங்க.. எனக்கே கூச்சமா இல்ல இல்ல அருவெறுப்பா இருக்குது சொல்ல... சாரி!

ஆபாசமாகப் பேசுபவர்கள்தான் இங்கே தலைவர்களாய் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள், இதில் கருணாநிதி மட்டுமல்ல; ஜெயலலிதாவும் கண்டிக்கப்பட வேண்டியவர்தான்.

குண்டூசி குருசாமி

Anonymous said...

Sivanesachelvan,Coimbatore writse;;
While Jayalalitha has taken up public causes such as Prise rise, Sand Loot, PetrolCost , Electricity failures for her party's agitation ,Stalin's agitation against individual cause i.e. against J.J.is quite atrocious. How the people are going to be benefitted ? Will he explain And Why Media has failed to note this point and bring to the knowledge of public?

geeyar said...

ஜெயலலிதாவை மு.க, அம்மையார் என்று கூப்பிடும்போது ஜே அவரை கலைஞர் என்று கூப்பிடலாம். அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். ஒருவேளை ஜாதி தடுக்குதோ என்னவோ?

முக சார் நீங்க இனி வேணும்னா கோமளவல்லினு கூப்டுங்கோ. அந்த அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாங்க.

Anonymous said...

//கோவையில் கருணாநிதி பொதுக்கூட்டம்; களம் இறங்கினர் தி.மு.க.,வினர்//

'போட்டிக்கு புள்ள பெத்துக்குறது ' இதுதானா..?

Anonymous said...

//கோவையில் கருணாநிதி பொதுக்கூட்டம்; களம் இறங்கினர் தி.மு.க.,வினர்//

'போட்டிக்கு புள்ள பெத்துக்குறது ' இதுதானா..?//

எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கு பெறாமல் மாதக் கணக்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, கோவையில் செம்மொழி மாநாடு நடந்த சில தினங்களிலேயே பொதுக்கூட்டம் நடத்திக் காட்டியது கூட போட்டிக்கு புள்ள பெத்துக்க தானோ?