பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 22, 2010

தில்லாலங்கடி

போன வார செய்தி:
துர்கையம்மன் போன்று சித்திரித்து போஸ்டர் அச்சடிக்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வாரச் செய்தி :
தற்போது சன் பிக்சர்ஸ் கைவண்ணத்தில் வந்துள்ள ஒரு புதுப்படத்தில் ஜெயம்ரவியும் தமன்னாவும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில், நீங்கள் பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று தமன்னா சொல்ல, நீயும் சோனியாகாந்தியைப் போல ஒரு கட்சித்தலைவியாக வரவேண்டும் என்று ஜெயம்ரவி சொல்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணித்தலைமையை ஏற்று மத்திய அரசைத் திறம்பட வழி நடத்திச்செல்லும் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவி அன்னை சோனியாகாந்தியின் பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் மேற்கூறிய வார்த்தைகள் அடங்கிய வசனத்தோடு இந்தத் திரைப்படத்தின் விளம்பரம் தேவையற்ற முறையில் குடும்பத் தொலைக்காட்சிகளில் தற்போது திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அநாகரீகமற்ற இச்செயலைக் கவரிமான் காங்கிரஸ் தொண்டர்கள் எவரும் கணமும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அவ்வசனத்திற்குக் கதரியக்கக் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய டவுட்-1: துர்கையும் தமன்னாவும் ஒன்றா ?

இரண்டாவது டவுட்:


என்னுடைய டவுட்-2: ஜெயம் ரவி காங்கிரஸ்காரரா ? அதுனாலதான் சோனியா மாதிரி வரணும் என்று சொன்னாரா ?
பதிலுக்கு தம்மனா அவரை ஏன் ராகுல் காந்தி மாதிரி வரணும் என்று சொல்லலை ?16 Comments:

மானஸ்தன் said...

ஒரே கல்லுல நாலு மாங்கா! :>

யதிராஜ சம்பத் குமார் said...

தொண்டர்களின் ஆர்வ கோளாறால் வந்த வினைகளுக்கு சோனியாவைப் பொறுப்பாக்குவது நியாயமாகாது.

dondu(#11168674346665545885) said...

//பதிலுக்கு தம்மனா அவரை ஏன் ராகுல் காந்தி மாதிரி வரணும் என்று சொல்லலை ? //
அப்படி சொல்லிட்டா அவர் தமன்னாவின் பிள்ளை ஸ்தானத்துக்கு வந்துடுவாரே. அப்புறம் எப்படி ஜோடி சேர்ந்து குத்தாட்டம் போடறதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பதிலுக்கு தம்மனா அவரை ஏன் ராகுல் காந்தி மாதிரி வரணும் என்று சொல்லலை ?//

மன்மோகன் சிங் மாதிரி வா என்று சொல்லியிருக்கலாம். தன் பேச்சை தட்டக் கூடாது என்று குறிப்பால் உணர்த்தியிருக்கலாம்.

Anonymous said...

அன்னையின் ஆணைக்காக வெயிட்டீஸ்...

Anonymous said...

savukku. any comments?

ramanindia25@gmail.com said...

//.......
பதிலுக்கு தம்மனா அவரை ஏன் ராகுல் காந்தி மாதிரி வரணும் என்று சொல்லலை//

என்னப்பா!! ராஜீவ் காந்தி ன்னு எழுதி இருக்க வேண்டாமா?
அது சரி நம்ம ஊர் அரசியல் என்றாலே பணம் மற்றும் குழப்பம் தானே!!

ரிஷபன்Meena said...

//அப்படி சொல்லிட்டா அவர் தமன்னாவின் பிள்ளை ஸ்தானத்துக்கு வந்துடுவாரே. //

ஜோக்(இதெல்லாம் ஒரு ஜோக் -ஆஆ?) சொன்ன அனுபவிக்கனும் ஆராயப்படாது.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

சின்ன வயசுல நம்ப எல்லோரும் ஆடிய விளையாட்டு, 'திருடன் போலீஸ்'. இப்போ கூட கார்ட்டூன் நெட் வொர்க்குல, வார நாட்களில், மாலை மூன்று மணிக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி தொடரின் பெயர், சூஹா - பில்லி, 'ச்சோர் போலீஸ்'. தமன்னா, ஜெயம் ரவியை, நீ பெரிய போலீஸ் ஆஃபீசராக வரவேண்டும் என்றவுடன், அவர் சிறு வயதில் விளையாடிய திருடன் போலீஸ் ஞாபகத்தில், நீ பெரிய திருடியாக வரவேண்டும் என்று சொல்ல நினைத்து சூசகமாக சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

ந.லோகநாதன் said...

It is JOKE.. don't take it seriously.

thiru said...

"அநாகரீகமற்ற "


what kind of tamil is this?no tail fonts sorry.

ராசராசசோழன் said...

நீங்க காங்கிரஸ்காரங்களா
உயர்வா தானே எழுதி இருக்கீங்க... எதாவது ஒரு கோஷ்டி எதிர் பதிவு போடப் போறாங்க...

Gaana Kabali said...

இதுபோல் அரசியல் தலைவர்களை கடவுளர்களாக்கி பார்ப்பது தொண்டர்களின் ஆர்வக் கோளாறு. இதற்கு தலைவகளை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை.

இதற்கு முன்பு, வாஜ்பாயி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் ஒரே போஸ்டரில் பிரம்மா, விஷ்ணு, சிவனாக மாறியிருக்கிறார்கள்.

என்? இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, இந்திராகாந்தியை கூட துர்கையாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியிருப்பதாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.

1995 -ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது அவர் ஆதி பராசக்தியாகவும், கன்னி மேரியாகவும் சித்தரிக்கப் பட்ட போஸ்டர் சென்னை நகரமெங்கும் ஒட்டப் பட்டது. எல்லா தரப்பிலும் எதிர்ப்புகள் வரவே ஜெயலலிதா அவர்களே அவற்றை அப்புறப் படுத்த உத்தரவிட்டார்கள்.

1998 -ஆம் ஆண்டு ஒட்டப்பட்ட போஸ்டர் என்னை மட்டும் அல்ல, எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சுவாரஸ்யமான போஸ்டர் ஆகும்.

அதில் கருணாநிதி குப்புறப் படுத்துக் கொண்டிருப்பார். ஜெயலலிதா காளி உருவத்தில் கருணாநிதியின் முதுகின் மேல் காலை வைத்து மிதித்துக் கொண்டிருப்பார்கள். அவருடைய எட்டுக் கைகளும் ஒவ்வொரு ஆயுத்தை ஏந்தியிருக்கும்......ஆனால் ஒரு கையில் மட்டும் கருணாநிதியின் துண்டிக்கப் பட்ட தலையிருக்கும். ( அந்த போஸ்டரின் புகைப்படம் எங்காவது கிடைக்குமா?)

ஸ்டாலின் கூட சென்ற வருடம் முருகப் பெருமானாக சித்தரிக்கப்பட்டு போஸ்டர் ஓட்டப் பட்டதாக ஞாபகம்.

இப்போது சோனியாகாந்தி துர்கையாக்கப்பட்டிருக்கிறார்.

இட்லிவடை! உங்கள் நகைச்சுவை கட்டுரைக்கு பாராட்டு!

ப.சங்கர் said...

காங்கிரஸ் கட்சி எந்த வித குழப்பமே இல்லாத?, கோஷ்டியே இல்லாத? ஒரு குடையின்? கீழ் செயலாற்றி? வரும் போது, தெளிந்த குளத்தில் கல்லை விட்டு எறிந்தால் யாருக்குத்தான் கோபம் வராது?.....

R.Gopi said...

//கருணாநிதி குப்புறப் படுத்துக் கொண்டிருப்பார். ஜெயலலிதா காளி உருவத்தில் கருணாநிதியின் முதுகின் மேல் காலை வைத்து மிதித்துக் கொண்டிருப்பார்கள். அவருடைய எட்டுக் கைகளும் ஒவ்வொரு ஆயுத்தை ஏந்தியிருக்கும்......ஆனால் ஒரு கையில் மட்டும் கருணாநிதியின் துண்டிக்கப் பட்ட தலையிருக்கும். ( அந்த போஸ்டரின் புகைப்படம் எங்காவது கிடைக்குமா?)//

கானா கபாலி அவர்களே... நீங்க சொல்ற அந்த போஸ்டர் என் கிட்ட இருக்கே!!!!!!

geeyar said...

தமிழகத்தில் அம்மாவிற்கு வைக்காத கட்அவுட்டா? எத்தனை சாமி உண்டோ அத்தனை சாமி உருவத்திலும் அம்மாவை பார்த்தோமே. அவங்க மேல் ஏன் யாரும் கேஸ் போடல?