பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 18, 2010

ஒற்றுமைச் செய்திகள்

இந்த வார இரண்டு ஒற்றுமை செய்திகள். இரண்டிலும் காங்கிரஸ் இருப்பது ஒற்றுமை ஆனால் நிச்சயம் செய்திகளில் ஒற்றுமை எதுவும் இல்லை. ஜாலியா படிங்க...


ஒற்றுமை செய்தி 1:

தமிழக காங்கிரஸில் எல்லோரும் வேஷ்டி கட்டிக்கொண்டு இருப்பார்கள் இது ஒற்றுமை ஆனால் கூட்டம் என்று வந்தால் கோஷ்டியால் வேஷ்டி கிழியும், இவர்கள் வேஷ்டி கட்டிக்கொண்டு இருப்பதே அதற்கு கிழிக்க தானே!.

ஆனால் அனைத்து கோஷ்டி தலைவர்களும் ஒற்றுமையுடன் இருப்பதா திடுக்கிடும் தகவல் ஒன்று சில நாட்கள் முன் வெளியானது. இத்தகவலை வெளியிட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். நேற்றைய முன்தினம் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, பெரம்பூரில் காமராஜர் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில் இந்த அதிசய தகவலை வெளியிட்டார். இதில் கூடுதல் விசேஷம் என்னவெனில், அவரோடு அம்மேடையில் தங்கபாலு, வாசன் என இரு முக்கிய வேஷ்டி தலைவர்களும் இடம்பெற்றிருந்ததுதான்.

இன்னொரு ஆச்சரியமும் நடந்தது, இளங்கோவனுக்கு பின் ஒருவர் பின் ஒருவராக உரையாற்றிய தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை நிலவுவதாக வற்புறுத்திக் கூறினர். இது கூட பரவாயில்லை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேசிய சிந்தனை உடையவர்கள் என்ற ஒரு புதிய செய்தியையும் ஈ.வி.கே.எஸ் வெளியிட்டார்.

கலைஞர் ஆட்சி தான் காமராஜ் ஆட்சி என்று முன்பு புகழ்ந்தவர்கள் இவர்கள். இவர்களுடைய தேசிய சிந்தனை எத்தகையது என்பதனை இவர்களுடைய கூட்டணிக் கட்சிகளான தனித் திராவிட நாடு கோரிய திமுகவையும், தமிழகம் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரிவினை கோரும் கோஷ்டியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகளையும் பார்த்தாலே தெரியும். இது கூட பரவாயில்லை தமிழக காங்கிரஸை புல் பூண்டு இருந்த இடம் தெரியாமல் அழிப்போம் என்று உறுதி பூண்ட கட்சி இந்த சிறுத்தை கட்ட்சி. எப்போர்பட்ட தேசிய சிந்தனை இவர்களுடையது.

இதை எல்லாம் விடுங்க சார், "எங்களிடையே யார் பெரியவர், யார் சிறியவர் என்ற வேறுபாடு இல்லை" என்றார். சத்திய மூர்த்தி பவனில் இது கிடைக்கிறதோ இல்லையோ அரிவாள் வெட்டும், குஸ்திகளும் நிச்சயம் கிடைக்கும். சில சமயம் இவர்களின் குஸ்திகளை காண்பிக்கும் போது ஏதோ WWF சேனல் பாக்கும் உணர்வு ஏற்படும். மிகச் சமீபத்தில் நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் கழக பாணியில் பணம் கொடுத்து தங்களது வேட்பாளர்களை வெற்றி பெற செய்தார்கள்.

அன்று பேசிய ஈ.வி.கே.எஸ்ஸின் பேச்சில் காரம் சற்று தூக்கலாகவே இருந்தது. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று சொல்லிச் சொல்லியே மு.க'வை முரத்தில் புடைத்தெடுத்தார். அதிலிருந்து சில ஹைலைட்கள் :

* தனக்கென்று ஒரு குடும்பம் இருந்தால், மக்கள் தொண்டாற்ற முடியாதென்பதாலேயே காமராஜர் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகிவிட்டது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. காமராஜருக்கு குடும்பமும் இல்லை, சொத்தும் சேர்க்கவில்லை.

* காமராஜர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்த வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. காமராஜர் உயிருடன் இருக்கும்போது அவர் ஹைதரபாத் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியவர் இன்றும் இருக்கிறார். சாமானியனாகப் பிறந்து சாமானியனாகவே மறைந்தவர் காமராஜர். ஆனால் சாமானியனாகப் பிறந்து குபேரனாக இருப்பவர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கின்றனர்.

* திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. சோனியாவும், ராகுலும் யாருடன் கூட்டணி என்று சொல்கிறார்களோ அவர்களின் வெற்றிக்காக உழைப்போம். 43 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக பாடுபட்டு வருகிறோம். தமிழக காங்கிரஸின் நிலை தில்லிக்குத் தெரிய வேண்டும், அதனை வாசன் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். எனக்கு ஏற்கனவே பொல்லாப்பு பட்டம் இருக்கிறது.

கூட்டணி வெற்றிக்கு உழைத்து அதே சமயம் தமிழகத்தில் காங்கிரஸை நம்பர் ஒன் கட்சியாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாகும் என்று நாம் யோசிக்க கூடாது இப்படி ஒன்றுடன் ஒன்று ஒற்றுமையில்லாமல் இருக்கும்போது, தமிழக காங்கிரஸில் மட்டும் ஒற்றுமை இருக்கிறது என்றால் எப்படி நம்புவது?


பெப்சி கோக் போல காமராஜர் தமிழ்நாட்டில் ஒரு பிராண்ட் இமேஜ் அவ்வளவு தான்!

ஒற்றுமை செய்தி - 2

எஸ்.எம்.கிருஷ்ணா நல்ல வேளை பாகிஸ்தான் போன போது கோட் சூட் போட்டுக்கொண்டு போனார். வேஷ்டி கட்டிக்கொண்டு போனால் அதையும் கழட்டியிருக்கார்கள். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே விவாகரத்து கிடைக்கிறது. ஆனால் நாம் இன்னும் இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தை என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். இதிலும் வேடிக்கை இருக்கு - தீவிரவாதத்தை ஒடுக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என்று சொல்லிக் கொண்டே, அங்கும் இங்குமாக அவர்களைப் பார்த்து, கை குலுக்கி, பேச்சுவார்த்தைக்கு இணங்கி விடுகின்றனர்.

இவர்கள் பேச்சு வார்த்தையில் என்ன பேசுவார்கள் என்று யாருக்கு தெரியாது. எல்லா பேச்சு வார்த்தையும் வழ வழா கொழ கொழாதான். ஒரு வேளை வெண்டைக்காய் கூட்டு எப்படி செய்வது என்று பேசுவார்களோ என்னவோ!


மும்பை தாக்குதலை நாம் பாராளுமன்ற தாக்குதல் போல மறந்துவிட்டோம். ஆனால் காங்கிரஸ் அரசை சும்மா சொல்ல கூடாது அதை நினைவு வைத்துக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்த போயிருக்கிறார்கள். இந்தியா சார்பில் போனது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. அவர் மூன்று நாள் பயணமாக இஸ்லாமாபாத் சென்றார். அஜண்டா வழக்கமானது தான் - அமைதிப் பேச்சுவார்த்தை + மும்பை தாக்குதல் விவகாரம். அங்கு சென்ற கிருஷ்ணாவை, பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி அவமரியாதை செய்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

பேச்சு வார்த்தைக்குப் பிறகு கூட்டாக பேட்டியளித்த போது, கிருஷ்ணாவை வைத்துக் கொண்டே, குரேஷி இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையையும், ஜமாத் உத் தவா தலைவர் சையதையும் ஒப்பிட்டுப் பேசினார் என்று தெரிகிறது. எம்மாதிரியாக ஒப்பிட்டார் என்பது பற்றியதான விளக்கமான தகவல்கள் இல்லை. மும்பை தாக்குதலில் ஐஎஸ் ஐக்குத் தொடர்பிருப்பதாகக் கூறிய ஜி.கே.பிள்ளைக்கும் கிருஷ்ணா முன்னிலையிலேயே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் குரேஷி.

இவை தவிர, பேச்சு வார்த்தையின் போது அடிக்கடி கிருஷ்ணா இந்திய அரசைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், சுயமாக முடிவெடுக்க இயலாதவர் என்ற ரீதியில் அவமரியாதை செய்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுகள் மிகுந்த அத்து மீறியதும், கடுமையான கண்டனத்திற்குரியதும் ஆகும். பாகிஸ்தான் அரசாங்கம், அந்நாட்டு ராணுவத்திற்கும், ஐ எஸ் ஐ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் உட்பட்டது என்றும் உலகிற்கே தெரிந்த விஷயம். ஆனால் சோனியா ஒருவருக்கே உட்பட்ட கிருஷ்ணாவை அவர் அவமரியாதை செய்திருப்பது எவ்வகையில் பொருந்தும்? எது எப்படியோ?? வட இந்திய செய்தி சானல்களுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு அரைப்பதற்குண்டான தீனி கிடைத்து விட்டது.

பாகிஸ்தான் இந்தியாவை வைத்து காமெடி செய்கிறது என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இப்பொழுது கிருஷ்ணா, ராஜரீதியாக குரேஷியை தில்லிக்கு அழைத்துள்ளார். என்ன நடக்கும்? இரு நாட்டுக் கொடிகளையும் நடுவில் நிறுத்தி, சம்பிரதாய கைகுலுக்கல்களுக்கிடையே, இரண்டு நாட்கள் பேச்சு வார்த்தை நடக்கும். கடைசியில் பேச்சு வார்த்தை தோல்வி என மறுநாள் தினசரிகளில் தலைப்புச் செய்தி வரும்.

ஒற்றுமை நிச்சயம் கிடைக்காது என்று தெரிந்து ஒற்றுமை பற்றி பேசும் இவர்களை பாராட்ட வேண்டும். மன்மோகன் சிங் நல்ல பிரதமாரா என்று கேள்விக்கு இந்த வார குமுதம் அரசு பதில்கள் - நல்ல பிரதமர் தான், அமெரிக்காவுக்கு என்று பதில்.

யதிராஜ் + இட்லிவடை ஒற்றுமையாக எழுதிய பதிவு ... ஒற்றுமை தொடரும்..:-)

19 Comments:

முகமூடி said...

தமிழக காங்கிரஸ் மற்றும் இந்தியா இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை - இரண்டுமே வளைந்த முதுகு கொண்டவர்கள். முன்னது திராவிடக்கட்சிகளுக்கு கூழைக்கும்பிடு போட்டு போட்டு பெற்றது. பின்னது குட்டக்குட்டக்குனிந்து பெற்றது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அப்போ இன்னும் கொஞ்ச நாள்ல கருணாநிதியை கோபாலபுர வீட்டுல "மரியாதை" நிமித்தமா சந்திச்சுட்டு வெளிய வந்து பேட்டி கொடுக்கற இளங்கோவனைப் பாக்கலாம்.

சாந்தப்பன் said...

மன்மோகன் சோனியாவுக்கு நல்ல பிரதமரா? அமெரிக்காவுக்கு நல்ல பிரதமரா? பட்டிமன்ற தலைப்பு கிடைத்துவிட்டது. கூட்டுங்க‌ய்யா கூட்டத்தை!

சாந்தப்பன் said...

அப்போ இந்த "சுத‌ந்திர‌‌" தின‌த்திற்க்கு வ‌ர‌லாறு காணாத பாதுகாப்பு நிச்ச‌ய‌ம்!

குரோஷி வ‌ரும்போதே, தீவிர‌வாதிக‌ளை கொண்டு வ‌ந்து இற‌க்கிவிடுவார்!

சாந்தப்பன் said...

கிருஷ்ணாவையே அவ‌ம‌திப்பு செய்ஞ்சுபுட்டாங்களா; ஏன் இந்துத்வா க‌ட்சிக‌ள் மெள‌ன‌ம் காக்கின்ற‌ன? அது குறித்து யாராவ‌து வழ‌க்கு போட்டால் தேவ‌லை.

Altruist said...

உங்க ப்ளாக் டைட்டில்ல "இலை" உல்டாவா இருக்குன்னு நினைக்கறேன்

IdlyVadai said...

//உங்க ப்ளாக் டைட்டில்ல "இலை" உல்டாவா இருக்குன்னு நினைக்கறேன்//

எதிர் பக்கம் உட்கார்ந்து சாப்பிடவும் :-)

பாரதி மணி said...

ஒற்றுமைச்செய்தி 1-டன் ஒற்றுமையுள்ள இன்னொரு செய்தி.

இம்மாதம் 31-ம் தேதி மறைந்த அமைச்சர் கக்கன் நூற்றாண்டுவிழா வருகிறதாம். அதற்கு ராகுல் காந்தி, ப. சிதம்பரம் போன்ற பிரபலங்களை அழைத்து பெரிய விழாவாக மதுரையில் கொண்டாடப்போகிறார்களாம். மரணப்படுக்கையில் இருக்கும் காங்கிரஸை உயிர்ப்பித்து, அடுத்த தேர்தலுக்கு தயார்ப்படுத்த மும்மரமாக பாடுபடுவார்களாம். அதற்கு இந்த விழா ஒரு Launching Pad ஆக இருக்குமாம்!

இதில் ஒரு கொசுறுச்செய்தி: இந்த விழாவுக்காக திரு. கக்கனின் வாழ்க்கை வரலாற்றுச்சம்பவங்கள் சிலதைத்தொகுத்து, ஒருமணிநேரக்குறும்படம் எடுப்பதாகவும், அதில் நான் கக்கனாக ’வாழ்ந்தால்’ அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்றும் ஒரு இயக்குநர் கேட்டுக்கொண்டார். அவரிடம் நான் ம்றைந்த கக்கன் அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் சொன்னேன்:

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, கக்கன் மந்திரியாக இருந்தபோது தில்லி வந்திருந்தார். ரயில்வே உபமந்திரி ஓ.வி. அளகேசன் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்த தில்லி தமிழ்ச்சங்கம் முடிவு செய்து அவர் சம்மதத்தையும் பெற்றிருந்தது. தமிழ்ச்சங்கம் அப்போது கனாட் பிளேஸில் மூன்று அறைகளில் இயங்கிவந்தது. விழாவன்று அவரை சங்கத்துக்கு கூட்டிவர நான் போயிருந்தேன். ஆபீசில் சொல்லி ஒரு அம்பாஸிடர் காருக்கு ஏற்பாடு செய்திருந்தேன். (அப்போது அது எனக்கு பெரிய காரியம்!) கடைசி நேரத்தில் வழக்கம்போல வண்டி வரவில்லை. அவரிடம் எப்படி சொல்வது என்று தயங்கிய என்னைப்பார்த்ததுமே, ‘நான் ரெடி, போலாமா?’ என்று கேட்டுக்கொண்டே, அளகேசன் வீட்டுக்கு வெளியே வந்துவிட்டார். சங்கோஜத்துடன் விஷயத்தைச்சொன்னேன். ‘அதுக்கென்ன இப்போ?’ என்று கேட்டுவிட்டு, ரோடில் போன ஒரு ‘பட்பட்டி’யை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டார். பட்பட்டி அந்தக்காலத்து தில்லி ஆட்டோ. மூன்று மணிநேரம் அவருடனேயே இருந்து, திரும்ப வீடு கொண்டு சேர்த்தேன்.

இக்காலத்து அமைச்சர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று கொஞ்சம் கற்பனையை ஓட்டிப்பாருங்கள். சிறந்த கற்பனைக்கு இட்லிவடை பரிசு உண்டு!!

பாரதி மணி

பாரதி மணி said...
This comment has been removed by the author.
உண்மையான இஸ்லாமியன் said...

// IdlyVadai said...
//உங்க ப்ளாக் டைட்டில்ல "இலை" உல்டாவா இருக்குன்னு நினைக்கறேன்//

எதிர் பக்கம் உட்கார்ந்து சாப்பிடவும் :-)

//

என்னா வில்லத்தனம்?

kggouthaman said...

செய்தி ஒன்று. சென்னையில் மழை என்றும், மழை மேலும் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு தொடரும் என்றும் படித்தபோதே நினைத்தேன் இப்படி ஏதாவது நடந்திருக்கும் என்று!

geeyar said...

சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பேசிய "அறிஞர் அண்ணாவால் இன்று ஒரு அடைமொழி கிடைக்கப்பெற்ற இல்லையெனில் இன்று எங்கள் பகுதியில் அப்பன் பெயர் தெரியாத --வாக சுற்றி திரிந்திருக்க வேண்டிய" கவிஞர் மொழி கலைஞர் கருணாநிதி பெருந்தலைவர் காமராஜரின் வாரிசாக இருந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார் என்று பினாத்தியிருக்கிறார். ___மவ மைக் கிடைச்சா என்ன வேணும்னாலும் பேசலாமா. சோற்றை திங்கிறாளா வேறேதையும் திங்கிறாளானு தெரியல. அப்புறம் இன்னொருத்தன் 2வது பெண்டாட்டியை விட்டுட்டு __வது புருசனை விட்டுட்டு வந்த ஒருத்தியை சில கோடிக்கு ஆசைப்பட்டு கட்டிட்டு இன்று வாழும் காமராஜ் பச்சைதமிழன் என்றெல்லாம் விளம்பரம் பண்ணிக்கொண்டு திரிகிறான். இந்த __களெல்லாம் காமராஜர் பெயரை கூட கூற அருகதையற்றவர்கள்.

அராகன் said...

-" நல்ல பிரதமர் தான், அமெரிக்காவுக்கு" நல்ல கருத்து. இது எல்லா நாட்டு தலைவர்களுக்கும் பொருந்தும்.இல்லாவிட்டால் இருக்கவிட மாட்டார்களே.

Anonymous said...

சோனியா ஒருவருக்கே உட்பட்ட கிருஷ்ணாவை அவர் அவமரியாதை செய்திருப்பது எவ்வகையில் பொருந்து

I THINK THIS COMMENT BELONG TO IDLYVADAIYAR...

MURALI

R.Gopi said...

//யதிராஜ் + இட்லிவடை ஒற்றுமையாக எழுதிய பதிவு ... ஒற்றுமை தொடரும்..:-)//

காங்கிரஸை பற்றி ஒற்றுமையாக நீங்கள் எழுதியதே இந்த நூற்றாண்டில் நடைபெற்ற சாதனைகளில் முக்கியமான ஒரு பெரிய சாதனை தான்...

R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...

// IdlyVadai said...
//உங்க ப்ளாக் டைட்டில்ல "இலை" உல்டாவா இருக்குன்னு நினைக்கறேன்//

எதிர் பக்கம் உட்கார்ந்து சாப்பிடவும் :-)//

******

தல

உங்கள பத்தி யார் யாரோ என்னன்னவோ சொன்னாங்க... ஆனாலும் நான் இப்போ சொல்றேன்... நீங்க இன்னும் அதே பழைய ஃபார்ம்ல தான் இருக்கீங்க....

நீங்க நடத்துங்க தல....

நெஞ்சு பொறுக்குதில்லையே !! I Love India!! said...

அண்டங்காக்கா என்றும் ஹைதராபாத்தில் சொத்து குவிச்சு வச்சிருக்கார் என்றும் புகழ்ந்த வாயெல்லாம் எந்த கருணா த்துக்காக ... சாரி காரணத்துக்காக காமராஜரின் லேபிளை ஒட்டிக்கொல்கிரார்கள் (ல தான் ள அல்ல) என்று மானத்தோடும் நியாயத்துடனும் சம்பாதிச்சு சாப்பிடுகிறவர் எல்லாருக்கும் தெரியாதா என்ன? (அநேகமாக)இந்த மண்ணுக்கு கெடைச்ச கடைசி நல்ல மற்றும் மிகபெரிய புத்திசாலி லீடர் இந்த தேங்காய் வியாபாரி மவன்தான்!!