பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 14, 2010

முதல்வரும் இரு ஆன்மீக உபன்யாசகர்களும்

"வேளுக்குடி, திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள் என்ற விவரம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை" என்ற என் கமெண்டுக்கு, நிகழ்ச்சிக்கு சென்ற ஒருவர் தான் பார்த்த அனுபவத்தை (?) எனக்கு மெயிலில் அனுப்பியுள்ளார். பல இடங்களில் எடிட் செய்த அந்த மெயில் கீழே...

தமிழில் ஆழமான ஞானமும் தெளிவான புலமையும் உடையவர்கள் கனா வுக்குக் கானா குனாவுக்குக் கூனா என்று அடுக்கு மொழியில் பேசித் திரிவதுதான் தமிழ் என்று நினைக்கும் போலித் தமிழறிஞர்கள் இல்லை. தமிழ் வளர்ந்தது சமயத்தால். தமிழை உண்மையில் செழுமைப் படுத்தியவர்கள் பக்தி இலக்கியத்தை வளர்த்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் எண்ணற்ற பக்தி கவிதைகள் படைத்த கவிஞர்களும் பாடகர்களும் பொளராணிகர்களுமே ஆவார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் படைத்த கண்ணதாசனும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் கீரன் போன்றவர்களும் இன்னும் எண்ணற்ற உபன்யாசகர்களும் இல்லாமல் தமிழ் இன்று இல்லை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஏன் கம்பனையே ஒதுக்கி விட்டு இன்று இவர்கள் தங்கள் புகழ் பாடுவதற்காக ஒரு செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.
அது செம்மொழி மாநாடாக நடக்கவில்லை மாறாக ஒரு குடும்பத்தின் புகழ் பாடும் செம்மறியாட்டுக் கும்பலின் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. தினம் தினம் நான்கு பேர் கூடி தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற புகழ் போதையில் திளைத்த கருணாநிதிக்கு அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர் சேர்ந்து இன்னும் ஒரு பாராட்டு நிகழ்ச்சியை

ஏற்பாடு செய்து அதில் தமிழின் மிகச் சிறந்த அறிஞர்களில் இருவர்களான திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஏற்பாடு செய்தவர் பற்றி உங்களுக்கே தெரியும். தன் பேச்சில் இவரை 'ஆழ்வார்' என்று அழைத்த போதே வேளுக்குடி பயந்திருப்பார்.

துரதிருஷ்டவசமாக மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நானும் செல்ல நேரிட்டு விட்டது. வேள்குடி பெயரையும், கல்யாணராமன் பெயரை பார்த்ததும் இவர்களின் தேன் தமிழ் காதில் கேட்கும் ஆசையில் நானும் சென்று விட்டேன். ஜால்ராக்களின் அடித்த வழக்கமான பஜனைகள முடிந்த பின்னால் வேளுகுடி தன் அற்புதமான உரையை ஆரம்பித்தார்.

திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்கள் திராவிட வேதமான ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்கள் குறித்து மிக அற்புதமான உருக்கான கேட்ப்போர் மனதும், நெஞ்சும், காதும் குளிர ஆழ்வார் பாடல்கள் குறித்து விளக்கினார். வேள்குடி கிருஷ்ணன் ஒரு ஆடிட்டராக இருந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி அதிகாரி வேலையை உதறி விட்டு நாராயணன் புகழ் பரப்பி வருகிறார். நாரயணனின் பரிபூரண ஆசிகள் பெற்ற வேள்குடி தமிழ் கேட்ப்பவர்களை உருக்க வைப்பது. எந்தவித உச்சரிப்புப் பிழைகளும் தமிழ் இலக்கணப் பிழைகளும் இல்லாத சிறப்பான தமிழ் அவருடையது. குழலிது யாழிலுது என்பார் வேள்குடி தம் தமிழ் உரை கேளாதோர். பூரணமான ஞானமும் அறிவும் நிரம்பிய உண்மையான தமிழறிஞர் வேள்குடி தன்னைத்தான் உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தலைவன் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு நிறைகுடத்தின் உரையைக் கேட்டு எப்பேர்ப்பட்ட ஆழமில்லாத ஒரு போலி என்பதை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். அவர் ஆணவத்திற்கும் புகழ் மமதைக்கும் ஒரு பேரிடி விழுந்திருக்கும். இருந்தாலும் வேளுகுடி கிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் கொடிய மனமும் உருகும், பாவிகள் மனதிலும் கருணை சுரக்கும். ஆனால் யாருக்கு என்ன சுரந்தது என்று நான் சொல்லப்போவதில்லை.

வேளுகுடி அவர்கள் தீவிர வைணவர். உபன்யாசத்தின் பொழுது நாராயணனை தவிர வேறு ஒருவரையும் துதிக்க மாட்டார். அவர் ஆண்டவனை மட்டுமே தொழுது தன் உபன்யாசத்தை நடத்துபவர். அதுதான் சம்பிரதாயம் அவரது மரபு. அன்றைய நிகழ்ச்சியின் பொழுதும் தன் வழக்கப் படி சம்பிரதாயப் படியே கட்சி மேடை போல இல்லாமல் யாரையும் அவர்களே இவர்களே என்று அழைத்து துதிபாடாமல் ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சுவைகளையும் அவற்றில் உள்ள தத்துவ மேன்மையையும் மட்டுமே உள்ளம் உருக தன் கம்பீரமான கேட்ப்போரை மயக்கும் அற்புதக் குரலில் சொற்பொழிவாற்றினார். அன்று அவர் கருணாநிதியை பெயரை ஒரு இடத்தில் கூட அழைக்காமல் தன் உரை நிகழ்த்தினார் என்பது ஹைலைட்! கடைசியில் இப்படி ஆழ்வார்களால் போற்றப்பட்ட தமிழுக்கு மாநாடு நடத்தியது பாராட்டு்க்குரியது என்று முடித்துவிட்டார்.

கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே அவரைக் குறிப்பிடாமல் அவர் புகழ் பாடாமல் ஒருவர் ஆண்டவனின் புகழை மட்டுமே பேசி விட்டு ஆளுபவனை உதாசீனம் செய்தது கருணாநிதியைப் பெரிதும் தைத்திருக்கிறது. அதனால்தான் வேளுகுடியை குத்தும் வண்ணம் உள்குத்து வைத்து "இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்" என்று பேசியுள்ளார் கலைஞர்.

அடுத்து திருச்சி கல்யாணராமன். பல ஆன்மீக அன்பார்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அன்று வேளுகுடி அவர்களின் கண்ணியத்திற்கும் பக்திக்கும் மாறாக நடந்து கொண்டார் திருச்சி கல்யாணராமன். சுயநலத்திற்காக எத்தனையோ பேர் துதிபாடுவதும், கால்களில் விழுவதும் தமிழ்நாட்டில் தினமும் நடப்பது தான். ஆனால் அனுதினமும் ஆண்டவன் புகழ் பரப்பும் புகழ் பெற்ற அறிஞரான திருச்சி கல்யாணராமன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் படு கேவலமாக இருந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் ஆபாசத்தின் உச்சம். வாலியே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு செயலாக அமைந்து விட்டது. இது காறும் தன் அருமைத் தமிழால்

புலமையால் பேச்சாற்றலால் ஆன்மீக அன்பர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வந்த கல்யாணராமன் இந்த ஒரு நிகழ்த்தியில் தரம் தாழ்ந்து தன்னை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். இத்தனை வருடங்கள் அவர் ஆற்றிய உபன்யாசங்களுக்கும் பேருரைகளுக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார். பணத்திற்காகவும் பதவிக்காவும் புகழ் பாடும் அற்பர் கும்பலையெல்லாம் நாண வைத்து விட்டார். ஒரு வாலியும், ஒரு எஸ் வி சேகரும் புகழ் பாடினால் நமக்கு அதிர்ச்சி இல்லை. ஆனால் நாளெல்லாம் பக்தி வளர்த்த ஒரு அறிஞர் கேவலம் தனக்கு சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் சான்ஸ் வேண்டும் என்று இறைஞ்சிக் கெஞ்சிக் கேட்ட கேவலத்தைக் கண்ட பலரும் அவமானத்திலும் அருவருப்பு உணர்ச்சியிலும் உறைந்து போயினர். நான் ஒரு பிராமணன் எனக்கு டி வி சான்ஸ் கொடுங்கள் நான் மடிப்பிச்சை கேட்க்கிறேன் என்று அவர் பிச்சைக்காரனை விடக் கேவலமாகக் பொது மேடையில் கெஞ்சியதும் என்ன என்று சொல்லுவது. நாளைக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் நடக்க வாய்ப்பு இருக்கிறது அவ்வளவு ஏன் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கூட பிரமோஷன் கிடைக்கலாம்.

இது மட்டுமல்ல. திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்.

- [ edited ]

"என்ன கொடுமை சரவணன் இது?"

36 Comments:

Vetri said...

"கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் தீரன்"

ஐயா அவர் தீரன் இல்லை கீரன்

R. Jagannathan said...

இருவரின் பேச்சும் முழுமையாக கிடைக்காவிட்டாலும், கல்யாண ராமன் அவர்களின் பேச்சு பதிவு செய்யப்பட்டது உண்மையாயின், அது மிகவும் துர்பாக்ய நிலையாகும். - ஜெ.

Vetri said...

திருச்சி கல்யாணராமன் அவ்வாறு மடிப்பிச்சை கேட்டிருந்தால், தமிழ் ஆன்மீக உலகம் அவரை விளக்கி வைக்க வேண்டும்!

வலைஞன் said...

எப்படியோ,இந்த மேட்சில் மு.க.விற்கு,இரண்டு விக்கெட் கிடைக்காவிட்டாலும்,ஒன்று கிடைத்துவிட்டது!

sowri said...

Me too went for that meeting. just because of Velukkudi Krishnan. I agree fully with the writer. Its not required either for Trichy Kalayanaraman nor for Kalaingar such a platform.

Lakshman said...

I am not trying to defend Trichy Kalyanaraman for his talk, on the MSS reciting part he is correct. Vishnu sahasranama contains some shabpthas that are found in Vedas. Vedas has been traditionally not chanted by ladies and hence this practice applies for the Vishnu Sahasranama also.

Saravanan said...

//"என்ன கொடுமை சரவணன் இது?"//

அதை ஏன் கேக்குறீங்க போங்க...ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

ஆமா 'அம்மா' வுடைய கோவை விசிட்-பத்தி நியூஸ் இல்லையா?

R.Gopi said...

//"இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்"//

*********

”தல” இப்படி எதுவும் உள்குத்து வச்சு பேசாமல் இருந்திருந்தால் தான், அது நியூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Anonymous said...

செம்மொழி மாநாடு...செம்மறியாடு மாநாடு....

thiru said...

"I am not trying to defend Trichy Kalyanaraman for his talk, on the MSS reciting part he is correct. Vishnu sahasranama contains some shabpthas that are found in Vedas. Vedas has been traditionally not chanted by ladies and hence this practice applies for the Vishnu Sahasranama also."

no one knows what the veda says.also heard of gargi and maitreyi?

சுழியம் said...

//I am not trying to defend Trichy Kalyanaraman for his talk, on the MSS reciting part he is correct. Vishnu sahasranama contains some shabpthas that are found in Vedas. Vedas has been traditionally not chanted by ladies and hence this practice applies for the Vishnu Sahasranama also.///

That is a BULL SHIT.

Vedas are chanted by women from the Vedic period until now.

Only some Maccaulay's children claim that women are restricted to chant Vedas.

அரவிந்தன் நீலகண்டன் said...

திருச்சி கல்யாணராமன், வாலி போன்ற ஜன்மங்கள் இருப்பதால்தான் வேளக்குடி கிருஷ்ணன் போன்றவர்களை எங்கு பார்த்தாலும் அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்பதன் அவசியம் புரிகிறது. மறந்தும் புறந்தொழா மாந்தர் வைணவர் என்பார்கள். மறந்தும் புல்லரை அவர்கள் என்னதான் விதிவசத்தால் வலிய ஆசனத்தில் இருந்தாலும் புகழ்ந்திடாத மாண்பைக் கொண்ட வேளக்குடி கிருஷ்ணனுக்கும் அவருக்கு இந்த மாண்பைக் கொடுத்த வைணவ தர்மத்துக்கும் கோடானுகோடி வணக்கங்கள்.

யதிராஜ சம்பத் குமார் said...

மிகவும் அருமையான கட்டுரை. திருச்சி கல்யாணராமன் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் இக்கட்டுரை துடைத்தெறிந்து விட்டது.

கட்டுரையின் ஆரம்ப கட்ட அசத்தல்களைப் பார்த்தால், இவர் துக்ளக் துர்வாசரோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

Anonymous said...

//திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்.//

என்னங்க இது... பத்திரிகை கிசுகிசு மாதிரி. //என்ற பொர்ருள் பட பேசினாராம்// அப்ப என்ன பேசினார்னு உங்களுக்கும் தெரியாது... எழுதினவங்களுக்கும் தெரியாது. ஆனா கொளுத்தி போடறதை போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது.

இந்த மண்டபத்துல எழுதி வாங்கி போடற பிஸினஸ்னாலே இப்படித்தாம்ப்பா.

Sivakumar said...

followup

Sivakumar said...

பொதிகை டிவியில் தற்போது இந்நிகழ்ச்சி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது

satya said...

This function is being telecasted now in Podhigai.Friends watch it

Sivakumar said...

வேளுகுடி பேசி முடித்து விட்டார். இதுவரை என் மனைவி
இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதில்லை. அவளே என்ன
இந்த ஆசாமி இப்படி பேசுகிறார். (ஆசாமி=திருச்சி கல்யாணராமன்)

பின்னர் வந்த வேளுகுடி ஒரே ஒரு முறை தமிழக முதல்வர்
என்ற முறையில் பேரைக் குறிப்பிடாமல் வரவேற்று ஆழ்வார்-
கள் பற்றி தௌ்ளமுதான தமிழால் அனைவரையும் 10 நிமிடங்கள் குளிப்பாட்டினார்.
கல்யாணராமன் பேச்சு மேடைப் பேச்சு
வேளுக்குடி பேச்சு ஆன்மீகப் பேச்சு

Anonymous said...

//அவருக்கு இந்த மாண்பைக் கொடுத்த வைணவ தர்மத்துக்கும் //

நாராயணா.. இந்தக் கொசுத் தொல்லை...

Anonymous said...

இதுதான் வைணவம் த்துக்கும் சைவத்துக்கும் உள்ள வேறுபாடு!

தமிழ்நாடு ஒரு குடும்பத்தின் கையில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. அந்த ஆண்டவன்தான் காப்பத்தனும்

Anonymous said...

தர தரன்னு நாடு ராத்திரியில வீடு புகுந்து இழுத்துக்கிட்டு பொய் புழல போட்டாதான் சிலருக்கு புத்தி வரும்

ஹரன்பிரசன்னா said...

கல்யாண ராமன் - கேவலம்.

வேளக்குடி - தமிழக முதல்வருக்கு வணக்கம் என்று கூடச் சொல்லவில்லையா? அதைச் சொல்லியிருக்கலாம். :)

கருணாநிதி இருக்கும் மேடையில் ஒருவர் அவரைப் புகழாமல் இருக்கமுடியும் என்று நிரூபித்த வேளக்குடிக்கு வந்தனங்கள்.

satya said...

நேற்று நான் இந்த நிகழ்ச்சியை பொதிகையில் பார்த்தேன்.
அதில் இருந்து சில துளிகள்.

கல்யாணராமன் வார்த்தைக்கு வார்த்தை தலைவர் தலைவர் என்று புகழ் பாடினார்.இத்தனை நாட்கள் அரங்கனை தொழுதும் இன்று தான் புண்ணியம் அடைந்தேன் என்றார்.

வேளுக்குடி அவர்கள் பேச ஆரம்பித்தபோது மேடையில் வீற்றுரிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மற்றும் அமைச்சர் பெருமக்களக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன் என்றார்..பின்னர் தமிழுக்கு விழா எடுத்தது பாராட்டுக்குரியது என்றார்.அவளுவுதான் .பிறகு அனைத்தும் ஆண்டவனையும் ஆழ்வாரையும் தான் துதித்தார்.

இதனால் கருனனநிதி சற்று கோவம் அடைந்தார் என்றே சொல்லலாம்.

Lakshman said...

//Only some Maccaulay's children claim that women are restricted to chant Vedas.//

Mutts that belong to Srivaishanavite and Madhva sects that are 500+ years old follow these traditions/conventions even today. They even recommend excluding the Pranavam('Om') and instead use 'Aum' for women. If there has been so much of codifications then there has to be very strong reasons. Women in those times were not meek to accept these things if according to you were rendering Vedas from ancient times.

ரிஷபன்Meena said...

//திருச்சி கல்யாணராமன், வாலி போன்ற ஜன்மங்கள் இருப்பதால்தான் வேளக்குடி கிருஷ்ணன் போன்றவர்களை //

ஆனா இப்ப பதர்களின் எண்ணிக்கை ரொம்ப கூடிடுச்சு. எல்லாம் பணம் படுத்தும் பாடு.

//இந்த மாண்பைக் கொடுத்த வைணவ தர்மத்துக்கும் கோடானுகோடி வணக்கங்கள்.//

இதெல்லாம் தனி மனிதரின் ஒழுக்கம் சார்ந்தில்லையா ?

அப்ப வாலி ரங்கராஜன் வைணவர் இல்லையா ?

மெக்காலே எல்லாம் வேண்டாம் நாம் போதும் இந்து மதம் தனித் தனி கூறு அதற்கு பொதுவாய் ஒரு குணம் கிடையாது என.

Anonymous said...

I don't believe Vedas have restrictions for women. Moreover I consider Vedas inferior to texts like bhagavath gita etc though they might be saying the same thing. It's good that such texts with restrictions, have been sidelined and ignored by majority of Hindus. The religion as a whole would have been sidelined, if those texts had dominated the religion.
Regarding the meeting,I was shocked to find that people can even go to such a lowly state. What a shame!
The contradiction between Karuna's boot-lickers and Velukudi was explicit. Really, Velukudi reminded me of Kamal in Dasavatharam. His bravery deserves applause.

Karuna's pride has grown to abnormal proportions. Hope the people curb his pride in the coming elections. One more round for Karuna will be the end of self-respecting people in TN. The worst thing is the wise community in TN instead of isolating DMK as a bunch of clowns, engages itself in praising Karuna.

Anonymous said...

//Vedas has been traditionally not chanted by ladies//


The Rishi (seer)of Rig Vediya Devi Sooktam (Rig Veda 10.8.125-)is a woman sage by name Vaak, who is the daughter of Sage Ambrunar.

(Sundara KhaaNdam 14. 40)
Sandhyaakaala manaah syaamaa dhruvam yEshyati jaanaki
Nadeem cha imaam siva jalaam sandhyaartE vara varNinee

As Hanuman was searching for Sri Sita in Lanka, he suddenly came across Ashoka vana where he found a brook with crystal clear running waters. He was sure that Sri Sita must be around the brook and said to himself that if Sri Sita were there, she would surely come to the brook in the evening to perform her "Sandhyavandanam" and was patiently waiting her arrival there.

COMMENT:
It is said that women were doing Sandhyavandanam in those days just like men folk. In fact, there were numerous women Rishis like Aditi, Anasuya Arundati, DaakshaayaNi, Kesini, Lopaamudra, Madayanti, MEdhaa, ROmasa, Saramaa, Sraddhaa, Sukanyaa, Suvarchalaa and many others, some of whom were known to have performed Nityakarma AnushTanams ordained in the Vedas. And, Sandhyavandanam is a Vedic karma.

TAMIL PAYANI said...

//Only some Maccaulay's children claim that women are restricted to chant Vedas.//

//இதுதான் வைணவம் த்துக்கும் சைவத்துக்கும் உள்ள வேறுபாடு!//

கொஞ்சம் லாஜிக்- உடன் பின்னூட்டம் போடுங்களேன்.
மெக்கலேக்கும் பெண்கள் வேதம் ஓதுவதற்கும் என்னங்க சம்பந்தம்?
அப்புறம் இது திருச்சி கல்யாணராமன், மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட மனோதிடம் சம்பந்தமான விஷயம். இதுல சைவம், வைணவம் கம்பரிசன் பண்றது நமக்கு உருப்படியான புரிதல் இல்லை என்பதையே காட்டு கிறது.
மேலும் இப்படி சம்பந்தம் இல்லாமல் நம் மனம போன போக்கில் பின்னூட்டம் இடுவது யாரை பழிக்க நினைக்கிறீர்களோ அவர்கள் கையில் ஆயுதம் தந்தது போல் ஆகும்.

Anonymous said...

ஒண்ணு சிங்கம்.
இன்னொன்று
அசிங்கம்.

Anonymous said...

Velukkudi Krishnan said some bit about 'sanskrit vedas go behind Perumal, tamil vedas lead the procession'. This was unnecessary. If you take his speech as spiritual discourse, this 'munne-pinne' argument can be proven silly on so many levels. He could have avoided this.

when we criticize here, many forget the alternative - that demanded a proper prostration at the feet. Balamurali Krishna composed a raaga in praise.

Mosquito menace really.

Anonymous said...

//Velukkudi Krishnan said some bit about 'sanskrit vedas go behind Perumal, tamil vedas lead the procession'. This was unnecessary. If you take his speech as spiritual discourse, this 'munne-pinne' argument can be proven silly on so many levels. He could have avoided this.//

பெருமாள் வீதி உலா செல்கையில் பெருமாளுக்கு முன்னே தமிழ் வேதமாகக் கருதப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் சொல்லிக்கொண்டும் பெருமாளுக்கு பின்னே வேத பாராயணம் சொல்லிக்கொண்டும் செல்வர்கள்.
"sanskrit vedas go behind Perumal, tamil vedas lead the procession" is referring this and I feel, this point has a good value in a function related to Tamil.

Navaneeth said...

http://epaper.dinamalar.com/DM/DINAMALAR/2010/07/18/Article/002/18_07_2010_002_015.jpg

Anonymous said...

செம்மொழி மாநாடா?
செம்மறி மாநாடா?

உடன்பிறப்பே என்றுரைத்தார் உயித்தமிழை அடகு வைத்தார்
கடன் பிறப்பாய்த் தமிழினத்தைக் கையேந்த வைத்துவிட்டார்
கலை என்ற பெயராலே காலத்தைக் கொலை செய்தார்
விலைபேசிக் காளையரின் வீரத்தைக் காயடித்தார்
கொத்தடிமை ஆனாரே கூட்டானார் வடதிசைக்கு
கைத்தடிகள் பின்தொடரக் கறையானார் தென்திசைக்கு
இமயத்தின் காலடியில் குமரிமுனைக் காவடிகள்
உமிழ்நீரில் தமிழ்கலந்தார் ஊரே சிரிக்கிறது!

வீரத்தில் விளையாடி வெற்றிபெறும் நேரத்தில்
சோரத்தில் விளையாடி சுருட்டினரே ஈழத்தை
காடையர்க்கு ஒருகருணா காட்டிக் கொடுத்தானே!
கூடவே நம்கருணா கூட்டிக் கொடுத்தானே!
நாரா யணன்மேனன் நரிப்பயல்கள் தூதுவராம்
போராட்டம் நின்றதெனப் புளுகுவதில் கூட்டுறவாம்
இத்தாலி தாலிக்கு இந்தியா ஒப்பாரி
வைத்ததால் சிங்களர்க்கு வந்ததடா எக்காளம்
நாத சுரம் ஊதும் நாரதனாய் தமிழ்நாடு
தோதாக அமைந்ததனால் தோற்றதடா தமிழ் ஈழம்
நூறுநூ றாயிரம்பேர் நொடிக்குநொடி பலியானார்
போர் அறங்கள் அத்தணையும் புதைகுழியில் போனதடா
நாடெல்லாம் தடைசெய்த நஞ்சுவளிக் குண்டடித்தான்
கேடெல்லாம் ஒன்றான கீழான சிங்களவன்
பிறக்காத தாய்வயிற்றுப் பிள்ளைகூடப் புலியோடா?
இரக்கமிலான் கருப்பையும் இருகூறாய்க் கிழித்தானாம்!
வெள்ளைமணிக் கொடியேந்தி விரைந்தவரைக் கரந்தழித்தான்
பள்ளமெலாம் ஒன்றான பன்றிமகன் சிங்களவன்
வான்சிவப்பை மண்வாங்க மண்சிவப்பைக் கடல்வாங்க
ஆனஇடம் அத்தனையும் அருந்தமிழன் குருதியடா
போனஉயிர் போகஇன்னும் போகாத உயிரெல்லாம்
ஊனமுற உயிர்துடிக்க உழல்கின்றார் அழுகின்றோம்
கண்ணிழந்தார் மண்ணிழந்தார் காலிழந்தார் கையிழந்தார்
என்னிழந்தும் கேட்பதற்கு யாருமில்லா ஏதிலிகள்
தாய்க்குப் பிள்ளைஇல்லை தந்தைக்கு மகனில்லை
வாய்த்த கணவரில்லை வாழ்வில்லை யாருக்கும்
பிறந்தார் தமிழராகப் பிறந்ததால் இந்தநிலை
இறந்தவர்கள் போகஇன்னும் இருப்பவரை என்ன செய்ய?
முன்னூறு ஆயிரம்பேர் முள்வேலிக் குள்முடங்க
என்னூறு செய்தார்கள் இந்தியர்க்கும் இலங்கையர்க்கும்?
மானமெலாம் போனபின்னால் மறுவாழ்வும் உண்டோடா?
போனதிசை போகட்டும் போகட்டும் விடுங்களடா?
செய்யும் உதவியெலாம் சிங்களர்க்கே சேர்கிறது
பொய்யுரைத்தே இன்னும்ஏன் பொல்லாங்கு தேடுகிறீர்?
பழம்பெருமை வீண்பேச்சில் பாழ்பட்ட தமிழகத்தில்
இளம்புலியாய் எழுந்தவனே எல்லாளன் கதிர்க்கையன்
பல்லாயிரம் ஆண்டு பதுங்கிக் கிடந்தஇனம்
துள்ளியெழத் தோள்தட்டி தூக்கத்தைக் கலைத்தவனாம்
போர்க்களத்தில் உலகத்தின் புருவத்தை உயர்த்தியவன்
ஆர்ப்பரித்த படைவென்ற அடல்மறவன் படைத்தலைவன்
கரந்தடிப் போர்க்களத்தில் கரைகண்ட பெரும்கலைஞன்
அறப்படைக்கும் மறப்படைக்கும் அடிப்படைகள் வகுத்தவனாம்
உமிழ்நீரும் உண்ணாமல் உயிர்விட்ட திலீபனின்
தமிழ்வீரம் "காந்தியும்" தலைவணங்கும் "அறப்போராம்"
பலநாட்டுப் படைக்கலத்தைப் பாய்ந்து முறியடித்த
புலிவீரம் போர்க்களத்தில் புதியபுற நானூறாம்
ஏழிசை இராவணன்ஆண்டு யாழிசைத்த பூமியிலே
வாழும்புலிக் கொடியேற வாகைசூடி அரசமைத்தான்
ஆளுமைக்கோர் இலக்கணமாய் அனைவர்க்கும் தாயாகி
வாழும்மக்கள் நலம்வாழ வரமாக ஆட்சிசெய்தான்
உலகத் தமிழினத்தின் ஒரேதலைவன் அவனன்றோ?
தலையே இல்லாதான் தலைவன் என்றால் நிலம்சிரிக்கும்!
வள்ளுவனார் அரசியலை வழிநடத்தும் வேளையிலே
முள்ளிவாய்க்கால் மூலையிலே முடித்திடவும் கூடுவதோ?
புலிநகத்தின் முன்னாலே பூனைமுகம் என்னசெய்யும்?
வலிவிழந்தோம் மீண்டெழுவோம் வகைசெய்யும் இந்தவையம்!
இறையாண்மை என்றாரே இறையெங்கே? ஆண்மை எங்கே?
கறைபடிந்த கையருக்கு காசினியோர் விடைதருவார்
நம்மொழிக்கு நாடுகண்ட நாயகனை விட்டுவிட்டு
எம்மொழிக்கு மாநாடு? இனத்துக்கே பெருங்கேடு!
செம்மொழிக்கு மாநாடா? செம்மறிக்கு மாநாடா?
தம்குடும்பப் புகழ்பரப்பும் தவளைகளின் மாநாடா?
எழுவாய் இளந்தமிழா எழுவாய் என்றழைத்து
கழுவாய் தேடுகின்ற கண்துடைப்பு மாநாடா?
செப்புதற்கு மொழியற்று செந்தமிழ்த்தாய் அழுகின்றாள்
ஒப்பிக்கும் செம்மொழியின் உயிர்வாங்கும் மாநாடா?
கண்ணீரில் புலிப்பாட்டு கடைகெட்ட மாந்தருக்கு
பன்னீரில் குளிப்பாட்டு பாடுகின்றார் கிளிப்பாட்டு
விழும்தமிழன் மீதேறி வீதியுலா வருவதற்கு
கொழும்புக்கும், கோவைக்கும் கூட்டுறவா? நாட்டுறவா?
மாவீரர் கண்மறைந்த மாதத்தில் ஓராண்டில்
கோவையிலும் கொழும்புவிலும் கொண்டாட்டம் ஆர்ப்பாட்டம்
சிங்களவன் வெற்றிக்குத் திரைப்படத்தைக் காட்டுகிறான்
செந்தமிழன் இங்கேயும் ஒருபடத்தைக் காட்டுகிறான்
கொழும்பிலே இராஜநாகம் கோவையிலே இராஜயோகம்
தழும்பிலே தமிழர்யாகம் தணியுமோ தமிழ்த்தாகம்?
- மலேசியக் கவிவாணர், "ஐ. உலகநாதன்"

Anonymous said...

Please publish this in Idlivadai.

செம்மொழி மாநாடா?
செம்மறி மாநாடா?

உடன்பிறப்பே என்றுரைத்தார் உயித்தமிழை அடகு வைத்தார்
கடன் பிறப்பாய்த் தமிழினத்தைக் கையேந்த வைத்துவிட்டார்
கலை என்ற பெயராலே காலத்தைக் கொலை செய்தார்
விலைபேசிக் காளையரின் வீரத்தைக் காயடித்தார்
கொத்தடிமை ஆனாரே கூட்டானார் வடதிசைக்கு
கைத்தடிகள் பின்தொடரக் கறையானார் தென்திசைக்கு
இமயத்தின் காலடியில் குமரிமுனைக் காவடிகள்
உமிழ்நீரில் தமிழ்கலந்தார் ஊரே சிரிக்கிறது!

வீரத்தில் விளையாடி வெற்றிபெறும் நேரத்தில்
சோரத்தில் விளையாடி சுருட்டினரே ஈழத்தை
காடையர்க்கு ஒருகருணா காட்டிக் கொடுத்தானே!
கூடவே நம்கருணா கூட்டிக் கொடுத்தானே!
நாரா யணன்மேனன் நரிப்பயல்கள் தூதுவராம்
போராட்டம் நின்றதெனப் புளுகுவதில் கூட்டுறவாம்
இத்தாலி தாலிக்கு இந்தியா ஒப்பாரி
வைத்ததால் சிங்களர்க்கு வந்ததடா எக்காளம்
நாத சுரம் ஊதும் நாரதனாய் தமிழ்நாடு
தோதாக அமைந்ததனால் தோற்றதடா தமிழ் ஈழம்
நூறுநூ றாயிரம்பேர் நொடிக்குநொடி பலியானார்
போர் அறங்கள் அத்தணையும் புதைகுழியில் போனதடா
நாடெல்லாம் தடைசெய்த நஞ்சுவளிக் குண்டடித்தான்
கேடெல்லாம் ஒன்றான கீழான சிங்களவன்
பிறக்காத தாய்வயிற்றுப் பிள்ளைகூடப் புலியோடா?
இரக்கமிலான் கருப்பையும் இருகூறாய்க் கிழித்தானாம்!
வெள்ளைமணிக் கொடியேந்தி விரைந்தவரைக் கரந்தழித்தான்
பள்ளமெலாம் ஒன்றான பன்றிமகன் சிங்களவன்
வான்சிவப்பை மண்வாங்க மண்சிவப்பைக் கடல்வாங்க
ஆனஇடம் அத்தனையும் அருந்தமிழன் குருதியடா
போனஉயிர் போகஇன்னும் போகாத உயிரெல்லாம்
ஊனமுற உயிர்துடிக்க உழல்கின்றார் அழுகின்றோம்
கண்ணிழந்தார் மண்ணிழந்தார் காலிழந்தார் கையிழந்தார்
என்னிழந்தும் கேட்பதற்கு யாருமில்லா ஏதிலிகள்
தாய்க்குப் பிள்ளைஇல்லை தந்தைக்கு மகனில்லை
வாய்த்த கணவரில்லை வாழ்வில்லை யாருக்கும்
பிறந்தார் தமிழராகப் பிறந்ததால் இந்தநிலை
இறந்தவர்கள் போகஇன்னும் இருப்பவரை என்ன செய்ய?
முன்னூறு ஆயிரம்பேர் முள்வேலிக் குள்முடங்க
என்னூறு செய்தார்கள் இந்தியர்க்கும் இலங்கையர்க்கும்?
மானமெலாம் போனபின்னால் மறுவாழ்வும் உண்டோடா?
போனதிசை போகட்டும் போகட்டும் விடுங்களடா?
செய்யும் உதவியெலாம் சிங்களர்க்கே சேர்கிறது
பொய்யுரைத்தே இன்னும்ஏன் பொல்லாங்கு தேடுகிறீர்?
பழம்பெருமை வீண்பேச்சில் பாழ்பட்ட தமிழகத்தில்
இளம்புலியாய் எழுந்தவனே எல்லாளன் கதிர்க்கையன்
பல்லாயிரம் ஆண்டு பதுங்கிக் கிடந்தஇனம்
துள்ளியெழத் தோள்தட்டி தூக்கத்தைக் கலைத்தவனாம்
போர்க்களத்தில் உலகத்தின் புருவத்தை உயர்த்தியவன்
ஆர்ப்பரித்த படைவென்ற அடல்மறவன் படைத்தலைவன்
கரந்தடிப் போர்க்களத்தில் கரைகண்ட பெரும்கலைஞன்
அறப்படைக்கும் மறப்படைக்கும் அடிப்படைகள் வகுத்தவனாம்
உமிழ்நீரும் உண்ணாமல் உயிர்விட்ட திலீபனின்
தமிழ்வீரம் "காந்தியும்" தலைவணங்கும் "அறப்போராம்"
பலநாட்டுப் படைக்கலத்தைப் பாய்ந்து முறியடித்த
புலிவீரம் போர்க்களத்தில் புதியபுற நானூறாம்
ஏழிசை இராவணன்ஆண்டு யாழிசைத்த பூமியிலே
வாழும்புலிக் கொடியேற வாகைசூடி அரசமைத்தான்
ஆளுமைக்கோர் இலக்கணமாய் அனைவர்க்கும் தாயாகி
வாழும்மக்கள் நலம்வாழ வரமாக ஆட்சிசெய்தான்
உலகத் தமிழினத்தின் ஒரேதலைவன் அவனன்றோ?
தலையே இல்லாதான் தலைவன் என்றால் நிலம்சிரிக்கும்!
வள்ளுவனார் அரசியலை வழிநடத்தும் வேளையிலே
முள்ளிவாய்க்கால் மூலையிலே முடித்திடவும் கூடுவதோ?
புலிநகத்தின் முன்னாலே பூனைமுகம் என்னசெய்யும்?
வலிவிழந்தோம் மீண்டெழுவோம் வகைசெய்யும் இந்தவையம்!
இறையாண்மை என்றாரே இறையெங்கே? ஆண்மை எங்கே?
கறைபடிந்த கையருக்கு காசினியோர் விடைதருவார்
நம்மொழிக்கு நாடுகண்ட நாயகனை விட்டுவிட்டு
எம்மொழிக்கு மாநாடு? இனத்துக்கே பெருங்கேடு!
செம்மொழிக்கு மாநாடா? செம்மறிக்கு மாநாடா?
தம்குடும்பப் புகழ்பரப்பும் தவளைகளின் மாநாடா?
எழுவாய் இளந்தமிழா எழுவாய் என்றழைத்து
கழுவாய் தேடுகின்ற கண்துடைப்பு மாநாடா?
செப்புதற்கு மொழியற்று செந்தமிழ்த்தாய் அழுகின்றாள்
ஒப்பிக்கும் செம்மொழியின் உயிர்வாங்கும் மாநாடா?
கண்ணீரில் புலிப்பாட்டு கடைகெட்ட மாந்தருக்கு
பன்னீரில் குளிப்பாட்டு பாடுகின்றார் கிளிப்பாட்டு
விழும்தமிழன் மீதேறி வீதியுலா வருவதற்கு
கொழும்புக்கும், கோவைக்கும் கூட்டுறவா? நாட்டுறவா?
மாவீரர் கண்மறைந்த மாதத்தில் ஓராண்டில்
கோவையிலும் கொழும்புவிலும் கொண்டாட்டம் ஆர்ப்பாட்டம்
சிங்களவன் வெற்றிக்குத் திரைப்படத்தைக் காட்டுகிறான்
செந்தமிழன் இங்கேயும் ஒருபடத்தைக் காட்டுகிறான்
கொழும்பிலே இராஜநாகம் கோவையிலே இராஜயோகம்
தழும்பிலே தமிழர்யாகம் தணியுமோ தமிழ்த்தாகம்?
- மலேசியக் கவிவாணர், "ஐ. உலகநாதன்"

Raghavan said...

The video of Velukkudi Swami's speech is here : http://www.youtube.com/watch?v=0EkQa5PE1Qk

fellowca said...

What about Justice Ramasubramaniam's speech? A wonderful speaker indeed.