பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 10, 2010

கராத்தே குழந்தை - சினிமா விமர்சனம்

அமெரிக்காவின் டெட்ராய்ட்டிலிருந்து சீனாவின் பெய்ஜீங்கிற்கு செட்டிலாகிறார் ஒரு அம்மனி தனது ஆண்குழந்தையுடன்.

ஆண்குழந்தை என்பதைக்குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இல்லையெனில் படம் முழுக்க இந்த சந்தேகம் உங்களைத் துரத்திக்கொண்டிருக்கும்.

அந்த நோஞ்சான் பையனை தெருப்பையன்கள் அடித்துப் புரட்டிவிட பயந்துகொண்டே இருக்கிறான். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவனை அடித்தவர்கள்மீது அழுக்குத்தண்ணீரை வீசியெறிய அவர்கள் அவனை விரட்டி விரட்டி நையப்புடைத்து விடுகிறார்கள். இந்த முரட்டுப்பையன்களிடமிருந்து அச்சிறுவனைக் காப்பாற்றுகிறார் அவன் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் பராமரிப்பு ஆள். இப்போது தெரிந்திருக்குமே யார் இந்த பராமரிப்பு ஆள் என்று.. ஆம், ஜாக்கிஜானேதான்.

நம்மூரில் சினிமாவில் ஹீரோக்கள் பிளாக்கில் டிக்கெட் விற்றால்கூட ரேபான் கண்ணாடியும், நிக்கி ஷூவும் போட்டுக்கொண்டேதான் விற்பார்கள். ஆனால் ஜாக்கிசான் நம்மூர் குழாய் ரிப்பேர் செய்பவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். முகம் முழுக்க ஒரு சோகம், இருளடைந்த இருப்பிடம், போன வந்த சாமான்கள் அடைத்த அறை இப்படியாக..

நோஞ்சான் பையனை அழைத்துக்கொண்டு அவனை அடித்தவர்கள் கராத்தே பயிலும் இடத்திற்குச் சென்று இந்தப்பையனை தொந்தரவு செய்ய வேண்டம் எனக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் அவர்களுக்குச் சொல்லித்தரும் மாஸ்டரோ கரத்தேயை தற்காப்புக்க்லையாக கற்றுத்தராமல் அடிதடிக்கும், ஆக்ரோஷத்திற்குமாக சொல்லித்தருகிறார். இப்போது நீ ( ஜாக்கிசான்) சண்டைபோட வேண்டும் என வம்பிழுக்க ஜாக்கிசான், இந்தப் பையன் அடுத்த போட்டியில் கலந்துகொண்டு உங்கள் மாணவர்களுட்டன் மோதுவான் என சொல்லிவிட்டு வருகிறார்.

எப்படி இந்த நோஞ்சான் பையனை அவர் கராத்தே கிட் ஆக்குகிறார் என்பதுதான் மீதிக்கதை.

ஜாக்கிசானுக்கு ஃபிளாஷ்பேக்கில் கொஞ்சம் செண்டிமெண்ட்டும் உண்டு.

சீனாவின் இயற்கை எழில்கொஞ்சும் அழகான இடங்களை மட்டுமே காட்டியிருக்கின்றனர். சீனாவில் நம்மூர் ஆட்டோவைப்போன்ற ஒரு வாகனங்களில் மக்கள் அடைந்துகொண்டு செல்வதும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆடி காரில் செல்வதும் என ’கம்யூனிஸ சமத்துவம்’ நிலைநாட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

குங்ஃபூ பிறந்த இடம் என ஓரிடத்திற்கு ஜாக்கிசானும் அவரது சிஷ்யனும் செல்லும் இடங்கள் அப்படியே மனதை அமைதியாக்குகின்றன.

அனாவசியமான சண்டைகள் ஏதுமின்றி, தற்காப்புக் கலைகள் தற்காப்புக்கேயன்றி சண்டைக்கு அல்ல எனச் சொல்லவும், சீனத்தற்காப்புக்கலைகளையும், வைத்திய முறைகளைப் பற்றியும் உயர்வான அபிப்ராயத்தை அமெரிக்காவில் உருவாக்கவும் இதுபோன்ற படங்களை எடுப்பார்கள் போல. படத்தின் ஆரம்பத்தில் கராத்தே கிட் அமெரிக்காவிலிருந்து, சீனா வந்ததும் சீனாவில் எல்லாமே பழமையாய் இருக்கின்றன என்றும், இந்த நாட்டை வெறுக்கிறேன் எனவும் கூறுவான். அதே சீனாவில் அவனுக்குக் கிடைக்கும் சீன வைத்தியத்தினாலும், கராத்தே மாஸ்டராலும் எப்படி சீனாவை விரும்ப ஆரம்பிக்கிறான் என்பதைக் கொண்டு உலக அரங்கில் சீனாவைப் பற்றிய உயர்வான அபிப்ராயம் உருவாக்க முயலும் சீனாவின் வியாபாரத்தந்திரமாகவே இதைப் பார்க்கிறேன்.


இப்படத்தைப்பார்க்காமல் விட்டு வருந்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி. ஜாக்கிசானின் டை ஹார்டு ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது ஒன்றும் பார்த்தே ஆகவேண்டிய படமல்ல.22 Comments:

சுவாசிகா said...

//இப்படத்தைப்பார்க்காமல் விட்டு வருந்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி. ஜாக்கிசானின் டை ஹார்டு ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது ஒன்றும் பார்த்தே ஆகவேண்டிய படமல்ல.//

விமர்சனத்திலேயே மொக்கை வாக்கியம் இதுதான்..இதுல இதுக்கு மஞ்ச பெயிண்ட் வேறு..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Madumitha said...

அந்தச் சிறுவன் செய்யும்
தவறிலிருந்து(ஜாக்கெட்டைக் கீழே போடுவது) பாடத்தை ஆரம்பிப்பது
படத்தின் ஆகச் சிறப்பு.

மகேசன் said...

இது ஒரு பிரபலமான, வெகு ஜன ரசிகர்களுக்கான விறு,விறுப்பான படம்தான். ஆனால் இந்தப் பேரறிஞர் ஜெய்ஹனுமான் சொல்வதைப் போல வெறும் ஜாக்கிசான் ரசிகர்களுக்கான படம் இல்லை.

கம்யூனிஸ அராஜகர்கள் தோற்றுவிக்கும் கராத்தே பள்ளி கருணை, நியாயம் என எதையும் போதிக்காமல் வெறும் ‘no pain, no mercy, no weakness' என்பதைத் தாரக மந்திரமாகச் சொல்கிறது. ஆனால் அடிப்படையான பாகன் சீனப்பள்ளியோ நேர்மையையும், உண்மையையும் வலியுறுத்துகிறது. கம்யூனிஸ அராஜகத்தை, பாகன் நேர்மை எப்படி வெற்றி கொள்கிறது என்பதுதான் படம். அதை எவ்வளவு சுவாரசியாமகச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறது கராத்தே கிட்.

மேலும் இதில் ஜா.சான் நிறையவே அண்டர்ப்ளே செய்திருக்கிறார். படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்துதான் ஜா.சான் தீவிரமாகப் படத்தில் இயங்குகிறார். சிறுவன் வலியில் கதறும்போது ’ஏந்த்ரு அஞ்சலி, ஏந்த்ரு’ என்றெல்லாம் வீர வசனம் பேசி உசுப்பேற்றாமல் அவர்தான் ப்ராக்டிக்கலாகப் பேசுகிறார். எந்தவிதமான ஹீரோயிஸத்தையும் அவர் செய்யவில்லை. டைட்டிலில் கூட சிறுவனின் பெயரைப் போட்டுவிட்டுதான் (Jaden Smith) ஜாக்கிசான் பெயரைப் போடுகிறார்கள். இப்படி ஒரு அடக்கிவாசிக்கும் ரோலில் நம் கமலையோ, ரஜினியயோ நாம் எதிர்பார்க்க முடியுமா?

Anonymous said...

// இப்படி ஒரு அடக்கிவாசிக்கும் ரோலில் நம் கமலையோ, ரஜினியயோ நாம் எதிர்பார்க்க முடியுமா? //

நல்லாக் கேட்டீங்க, மகேசன்.

கமல், ரஜினி மட்டுந்தானா, விஜய், அஜித் என்ன சளைத்தவர்களா?

Rakesh said...

//’ஏந்த்ரு அஞ்சலி, ஏந்த்ரு’
இதெல்லாம் உங்க ஊர்ல வீர வசனமா? என்ன பண்ணினாலும் குறையா?
//டைட்டிலில் கூட சிறுவனின் பெயரைப் போட்டுவிட்டுதான் (Jaden Smith) ஜாக்கிசான் பெயரைப் போடுகிறார்கள்
படத்த சீனால பொய் பாத்தீங்கன்ன டைட்டிலில் யார் பேரு முதல்ல போடறங்கன்னு தெரியும். எதுவுமே காசு தான் பாஸ். நம்ம ஆட்கள விட அவங்க வியாபரத்தில மூளைக்காரர்கள்.
// இப்படி ஒரு அடக்கிவாசிக்கும் ரோலில் நம் கமலையோ, ரஜினியயோ நாம் எதிர்பார்க்க முடியுமா?
கடைசி வரைக்கும் விளம்பர படத்தில் நடிக்காமல் எந்த அயல் நாட்டு நடிகரையாவது நாம் எதிர்பார்க்க முடியுமா? அவர்களுக்கு தேவை 'காசு', நம்மவர்களுக்கு தேவை 'புகழ்'.

rk guru said...

படம் பார்கனும வேண்டாமா......

கிரி said...

// சுவாசிகா said...
விமர்சனத்திலேயே மொக்கை வாக்கியம் இதுதான்..இதுல இதுக்கு மஞ்ச பெயிண்ட் வேறு..//

ஹி ஹி ஹி

நாஞ்சில் பிரதாப் said...

இன்னும் நோஞ்சானுக்கும், அப்பாவிக்கும் குங்பு, காரத்தே கற்றுக்கொடுத்து திருப்பி பழிவாங்குற மாதிரியான படத்தை நிறுத்தமாட்டானுங்கபோல....

Anonymous said...

The story is the same, ever since film industry was founded in hongkong.
There is no hero there, who hasn't said this - "master!, teach me kungfu". It's like "i love u" in our film industry.

Anonymous said...

dabba padam.

ramachandranusha(உஷா) said...

டை ஹார்ட் ஹீரோ ப்ரூஸ் வில்லீஸ் இல்லையா :-(

R.Gopi said...

Anonymous said...
// இப்படி ஒரு அடக்கிவாசிக்கும் ரோலில் நம் கமலையோ, ரஜினியயோ நாம் எதிர்பார்க்க முடியுமா? //

நல்லாக் கேட்ட தலைவா என்கிற மகேசன்.

சுறா படம் பார்த்து கூடவா இன்னும் விஜய்ய ஒங்க லிஸ்ட்ல சேர்க்க மாட்டேங்கறீங்க...

Anonymous said...

மொக்கைத்தனமான விமரிசனம். ஜெய் ஹனுமான் எங்கோ ஓசியில் படத்தை பார்த்துவிட்டு சும்மா இங்கே வந்து கப்சா அடிக்கிறார். இதுல மஞ்ச ஹய் லைட் வேற??

தனுசுராசி said...

உங்களோட மஞ்சள் கமெண்ட்ல தீய வைக்க... இதுவே கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இல்லைன்னா, வேற எந்த படத்தை தான் பாக்குரது... விமர்சனம் போட்டதே லேட்... இதுல மஞ்சள் கமெண்ட் படிச்ச எரிச்சல் தான் வருது...

ஜெய் ஹனுமான் said...

//There is no hero there, who hasn't said this - "master!, teach me kungfu". It's like "i love u" in our film industry.//

கலக்கல்

raafi said...

//ஜாக்கிசானின் டை ஹார்டு ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது ஒன்றும் பார்த்தே ஆகவேண்டிய படமல்ல.//

டை ஹார்டு ஒன்றும் ஜாக்கிவுடைய படம் அல்ல. அது ப்ருஸ் வில்லிஸ் படம்.

முகமூடி said...

இ.வ. இது 1980-ல் வந்த கராத்தே கிட்-ன் ரீமேக் தான். வில் ஸ்மித் தன் மகனுக்காக எடுத்த ஒரு மெகா என்ட்ரி படம் தான் இந்த புதிய படம். நம்முர் விஜய் வகையறாக்கள் இதை follow செய்தால் சொல்வதற்கில்லை.

Anonymous said...

டை ஹார்டு-க்கு அர்த்தம் ரிறைய அப்பாவிப் புள்ளைகளுக்கு விளங்கலையோ ??

இப்படிக்கு,

ஜாக்கியின் வெறிபிடித்த ரசிகன்

பனங்காட்டு நரி said...

இதெல்லாம் ஓல்ட் ..

Anonymous said...

ஜேடன் ஸ்மித் வில் ஸ்மித்தோட பையன். பர்ஸ்யூட் ஆஃப் ஹாப்பினெஸ்ஸில் வில் ஸ்மித்தின் மகனாகவும் நடித்திருக்கிறான். விஷயம் தெரியாமல் படம் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் ஆணா பெண்ணா குழப்பம் வரலாம். பாகன், சீனா கம்னியுஸ்டு உள்குத்து நிஜமாகவே இருக்கிறதா மகேசன் சொல்லும் உள்குத்து எல்லாம் படம் எடுத்தவர்களுக்குத் தெரியுமாமா? இருந்தால் தெரிந்தே எடுத்திருந்தால் நல்லதுதான்

R.Gopi said...

//raafi said...
//ஜாக்கிசானின் டை ஹார்டு ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது ஒன்றும் பார்த்தே ஆகவேண்டிய படமல்ல.//

டை ஹார்டு ஒன்றும் ஜாக்கிவுடைய படம் அல்ல. அது ப்ருஸ் வில்லிஸ் படம்.//

*********

யப்பா.......

சமீபத்துல நான் படிச்ச அதிரடி, சரவெடி கமெண்ட் இது தாண்டா டோய்ய்ய்ய்ய்ய்ய்...........

உங்களை எல்லாம் ஆயிரம் ஸ்பீல்பெர்க் வந்தாலும் திருத்த முடியாது...

Anonymous said...

Jackie gave China a good facelift.. unlike our slumdog shit movies... Its nice movie... I dont like China, But still can't stop appreciating Jackie.. He is great.

Every country has things that has to be appreciated.. India has lot ... I love Aamir-Kahns movies.. becoz he brings out something good ... with some originality....