பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 08, 2010

ஜெமோவின் அரசியல் யாத்திரை

இன்று ராஜசேகரரெட்டியின் பிறந்த நாள். அதைவிட இன்று அவர் மகன் ஜெகன்மோகன் ரெட்டி "ஆறுதல் யாத்திரை"யை மீண்டும் துவக்கியுள்ளார் என்பது தான் இன்றைய முக்கியச் செய்தி. அல்லது முக்கியமாக்கப்பட்ட செய்தி.

2003 ஆம் ஆண்டு ஸ்ரீகாகுளத்தில் பாதயாத்திரை துவக்கிய ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் அடுத்த முதல்வரானார். 2010 இல் அதே ஸ்ரீகாகுளத்தில் பாதயாத்திரை துவக்கியுள்ள அவரது மகன் ஜெகன் மோகன ரெட்டி என்னவாகப் போகிறார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த போது உயிர் நீத்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற இந்தப் பாதயாத்திரையாம்! ராஜசேகர ரெட்டிக்கு பிறகு அவரை முதல்வராக்கியிருந்தால் இந்த பாதயாத்திரையை நிச்சயம் மேற்கொண்டு இருக்க மாட்டார். முட்டாள் தொண்டர்கள் இருக்கும் வரைக்கும் ஜெகனின் பேரன் நாளைக்கு பாதயாத்திரை மேற்கொண்டாலும் வியப்பு ஏதும் இல்லை.

ஜெகனின் பயணம் அவருக்கு செல்வாக்கை கூட்டி விட்டால் என்ன செய்வது என்பது இப்போதைய காங்கிரஸ் தலைமையின் பயம். மாமியாருக்குத் தப்பாத மருமகள் (இந்த ஒரு விஷயத்தில் மட்டும்). அதற்காக காங்கிரஸ் இந்த யாத்திரைக்குத் தடை விதிக்க முயன்று தோல்வியடைந்தது. இடையே சில சில சமரச முயற்சிகள் என எதுவும் பலிதமாகவில்லை.

முழு மீடியா கவனமும் இவர் மீது திரும்ப கட்சி மேலிடம் இதை விரும்பவில்லை. தடை விதித்தது. சோனியாவை சந்திக்கப் போனார் ஜெகன். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் மேலிட பார்வையாளர் வீரப்பமொய்லியைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார். சோனியாவைச் சந்தித்தால் இவர் பெரிய ஆள் என்று மீடியா இவரைப் புகழும் என்பதால் அதையும் மேலிடம் விரும்பவில்லை.

இதற்கிடையில் தில்லியில் பேட்டியளித்த ஜெகன், தனது யாத்திரைக்கு காங்கிரஸ் அனுமதியளித்து விட்டதாக ஒரு புளுகை அவிழ்த்து விட்டார். காங்கிரஸ் தலைமை உடனே இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டது. இப்போது அடுத்த எபிசோடாக திரும்பவும் ராஜசேகர ரெட்டியின் பிறந்த தினத்தில் யாத்திரையைத் துவங்குகிறார் ஜெகன். இந்த யாத்திரைக்கு வலுக்கட்டாயமாக முட்டுக்கட்டை போட்டால், தெலங்கானா பகுதியில் ஜெகன் இதைக் கூறியே செல்வாக்கு பெற முயல்வார் என்ற எண்ணத்தால் காங்கிரஸ் இப்போதைக்கு இதற்கு சம்மதித்திருக்கிறது. கடைசி முயற்சியாக சோனியா காந்தி தலையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை ஒரே இடத்திற்குத் திரட்டி பொதுக்கூட்டம் நடத்தலாமே என்று ஜெகனுக்கு யோசனை கூறியிருக்கிறார். ஆனால் ஜெகனோ, ரெட்டி இறந்த போது நீங்கள்தான் ஆந்திரத்திற்கு வந்தீர்களே தவிர, எங்களை அங்கு அழைக்கவில்லை என்று அவருக்கு அவருடைய பாணியிலேயே பதிலளித்து இன்னும் நான் உங்களுக்கு அடிபணிந்துவிடவில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். இவருடைய ஆறுதல் யாத்திரை உறுதியாகிவிட்ட நிலையில், ஆந்திர முதல்வர் ரோசையா காங்கிரஸ் சட்டசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளக் கூடாது, அப்படிக் கலந்து கொண்டால் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று பொடி வைத்துள்ளார். தன் பங்கிற்கு அபிஷேக் மனு சிங்வி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

ஒரு மாற்று பிளான் ஒன்றையும் காங்கிரஸ் செய்தது. பிரஜா ராஜ்யம் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. இதனால் எம்.எல்.ஏகளுக்கும் ஜெகனுக்கும் தகுந்த ஆப்பு வைக்கப்பட்டது. சிரஞ்சீவியிடம் விஜயகாந்த் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இதை லேட்டாகப் புரிந்துக்கொண்ட ஜெகன்மோகன் மீண்டும் யாத்திரையை துவங்கியுள்ளார். சிரஞ்சீவிக்கும் இது நல்லதாகப் போய்விட்டது, இந்த மாதம் 27ம்தேதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால் கிடைத்தவரை லாபம் என்று நினைக்க கூடும். இடைத்தேர்தல் ரிசல்டை பொறுத்து ஜெகன்மோகனின் எதிர்கால அரசியல் பற்றி தெரியவரும்.

நேரு - இந்திராகாந்தி - ராஜிவ் காந்தி - சோனியா காந்தி - ராகுல் காந்தி என்று பரம்பரையில் வரும் போது அதே ஆசை ஜெகனுக்கு இருப்பதில் என்ன வியப்பு?

கூடிய சீக்கிரம் இந்த தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படலாம் :-)


8 Comments:

ரிஷபன்Meena said...

மஞ்சள் கமெண்ட் எனக்கு விளங்கலையே ?

அம்மா -கறுப்பு எம்.ஜி.ஆர் அல்லது அன்னை-கறுப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லவருகிறீர்களா ?

ஜோதிஜி said...

சிரஞ்சீவியிடம் விஜயகாந்த் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

பா. ரெங்கதுரை said...

தமிழக ஜெமோ அரசியல் யாத்திரையும்,ஆந்திர ஜெமோ இலக்கிய யாத்திரையும் ஆரம்பிக்காத வரை டபுள் ஓ.கே.

♥Manny♥ said...

// கூடிய சீக்கிரம் இந்த தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படலாம் :-) //


ஹீ..ஹீ.. மஞ்சள் கமெண்ட் சூப்பரு...

kggouthaman said...

கூடிய சீக்கிரம் இந்தத் தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படலாம்.
ஆசை ஆசை!
தமிழக காங்கிரசில் உள்ள எந்த கோஷ்டியும் ரத யாத்திரை போகமாட்டார்கள். அப்படியே ஒரு கோஷ்டி துணிந்தாலும், மற்ற கோஷ்டிகள் அந்த கோஷ்டியினரை காலை வாரி, கீழே விழவைத்து, வேட்டியை உருவிவிடுவார்கள்.

Litmuszine said...

இவருக்கு யாத்திரையை விட இறுதி யாத்திரையே மேல் என்று பாடம் புகட்டலாமா என்று யாரும் நினைத்து விட்டால் சங்கு தான்.

இந்திரா, சஞ்சய், ராஜீவ், மாதவராவ், ராஜேஷ், ............ பிரபாகரன் மேலும் நேற்று வரை இருந்த ரெட்டி என வரலாறு இருக்கே.

ஆதி மனிதன் said...

காற்றுள்ள போதே தூற்றிகொள்வது புத்திசாலித்தனம் தானே?

தேடுதல் said...

// கூடிய சீக்கிரம் இந்த தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்படலாம் :-) //

உங்க வாய்க்கு சர்க்கரை போடனும் நல்ல விசயம் சீக்கிரமாவெ நடக்கனும்....